Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 21 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 21 ❤️‍🔥



"ஆசை காட்டி
ஏக்கம் கூட்டும்
பேரெழில் பெட்டகமே....!!!"




சோதனை இன்று இத்துடன் முடிகிறது என்று நம்பி நீச்சல் குளத்தை விட்டு வீட்டிற்குள் வந்தவன்; சோதனை சிறிது இடைவேளை கொடுத்து சென்றதை அறியாது போனான் ஏகன்.


நீச்சல் குளத்தில் நீந்தி தன் மனதை சீர்படுத்திக் கொண்டு அறைக்கு வர.

காய வைத்த துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் ரிதம்.

"அம்மா" என்ற அழைப்புடன் ஓடி வந்த அகரன் ரிதமின் மெத்தையில் பட்டென்று குதிக்க.

அவள் மடித்த துணி அனைத்தும் களைந்து விட.மகனோ தான் செய்த தவறை உணர்ந்து திருட்டு முழி முழிக்க.

அகரம் செய்த தவறுக்காக அவனையே துணிகளை மடிக்க வைத்து; தானும் உடன் மடித்தவள் வேலை முடிந்ததும்;அதனதன் இடத்தில் துணியை வைத்துவிட்டு வந்து மெதுவாக பின்னிருந்து அணைத்து மகனை பம்பரமாய் சுழற்றி இருவருமாக சேர்ந்து அவளின் மெத்தையில் விழுந்து மூச்சு வாங்க கிடக்க.

இதோ ஏகன் சோதனை நேரம் 'உச்சம்' பெற்றது.

"இந்நேரமா தான் வரவேண்டும்!?" என்றவன் நினைக்கும் வண்ணம்.

மகனோடு சேர்ந்து விழுந்ததில் உடலில் இருந்து உடை நலுங்கி கிடக்க.அதை அறியாது மகனுக்கு கழுத்தில் குறுகுறுப்பு ஊட்டியவாரு கிடந்தாள் ரிதம்.

உள்ளே வந்தவன் கண்களில் மனைவியின் எழில் கோலம் விரிய.

"மூச்சு முட்டி கொண்டதோ!? காற்றில் ஆக்சிஜன் குறைந்த உணர்வு மூச்சு மட்டுமே முரண்பட.முழி இரண்டும் முக்தி வேண்டி அவளிடம் ஊர்வலம் சென்றது!"

படாது படரும் பார்வை பந்தியில்; தான் விருந்தாவதை முதலில் உணராத ரிதம்; ஏதோ தோன்ற மெதுவாக திரும்ப கணவன் பார்வை சென்ற திசையில் தன் கண்களை பயணிக்க செய்து 'பதறி' எழுந்து தன்னை சரி செய்து நிமிர அவன் அங்கே இல்லை.


அறைக்குள் வந்து தலையை உலுக்கி எண்ணங்களை அவன் சீர் செய்ய முனைய முடிந்தால் தானே.

"எண்ணங்களை அடக்க முடிந்தால் முனிவன் ஆகிவிடுவான் அல்லவா!" மனிதன்.

'பாவம்!'

சாதாரண ஆசாமியான ஏகனால் அவன் மனமும், எண்ணமும் நவீன நக்கீரனாய் உருமாறி வாதம் புரிவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

அதற்காக இந்த மானுட ஏகன் சிதம்பரம் ஐயம் திரிபுர செய்திட....

"ஒருவனாகி,ஒருவன் அநேகனாகி, அநேகன் ஏகனாக மாறும் வெள்ளியம்பதியா வரமுடியும்!?"


கணவன் பார்வையில் 'திக்குமுக்காடி' போனாள் ரிதம்.

"அம்மா உங்களுக்கு பூச்சி கடிச்சுடுச்சா!?" என்றான் அகரன் உள்ளிருந்தவன் காதுகளிலும் இது விழுக.

'பூச்சி கடித்ததா? என்னவானது!?' என்று பதற

"அம்மா உங்க முகம் ரெட்..ரெட்.. கலரா இருக்கு பாருங்க!" என்றான்.

