Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 32 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 32 ❤️‍🔥

"வார்த்தைகளா
விடம் தோய்ந்த
அம்புகளா..............!?"




"என்ன மச்சான் என் நம்பருக்கு பைசா கிரெடிட் பண்ணிருக்க என்னடா ஆச்சு!?"

நண்பன் எண்ணில் இருந்து தன் எண்ணிற்கு அனுப்பப்பட்டிருந்த ஆறிலக்க தொகையை கண்ணை விரித்துக் கண்டிருந்த நவநீ ஏகனுக்கு அழைப்பை ஏற்படுத்த.

அழைப்பை ஏற்றவனோ,"நவி.. நவி.." என்றவனால் அதற்கு மேல் பேச முடியாது இன்பத்தில் தவிக்க.

அழைப்பில் இருந்தவனோ "மச்சான் என்னடா ஆச்சு நான் வரவா!?" பதட்டமடைய.

"ஐ ஃபீல்..., திஸ் லைஃப் இஸ் ஃபுல்ஃபில்டா! எனக்கு இது போதும் நவி!" என்றான் ஏகன் உணர்ச்சி மிகுதியில்.

நண்பனின் மகிழ்வை கண்களால் காணும் ஆவல் கொண்டவன் ப்ளூ டூத்தில் அழைப்பை இணைத்து நண்பன் இல்லம் செல்ல தயாராகினான்.

"ஏன்டா ஏகா அப்படி நீயே சந்தோசப்படுற அளவுக்கு என்ன நடந்துச்சு!?" கிண்டலாகவே கேட்டிருந்தான் நவநீ.

"திஸ் ஃபீல் நெவர் எக்ஸ்பிளைன்ட் நவி!"

"மச்சான் என் க்யூரியாசிட்டிய நல்லா தூண்டி விடுறடா.என்ன நடந்துச்சுன்னு நீ சொல்லவே வேண்டாம் போடா!" என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு நண்பன் இல்லம் நோக்கி வாகனத்தை விரட்டினான்.


நவநீ வீட்டின் உள்ளே வந்து காரை நிறுத்தி நண்பன் அருகே இருக்கும் கல் இருக்கையில் அமர்ந்தது கூட அறியாது பவளமல்லி மரத்தை பற்கள் தெரிய சிரித்தவாறு ரசனையாக பார்ப்பதை கண்ட நவநீக்கு ஆர்வம் அதிகரிக்க.

"மச்சான் ஏகா அது மரம் தான்டா அதை ஏன் இப்படி பார்க்குற!?"என்க.

பேசிய சில நிமிடங்களில் தன் முன் வந்து நின்ற நண்பனைக் கண்டு புன்னகை பூத்தவன் நடந்ததை கூற.

"டேய் மச்சான் கலக்குற போ!"

என்னதான் நவநீ கேலியாய் மொழிந்தாலும் உள்ளம் தோழனுக்காக உவகை கூத்தாடியது.

"பாஸ் நீங்க சொன்னமாதிரி எல்லாருக்கும் கிரெடிட் பண்ணியாச்சு பாஸ்!" என்றபடி வந்தான் இக்னேஷ்.

"ரிதம்" எனும் பெண்ணால் இன்று ஏகனின் கீழ் இருந்து உந்தும் உதவிக்கரங்களான அவன் தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய அதிர்வாக குறிப்பிட்ட தொகையை அவரவர் வங்கி கணக்கில் ஏற்றுமாரு இக்னேஷிடம் கூறி இருந்தான் ஏகன்.

அதைத்தான் முடித்துக் கொண்டு வந்தவன் தகவல் தெரிவித்தான்.


அந்நேரம் அவனின் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்த ஓசை கேட்க திறந்து பார்த்தால் அதில் அவனுக்கும் சில இலக்கங்களில் பணம் வந்ததாக கூறியது.

"பாஸ்!" என்றவன் மனம் மகிழ்ந்தது.

முல்லை இல்லத்திற்கு கட்டிடம் கட்டும் வேலையில் இருக்கும் நிலுவை எல்லாம் இதன் மூலம் தீரும் என்ற எண்ணம் அவனுக்கு.

ஆனால் ஏகனோ வேறு ஒரு காசோலையை அவனிடம் நீட்டினான்.

