Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 19 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 19 ❤️‍🔥

"ராட்டினம் போல் உனை
சுற்றும் மனதை
எதைக் கொண்டு மீட்பேன்!?
எதில் சென்று சேர்பேன்......!?"


இன்று ரிதம் வந்திருக்கும் வீடு புது இடம் என்பதால்,பெண் அவள் தயாராக அறை ஒன்று தனியே இருக்க.

அதிலே நிவேதாவை தங்கிக்கொள்ள கூறியுள்ளனர்.பிரபா,ரேணு இருவருக்கும் வேறொரு அறை இருக்க.

இங்கும் இக்னேஷிற்கு வெளியில் ஒரு குவாட்ரஸ் இருந்தது.

முன்பிருந்த வீட்டை போலவே இல்லம் விசாலமாக இருந்தாலும்,இன்றைய நவீனத்துவ வேலைகள் நிறைந்த சுவரொட்டிகள்,அலங்காரங்கள் கொண்டதாக இருந்தது இவ்வீடு.

இரண்டு வீட்டிற்கும் இருந்த பெரும் ஒற்றுமை சுத்தம் தான்.

எங்கும் சுத்தம்,எதிலும் சுத்தம்,காணும் இடமெல்லாம் சுத்ததின் சுடர் ஒளிர.
தோழியர் இருவரும் ரிதம் எனும் பெண்பேழையை தயார் செய்து.தங்களால் முடிந்த அறிவுரை வழங்க.

ரேணுவின் அன்னை அகிலாண்டம் கைபேசியில் அழைப்பை விடுத்து தன் வாழ்த்துக்களையும்,சில அறிவுரைகளும் வயதில் மூத்தவராக பகர.

அகிலா,ஆடிய பாதம் இருவரும் கூறிய வாழ்த்தை பெற்றுக் கொண்டு
அனைத்திற்கும் தலை அசைத்து ஏற்றுக் கொண்டாள் ரிதம்.

பெற்றவர் இல்லா பிள்ளைக்குத் தானே அடுத்தவர் கொடுக்கும் அறிவுரையின் 'மதிப்பு தெரியும்!'

'இடிப்பாரே இல்லா மன்னன் போல்'

நம்மை தட்டிக் கேட்பதற்கோ,அறிவுரை கூறுவதற்கோ பெரியவர்கள் அருகே இல்லை என்றால்; நம் வாழ்வு அடிகளை அடாது வாங்கி சுமைகளை விடாது சுமக்க செய்து....அதன் பின்பே நமக்கு வழியை காட்டி வாழ்வைக் காட்டும்!

ஆனால் பெரியவர்கள் கூறும் அறிவுரை கேட்டு அதன் வழி நடக்கும் போது வேதனைகள் வரும் நேரம் அவர் கூறிய அறிவுரைகள் நினைவில் நின்று நம்மை 'வழி நடத்தும்!'

மாலை கவிழ்ந்து இரவு பிறந்த நேரம் இருள் கண்ட முகில்... மூன்றாம் பிறை காண்பது போல் புதுமணப்பெண் கலை அள்ளித் தெளித்த சந்தனம் போல் இருந்தும் இல்லாது தெரிந்திட,ஏகன் அறைக்கு அமைதியாக சென்றாள் ரிதம்.

அவளை கேலி கிண்டலில் மூழ்கடிக்கும் 'நேரம் இதுவல்ல!'என்பதால் தோழியர் அமைதியாக 'வாழ்த்துக்கள்' மட்டும் கூறி அறையில் விட்டுவர.

"தயக்கம், பதற்றம்,பயம் இவற்றோடு இயற்கை அழைப்பும் வருவது போல் ஒரு பிரமை வேறு!" அவளுக்குள்.

உள்ளே நுழைந்தவளை ஒரு பார்வை பார்த்தவன்.அந்த அறைக்குள் இருந்த மற்றொரு அறையை காண்பித்து,
"இனிமே நான் அந்த ரூம்ல தான்
இருப்பேன்.நீ இந்த ரூம்ல இருந்துக்களாம்.
பட் மறந்தும் கூட அந்த ரூமுக்கு வந்துடாத சரியா!" என்றவன்

"குட் நைட் நாளைக்கு காலைல தாத்தாவை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணனும்.சோ சீக்கிரம் கிளம்பனும்!" என்றதோடு தன் அறை நோக்கி சென்றுவிட்டான்.

