Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -1

Advertisement

Nice
ஹாய் கண்மணிஸ்:):) மனதில் தோன்றிய கற்பனைக்கு வடிவம் தந்துள்ளென் . ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டாவும். உங்களிடம் இருந்து உதிரும் கருத்துக்கள் சேமித்து என்னை செம்மையுற செய்ய முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் டியர்ஸ் ... முதல் அத்தியாயம் இதோ....



?கைதி -1?

ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தத்தில்
என் மனம் என்னும் சிறையில் கைதி அவள்!!!!!!!

இரவில் பயணம் செய்வதே சுகம்தான். வானெங்கும் இருட்டும், அங்கங்கு மின்மினி பூச்சி போல் மின்னும் நட்சத்திரமும், நிலவு தம்முடனே வருவதுபோல் பிரமையும், பயணத்திற்கு ஏற்றது போல் நம்மை சூழும் குளிர் காற்றும், அதன் சுகமே சுகம் தான். அதிலும் பஸ் பயணத்தை விட ரயிலில் தாலாட்டுடன் பயணம் செய்தால் அந்த பயணமே இனிமையாக இருக்கும். இந்த இனிமையான பயணத்தை ரசிக்காமல் தொலைதூரத்தில் எதையோ தேடுவது போல், எல்லையில்லா வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள் நம் கதையின் நாயகி மிருணாளினி.

லக்ஷ்மணன் மற்றும் கவிதா தம்பதியினரின் காதலுக்கு பரிசாக இரண்டு மகள்கள் பிறந்தனர். மூத்தவள் மிருணாளினி இளையவள் விஷாலினி. லக்ஷ்மணன் பேங்கில் மேனேஜராக பணிபுரிகிறார், கவிதா இல்லத்தரசி, மிருணாளினி அழகிய பதுமை பெண் ஐந்தரை அடி உயரமும், வெள்ளை நிறமும், வளைந்த வில் போன்ற புருவமும், பெரிய கண்களும், கூர்மையான மூக்கும், கொழுகொழு கன்னமும், இயற்கையிலயே சிவந்த அழகிய சிறிய இதழ்களும், இடுப்புவரை இருக்கும் முடியை லெதர் கட் செய்துருக்கும் நவநாகரீக மங்கையவள்.பி.ஈ படித்து முடித்து கால் லெட்டருக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள்.

"இந்தாம்மா பொண்ணு.... பாப்பா...", என்று இருமுறை அழைத்தார் டிடிஆர். அவர் அழைப்பில் சுய உணர்வு பெற்று அவரை பார்த்தாள்.

"டிக்கெட் கொடும்மா" என்றார். அவரிடம் டிக்கெட்டை காட்டி விட்டு டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு வெளியே பார்த்தாள்.

'ஒரு வாரத்துல என் வாழ்க்கை இப்படி மாறி போச்சு, யாருனே தெரியாத ஒருத்தங்க வீட்டுக்கு இப்படி நடுராத்திரியில்ல கிளம்பி போறேனே!!! அவங்க வீட்டுக்கு நான் போறனால அவங்களுக்கும் ஏதாச்சும் பிரச்சனை வந்தா?? என்ன பண்றது??? இப்படி அப்பா, அம்மா, விஷாவ விட்டுட்டு தனியா இருக்குற நிலைமை வந்துருச்சே!!! எல்லாத்துக்கும் நான்தான் காரணம். நான் மட்டும் வாய மூடிட்டு இருந்திருந்தா?? எந்த பிரச்சனையும் வந்திருக்காது. இப்ப என்னால அப்பா, அம்மா, விசா மூணு பேரும் யு.எஸ் போறாங்க. நான்... நான்.. தனி ஆளா நிக்கிறேன். ஒரு வாரத்துக்கு முன்னாடி நான் இப்படி தனிமரமா நிப்பேன்னு யாராச்சும் சொல்லியிருந்தா சிரிச்சுருப்பேன் ஆனா இப்ப....? ' என கலங்கிய கண்களுடன் ஒரு வாரத்திற்கு முன் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள்.

(பிளாஷ்பேக் ஸ்டார்ட்)

"அம்மா... அம்மா..." என்று சத்தம் போட்டாள் நம் நாயகி.