'ஏனென்றால்!?'

அவள் சிவந்து செழிக்க காரணம் ஏகன் பார்வை மட்டுமா 'என்ன !?'

'இல்லை!'

நீச்சல் குளம் சென்று குளித்தவன் அங்கிருக்கும் உடையின் ஜெர்சி வகை பெர்முடாஸ் அணிந்து மேல் சட்டை அணியாது துண்டினை போர்த்திக் கொண்டு வந்திருந்தான்.

அதுவும் கூட அவனுக்கு துரோகியாகி ரிதமிற்கு நட்பாகி விலகிகிடக்க...

அவன் இவளை பார்வையால் புசித்த தருணத்தில் இவளும் அவனை கண்களால் பூஜிக்கவே செய்திருந்தாள் என்பது தான் உண்மை.


அவனுக்கு மட்டுமா விழிகள் முக்தியை வேண்டின. பெண்ணவளுக்கும் அல்லவா "மொச்சை கொட்டை முழி மோட்சம் வேண்டியது!"

காட்டியும், பூட்டியும் கண்ணாமூச்சி ஆடிய அவன் கட்டுக்கள் எல்லாம் இன்று அரும்காட்சி அளிக்க.

முட்டை விழி திறந்து; கண்ணை நன்றாக விரித்து; ஆடாத பார்வை பார்த்து. அதன்பின் அவன் பார்வை தன்னில் படியும் விதத்தின் மாற்றம் புரிந்து தன்னை 'சரி' செய்தாள்.

"ஐயோ! எப்படி அவன் முகம் பார்ப்பது!? எவ்வளவு நேரமாக நின்றானோ!? தன்னை பார்த்தவன்.தான் அவனை பார்த்ததும் பார்த்தானா!?" என்று செந்தாழமாக வெட்கி சிவந்த முகத்தோடு நிமிர


அவன் அங்கே இல்லாது போக நிம்மதி பெருமூச்சு விட்டவளிடம் ; அகரன்
வெட்க சிவப்பை, 'பூச்சி கடியா?' என்று வினவ.

அவளோ,"இல்லைடா கண்ணா அம்மா ரொம்ப நேரம் சிரிச்சேன் இல்லையா அதுதான் கன்னம் இப்படி இருக்கு!" என்று சமாளித்தாள்.

அவளின் சமாளிப்பு புரிந்த 'முத்தார மூரல்' அவனிடம்.

"மை தீட்டா கண்களும் பெண்ணுக்கு
செழிப்பை கூட்டுமோ!?

ஐயம்! என்றால் அவள்
சதிராடும் கண்களை

ஒரு முறை கண்டு
ஆராயுங்கள் அறிஞர்களே.......!!!"

திடீரென புதுக் கவிஞன் அவதாரம் எடுக்கும் தன்னை தானே நிந்தித்தவாறு அலுவலகம் செல்லக் கிளம்பினான் ஏகன் சிதம்பரம்.

ஏகன் மேசை மேல் இருந்த அலைபேசி ஒலித்தது.

வேலைகளின் நடுவே ஒலித்த அலைபேசியை முதலில் கவனிக்காதவன் அது துண்டிக்கப்படும் கடைசி வினாடியில் ஏற்க

எதிர்ப்புறம் "ஹலோ" பெண் குரல் ஒன்று உரிமையை வேண்டும் தோரணையில் ஒலித்தது.

திருமணம் ஆன பிறகான மனைவியின் முதல் அழைப்பு.

"சொல்லு ரிதம்" என்றான் அவன் குரலில்

'காலை காட்சியின் கற்பனையோ!?'

அவளும் "சாயங்காலம் நேரத்தோடு வர முடியுமா!?" என்க

"என்ன ஆச்சு? என்ன வேணும்!?"
அவளின் வேண்டுகோளை ஏற்கவோ மறுக்கவோ ஒன்றுமில்லை அவன் மனதில் என்றது போல ஒரு தோரணை கண்ணாளனிடம்.

