Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-15

Advertisement

praveenraj

Well-known member
Member
இந்திரன் சென்ற பைக் வந்த வேகத்திற்கு நிலையில்லாமல் ஸ்கிட் ஆகி விழ பத்தடி தூரம் தள்ளி வீசியெறியப்பட்டான் இந்திரன்.

அவன் மனமும் உதடும் ஒன்றை மட்டும் ஜெபித்துகொண்டிருந்தது.'என்னை மன்னிச்சுடு லேக்கு. சாரி...'

அதைக் கண்ணெதிரே பார்த்தவனுக்கு முதலில் இது நிஜமா கனவா என்ற திக்ப்ரமையில் தவித்தான். அவன் வீசியெறிப்பட்டதும் அவன் வண்டி தீப்பிடிக்க அதற்குள் அங்கிருந்த வாலண்டீர்ஸ் எல்லோரும் அவனை நோக்கிச் சென்றுவிட,"இந்திரா? டேய் இந்திரா?" என்று கதிரவன் கத்தினான்.

"அண்ணா? என்ன ஆச்சு அவருக்கு? அண்ணா என்ன ஆச்சு?" என்று இங்கு ஸ்ரீ துடிக்க,

இப்போது தான் கதிரவனுக்கு போனில் லேகா இருப்பது நினைவுக்கு வர,"அது அது ஒன்னுமில்ல லேகா..." என்ற அவன் குரலே ஏதோ விபரீதம் என்று ஸ்ரீக்கு உணர்த்தியது.

"அண்ணா ப்ளீஸ், சொல்லுங்க..." என்று சொன்னவளின் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீர் சிந்த,"நீ வெய் நான் கூப்பிடுறேன்..." என்று விரைந்தான் கதிரவன்.

அதற்குள் அவன் கைக் கால் எல்லாம் பயங்கர அடிபட்டு ரத்தம் வலிந்து கால் வீங்கியிருந்தது. நல்லவேளையாக தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவன் தலைக்கு எதுவும் ஆகவில்லை.

கதிரவன் செல்வதற்குள் அவனை முதலுதவி செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட, என்ன ஆனதோ என்று பதறியவன் எங்கே ஸ்ரீ இதை வீட்டில் சொல்லிவிடுவாளோ என்று பயந்து மீண்டும் ஸ்ரீக்கு அழைத்தான்.

"அண்ணா அவருக்கு... அவருக்கு..." என்று ஏனோ கேவினாள் அவள்.

"இந்திரனுக்கு ஒன்னுமில்லடா ஸ்ரீ குட்டி. அவனை ஃபர்ஸ்ட் எயிட் செய்ய கொண்டுபோயிருக்காங்க. ஒன்னும் ஆகாது. நீ பயப்படாத அண்ட் முக்கியமா அழாத ப்ளீஸ்..." என்று அவளைத் தேற்றினான்.

"என்னால தான் அண்ணா இது நடந்தது. நான் தான் இதுக்கு காரணம். அன்னைக்கு நான் ஏதேதோ நெனப்புல அவரை ரொம்பவே ஹார்ஷா திட்டிட்டேன். திட்டியிருந்தா கூடப் பரவாயில்ல... அவரை ரொம்பவும் நோகடிச்சிட்டேன். என்னால தான் அவருக்கு இப்படி ஆச்சு..." என்று அவள் பாட்டிற்கு பிதற்ற,

"ஸ்ரீமா நீ அழாத டா. ப்ளீஸ், வீட்டுல அம்மா அங்கிள் கிட்ட ஏன் சிந்து கிட்டக் கூட எதையும் சொல்லாத குட்டிம்மா. அவங்க ரொம்ப பயந்திடுவாங்க. ப்ளீஸ்... இரு டாக்டர் வராங்க, நான் பார்த்துட்டு என்னனு சொல்றேன்..." என்று அழைப்பைத் துண்டித்தவன் டாக்டரிடம் இந்திரனின் நிலையைப் பற்றி விசாரிக்க,

"ஒன்னும் பிரச்சனை இல்ல மிஸ்டர். வந்தது ஹை ஸ்பீட்ல. விழுந்த ஷாக்ல கால்ல பிராக்சர் ஆகியிருக்கு. கையிலும் மைனர் பிராக்சர். பை காட்ஸ் கிரேஸ் வண்டியை விட்டு தூரம் வீசப்பட்டதால அவரு அடிகளோட சேப்..." என்று அவர் விலகினார். அவன் தூரம் வீசப்பட்டதால் அவன் வண்டி தீப்பிடித்து அவனுக்கு பெரும் ஆபத்து ஏதும் நிகழவில்லை.

