Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-15

Advertisement

Miloni

Active member
Member
சைதன்யா அப்போதுதான் மிதுர்வனை கவனித்தாள் அவனையே பார்க்க அவள் பார்வையை தொடர்ந்து பார்த்த அனைவரும் மிதுர்வனை கண்டு மிது எப்போது வந்தாய் உள்ளே வா ஏன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாய் என்றனர்..

உள்ளே வந்தவனை பார்த்து மிது உன்னுடைய முகத்திலிருந்து ஏதோ வழிகிறது துடைத்துக் கொள் என கர்ச்சீப்பை நீட்டி கிண்டல் செய்தான் கண்ணன்..

புன்னகையுடன் எதிர் சோபாவில் அமர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பிறகு கண்ணனை பார்த்து எனக்கு பரவாயில்லை கண்ணா கர்ச்சீப்போடு போனது ஆனால் உன்னால் வழியெல்லாம் வெள்ளம் அதில் நீந்தி வருவதே பெரும் பாடாக போனது எனவும் இம்முறை கண்ணன் முகம் சிவந்தான்..

என்ன மச்சான் என் தங்கைக்கும் சேர்த்து நீயே வெட்கப்படுவாய் போலிருக்கிறது..

அங்கேதான் அதற்கு வாய்ப்பே இல்லையே நாமாவது செய்வோம் என்றுதான் எனவும் சனா கண்ணனை முறைத்து உங்களை அப்புறம் வைத்துக் கொள்கிறேன் என சைகை செய்தாள்..

கிண்டல் செய்த அண்ணனையும் முறைத்து அவன் வந்ததிலிருந்து குனிந்த தலை நிமிராமல் இருந்த சைதன்யாவை ஒரு பார்வை பார்த்து உனக்கு கவலை இல்லை அண்ணா அண்ணி உனக்கும் சேர்த்து வெட்கப்படுவாள் போல என கண்ணடித்தாள்..

அவள் கூறியதில் நிமிர்ந்த சைதன்யா மிது சனாவை கண்டிக்கும் பார்வை பார்த்ததில் குழம்பிப் போனாள்..

எதற்காக கண்டிக்கிறான் ஒருவேளை எல்லோருக்கும் முன்னால் சொன்னதாலா இல்லை யாரைப் பற்றி யாருக்கு தெரியக்கூடாது என நினைக்கிறான்..

மேலும் அதைப் பற்றி யோசிக்கும் முன் மரகதம் வந்து அனைவரையும் பூஜைக்கு வருமாறு அழைத்தார்..

அவர்கள் வீட்டு பூஜை அறை அழகாக இருந்தது பூஜை முடிந்து அனைவரையும் சாப்பிட அழைத்தார் குடும்பத்தினருடன் சாப்பிட அழைத்ததால் கிறிஷ்டியும் சைதன்யாவும் தயங்கினர்..

நீங்கள் முதலில் சாப்பிடுங்கள் நாங்கள் அப்புறம் சாப்பிட்டு கொள்கிறோம் என கிருஷ்டி சொல்லவும் பரவாயில்லைம்மா நீங்களும் எங்கள் வீட்டுப் பெண்களைப் போலத்தான் தயங்காமல் வாருங்கள் என அழைத்தார் மரகதம்..

அவர்கள் மேலும் தயங்கவும் நிரஞ்சனா அவர்களிடம் வந்து தன்யா என்ன இது நான் உன்னை எனது கெஸ்ட் ஆகவும் தான் இங்கே இன்வைட் செய்திருக்கிறேன் என்பதை மறந்து விட்டாயா..

நியாபகம் இருக்கிறது சனா நாங்கள் உங்களிடம் வேலை செய்பவர்கள் நீங்கள் எங்களை அப்படி நினைக்கவில்லை என்றாலும் உங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என எனது நினைத்து தான் தயங்குகிறோம்..

இது எங்கள் வீடு தனு நீங்கள் என்னுடைய கெஸ்ட் அதோடு அண்ணனுக்கு வேண்டியவர்கள் எனும் போது யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.. அதோடு எங்கள் குடும்பத்தில் யாரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல எல்லோருமே உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் போய் உட்காருங்கள்..

எல்லோரும் வற்புறுத்தவும் வேறுவழியில்லாமல் டைனிங் டேபிளில் காலியாக இருந்தது சேரில் இருவரும் அமர்ந்தனர்..

தன்யா அருகில் யாரோ அமர்வது தெரிந்தது யாராவது அவர்கள் வீட்டுப் பெண்ணாக இருக்கும் என நினைத்து கிறிஸ்டியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு பார்த்தால் எல்லோரும் அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகு எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தனர்..

எதற்காக இப்படி பார்க்கிறார்கள் என யோசித்து அவள் பக்கத்தில் அவளுக்கு நெருக்கமான வாசனையாக தோன்ற டக்கென திரும்பினால் அவளது அருகில் மிது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்..

ஒருமுறை இதயம் நின்று துடித்தது எல்லோருக்கும் முன்னால் அவள் அருகில் அமர்ந்ததால் கூச்சமடைந்தாள் ஆனால் யாரும் இவர்களை கண்டுகொண்டதாக தெரியவில்லை..

