Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 5 2

Advertisement

Admin

Admin
Member
ஆத்மன் அதை கேட்டுக் கொண்டிருந்தாலும் எதுவும் பேசவில்லை அவளை பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த ஆராய்ச்சி ராஜராஜனிற்கு கொஞ்சமும் பிடித்தமில்லை.

ஆத்மன் அவளை ராஜலக்ஷ்மியின் மகளாய் பார்த்தார், ராஜலக்ஷ்மியின் முகம் சத்தியமாய் அவருக்கு நினைவில் இல்லை. இப்போது அங்கையை பார்க்கவும் அவளிடம் ராஜலக்ஷ்மியை தேடினார், இது எனக்கு பெண் பார்த்த முகமா என்பது போல.

ஐயகோ, அப்படி எங்கேயும் இல்லை, அவளின் உயரம், தோற்றம், நிமிர்வு, ம்கூம், அவளின் அம்மா இவ்வளவு அழகாக இருந்ததாக அவருக்கு ஞாபகமில்லை.

அதுவும் அவர்களது சேலை கட்டு, இவளோ ஒரு ஜீன்ஸ் பேன்ட், அதன் மேல் ஒரு ஷார்ட் டாப்ஸ், உயரத் தூக்கி போனி டெயில் போட்டிருந்த, அடர்த்தியான குட்டை முடி, அவள் பேச அதுவும் அவளோடு அசைந்தது.

“ராஜலக்ஷ்மியை திருமணம் செய்திருந்தால் எனக்கு இப்படி ஒரு பெண் பிறந்திருப்பாலோ” என்று தான் அந்த நொடி தோன்றியது. வாழ்க்கையின் முதல் தோல்வி அப்படியும் சொல்லலாம் அது மட்டுமே தோல்வி என்றும் சொல்லலாம் அவருக்கு. அதனால் மனதில் எங்கோ ஒரு இடத்தினில் இன்று வரையில் ராஜலக்ஷ்மி அவரின் மனதில் இருக்கிறாள் என்பது திண்ணம். அது பிடித்தத்தினாலா இல்லை தோல்வியினாலா, அவருக்கே புரியாத ரகசியம்.

இதோ அங்கையை பார்த்ததும் அவருக்கு தோன்றியது, “எனக்கும் இப்படி ஒரு பெண் இருந்திருப்பாளா?” என்று. இது தோன்ற வேண்டிய அவசியம் என்ன?

கைகட்டி தோரணையாய் அவள் பார்த்து நிற்க, ராஜராஜன் முகம் இறுக அவளின் பின்னே நின்றிருந்தான்.

அவளை பார்க்கும் முன் அப்படி ஒரு கோபம் ஆத்மனிடம் இருந்தது. இப்போது இல்லை ஒரு சுவாரசியம் பிறக்க, “என்னை எதுக்கு நீ பார்க்கணும்?” என்றார்.

“இங்க இப்போ அதை பேச முடியாது” என்று அவள் பதிலளித்த விதத்தில், “இப்போது நீ எதற்கு வந்தாயோ, அதை மட்டும் பேசு” என்ற த்வனி இருந்தது.

மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவர் இன்ஸ்பெக்டரை நோக்கி நடக்க, “வாங்க ஐயா உட்காருங்க” என்று அவரை பார்த்ததும் மரியாதையாய் சொல்லி,

“என்ன பிரச்சனை?” என்று ஆத்மனை கேட்டு கொண்டே அங்கையை பார்த்தான் அந்த இன்ஸ்பெக்டர்.

ஆத்மன் மகனை திரும்பி பார்க்க, திலகன் வந்தவன் “எங்க கார் கண்ணாடியை உடைச்சு, கதவுல எல்லாம் கல்லுல கிறுக்கி இருக்காங்க” என்று சொல்ல,

அதுவரை ராஜராஜனும் அங்கையும் நின்று தான் இருந்தனர்.

“என்ன கிறுக்கினேன்னு அதையும் சொல்லு” என்று அலட்சியமாய் அங்கை சொல்ல, ராஜராஜனிற்கு பயம் வந்தது, இவள் ஏன் பிரச்சனை தேடுகிறாள் என்பது போல,

உண்மையில் அவள் என்ன கிறுக்கினால் என்று கூட அவனிற்கு தெரியாது.

“சொல்லமாட்டியா பரவாயில்லை, நான் சொல்றேன்” என்றவள் “போடா பொறுக்கின்னு கிறுக்கினேன்” என்று சொல்ல,

சில நொடி நிஷப்தம் அங்கே!

