Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 13 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 13 ❤️‍🔥


"இரவில் உலவும் வான்மகளின் துணை என அவள் இருக்க

தீண்டி செல்லும் தென்றலும் கூட அவளின் சிந்தை மயக்கவில்லை!

வெட்கம் கொண்டு வாடி செல்லும் தென்றலே இந்த ரிதம் ராகம் சேரும் காலம் சொல்வாயோ!?"


சிந்தனை சிந்தனை சிந்தனை தான் அவளுக்கு சிந்திக்க வேண்டிய தேவை இருந்தது.

'இது சரியா!?'

'நாளை அவன் இதே போல் தன்னை பேசினால்!?'

'பேசினால், என்ன பேசினால்!?அவன் பேசினால் இந்த வீட்டை விட்டு உடனே வெளியேற வேண்டியது தான்!'

'பரஸ்பரம் அறிந்து புரிந்து தொடங்கும் உறவு இதுவல்லவே; பிறகு என்ன தயக்கம்!?'

இதுமட்டும் தான் அவளுக்கு தோன்றியது.

'எதுவந்தாலும் வரும்போது பார்த்து கொள்வோம்!' என்று உறங்கியவள் காலை விடியலில் எழுந்து கொண்டாள்.

காலை குளியலை முடித்து தோட்டத்து பூக்கள் பறிக்க செல்ல.

அங்கே தாத்தா,ஏகன், அகரன் மூவரும் இடைவெளிகள் விட்டு ஆசனம் செய்திருந்தனர்.

சிதம்பரம் தாத்தா இரு கரங்களை தரையில் ஊன்றி அந்தரத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்க.

குட்டியோ பாதமும்,தலையும் தரையைத் தொட உடலை மேல் நோக்கி தரையில் படாது கிரிவாசனம் செய்திருந்தான்.

நாயகனோ கையில்லா பனியனில் தன் உடலின் கட்டுக்களை மறைத்து தன் கைகளில் மொத்த சக்தியையும் திரட்டி,தரையில் கைகளை ஊன்றி,பக்கவாட்டில் கால்களை காற்றில் இணைத்து எட்டு-கோண நிலையில் அஸ்தவக்ராசனம் செய்திருந்தான்.

மூவரின் வெவ்வேறு ஆசனங்களில் காற்றில் பறந்தவாறு நின்ற கோலம் அவளின் கண்களை கவர்ந்தது.

அதிலும் குட்டி இந்த வயதில் இத்தனை அழகாக ஆசனம் செய்வது ஆச்சர்யம் என்றால்;எழுபது வயதில் தாத்தா ஆசனம் அதுவும் காற்றில் மிதக்கும் படகு போல இருப்பது அதிர்ச்சியாக இருந்தது.

'ஏகன் புறம் திரும்பாதே!' என்று மூளை கூற கண்கள் கள்ளமாய் திரும்பியது அவன் புறம்.

ஆசனம் செய்யும் பொழுது அவன் அணிந்த பனியன் அவன் கட்டுக்களை வெளிகாட்டி கண்காட்சி நடத்திட.

'ம்ஹிம்' எனும் பெருமூச்சு அவளிடம்.


ஒரு நொடி கிருஷ்ண லீலா அன்று அவனை ரோமன் சிலையென கண்டு 'மயங்கிய' ரிதமாக மாறிப்போனாள் பெண்ணவள்.


"வித்தைக்கார கும்பலா இருக்கே அடுத்து கம்பிமேல நடப்பாங்களோ!?"

என்றவாறு வந்தவள் தோட்டத்தில் கிடந்த கல்மேடையில் அமர்ந்துவிட்டாள்.

பூக்கள் பறிக்க வந்த பூங்காரிகை வெளியில் அகரனை ரசிப்பதாக பெயர்
பண்ணினாலும் கண்கள் 'கபடம் ஆடி' ஏகன் புறம் கொண்டு சென்றது.

