Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-17

Advertisement

praveenraj

Well-known member
Member
மறுநாள் மாலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபல தொழிலதிபர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டு இருந்தது. அதற்கேற்றாற் போல் எல்லோரும் வந்தபடியே இருந்தனர். சந்திரவர்மனும் ஹர்ஷவர்மனும் கூட வந்திருந்தனர். அவர்களுடன் இந்திரனின் சித்தியான கோகிலாவும் வந்திருந்தார். அவர்களுக்கு குடும்பம் சார்பாக அழைப்பிதழ்கள் அனுப்பப்படாமல் ஒரு சக போட்டியாளர் என்ற அடிப்படையிலேஅனுப்பப்பட்டது. இமையவர்மன் வேண்டுமென்றே தான் அவர்களை அழைத்திருந்தார். அவர்களும் முதலிலே வந்து ஆஜராகியிருந்தனர். 'எப்படி சந்திரவர்மன் வந்தார்? அதும் குடும்பத்துடன் எப்படி வர முடிந்தது?' என்ற கேள்விகளே அங்கிருந்த மற்ற தொழிலதிபர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தும் எப்படியும் விழாக்கள் என்றால் உளமார வாழ்த்த வருபவர்கள் மட்டுமா இருக்கிறார்கள்? உள்ளே விஷத்தை வைத்துக்கொண்டு வெளியே அதைக் காட்டமுடியாமலும் வரலாம் தானே என்று அவர்களுக்கு ஒரு எண்ணம் இருக்க பெரும்பாலோனோர் அதையே நினைத்துக்கொண்டு இருந்தனர். அசோக் சௌனியும் வந்திருந்தார். அவர் மனநிலையை அவர் முகமே சொன்னது. பின்னே கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 20000 கோடி காலி அவரது சேரில் இழந்துள்ளார். எல்லோரையும் தாமோ வரவேற்று உபசரிக்க பலமுறை தாமோவைப் பார்த்திருந்தாலும் இவன் தான் தாமோதரனா என்று தெரியாமல் இருந்தார் அசோக் சௌனி. கதிரவனுடன் பேசியபிறகு தான் தாமோதரனின் அதிகாரங்கள் அவருக்குத் தெரிந்தது. இப்போது தாமோவை கண்களில் குரோதத்துடன் பார்த்தார். பின்னே இத்தனை பிளான்களும் அதாவது இந்த அறிவிப்புக்கு முன்னாலே அவர்கள் சர்வீஸ் சார்ந்த தொழிலில் இறங்க தேவையான அனைத்தும் தாமோவின் தலைமையில் தான் அரங்கேறியுள்ளது என்று அறிந்துகொண்டார் அவர்.

மற்ற தொழிலதிபர்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் ஒரு சாதரண ஆளுக்கு இவ்வளவு அதிகாரங்களை என்றுமே கொடுக்க மாட்டார்கள். ஆனால் தாமோவின் பின்புலம் எல்லாமும் இந்த இரண்டு நாட்களில் தான் தெரியவந்துள்ளது. இதுவரை தென்னிந்தியாவையே மையமாக கொண்டு இயங்கிவந்ததால் இது பற்றி மும்பையில் இருக்கும் யாருக்குமே தெரியவில்லை. மேலும் இதுவரை உற்பத்தி சார்ந்து மட்டுமே இயங்கிவந்ததால் அவருக்கு இமையனை எண்ணி அவ்வளவாக கவலைப்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

*****************

இரண்டு நாட்களுக்கு முன்பு :

காரில் ஏறிய தருண் மற்றும் குகன் இருவரும் வேகமாய் வண்டியைச் செலுத்தினர்.

"பாஸ் என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சறுக்கல் உங்களுக்கு? காரியத்தில் கண்ணா இருக்கும் நீங்க எப்படி இதைக் கோட்டை விட்டீங்க?" என்றான் குகன்.

அவன் கோவமாய் முறைக்க,"இல்ல பாஸ் எப்படி மிஸ் பண்ணீங்க?"

"டேய் தயாளன் இங்க எப்படி டா வந்தாரு?"

"நீங்க கேட்கறது புரியில பாஸ்?"