"சார் நான் அவனை ஊருக்குக் கூட்டிட்டுப் போலாமா?"

"எங்க?"

"இந்தியா..."

"பிளைட்லயா?"

"இல்ல பிரைவேட் ஜெட் இருக்கு சார். நோ ப்ரோப்லேம்..."

"அப்போ நாளைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும். நாளை மறுநாள் நீங்க கிளம்பலாம்..."

"தேங் யூ" என்றவன் இந்திரனைப் பார்க்கச் சென்றான். அவனோ இன்னமும் ஸ்ரீயின் பெயரைத் தான் பிதற்றிக்கொண்டு இருந்தான்.

உடனே ஸ்ரீக்கு அழைத்தவன் எல்லாமும் சொல்லி,"நான் அவன் காதுல போன் வெக்கறேன். நீ அவன்கிட்டப் பேசு..." என்றதும்,

"இல்ல வீடியோ கால் போடுங்க. நான் பார்க்கணும்..." என்றாள்.

ஏனோ அவன் காலில் கட்டு சிராய்ப்பு எல்லாம் பார்த்தவன் இதைக் கண்டால் அவள் இன்னமும் பயந்துவிடுவாள் என்று எண்ணி மறுத்து,"டாக்டர் இருக்காங்க ஸ்ரீம்மா. பேச மட்டும் செய் ப்ளீஸ்..." என்றான்.

ஸ்ரீ போனில் அழுதபடியே பேச அவள் பேசுவது அவனுக்குக் கேட்டது. அவனால் பதில் பேசமுடியவில்லை என்றாலும் இதுவரை அவனிடமிருந்த அந்த உளறல்கள் நின்றது. அவன் போன் வாங்கி,"ஸ்ரீ நானே அங்கிள் கிட்டப் பேசிடுறேன். நீயா எதையும் சொல்ல வேணாம்..." என்றவன் இமையவர்மனை அழைத்து விஷயத்தைச் சொல்லி டாக்டரிடமே பேசவும் சொல்லிவிட்டு அவர் திருப்திக்கு அவனை வீடியோவும் எடுத்து அனுப்ப கொஞ்சம் நிம்மதியானவர் உடனே தங்கள் ஜெட்டை அனுப்புவதாய்ச் சொல்லி நாளை மறுநாளே இந்தியா வர உத்தரவிட்டார். அதுவரை விஷயம் சகுந்தலாவிற்குத் தெரியவேண்டாம் என்றவர் இங்கே வந்ததும் சொல்லிக்கொள்ளலாம் என்றார். பின்னே இப்போது இதைப்பற்றிச் சொன்னால் சகுந்தலாவும் அதிகம் பயந்து விடுவார் என்று எண்ணிய கதிரவனும் சரியென்றான்.

ஸ்ரீ தான் அன்றும் அதற்கு அடுத்த நாளும் ஒரே அழுகையில் கரைந்தாள்.

சின்ன வயதிலிருந்து தான் அங்கே வளர்வது இந்திரனுக்குப் பிடிக்காது என்று சற்று விவரம் தெரிந்த நாட்களிலே ஸ்ரீயும் அறிந்துகொண்டான். அவள் குழந்தையாய் அங்கு இருக்கும் போதே யாரும் பார்க்கா வண்ணம் அவள் தூங்கிக்கொண்டு இருந்தால் அவளைக் கிள்ளிவிட்டுச் சென்றுவிடுவான். விளையாட வந்தால் வேண்டுமென்றே அவளை கீழே தள்ளி காயப்படுத்திவிடுவான்.

இப்படியெல்லாம் இவன் செய்வது சகுந்தலாவிற்கு மனவருத்தம் தந்தாலும் அவனின் குணத்தை மட்டும் யாராலும் மாற்றவே முடியவில்லை.

