Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 26 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 26 ❤️‍🔥

"பாவையில் பதுங்கிட
துடிக்கும்
பக்தன் நானடி.......!!!"



பெண்ணவளின் நலினங்களாய் வளைந்து.. நெளிந்து.. சரிந்து.. அழகாய் நின்றது மதுரை அழகர் மலை.காணும் இடம் எல்லாம் மயக்கும் மாயக் கன்னிகையாய் மாறி தன் பச்சை ஆடை கொண்டு மூடி இருந்தாள் இயற்கை.



வீசி செல்லும் தென்றல் காற்றும் இசையை செவியில் தூவிச் செல்ல எழில் கொஞ்சும் ஏந்திழையாய் இருந்தது திருமாலிருஞ்சோலையின் அடிவாரத்தில் அமைத்திருக்கும் கல்லணை.


பெரும் பரப்பளவை தன்னுள் அடக்கி பரந்து விரிந்து இருந்தது அவ்வீடு.அதன் மாடியில் நின்று பார்த்தால் ஊரின் எல்லை தெரிந்திடும்.

பின் புறம் பார்த்தால் அழகர் மலையின் மலைமுகடுகள் மேகத்தில் முத்தாடும் எழில் காட்சியை காணலாம்.

"ஆகா இயற்கையால் நிறைந்த அவ்வூரை போலே மக்கள் மனமும் அங்கே மாணிக்கமாய் மிளிர்ந்தால் நலமே!
ஆனால்! கடவுளின் கனவுகளே கானலாய் கரையும் பொழுது; சாதாரண மனிதரின் ஆசைகள் சுவடு பெருமா என்ன!?"


வெடிப்பான முகமும்,கட்டான உடலும், கண்களில் சினம் அல்லாது வேறு ஏதோ ஒன்றை காட்டி, திறமுடை புயமும், முறுக்கிய கருகரு மீசையும் எண்ணெய் வைத்து வாரிய தலையில் காற்றின் ஜாலத்தால் கலைந்த கேசமும்.

வலக்கரத்தில் காப்பும்,கழுத்தில் அழுத்தமான மைனர் செயினும் அணிந்து பார்ப்பதற்கு கன்னியரின் மனதை கவரும் வண்ணம் இருந்தான் சௌந்தர்.


"டேய் மாயா!" என்ற அவன் அழைப்பிற்கு

"சொல்லுங்க ஐயா!" என்றவாறு ஏழடி உயரத்தில் கருகருவென்ற நிறத்தில் வந்து நின்றான் மாயன்.


"இன்னைக்கு பாக்குற வேலைக்கு கூலிய நீ சாயங்காலம் வந்து வாங்கிட்டு போ. மாந்தோப்பு கணக்கு,தென்னந்தோப்பு கணக்கு,வட்டி கணக்கு எல்லாம் இன்னைக்கு இரவுக்கு முடிச்சு கொண்டு வந்து குடு.அப்பா நாளைக்கு கணக்கு சரிபார்க்குற நாளு.எல்லாம் சரியா இருக்கனும்டா!" என்றான் சௌந்தர்.


"எல்லாம் சரியா இருக்குங்க இன்னைக்கு சாயங்காலம் வார்றப்போ கொண்டாந்து குடுத்துபுடுறேன்!" என்றான் மாயன்.

'சரி' என்றவாறு தலை அசைத்து வீட்டினை நோக்கி நடையை கட்டினான் சௌந்தர்.

மாயன் கண்ணின் வெள்ளை விழியும், உள்ளங்கைகளும்,கால் பாதமும், பற்களும் அன்றி அவன் உச்சி முதல் பாதம் வரை கருமை பூசிய தேகத்தான்.

ஊருக்குள் அனைவரும்,"இவனுக்கு மாயன்னு பேரு வச்சதுக்கு பதிலா கருவாயன்னு வச்சிருக்கலாம்!"என்று கேலி பேசிடுவர்.

முதன் முதலாக அவனைக் காண்பவர்கள் அவன் உருவத்தில் மிரண்டுவிடுவர்.

ஏன் உள்ளூர் வாசிகளே மாலை கவிழ்ந்த பிறகு எல்லை சாமி போல் உயர்ந்து ஓங்கு தாங்கான அவன் உருவத்தை கண்டு பயந்ததும் உண்டு.ஆனால் விசுவாசி என்றால் அது அவன் தான்.என்ன வேலை அவன் முதலாளி ஏவினாலும் 'ஏன்?'என்ற கேள்வி இல்லாது செய்து முடிப்பான்.