"முந்தா நாள் நைட் வரைக்கும் அவரு இந்தோனேசியாவில் இருந்தாரு, அவரு இங்க அதும் சென்னையில நாம பின்தொடர்ந்த அந்த ஆளு கூட எப்படி?"

"அவருக்கு வேற கேஸ் எதாவது இருக்கும் பாஸ்..."

ஒருநிமிடம் வண்டியை ஓரங்கட்டி கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தான் தருண். நீண்ட யோசனைக்குப் பிறகு அவன் கண்கள் ஏதோ தெரிந்ததைப்போல் சிரிக்க,

"டேய் நான் எதிர்பார்த்ததோட எல்லாம் பெருசா நடக்குது டா..."

"புரியில பாஸ்..."

"கஜாவோட ஆளுங்க அங்க இருந்தானுங்க டா..."

"எந்த கஜா? காசிமேடு கஜாவா?"

"அவனே தான்..."

"பாஸ் அவனுங்க பெரிய மட்ட காரனுங்களாச்சே பாஸ்? (கொலை செய்பவர்கள்) அவன் எதுக்கு அங்க இருக்கான்?"

"உடனே அந்த தயாளன் ஆபிஸ்க்கு போன் பண்ணு. இல்ல இல்ல மணிமாறன்... மணிமாறனுக்கு போன் பண்ணு..." என்று தருண் சொல்ல குகன் அவனை அழைத்தான்.

"சொல்லுடா? என்ன விஷயம்?" என்ற மணிமாறனுக்கு,

"உங்க பாஸ் தயாளன் எங்க இருக்காரு?"

"டேய் என்ன மேட்டரு?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுடா. அர்ஜென்ட்..."

"டேய் எனக்கெல்லாம் அது தெரியாது டா, சொல்ல மாட்டாங்க..." என்று சொல்ல உடனே வண்டியைத் திரும்பியவன் வந்த வழியில் மீண்டும் போக அங்கே தயாளனின் கார் ஆக்சிடென்ட் ஆகியிருந்தது. வேகமாய் சென்று ஆம்புலன்சுக்கு அழைத்து அவரை ஏற்றிவிட்டான். அதற்குள் தருணைப் பின்தொடர்ந்து வந்த தயாளனின் அசிஸ்டன்ட் ரபீக் அங்கே வந்து தயாளனைப் பார்த்து விரைய அவரோ பலமாக அடிபட்டு இருந்தார். பின்பு அவர்கள் எல்லோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ரபீக்கிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டான் தருண். பின்பு தானும் ஒரு டிடெக்டிவ் என்று சொல்ல என்னமோ இதை புதியதாய்க் கேட்பதைப்போல் கேட்டான் ரபீக்.

"சார் கொஞ்சம் பார்மலா இருங்க ப்ளீஸ்... நீங்க என்னை பாலோ பண்ண தானே வந்தீங்க. எனக்குத் தெரியும்..." என்று தருண் விஷயத்தை உடைக்க,

"அதெல்லாம் இல்லை..." என்று ரபீக் மழுப்பினான்.

"ப்ளீஸ் பி சீரியஸ். காசிமேடு கஜா தான் அங்க இருந்தான். அவனைப் பிடிங்க எல்லாமும் தெரியவரும்..."

"அவனா? அவனுக்கு அங்க என்ன வேலை?" என்று சொல்லும் போது அந்த மருத்துவமனையில் இருந்த ஒரு புதியவனைப் பார்த்து சந்தேகம் கொண்ட தருண்,"இங்க வாங்க..." என்று அழைத்தவன்,"டேய் குகன் இந்த கோட்டை போட்டுக்கிட்டு நீ அங்க போ..." என்று குகனுக்கு கட்டளையிட்டான்.

"பாஸ் இது டாக்டர் கோட்டு?"

"நான் சொல்றதை மட்டும் செய். பர்பெக்ட்டா ஆக்ட் பண்ணனும்..."

"யூ டோன்ட் ஒர்ரி பாஸ். பர்பார்மென்ஸ்ல நான் கமலஹாசன் மாதிரி..." என்றான் குகன்.

"தெய்வமே இது விளையாடும் நேரமில்லை ப்ளீஸ்..."

