Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-19

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைய தினம் அந்த விழா முடிந்ததும் சகுந்தலா, இமையவர்மன், கமலேஷ் இந்திரன், மாதுளை, கதிரவன் என்று எல்லோரும் அங்கே இருக்கும் இமையவர்மனின் வீட்டிற்குச் சென்றனர். கதிரவன் இந்திரனோடு மேலே அவனின் அறைக்குச் சென்று உறங்கிக்கொண்டான். மாதுளை இன்று நடத்த நிகழ்வுகள் அந்த பிரம்மாண்டம் கொண்டாட்டம் ஆகியவற்றை யோசித்தபடியே இருந்தாள். அவள் மனம் சற்று இலகுவாகி இருந்தது.

அங்கே தன்னுடைய வீட்டிற்குச் சென்ற தாமுவிற்குத் தான் மனமே சரியில்லை. இப்போது அவருக்கு உடனடியாக கதிரவனின் குட்டுகளை எல்லாம் வெளியே கொண்டு வர வேண்டும் என்று ஆழ்ந்த யோசனைக்குச் சென்றார். இனிமேலும் அவனை சும்மா விட்டால் அவன் விஸ்வரூபம் எடுத்து விடுவான் என்று நினைத்து அஞ்சினார். இதைப்பற்றி கதிரவனின் பெற்றோரிடம் பேசிப்பார்கலாமா என்றும் யோசித்தவர் இல்லை ஒருவேளை அவர்களும் இவன் கூட்டாளிகள் என்றால் அது இன்னும் விபரீதம் ஆகிவிடும் என்று அந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 'நான் அனுப்பிய தயாளனையே கொல்லும் அளவிற்கு அவன் துணிந்து இருக்கிறான் என்றால் அடுத்து நிச்சயம் அந்தக் குறி என்மீது தான் விழும். நான் சாவதில் எவ்விதப் பிரச்சனை இல்லை. ஆனால் எனக்கு முன் அவனையும் இமையவர்மனின் குடும்பத்திற்கு எதிராகச் செயல்படும் அனைவரையும் கண்டுபிடித்து அவர்களைத் தண்டித்து விட்டுத்தான் நான் சாகவேண்டும்' என்று சூளுரைத்தவர் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். 'இமையவர்மன் ஐயாவும் சகுந்தலாவும் நான் சொல்லுறதை நம்ப மாட்டேங்குறாங்க. இந்த இந்திரன் கூட அன்னைக்கு மண்டையை மண்டையை ஆட்டி இன்று மீண்டும் அவனோடே கொஞ்சு பேசி சிரிக்கிறானே?' என்று அவருக்கு கோவம்.

அங்கே உள்ளே சென்றவன் உடை மாற்றிவிட்டு அந்த சோபாவில் அமர்ந்து எதைப்பற்றியோ தீவிரமான யோசனையில் இருந்தான்.

"என்ன மச்சி யோசனையெல்லாம் பலமா இருக்கு? எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு தீவிரமா யோசிக்கற?" என்றான் கதிரவன்.

"இது கோட்டையைப் பிடிக்கறதுக்கான யோசனை இல்ல டா கதிரா..."

"பின்ன?"

"இருக்குற கோட்டையை எப்படி எல்லாம் காப்பாத்தலாம்னு யோசிக்கிறேன்" என்றவன் முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாமல் கதிரவனையே தீர்க்கமாகப் பார்க்க அவனின் இந்தப் பார்வையைச் சமாளிக்க முடியாமல் அந்த அறையில் கண்களால் துளாவியவன் அங்கிருந்த ஷாம்பெய்ன் பாட்டிலை எடுத்து வர இந்திரனோ எழுந்து அந்த பில்லியர்ட்ஸை விளையாடினான்.

"உனக்கு வேணாமா மச்சி?"

"நோ தேங்க்ஸ். நீ சாப்பிடு..."

"ஏன்?"

"ஏன்னு உனக்குத் தெரியாதா?"

"இல்லடா அது எப்படி இப்படி கட்டுக்கோப்பாவே இருக்க?" என்ற கதிருக்கு,

"எல்லாம் மனசு தான் மச்சி காரணம். இதோட எட்டு வருஷம் ஆச்சு. நம்ம காலேஜ் பைனல் இயர் அப்போ சரக்கைக் கடைசியா தொட்டது. நோ ட்ரிங்க்ஸ் இன் தீஸ் எயிட் இயர்ஸ். அப்பா எனக்கு இந்த பிசினெஸை எடுக்கும் முன்னாடி ஒரே ஒரு கட்டளையைத் தான் போட்டார். எந்தச் சூழ்நிலையும் மதுவை கையில எடுக்கக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட் ஆர்டர். சோ நோ தேங்க்ஸ்..."