"அது உனக்கு இக்னேஷ்.இது முல்லை இல்லத்துக்கு!" என்றிட.

"பாஸ் உங்க ஹப்பின்ஸ்கு ரீசன் தெரிஞ்சுக்கலாமா!?" அவனுக்கும் ஆர்வம் பிறந்தது நவநீ போலவே.

மீண்டும் தன் வாழ்வில் இன்று கண்ட இன்பம் பற்றி ரசனை வழிய உற்சாகம் பொங்க கூறினான் ஏகன்.

"வாழ்த்துக்கள் பாஸ்! இந்த ஹேப்பி உங்களுக்கு எப்பவும் கிடைக்கட்டும்" என்றவன் அமைதியாக சென்றுவிட்டான்.


"மச்சான் அப்ப எனக்கு எதுக்குடா கிரெடிட் பண்ணின!?" நவநீ கேட்க

"உன் கிளினிக் கொஞ்சம் சின்னதா இருக்கு மச்சான் அதை டெவலப் பண்ணு. அப்பறம் நீ கேட்டுட்டே இருந்த இல்ல அந்த கார் அது எப்படியும் ஈவ்னிங் உன் வீட்டுக்கு வந்துடும் என்ஜாய் மேன்!" என்றவாறு நடையில் ஒரு துள்ளலுடன் வீட்டிற்குள் சென்றான்.


"பலம் படைத்தவனின் பலம் எங்கே பெரும் பலமாகும் எனில் தன் கீழ் இருக்கும் நபரை கைதூக்கி விடும் பொழுது தான்!"

"இன்று ஏகனைக் கண்டு பலருக்கும் பிறரை தூக்கிவிடும் உணர்வு விதைக்கப்படும் அல்லவா!"


"நம் மகிழ்வில் பிறரையும் மகிழ்விப்போம் என்று...இன்று நமக்குள் இந்த சிறு செய்தி விதைக்கப்பட்டதை போலே.. பிறருக்கும் விதைக்கப்படலாம் அல்லவா!"


ஏகன் மருத்துவமனை வாயிலில் நின்று
கொண்டு தன் அன்னை லதாவிற்கு அழைப்பு விடுத்தான்.

மகன் அழைப்பு வர அதில் இன்ப அதிர்வு கண்ட லதா,"டேய் கண்ணா என்னடா அம்மாக்கு கால் பண்ணி இருக்க!?" ஆச்சர்யமாக விழி விரித்தார்.

"அம்மா!" என்ற மகன் வேறு எதுவும் பேசாது;

"வீட்டுக்கு போகலாம் அப்பாவோட வர்றீங்களா கதிரையும் கூட கூட்டிட்டு வாங்க!" என்றான்.

முதலில் "மகன் அழைப்பு உண்மை தானா!?" என்ற சந்தேகத்தில் இருந்தவர்

"மகன் வீட்டிற்கு செல்வோமா!?" என்று கேட்பதில் தான் காண்பது 'கனவா!?' என்று எண்ணும் அளவிற்கு கொண்டு சென்றான் மகன்.

கணவன்,இளைய மகன் சகிதம் மருத்துவமனை வாயில் வந்தவர் மகனின் காரைக் கண்டு அதில் ஏறிக் கொள்ள.

"பாத்தியா கதிர் உங்க அம்மா அவ செல்ல மகனை கண்டதும் நம்மளை டீல்ல
விட்டுட்டு போய்ட்டா!" என்றவர் மகனின் காரில் ஏறிக்கொள்ள.

"அம்மா உங்களை முந்திட்டாங்கன்னு ஜெலஸ்ல தானே டாடி பொங்குறீங்க!" தகப்பனை அறிந்த மகனாக கதிர் கூற.

தன் முயற்சி அனைத்தும் வீணாய் போனது அறிந்து அசட்டு சிரிப்பை உதிர்த்தார் பாலு.


தாய் தந்தை தம்பி சகிதம் இல்லம் வந்த கணவனை புரியாத பார்வை பார்த்த ரிதம் வரவேற்க அன்றில் இருந்து அனைவரும் அங்கே தான் தங்கினர்.