ஆசனம் முடிக்கும் வரை அகரன் கவனம் கூட திசை திரும்பவில்லை. அத்தனை மன உறுதி இந்த சிறு வயதில் வியந்து போனாள்.

சரியாக மணி ஏழு என கைபேசி இசை எழுப்ப மூவரும் எழுந்தனர்.

அகரன் முதல் ஆளாய் வியர்வையை துடைத்துக் கொண்டு ரிதம் புறம் ஓடினான் 'ரசகுல்லா' என்ற அழைப்புடன்.

தன்னை நோக்கி தாவி வரும் பிள்ளையை இருகரம் நீட்டி அள்ளி எடுத்தாள் ரிதம்.

"என்னடா ஜாமுன் யோகாவா!?"

கேள்வி என்னவோ பிள்ளையிடம் என்றாலும்; ஓரவிழி பார்வை அப்பன் புறம் கள்ளமாய் மீண்டு வந்தது.

அதை தடுக்க வழி அறியாத பேதை அப்பன் புறம் கள்ளப்பார்வையும்; பிள்ளை புறம் அன்பு பார்வையும் வைத்துப் பேச்சை தொடங்க.

"ஆமாம் ரசகுல்லா இது டெய்லி ரொட்டின்!" என்றதில் மலைத்து பார்த்தாள்.

'ஏனென்றால்!?'

அவனுக்கு மூன்று வயது கூட முழுமையாகாத நிலையில் இத்தனை தெளிவாய் அவன் பேசுவதே ஆச்சர்யம் என்றால்;

யோகா செய்வது அவன் டெய்லி ரொட்டின் என்றால் அப்படி எத்தனை வயதில் இருந்து அவன் இந்த பழக்கத்தை கடைப்பிடிக்கிறான் எனும் கேள்வி எழ.

"ஜாமுன் அப்போ எத்தனை நாளா யோகா பண்றடா பட்டு!?" கேட்டேவிட்டாள் அவள்

"அதுவா! நான் ஒரு டூ மந்த்ஸ்ஸா தான் கத்துட்டு இருக்கேன்" என்றான் பிள்ளை.


அவள் தாத்தா உடன் காரைக்குடி வந்த பின்னான நடுத்தர சூழலில் இது எல்லாம் அவளுக்கு கனவுகளாக போனாலும்.

மூன்று வயது சிறுவன் இவ்வாறு இருப்பது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஏதோ நிவேதாவின் அன்னை தயவால் பாடல்,நடனம் இரண்டும் கற்று தேர்ந்தாள் இல்லை எனில் படிப்பை தவிர வேறு ஒன்றும் தெரியாது.

'ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது!' எனும் நிதர்சனம் தாத்தாவை பார்த்துக்கொள்ள பார்த்திருந்த வேலையை விட்டபோது புரிந்தது.

அவள் கற்ற கலை அல்லவா அவளுக்கு பெரிதும் கைகொடுத்தது.

'கை தொழில் ஒன்றை கற்றுக் கொள்! கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!'
என்பது எத்தனை சத்திய வாக்கு என்பதும் புரிந்தது.


வியர்வை துடைத்து காயும் வரை அமைதியாக இருந்த ஏகன்,சிதம்பரம் தாத்தா இருவரும் அதன்பின் எழ.

"குட் மார்னிங் தாத்தா!" என்ற அவளின் உற்சாக வணக்கத்தில்

தானும் புன்னகை முகமாக,"ஆமாம் ரிதம் வெரி குட் மார்னிங்மா என்ன இன்னைக்கு சீக்கிரமா எழுந்தாச்சா!?" என்ற அவரின் கேள்வியை

"இன்னைக்கு சீக்கிரம் விடுஞ்சுடுச்சா உனக்கு!?"

எனும் நக்கலை கண்களில் தாங்கி நின்றான் ஏகன்.

"நேத்து புது இடம் தூக்கம் வரலை தாத்தா அதுதான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்தேன்.இன்னைக்கு அலாரம் வச்சு எழுந்துட்டேன்!" அவருக்கு விளக்கம் கொடுத்தவாரு உள்ளே செல்ல.