"அதெப்படி மச்சி ஒரு விஷயத்தை ஏற்கனவே செஞ்சிட்டு திடீர்னு அதை அப்படியே மாற்றி செய்ய முடியுது? ஐ மீன் ஹேபிட்ஸ எப்படி மாத்திக்க முடியுது..."

"இத்தனை வருஷமா நம்ம கூட இருக்கவங்களே நமக்குக் குழி பறிக்கும் போது இந்த சின்ன பழக்கத்தை மாற்ற முடியாதா?" என்று விளையாடிக்கொண்டே கேட்ட இந்திரனை இமைக்காமல் பார்த்தான் கதிரவன். உண்மையில் இப்போது அவனுக்கு ஏறிய கொஞ்சநஞ்ச போதையும் இறங்கியது. அப்படியே அந்த சோபாவில் சரிந்து படுத்தான். அந்த பில்லியர்ட்ஸ் போர்டை முடித்தவன் திரும்பி கதிரவனைப் பார்த்து அருகிலிருந்த போர்வையை எடுத்து அவனுக்குப் போர்த்திவிட்டு அவனும் சென்று உறங்கினான்.

***********

இந்திரன் பதவி ஏற்றுக்கொண்டு இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது. அவனும் கொஞ்சம் கொஞ்சமாய் தன் வலிகளைப் பற்றிய நினைவுகளிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தான். பார்ப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக சகுந்தலாவிற்கே அவன் உண்மையிலே மாறிக்கொண்டு இருப்பதைப்போல் தான் தோன்றியது. ஆனால் அவனா மாறுவான்? ஸ்ரீ அவ்வளவு எளிதில் அவனின் நினைவுகளிலிருந்து வெளியேறிவிடுவாளா என்ன? அது இந்த ஜென்மத்தில் நடப்பது கடினம். மிக மிக கடினம். அவனின் இந்த மாற்றம் சகுந்தலாவை மட்டுமின்றி இமையவர்மன், தாமோதரன் ஆகியோருக்கும் சந்தோஷமே கொடுத்தது. ஏன் அசோக் சௌனிக்கூட அவனின் இந்த மாறுதல்களைக் கண்டு குழம்பினான். சட்டென கோபமும் ஆத்திரமும் கொள்ளும் அவன் இன்று இவ்வளவு இலகுவாக இருப்பது தான் அதற்குக் காரணம். மூன்று நாட்களுக்கு முன் அவர்களுக்கு ஜார்கண்டில் இருக்கும் தொழிற்சாலையில் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டு விட, சில பேர் படுகாயம் கூட அடைந்து விட்டார்கள். நல்ல வேளையாக உயிர்சேதம் எதுவும் நடக்கவில்லை. இந்த மாதிரி எதாவது நடந்தால் அவனின் நடவடிக்கைகள் மிகக் கொடூரமாக இருக்கும். ஆனால் இம்முறை பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அந்தத் தொழிற்சாலையை இன்னும் மேம்படுத்த சொல்லிவிட்டு அடுத்த வேலைகளில் மூழ்கிவிட்டான். இந்த பதினைந்து நாட்களாக தினம் சுமார் 1000 கோடியேனும் அவரின் தொழிலின் பங்கு சரிந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கோவத்தையும் ஆத்திரத்தையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கே இந்த நிலைமை என்றால் கூடிய சீக்கிரம் அவர்களின் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப் பட்டால் அவ்வளவு தான் என்று அஞ்சியவர் அதற்குள் அவனின் முன்னேற்றத்தை முடக்கிவிட துடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு எப்போதெல்லாம் இந்திரன் மீது கோவம் வருகிறதோ உடனே கதிரவனை அழைத்து தன் ஆத்திரம் தீர அவனைத் திட்டிவிட்டு அடங்குவார். இது கதிரவனுக்கும் அதிக மனவுளைச்சலைத் தந்தது.