இவன் சொல்லிக்கொடுத்த மாதிரியே குகன் அவனிடம் பேச அதற்குள் போலீஸ் வந்துதும் அவன் முழித்த முழி எல்லாம் பார்த்த தருண் போலீசிடம் ரபீக்கை பேசச்சொல்லிவிட்டு உடனே ஒருவனுக்கு அழைத்து அவனை பாலோ செய்ய சொன்னான் தருண். இதேதும் புரியாமல் விழித்த ரபீக்,

"தருண், இங்க என்ன நடக்குது?" - ரபீக்

போலீசிடம் கொஞ்சம் விவரித்தவன் ரபீக்கை அழைக்கும் வேளையில் மணிமாறனும் வந்துவிட்டான்.

"தயாளன் சாரை பர்பஸ்லி அட்டாக் பண்ணியிருக்காங்க. அதும் அவர் மேல இந்த @#$% தெளிச்சு இருக்காங்க. இது உடம்புல பட்டாவே பராலிஸிஸ் அட்டாக் செய்ய வெச்சிடும். இட்ஸ் லைக் எ நெர்வ் ஏஜென்ட்..."(நெர்வ் ஏஜென்ட் என்றழைக்கப்படுவது ஒரு வகையான கெமிக்கல்ஸ் ஆகும். அது உடலில் பட்டாலே நம் நரம்பு மண்டலத்தை பாதிக்க செய்து நமக்கு பக்கவாதம் முதலியவற்றை ஏற்படுத்தி இறுதியில் மாரடைப்பில் உயிர் பிரிந்துவிடும்.)

"வாட்? இது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"இது தாய்லாந்த், மியான்மர், லாவோஸ் போன்ற கோல்டன் ட்றையங்கள் (golden triangle) என்னும் இடத்துல இல்லீகளா தயாரிக்கிற போதைப்பொருள். அதிலும் இது ரொம்ப ஸ்பெஷல். ஒரு சிட்டிகை அளவு உடம்புல பட்டாலே மொத்தமா பராலிஸிஸ் ஆயிடும்..."

"உங்களுக்கு?"

"நான் சிங்கப்பூர்ல பிறந்து வளர்ந்த தமிழன். என் அப்பா அந்தக் காலத்துல அங்க போய் செட்டில்டு. ஆனா என் அம்மாக்கு இதுல விருப்பமில்லை. நான் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு வளர்ந்தேன். அண்ட் என் அப்பா நார்கோட்டிக்ஸ்ல (போதைப்பொருள் தடுப்பு பிரிவு) வேலை செஞ்சாரு. அம்மாக்கு விருப்பமில்லை இங்கேயே வந்து செட்டில் ஆகிட்டோம். upsc எழுதினேன் செலெக்ட் ஆகமுடியில அப்புறோம் இப்போதான் அப்பா உதவியோடு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரமிச்சோம். அதும் நாங்க மும்பையில் செட்டில்ட். ஒரு முக்கியமான கேஸ் விஷயமா நான் வந்தேன்.என் அப்பா இந்த மாதிரி நிறைய பார்த்திருக்காரு. அதுல தெரிஞ்சிகிட்டேன்..."

"அப்போ அவருக்கு ஏதாவது?"

"எவ்வளவு டோஸேஜுன்னு எல்லாம் எனக்குத் தெரியில. டாக்டர் தான் அதைச் சொல்லணும். எனி ஹவ் ஒன்னும் ஆகாது டோன்ட் ஒர்ரி..."

அதற்குள் நிகிலிடமிருந்து தருணுக்கு அழைப்பு வந்தது.

"டேய் என்னடா பண்ணிவெச்சு இருக்க? உன்னால எனக்கு அசிங்கமா போச்சு. என் ஃப்ரண்ட் கேட்டான்னு உன்னை ரெபெர் பண்ணினேன் ஆனா நீ இப்படி சொதப்பி வெச்சு இருக்கியே?" என்று கதிரவன் தன்னிடம் திட்டியதையெல்லாம் தருணிடம் இறக்கி வைத்தான் நிகில். நிகிலுடைய சித்தப்பா பையன் தான் தருண். நிகில் கதிரவனின் நண்பன். அதனால் தருணை கதிரவனுக்கு பெர்ஸனலாக தெரியும் என்பதால் அவனிவன் என்று கண்டபடி பேசினான்.