சௌந்தர் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டு,வீட்டை நோக்கி நடையை கட்டினான்.


அவனுக்கு சில நாட்களாக ஏனோ மனதில் தோன்றியதை 'செய்தே ஆகவேண்டும்!' என்ற எண்ணம் விடாது தொல்லை செய்ய...

இன்று தந்தையிடம் பேசியே தீரும் மனதோடு உள்ளே சென்றாலும் தந்தையிடம் சென்று கூற மனம் துடிக்க; வாய் தடை விதிக்க ஒருவாறு தந்தை முன் சென்று நின்றுவிட்டான் அவன்.


"அப்பா!!" என்றவாறு தன் தந்தையிடம் வந்து தயக்கமாய் நின்றான் சௌந்தர்.

செய்தித்தாள் சகிதம் வெள்ளை வேட்டி சட்டையில் பெரிய மனித தோரணையில் இருந்தார் அவர்.அவரின் மிடுக்கிற்கு ஏற்றவாறு ஒற்றை நாற்காலியில் அமர்ந்திருந்தார்.


"சொல்லு தம்பி என்ன சொல்லணும் எதுக்கு தயங்கி நிக்கிற!?" என்றவாறு மீசையை முறுக்கினார் அவர்.


"இல்லங்கப்பா எனக்கு அது..." என்றவனால் மனது கேட்க தூண்டுவதை வாய் கேட்க மறுக்க தயக்கமாய் தந்தை முன் நின்றான்.


"சொல்ல வந்ததை பட்டுன்னு எப்பவும் போல சொல்லீடு தம்பி.அது,இதுன்னு எதுக்கு தயக்கம் சொல்லு" என்றவரே மேலும் தொடர்ந்தார்

அவரே மேலும் தொடர்ந்து,"என்ன அவளை தேடனுமா!?" என்றிட.

தன் மனதின் குரலை கேட்டது போல் தந்தை சொல்லுவதை கேட்டு ஆச்சர்யம் கொண்டவன்

"ஆமாம்ப்பா!" என்க

"அப்ப சரி தம்பி நீ தேடுறியா இல்ல அப்பா பார்க்கட்டுமாப்பா!?" என்றார் மகனிடம்.


"இல்லைங்கப்பா நானே நம்ம ஆளுங்களை இறக்கி தேடிக்கிறேன்.
உங்ககிட்ட கேட்கணும் இல்ல அதுதான்பா!" என்றான் சௌந்தர்.


"சரி தம்பி சரி தம்பி சீக்கிரமா கண்டுபிடி. நானும் பழைய ஆளுங்க மூலமா தகவல் கிடைக்குதான்னு விசாரிக்கிறேன்!" என்றவாறு பருத்தி வேட்டியின் மடிப்பு கலையாது எழுந்து நடந்தார் உணவு மேசை நோக்கி.


சௌந்தரோ தன் வீட்டின் அருகே தங்கள் வீட்டின் அமைப்பில் இருந்த பாழடைந்த வீட்டின் கதவினை திறக்க.

பல ஆண்டுகள் பூட்டிக்கிடந்ததால் கதவினை திறந்த போது

'கிரீச்ச்ச்.....'

என்ற ஓசையோடு திறக்க.வீட்டின் உள்ளே முழுவதும் படிந்த ஒட்டடையை கையால் களைந்து உள்ளே நுழைய மூக்கில் தூசி ஏற

'ஹச்..ஹச்..ஹச்..' தும்மல் தொடர்ந்து வர அவன் தும்மல் ஒலி அறையின் சுவருகளில் பட்டு எதிரொலித்தது.

ஒவ்வொரு இடமாக பொறுமையாக கண்டவன் நினைவில் நின்றது எல்லாம் அவளே.

"இப்பொழுது எங்கே இருப்பாள்!? எங்கிருந்தாலும் அவள் நலமுடன் இருக்க வேண்டும்!கட்டாயம் அவள் நலமுடன் இருந்தே ஆகவேண்டும்!" என்ற கட்டளையோடு நடக்க.

அவன் பாதத்தில் தூசி ஒட்ட,அவன் பாத சுவடுகள் தூசியின் மீது தன் அழுத்தத்தை விட்டு சென்றது.


அதில் கீழ் அறைகளில் ஒரு அறையை கண்டவன் அதையும் திறக்க.அதன் கதவுகள் திறப்பதற்கே கடினமாக இருந்தது.

சற்றே அழுத்தம் கொடுத்து அதனை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சௌந்தர்.