"ரசகுல்லா எனக்கு பிரேக்ட ஃபாஸ்ட் பண்றீங்களா!?" எனக்கேட்க

"உனக்கு இல்லாமலா கன்னுகுட்டி!"


இவள் சமையல் அறை நோக்கி செல்ல மூவரோ மேல் தளத்தில் இருக்கும் தங்கள் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டனர்.


ரகுல் சமையல் அறை முதன்மை சமையலாளர்.அவர்தான் கூறினார் இனி சரியாக எட்டு மணிக்கு மூவரும் கீழே வருவர் என்று.

தாத்தா அறைக்கு சென்று அவரை கிளம்ப சொல்லிவிட்டு சமையல் அறை வந்து சமையலில் இறங்கினாள் ரிதம்.

சமையல் அறை உதவும் கரங்கள் மூவரும் இவளை மறுக்க.

இவளோ," நான் எனக்கும், அகரன்,வேல் தாத்தாவுக்கும் மட்டும் செய்றேன் அவருக்கும் தியாகு தாத்தாக்கும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்!" என்று கூறிவிட்டு மடமடவென இட்லி,சட்னி,சாம்பார் என செய்து முடித்து அவள் அமர.

சரியாக வேல் தாத்தா,சிதம்பரம் தாத்தா உடன் பேசிக்கொண்டே இறங்க.

அகரன் நடுவே இறங்க ஏகன் மகனை பார்த்துக் கொண்டே பின்னால் இறங்கினான்.

"ரசகுல்லா சாப்டீங்களா!?" என்றவாறு வந்தான் அகரன்

"இல்லடா குட்டி கண்ணா! இனி தான் சாப்பிடணும். நீங்க சாப்பிட்ட பின்னாடி தான் நான் சாப்பிடணும் வாங்க தங்கம்" என்று அவனை அமர்த்தியவள் அவனுக்கு உணவு பரிமாறியவாறு தன் தாத்தாவிற்கும் வைக்க.

சிதம்பரம் தாத்தாவிற்கு வைக்க செல்ல வேல் தாத்தா தடுத்துவிட்டார்.

"அவனுக்கு அவனே வச்சுப்பான் ரிதம்!" என்றதும் இவள் அமைதியாக ஒதுங்கிக் கொள்ள.

சமையல் அறையில் இருந்து ஏகன், சிதம்பரம் தாத்தா இருவருக்கும் மட்டும் காலை உணவு வந்து சேர்ந்திட,இருவரும் அமைதியாக உண்டனர்.


'ஏன் வேல் தாத்தா தன்னை தடுத்தார்!?' என்ற கேள்வி எழுந்தாலும் அவரிடம் கேட்டு அவரை சிந்தனைக்குள் மூழ்கடிக்க அவள் விரும்பவில்லை.


அதனால் அகரனுக்கு மட்டும் உணவை ஊட்டியவள்,வேல் தாத்தாவிற்கு "என்ன வேண்டும்!?" என்று கேட்டு கேட்டு பரிமாற.

சிதம்பரம் தாத்தாவின் கண்களில் 'சிறு வலி' ஒன்று தோன்றி மறைந்தது.

அதனை ஏகன் கண்டுகொண்டாலும் "யாரால் இந்த சாபக்கேட்டை மாற்ற முடியும்!? மனதை நொந்து கொள்வதை விட; நடப்பதை ஏற்றுக் கொண்டு கடப்பதே சிறந்தது!" என்று அமைதியாகினான்.


"தாத்தா!" என்று அறைக்கு செல்ல முயன்றவரை அழைத்தான் ஏகன்.


"என்ன ஏகா!?" என்றார் அவர்.

ஏகன் நிற்க அவன் அருகே பெரும் இடைவெளிக்கு அப்பால் அகரன் உடன் நின்ற ரிதம் தலையை குனிந்து நிற்க.