ஒருமுறை அந்தக் கோவிலுக்கு (அன்று சென்று வந்த அந்தப் பழமையானக் கோவிலுக்கு) பொங்கல் வைக்க குடும்பமாய்ச் சென்றார்கள். அது இப்போதே பொட்டல் காடாய்த் தான் இருக்கிறது என்றால் அன்றோ இன்னும் ரிமோட் ஏரியாவாக இருந்தது. இவர்கள் சென்று பொங்கல் வைக்க பிள்ளைகள் ஐவரும் (கதிர் உட்பட) அங்கே விளையாடச்சென்றனர். கண்ணாம்பூச்சி விளையாட முடிவுசெய்ய ஒவ்வொருவராய்க் கண்ணைக் கட்டி விளையாட அப்போது ஸ்ரீயின் டர்ன் வந்தது. அவள் மீதிருந்த வன்மம், மற்றும் எப்போதும் அவளுக்கே முதல் ப்ரீபெரென்ஸ் கொடுக்கும் தன் அன்னை போன்ற நிகழ்வுகள் அவனுக்குள் வன்மத்தை வளர்க்க அவளின் கண்ணை நன்கு இறுக்கி கட்டி அவளைச் சுற்றி விடுகிறேன் என்று சொல்லி கொஞ்சம் காட்டிற்குள் சுற்றி விட்டு எல்லோரும் சென்றுவிட அவளோ கண்ணும் தெரியாமல் யாரும் இல்லாமல் முதலில் கொஞ்சம் தைரியமாகவே தேடினாள். பின்பு அங்கே வந்த இந்திரன் அவளை பயம்புறுத்த எண்ணி குரலை மாற்றி கத்தி அவளுக்கு திகிலூட்டினான். அவளோ பயத்தில் கண்கட்டை அவிழ்க்கவும் முடியாமல் அதே நேரம் பயத்தில் அழுதாள். அவனோ அவளை நன்கு அழவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கு ஏற்றார் போல் கதிரவன், சிந்து, கமலேஷ் மூவரையும் வேறு திசையில் இருக்கவைத்துவிட்டு இவன் மட்டும் அவளோடு இருந்தான்.

ஸ்ரீக்கு இயற்கையிலே கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். இதில் எப்போதும் தன்னைப் பார்த்து முறைக்கும் ஏன் சமயங்களில் யாரும் பார்க்கா வேளையில் தன்னை அடிக்கவும் கிள்ளியும் தள்ளிவிடும் இந்திரன் மீது அதிக பயம் கொண்டாள். கொஞ்சம் விவரம் தெரிந்தது முதலே இந்திரன் தன்னை அடிப்பதையும் கிள்ளுவதையும் எல்லாம் சகுந்தலாவிடம் சொல்ல மாட்டாள். ஏனோ அவளுக்கு இந்திரனை சகுந்தலாவிடம் மாட்டிவிட மனம் வராது. அதனாலே இந்திரன் இருக்கும் பக்கமே வரமாட்டாள்.

இப்போது அவளுக்கு அதிக பயம் வர அதன் வெளிப்பாடாய் அவளோ அழ அப்போதும் ஏனோ அவளைக் காப்பாற்றாமல் மேலும் பயம்புறுத்திக்கொண்டு இருந்தான் இந்திரன். அப்போது அவள் காலுக்கு பின்னாடி ஒரு பாம்பைப் பார்த்தவன் பயந்து எதையும் சொல்லாமல் அவளை காப்பாற்றவும் செய்யாமல் ஓடிவிட அப்போது அது தீண்டிவிட்டது. கீழே விழுந்தவளின் கட்டு அவிழ அவள் கண்முன்னே இந்திரன் ஓடுவதைப் பார்த்தவளுக்கு ஏனோ அழுகையுடன் கூடிய ஒரு வெறுப்பும் இயலாமையும் வர அப்படியே மயங்கவும் செய்துவிட்டாள்.

ஆனால் இந்திரன் ஓடிச்சென்று தாமுவிடம்,"பாம்பு... ஸ்ரீ..." என்று கையை மட்டும் காட்ட அவர்கள் வந்து பார்க்கும் போது அவள் வாயில் நுரையுடன் மயங்கியிருந்தாள். பிறகு அவளை எப்படியோ காப்பாற்றி விட்டார்கள். அதன் பின் நடந்ததை எல்லாம் சகுந்தலா விசாரிக்க கதிரவன், சிந்து, கமலேஷ் மூவரும் தாங்கள் ஒன்றாகவே இருந்ததைச் சொல்ல அப்போதே இந்திரன் மீது சகுந்தலாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. பிறகு ஸ்ரீயிடம் கேட்க வழக்கம் போல் அவளும் எதையும் சொல்லாமல் மழுப்ப பின்பு அவளிடம் மிரட்டிக் கேட்டதும் அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

அப்போதிருந்த கோவத்திற்கு இந்திரனை அடி வெளுத்துவிட்டார் சகுந்தலா. அவர் இந்திரனை முதலும் கடைசியாய் அடித்தது அன்று தான். எங்கே மீண்டும் இவனால் ஸ்ரீக்கு எதாவது ஆகிவிடுமோ என்று அவருக்குள் பயம் எழ அவனை உடனடியாக ஹாஸ்டெலில் சேர்த்துவிட்டவர் ஸ்ரீயை இன்னும் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்.