"என்னடி விடிஞ்சா போதும் அம்மா.... அம்மானு கத்தி என் உயிர வாங்க வேண்டியது", என கரண்டியுடன் இவர்கள் அறைக்கு வந்தார் கவிதா.

"அம்மா இவள பாரு என் சுடிதார எடுத்து போட்டுகிட்டா", என்றாள் தங்கையை முறைத்துக் கொண்டே.

"அம்மா இவ போன வாரம் அவ ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுற்ற போறப்ப என் டாப்ப போட்டுட்டு போனா, அதனால இப்ப இவ சுடிதார நான் போட்டு இருக்கேன்", என்றாள் முறைத்துக்கொண்டே.

"ரெண்டு பேருக்கும் ரெண்டு அடி போட்டா தான் சரிப்பட்டு வருவீங்க, மிருணா உன் ஃப்ரெண்ட் சுதா கல்யாணத்துக்கு கிளம்பாம என்ன பண்றடி???? விசா காலேஜிக்கு போற ஐடியா இருக்கா??? இல்லையா???" என்று கோபமாக இருமகளையும் பார்த்தார்.

இருவரும் சிரித்துக்கொண்டே "அப்பா!! இன்னிக்கு ரேடியோ ஆன் ஆயிருச்சு" என்று இருவரும் ஹாலுக்கு ஓடிவந்தனர்.

"ஏய்!! நான் ரேடியோவா டி, சமைச்சுக்கிட்டு இருந்தவளை கூப்பிட்டு வம்பு பண்றீங்களா???" என்று கரண்டியால் அடிக்க வந்தார்.

இருவரும் சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த லக்ஷ்மணனின் இருபக்கமும் உட்கார்ந்து," அப்பா ரேடியோ அடிக்க வருது " என்றனர்.

"ஏய்!! உங்கள...." என அடிக்க வந்தார்.

"விடு கவி சின்ன பிள்ளைங்க தானே!! " என்றார் சிரிப்புடன்.

"இவ பி.ஈ படிச்சு முடிச்சுட்டா, இவ பி.ஈ சேர்ந்துட்டா, இதுங்க ரெண்டும் சின்ன பிள்ளைங்களா??? இவங்களோட இம்சை தாங்க முடியலைங்க " என்று கோவமாக ஆரம்பித்து சலிப்புடன் முடித்தார்.

லக்ஷ்மணன் மனைவியின் அவஸ்தையும் பிள்ளைகளின் குறும்பையும் நினைத்து சிரித்துக்கொண்டே," விடுமா நம்ம கூட இருக்குற வரைக்கும் தான் இப்படி, அவங்க இஷ்டத்துக்கு இருக்கட்டும், நம்ம பொண்ணுங்க சந்தோசம் தான் நம்ம சந்தோஷம்!!!" என சமாதானம் செய்துகொண்டு இரு மகள்கள் தோளில் கை போட்டுக் கொண்டார்.

"அப்படிச் சொல்லுங்கப்பா " என இருவரும் செல்லம் கொஞ்சினர்.

"இப்படியே செல்லம் கொடுத்து கெடுத்துறீங்க" என அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, உஷ்.... உஷ்.... என்று குக்கர் தான் இருப்பதை நினைவு படுத்தியது ,"அச்சோ!! நான் குக்கர வச்சதே மறந்துட்டேன்" என அவசரமாக கிச்சனுக்கு சென்றார்.

"மிருணா... விஷா... அம்மாவ தொல்லை பண்ணாதீங்க டா அம்மா பாவம்ல" என்றார் பொறுமையாக.

"அம்மாவோட சுப்ரபாதம் கேட்காம நாளு போக மாட்டேங்குதுபா, என்ன பண்றது????" என்றாள் பொய்யான சலிப்புடன்.

"ஆமாப்பா எனக்கும் அப்படித்தான்" என்றாள் இளையவள்.

"வாலு பிள்ளைங்க", என செல்லமாக இருவர் கன்னத்திலும் தட்டிவிட்டு," மிருணா நேத்து நைட் பெரியப்பா கால் பண்ணுனாரு டா, உனக்கு காலேஜ் முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு , உனக்கு கம்பெனியிலிருந்து லேட்டா தான் கால் லெட்டர் வரும், உன்னைய யூ.எஸ் அனுப்ப சொன்னாரு டா, நீ போய்ட்டு வரியா???? டிக்கெட் போடுட்டா??? " என்றார் பொறுமையாக.