“என்னமா பேசற நீ” என்று இன்ஸ்பெக்டர் அதட்ட,

“ம்ம், தமிழ் பேசறேன்” என்றாள் இன்னும் அலட்சியமாக.

“என்ன திமிரா?”

“அது இருக்கு நிறைய, ஒரு கண்ணாடியை உடைச்சு இப்படி எழுதியிருக்கேன்னா இவங்க என்ன பண்ணினாங்கன்னு கேட்க மாட்டீங்களா? இது தான் உங்க இன்வெஸ்டிகேஷனா” என்றாள் அப்படி ஒரு நிமிர்வோடு,

ஆத்மன் மகனை உடனே திரும்பி ஒரு பார்வை பார்க்க,

“பா சத்தியமாய் தப்பா எதுவும் நடக்கலை, நான் உங்க பையன் பா” என்றான் அவசரமாக.

“என்ன நடந்துச்சு?” என்று ஆத்மன் கேட்க,

“இன்ஸ்பெக்டர் என்னை நிக்க வெச்சு கேள்வி கேட்கலாம், ஏன்னா இது அவங்க இடம். ஆனா அவங்களும் பொது மக்களுக்கு மரியாதை குடுக்கணும். இவர் ஏனோ குடுக்கலை. ஆனா உங்களுக்கு நான் நின்னுக்கிட்டு பதில் சொல்லணும்னு அவசியமில்லை”

“அம்மாடி இவ ஏன் இவ்வளவு பேசறா?” என்று மனதிற்குள் நொந்தே போனான்.

ஆத்மன் இன்ஸ்பெக்டரை ஒரு பார்வை பார்க்க, அங்கே ஒரு சேர் வர, அங்கை அமரவில்லை.

“உட்காருங்க” என்று ராஜராஜனை அமர சொல்லவும், அதுவரை வேடிக்கை பார்த்தவன், “நீ உட்கார்” என்றான்.

“நான் வேற நீங்க வேற கிடையாது உட்காருங்க” என்று அங்கை சொல்ல, அங்கே தான் பொம்மை ஆனது போல தான் ராஜராஜன் உணர்ந்தான்.

ஆனாலும் அமைதியாய் அமர்ந்தான்.

அவனின் பின் நின்றவள், “உங்க பையன் எங்கம்மாவை தப்பா பேசினாங்க, அதான் கண்ணாடியை உடைச்சேன், போடா பொறுக்கின்னு எழுதினேன்” என்று அவள் சொல்ல,

அங்கே யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. திலகனை ஆத்மன் ஒரு பார்வை பார்க்க, அவன் தலை குனிந்து கொண்டான்.

ராஜராஜனின் முகம் இறுகியது.

அப்போது பார்த்து சுவாமிநாதன் வர, ஆத்மனின் வேறு பரிமாணத்திற்கு மாறினார்.

அதுவரை அமைதியாய் விரோதம் பாராட்டாமல் இருந்தவர், “தப்பா சொல்றான்னு ஏன் சொல்லணும்? நடந்ததை சொல்லியிருப்பான்!” என்று ஆத்மன் சொல்ல,

ராஜராஜன் எழுந்து “உட்காருங்க பெரியப்பா” என்று அவருக்கு இடம் விட, ஆத்மனின் எதிரில் உட்கார விரும்பாமல் “என்னடா?” என்றார் அங்கையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே,

“என்னோட அம்மாவை இவர் பையன் தப்பா பேசினான், அதனால கார் கண்ணாடியை உடைச்சிட்டேன், போடா பொறுக்கின்னு கிறுக்கிட்டேன்” என்று அசால்டாய் சுவாமிநாதனை பார்த்து சொன்னாள்.

“அம்மாடி இவ ஏன் இப்படி பேசறா?” என்று மீண்டும் நொந்து கொள்ளும் சூழல். மெதுவாக அவளிடம் “நடந்தது ஒரு விரும்பத்தகாத விஷயம், அதை திரும்பத் திரும்ப சொல்லாதே” என்றதும் அப்படி ஒரு கோபம் வந்து விட்டது அங்கைக்கு.

ராஜராஜன் சொல்ல வருவது அவளுக்கு புரியவில்லை. அம்மாவை தப்பா பேசினான்னு திரும்பத் திரும்ப சொல்லாதே என்பதை அவன் சொல்ல, அங்கைக்கு அவன் நடந்ததை பேசாதே என்பது போலத் தோன்ற, “அப்போ என் அம்மா இவங்க எல்லோருக்கும் ஒன்னுமில்லையா. இவனோட பெரியப்பா வந்தா உடனே மாத்தி பேசுவானா?” என்ற எண்ணம் தான்.