"நான் கூப்பிடுறேன் அண்ணா வெய்..." என்று கட் செய்ய அதற்குள் கதிரவனிடமிருந்து தருணிற்கு அழைப்பு வந்தது.

"சொல்லுங்க ஜி. பாஸுனு கூப்பிட்டா ஒரு ப்ரண்ட்லியா இல்ல. சோ இது ஓகே வா மிஸ்டர் கதிரவன்?"

"உங்களை எல்லாம் நம்பி இவ்வளவு பெரிய வேலையை கொடுத்தேன் பாரு எல்லாம் என்ன சொல்லணும். எல்லாம் அந்த நிகிலால வந்தது..." என்று கதிரவன் சலித்துக்கொள்ள,

இதுவரை கேசுவலாய் பேசிக்கொண்டு இருந்த தருண் தன் மறு செல்லில் வந்த தகவல்களைப் பார்த்து,

"மிஸ்டர் கதிரவன். நீங்க பாலோ செய்யும் படிசொன்ன மிஸ்டர் தாமோதரன் டிடெக்டிவ் புலி தயாளனைச் சந்திச்சு அட்டகட்டில அவரு md பையன் இந்திரஜித் வர்மனைத் தாக்க வந்த கும்பலைப் பற்றி ஒரு ரிப்போர்ட் கேட்டிருக்காரு. அதற்கான டீடெயில் சிலவற்றை கொடுக்க தான் இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் தனியா மீட் பண்ணியிருக்கங்க. யூ நோ வாட் நீங்க தான் மிஸ்டர் தாமோதரனோட முதல் சஸ்பெக்ட். உங்க நல்ல நேரமோ என்னவோ நீங்க சிங்கப்பூர்ல சொல்லி இந்த அசைன்மெண்ட கொடுக்க அவங்க டெல்லியைச் சேர்ந்த ஒரு கேங்கை இறக்க பார்த்திருக்காங்க பட் அவங்க இறங்கறதுக்கு முன்னாலே இன்னொரு கேங்க் அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்தவங்க இறங்கி இந்திரனை அன்னைக்கு அட்டாக் பண்ணியிருக்காங்க. சோ நீங்களும் இந்த கேங்கை அனுப்பின அசோக் சௌனியும் இப்போதைக்கு சேப். பட் இதுனால தாமோதரனுக்கு உங்க மேல இருந்த சந்தேகம் துளியும் குறையில. அண்ட் இன்னொரு விஷயம், நீங்களும் அசோக் சௌனியும் கான்டெக்ட்ல இருக்கறது இன்னும் தாமோதரனுக்குத் தெரியாது. உங்க மொபைலை ட்ராக் செய்யுற வேலையில இறங்கிட்டாரு தாமோதரன். இதுல இன்னொரு சுவாரசியம் என்ன தெரியுமா? நீங்க அனுப்பின அந்த டெல்லி காரங்க அன்னைக்கு அந்த ஸ்பாட்லேயே தான் இருந்திருக்கானுங்க. ஆனா அன்னைக்கு இந்திரனை அட்டாக் பண்ண வந்தது முழுக்க முழுக்க ராஜஸ்தான சேர்ந்த கேங்க். ஆனா உங்ககிட்டயும் உங்க சீப்(அசோக் சௌனி) கிட்டயும் நீங்க அனுப்பின ஆளுங்க என்னவோ அவங்க தான் அன்னிக்கு நைட் இந்திரனை அட்டாக் பண்ணதா பொய்ச் சொல்லி உங்களை நம்பவச்சிட்டு இருக்காங்க. நீங்களும் அதை நம்பி பணத்தை வாரி இறச்சிருக்கீங்க... சார் நான் அப்போ கொஞ்ச யோசனையில இருந்தேன். மேலும் அவரை(தயாளனை) மாறுவேஷத்துல நான் பார்த்ததில்லை அண்ட் அப்போ என்னால அதை யோசிக்கவே முடியல. சோ சொதப்பிட்டேன். டீடெய்ல்ஸ் எல்லாம் போதுமா இல்ல இன்னும் வேணுமா மிஸ்டர் கதிரவன்?" என்று தருண் கேட்ட தொனியில் கதிரவன் சற்று ஆடித்தான் போனான். அவனுக்கும் அசோக் சௌனிக்கும் இருக்கும் தொடர்பு யாருக்குமே தெரியாது என்று அவன் நினைத்திருக்க இவ்வளவு தகவல்களை புட்டு புட்டு வைத்த தருணை நினைத்து கதிகலங்கினான்.