உண்மையில் எப்போதும் வாய்நிறைய "அத்தை அத்தை" என்று தன்னையே சுற்றிவரும் ஸ்ரீ மீது சகுந்தலாவிற்கு கொள்ளைப்பிரியம். அவளை உண்மையிலே தன் மருமகளாய்க் கொண்டுவர வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்படி நடந்துக்கொள்ளும் இந்திரனை நினைக்கையில் சொல்லப்படாத கோவமும் ஆற்றாமையும் தான் தோன்றியது. இந்த விஷயத்தை எல்லாம் அவர் பிறகொரு நாளில் இமையவர்மனிடம் சொல்லிவிட அதைக் கேட்ட அவரும் அதிர்ந்தார். அதீத செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்துவிட்டோமே என்று வருந்தியவர் அவனை ஹாஸ்டலில் சேர்க்க எண்ணிய சகுந்தலாவின் திட்டத்திற்கு மறுப்பேதும் கூறவில்லை.

இங்கே வீட்டில் ஜாலியாக வாழ்ந்தவனுக்கு அந்த ஹாஸ்டல் வாழ்க்கை நிறைய சொல்லித்தந்தது. உண்மையில் அன்று ஸ்ரீ வாயில் நுரையுடன் அவனைப் பார்த்த அந்த ஒரு பார்வை அவனை என்னவோ செய்தது. அதற்கும் மேல், அன்று ஹாஸ்பிடலில் கண்விழித்தவளோ, தான் வழிமாறி வந்துவிட்டதாகவும் கால்தடுக்கி விழுந்துவிட்டதாவும் சொல்ல அவளின் இந்தப் பேச்சை நினைக்கையில் முதலில் இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'இவள் நினைத்திருந்தால் என்னைக் கைக்காட்டி இருக்கலாமே? ஆனால் ஏன் செய்யவில்லை?' என்று தோன்ற அதன் பின் அன்னை அவனை அடித்து ஹாஸ்டல் சேர்த்துவிட அன்று அவளை தனியே சந்தித்த போதும் கூட அவள் அவனிடம் கோவப்படவே இல்லை. ஆம் இத்தனை ஆண்டுகளில் அவன் எவ்வளவு தவறு செய்திருந்தாலும் பதிலுக்கு ஒருநாளும் அவனிடம் அவள் வெறுப்பைக் காட்டியதில்லை. இதையெல்லாம் தன்னுடைய ஹாஸ்டல் வாழ்வில் நன்கு அசைபோட்டவனுக்கு தன்னுடைய அழுக்கான மனது புரிய, அவனை அவனே சுத்தம் செய்ய ஆரமித்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தவன் அந்த வருடம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான். அதுவரை சின்ன பெண்ணாகவே பார்த்து பழகிய ஸ்ரீ முதன்முதலில் பெரிய பெண்ணாய் அவன் முன் தோன்றவும் அவனுக்குள் என்னவோ மாற்றங்கள் நிகழ்ந்தது. அவன் அவளைத் தேடிதேடி போக அவளோ அவனைப் பார்த்தாலே விலகி ஓடிவாள்.

அடுத்த வருடம் அவன் பத்தாவது முடித்த போது தான் விடுமுறையில் ஸ்ரீயிடம் ஒழுங்காகவே பேச ஆரமித்தான். நாட்கள் அப்படியே போக அவனும் கல்லூரி சேர்ந்து இரண்டு வருடம் கடந்திருக்க ஸ்ரீயோ பத்தாம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்தாள். அப்போதும் தன் முன்னே வராமல் ஒதுங்கியே சென்றவளை லாவகமாக வழிமறித்தவன் அவளிடம் ப்ரொபோசும் செய்தான். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் நாங்கரை ஆண்டுகளாய் அவளின் மன்னிப்பிற்காகவும் காதலுக்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறான்.

