Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 30 (final )

Advertisement

#TNWContestwriters
#098
#காதல்வண்ணங்கள்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... கதிர்.. தன் சித்தி தாமரையின் வீட்டிற்கு வருகிறான்.. அவன் வரவை நினைத்து மகிழ்ந்து அவனை வரவேற்றாலும் இவன் வரவால் தன் கணவன் வாத்தியாரான சொக்கலிங்கம் கோபத்திற்கு ஆளாக நேருமோ என அஞ்சி கொண்டிருக்கிறார்... இவரின் பயத்தை கொஞ்சமும் பொய்யாக்காமல் இவனைக் கண்டதும் கோபம் கொள்கிறார் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தவே முயல்கிறார்.. தன் பார்வையாலேயே தன் மனைவியையும் அடக்குகிறார் அந்த பார்வையில் பயத்தை விட நிதர்சனம் உணர்ந்து தாமரையும் சம்மதிக்கிறார்.. ஏன் இவனை அந்த ஊரை விட்டு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள் இவனுக்கும் அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்.. அனைத்தும் கதையில்... இந்நிலையில் ஊருக்கு மிகுந்த ஆனந்தத்துடன் சுதந்திரமாக பேருந்து பயணத்தை ரசித்துக் கொண்டே கல்லூரியில் கிடைத்த திடீர் விடுமுறையில் வரும் கண்மணி தன் தந்தையின் உண்மை முகம் கண்டு அதிர்ந்து நிற்கிறாள்.. தன் கல்லூரியில் இருக்கும் ப்ரொபசர் கதிரைக் கண்டு மகிழ்ந்தாலும் குழப்பமும் கொள்கிறாள்.. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் காதலை இவளிடம் கூறுகிறான் கதிர்... ஜாதியினால் ஊருக்குள் வெட்டுக்குத்து நடக்கும் நிலையில் இவர்களின் காதல் என்ன ஆனது என்பது கதையில்.. நிறைய சொந்த பந்தங்களுடன் குடும்பமாக ஊரில் சந்தித்துக் கொள்ளும் போது இருக்கும் குதூகலமும் கலகலப்பும் அரட்டையும் கண்மணி குடும்பத்தில் இருந்ததும் அருமை 🥰🥰👏 கசின்ஸ் ஒன்றாக சேர்ந்தால் எப்படி அதிருமோ அப்படி அதிர்ந்தது இல்லம் 🥰🥰 பாட்டி கதாபாத்திரம் மிக அருமை அவருக்கும் கண்மணிக்கும் இருந்த பாசமும் அழகு, 😘 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Good luck dear 🥰❤️💐
 
அழகான கதை 😀❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 
கதவு திறந்து வேலனும் மற்றவர்களும் உள்ளே வர பின்னோடு வந்த வடிவு தன் பெண்ணை அணைத்து கொண்டார்.

" எவ்வளவு தைரியமடி உங்களுக்கு ? எல்லாம் தெரிஞ்சே இவளை அவனுக்கு கட்டி வச்சிருக்க ?" என்று தன் மனைவியிடம் வேலன் பாய ..

"எனக்கு மட்டுமில்லை ..அத்தைக்கும் நல்லாவே தெரியும் . உங்க தங்கச்சி பையன்னு தெரிஞ்சப்புறம் தான் நாங்க இவங்களுக்கு கலியாணம் பண்ண முடிவெடுத்தோம்.இப்போ அதுக்கு என்ன ?" ஆவேசமாக பேசிய வடிவை பார்க்க வியப்பாக இருந்தது வேலனுக்கு.

தன்னை எதிர்த்தே பேசாத வடிவா இது என்று! அதை வாய்மொழியாக சொல்லவும் " ஆமா நீங்க சொன்னதெல்லாம் கேட்டு கேட்டு என்ன சாதிச்சேன் . விசாலாட்சி உயிர் போறத தடுக்க முடியாம ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் செத்துக்கிட்டிருக்கேன். ..என் பொண்ணுக்கு பிடிச்ச வாழ்க்கை இதுதான்னா அதை அவளுக்கு குடுக்கிறதுக்கு நான் ஏன் யோசிக்கணும்?."