"ம்ம்... யோசிச்சு சொல்றேன் பா " என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, இவள் ஃபோன் ரூமில் அடித்தது."இருங்க பா வரேன்" என்று அதனை சென்று எடுத்து," சொல்லுடா அண்ணா.." என்றாள்.

"இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன் மேரேஜ்க்கு கிளம்பி ரெடியா இரு".

"சரிடா" என வைத்தாள்.

"யாருடி போன்ல??", என அவளிடம் வந்தாள்.

"வேற யாரு அமர் தான் விஷா".

"அமர் அண்ணாவும் கல்யாணத்துக்கு வராங்களா???? அப்ப எனக்கு இன்னிக்கு சாக்லேட் கிடைக்கும். ஆமா அவங்க உன் சீனியர் கூட இல்லையே!!! அப்புறம் எப்படி சுதா அக்கா கல்யாணத்துக்கு வராங்க???" என்றாள் சந்தேகமாக.

"அமர் அண்ணா நான் காலேஜ் உள்ள போறப்ப வெளியில போன சீனியர்டி. அண்ணா என்னைய விட நாலு வயசு பெரியவங்க. அவங்க சர்டிபிகேட் பற்றி பேச காலேஜுக்கு வந்தாங்க. அப்போ தான் என்னையும் சுதாவையும் ராகிங் பண்ண கூப்பிட்டாங்க அண்ணா வந்து அந்த பசங்க கிட்ட இருந்து எங்கள காப்பாத்திதாங்க.அண்ணா எங்க காலேஜ் ஸ்போர்ட்ஸ் கேப்டனா இருந்தாங்க, அதனால சீனியர் எல்லாருக்கும் ஒரு பயம் மரியாத, அப்ப ஜஸ்ட் அண்ணாவ தெரியும். அமர் அண்ணாவோட அப்பா நம்ம அப்பாவோட ஃப்ரெண்டுன்னு எனக்குத் தெரியாது. கோவில்ல நம்ம ரெண்டு ஃபேமிலியும் மீட் பண்ணுனப்ப தான் தெரியும். அப்புறம் என்ன நம்ம அப்பா அம்மா பையன் இல்லைன்னு அண்ணாவ தத்தெடுத்துக்கிட்டாங்க‌. அண்ணா வீட்டுல பொண்ணு இல்லன்னு நம்மள தத்தெடுத்துக்கிட்டாங்க" என பேசிக்கொண்டே தங்கையை திரும்பிப் பார்த்தாள். அவள் இவள் பேசுவதை கண்டு கொள்ளாமல் கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

"ஏய் நாயே!!! உன் கிட்ட தானே சொல்லி இருக்கேன் நீ பாட்டுக்கு என்னைய தனியா பேச விட்டுட்டு வந்துட்ட" என்றாள் கோபமாக.

"ம்ம்.... பின்ன என்ன பண்ண சொல்ற??? சுதா அக்கா எப்படி தெரியும்னு ஒரு கேள்வி தான் கேட்டேன். அதுக்கு நீ இவ்ளோ கத சொல்லிட்டு இருக்க அதக் கேட்டுட்டு நின்னா நான் என் பஸ்ஸ விட வேண்டியதுதான், விட்டுட்டா நீயா வந்து விடுவ!!" என்றாள் நக்கலாக.

"ஏய் என்னடி?? அங்க சத்தம் ,மிருணா குளிக்க போனியா??? இல்லையா???? டி" என சத்தம் போட்டார்.

"அம்மா போயிட்டேன்" என்று வேகமாக பாத்ரூமிற்குள் ஓடினாள். விஷா கிண்டலாக சிரித்துக்கொண்டே கிளம்பினாள்.

மிருணா கிளம்பி வெளியே வரும்போது அமர் அனைவரிடமும் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தான்."ஏன்?? டி புடவ கட்டி இருக்கலாம்ல".

"அம்மா... எனக்கு ஒன்னும் கல்யாணம் இல்ல என் ஃப்ரெண்டுக்கு தான், அதும் இல்லாம என்னைய பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வந்து அங்க நிக்கல புடவ கட்ட, டேய்!! அமர்... அண்ணா போலாமா?? இல்ல இப்படியே பேசிட்டு இருக்க போறியா??" என்று தாயிடம் ஆரம்பித்து அமரிடம் முடித்தாள்.