அவனின் சிறு வயது நினைவுகள் எல்லாம் அடங்கிய அறை அது.


அவன் கண்முன் நினைவுகள் எல்லாம் காட்சிகளாய் படர்ந்தது.


"மாமா சொல்லுடி பாப்பு!" என்றான் பன்னிரண்டு வயது சௌந்தர்.

"முடியாது போடா அகண்ட வாயா!" என்றது பெண் குழந்தை ஒன்று.

"என் பையனை மரியாதை இல்லாம பேசுற!?" என்றவாறு வந்த சௌந்தரின் தந்தை பாண்டியனைக் கண்டதும் பாவாடையை தூக்கி பிடித்துக் கொண்டு சிட்டாய் பறந்தது சின்ன சிட்டு.


"அப்பா ஏம்ப்பா அவளை விரட்டுனீங்க. அவ இப்போ ஓடீட்டா நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க!?" வருத்தமாய் கேட்டு நின்றான் சௌந்தர்.

"டேய் உன் அத்தை மகடா அவ...உனக்கு தான் சொந்தம்!"

பிஞ்சின் மனதில் கல்வியை விதைக்காது தேவையற்றதை அவர் பதிய செய்ய.

அவை அனைத்தும் சௌந்தரின் பருவ மனதில் 'பசுமரத்து ஆணியாய்' பதிந்து போனது.

மற்றொரு முறை அந்த பெண் குழந்தையை பிடித்துக் கொண்டு

"ஏன்டி பாப்பு நீ யாரை கல்யாணம் பண்ணிப்ப!? என்னையா!?இல்லன்னா உங்க அத்தை பையன் அந்த கோழிமுட்ட கண்ணனையா!?" என்றான் சௌந்தர்.

"டேய் அகண்டவாயா நான் பெரிய காருல வர்ற அழகான மாப்பிள்ளையை தான் கட்டிப்பேன்.உன்னை எல்லாம் கிடையாது!" என்றது பிஞ்சு.

இந்த பதிலைக் கேட்ட சௌந்தருக்கு கோபம் என்றால் கோபம் பெரும் கோபம்.

"அப்படி வரும் மாப்பிள்ளையை அப்பொழுதே அடித்து நொறுக்க வேண்டும்!" என்றொரு வெறி.


அவன் அன்னை முன் சென்று முறையிட அவரோ,"டேய் இந்த வயசுல உனக்கு என்னடா பேச்சு இது!?" என்று விரட்டிவிட.

தந்தை முன் சென்று நின்றான் இளையவன்.

அவரோ நடந்ததை கேட்டுவிட்டு," நீ ஒன்னும் கவலையே படாத மகனே அந்த புள்ள உன்னத்தான் கட்டிக்கும்!" என்று வாக்கினை கொடுக்க.

தந்தையின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு சந்தோசமாக நகர்ந்தான் பாண்டியனின் செல்வ மகன் சௌந்தர்.

தந்தையானவர் மகனை கண்டிப்பதை விடுத்து, அவனுக்கு கேடு விளைவிக்கும் வழியை அவரே கற்று கொடுக்கும் ஆசானாய் மாற.பிள்ளையை கணவன் துர்போதனையால் சீரழிப்பதை பொறுக்காது கணவனிடம் மல்லுக்கு நின்றார் சௌந்தரின் அன்னை.


தன்னை எதிர்த்து பேசிய மனைவிக்கு பரிசிலாய் சில காயங்களை கொடுத்துவிட்டு மகனுக்கு மீண்டும் அதே போதனையைத் தொடர்ந்தார் பாண்டியன்.


ஒரு அளவிற்கு மேல் இருவரையும் கண்டிக்க முடியாத செளந்தரின் அன்னை அமைதியாய் ஒதுங்கிக் கொண்டார்.

அதன் பிறகு, "தங்கள் வாழ்வில் தான் எத்தனை மாற்றம்!?"

அத்தனையும் மாறியும் அவள் மீதான 'அன்பு' மட்டும் மாறாது, மறையாது போனது ஏனோ தெரியவில்லை.

"எந்த நாவு தன்னை மாமா என்று அழைக்க மாட்டேன் என்றதோ!? அதே வாயால் தன்னை அன்பாய்,ஆசையாய் மாமா என்று அழைக்க கேட்டு அழகு பார்க்க வேண்டும்!"


ஒருவேளை அவள் 'மாட்டேன்' என்றால்; என்ற மனதின் கேள்விக்கு முகத்தில் படர்ந்தது புன்னகை ஒன்று.