"இல்ல கோவில் போகணும் அதுதான்!" அவள் குரலில் எதிர்பார்ப்பு விரவிட.

தன்னால் அவளின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது போனாலும்; அவளின் இது போன்ற சிறுசிறு ஆசைகளை நிறைவேற்றும் எண்ணத்தோடு

"சரி ரிதம் ரெடியா இருங்க!" என்றவாறு அழைப்பை துண்டித்தான்.

மாலை சரியாக ஆறு மணிக்கு அவன் வந்த போதே அன்னையும் மகனும் தயாராக இருந்தனர்.இவன் சென்று கிளம்பி வர.



மல்லிகை மொட்டவிழ தயாரான நேரம் அதன் மணம் அவளைக் கடந்து அவனுள் தன் மணத்தை கடத்த.மீண்டும் ஓர் இருதய சுளுக்கு 'பொற்புடை நாயகனுக்கு' உண்டாக மூவரும் ஒன்றாக கோவிலுக்கு சென்றனர்.


"அம்பிகையே! மாதுளம் பூ நிறத்தாளே! அபிராம வல்லியே!" என்று அவளை போற்றி மனதுள் புகழ்ந்து தன் புது வாழ்விற்கு 'நன்றி' கூறி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் ஏகன் குடும்பம்.


'காதல் திருமணமோ?' அல்லது 'பெற்றோர் செய்து வைத்த திருமணமோ?' அல்லது 'திருமணம் என்பது ஒப்பந்த திருமணமோ?' எதுவாயினும் நாம் ஏற்காவிடினும் நம் மனம் அதில் ஒன்றத் தொடங்கிவிடும்.நாட்கள் கடக்க அது அந்த உறவில் எதிர்பார்ப்புகளை விதைத்து. ஆசையை மலரச் செய்து.தாகத்தையும்,
தாபத்தையும், தயக்கத்தையும், ஏக்கத்தையும் காய்களாய் காய்க்க செய்து.
இன்பங்களை கனியாய் உருவாக்கி நம்மை அதன் சுவையில் மூழ்க வைக்கிறது.

இப்பொழுது தான் ஏகன் மனதில் திருமணம் எனும் பந்தம் சிறு விதையை விதைத்து உள்ளது.

இனி படிப்படியாக மலர்களும்,காய்களும், கனிகளும் தோன்றி அவனை இன்பச் சுமையில் ஆழ்த்தி அமிழ்த்தும்.

அதை அறியாத ஏகன் ஆரம்பத்திற்கே மூச்சு முட்டி நிற்கின்றான்.அடுத்தடுத்த கலைகளை தாண்டும் நேரம் அவன் பாடு திண்டாட்டம் தான்.

ஞாயிறு என்பதால் காலையே ஏகன் இல்லம் வந்திருந்தனர் லதா,பாலு,கதிர் மூவரும்.

அவசரம் என்றால் மருத்துவமனை சென்றாக வேண்டும் தான்.ஆனால் அதுவரை குடும்பத்துடன் இருக்கும் எண்ணத்தில் வந்திருந்தனர்.

"ரிதம் என்ன சமையல்!?" என்றவாறு வந்தார் லதா.

"அத்தை நான் - வெஜ் செய்யலாம்னு இருக்கேன்!" அத்தைக்கு ஏற்ற மருமகளாக பதிலுரைக்க

"சரிம்மா நான் எதும் ஹெல்ப் பண்ணவா!?" என்றவரிடம் ரிதம் பதில் உரைப்பதற்கு முன்பே

"லதா பாட்டி நீங்க பாலு தாத்தா கூட ஃபைட் பண்ணுங்க.அம்மா நமக்கு சாப்பாடு தருவாங்க.அம்மா நல்லா சமைப்பாங்க!" முந்திக்கொண்டு வந்தது ஏகன் பெற்ற முந்திரிகொத்து அகரன்.

அதை கேட்டு அனைவரும் லதாவை பார்த்து சிரிக்க.