'ஹப்பாடா' என்றதொரு நிம்மதி பிறந்தாலும்; ஒதுக்கப்பட்ட உணர்வு பெண்ணின் மனதை தாக்க அதனை தடுக்க முடியாது தவித்தாள்.

'தன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவோ!? ஆராயவோ!? அவளுக்கு நேரம் இல்லை. நாளை தாத்தாவை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும்!' என்பதால் உறங்கிப்போனாள்.

எங்கோ சேவல் கூவும் ஓசை கேட்க இருக்கும் இடம் மறந்து வெகு சோம்பலாக எழுந்தாள் ரிதம்.

கூவியது என்னவோ அவள் கைபேசியி்ன் அலாரம் தான்.

எழுந்து இரு உள்ளங்கைகளை பரபரவென சூடு பரப்ப தேய்த்து அதை முகத்தில் ஒற்றி எடுத்து.

அதிலே தன் முகம் பார்த்தவள் மணியை பார்க்க அது காலை மணி நான்கு ஐம்பது என்று காட்ட விரைந்து குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து வந்தவள் சாமி அறைக்கு சென்று விளக்கேற்றி 'அனைவரையும் காப்பாற்று இறையே!!!' என்று ஒரு வணக்கத்தை செலுத்தி.காலை உணவை தயார் செய்ய சமையலறை நோக்கி எட்டு வைத்தாள்.


'காரணம்!?'


அகரன்,வேல் தாத்தா ரிதம் மூவரும் அவளின் கைகளால் தான் உணவு உண்ணுவர் என்பதால்;அத்துடன் இன்று தோழியரும் இருக்க.நவநீ,இக்னேஷை கூட இங்கே உணவுண்ண அழைக்கலாம்‌ என எண்ணி இருந்தாள்.

ஆதலால் காலை உணவுடன் ஒரு இனிப்பு வகை செய்துவிட்டு தாத்தா மற்றும் அகரன் இருவரையும் எழுப்பி அவரவர் வேலைகளுக்கு தயார் செய்துவிட்டு அறைக்கு சென்றவள்...தாத்தாவின் முந்தைய அறிக்கைகள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய முக்கிய பொருட்கள் அனைத்தையும் கைவசம் எடுத்துக் கொண்டு தானும் தயாராக பால்கனி நோக்கி நகர்ந்தாள்.

ஈரக் கூந்தல் காட்டு செடிபோல படர்ந்து இடையை கடக்க.அதன் அடர்த்தி ஈரத்தை விழுங்கி 'காய்வேனா!?' என்று போராட்டம் நடத்த.

காலை இளம் வெயிலில் நின்றிருந்தாள் ரிதம்.

மணி காலை ஏழாக தன் பயிற்சிகள் முடித்து அறைக்கு வந்தான் ஏகன்.

அவன் வெளியே செல்லும் போது அவள் இல்லை.ஆனால் உள்ளே நுழையும் போது இதுவரை இல்லா ஏதோ ஒன்று அவ்வறையில் நிரம்பி வழிவதாக ஒரு மாயை ஆடவனுக்குள் உந்தியது.

'மாயையில் மயங்கா மனிதம் ஏது? அவன் ஏகன் ஆனால் என்ன!? பாகன் ஆனால் என்ன!?'

ஏகனை மயக்கிய மாயை அவனை பால்கனி நோக்கி செல்லத்தூண்ட.

"வெள்ளிப் பனி உருகி,வெண்பாவை வடிவு கொண்டு நின்றதோ!?" என கற்பிதம் கொள்ள செய்யும் 'சிற்பக தாரகையாய்' தன் நீண்ட கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள் ரிதம்.

வெய்யோன் மலைமகள் மடி கிடந்து இரவு கொண்ட கூடலால் சடைவாய் மேலெழும்ப.

அவன் கதிர்கள் பெண்மானின் மூக்குத்தியில் பட்டு பொன்கீற்றாய் சிதறி முப்பரிமாண 'கலாபம்' காட்டி மோட்சம் பெற்றது.

மாயை கண்ட மன்னன் அவன் மதி மயங்கி அவளை நோக்கி ஈரெட்டு வைத்து பின் சுயம் வந்து சூழல் புரிந்து தலையை உலுக்கி கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான்.