"போதும்! இத்தனை வருஷம் பயந்து பயந்து இவளை அடக்கி அடக்கி வச்சேனே.. காதல் அது இதுன்னு வந்து நின்னா அவளை கொல்ல கூட தயங்க மாட்டிங்கன்னு தான். ஆனா இப்போ தெய்வம் அவளுக்கு அவந்தானு நினைச்சிடுச்சு .அதை உங்களால கூட மாத்த முடியாது."

இதுவரை அமைதியாக இருந்த கண்மணி "அப்பா ப்ளீஸ் .. நான் அவரை ரொம்ப விரும்புறேன். அவர் என்ன மதம் ஜாதி இதெல்லாம் பார்த்து காதலிக்கல ..அப்படி காதலிக்கவும் முடியாது! அவரோட நல்ல குணம் , அறிவு ,கம்பீரம் இதெல்லாம் பாத்துதான் காதலிச்சேன். அவர் உங்க சொந்த தங்கச்சியோட பையன் ..ஆனாலும் வேற ஒருத்தரா தான் பாக்கிறீங்க.உங்க சொந்த ரத்தமா பாத்தா உங்களால அவரை ஏத்துக்க முடியும்.ப்ளீஸ் " என்றாள் கெஞ்சுதலாக .

"தங்கச்சியே இல்லனு சொல்லியாச்சு..அவ பையனா இருந்தா என்ன? .. ஓடி போனவளோட மகன் அவன். எங்க கௌரவத்தையே நாசமாகினவளோட மகன் . அவ்வளவுதான் !" என்று ராஜதுரை குறுக்கிட்டு சொல்ல ..தனசேகரும் ஒத்து ஊதினார்.

"நான் உங்க பொண்ணுதான் ஆனா அதுக்காக எனக்குன்னு ஒரு மனசு இருக்க கூடாதா..இல்லை அதுல ஒருத்தர் மேல பிடித்தம் வர கூடாதா?" என்று மேலும் கண்மணி விவாதம் செய்ய...

வடிவை ஒருபுறம் தள்ளிவிட்டு வேலன் மகளை பிடித்து அவளை கன்னத்தில் அறைய தரையில் சென்று விழுந்தாள் கண்மணி.

" என்ன கண்ணு வார்த்தையெல்லாம் பெருசா வருது ?" என்று சீற்றம் மிகுந்த குரலில் வேலன் சொல்ல.. தன்னு ஸ்வாதி ஸ்வரூபா மூவரும் சென்று அவளை தூக்கி நிறுத்தி மறைத்துக் கொண்டனர். சோபிதாவோ தன் செல்ல அக்கா அழுவதை பார்த்து தானும் கண்ணீர் வடித்தாள்.

மற்ற பெண்மணிகள் எல்லோரும் வேடிக்கை பார்க்க .. சங்கீதாவோ அவளை சமாதான படுத்திக் கொண்டிருந்தாள்.

" பெரியப்பா .. இவ கழுத்தில அவன் தாலி கட்டுனது நம்ம தவிர யாருக்கும் தெரியாது .. பேசாம காதோட காது வச்ச மாதிரி வேற ஒரு பையனை பாத்து கலியாணம் பண்ணி வைப்போம் " என்றான் அஜித்.

"அண்ணா. எனக்கு வேற கலியாணம் பண்ண நீ யாரு?" ஆங்காரமாய் கண்மணி கேட்க வெறி கொண்டவனை போல அஜித் கண்மணி மேல் பாய ..இப்போது சந்தியாவும் குறுக்கே வந்துவிட்டாள்.

கர்ப்பிணி பெண் என்பதால் அடிக்க வந்தவன் கையை நிறுத்திக் கொண்டுவிட்டான்.