அவரோ," பொடியா என்னை பார்த்து என்னடா சொன்ன!?" என்றவாறு வர ஓட்டம் எடுத்தான் பிள்ளை.

"அவனுக்கு தெரியுது லதா நீ என் கூட
ஃபைட் மட்டும் தான் பண்ணுவ.குக் பண்ண மாட்டேன்னு தெரிஞ்சு இருக்கு.டேய் அகரா நீ அப்படியே தாத்தா போல ஜினியர்ஸ்டா கண்ணா!" என்று தன்னை தானே பாலு புகழ.

குட்டியோ, "ஆமாம் பாலு தாத்தா நான் சிதா தாத்தா (சிதம்பரம் தாத்தா) மாதிரி ஜினியர்ஸ்னு அப்பா சொன்னாங்க!" என்று கூறிட.

அகரனை தன்னுடன் ஒப்பிட்டுக் கூறிய பாலுவிற்கு அவரது பேரன் பெரும் பங்கத்தை விளைவிக்க.இப்பொழுது மீண்டும் வெடி சிரிப்பு கிளம்ப. பிஞ்சின் பேச்சழகை கேட்டு குடும்பமே ரசித்திருந்தது.


அப்பொழுது ரிதம் இக்னேஷ், நவநீ இருவரையும் அழைக்க.அவர்களும் வந்து இவர்களுடன் இணைந்து கொண்ட நேரம்.

"டேய் பாடி சோடா!" என்று இக்னேஷ் நவநீயை அழைக்க.

அதற்கு நவநீயோ விடாது," டேய் நீ தான்டா மாடு புடி மாரி மச்சான் சடையா!" என்று பதிலடி கொடுக்க.


கதிர் இவர்களின் பேச்சில் ஒன்றும் புரியாது முழிக்க.இருவருக்கும் வந்த அழைப்பை பற்றி பேசிய நேரம் ரிதம் அங்கே எதேச்சையாக வர.

ரிதம்," உனக்கு இது தெரியுமாம்மா!?" நவநீ
கேட்க

"எது அண்ணா!?"

"அதுதான் உன் பிரெண்ட் அந்த வெண்ணெய் கட்டி எங்களை கால் பண்ணி கலாய்ச்சது!?"

அவளோ சாதாரணமாக,"ஓஹ்! அதுவே உங்களுக்கு இப்போ தான் தெரியுமா!?"
எதிர்வினா எழுப்ப.

"ஏன்மா அப்படி சொல்ற!?" என்று நவநீ அறிய முயல

அவன் பின் நின்ற இக்னேஷ், நிவேதா தன்னிடம் முன்பே கூறியதை 'சொல்லிவிடாதே!' என்று கெஞ்ச கெஞ்ச அதை கண்டுகொள்ளாது

"அவ தான் ஊருக்கு போன அன்னைக்கே இக்னேஷ் அண்ணா கிட்ட சொல்லிட்டு தானே போனா!"

பாவம் எவ்வளவு முயன்றும் இக்னேஷை கண்டுகொள்ளாத ரிதம் ரகசியத்தை போட்டுடைக்க.

"அப்போ உன் கல்யாணத்து அன்னைக்கு நீ என்னை பார்த்து சிரிச்சது...!?"

முழுதாய் முடிக்காது இழுத்து பாதியில் நிறுத்த..

"எல்லாம் அந்த நாய் மேய்க்கிற நாயை நினச்சு தான் இருக்கும் இல்லையா அண்ணி!?" என்றான் இவர்களின் சம்பாசனையை கேட்டிருந்த கதிர்.

"ஐயோ கதிர் நீங்க என்ன உண்மையை புட்டு புட்டு வைக்கிறீங்க!?" என்றாள் ரிதம்.

இவர்கள் எல்லாம் கூட்டமாய் அமர்ந்து பேச.
அவர்களின் பேச்சினை காதில் வாங்கியவாரு மடிக்கணினியில் தன் வேலைகளை பார்த்திருந்தான் ஏகன்.