அவனுக்கென்று பெர்சனல் செக்ரெக்டரி யாரும் இல்லாததால் இதுவரை தன் தந்தையின் பெர்சனல் செக்ரெக்டரியை தன் வேலைகளுக்கு உபயோகப் படுத்திக்கொண்டு இருக்கிறான். தாமோதரன் அங்கிளிடம் இதைப்பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டான். அவரும் இந்த வாரத்தில் இன்டெர்வியூ வைக்கப்படும் என்று சொல்லிவிட இந்திரன் அமைதியானான்.

இந்த பத்து நாட்களாய் ஏதும் வேலையில்லாமல் அதேநேரம் சும்மா சாப்பிட்டு மட்டும் இருக்கப் பிடிக்காமல் தினமும் அந்த வீட்டின் தோட்டத்திற்குத் தண்ணீர் விடுவது அவர்கள் வீட்டில் வளர்க்கும் பெட்களுக்கு உணவு பரிமாறுவது என்று நாட்களைக் கடத்திக்கொண்டு இருக்கிறாள் மாதுளை. அவளிடம் அன்று தனியாகப் பேச வந்த சகுந்தலா அவளை அழைத்து,"ரொம்ப போர் அடிக்குதா?" என்று கேட்க அவளும் முதலில் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டிவிட்டு பிறகு இல்லை என்பது போல் மறுக்க, அவரும் இந்திரன் வேலைக்குச் சென்ற இரண்டாவது நாளே கதிரவனிடம் சொல்லி இந்தப் பெண்ணிற்கு ஏதேனும் வேலை போட்டுத் தருமாறு சொல்ல அவனோ அவனுக்கிருக்கும் தலைவலியில் இதை மறந்து போயிருந்தான். தமோவிடம் சொல்லியதற்கும் பார்க்கிறேன் என்று சொல்லிச் சென்றார். யாரிடமும் இன்னும் பாசிட்டிவ்வான பதில் வரவில்லை.

இது எதுவும் இனி வேலைக்காகாது என்று நினைத்தவர் அன்று இரவு நேராக இந்திரனிடமே விஷயத்தைச் சொல்ல அவனும் யோசித்து இரண்டொரு நாளில் சொல்வதாகச் சொல்ல அவனை மறித்தவர் தற்போதே பதிலை வேண்ட,"அம்மா அந்தப் பொண்ணு இங்கேயே இருக்கட்டும். நானே வேற எங்கேயாவது வேலை வாங்கித் தரேன். ஏன் அது தான் பார்த்துக்கறோம்னு சொல்லிக் கூட்டிட்டு வந்திட்டு சோறு போட்டுட்டு தானே இருக்கோம்? இன்னும் என்ன?" என்று ஏதேதோ கோவத்தை எல்லாம் ஒன்று திரட்டி சொல்லிவிட்டுச் செல்ல அதை எல்லாம் மாதுளையும் கேட்டுவிட்டாள். மறுநாள் தான் வெளியே கிளம்புவதாகச் சொல்ல அப்போது வந்த இமையவர்மன் அந்தப் பெண்ணிடம் சர்டிபிகேட் எல்லாம் வாங்கியவர் அவள் mba முடிக்க இன்னும் ஒரு செமஸ்ட்டரே இருப்பதை அறிந்து அவளைப் படிக்கச் சொல்லி தன் நண்பனின் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகச் சொல்ல அவளும் சரியென தலையை ஆட்டினாள். ஆனால் அவளின் முகத்தில் தான் ஒரு உற்சாகமும் இல்லை. எதையோ நினைத்து வருந்துகிறாள் என்று உணர்ந்த சகுந்தலா பின்பு அவளைத் தனியாக அழைத்துப் பேச முதலில் தயங்கியவள் பின்பு சுதாரித்து,"எனக்கு ஒரு வேலை வேணும். நான் வேலைக்குப் போயிட்டே படிச்சிப்பேன்..." என்று தயங்கி தயங்கி அவருக்குப் புரியவைக்க அவளின் நிலையை நன்கு உணர்ந்துக்கொண்டார் சகுந்தலா. இந்த பத்து நாளில் கூட தன்னால் முடிந்த வேலைகளை எல்லாம் செய்துவிட்டு தான் அவள் சாப்பிடுகிறாள். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத் தான் என்பது அவருக்குப் புரிய உடனே அவளின் நிலையைப் பற்றி தன் கணவனிடம் இரவு பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