“சர், டி எஸ் பி வர்றார்” என்று வேகமாய் ஒரு காவலர் வந்து சொல்ல,

வேகமாய் ஒரு நடுத்தர வயது இளைஞன் வந்தான். அங்கிருந்தவர் அனைவரும் எழுந்து நிற்க, ஆத்மனும் எழுந்து நிற்க வேண்டி வந்தது. இன்ஸ்பெக்டர் விறைப்பாய் ஒரு சல்யுட் வைக்க, அதனை தலையசைத்து ஏற்றுக் கொண்டான் அவன்.

“உட்காருங்க சர்” என்று அந்த இடமே பரபரப்பாக, அவன் பார்வையை அங்கையிடம் திருப்பினான்.

அவனை பார்த்ததும் ஒரு மென்னகையை சிந்திய அங்கை, அவன் அருகே வந்து நிற்கவும், “ஐ அம் அங்கையற்கண்ணி ராஜராஜன்” என்று சொல்லி கை நீட்ட அதனை பற்றி குலுக்கியவன் “அர்விந்த்” என்றான் பதிலிற்கு.

“அண்ணா நீங்க வருவீங்கன்னு மேசேஜ் பண்ணினான். சாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டான் போல, ஜஸ்ட் ஃபோன் பண்ணியிருக்கலாமே” என்று அவள் சொல்ல,

“உங்க அண்ணாக்காக மட்டும்னா ஃபோன் பண்ணியிருப்பேன். நான் வந்தது உங்க அப்பாக்காக. உங்கப்பா மாதிரி ஆளுங்க பார்டர்ல நின்னு நாட்டுக்காக அவ்வளவு செய்யறாங்க, இதுல அவங்க பொண்ணை நாங்க பார்த்துக்க மாட்டோமா. ப்ரவுட் டு மீட் அ மேஜர்ஸ் டாட்டர்” என்றான் மரியாதையாக.

கூடவே “நான் அவரோட ரொம்ப பெரிய ஃபேன்” என்றான்.

“உங்களுக்கு அப்பாவை தெரியுமா?” என்றவளின் முகத்தினில் அப்படி ஒரு பெருமை, அப்படி ஒரு மகிழ்ச்சி.

பின்பு உடனே முகம் மாறியவள், “இது ராஜராஜன் மை ஹஸ்பன்ட்” என்று அறிமுகம் செய்ய, இயல்பாகவே கை குலுக்க எல்லாம் அவனிற்கு வரவில்லை “வணக்கம்” என்று கை கூப்பி வணங்க, அர்விந்த் அதையே திரும்ப செய்தான்.

அவளின் மலர்ச்சி பின் முக மாற்றம் எதுவும் ராஜராஜனின் பார்வைக்கு தப்பவில்லை. “இது எங்க பெரிய மாமா” என்றவள் மறந்து ராஜராஜனின் பெரியப்பா என்று அறிமுகப் படுத்தவில்லை. “என்னோட அம்மாவோட அண்ணா” என்று அறிமுகம் செய்தவள் ஆத்மனை ஒரு பார்வை பார்க்க

அதுவே சொல்லாமல் சொன்னது நீயா நானா பார்த்துவிடலாம் என்று.



ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

 
:love: :love: :love:

நான் வேற நீங்க வேற கிடையாது :love::love::love: இது வெளியே மட்டும் தானோ?

அம்மாவை தப்பா சொல்ல என்ன இருக்கு???
கல்யாணத்துல ஓடி போனது சரியில்லை தான்......... பிடிச்சது போய்ட்டாங்க...... இதுல தப்பா பேச என்ன இருக்கு.....
ஆத்மன் வேற ரொம்ப பீல் பண்ணுறாரே இதனை வருஷதுக்கு பிறகும்.......

அங்கை நீ வேற லெவல் தாம்மா........ அசத்துற போ.........
DSP வர்றாரு....... மாமா வந்துட்டாரு.....
எதிரிக்கு எதிரி நண்பன்....... அம்மாவோட அண்ணன் :love: மாமா ராசியாயிட்டாரோ???

அப்பாவையும் உயர்வா சொல்லியாச்சு.......
எப்போ சேர்த்துக்குவாங்க???
 
Last edited:
அம்மாவால ஆத்மனோட பொம்மலாட்டம் ஆரம்பமாச்சு..
இப்ப puppet show அங்கை நடத்த போறா‌‌..
ஆத்மன் பொம்மையா???
 
Last edited:
Top