"போலாம் டா" என்றான் சிரிப்புடன்.

"மிருணா அவன் உனக்கு அண்ணன் டி, இந்த வாடா போடா அமர்னு கூப்பிடுறத எப்பதான் நிறுத்தப் போறியோ!! " என சலிப்புடன் தலையில் அடித்துக் கொண்டார்.

"ட்ரை பண்றேன் மம்மி, பாய் பா, பாய் டி உடன்பிறப்பே!! " என கிளம்பி அமர் பைக்கில் இரு பக்கம் கால் போட்டு உட்கார்ந்தாள். மூவரும் சிரிப்புடன் இருவரை வழியனுப்பினர்.

"ஏன்டா பாப்பா யூ.எஸ் போலாம்னு இருக்கியா டா?? " என்றான் ஒட்டிக்கொண்டே.

"இன்னும் யோசிக்கல பார்க்கலாம்".

"ம்ம்... உன் அண்ணி கால் பண்ணுனா கூடிய சீக்கிரமே எங்கேஜ்மென்ட் இருக்கும் டா" என்றான் சிரிப்புடன்.

"வாவ்.... அண்ணா சீக்கிரம் அண்ணிய கண்ல காட்டு", என்றாள் சந்தோசமாக.

"கண்டிப்பா சீக்கிரமா மீட் பண்ணலாம் டா" என இருவரும் மண்டபத்திற்கு வந்தனர்.

மண்டபத்தில் நுழையும்போதே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர், பெண்ணின் அப்பா யாரிடமோ கெஞ்சுவதும், இவள் தோழி மற்றும் அவள் அம்மா அழுது கொண்டு நிற்பது தெரிந்தது, வேகமாக உள்ளே வந்தாள்.

"நான் கூடிய சீக்கிரம் உங்க கடன் அடைச்சுறேன் தம்பி, என் பொண்ணோட கல்யாணம் முடியட்டும்" என காலில் விழுந்து கெஞ்சினார்.

அவரை காலால் தட்டி விட்டு, "உன் கிட்ட பணம் கொடுக்குறப்ப என்ன சொன்னேன்??? ஆறு மாசம் தான் டைம்னு சொன்னனா?? இல்லையா?? இப்ப பணம் வாங்கி ஏழு மாசம் ஆச்சு நீ வட்டியும் தரல அசலும் தரல இத பார்த்துக் கிட்டு அமைதியா இருக்க, நான் என்ன கேனையனா??? சிவாடா டேய்!!! அந்த கத்திய குடுடா, கத்திய எடுத்தான் பயம் வரும்" என்று அடியாட்களிடம் இருந்த கத்தியை வாங்கி குத்த வந்தான்.

மிருணா குறுக்கே வந்து நின்று, அவன் கன்னத்தில் அறைந்து, "பணத்துக்காக கொள்ளுவியா?? ஒரு உயிர் பூமிக்கு வர ஒவ்வொரு தாயும் எவ்ளோ கஷ்டப்படுறாங்க, அப்படிப்பட்ட உயிர நொடியில எடுக்க பார்க்குற" என்றாள் கோபமாக.

"ஏய்.." என அடியாட்கள் அவளை வெட்ட நெருங்கினர். அந்த தலைவன் ஒரு கையை ஓங்கி தடுத்து அவளை கூர்மையாக பார்த்தான்.

"மிருணா என்ன பண்ற??? வா போலாம்" என்று அமர் வேகமாக வந்து அவள் கையை பிடித்து இழுத்தான்.

"என்னைய முதல்ல விடு " என அவன் கையை எடுத்துவிட்டு, "என்னடா மிரட்டுறீங்களா??? போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடுவேன். பணத்த எடுத்துகிட்டு ஓடிய போய்ட்டாங்க இங்க தானே இருக்காங்க, எங்க உன் பணத்த வச்சு செத்துப் போன உயிர திரும்பி கொண்டுவா பார்க்கலாம்!!!" என்று கோபமாக ஆரம்பித்து நக்கலாக முடித்தாள்.

அந்த தலைவன் அமைதியாகவே அவளைப் பார்த்தான். "ஆங்கிள் எவ்ளோ பணம் தரனும்??" என்றாள் அவரிடம்.