அன்றைய இரவு வீடு வந்த இந்திரன் வேறு சில விஷயங்களில் யோசனையாக இருக்க அவனுக்கு இரவு உறக்கம் வர மறுத்தது. காரணம் அவனால் நடப்பதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. தாமோதரன் சொன்ன விஷயங்கள் எல்லாமும் அவனுக்குள் திரும்ப திரும்ப வந்துபோக பால்கனிக்கு வந்தவன் அங்கிருந்து கீழே பார்க்க அத்தோட்டத்தில் யாரோ இருப்பதைப் போல் அவனுக்குத் தெரிய உற்றுப் பார்த்தால் அது மாதுளை தான் என்று புரிந்தது. மணி நள்ளிரவைக் கடந்து இருந்தது. அந்தப் பனியில் அங்கேயே புல்தரையில் படுத்திருப்பவளைக் கண்டவன் வாட்ச் மேனை அழைத்து விட்டு அவனும் கீழே இறங்கி வந்தான். அவளை எழுப்ப குனிந்தவனுக்கு அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த தடம் தெரிய அப்படியே உறங்கி இருப்பதைத் தெரிந்துகொண்டவன், மெதுவாக அவளை அழைக்க அவளிடமிருந்து எவ்வித சப்தமும் இல்லை. அவளை தூக்குங்க என்று சொல்லி முன்னால் நடந்தவன் திரும்பிப் பார்க்க அந்த வாட்ச் மேன் அவளை எப்படத் தூக்குவதென்று புரியாமல் விழிக்க அவனே அவளைத் தூக்கி வந்து அவளின் அறையில் படுக்கவைத்துவிட்டு அவளின் உடை முழுக்க பனி இருக்க ரூம் வார்மரை மட்டும் போட்டுவிட்டு அவனும் சென்று ஹாலில் அமர்ந்தான்.

பொழுது விடிந்து கீழே வந்த சகுந்தலா இவன் இங்கே இருப்பதைக்கண்டு அவனிடம் வர அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான . அவனின் தலை கோதியவாறு ஏனோ கண்களில் வந்த கண்ணீரை துடைத்துவிட்டு இன்னும் எழாமலிருக்கும் மாதுளையின் அறையைத் திறக்க அவள் உடலோ குளிரில் உடல் நடுங்கி உதடு அசைய படுத்து இருந்தாள். அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தது. டாக்டருக்கு போன் செய்துவிட்டு வந்தவர் இந்திரன் எழுந்ததும் விசாரிக்க, அப்போது தான் சகுந்தலா,"நீங்க யாருமே அவளுக்கு ஒரு வேலையும் தர மாட்டேங்குறீங்க... உங்களை நம்பி நான் வேற அவளை இங்க கூட்டிட்டு வந்துட்டேன். உங்க அப்பாவும் கண்டுக்க மாட்டேங்குறாரு நீயும் இப்படியே இருக்க. கொஞ்சம் அந்தப் புள்ள இடத்துல இருந்து யோசி இந்திரா..." என்று சொல்ல யோசித்தவன்,"அந்தப் பொண்ணுக்கு உடம்பு சரியானதும் என்கூடவே நான் ஆபிஸ் கூட்டிட்டுப் போறேன். கொஞ்ச நாள் என் பி.எவா இருக்கட்டும்..." என்று சொல்ல இமையவர்மனோ அப்போது தான் வந்தவர்,"அதெப்படி இந்திரா அந்தப் பொண்ணு தான் பேசாதே? எப்படி உனக்கு pa வா இருக்கும்?" என்று வினவ,"அதை நான் பார்த்துக்கறேன். கவலை படவேணாம்..." என்று சொல்லி சகுந்தலாவிடம் திரும்பி,"இப்போ ஓகே வா ஹேப்பியா அம்மா?" என்று கேட்டு மேலே கிளம்பினான். குளிர் ஜுரம் என்பதால் அவள் உடல் நிலை தேற மறுநாளே இந்திரனோடு ஆபிஸ் சென்றாள்.