___________________________________________________

"அம்மா எனக்கு குலாப் ஜாமூன் வேணும்!" என்றான் ஏகனின் புதல்வன்.

"தங்கத்துக்கு ஜாமூன் வேணுமா!தம்பிக்கு ஜாமூன் வேணுமா!அழகு பிள்ளைக்கு ஜாமூன் வேணுமா! இம்ம்... வேணுமாடி அழகி...!"


என்று மகனை செல்லமாய் கொஞ்சிக் கொண்டே அவனை மெத்தையில் பொதித்து வயிற்றில் குறுகுறுப்பூட்ட.


அன்னையின் விளையாட்டில் சிறுவன் வெடித்துச் சிரித்தான்.


அவன் பிள்ளை சிரிப்பில் அவ்வீடு நிறைய சிதம்பரம் தாத்தாவின் மனம் நிம்மதியில் நிறைந்தது.

பெண்ணவள் வருவதற்கு முன்பு எல்லாம் காலை ஆறுமணி விழிப்பு,பின் யோகா பயிற்சி, எழுத்து பயிற்சி தொடங்கி இரவு உறங்கும் நேரம் வரை அனைத்தும் நேரக்கணக்கு படி நடைபெறும்.


'இந்த நேரம் இதை செய்யவேண்டும்!' லங்கே கண்டிப்பு இருந்தது.

ஆனால் அதில் மறைந்தது என்னவோ சிறுவனின் 'குழந்தை தன்மை' தான்.


எந்திரம் போல யோகா பயிற்சி, உண்பது, ரூபிக்கியூப், எழுதுவது,படிப்பது,நீச்சல் பயிற்சி மட்டுமே அவனின் வேலையாக இருந்தது.எப்பொழுதாவது ஏகன் தன்னுடன் மகனை அழைத்துக் கொண்டு வாலி பால் விளையாட அழைத்து செல்வான்.


அதை தவிர பிள்ளை பருவத்தை அனுபவிக்காத பிஞ்சின் முகம் காண்கையில் கண்ணீர் வராத குறைதான் பெரியவருக்கு.

'ஆனால்!'

இன்றோ 'ரிதம்' எனும் பெண் ஒருத்தி வருகையால் அந்த இல்லம் அவரின் செல்ல கொள்ளு பேரனின் சிரிப்பில் நிறைந்துள்ளது அல்லவா.

"என்னடா தியாகு எதுக்கு கண்கலங்கி உட்கார்ந்திருக்க!?" என்றவாறு அவ்விடம் வந்தார் வேல் தாத்தா.

இப்போது எல்லாம் தன்னிலை மாறாது அதிக நேரம் இருக்கின்றார்.மருத்துவர்களும் நல்ல சூழல் அவரின் 'மனதை செம்மையாக்கும்' என்று நம்பிக்கை கூறி இருந்தனர்.

நண்பனின் கேள்விக்கு,"இல்லடா வேலு நம்ம அகரன் பத்தி தான் யோசிக்கிறேன்!" என்றார்.

"இதில் அகரனை பத்தி யோசிச்சு கவலை பட என்னடா இருக்கு!? இப்போ தான் அம்மாவும் பிள்ளையும் சமையல் கட்டுக்குள்ள போய் குலாப் ஜாமூன் செய்ய மாவு எடுக்குறேன்னு சொல்லி ஒரே அமளிதுமலியா கிடக்கு அந்த இடம்!" என்றார் வேல் தாத்தா.

"உனக்கு கிடைக்காத எல்லா சந்தோசமும் உன் பேரனுங்களுக்கு கிடைக்கும்டா தியாகு!"

வேல் தாத்தா வாழ்தாய் கூறினார் நண்பனுக்கு.

தோழனின் வாழ்த்து மனதை உவகையூட்ட "சரிடா வேலு அவங்க நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும்டா!" மகிழ்வாய் வந்தது வார்த்தை.

பேரன் திடீர் திருமணம் என்றதும் சற்று தயங்கவே செய்தார் பெரியவர்.என்ன தான் நண்பன் பேத்தியாக இருந்தாலும் "பெண்ணின் விருப்பம் முக்கியம் அல்லவா!?"

ஏன் திருமணத்தின் பின்னரும் கூட தாத்தாவால்,'பேரன் என்ன நினைக்கிறான்!?' என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பெண்ணை வற்புறுத்தி அவள் செல்வதற்கு பாதைகள் ஏதுமின்று அனைத்தையும் அடைத்துக் கொண்டு...