"அஞ்சு லட்சம்மா நகை வாங்க தான் வாங்குனேன்" என்றார் கலங்கிய குரலில்.

"விவேக் அண்ணா இந்த நகை இருந்தா தான் சுதாவ கல்யாணம் பண்ணுவீங்களா??" என்றாள் சுதாவின் வருங்கால கணவரிடம்.

"என்ன மிருணா இப்படி கேக்குற?? எனக்கு சுதா தான் முக்கியம் இதெல்லாம் நான் எதிர் பார்க்கல", என்றான் உண்மையாக.

"அம்மா சுதாவோட நகைய எடுத்துட்டு வாங்க", என்றாள் அவரிடம். அவர் வேகமாக சென்று எடுத்து வந்தார்.

அதை வாங்கி அந்த ரவுடி தலைவனின் கையை பிடித்து கையில் வைத்து, "இத வச்சு பணத்த எடுத்துக்கோங்க, பணம் அதிகமா இருக்குன்னு பணத்த சாப்பிட முடியாது. இந்த கல்யாணத்த பார்த்துட்டு சாப்பிட்டுட்டு போங்க!!",என நக்கலாக சொல்லி விட்டு, "என்ன எல்லாரும் அப்படியே நீக்கிறீங்க?? சீக்கிரம் மேடைக்கு போங்க, சுதா வா டி" , என்று அழைத்து சென்றாள். ரவுடிகள் அனைவரும் வெளியே சென்றனர்.திருமணம் நல்லபடியாக முடிந்தது.

"மிருணா கல்யாணம் தான் முடிஞ்சுருச்சே வா உடனே போகலாம்" என அழைத்தான்.

"அமர் வெயிட் கல்யாணத்துக்கு வரதே சாப்பிறதுக்கு தான் சாப்பிட்டு போலாம்" என்றாள் சிரிப்புடன்.

"நீ பண்ணுன வேலைக்கு நானே பயத்துல இருக்கேன், உன்னைய அந்த ரவுடி என்ன பண்ணுவான்னோ!! வா முதல்ல போலாம்" என கையை பிடித்து இழுத்தான்.

"போடா லூசு அவனுங்களுக்கு போய் பயந்து கிட்டு, நான் பேசுன பேச்சுக்கு பதில் கூட சொல்ல முடியாமல் ஓடி போயிட்டாங்க" என்றாள் சிரிப்புடன்.

"நீ பேசுனது சாதாரண ரவுடி இல்லடி, சென்னையிலயே நம்பர் ஒன் ரவுடி சிவா. முதல்ல வா கிளம்பலாம். இனிமே உனக்கு பாடி காட்டா இருக்குறது தான் என் வேலையா இருக்க போகுது" என்றான் கோபமும் பயமுமாக.

"அப்ப சாப்பாடு" என்றாள் பாவமாக அவன் கையை எடுத்து விட்டு.

"வா பிரியாணி வாங்கி தரேன்" என்று வெளியே அழைத்து வந்தான். வெளியே வந்ததும் இருவரும் அதிர்ந்து நின்றனர்.

"என்ன செல்லம் அதிர்ச்சியா பார்க்குற உனக்காக தான் வெளியே நிக்கிறேன்" என்றான் பக்கத்தில் வந்து அந்த ரவுடி கூட்டத்தின் தலைவன் சிவா.

"எனக்காக நீ எதுக்கு நிக்கணும்??" என்றாள் கோபமாக.

"பின்ன என்ன பண்றது?? மண்டபத்துக்குள்ள வந்தா உனக்கு பிடிக்காது, அதுக்காக தான் இங்க நிக்கிறேன். ஆமா இவன் யாரு??? உன் லவ்வரா???? ம்ம்... எவனா வேணாலும் இருந்துட்டு போகட்டும், இனிமே உனக்கு லவ்வர்.. புருஷன்.. எல்லாம் நான் மட்டும்தான்" என்றான் அவள் கண்களைப் பார்த்து.

இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். அமர் முதலில் சுய உணர்வு வந்து, "ஹலோ?!! என்ன வம்பு பண்றீங்களா??? ஈவ்-டீசிங்னு கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்", என்றான் கோபமாக.