இந்திரனின் வருகைக்காகக் காத்திருந்த கதிரவன் மற்றும் தாமோதரன் இருவரும் ஒருவரை ஒருவர் ஆராயும் பார்வையைச் செலுத்திக்கொண்டு இருந்தனர். கதிரவனை இந்த பிஸினெஸில் மீண்டும் இணைத்துகொண்டதில் தாமோதரனுக்கும் துளியும் இஷ்டமில்லை என்பது அவரின் நடவடிக்கைகளிலே இமையவர்மனும் இந்திரனும் தெரிந்துகொண்டனர். இருந்தும் அவர்கள் இதைத் தெரியாதது போல் இருந்தனர். அன்றைக்கு ஒரு முக்கியமான போர்டு மீட்டிங் நடைபெற இருந்தது. போர்டு மெம்பெர்ஸ் எல்லோரும் ஆஜராகினர். இமையவர்மன் கமலேஷ் கதிரவன் எல்லோரும் வந்து அமர்ந்திருந்தாலும் இந்திரன் மட்டும் இன்னும் வந்தபாடில்லை. எல்லோரும் அவனுக்காகவே காத்திருக்க சரியாக சொன்ன நேரத்திற்கு ஆபிஸ் உள்ளே மாதுளையை அழைத்துக்கொண்டு நுழைந்தான். இந்திரன் மட்டும் வருவான் என்றிருக்க இந்திரனோடு மாதுளையும் வந்தது தாமோதரன் கதிரவன் இருவருக்கும் அதிர்ச்சியளித்தது. அதில் தாமோதரனைக் காட்டிலும் கதிரவனுக்கு அதிக அதிர்ச்சி. வந்தவன் மணியைப் பார்த்து மீட்டிங்கை ஆரமித்து நடத்தினான். மீட்டிங் முடிந்ததும் இந்திரன் அவன் தந்தையின் செக்ரெக்டரியை அழைத்து பொதுவாக என்னென்ன வேலைகள் இருக்கும் என்பதை எல்லாம் மாதுளைக்குத் தெரிவிக்கச் சொல்லிவிட்டு அவனின் கேபின்க்கு வந்து அமர்ந்தான்.

இந்திரனைப் பார்க்க உள்ளே வந்ததும் வராததுமாக கதிரவன்,"இப்போ எதுக்கு டா அந்தப் பொண்ண இங்க கூட்டிட்டு வந்த?" என்று கேட்க,

"அம்மா தான் ஏதாவது வேலை போட்டுக்கொடு வேலை போட்டுக்கொடுனு ஒரே புலம்பல் அதுதான்..."

"அதுக்கு எதுக்கு நம்ம ஆபிஸ்க்கு கூட்டிட்டு வந்த? அதும் உன் paவா? வாய் கூடப் பேச முடியதாவளை..." என்று சொல்ல இந்திரன் அவனை முறைத்தான்.

"எப்பா சாமி அவ..." என்று கதிர் தொடங்க மீண்டும் இந்திரன் முறைக்கவும்,"சரி அவங்க உனக்கு paவா ஒர்க் பண்ணப் போறாங்கனு வெச்சிப்போம். அதுக்கு அவங்க பேசணும்..." என்னும் போது கதவு தட்டப்பட மாதுளையும் ஸ்டெல்லாவும் வெளியே இருக்க, அவர்களை உள்ளே அழைக்கவும்,"சார் வேலையெல்லாம் சொல்லிட்டேன்..." என்று ஹிந்தியில் சிறிது உரையாட, சரி என்று தலையாட்டி விட்டு அவளை ஸ்டெல்லாவின் கூடவே இரண்டு நாட்கள் இருந்து என்ன வேலையை எப்படிச் செய்யணும் என்று அப்செர்வ் செய்யுமாறு சொல்லிவிட்டு மீண்டும் கதிரவனைப் பார்த்தான்.

"சரி இந்திரா அந்தப் பொண்ணு குவாலிபிகேஷன் என்ன தெரியுமா? mba முடிக்க போறா... அவ எப்படி paவா இருக்க முடியும்?"