இதுநாள் வரை ஸ்ரீக்கு இந்திரனைக் காணும் போதெல்லாம் அன்று தன்னை பாம்பிடம் விட்டு ஓடியவனின் முகமும் அவனுடைய எண்ணமும் தான் நினைவுக்கு வரும். அந்த நிகழ்வு அவளுள் ஏற்படுத்திய அந்த பயம் மட்டும் இன்றைக்கு வரை அவளை விட்டுப் போகவேயில்லை. இன்பேக்ட் அதன்பிறகு அவள் அவனுடன் பேசியதே இல்லை. அன்று அவளிடம் தன் காதலைச் சொன்னதைத் தவிர அவனும் அவள் புறம் வந்ததே இல்லை.

ஆனால் இத்தனை வருடங்களில் அவனின் மாற்றங்களையெல்லாம் ரகசியமாய்ப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள் ஸ்ரீலேகா. முன்பே பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருப்பான் இந்திரன். இப்போது ரேஸ் அதுயிது என்று இன்னும் தன்னை ஃபிட்டாக்கிகொண்டவன் தன்னுடைய 'ஹேண்ஷமினால்' அவளை மேலும் வசீகரித்தான். பல சந்தர்ப்பங்களில் தன்னுடைய விருப்பத்தை அவளும் மறைமுகமாய் உணர்த்தியிருந்தாலும், அன்று சிந்துவின் ரூமில் நடந்த ரொமான்ஸ், கிட்சனில் அவளைப் புடவையில் கண்டதும் நடந்த ரொமான்ஸ், தொண்டு நிறுவனத்திற்காக அன்று நாட்டியம் நடந்த இடத்தில் நடந்த காட்சி, அவன் பிறந்தநாளில் சீகைக்காய்த் தேய்த்த பொழுது நிகழ்ந்தது என்று அந்த இறுதி கோவில் எபிசொட் வரை அவர்களின் காதல் இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் ஆடிக்கொண்டிருக்கிறது.

இத்தனை வருடங்களில் இந்திரனின் மாற்றங்களை எல்லாம் சகுந்தலாவும் இமையவர்மனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதிக பொறுப்பு, முன்பு போல் சொல்லிலும் செயலிலும் கடுமை இல்லாமல் மென்மை குடிகொண்டவனாய், அவனின் பிடிவாதம் குறைந்து, ஒவ்வொருமுறையும் ஸ்ரீயை ஏக்கத்தோடும் குற்றயுணர்வோடும், காதலோடும் அவன் பார்க்கும் பார்வையும், அதற்கெல்லாம் சமையங்களில் ஸ்ரீயும் அவனுக்கு மெல்ல இசைந்து கொடுப்பதையும் தவறாமல் நோட் செய்கிறார்கள் தான். இது போதாதென்று சிந்து வேறு அன்று ரூமில் பார்த்ததை எல்லாம் வீட்டில் சொல்லிவிட இந்திரன் ஸ்ரீயை பத்திரமாகப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அவர்கள் இருவரும் ஆணித்தனமாய்த் தோன்றியது. இருந்தும் இருவருக்குள்ளும் இன்னும் அந்த பரஸ்பர விருப்பம் வரவில்லை என்று அறிந்தவர்கள் அதற்காகக் காத்திருந்தனர்.

இந்த ஆக்சிடென்டும் இதன் பின் நடக்கப்போகும் சம்பவமும் அவர்களின் பயத்தை மொத்தமாகாக் கரைத்தது நிச்சயம் என்றாலும் இதன் பின் நடக்கப்போகும் இன்னொரு ஆக்சிடெண்டால் இவர்களின் காதல் திருமணத்தில் சேரப்போவதில்லை என்ற உண்மையை இப்போது சகுந்தலா- இமையவர்மன் உணரவில்லை. ஆனால் இவையெல்லாம் தங்களைச் சுற்றி நெய்யப்படும் ஒரு மாய வலை என்பதை எப்போது தான் இவர்கள் புரிந்துகொள்வார்களோ?

*******************


தருணுடன் இருந்த அவன் உதவியாளர் குகன் தான்,"அவர் என்ன பாஸ் சொன்னாரு? பாஸ்... உங்களைத்தான் கேக்கறேன்?" என்றான்.