வள்ளியோ பாய்ந்து வந்தார் "ஏய் சந்தியா ? நீ ஏண்டி நடுவுல போற ? புள்ளத்தாச்சி பொண்ணு.. அதுவும் மூணு வருஷம் கழிச்சி இப்போதான் உண்டாகியிருக்க " என்று கத்த.. அவ்வளவுதான் எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ சந்தியாவிற்கு.

"அம்மா இப்போ சும்மா இருக்க போறீங்களா இல்லையா ? எப்போ பாரு மூணு வருஷம்னு அதையே சொல்லிக்கிட்டு . " என்றவள் தன் பெரிய தந்தையை பார்த்து இத்தனை காலம் கேட்காத கேள்விகளை கேட்டாள்.

"மூணு வருஷத்துக்கு முன்ன இதே தானே நடந்தது. என் மனசுக்கு பிடிச்ச பையனை எனக்கு கட்டி வச்சிருந்தா ..நான் எவ்வளவு சந்தோசமா இருந்திருப்பேன்? எவ்வளவோ மன கஷ்டத்தோட வாழ்க்கையை ஆரம்பிச்சேன்.. இதே ஊர்காரர்தான் என் வீட்டுக்காரரும் ..அவருக்கும் நடந்த எல்லாம் தெரியும் ..வீட்ல போர்ஸ் பண்ணதால தான் அவரும் கலியாணம் பண்ணிக்கிட்டார்.. இருந்தாலும் நாங்க பழைய வலிகளை மறந்து, வாழ ஆரம்பிக்கவே இத்தனை நாள் ஆச்சு ..இது ஒன்னும் ப்ரேஷியஸ் பிரேக்னன்சி இல்ல .. நீங்கல்லாம் அப்படி சொல்லும்போது எவ்வ்ளவு ஆத்திரம் வருது தெரியுமா ? நான் பட்ட கஷ்டத்தை கண்மணியும் பட வேண்டாம்மா. அவ மனசுல விரும்புனவனா உங்க ஆசீர்வாதத்தோட தான் கலியாணம் பண்ணியிருக்க ..அதோட இருக்கட்டும் .மனசுக்குள்ள ஒருத்தர நெனச்சிட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்றதே கஷ்டம் ..இதுல அவளோட கணவனாகவே ஆயிட்டான்.. அது சில மணிநேரம்னாலும் பல வருஷம்னாலும் எல்லாம் ஒண்ணுதான். இனி இந்த விஷயத்தில பெரியப்பாதான் முடிவெடுக்கணும் .நாம போகலாம் " என்று தன் தாயையும் தந்தையையும் அழைக்க .. வள்ளிக்கும் தெரியும் தன் மகள் சந்தோசமாக இல்லை.. இந்த மூன்று வருடங்களாக அவள் கருவுற்ற பின் தான் அவள் முகத்தில் சிறு புன்னகையே மலர்கிறது என்பதை அறியாதவரா ? அதிலும் சந்தியாவின் கணவன் வீட்டார் அவளை ஜாடையாக பேசுவதும் அவர் அறிந்ததுதான்!

அதனால் மெளனமாக தன் கணவரோடு சந்தியாவை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

சரியாக அந்நேரம் கதிர் சொக்கலிங்கம் அன்புச்செல்வன் மற்றும் சண்முகநாதனையும் அழைத்து வீட்டிற்குள் நுழைய .. அஜித் கண்மணியின் அறையில் நின்றிருந்தவன் வாயிலை எட்டி பார்க்க அங்கு நின்றிருந்தவர்களை பார்த்தவன் வேகமாக கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க வர மப்ட்டி உடையில் அவர்களோடு வந்த போலீஸ் அதிகாரி குறுக்கே வந்து அவனை தடுத்தார்.


போலீசுடன் வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.