"ஏய்!! இன்னைக்கு நான் நல்ல மூடுல இருக்கேன், என் வருங்கால மனைவிய பார்த்துட்டேன். சின்ன பையன் ஓடிப் போயிடு இனிமே இவ கூட சுத்துற பார்த்தேன் அவ்வளவுதான் " என கர்ஜித்தான்.

"டேய்?? யாருடா நீ?? உன்னைய நான் கல்யாணம் பண்ணுவேன்னு பகல் கனவு காணாத, ரௌடினா பயந்துடுவேனா, நீ நினைக்கிறது நடக்காது" என்றாள் கோவமாக.

"இங்க பாருங்க சார் இவ உங்கள அடிச்சது தப்பு தான், அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், இதோட இந்த பிரச்சனைய விடுங்க", என்றான் லேசான கெஞ்சலுடன்.

"டேய்!! இவன்ல ஒரு ஆளுன்னு இவன் கிட்ட போய் கெஞ்சுற, நகரு முதல்ல, வா அமர் நாம போகலாம் " என அவன் கையை பிடித்தாள்.

சிவா அடியாள் கையில் இருந்த கட்டை பிடுங்கி அமர் தலையில் அடித்தான்."ஆ...." என்று தலையில் கை வைத்து கத்தினான். லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது.

"அண்ணா.." என்று அலரி தன் சாலால் அவன் தலையில் வேகமாக கட்டினாள்‌.

"ஓ... அண்ணானா நீ அவன் கைய பிடிக்கவும் நான் தப்பா நினைச்சு இவன அடிச்சுட்டேன், என்ன செல்லம் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?? இனிமே நீ எதுக்காகவும் அழக்கூடாது. நான் பதினைந்து வயசுல்ல இருந்து இந்த தொழில் பண்ணுறேன். எத்தனையோ பொண்ணுங்கள அனுபவிச்சு இருக்கேன் ஆனா யாரையும் பொண்டாட்டியா ஆக்கிகணும்னு நினைச்சது இல்ல, உன்னைய பார்த்ததும் எனக்கு நீதான் பொண்டாட்டி ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். அது என்னடா சொல்லுவாங்க???" என்றான் அவன் ஆட்களிடம்.

"லவ் அண்ணா...." என்றான் தலையை சொரிந்து இழித்துக்கொண்டே ஒருவன்.

"ஆ... உன்னைய நான் லவ் பண்றேன், உன்னைய பார்த்த சந்தோஷத்துல இருக்கனால உன் அண்ணேன் தலையில லேசா அடிச்ச தோட விட்டுறேன் இல்லனா தலையையே!! எடுத்திருவேன்" என்றான் இழிப்புடன்.

"என்ன மிரட்டுரியா??? இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல, நகரு முதல்ல அண்ணா போலாம்" என்றாள் அவனிடம்.

"உன்னைய போய் நான் எப்படி மிரட்டுவேன் செல்லம் ?? நான் என்ன நினைக்கிறனோ அதுதான் நடக்கும். நீ நினைச்சாலும் மாத்த முடியாது",என்றான் சவாலாக.

"பார்க்கலாம் டா என்னைய பத்தி என்ன தெரியும் உனக்கு?? வந்துட்டான் பேச" என்றாள் கோபமாக.

"உன் பேரு மிருணாளினி , உன் அப்பா லக்ஷ்மணன் பேங்க் மேனேஜர் இருக்காரு , உன் அம்மா கவிதா வீட்டில தான் இருக்காங்க, உன் தங்கச்சி விஷாலினி இப்ப தான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா. போதுமா இல்ல இன்னும் வேணுமா?? நான் சிவா.. இந்த சிட்டியே கைவிரலை வச்சிருக்கவன். உன்ன பத்தி கண்டுபிடிக்கிறது எனக்கு ஒரு விஷயமே இல்ல. மாமா முறைப்படி வீடுக்கு வந்து பேசுறேன் செல்லம், வரட்டா...!" என கன்னத்தில் தட்டிவிட்டு சென்றான். இருவரும் அதிர்ச்சியுடன் அவன் போவதை பார்த்தனர்.

மிருணா சிவாவிடம் இருந்து தப்பிபாளா??? அல்லது அவன் மனைவியாக மாறுவாளா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....

?கைதியின் சிறை தொடரும்?.........

[/QUOT
 

Advertisement

Latest Posts

Top