"டேய் முதல நீ என்னை இப்படி பாஸ்னு கூப்பிடுறதை நிறுத்து டா. எனக்கே என்னமோ நான் ஒரு கொள்ளைக்கூட்ட தலைவன் மாதிரி ஃபீல் ஆகுது..." என்றான் தருண்.

உடனே சிரித்த குகன்,"பாஸ் அதுக்கெல்லாம் ஒரு முகம் வேணும் பாஸ்..."

"இதுதான் சாக்குன்னு என்னை சைட் கேப்புல கலாய்ச்சிட்ட இல்ல?"

"பாஸ் இப்போ நம்ம அடுத்த கட்ட வேலை என்ன?"

"தெரியில அந்த ஆளு வேற கோவத்துல கத்திட்டு போனை வெச்சிட்டான். திரும்ப அவனா பார்த்து நம்மை கூப்பிட்டா தான் தெரியும்..."

"பாஸ் நீங்க எவ்வளவு பெரிய ஆளு? போயும் போயும் அவனுக்கெல்லாம் நீங்க பயப்படுறீங்களே?"

"வாயை மூடுடா. அவன் எவ்வளவு பணம் தரான் தெரியுமா? அப்போ அவனுக்கு நாம அடங்கிப் போறதுல ஒன்னும் தப்பில்லை..." என்றான் தருண்.

"பாஸ் பசிக்குது கொஞ்சம் சாப்பிட்டுப் போலாமா?"

"சரி வா போலாம்..." என்றவர்கள் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

...............................................................................

ஹர்ஷவர்மன் அங்கே கடும் கோபத்தில் இருந்தான். அதை வெளிக்காட்டும் விதமாய் தங்கள் வீட்டின் லானில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருக்க, அப்போது அங்கே வந்தார் சந்திரவர்மன்.

அவரின் முகத்தைப் பார்த்த ஹர்ஷவர்மன் கோவமாய் அங்கிருந்து செல்ல எத்தனிக்க,"ஹர்ஷா, நில்லு... ஹர்ஷா!" என்றதும்,

கோவமாய்ச் சென்றவன் நிற்க,"ஏன் இவ்வளவு கோவம் ஹர்ஷா?"

"என்னப்பா நடக்குது இங்க? இன்னைக்கு நமக்கு ஷேர்ல எவ்வளவு லாஸ் தெரியுமா? எல்லாம் உங்க சகோதரனால... அப்படி உங்க மேல என்னப்பா காண்டு அந்த ஆளுக்கு? நிச்சயமா இது அவரு நம்மளை நசுக்க தான் இந்த பிஸினஸுக்கு வந்திருக்காரு..." என்றவனின் முகம் எங்கும் தீ ஜுவாலைகள் இருந்தது.

"அவரு ஒன்னும் தப்பா செய்யுளையே? ஒருத்தர் அடுத்தவங்க பிஸினஸுக்கு நுழையக்கூடாதுனு 10 வருஷம் தான் ட்ரூஸ் டைம். கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. சோ நாம ஒன்னும் பண்ண முடியாது..."

"அதுக்குன்னு இப்போ தான் இதைச் செய்யணுமா? அதும் நாம் நம்ம பொசிசன்ல வேற கீழ இறங்கிட்டு இருக்கோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுதா இல்லையா? ஏற்கனவே அந்த அசோக் சௌனி வேற நிறைய கொடச்சல் தரான். இதுல இப்படி..." என்று ஹர்ஷா துடித்தான்.

"நீ பிஸினஸுக்கு புதுசு அதுதான் உனக்கு எதும் புரியில. இங்க பாசம் நட்புக்கெல்லாம் வேலையே இல்ல. எல்லாமே போட்டியும் பொறாமையும் தான். குறைந்தபட்சம் போட்டி மட்டுமா வேணுனா இருக்கலாம்..."

"என்னமோ போங்க? இதுனால நம்ம பிசினெஸ் என்ன ஆகும் தெரியுமா? ஏற்கனவே ஷேர்ஹோல்டேர்ஸ் எல்லாம் அவசர மீட்டிங் வேணும்னு கேட்கறாங்க. எல்லோரும் விலகும் முடிவுல வேற இருக்காங்க..."

"அன்னைக்கு என்னமோ என் தலைமையில எல்லாப் பொறுப்பையும் கொடுங்க நான் பார்த்துக்கறேன்னு சொன்ன? இப்போ பொறுப்பைத் தரும் முன்னே இப்படிப் பயப்படுற?' என்றார் சந்திரவர்மன்.