ரிதம் மாலை மட்டுமல்ல இரவு உணவும் முடித்த பிறகுதான் அனைவரையும் வீட்டிற்கு செல்ல அனுமதித்தாள்.

அவளுக்கு நிம்மதி இப்பொழுது எல்லாம். தாத்தா தன் சுயத்திலே அதிக நேரம் இருக்கிறார்.

மருத்துவர்களும் கூட அவரின் இந்த முன்னேற்றம் ஆரோக்யமான சூழலினால் இன்னும் மேம்படும் என்று கூறி இருந்தனர்.தன் மகிழ்வை அவள் அன்னமிட்டு வெளிப்படுத்தி இருக்க.

மகன் வாழ்வில் ஒளிரும் விளக்காக வந்த மருமகளை இன்பம் பொங்க பார்த்திருந்தார் லதா.

'ஏனென்றால்!?'

'சூல் அறிந்த தாய்க்கு; பிள்ளையின் மனமாற்றம் தெரியாதா என்ன!?'

இதில் நன்மை நேர்ந்தால் 'அனைவருக்கும் நலமே!' என்ற எண்ணத்தோடு மருமகளை பார்த்திருந்தார்.

லதாவின் பார்வை அழுத்தப்பார்வையாக,
சந்தேகப்பார்வையாக தெரிந்தது ரிதத்திற்கு.

'பாவம்!'

___________________________________________________

"மேம் நீங்க மும்பைக்கு சிப்ட் ஆகறதா ஒரு தகவல் வருதே அது உண்மையா!?"

செய்தியாளர்கள் கூட்டத்தின் போது தீக்ஷிதாவை பார்த்து செய்தியாளர் ஒருவர் கேட்க.

"எங்க போனாலும் நான் தமிழ் பொண்ணு அதை மறக்கமாட்டேன்!" என்றாள் தீக்ஷி எனும் டி (D).

இப்பொழுது 'போகிறேன் என்கிறாளா!?' அல்லது 'போவேன் என்கிறாளா!?' இல்லை
'போகவில்லை என்கிறாளா!?' ஒன்றும் புரியாது நின்றனர் செய்தியாளர்கள்.

அவர்களையே குழப்பி அதில் குளிர்காயும் வித்தை கற்றவள் அவள்.அவளிடம் இவர்கள் எல்லாம் 'தீட்சை' வாங்க வேண்டும்.

"மேம் அப்போ நீங்க மும்பை எப்போ போறீங்க!?" என்றாள் செய்தியாளர் குழுவில் மற்றொருத்தி எழுந்து

அதற்கு,"செல்லும் போது கண்டிப்பாக கூறுகிறேன்!" என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டு மும்பை நோக்கி பறந்தாள் தீக்ஷிதா.

இப்பொழுது கூட மும்பைக்கு தன் ஜாகையை மாற்றும் நோக்கோடு தான் செல்கிறாள் என்றாலும்;அதை வெளியில் சொல்லாது தன் பயணத்தை கிளப்பி இருந்தாள்.

தன் ரகசியம் காப்பதில் கைதேர்ந்த நடிகையாள்.
 

"மூச்சு முட்டி கொண்டதோ!? காற்றில் ஆக்சிஜன் குறைந்த உணர்வு மூச்சு மட்டுமே முரண்பட.முழி இரண்டும் முக்தி வேண்டி அவளிடம் ஊர்வலம் சென்றது!"



ஆஹா..... ஏகன்ஜி,


என்ன பண்ணுது உங்களுக்கு? எங்க போகுது உங்க சபதம்.....????????

💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
 
ஆஹா..... ஏகன்ஜி,

என்ன பண்ணுது உங்களுக்கு? எங்க போகுது உங்க சபதம்.....????????

💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
அவ்வா...அவ்வா... அவ்வவ்வா... அவ்வா... அவ்வா....🔊🔊🔊 என்று தூர தேசம் சென்றதுவோ 🤔🤔🤔🤔
 
Top