"பட் இதுல ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க கதிர். அந்த தாமோதரன் வேற சில பிளான்ல இருக்காரு. ஆனா என்னனு தான் என்னால மோப்பம் பிடிக்க முடியில. நான் அந்த பென்ட்ரைவ் கொடுத்ததை வேணுனா பார்க்காம இருந்திருக்கலாம். ஆனா வேற சில முக்கியமான விஷயத்தைப் பார்த்தேன்..."

"என்ன முக்கியமான விஷயம்?" என்று கதிரவன் எக்ஸைட் ஆனான்.

"அதை நான் இன்னும் கன்பார்ம் பண்ணல. பண்ணிட்டு வேணுனா சொல்றேன்..."

"அப்போ அன்னைக்கு இந்திரனை அட்டாக் பண்ண வந்தவங்களை அனுப்பியது யாரு?" என்ற தன் சந்தேகத்தைக் கேட்டான் கதிரவன்.

சிரித்தவன்,"அது எதுக்கு கதிர் உங்களுக்கு? உங்களை மாதிரியே அவனுக்கும் ஏதாவது வெஞ்சேன்ஸ் இருக்கலாம். இல்லை உங்களை மாதிரியே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாம்..." என்ற வார்த்தைகளில் ஒரு அழுத்தம் கொடுத்தான் தருண்.

"அது... இல்ல... சும்மா..." என்று வெடவெடத்தன் கதிரவன்.

"ராஜஸ்தான்ல் இருந்து இறங்குன ஆளுங்களுக்கு மலேசியாவுல இருந்து அசைன்மென்ட் வந்திருக்கு. மலேசியா காரங்களுக்கு கல்கத்தாவுல இருந்து கட்டளை போயிருக்கு. ஆனா அவங்கள யாரு எதுக்கு அனுப்பினானு எனக்கு இன்னும் தெரியில. பட் அது எனக்கு அனாவிஷயமானது. சோ விடுங்க..." என்ற தருணிடம்,

"இல்ல எனக்கு அது தெரியணும்..."

"வேணுனா விசாரித்து சொல்றேன்..." என்று அழைப்பைத் துண்டித்தான்.

அதற்குள் ரபீக், மணிமாறன் இருவரும் வந்துவிட அவர்களிடம் கொஞ்சம் பேசிவிட்டுக் கிளம்பிய தருண் ரபீக்கிடம் திரும்பி,"இனிமேல் கொஞ்சம் எனக்குத் தெரியாம பாலோ பண்ணுங்க மிஸ்டர் ரபீக்..." என்று சொல்லி சிரித்துவிட்டுச் செல்ல ரபீக் அரண்டான்.

"பாஸ் என்ன சொல்றீங்க?" என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் குகன் கேட்க,

"கொஞ்சம் பரபரப்பா ஓடிட்டோமில்ல? வா ஒரு ஜிகர்தண்டா குடிச்சிட்டே போவோம்..." என்று சொல்லி குகனை அழைத்துச் சென்றான்.

"பாஸ் உங்களுக்கு எப்படி பாஸ் இவ்வளவு விஷயம் தெரியும்? அதும் போதைப்பொருள் எல்லாம்?"

"யார்கிட்டயும் சொல்லக் கூடாது..." என்று ரகசியம் போல் தருண் வினவ,

"மதர் ப்ரோமிஸ் பாஸ்..."

"எனக்கு சூப்பர் நேச்சுரல் பவர் இருக்கு குகா..."

"கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா?"

"எத்தனை வருஷமா என் கூட இருக்க?"

"மூணு மாசமா பாஸ்..."

"மூணு வருஷம் என் கூடவே இரு அப்போ வேணுனா உனக்கு கொஞ்சம் புரியும்..."

