Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 3❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 3❤️‍🔥


"எளிதில் கிட்டா கொல்லிமலை
தேன் நீயோ.....!?"




கோயம்புத்தூரில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் அமைத்திருந்த இரண்டடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ளே செல்ல செல்ல குகை போல் நீண்டிருந்தது.

அதன் உள்ளே தன் தலை முடியை ரப்பர் பேண்டிற்குள் அடக்கியவாரு உள்ளே நுழைந்த உருவம் பாம்பாக நீண்ட கட்டிடத்தின் பாதைக்குள் புகுந்து செல்ல
பெரும் மாற்றம்.


இந்த இடத்தில் இப்படி ஒரு இயற்கை சூழலா.அது பொருளாதார அங்காடிகள் நிறைந்த இடம்.அங்கே இப்படி ஒரு எழில் கொஞ்சும் சோலை உள்ளதை யாருமே அறிந்திருப்பது மிகக் குறைவுதான்.

அந்த சோலைக்குள் நடந்து ஓர் வீடு போன்ற இடத்தின் முன் நின்றது உருவம்.

பார்ப்பதற்கு வீடு போன்று இருந்தாலும் அது ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை மையமாகவும் இருந்தது.

மூடி இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய இப்படியும் கூடவா ஒரு மனிதன் உறங்குவான் அதிர்ந்து நோக்கும் வகையில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் ஒருவன்.

அவனை சாதாரணமாக எழுப்ப மனம் வராது போக நீரை வாரி இறைக்கலாம் என்றால் நீரை எங்கும் காணாது தன் காலை கொண்டு அவனை மிதிக்க.

உறக்கத்தில் இருந்தவனோ விட்ட மிதியை தூசியாய் தட்டி மறுபக்கமாய் புரண்டு படுத்துக்கொண்டு தன் பின்புறத்தை காண்பித்து,"இங்க கொஞ்சம் மசாஜ் பண்ணுங்க!" என்று கோரிக்கை விடுக்க.

கோபம் வரபெற்ற அவ்வுருவம் உறக்கத்தில் இருந்தவன் முடியில் கைவைக்க.

"யாருடா அந்த மாபாதகன்!?" என்றாவாரு எழுந்தான் அவன்.

எழுந்து தன் முடியில் கைவைத்த உருவத்தை கண்டவன்;தன் கண்களின் மங்களில் ஒன்றும் பெரிதாக தெரியாததால் தன் கண்கண்ணாடியை தேடி எடுத்து அணிந்து எதிர் நின்ற உருவத்தை காண.

முன்னால் சிறு முறுவலுடன் நின்றிருந்தான் இக்னேஷ்.

"டேய் சடையா! உன்னை யாருடா என் முடில கைவைக்க சொன்னது?" கோபம் கொப்பளிக்க ஆரம்பிக்க.

"சோடா! எருமை மாடு மாதிரி தூங்குற நீ எல்லாம் மனுஷ பிறவியே இல்ல தெரியுமா உன்னை வேற எப்படி எழுப்பறது சொல்லுடா பாடி சோடா?" என்றான் அவன்.

"சடையா ரொம்ப பண்ணாத எனக்கு உன்னை மாதிரி காடாவா வளர்ந்திருக்கு முடி. அளவா அழகா இருக்கு!" என்க.

"உனக்கு, அளவா, அழகா இருக்க முடி.முன் மண்டேல அந்த அழகை காணலையே ராசா!"

உறக்கத்தில் இருந்தவனின் முன் நெற்றியில் முடி இல்லாது ஏறு நெற்றியாக இருப்பதை சொல்லி இக்னேஷ் கலாய்க்க.

இருவரின் பேச்சின் ஊடே வந்த வேலை மறந்து போக.அந்நேரம் இக்னேஷ் எண்ணிற்கு அழைப்பு வந்தது.

'அழைத்தது ஏகன்' என்பதை உணர்ந்த பின்புதான் 'எதற்காக தான் இங்கே வந்தோம்!?' என்பதை உணர்ந்து.

"டேய் சோடா! பாஸ் உன்னை கூப்பிடுறாரு" என்று அறிவிப்பை கொடுக்க.

அடுத்த பத்து நிமிடத்தில் தயாராகி நண்பனை காண வந்திருந்தான் சோடா.