அன்பின் யோசனை தான் அது .மூர்க்க குணம் கொண்டவர்கள் என்று தெரிந்ததால் கண்டிப்பாக தாக்க வருவார்கள் என்று எண்ணி அவரை அழைத்து வந்திருந்தனர்.. சண்முகத்தின் பதவியும் அத்தகையது.அழைத்ததும் உடனே வந்திருந்தார்.


காவல் துறையை கண்டதும் சற்றே அடங்கினான் அஜித்.

வடிவு காவல் அதிகாரி வந்திருப்பதை காணவும் கண்மணியை அழைத்து கொண்டு கூடத்திற்கு வந்தார்.

தன்னவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தது கதிரின் விழிகள்.

கன்னத்தில் விரல் தடங்களை கண்டதும் சினம் பொங்க "என் மனைவியை அடிச்சிருக்காங்க சார் "என்றான்.


சண்முகத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம் .. தங்கள் வீட்டு வேலையாள் மகனா இவன்.. எங்கிருந்து வந்தது இத்தனை மிடுக்கும் கம்பீரமும் என்று தான் தோன்றியது.


கல்வியும் முயற்சியும் அதனால் வரும் செல்வமும் யாருக்கும் இந்த கம்பீரத்தை வழங்கும் என்று புரியவில்லை.அது பிறப்பால் மட்டுமே வருவது இல்லை.. பிறப்பால் கிடைப்பது வெது பெருமை மட்டுமே !


இவனுக்கு என்ன குறைச்சல் ? தங்கையின் கணவனாக இவனை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தன்னால் என்று தான் தோன்றியது. அவர் அமைதியாகவே நின்றிருந்தார்.. என்னதான் கோபம் இருந்தாலும் தன் மகள் கலங்கி அழுவது அவருக்கு கஷ்டமாக தான் இருந்தது.


அவர் யோசனையாக பார்த்துக் கொண்டிருக்க ..ராஜதுரை தான் பேசினார்.."எங்க வீட்டு பொண்ண ..நாங்க அடிப்போம்..என்ன வேணா செய்வோம் " என்று கொந்தளிக்க ..போலீஸ் அதிகாரியோ கொதிநிலைக்கு சென்றார்." என்ன சார் ? நாங்க இருக்கும்போதே இப்படி பேசுறீங்க? அந்த பொண்ணு மேஜர் ..காலையில கலியாணம் நடந்துருக்கு .இப்போ இவங்க கூட அனுப்புறது தான் நல்லது. நீங்கல்லாம் பெரிய மனுஷங்கன்னு பொறுமையா பேசறேன் சார் " என்றார் மிரட்டலாய்.


"சார் ..அதுக்காக நாங்க வேற ஜாதி பையனுக்கெல்லாம் பொண்ணு குடுக்க முடியாது" மீண்டும் ராஜதுரை எகிற .. அன்பிற்கு கோபம் வந்தது.


"என்ன சார் ? ஜாதி மட்டும் தான் முக்கியமா உங்களுக்கு ? இன்னும் எத்தனை வருஷம் இப்படியே இருக்க போறீங்க ? நீங்க சாப்பிடற சாப்பாட்டில இருந்து போடற துணி மணி ..ஓட்டற கார் முதக்கொண்டு எதுவுமே உங்க சாதி ஆளுங்க மட்டுமே செய்யலை.. அதுல பல பேரோட உழைப்பு இருக்கு. என் ஜாதி காரன்மட்டும் தான் சாப்பிடணும்னு எந்த விவசாயியும் நினைக்க மாட்டான். அப்படி நினைச்சாலே உங்களுக்கெல்லாம் சாப்பாடே கெடைக்காது.ஏன் போன வருஷம் உங்களுக்கு விபத்து நடந்தது ஞாபகம் இருக்கா? அப்போ உங்களுக்கு ரத்தம் குடுத்தது கூட நாந்தான் ..உங்களுக்கு அதெல்லாம் தெரியாது..அப்போ உங்களுக்கு அவசியம் . அதனால சாதியெல்லாம் கண்ணுக்கு தெரியல.. இப்போவும் போக போறது பொண்ணோட வாழ்க்கைதானே! அதான் அமைதியா நிக்கிறீங்க " என்று வேலனை பார்த்து பொரிந்து தள்ளினான்.