"உன் முடிவை கூறு என்றால் அவளும் தான் என்ன செய்வாள்!?"

தாத்தா ஒரு புறம் மடக்க; பேரன் ஒரு புறம் மடக்க; இருவரிடமும் 'முடியாது' என்று கடைசி வரை போராடினாள்
பொற்புடையள்.

இருவருக்கும் நடுவில் வேல் தாத்தாவின் வாக்கு தடைக் கல்லாக நிற்க.அவளால் முடிந்தது தன் தாத்தாவின் வாக்கினை தானே நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டாள்.

"அகரன் மீதான ரிதமின் அன்பிலோ;தன் மீதான அவளின் அக்கறையிலோ; அவருக்கு எள்ளளவும் சந்தேகமில்லை!"


அவரின் கவலை எல்லாம் பேரனும், பேரனின் மனைவியும் இணக்கமாய் வாழ்வதை போல் தெரியவில்லை.அது ஒன்று தான் அவரை உறுத்தியது.


அந்த உறுத்தலும் நேற்று முழுவதும் தன் மனைவியின் கையால் பரிமாறிய உணவை ரசித்து உண்ட
பேரனை கண்டபிறகு கவலைகள் எல்லாம் காற்றில் பட்ட கற்பூரமாக கரைந்தது பெரியவருக்கு.

"காலம் முழுதும் இப்படி தனிமையில் கடக்குமோ!? பேரன் வாழ்வில் சிறு ஒளியும் தோன்றாது போகுமோ!? பரிதவித்த நெஞ்சத்திற்கு 'பீலியால்' மருந்திட்ட உணர்வு!"
 
"தங்கத்துக்கு ஜாமூன் வேணுமா!தம்பிக்கு ஜாமூன் வேணுமா!அழகு பிள்ளைக்கு ஜாமூன் வேணுமா! இம்ம்... வேணுமாடி அழகி...!"

கவனம், ரிதம்....


இந்த கொஞ்சலை எல்லாம் அகரனோட limit பண்ணிக்கோ....

ஓவரா சீன போட்டுட்டன்னா ஜாமூனோட அப்பா அவனை கொஞ்சுறதா கற்பனை பண்ணிக்க போறான்.... 😘😘😘😘😘😘😘
 
கவனம், ரிதம்....

இந்த கொஞ்சலை எல்லாம் அகரனோட limit பண்ணிக்கோ....

ஓவரா சீன போட்டுட்டன்னா ஜாமூனோட அப்பா அவனை கொஞ்சுறதா கற்பனை பண்ணிக்க போறான்.... 😘😘😘😘😘😘😘
கண்டிசனா பண்ணுவான் மண்டகசாயம்😂😂🤣🤣🤣
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍

அகரனை ரிதம் கொஞ்சறதை இந்த பக்கிப்பய கேட்டா பொறாமைல பொசுங்குவானோ?.🙄🙄🙄
இது யாரு புது வில்லன் .பீதிய கிளப்புறமாதிரி.
ரிதமோட மாமனா?🤔🤔🤔
ஆளை வச்சு தேடப் போறானாமே.?.
சௌந்தராம் பேரு அடேங்கப்பா அவனோட அப்பன் அதுக்கு மேல அராஜகம் பண்ணுவான் போல.
இரண்டு பேரும் ரிதமோட வாழ்க்கைல ஏதாவது இடைஞ்சல் பண்ணுவாங்களோ?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍

அகரனை ரிதம் கொஞ்சறதை இந்த பக்கிப்பய கேட்டா பொறாமைல பொசுங்குவானோ?.🙄🙄🙄
இது யாரு புது வில்லன் .பீதிய கிளப்புறமாதிரி.
ரிதமோட மாமனா?🤔🤔🤔

ஆளை வச்சு தேடப் போறானாமே.?.
சௌந்தராம் பேரு அடேங்கப்பா அவனோட அப்பன் அதுக்கு மேல அராஜகம் பண்ணுவான் போல.
இரண்டு பேரும் ரிதமோட வாழ்க்கைல ஏதாவது இடைஞ்சல் பண்ணுவாங்களோ?
இதனைக் கண்டால் பொங்கலாய் பொங்கி விடுவான் நாயகன் ஆதலால் யாரும் அவனிடம் இதனை கூறவேண்டாம் என்ற அவசர அறிவிப்பை பிரகடனம் செய்கின்றோம்...🔊🔊🔊 இடைஞ்சலை கடந்த வாழ்வு இன்பமயமானது😁😁😁
 
Last edited:
Top