"வாடா நல்லவா ஒருவழியா மதுரை மண்ல உன் சாகசத்தை காட்டிட்ட போல!" என்றவாறு காரில் ஏறினான் அவன்.

"நவி" என்றான் ஏகன் அவன் தான் நவநீத் குமார் ஏகனின் நண்பன்.

இக்னேஷ் வாகனத்தை இயக்க அவன் அருகில் அமர்ந்து பின்னால் திரும்பிய நவநீ நண்பனுடன் அவன் பயணத்தை பற்றி கதை கேட்டவாறு வந்தான்.

நவநீயின் கேள்விக்கு பதில் கூறியவாறு அவனிடம் தான் அறிவித்த அறிவிப்பையும் தெரிவித்தான் ஏகன்.

பச்சை புல்லில் பனி படர்ந்து குளுமையை ஏற்றி, உயிருக்குள் இன்பத்தை,ரசனையை,
ஏக்கத்தை கூட்டும் காலை வேளை.

சூரியன் எழுவதற்கு முன்பே அந்த வீட்டின் மாந்தர்கள் எழுந்திருந்தனர்.

இரண்டு விரிப்புகள் புல் தரையில் விரித்திருக்க ஒன்றில் ஹேன்ட் ஸ்டண்ட் என்று சொல்லக்கூடிய அதோமுகாசனம் செய்திருந்தார் சிதம்பரம் ஏகனின் தாத்தா.

அவரின் அருகில் இருந்த விரிப்பில் ஸ்கார்பியன் போஸ் எனும் விருட்சிகாசனம் செய்திருந்தான் ஏகன்.

சூரிய நமஸ்காரம் முடித்து இருவரும் மற்ற ஆசனங்களை செய்திருக்க.சூரியன் கிழக்கில் உதிக்க சரியாக மணி ஆறு பதினைந்து இருக்க.தன் ஆசனங்களை முடித்துக் கொண்டு காலை ஓட்டத்திற்கு ஏகன் தயாராக.

அந்நேரம் 'குட்மார்னிங்பா' 'குட்மார்னிங் தாத்தா' என்றவாறு கைகளில் விரிப்பினை ஏந்திக் கொண்டுவேலையாள் வர அவருக்கு முன்பு நடந்து வந்தான் அகரன்.

சிதம்பரம் தாத்தாவின் அருகே சற்று தொலைவில் விரிப்பினை விரித்து சூரிய நமஸ்காரம் செய்யத் தொடங்கியவன் வஜ்ராசனம் செய்ய தாத்தா கற்றுக் கொடுக்க அதனை செய்யும் முயற்சியில் இருந்தான்.

காலை பொழுது அமைதியாக உடற்பயிற்சி உடன் தொடங்க சரியாக ஏழு மணிக்கு பயிற்சி முடிந்து வர அருகம்புல் சாறு கொடுக்கப்பட.

குடித்து முடித்த மூவரும் அவரவர் அறைக்கு சென்று சரியாக மணி எட்டு ஆகும் போது உணவு மேசை முன் வந்து அமர.


மூவருக்கும் காலை உணவாக எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவாக புதினா சட்னியும்,இட்லியும், கூலும் உடன் பரிமாறப்பட மூவரும் உணவை முடிக்க.

அகரன் தோட்டம் நோக்கி சென்றான் தன் உயரத்திற்கு இருக்கும் குட்டி இருசக்கர வாகனத்தை இயக்க.

தாத்தா மொட்டை மாடியில் இருக்கும் தன் அறைக்கு வந்தவர் அங்கே இருக்கும் அலமாரியில் தான் வைத்திருந்த ஆல்பத்தில் இருந்த புகைப்படத்தை பார்த்திருந்தார்.

அதில் சிதம்பரம் தாத்தாவின் கல்லூரி பருவ புகைப்படமும் அதில் அவரின் அருகே நின்றிருந்தார் ஒருவர் சிதம்பரம் தாத்தாவின் நண்பன் போல.

"எங்கடா இருக்க நீ!? உன்னை பிரிஞ்ச பின்னாடி வாழ்க்கைல ஒன்னுமே இல்லடா!?" வருத்தமாய் கூறியவர் ஆல்பத்தை பத்திரப்படுத்திவிட்டு நகைகளை வடிவமைக்க அமர்ந்தார்.


"நான் சொன்னது மாதிரி விளம்பரம் போட்டாச்சா!?"