"நான் பயப்படல..."

"ஒழுங்கா வேற பிளான் செய்யுற வேலையைப் பாரு. நம்முடைய இன்சூரன்ஸ் ஆர்ம கவனமா பாரு..." என்று முடிக்கும் முன்னே அவன் சென்றுவிட, சந்திரவர்மன் தான் யோசனையில் ஆழ்ந்தார்.

.........................................................

அன்று அங்கே அறிவிப்பைப் பேசிமுடித்தவர் நேராக வீட்டிற்குச் சென்று தன் அலுவலக அறையில் நுழைந்தார் இமையவர்மன். அலுவலக அறையில் நுழைந்தால் யாரும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பது அவ்வீட்டின் எழுதப்படாத சட்டம்.

பின்னாலே வந்த கமலேஷ் அப்போது தான் மாதுளையைப் பார்த்தான். அவளையே அவன் தீர்க்கமாய்ப் பார்க்க அவன் பார்வையில் கொஞ்சம் பயந்து தான் போனாள் மாதுளை. அவன் எதையும் பேசாமல் சென்றுவிட இந்திரன் தான் வந்தவன் நேராக அவன் அறைக்குச் சென்றுவிட்டான். அவன் அறை எனப்படுவது அந்த வீட்டின் ஒரு முழுத்தளம் ஆகும். இங்கு அவனைத் தவிர யாரும் வர முடியாது. முடியாது என்பதைக்காட்டிலும் யாரும் வரக் கூடாது. ஏன் சகுந்தலாவே முன்னறிவிப்பு இல்லாமல் வரமாட்டார்.

அவன் எண்ணமெல்லாம் எங்கெங்கோ சென்று வந்தது. ஸ்ரீயின் ஞாபகம் வர, அங்கிருக்கும் பில்லியர்ட்ஸ் (ஒரு வகை விளையாட்டு கோல்ப் போல் ஆனால் சின்னது. ஸ்னூக்கர் என்றும் சொல்லுவார்கள்) அறைக்குச் சென்று அவன் பாட்டிற்கு விளையாட ஆரமித்தான். கதிரவனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர,

"சொல்லு டா..."

"எங்க இருக்க?"

"ரூம்ல..."

"நான் வரவா?"

"வா" என்றவன் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்தினான். கதிரவன் அவர்கள் வீட்டிற்கு வந்தான . வெளியே ஸ்விமிங் பூளில் அமைதியாக அமர்ந்திருந்த கமலேஷை பார்த்தபடியே சென்றவன் அங்கே ஹாலில் அமர்ந்திருந்த மாதுளையைப் பார்த்தான். பார்த்தான் என்பதைக் காட்டிலும் அவளை கண்களால் ஸ்கேன் செய்தேன். 'இவள் எப்பேர்பட்டவள் என்றும் இவளால் தன் திட்டத்திற்கு ஏதேனும் ஆபத்து வருமோ? என்றும் இல்லை இவளும் ஏதேனும் திட்டத்தோடு வந்திருப்பாளோ? என்று அவனுக்குள் குழப்பம். மாதுளையின் நிலை தான் இன்னும் மோசம். 'இவன் யார்?' என்று புரியாமல் பார்த்தவள் இருக்க அவனோ மேலே சென்றான்.

சென்றவன் கதவைத் தட்ட,"கம் இன்..." என்றதும்

உள்ளே சென்றவன் அவன் பில்லியர்ட்ஸ் விளையாடுவதைக் கண்டு அவனோ மறுமுனைக்குச் சென்று இவனுக்கு எதிராக விளையாட ஸ்டிக்கை எடுத்தான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இந்திரனின் வெற்றிகளுக்கு இடைஞ்சலாய் நிறைய செய்துகொண்டு இருந்தான் கதிரவன்.

"பரவாயில்லையே கதிரா? முன்ன விட இப்போ நல்லா விளையாடுற?"

"பின்ன இதுக்கு தானே காத்திட்டு இருந்தேன்?" என்றான் கதிரவன்.