நிவேதாவிற்குத் திருமணம் இன்னும் நான்கு நாட்களில் என்ற நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பே வைரவன் பட்டியை நோக்கி பறந்துவிட்டாள் ரேணு.

அவளுடன் செல்வதற்கு ரிதமின் மனதும் உந்தினாலும்;கணவனிடம் அனுமதி பெறாது 'எப்படி செல்வது!?'

பெரிய நகை வடிவமைப்பு பற்றி மக்களிடையே கருத்து கணிப்பு நிகழ்வதாலும்,உலக அளவில் நகை வடிவமைப்பு போட்டி ஒன்றில் சேர்வதற்கு ஏகனுக்கு வாய்ப்பு கிடைக்க.


அதற்கும் சேர்த்து அவன் தயாராகி கொண்டிருந்தான் என்பதால் அவனால் வீட்டில் நேரம் செலவிட மனது ஆசையுற்றாலும் வேலைப்பளு காரணமாக உறங்க மட்டுமே இல்லம் வந்தான்.

உணவு நேரம் சரியாக மனைவியின் கைமணத்தால் ஆன உணவு அலுவலகம் வந்து சேர வயிற்றுக்கு பஞ்சமில்லாது போனது.எத்தனை அலுப்பு இருந்தாலும் இரவு வீட்டிற்கு வந்து, உறங்கும் மனைவி மகன் முகம் கண்டால் உடலில் உள்ள அலுப்பெல்லாம் பறந்து போவதாக தோன்றியது.

'குடும்பம்' எனும் கூட்டிற்குள் அடைய அந்த ஆண் மனம் ஏங்கியது.ஆனால் ஏக்கம் தீர்க்கத்தான் வழி அமையாது போனது.
"என்றாவது ஒருநாள் அந்த அற்புதமும் நிகழும்!" என்ற நம்பிக்கை அவனுக்குள் பிறந்தது.



"ஏங்க வந்துட்டீங்களா!?" என்றவாறு ரிதம் சோஃபாவில் இருந்து எழ

"என்ன இன்னும் தூங்கலையா!?" ஏகன் கேட்க

"இல்லங்க அது.....!"

"என்ன சொல்லணுமோ அதை தயங்காம சொல்லு ரிதம்!" ஊக்கம்மூட்ட

"இன்னும் நாலு நாள்ல நிவேக்கு கல்யாணம் எனக்கு அங்க போகணும் நானும் தம்பியும் போய்ட்டு வரட்டுமா!?" தயக்கம் தீராது கேட்டாள்.

ஒரு நொடி மௌனம் அவன் புறம்.

"நீ முதல்ல அங்க போய்டு ரிதம் நானும் அகரனும் மேரேஜ் டைமிங்க்கு அங்க வந்துடுவோம்!" என்க.

கணவன்,மகன் என்று குடும்பமாக செல்ல துள்ளிய மனதை அடக்கித் தான் மகனையாவது அழைத்து செல்வோம் என்று அமைதிப்படுத்தினாள்.

இவன் என்ன என்றால் அதற்கும் வழி இல்லாது 'தனியே சென்று வா!' என்கிறான் சுணக்கம் கொண்டது மனது.

இப்பொழுது எல்லாம் அகரன் இல்லாது அவள் பொழுதுகள் கழிவதில்லை. விடியலில் விழிப்பதும், மாலையில் விழி மூடுவதும் அவன் முகத்தில் தான் பெண்ணவளுக்கு.

அவளுக்கு மட்டுமா அகரனும் அவ்வாறு தான் என்பதால் " தான் இல்லாது பிள்ளை என்ன செய்வான்!?" என்ற சிந்தனை உதிக்க மீண்டும் ஒரு முறை அவனிடம் கேட்க.

அவன் முடிவில் மாற்றம் இல்லை என்பதாய் உறுதியாக மறுக்க.உறகத்தில் மகன் அசைவதை உணர்ந்து அதற்கு மேல் கணவனிடம் வாதம் புரிய விரும்பாது படுக்கையில் சாய்ந்தவளும் உறங்கவில்லை.

"நீ மட்டும் சென்று வா!" என்று மறுத்தவனும் உறங்கவில்லை.

விதி தன் வாழ்வில் விளையாடும் விளையாட்டை எண்ணி விரக்தியாய் சிரித்தான் ஏகன்.