"போட்டாச்சு டீன்!"

"நியூரோ கான்பிரன்ஸ் அட்டென்ட் பண்ண டாக்டர்ஸ் ரெடியா!?"

"ரெடி டீன்!"

"காலைல சாப்டியா!"

"இன்னும் இல்ல டீன்!" என்றார் டீனுடன் பேசிக் கொண்டிருந்த நபர் டீனின் கேள்விக்கு சிந்தியாது படக்கென்று பதிலுரைக்க...

"இன்னும் சாப்பிடாம அடுத்த வேலை எப்படி செய்வ மேன்!? போய் முதல்ல சாப்பிடு அப்பறம் வந்து வேலையை பாரு" என்று விரட்டினார் டீன் பால சுப்ரமணியன்.


"என்ன இன்னைக்கும் அவனை விரட்டிட்டு இருக்கீங்களா!?" என்றவாறு வந்தார் லதா டீன் பால சுப்ரமணியனின் மனைவி.

"வாங்க மேடம் ஒருவழியா டியூட்டி முடிஞ்சுதா?"

"ஆமாம் சார் இப்போ தான் முடிஞ்சது!" லதா கூற

"அப்போ வீட்டுக்கு கிளம்பலாம் இல்ல" மனைவி வந்ததன் காரணம் உணர்ந்து வேண்டும் என்றே கேட்டார் பாலு.

"என்ன நக்கலா டீன் சார்!? வாங்க மீட்டிங் போகணும்!" என்றவாறு கணவனை அழைத்துக் கொண்டு கூட்டம் நடைபெறும் அறைக்கு சென்றார் அவர்.

'நியூரான்' எனும் நரம்பு மண்டலத்தில் புதுவகை கோளாறு ஒன்றை அமெரிக்க மருத்துவமனை கண்டறிந்து இருப்பதாகவும்.அதனை சரி செய்யும் சவாலான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் உலகில் உள்ள தலை சிறந்த மருத்துவமனைகளுக்கு மட்டுமே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

அதில் கோயம்புத்தூர் மாவட்டம் ப்யூர் மருத்துவமனை மட்டுமே தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தது.

கூட்டம் தொடங்க அமெரிக்கா மருத்துவர் தங்கள் புறம் இருக்கும் சிக்கலை விளக்க.

அவர் விளக்கியதை கேட்டு முடித்ததும் அவரவர் தங்கள் கருத்துக்களை முன் வைக்க கடைசியாக மெதுவாக தன் கரத்தை உயர்த்தியவன் தன் யோசனையை விளக்க.

அவன் கூறியதில் இருந்து அவன் விளக்கம் மட்டும் அல்ல; அவன் சிகிச்சை முறை மீது அவன் கொண்டுள்ள நம்பிக்கையும் கூட தெளிவாக தெரிய.

அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து லதா,பாலு பெற்ற மகனான கதிருக்கு அவ்வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் சில நாட்களில் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிப்பதாக கூற கூட்டம் அத்துடன் முடிந்தது.

"வெல்டன் மை பாய் அப்பா பேர காப்பத்திட்ட!" பாலு புகழ.

"அவன் என் புள்ளை அதுதான் இவ்வளவு அறிவா இருக்கான்.இல்லைன்னா உங்களை மாதிரி லூஸ் டாக்கா இல்ல இருந்திருப்பான்!" லதா கிண்டலாக கூற.


கதிரோ,"உங்க ரெண்டு பேரை மாதிரி நான் இருந்தா சண்டக்கோழியா தான் இருக்கணும்.அம்மா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.அப்பா அந்த ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் பத்தி டாக்டர் மகேந்திரன் உங்ககிட்ட பேசினாரா!?" என்று தந்தையின் சிந்தையை வேலையின் புறம் திருப்பி அழைத்து சென்றான்.

இல்லம் வந்த லதாவிற்கு.. தன் இல்லம் வெறும் கட்டிடமாக மாறியதை உணர்ந்து 'வருத்தம் தான்!'என்றாலும்; அதையே எண்ணி வேதனை கொள்ள விரும்பாது குளித்து முடித்து உறக்கத்திற்கு சென்றார்.

ஒரு வாரம் கடந்த நிலையில் காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தன் தாத்தாவின் கைகளை பற்றிக் கொண்டு கோயம்புத்தூர் நோக்கி தன் பயணத்தை தொடர தயாராகினாள் ரிதம்.