"பார்ரா அப்போ என்னையே தோக்கடித்து விடுவியா?' என்று சற்று ஆச்சர்ய மிகுதியில் இந்திரன் வினவ,

"வை நாட்? கவனமும் அக்கறையும் இல்லாம யார் இருந்தாலும் அவங்களைத் தோற்கடிச்சிட்டு போயிட்டே இருக்கனும்..." என்று கதிரவன் சொல்லி முடிக்க,

அதுவரை சாதரணமாய் விளையாடிய இந்திரன் அதன் பின் அசுரவேகத்தைக் கடைபிடிக்க மடமடவென அனைத்து பந்துகளையும் அடித்து வென்றவன், ஒரு புருவத்தை மட்டும் மேலே தூக்கி காட்ட,

"இப்பொவேணுனா நீ ஜெயிச்சியிருக்கலாம் இந்திரா. ஆனால் கண்டிப்பா நீ தோற்கும் சமயத்துல நான் ஜெயிப்பேன். அப்போ தெரியும் இந்த கதிரவனோட பலம் என்னனு?" என்று அவன் சொல்ல,

"அதையும் பார்க்கலாம் டா கதிரா..." என்று சிரித்தான் இந்திரன்.

"என்னடா இது?" என்று இந்திரனையே கண்ணிமைக்காமல் கதிரவன் கேட்க,

"எனக்கும் ஒன்னும் புரியில கதிரா. அப்பாவே திடீர்னு எல்லாம் பண்ணிட்டாரு..."

"இதனால நிறைய பின்விளைவுகளை நாம சந்திக்க வரும் டா..."

"பார்த்துக்கலாம் மச்சி. நாம பார்க்காத பின்விளைவுகளா? அது தான் நீ கூட வந்துட்டியே, அப்புறோம் என்ன? நம்மை வீழ்த்த நினைப்பவர்களை எல்லாம் வச்சி செய்யுறோம்..." என்று இந்திரன் அவனைப் பார்க்க,

"கண்டிப்பா டா" என்றவன்,"ஆமா யாருடா அந்தப் பொண்ணு?" என்று மாதுளையைப் பற்றி அவன் விசாரிக்க,

"எந்தப் பொண்ணு?"

"அதான் கீழ ஒருத்தி இருக்காளே?"

ஏனோ இந்திரன் முகம் சற்று இறுகியது. "அவ தாத்தா தான் என்னைக் காப்பாத்த தன் உயிரைக் கொடுத்தவர்..."

"அம்மா ஏற்பாடா?"

"ஹ்ம்ம்..."

"எல்லோரையும் ஈஸியா நம்பிடுறாங்க டா அம்மா. அதுதான் அவங்க பலவீனமே..." என்றான் கதிரவன்.

"நம்பிக்கை அதானே எல்லாம்!' என்று சொன்ன இந்திரன் ஏனோ கதிரவனுக்கு வித்தியாசமாய்த் தெரிந்தான்.(வானிலை மாறும்!)
 
"நம்பிக்கை அதானே எல்லாம்..." ☺☺☺
எப்போ எல்லாம் தெரிய வரும்.... ஆவலுடன் காத்திருக்கிறோம்... :p :p :love: :love:
you will know it sooner... thank you?
 
வியாபார உலகத்துல எப்போடா ஒருத்தன் கீழே விழுவான் நாம முன்னாடி போலாம்னு பாத்துக்கிட்டிருப்பாங்க... நம்மோட முன்னேற்றமும் பாதுகாப்பும் நாம தான் பார்த்துக்கணும் ???
 
வியாபார உலகத்துல எப்போடா ஒருத்தன் கீழே விழுவான் நாம முன்னாடி போலாம்னு பாத்துக்கிட்டிருப்பாங்க... நம்மோட முன்னேற்றமும் பாதுகாப்பும் நாம தான் பார்த்துக்கணும் ???
cent percent true? we have to be more careful?
 
ஶ்ரீயோட உடன் பிறந்த அண்ணனா கதிர்...?
கதிரோட இரட்டை ஆட்டம், இந்திரனுக்குத் தெரியுமா..?
மாதுளை ஏன் கதிரை ஆராய்ச்சிப் பார்வை பார்க்கிறாள்..?
 
ஶ்ரீயோட உடன் பிறந்த அண்ணனா கதிர்...?
கதிரோட இரட்டை ஆட்டம், இந்திரனுக்குத் தெரியுமா..?
மாதுளை ஏன் கதிரை ஆராய்ச்சிப் பார்வை பார்க்கிறாள்..?
இல்லை இல்லை. நண்பனின் காதலி என்றமுறையில் அண்ணன். மீதி கேள்விக்கெல்லாம் சீக்கிரம் பதில் சொல்றேன்?�?
 
Top