கதிரவனை அழைத்து அங்கே இருந்த கௌச்சில் அமர்ந்தவன்,"கதிரா அந்தப் பொண்ணு ஒரு மாதிரி ஷையா இருக்கா. என்ன சொன்ன mba படிச்சவளை எதுக்கு paவா வெச்சி இருக்கன்னு தானே? அவ வீட்டுல ஒரு மெய்டு மாதிரி எல்லா வேலையும் செய்யுறாள். அது ஒரு மாதிரி எம்பரேசிங்கா இருக்கு டா. அதுக்கு இந்த வேலை எவ்வளவோ பரவாயில்ல தான். யா அதுக்கு எதுக்கு இங்க என்கூடனு பாக்கறியா? அவ தாத்தா பாட்டி தான் அவளுக்குனு இருந்த ஒரே சொந்தங்கள். அவங்களையும் என்னால... என்னைக் காப்பாத்த..." என்னும் போதே அவன் குரல் கம்ம,"உனக்காக என் உயிரைக் கொடுப்பேன்னு யார் வேணுனாலும் சும்மா வார்த்தைக்குச் சொல்லலாம் ஆனா அந்தப் பெரியவர் என் கண்ணு முன்னாடியே என்னைத் தாக்க வந்த அந்தக் கத்தியை அவரு வாங்கிக்கிட்டாரு. ஒரு விதத்துல அவளோட இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம். ரொம்ப நாள் எல்லாம் இல்ல... இன்னும் மூணு மாசமோ ஆறு மாசமோ அந்தப் பொண்ணோட வேலை முடிஞ்சிடும். அதாவது அந்தப் பொண்ணுக்கு ஒரு வேலை கிடைச்சதும் இங்கிருந்து போகட்டும். அதுவரை அவ இங்க இருக்கறது தான் கரெக்ட். மேலும் அம்மாக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பப்பாரு வீட்டுல சிந்துவும் ஸ்ரீயும் சுற்றித் திரிந்து இன்னைக்கு அவங்க இல்லாம அம்மாவோட நிலைமையே..." என்று நிறுத்தியவன்,"இந்த பத்து நாள்ல அம்மா அவ கூடவே தான் இருக்காங்க. அட்லீஸ்ட் அம்மாவோட ஆசைக்காகவாது..." என்று நிறுத்தினான்.

"என்னமோ பண்ணித் தொலை..." என்று சலித்தான் கதிரவன்.

"ஏன் கதிரா அந்தப் பொண்ணு மேல இவ்வளவு வெறுப்பு? இதுல வேற எதோ காரணம் இருக்கா?" என்று கேட்க ஏனோ கதிரவன் வெடவெடத்து போனான்.

"ச்சே ச்சே... அதெல்லாம் ஒன்னுமில்லை..." என்று சொல்ல இந்திரன் தன் வேலையைப் பார்க்கப் போக கதிரவன் ஒருவாரம் முன்பு நடந்ததை நினைத்தபடியே இருந்தான். அப்போது அந்தப்பக்கம் வந்த தாமுவின் கண்கள் அவனுடைய குழம்பிய முகத்தையே உற்று நோக்க தன்னிலை பெற்றவன் என்ன செய்வதென்று புரியாமல் அவரைப் பார்த்து மெலிதாகச் சிரிக்க அவரோ முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாமல் இருக்கவும் அங்கிருந்து நழுவியவன் மனதில் தாமோதரனைக் கருவிக்கொண்டே போனான்.

"எப்படிப் பார்க்கிறான் பாரு... சரியான கழுகுப்பார்வை..." என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.

*****************

அந்த இருட்டான அறைக்குள் நுழைந்தான் அவன். அவன் அவனே தான். அவனுக்கு நிச்சயம் பெயர் இருக்கிறது. அவன் கண்களில் ஒரு குரூரம் இருந்தது. அவன் பார்வையில் எதையோ சாதித்து விட்ட பெருமை இருந்தாலும் அதை முழுமையாகச் சாதிக்கவில்லை என்ற சிறு கவலையும் அவனிடத்தில் தென்பட்டது. ஆனால் அவன் நினைத்தை விட தற்போது அதிகமாக நடந்துகொண்டு இருப்பதாக அவனுள் ஒரு எண்ணம். அந்த அறைக்குள் அவனின் ஷூ தடம் தென்படும் போதே அவர்கள் விழித்து கொண்டார்கள். மரணம் கொடியது தான். ஆனால் மரணத்தைக் காட்டிலும் சில கொடுமைகள் இருக்கிறது தானே? அதை தான் தற்போது அவர்கள் அனுபவிக்கிறார்கள். என்ன செய்ய? அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதே! 'யாரிவன்? எதற்காக இப்படிச் செய்கிறான்? இவனுக்கு என்ன வேண்டும்?' என்று எதுவுமே அவர்களுக்கு இதுவரை தெரியவில்லை. இதற்கு அவர்கள் என்றோ இறந்திருக்கலாம். ஆனால் தற்போது அதைவிட கொடுமையை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்குள் இரண்டு எண்ணங்கள் ஓடியது. ஒன்று இப்படியே இறந்துவிட வேண்டும். அது தான் சாத்தியமில்லையே! இரண்டாவதாக தாங்கள் இறக்கவில்லை இன்னும் இருக்கிறோம் என்றாவது தெரியப்படுத்த வேண்டும். அதற்கும் வாய்ப்பில்லையே? அந்த காலடி சப்தம் மிக அருகில் கேட்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வழக்கம் போல் இன்றும் வந்து எதையும் சொல்லாமல் தான் இருப்பான் என்று நினைக்க அதற்கு மாறாக,"பரவாயில்ல அவன் பிழைத்து விட்டான். ஆபிஸ் பொறுப்பையும் ஏற்றுக்கிட்டான்..." என்றதும் அவனின் இந்த வார்த்தைகள் ஏனோ அவர்கள் இருவருக்கும் இன்பத் தேன் வந்து பாய்ந்ததைப் போல் இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து 'இஜித்' என்ற வார்த்தை அவளின் வாயிலிருந்து வந்தது. அதே போல் 'தீர அண்ணா' என்று அவள் அருகிலிருந்தவளிடமிருந்து வார்த்தை வர அவர்கள் இருவரும் அதில் உற்சாகம் கொண்டனர்.