அவளின் சிந்தை எல்லாம் இந்த காரைக்குடி மண்ணே நிறைந்தது.

போட்டியை முடித்துக் கொண்டு வங்கி சென்று அங்கிருந்து இல்லம் திரும்ப.

அவரவர்க்கான பணத்தை கொடுத்து முடித்து நிவேதா இல்லம் சென்றவள்

"நிவே இந்தாடி உன் பங்கு" என்று கொடுக்க...

"அடியேய் நான் எதுவுமே பண்ணவே இல்லடி.எல்லாமே ரெடி பண்ணது நீதானடி
எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்டி!" மறுத்தாள் அவள்.

அவளுக்குத்தான் தெரியுமே ரிதமின் பொருளாதார நிலை பற்றி.பண பற்றாக்குறை அறிந்தும் அவளிடம் பணம் வாங்க மனமில்லாது 'வேண்டாம்!' என்று பிடிவாதமாய் நிற்க.

வற்புறுத்தி கொடுத்தும் மறுப்பவளிடம் "என்ன சொல்லி பணத்தை கொடுப்பது!?" அத்தோடு தனக்கும் இந்த பணம் இருந்தால் உதவியாக இருக்கும் என்பதால்,

"நிவே இப்போ இந்த பணம் எனக்கு தேவையா இருக்குடி.அதனால இதை எடுத்துக்கிறேன்.ஆனா! பின்னாடி திருப்பி கொடுத்தா நீ வாங்கிக்கணும்.நீ திரும்ப வாங்கிப்பேன்னு சொல்லு நான் உன்னோட இந்த பணத்தை எடுத்துக்கறேன்" உறுதி கேட்க..

"சரிடி! கண்டிப்பா அப்போ வாங்கிக்கிறேன் சரியா இதை இப்போ எடுத்துட்டு போடி" என்று தோழியை சமாதானம் செய்து அனுப்பினாள் நிவேதா.

காரைக்குடி அருகே உள்ள வைரவன் பட்டி தான் இவர்களின் வாழ்விடம்.

ரிதம்,நிவேதா இன்னும் ஒருத்தி இருக்கிறாள் மூவரும் தான் வைரவன் பட்டி
வட்டார வஞ்சிக் கொடிகள்.

நிவேதாவின் அன்னை தான் மூவருக்கும் வழிகாட்டி.

"ஆசைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், அடைய விரும்பும் கனவு ஒன்று மட்டுமே இருக்கும்!"அப்படி உனக்குள் இருக்கும் கனவு எது? அதை தேர்ந்தெடு!" என்று ஊக்கம் கொடுத்து வாழ வழிகாட்டிய கலங்கரை விளக்கம்.

அவரை பார்த்து தான் ரிதம் தான் அடைந்தே தீரும் கனவாக 'செவிலியர்' படிப்பை தேர்வு செய்தாள்.

நிவேதாவும்,இன்னொரு வாலு பெண்ணான ரேணுவும் ஆங்கிலத்தை பாடமாக ஏற்று படித்தனர்.

தாத்தா பேத்திக்கு இருப்பிடம் தந்து வாழ வழி செய்தவர் நிவேதாவின் அன்னை தான்.

மூன்று பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து; நிவேதாவின் அன்னைக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து காத்தவர் வேல் தாத்தா.


எண்ணங்களின் இடையே காரைக்குடி பேருந்து நகர்வை தொடங்க.

தாத்தாவை பத்திரமாக அமர செய்து தானும் சீட்டில் நன்றாக அமர்ந்தவள் எண்ண
ங்கள் எல்லாம் மீண்டும் தங்கள் வாழ்வை நோக்கி பின்னோக்கி சென்றது.

எண்ணம் எல்லாம் ஒருவாரம் முன்பு மருத்துவர் கூறியதில் நிலைத்தது....

"மருத்துவர் அப்படி என்ன உரைத்திருப்பார்!?"
 
தெரியலையே....😂😂😂 நன்றிகள் ஊற்றாக 💐
உங்களுடைய நன்றி நவிலல் கூட வித்தியாசமா தூய தமிழ்ல சொல்றது வாவ் சிஸ் ❤️ ❤️ ❤️ ❤️ சூப்பர் ப்பா.
 
Top