'ஏகன் வந்ததோ!?'

'அவன் நொடி பொழுது சுயம் மறந்ததோ!?'

இதில் எதுவும் அறியாத பேதை அறைக்குள் வந்து தலையை சீவி பின்னலுக்குள் அடக்கி,அகரன் குளியல் முடித்து கிளம்பிவிட்டானா!?" என்பதைக் காண செல்ல.


"ஜாமுன்" என்ற அழைப்பிற்கு


தெள்ளு தமிழை தெளிவாய் திரித்து தெளு தேனில் குழைத்து...

"அம்மா....!!!" என்றான் அகரன்.

தேவாமிர்தமாய்,தீங்கனி சுவையாய் காதில் இன்னிசை கீர்த்தனையாய்,ஒலிக்க செய்த பிள்ளையின் முகத்தை அன்னையின் அன்போடு நோக்கிய ரிதம்

"என்னையா அம்மான்னு கூப்பிடுற கண்ணா யார் சொல்லி தந்தாங்க உங்களுக்கு!?" ஆசையோடு கேட்டிருக்க.


'யார் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது!?' அறியும் ஆவல் அவளுள்.

"வேல் தாத்தா இல்ல அவங்க தான் சொன்னாங்க.அம்மாவை அம்மான்னு கூப்பிடனும் தம்பினு சொன்னாங்கம்மா! நான் அப்படியே கூப்பிடவா!?" அனுமதி வேண்ட..

நீராம்பலின் புத்தரும்பு அவ்வாறு கேட்பது 'அவனுக்கு வரமா!?' என்பது தெரியவில்லை.

'ஆனால்!'

ரிதம் அதனை 'வரமாய்' ஏற்றாள்

"அழகு மயிலு அம்மான்னே சொல்லுங்க யாரு உங்களை தடுத்தது!" என்று கேட்டு கொஞ்சிக் கொண்டாடி தீர்த்தாள் அவனை.


தோழியின் வாழ்வில் ஒரு பிடிப்பாக தாத்தாவும்,அகரனும் இருப்பதை கண்டு
தோழியருக்கு பரம நிம்மதி.


நேரம் ரெக்கை கட்டி பறந்திருந்தது.
பிரபா உடன் தோழியர் இருவரும் வர அவரவருக்கு உணவினை பரிமாற.
இக்னேஷ் இல்லத்தில் தங்கிய நவநீயையும் இங்கேயே காலை உணவிற்கு அழைக்க.

அன்றைய காலை உணவு அற்புதமாக ஆரம்பமாகியது அங்கே.

சரியாக ஒன்பது மணிக்கு தாத்தாவை அழைத்துக் கொண்டு வருமாறு ரிதமிடம் ஏகன் கூற.


அவளோ அவன் கூறிய இரண்டே நிமிடத்தில் தயாராகிவிட்டாள்.அவளின் விரைவுக்கு அவனிடம் கிடைத்த சன்மானம் என்னவோ ஒரு 'புருவ உயர்த்தல்' மட்டுமே என்றாக.

சிதம்பரம் தாத்தா தான் கூறினார் "முதல்முறை தம்பதியராக செல்வது கோவிலாக இருக்கட்டும் ஏகா!" என்று கூற முதலில் இருவரும் அகரனுடன் கோவில் சென்று திரும்ப.


அவளுக்கு தான் தெரியுமே மகனுக்கு மருத்துவமனை என்றால் ஆகாத ஒன்று என்று.

அதனால் "மருத்துவமனைக்கு அகரன் வேண்டாம்!" என்று அவனை சிதம்பரம் தாத்தாவிடம் விட்டுவிட்டு தன் தோழியருடன் மருத்துவமனை சென்றாள் ரிதம்.

அங்கோ சென்றவாரம் வெளிநாடு பயணம் சென்ற நரம்பியல் சிறப்பு மருத்துவர் வந்துள்ளதாகவும்; அவரே இன்றைய அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும் கூற மகிழ்ச்சி தான் இவர்களுக்கு.

சரியாக இரவு ஏழு மணிக்கு அறுவை சிகிச்சை நேரம் குறித்திருந்தனர்.

நிவேதாவிற்கு முன்னின்று மாப்பிள்ளை பார்க்கும் உறவுமுறை மாமா ஒருவர் அவளை பார்க்க மாப்பிள்ளை உறவினர் நாளை வர இருப்பதால் 'இன்றே வருமாறு!'
அழைப்பு விடுக்க அவள் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாக.