"ரொம்ப சந்தோச பட வேண்டாம். கூடிய சீக்கிரம் அவன் பரலோகம் போகப் போறான். ஏற்கனவே உங்க குடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆறிலிருந்து நாளாகியிருக்கு அது சீக்கிரம் மூணாகும் அப்றோம் ரெண்டாகும்..." என்று சொல்லி கொடூரமாகச் சிரித்தான்.

இருவருக்கும் பயம் கூடவே அழுகை வந்தது.

"பயப்படாதீங்க அது அந்த ரெண்டுலையே தான் இருக்கும். இருக்கனும். அவங்க ரெண்டு பேரும் இவ்வளவு சொத்திருந்தும் ஒன்னும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படணும். நான் தள்ளுவேன்..." என்றவனின் கூற்றில் அத்தனை வெறுப்பு பிரதிபலித்தது.

"நீ யாரு? எதுக்கு இப்படி எங்க குடும்பத்தைக் கஷ்டப்படுத்துற?" என்று அழுகையுடனே அவளின் வார்த்தை வந்தது.

"என்ன சொன்ன? திரும்பவும் சொல்லு? உங்க குடும்பமா? ஆமா உங்க குடும்பம் தான். உங்க குடும்பம் நிர்மூலமாகனும். நான் அதைக் கொஞ்சம் கொஞ்சமா பார்த்து ரசிக்கனும்..."

இவ்வளவு நாட்களாய் எதுவும் பேசாதவள் கூட தற்போது வாய் திறந்து,"ஏன் இப்படிப் பண்ற?" என்று சொல்லும் போதே அவள் வார்த்தை கம்ம அவளோ மெல்ல மயங்கினாள்.

"என்ன ஆச்சு ஸ்ரீ? உனக்கு என்ன ஆச்சு?" என்று கதறினாள் சிந்து.

"ரொம்ப பயப்படாத சிந்துஜா. அவ ஓ சாரி சாரி உங்க அண்ணி இப்போ ப்ரெக்னெண்டா இருக்காங்க. அது தெரியுமா?" என்று அவனுரைக்க சிந்து அவனை மிகக் கடுமையாக முறைத்தாள்.

"சே சே சத்தியமா அதுக்கு நான் காரணமில்லை... இவளை நான் விரும்பினேன் தான் ஆனா அதுக்காக இப்படி அநாகரிகமாக எல்லாம் நடந்துக்க மாட்டேன். அவளையே கேளு..." என்றான் அவன்.

"ஸ்ரீ... ஸ்ரீ... என்ன ஆச்சு? உண்மையாவா?" என்றாள் சிந்து.