புரிந்து கொண்டார் பெரியவர்.தன் வார்த்தை பெண்ணவளின் மனதை ரணமாய் மாற்றி இருக்கும்.

'கண்டிப்பாக இன்று இந்த முடிவு தவறாக தெரியலாம்.ஆனால் காலங்கள் செல்ல அவளே புரிந்து கொள்வாள்!'என்பதை உணர்ந்து

"நல்லா இருங்கப்பா!" என வாழ்த்தியவர்.
மொட்டை மாடியில் இருக்கும் தன் ரகசிய அறை நோக்கி சென்றார்.

அவரின் முக்கிய நேரங்கள் எல்லாம் கழிக்க அவர் தேர்ந்தெடுத்த இடம் அந்த அறை தான்.அதை மிஞ்சிய இன்பம் தரக்கூடிய ஓர் இடம் இவ்வையகத்தில் 'இல்லை' என்பது அவரின் கூற்று.

அப்படி அந்த அறைக்குள் 'என்னதான் இருக்குமோ!?' மணி நேரங்கள் 'ஏன்?' பல சமயம் நாட்களை கூட அந்த அறைக்குள் கடத்துவார்.அப்படி ஒரு அற்புதம் அந்த அறை.அதற்குள் யாரும் செல்வது அவருக்கு பிடிக்காது.

இன்றுவரை அந்த அறையை சுத்தம் செய்வதற்கு கூட யாரையும் அனுமதித்தது 'கிடையாது!' சிதம்பரம் தாத்தா.

மதிய உணவு வேளை கூட அவர் அந்த அறைக்குள் இருந்து வரவே இல்லை.

ஏகன் மாலை வர,அவன் வந்த சிறிது நேரத்தில் அறையில் இருந்து வந்தவர் பேரனிடம் பேசவேண்டும் என்க.


"வாங்க தாத்தா!" என்று இருவரும் தோட்டத்திற்கு செல்லாமல் மொட்டை மாடி சென்றனர்.


"உனக்கு உண்மையா ரிதமை பிடிச்சிருக்கா ஏகா!?"

இப்பொழுது கேள்வி எல்லாம் அவன் புறம் மட்டுமே. அவளுக்கான வினா விடை தான் முன்பே முடிந்து இருந்ததே அதனால்.

"எனக்கு அவளை பிடிக்கலை தாத்தா. ஆனா! அகரன் அவனை நான் யோசிக்கணும் தாத்தா.அவன் அவகிட்ட ஒட்டிகிட்டான் நமக்கு இதை விட வேற என்ன வேணும் சொல்லுங்க!?" என்றான்.

அவருக்கும் ஏகன் எதை எண்ணி மருகினான் எதற்காக இந்த முடிவிற்கு
வந்திருக்கிறான் என்பது புரிந்ததால் தலை அசைத்து ஏற்றவர்.

"அந்த பொண்ணோட வாழ்கை பத்தி யோசிச்சியா தம்பி !?"

"இதுல யோசிக்க என்ன தாத்தா இருக்கு!? அவ அகரனை பார்த்துகிட்டா. நான் வேல் தாத்தாவை பார்த்துப்பேன்!" என்றான்.

அவன் வேல் தாத்தாவை பற்றி பேசியதும் பெரியவருக்கு கோபம் வந்தது.


"நீ என்ன நினச்சுட்டு இருக்க ஏகா!? அவன் என்னோட நண்பன் அவனை நீ பணயமா வச்சு உன் காரியத்தை சாதிக்க
நினைக்காத.அவனை பார்த்துக்க எனக்கு தெரியும்!"

கடுமையாக பேசி,தன் நட்பின் பிணைப்பை நிரூபித்தார்.

"சாரி தாத்தா! ஆனா எனக்கு இதை தவிர வேற எதுவும் பெஸ்ட்டா தோனல.அதுதான் அப்படி அவகிட்ட சொன்னேன் தாத்தா!" தவறை ஒப்புக்கொண்டு நிற்க.