அதுவரை சாப்பாடு ருசியில் கடகடவென சாப்பிட்ட தன்யா இவனை அருகில் பார்த்தவுடன் நெளிய ஆரம்பித்தாள்..

அவளை கவனித்துவிட்டு என்னம்மா சாப்பாட்டை அளந்து கொண்டிருக்கிறாய் நன்றாக சாப்பிடு என மரகதம் சொல்லவும் அவன் அவளைத்தான் பார்த்தான்..

சரி என தலையசைத்து விட்டு குனிந்த தலை நிமிராமல் சாப்பிடும் அவளைப் பார்த்துவிட்டு மரகதம் மிதுவை முறைத்தார்..

அவரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு அவள் கடித்துவிட்டு வைத்திருந்த ஸ்வீட்டை யாரும் பார்க்கும் முன் எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்..

அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவன் அவளுக்கும் ஒரு முறை கண்ணடித்தான் அவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது இதற்கு மேல் உட்கார முடியாது என நினைத்து இலையை மூடி விட்டு எழுந்துவிட்டாள் அப்பொழுது மரகதம் அவனை பார்த்து முறைப்பதை பார்த்தாள்..

எதற்காக முறைக்கிறார் எல்லோருக்கும் முன்னால் அவளருகில் அமர்ந்ததால் முறைக்கிறாரோ இருக்கும் தனக்கே அவன் அமர்ந்தது அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது மீண்டும் குழம்பி சீக்கிரம் இங்கிருந்து கிளம்பினால் போதுமென நினைத்தாள்..

சாப்பிட்டுவிட்டு ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒரு புறமும் பேசிக்கொண்டிருந்தனர்..

வந்தவேலை நியாபகம் வர கிறிஸ்டியை அழைத்து முதலில் ஆண்களுக்கான ஆடைகளை தேர்வு செய்யலாம் என ஆண்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள்..

அங்கு சென்று அவர்களிடம் அவர்களுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்க சொன்ன போது பெரியவர்கள் பைஜாமா போன்ற உடைகளையும் இளையவர்கள் மிது சொன்ன கோட் சூட் மாடலையும் செலக்ட் செய்தனர்..

அவர்களுக்கு எல்லாம் என்னவோ மிது சொல்வது வேத வாக்காக இருந்தது அவன் செய்வது எல்லாம் சரியாக இருக்கும் என நம்பினார்கள்..

அவனின் ஒரு சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படுவார்கள் என்பது நன்றாக தெரிந்தது அவன் ஒரு சொல்லுக்கு இங்கு பெரிய மரியாதையே இருக்கும் போல குடும்பத்தில் பெரும்பாலான முடிவு இவனுடையது தான் போல..

உங்களுக்கு எல்லோருக்கும் இதேபோல உடையே போதுமா எல்லோரும் ஒரே மாதிரியான உடையையே செலக்ட் செய்திருக்கிறீர்களே..

மிது தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும் என்பது எங்களது எண்ணம் மற்றும் அனுபவமும் கூட எங்களை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் எல்லோரும் அவனைப் பின்பற்றி தான் வழக்கம்..

அவள் பார்வை மெச்சுதலாக உயர்ந்த போது அவன் காலரை தூக்கி விடுவது போல செய்து புருவம் உயர்த்தினான்..

எனது செலக்க்ஷன் எப்போதும் சரியாகத்தான் இருக்கும் என அவன் அவளை பார்த்த போது மனது படபடப்பாக இருந்தது எல்லோரிடமும் தலையாட்டி விட்டு அங்கிருந்து வந்து விட்டாள்..

பெண்களின் பகுதிக்கு வந்து ஆண்கள் சொன்னதை சொன்னபோது அவர்களும் அதையே ஆமோதித்தார்கள்..

எல்லா ஆண்களுடைய உடைகளின் சர்ட் கலரை அவர்கள் துணைவியரே செலக்ட் செய்தனர் கண்ணனுக்கு நிரஞ்சனா செலக்ட் செய்தாள்..

பிறகு பெண்களுக்கான ஆடைகளை தேர்வு செய்ய கேட்டபோது பெரியவர்கள் ஒரிரு சின்ன வேலைப்பாடுகள் செய்யச் சொல்லி ஒதுங்கி கொண்டனர்..

இளைய பெண்கள் தான் ஆர்வமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்தார்கள்.. எல்லோருக்கும் அளவு எடுத்து முடித்து அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான டிசைன்களை தேர்ந்தெடுத்தனர் அவர்கள் கேட்ட ஒரு சில டிசைன்களை அங்கேயே வரைந்து காட்ட அவர்களும் அதையே தேர்ந்தெடுத்தனர்..

எல்லாம் முடித்தபோது டக் டக் என்று வீடே அதிரும் சத்தத்தில் யாரோ வருவது தெரிந்தது..
 
அடேய் மிதுர்வன் நீ ரொம்பவும் ஓவராத்தாண்டா பண்ணுறே
யாருப்பா வந்தது?
வில்லியா?
 
Top