ரேணு,பிரபா இருப்பதால் தான் சமாளித்துக் கொள்வதாக கூறி இக்னேஷ் உடன் அவளை அனுப்பி வைத்தாள் ரிதம்.

"ஆயிரம் முறை பார்த்துக்கொள். எதுவானாலும் அழைத்து தகவல் கூறு!" என்று கூறி மனமே இல்லாது நகர்ந்தாள் நிவேதா.


அவள் உடல் தான் பயணம் சென்றது.
ஆனால் மனமோ தோழியை தான் சுற்றித் திரிந்தது.


நிவேதா அமைதியாக வர அதை காண பொறுக்காத இக்னேஷ்

"ஏங்க இவ்வளவு அமைதியா வர்றீங்க!?" என்று ஆரம்பிக்க.

அவன் பேசியதை கவனிக்காது தன் எண்ணத்தில் உழன்றவள் அவனின் 'ஏங்க' என்ற பத்தாவது கத்தில் பதனமாக திரும்பி அவன் முகம் பார்த்து

"என்ன மாடி பிடி மாரி மச்சான் உனக்கு என்ன வேணும்!?" என்றாளே பார்க்கலாம்.
அவ்வளவு தான் பிடித்துக் கொண்டான் இக்னேஷ்..

"இந்த..இந்த.. அடைமொழி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!?" என்ற யோசனையில் இருந்தவன் நடு மண்டையில் நச்சென்று எரிந்தது 'சுடரொளி' ஒன்று.

"ஏங்க அப்போ என்னை அன்னைக்கு கால் பண்ணி கலாய்ச்சது நீங்க தானா!?" என்று கேட்ட பிறகு தான் தான் உலறியதை உணர்ந்தாள் நிவே

'மாட்டிக் கொண்டாலும் கூட மீசையில் ஒட்டாத மண்' போல;

"ஆமாம் குடுமி நான் தான் அது.உனக்கு மட்டும் இல்ல அந்த சோடாக்கும் கால் பண்ணது நான் தான்!" என்றாள் துடுக்காக.

அவளின் துடுக்கு பேச்சு அவனை இழுக்க.
அவளுடன் பேச்சை வளர்க்க உள்ளத்தில் ஓர் உவகை உந்தியது.

கடந்த நேரம் எல்லாம் வானூர்தி வேகத்தில் கடக்க பேருந்து நிலையம் வந்திருந்தது.
இறங்குவதற்காக அவள் முயல அவளுக்காக காரின் கதவை திறந்துவிட்டு நிமிர்ந்து நின்ற அவன் தோளில் படர்ந்த கருமுடியும்.தீரம் நிறைந்த தோரணையும் அவனை அழகானாய் காண்பிக்க ஒரு கணம் ரசித்துவிட்டு 'வேறு என்ன பேசுவது!?' என்பது புரியாது "வருகிறேன்!" என்ற வார்த்தையோடு பேருந்து ஏறினாள் நிவேதா.


எதுவும் 'உதவி!' என்றால்; அழைக்குமாரு தங்கள் கைபேசி எண்ணை பகிர்ந்தனர் இருவரும்.

"யாருக்கு உதவும்!?" என்பது தான் தெரியவில்லை.


தாத்தாவிற்கு காலை முதல் இப்பொழுது வரை மருத்துவர் கூறியது போல வெறும் சலைன் மட்டுமே ஆகாரமாக இறங்க.


மாலை ஆறு மணிக்கே தாத்தாவை தயார் படுத்த செவிலியர் அழைத்து சென்றுவிட.

வெளியில் பதட்டம் கொண்டு காத்திருந்தாள் ரிதம்.ஆனால் உள்ளே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன் திறமை பற்றி அங்கிருக்கும் மருத்துவர்கள் கூற கேட்டதால் நம்பிக்கையோடு காத்திருக்க.

அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த கதிர் வாசலில் காத்திருந்த ரிதம் முகம் பார்த்து 'வெற்றி'என்று கையுயர்த்தி காண்பிக்க.

இவளோ கைகளை கூப்பி நின்றாள் அவன் முன்.அவள் கைகளை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றான் மூளைநரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணன் கதிர்.