விடியலே எழுந்தவள் தன் உடைகளை எடுத்து பைக்குள் வைத்ததோடு 'எதற்கும் இருக்கட்டும்!' என்று மகனின் உடைகளையும் எடுத்து அடுக்க.

"அம்மா நம்ம நிவே அத்தை கல்யாணத்துக்கு போறோமா!?" என்றபடி அன்னையை நோக்கி வந்தான் அகரன்.

படுக்கைவிட்டு எழுந்த உடன் நேரே யோகாவை முடித்து வந்து குளியலை முடித்து வந்திருப்பான் போல அவனின் இந்த பழக்கம் தான் ரிதமை எப்பொழுதும் ஈர்க்கும்.

ஏகன் கூட அவ்வாறு தான் அறைக் கதவை திறக்கும் போது அவனிடம் ஒரு புத்துணர்வு மின்னும்.மகனின் முகத்தில் கணவன் சாயலைக் கண்டவள் ரசித்து பார்த்து நெற்றியில் முத்தமிட.

தான் பெற்றதை அன்னைக்கு கன்னத்தில் ஒன்றுக்கு இரண்டாக்கி கொடுத்தது பிள்ளை.

"அத்தை கல்யாணத்துக்கு தான்டி தங்கம் கிளம்புறோம்.அப்பா தான் உன்னை விடமாட்டேன்னு சொல்லி அடம்பண்ணுறாங்க செல்லம்!" மணந்தவனை பெறா மகவிடம் குறை கூற.

அந்நேரம் அறையில் இருந்து வெளியே வந்த ஏகன்,"என்ன ரிதம் கிளம்பியாச்சா!?" என்றபடி கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு வந்தான்.

"அப்பா நானும் அம்மாவும் நிவே அத்தை கல்யாணத்துக்கு போறோமே நீங்களும் வாங்கப்பா போகலாம்!" என்று நிலமை புரியாது துள்ளினான் சிறான்.


"இல்ல அகரன் நீ அம்மா கூட போகபோறது கிடையாது ஓகே!" என்று கண்டிப்பாய் கூற
முகம் கூம்ப 'சரி' என்று தலையை ஆட்டி ஏற்று கொண்டது பாலகம்.


"ஏன் நீங்க இப்படி பண்றீங்க? புள்ள முகமே வாடி போகுது பாருங்க! நான் அகரனை என் கூட கூட்டிட்டு தான் போவேன்.என் பிள்ளை இல்லாம போகமாட்டேன்!!"

அன்னையாய் வீம்பு பிடிக்க...

தன்னிலை பற்றிய தகவலும் கொடுக்க முடியாது; சூழலை பற்றி விளக்கவும் முடியாத ஏகன் கோபம் கொண்டு

"யாருடி உன் புள்ள!? அவன் என் புள்ள!அவன் எங்க போகணும் போகக் கூடாதுன்னு நீ சொல்லாத.எனக்கு தெரியும் அவனை எங்க அனுப்பணும் கூடாதுன்னு!!!" பொரிந்து தள்ள.

அவன் வார்த்தையின் வீரியம் பொறுக்காது;கண்ணில் நீர் வடிய தன் பையில் இருந்த அகரன் உடைகளை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு தன் உடைகளை மட்டும் எடுத்து அடுக்கினாள் அன்புடையாள்.

வேறு எந்த பேச்சும் அவனிடம் அவள் வைத்து கொள்ளவில்லை.

"அவன் கூறுவது உண்மை தானே! அகரன் அவன் மகன் தானே சீராட்டி பாராட்டி வளர்ப்பதால் தான் அவன் அன்னையாகிவிட முடியாதே!" உண்மை நெஞ்சை நெருஞ்சியால் தைக்க

அமைதியாக தன் கைப்பையை சுமந்து கொண்டு கீழே சென்றவள் வேறு யாரிடமும் எந்த வார்த்தையும் பேசாது அமைதியாக சென்று வருவதாக கூறியவள்.

வேல் தாத்தாவையும் கையோடு அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள்.