**************

அன்றைய இரவு முழுவதும் ஸ்ரீயின் பெயரையே பிதற்றிக்கொண்டு உறங்காமல் அதேநேரம் முழித்து தெளிவாகவும் இல்லாமல் இருந்தான் இந்திரன். அவனை அருகிலிருந்தே கவனித்துக்கொண்டான் கதிரவன். மறுநாள் காலையில் தான் அவனுக்கும் விழிப்பு வந்தது. வந்ததும் முதலில் அவன் கேட்டது ஸ்ரீயின் பெயரைத்தான்.

"ஸ்ரீயிடம் பேசு இந்திரா..." என்று அவன் சொல்லியும்,"வேணாம் கதிரா. நான்... நான் அவ கூட இருந்தாலே அவளுக்கு வலியும் வேதனையும் தான் கிடைக்குதாம். அவ நிம்மதியா சந்தோசமா இருக்கட்டும். நான் இனிமேல் அவளைத் தொந்தரவு செய்யவே மாட்டேன்..." என்று அவன் வாய் சொன்னாலும் அவன் மனம் முழுக்க இனி ஸ்ரீ தன்னிடம் பேசவே மாட்டாளோ என்று நினைக்கையில் அவனுக்கு அனைத்தும் கசந்தது. அவன் கண்களில் கண்ணீரோடு இருக்க,"சரி டா அங்கிள் கிட்ட நான் சொல்லிட்டேன். அவரு நாளைக்கு நம்மள கிளம்பி வரச் சொன்னாரு. அம்மாக்கு இந்த விஷயம் தெரியாது. சோ நீ எதையும் சொல்லிடாத..."

"டேய் ஸ்ரீக்குத் தெரியுமா?"

அவன் வேண்டுமென்றே,"இல்ல டா இந்திரா. நான் யாருகிட்டயும் சொல்லல. வீணா இதைச்சொல்லி நான் எல்லோரையும் பயம்புறுத்த விரும்பல..." என்றதும் ஒருகணம் அவன் முகம் கன்றியது. பின்னே இதை ஸ்ரீயிடம் சொல்லியிருந்தாலாவது அவள் தன்னுடன் பேசியிருப்பாளே என்று நினைத்தவன் மறுகணமே 'எனக்கு அடிபட்டிருக்குனு தெரிந்தா என்னைவிட உனக்கு தான் ரொம்ப வலிக்கும் ஸ்ரீ. எனக்குத் தெரியும்..' என்று இவன் சொல்லி அந்த நாள் நினைவுக்குச் சென்றான்.

சின்ன வயதிலிருந்தே அவனுக்கு பைக் கார் மீதெல்லாம் அதிக நாட்டம் இருந்தது. பதிமூன்று வயதிலே பைக் ஓட்ட வேண்டும் என்று நினைத்து அவர்களுடன் பணிபுரியும் ஒருவரின் பைக்கை வாங்கி வீட்டிற்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக ஓட்ட கற்றுக்கொண்டான். அது அவன் வீட்டில் யாருக்கும் தெரியாது. ஒருமுறை அவன் பைக் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல அது நிலையில்லாமல் போக மேலும் கால் முழுவதும் தரையில் எட்டாததால் பேலன்ஸும் செய்ய முடியாமல் கீழே விழுந்துவிட்டான். அந்த விஷயத்தை உடனே சிலர் வந்து சொல்ல அதற்குள் அந்த வழியில் வந்த ஸ்ரீயின் தந்தை அவனைப் பார்த்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்தார். அப்போதும் இந்திரனிடம் பேசாமல் இருந்தவள் அவன் வலியில் அலறும் போதெல்லாம் அவள் முகமும் ஏனோ வேதனையில் வாடியது. அவனுக்கு டெட்டால் வைத்து துடைக்கும் போது அவனைக்காட்டிலும் அவள் அதிக முக பாவங்களைக் காட்டினாள். அதிலே ஸ்ரீக்கும் தன்னைப்பிடிக்கும் என்று அவன் நன்கு புரிந்துகொண்டான். ஆனால் இவனும் அவளிடம் நெருங்கவில்லை அவளும் சொல்லவில்லை. ஆனால் இருவருக்குள்ளும் அந்த மெல்லிய புரிதலானது இன்றுவரையில் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இப்பொழுது தான் அவனையே அவன் பார்க்கிறான்.உடலில் அதிக காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவன் அன்னையையும் ஸ்ரீயையும் நினைக்க அவனுக்கு இப்போது தான் அவனின் தவறு புரிந்தது. அன்னையிடம் பொய் சொல்லிவிட்டும் ஸ்ரீயிடம் சொல்லாமல் கிளம்பும் போது அவள் முகத்தில் தெரிந்த கலவரமும் அவனை வாட்டியது. அவனுக்கு அடிபட்டதன் வலியைக் காட்டிலும் தனக்காகத் துடிக்கப்போகும் இருவரின் ஏன் சிந்துவையும் சேர்த்துக்கொண்டாள் மூவரின் துடிப்புகள் தான் அவனுக்கு அதிகம் வலித்தது.