வேல் தாத்தா வயதானவர் என்பதால் ஒரு மாதம் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்க.

அவரை உடன் இருந்து பார்த்துக் கொள்ள ரிதம் அங்கே தங்க வேண்டிய நிலை.

இரவு முழுவதும் மருத்துவமனையின் வாசம் தான் ரிதமின் ஒரு மாத வாழ்க்கை என்றானது.


ரேணுவோ,"பிரபா அலுவலகம் சென்றதும் மருத்துவமனை வருவாள்... அவள் வந்தபின் வீடு செல்லும் ரிதம்,அதன் பின் மாலை தான் திரும்பி வருவாள்!"


திருமணம் முடிந்த மறுநாள் சென்றவள் 'எப்பொழுது வருகிறாள்!?'என்று வாகன ஓட்டியின் மூலம் தகவல் பெற்றான் ஏகன்.


அகரன் தான் அவள் வரும் நேரம் எதிர்நோக்கி காத்திருக்கும் ஜீவன்.



இந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை ஏகன் வந்து சென்றிருக்க.சிதம்பரம் தாத்தா வாரம் ஒரு முறை வந்து பார்த்து சென்றார்.

சிதம்பரம் தாத்தா உடன் அகரன் வால்பிடித்து வந்துவிடுவான்.



இவளும் தினம் இல்லம் செல்லும் போது அவனுடன் நேரம் செலவு செய்வதோடு.. இடைப்பட்ட நேரத்தில் அகரனுடன் கைபேசி அழைப்பில் காணொளி தொடர்பில் என்று பேசிக்கொள்வர் இருவரும்.அதனால் பிரிவு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை .


ஒருமாத மருத்துவமனை வாசம் முடிந்து தாத்தா உடன் இல்லம் வந்தாள் ரிதம்.


அவள் வந்தவுடன் தாத்தாவை அவர் அறைக்குள் சென்று உறங்க செய்த பிறகு தான் வெளியே வந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்த போது அங்கே காத்திருந்த
நபர்களை கண்டவளுக்கு ஆச்சர்யம் அவர்களை நோக்கி உபசரிக்க செல்ல.

அவர்கள் ஏகன் முகம் பார்த்து கேட்ட கேள்வியில் உறைந்து போனாள் பொற்பேழையள்.

"அப்படி யாரு வந்திருப்பாங்க!?"

"வந்தவங்க என்ன கேள்வி கேட்டிருப்பாங்க அதுவும் ஏகனை பார்த்து!?"
 
"அப்படி யாரு வந்திருப்பாங்க!?"

"வந்தவங்க என்ன கேள்வி கேட்டிருப்பாங்க அதுவும் ஏகனை பார்த்து!?"


இது யாரு புது வேலைக்காரி ? ன்னு கேட்டாங்களோ !!! :unsure: :unsure: :unsure:
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
தாத்தாவுக்கு கதிர் டாக்டர் தான் டிரீட்மென்ட் பண்ணறாரு.

இனி தாத்தா மறக்காம இருப்பாரா? பழையபடி நினைவோடு பேசுவாரா?

வந்தது யாரா இருக்கும்?. வந்த ஆட்களைப் பாத்து ஏன் ரிதம் ஆச்சரியப்படறா?.
ஒருவேளை அந்த சினிமா ஹீரோயினா இருக்குமோ???🙄🙄🙄🙄🙄🙄
ரிதம் உறைஞ்சு போறளவுக்கு கேட்டது அப்படி என்ன கேள்வியா இருக்கும்?🙄🙄🙄🙄
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
தாத்தாவுக்கு கதிர் டாக்டர் தான் டிரீட்மென்ட் பண்ணறாரு.

இனி தாத்தா மறக்காம இருப்பாரா? பழையபடி நினைவோடு பேசுவாரா?

வந்தது யாரா இருக்கும்?. வந்த ஆட்களைப் பாத்து ஏன் ரிதம் ஆச்சரியப்படறா?.
ஒருவேளை அந்த சினிமா ஹீரோயினா இருக்குமோ???🙄🙄🙄🙄🙄🙄

ரிதம் உறைஞ்சு போறளவுக்கு கேட்டது அப்படி என்ன கேள்வியா இருக்கும்?🙄🙄🙄🙄
ஒரே கேள்வி மயமா இருக்கேடா மாயவா😳😳😳😳😳😳😳😳
 
Top