"என்னை பொறுத்தவரை ரிதம் தான் இந்த வீட்டுக்கு ஏத்த பொண்ணு ஏகா!"


"என் லைஃப்ல இனி வைஃப்னா அது இவ ஒருத்தி மட்டும் தான்.அதுல எந்த மாற்றமும் இல்லங்க
தாத்தா!"


"எப்போ மேரேஜ் வைக்கிறதா இருக்க ஏகா!?" என்று பெரியவர் கேட்க.


பேரன் கூறிய செய்தி தாத்தாவிற்கு ஏற்புடையதாக இருக்க.இருவரும் சேர்ந்து சில திட்டங்கள் தீட்டிட அதன் படி திருமண ஏற்பாடு நடந்தது அங்கே.
 
"இதுல யோசிக்க என்ன தாத்தா இருக்கு!? அவ அகரனை பார்த்துகிட்டா. நான் வேல் தாத்தாவை பார்த்துப்பேன்!" என்றான்.

ப்பாஹ்... எவ்ளோ anti-romanticஆன ஒரு ஒப்பந்தம்....வாழ்க
😇😇😇🤝🤝🤝🫶🫶🫶
 
கேள்வி என்னவோ பிள்ளையிடம் என்றாலும்; ஓரவிழி பார்வை அப்பன் புறம் கள்ளமாய் மீண்டு வந்தது.

ஹையோ.... வைஷுமா,


டண்டணக்கா இப்போவே ஆரம்பிருச்சு போலவே...... 🤪🤪🤪🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️
 
ஹையோ.... வைஷுமா,

டண்டணக்கா இப்போவே ஆரம்பிருச்சு போலவே...... 🤪🤪🤪🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️
நானுமே நம்மாளு 😎😎😎😎கெத்தா அவனைய சுத்தவப்பான்னு பாத்தேன். இந்த பக்கி அவனைய கள்ளப் பார்வை பாத்து நம்மளை கவுத்துவுட்டுரும் போல.
images-89.jpeg

 
அருமையான பதிவு 😍 😍 😍 😍. பரவாயில்லை ஈரோக்கு ரொமான்ஸ் தான் வரலைன்னு பாத்தேன்.🫤🫤🫤
ஆனா தாத்தா கேட்டதுக்கு டீல் பேசிய உண்மையச் சொல்லிட்டான்.🙎‍♀️🙎‍♀️🙎‍♀️
தாத்தா டபுள் கிரேட் நட்புக்காக பேரனையே கோவிக்கிறாரு.🤝🤝🤝
பாக்கலாம் டா ஆனானாப்பட்ட ரிஷிகளே இறங்கி வந்திருக்காங்க. நீயெல்லாம் எம்மாத்திரம் சுண்டைக்கா பையன்( சுமி சிஸ் உபயம்)😆😆😆
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍. பரவாயில்லை ஈரோக்கு ரொமான்ஸ் தான் வரலைன்னு பாத்தேன்.🫤🫤🫤
ஆனா தாத்தா கேட்டதுக்கு டீல் பேசிய உண்மையச் சொல்லிட்டான்.🙎‍♀️🙎‍♀️🙎‍♀️
தாத்தா டபுள் கிரேட் நட்புக்காக பேரனையே கோவிக்கிறாரு.🤝🤝🤝
பாக்கலாம் டா ஆனானாப்பட்ட ரிஷிகளே இறங்கி வந்திருக்காங்க. நீயெல்லாம் எம்மாத்திரம் சுண்டைக்கா பையன்( சுமி சிஸ் உபயம்)😆😆😆

எதுக்கும், வைஷுமா,

நம்ம ரிதம் கொஞ்சம் அடக்கி வாசிச்சு தன்னோட டிமாண்டை காட்டிகிட்டா நல்லது....

இல்லேன்னா அந்த ஆணவ ஏகன் இன்னும் ஓவரா துள்ள தொடங்கிடுவான்...... 👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒
 
Top