மறுநாள் காலையிலே அவர்களுக்குச் சொந்தமான அந்த ஜெட் வந்துவிட இந்திரனும் கதிரவனும் அதிலேறி சென்னை திரும்பினர். அங்கே அவர்களுக்காக தயாராக இருந்த காரில் ஏற வெளியே வீட்டில் இமையவர்மன் பரபரப்பாகவே காணப்பட்டார். இன்னும் சகுந்தலாவிற்கு விஷயம் தெரியாது. கார் உள்ளே வந்ததும் அதிலிருந்து இந்திரன் அடிபட்டு இறங்குவதைக் கண்ட சகுந்தலா உடனே அழுதுவிட்டார். அவரை சமாதானம் செய்வதற்குள் இந்திரன், இமையவர்மன், கதிரவன் மூவருக்கும் பெரும் பாடு ஆனது. அதற்குள் ஸ்ரீயும் வந்துவிட அவளோ எதையும் பேசாமல் அவனின் காயங்களைப் பார்த்து கண்களில் கண்ணீரோடு நிற்க சிந்துவும் கமலேஷும் வந்துவிட ஸ்ரீயைத் தவிர எல்லோரும் அவனை தாங்கு தாங்குவெனா தாங்க அவனை மேலே அவனின் அறையில் படுக்கவைத்து டாக்டர் வந்து பரிசோதித்து ரெஸ்ட் எடுக்குமாறு சொல்லிவிட்டு சில மருந்துகளைக் கொடுத்தார்.

தன்னைச் சுற்றி எல்லோரும் சோகமாய் இருப்பது பிடிக்காமல்,"எல்லோரும் வெளிய போங்க ப்ளீஸ். எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..." என்று சொன்னவன் குரலில் அவ்வளவு எரிச்சல் இருந்தது. இங்கு வந்து இவ்வளவு நேரமாகியும் இதுவரை தன்னிடம் ஒருவார்த்தை கூடப் பேசாமல் நிற்கும் ஸ்ரீ தான் அவன் எரிச்சலுக்குக் காரணம். இமையவர்மன், கதிரவன், கமலேஷ் மூவரும் சென்றுவிட,"குட்டிமா... அம்மா... எனக்கு ஒன்னுமில்ல. ப்ளீஸ் அழாதீங்க. ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய போங்க..." என்று சொல்ல சிந்துவுற்கு அவன் எண்ணம் புரிய சகுந்தலா ஏதும் புரியுமால் நிற்க,"வாம்மா அண்ணா தனியா இருக்கட்டும்..." என்று சொன்னதும் அவரோ எதுவும் புரியாமல் ஸ்ரீயையும் உடன் அழைக்க,

"எல்லோரும் வெளியே வந்துட்டா அப்றோம் அண்ணாவை யாரு பார்த்துக்கறது? நீ உள்ளேயே இருடி..." என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவளுக்கு இரண்டு நாட்களாகவே ஏன் ஸ்ரீ சரியில்லை என்பதற்கான காரணம் எல்லாமும் ஓரளவுக்குப் புரிந்தது. மேலும் அவர்களுக்குள் இருக்கும் இந்தக் காதல், ஊடல் முதலியவற்றை அவளும் ஓரளவுக்கு அறிவாள்.(அன்று தன் பெட்ரூமில் ஸ்ரீ மற்றும் இந்திரனுக்கிடையில் நிகழ்ந்த விஷயம்) ஊருக்குச் சென்ற அண்ணனும் சரியில்லை மேலும் இப்போது அடிப்பட்டு வேறு வந்திருக்கிறான் என்பதால் இதுவும் அவர்கள் ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம் என்று புரிந்ததால் தான் அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு வந்தாள்.