இது நாள் வரை வாழவேண்டுமென்று துளியும் ஆசையில்லாதவர்கள் ஏனோ என்று இந்திரன் கண் விழித்துவிட்டான் என்று அறிந்தார்களோ அன்றே எப்படியாவது ஒரே ஒருமுறை அவனைப் பார்த்துவிட வேண்டும் என்று முயற்சிக்க இப்போது அடுத்த தலைமுறை இவள் வயிற்றில் இருப்பது தெரிந்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தாள் சிந்து. யூ நோ உங்க மூணு பேரையும் ஒரே ஆக்சிடெண்ட்ல தூக்கணும்னு தான் நெனச்சேன். அதுக்காகவே தான் அப்படியொரு ஆக்சிடெண்ட்டையும் செஞ்சேன். சாரி சாரி இந்திரனுக்குத் தெரியாமலே இந்திரனைச் செய்ய வெச்சேன். மூணு பேரும் ஸ்பாட்லேயே போய்ச் சேர்ந்திடுவிங்கன்னு தான் நெனச்சேன். ஆனா அதிர்ஷ்டவசமா நீங்க மூணு பேருமே கான்ஷியஸ் மட்டும் தான் இழப்பீங்கனு எனக்குத் தெரியில. அதுலயும் உங்க ரெண்டு பேருக்கும் பெருசா ஒன்னுமே இல்லைனு தெரிஞ்சதும் எனக்குள்ள இருந்த மிருகம் இன்னும் மிருகத்தனமா யோசிச்சது. அப்போ ஸ்பாட்ல நான் போட்ட பிளான் தான் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் செத்தும் உயிரோட இருக்கறது. உங்க ஆக்சிடென்ட் விஷயம் தெரிஞ்சதுமே உங்க அப்பா அம்மாக்கு பாதி உயிர் போயிடுச்சி. ஓ சாரி! உனக்கு மட்டும் தான் அவங்க அப்பா அம்மா இல்ல? உனக்கு அவங்க மாமா அத்தை தானே? ஹ்ம்ம் திடீர்னு யோசிச்சேன் என் மூளை ஒரு யோசனை சொல்லுச்சு. நீங்க செத்துட்டதா சொல்லி நிறைய கோல்மால் வேலையெல்லாம் பண்ணி உங்களை மாதிரியே ரெண்டு பாடியை ரெடி பண்ணி உங்களை இந்த உலகத்துல வாழறவங்க லிஸ்ட்ல இருந்து தூங்கிட்டேன்..." என்றதும் அவர்கள் இருவரும் அவனை முறைக்க,

"என்னை முறைத்து என்ன ஆகப்போகுது? எல்லாம் உங்க வீட்டு முட்டாள் தான் காரணம். என்ன முழிக்கறீங்க யாருனு தெரியில்லையா? கமலேஷ். நான் கூட அவன் பெரிய ஆளுன்னு நெனச்சேன். ஆனா சரியான வடிக்கட்டின முட்டாள். இன்பேக்ட் எனக்கு அந்த முட்டாள் தான் அன்னைக்கு ரொம்பவும் உதவினான். இல்லைனா உங்களை நான் அன்னைக்கு செத்துட்டதா காட்டியிருக்க முடியாது தானே? அன்னைக்கு நேரத்துக்கு உங்க அப்பா அம்மாக்கும் செத்துப்போனதா சொல்லப்பட்ட உங்க ரெண்டு பேரைக்காட்டிலும் உயிருக்குப் போராடுன அவங்க மூத்த மகன் தான் முக்கியமா பட்டான். நான் என் காரியத்தைச் சாதிச்சிட்டேன். யூ நோ வாட் இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கும் விஷயம் இந்த உலகத்துலயே எனக்கும் உங்களை தினமும் பார்த்துக்கும் அந்த ரெண்டு லேடிஸ்க்கும் தான் தெரியும். இன்னைக்கு நீங்க இல்லாத உலகத்துல உங்க வீட்டைச் சேர்ந்தவர்களும் வாழப் பழகிட்டாங்க..." என்று மீண்டும் சிரித்தான்.

"யாருடா நீ? உனக்கென்ன டா வேணும்? ஏன்டா எங்க குடும்பத்தை இப்படி சித்திரவதை பண்ற? எங்கப்பா மனசரிந்து கூட யாருக்கும் எந்தவிதமானக் கெடுத்தலும் தப்பும் பண்ணல டா..." என்று சிந்து சொல்ல,

அதுவரை சாதாரணமாக இருந்தவன் இன்னும் ஆக்ரோஷம் ஆகி,"யாரு அந்த இமையவர்மனா? ஊருக்குள்ள அவனை மாதிரி நிறைய பேரு இப்படித்தான் நல்லவன் வேஷம் போட்டு திரியுறானுங்க... அதை விடு, இப்போ நான் சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு இன்னும் ஷாக்கா இருக்கும். கேட்க தயாரா? என்றான் ஒரு குரூரத்துடன்.

(வானிலை மாறும்...)
 
இறந்ததாக நினைத்த ரெண்டு பேருக்கு
உயிர் கொடுத்திட்டீங்க....
யார் அந்த சைக்கோ....?
இமயன் அப்படி என்ன செய்தார்...?
 
Top