"ஏன்மா வேலுவையும் கூப்பிட்டு போற அவனை விட்டுட்டு போகலாம் இல்லையா!?" என்று கேட்ட சிதம்பரம் தாத்தாவிடம்

"இல்லங்க தாத்தா இருக்கட்டும்.தாத்தா இல்லாம என்னால இருக்க முடியாது அதனால நாங்க கிளம்பறோம்!" என்றதோடு முடித்துக் கொண்டவள்.

அகரனுக்கு மட்டும் கையசைப்பை கொடுத்தாள்.


வாயிலில்
நிற்கும் காவலாளி மூலம் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்றுவிட்டாள்.

அந்த மூன்று சக்கர வாகனம் முன்னோக்கி செல்ல பெண்ணவள் எண்ணம் எல்லாம் சிறுவனின் எண்ணங்களை சுமந்து பின்னோக்கி சென்றது.
 
Deekshiyaal endha aabathum Vara koodaadu n irukkumo?
யாரு கண்டா🤔 இந்த ஏகன் பைய எப்ப எதை செய்யுவான்னே தெரியமாட்டுது🧐🧐🧐
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ஏகா எருமைமாடே😬😬😬😬😬😬😬😬.
அதென்னா டா பெரிய ஏழுகடல் ஏழுமலை தாண்டி கடலக்குள்ளாற ஒளிஞ்சிருக்குற ரகசியம்.😤😤😤😤😤😤😤😤😤😤
அதுக்காக பையனையும் அம்மாவையும் பிரிப்பியாடா தடிமாடே.

ரிதம் ஒன்னும் தொரையோட பணத்துலையோ அழகுலையோ மயங்கி கண்ணாலம் மூச்சுக்கலை 😡😡😡😡😡😡😡😡😡😡
பிளாக்மெயில் பண்ணி அகரனுக்கு ரிதமை புடிச்சிருக்குற காரணத்தால கண்ணாலம் பண்ணிகிட்டு
இப்ப எடுத்தெறிஞ்சு பேசுவியாடா மலைக்கொரங்கே
🤬🤬🤬🤬🤬🤬.
images-37.jpeg
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் ஏகா எருமைமாடே😬😬😬😬😬😬😬😬.
அதென்னா டா பெரிய ஏழுகடல் ஏழுமலை தாண்டி கடலக்குள்ளாற ஒளிஞ்சிருக்குற ரகசியம்.😤😤😤😤😤😤😤😤😤😤
அதுக்காக பையனையும் அம்மாவையும் பிரிப்பியாடா தடிமாடே.

ரிதம் ஒன்னும் தொரையோட பணத்துலையோ அழகுலையோ மயங்கி கண்ணாலம் மூச்சுக்கலை 😡😡😡😡😡😡😡😡😡😡
பிளாக்மெயில் பண்ணி அகரனுக்கு ரிதமை புடிச்சிருக்குற காரணத்தால கண்ணாலம் பண்ணிகிட்டு
இப்ப எடுத்தெறிஞ்சு பேசுவியாடா மலைக்கொரங்கே
🤬🤬🤬🤬🤬🤬.
View attachment 8810
நான் இல்லீங்கோ... எல்லாமே ஏகன் தாங்கோ.. பண்ணினாருங்கோ... ஆயா சத்தியமாங்கோ 😂😂🤣🤣
 
"நம் மகிழ்வில் பிறரையும் மகிழ்விப்போம் என்று...இன்று நமக்குள் இந்த சிறு செய்தி விதைக்கப்பட்டதை போலே.. பிறருக்கும் விதைக்கப்படலாம் அல்லவா!"

ப்பாஹ்.... ஏகனுக்கு கூட இப்படியெல்லாம் மனிதநேயம் தோணுமா?


Anyways, இந்த தத்துவம் ரொம்ப அழகு இருக்கு, ஆத்தர்ஜி ❣️ ❣️ ❣️ ❣️ ❣️
 
ப்பாஹ்.... ஏகனுக்கு கூட இப்படியெல்லாம் மனிதநேயம் தோணுமா?

Anyways, இந்த தத்துவம் ரொம்ப அழகு இருக்கு, ஆத்தர்ஜி
❣️ ❣️ ❣️ ❣️ ❣️
ஏராள நன்றிகள் தாராளமாய்💐💐💐
 
Top