அதுவரை அமைதியாக இருந்தவள் அவர்கள் சென்றதுமே அழ ஆரமிக்க, அது இந்திரனுக்கு என்னவோ செய்தது.

"ஸ்ரீ. ஸ்ரீ குட்டி, அழாத ப்ளீஸ்... உன்ன திரும்ப திரும்ப அழ மட்டும் தான் வெக்கறேன் இல்ல? நான் உன்கூட இருந்தாலே உனக்கு வலியும் அழுகையும் தான் கிடைக்குது. நான் ஒரு முடிவெடுத்துட்டேன். பேசாம..." என்று அவன் நிறுத்த,

கண்களில் கண்ணீர உருண்டோட அவனையே பரிவோடு பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்ரீ.

"நான் இனியும் இங்க இருக்க மாட்டேன் ஸ்ரீ. மும்பைக்கே போயிடுறேன். என்னால நீ இந்த வீட்டுக்கும் வர யோசித்து அம்மா, சிந்து, கமலேஷ், அப்பா இவங்க எல்லோருக்கூடையும் இருக்காம என்னையும் மன்னிக்க முடியாம... வேணாம் ஸ்ரீ..." என்று சொல்லும் போதே அவன் குரல் கம்ம,"ப்ளீஸ் ஸ்ரீ ஒரேயொரு முறை என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு ஸ்ரீ..." என்று சொல்ல அவளோ அழுதுகொண்டே வந்து அவன் அருகில் படுத்துக்கொண்டவள்,"சாரி இஜித். நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிடேனில்ல? சாரி. என்னால தானே உனக்கு இப்போ ஆக்சிடென்ட் ஆச்சு? நான் மட்டும் அன்னைக்கு உன்கிட்ட அப்படியெல்லாம் பேசாம இருந்திருந்தா?" என்று அவள் சொல்ல நடப்பதெல்லாம் கனவா நிஜமா என்று புரியாமல் குழம்பித் தவித்தான் இந்திரன்.

அவள் கண்ணெல்லாம் சிவந்து அழுதழுது முகம் வீங்கி இருக்க அவள் முடியைக் கோதிவிட்டவன்,"அழுதியா ஸ்ரீம்மா?" என்று உணர்வெதும் இல்லாமல் அவன் வினவ,

"போடா..." என்று சொன்னவள் அவனைக் கட்டிக்கொள்ள அவனுக்கோ ஆனந்தம் கூடவே வலி இரண்டும் இருந்தது. பின்னே அவனுக்கு அடிப்பட்டிருந்த இடத்திலே அவள் அணைத்ததால் வலியில் ஸ்ஸ்ஸ் என்று அவன் அலறினான்.

"சாரி, சாரி. ரொம்ப வலிக்குதா?" என்று அடிபட்ட அவன் உடலை நோட்டமிட்டபடியே அவள் வினவ, அவனோ, "ஆமாம்" என்றதும் அவள் விலகப் பார்க்க,"அங்க இல்லை..." என்று மறுப்பாக தலையாட்டியவன்,"இங்க" என்று சொல்லி அவன் நெஞ்சைக் காட்ட,

"சாரி இஜித். நான் அன்னைக்கு ஏதோ கோவத்துல உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்... நீ என் காலைப் பிடிச்சுப் பேசுனதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு தெரியுமா? நானும் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன் இல்ல?"...

(வானிலை மாறும் ,,,)
 
ஹா...ஹா... தருண்்ஒரு மர்மமா இருக்கான்...
தயாளனோட மகனா...?
ஆஹா இதென்ன புது புரளியா இருக்கு? ? இல்லை இல்லவே இல்லை. தருண் தனி டிடெக்டிவ் டீம், தயாளன் தனி டிடெக்டிவ் டீம்... ??
 
Top