சங்கீதா அமைதியாக இவ்வளவு நேரம் நின்றிருந்தவள் "பெரியப்பா .. நானெல்லாம் யாரையும் மனசுல நினைக்கல ..அதனால நீங்க பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கிட்டோம். அதுக்காக சந்தோசமா இருக்கோமான்னு கேட்டா சொல்ல தெரியல ..ஏதோ எங்க வாழ்க்கை ஓடுது. கண்மணிக்கு அப்படியில்லை..ஒருத்தர மனசுல நினச்சிட்டா ..அதுவும் வேற யாரோ இல்ல உங்க தங்கச்சி மகன் தான் அவரு. . உங்க தங்கச்சி ஓடிபோய்ட்டாங்கன்னு எல்லாரும் சொல்றீங்க ..அவங்கள அந்த நிலைமைக்கு தள்ளினது நீங்க தானே ..
அப்பவும் அவங்க உங்க கண்ணு முன்னால வராம எங்கியோ இருந்தாங்க .. அவங்க குடும்பத்தையே செதச்சிட்டீங்க.. அதனால என்ன நடந்தது. அப்பா! என்ன கௌரவமான குடும்பம்னா ஊர் சொல்லுது.. உங்க கூட நிக்கிறாங்களே இவங்கள விட்டுட்டு ஊருக்குள்ள போய் என்ன பேசறாங்கனு கேளுங்க ..சரியான கொலைகாரனுங்கன்னு உங்கள பத்தி பேசுறாங்க . இந்த பேரை காப்பாத்தத்தான் போராடிகிட்டு இருக்கீங்க. உங்க பிடிவாதத்தை விட்டு நீங்க தான் இவங்கள வாழ வைக்கணும்" என்று கூற ஏற்கனவே கலங்கியிருந்த வேலனின் மனம் மேலும் கலங்கியது.


எப்போதுமே நல்ல மனம் கொண்டவர்தான் ..அவரது உடன் இருப்பவர்களால் தான் அவருக்கு எப்போதும் குணம் மாறும். இன்று தன் பெண் தன் ரத்தம் என்னும்போது மனம் யோசித்தது. அன்று தன் தங்கையின் வாழ்வு பெரியதாக தெரியவில்லை.. இள ரத்தம் அல்லவா ..தான் தனது பெருமை வறட்டு கௌரவம் என்று அனைத்தும் பெரியதாய் தெரிய ..இன்று வயது முதிர்ந்த காலத்தில் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.


தன் கணவர் யோசிப்பதை பார்த்த வடிவும் சற்றே தைரியம் கொண்டவராய்.. "நமக்குன்னு ஒரே ஒரு பிள்ளையை கடவுள் குடுத்திருக்காரு.. அவளையும் அழ வச்சிட்டு நாம என்னங்க சாதிக்க போறோம். நாளைக்கே இதோ இவங்க எல்லாம் அவங்க அவங்க வேலைய பாத்துட்டு போய்டுவாங்க! நாம ரெண்டு பெரும் விட்டத்தை பாத்து உக்கார வேண்டியதுதான் .நீங்க ஊர் முழுக்க உங்க பெருமையை பேசிட்டு இருங்க " என்றார் ஆவேசமாய்.


"நேத்து செத்து போனாளே லட்சுமி ..அவ வாழ்க்கைல முடிவெடுக்க நீங்கல்லாம் யாரு. அவ அந்த பையனை கட்டிக்கிட்டா ஊர் மானம் போயிடும்னு சொல்றீங்க . அந்த பொண்ணு உசுருக்கு எந்த மதிப்பும் இல்லையா ? நீங்கல்லாம் பேசறதை கேட்டுகிட்டு அவங்க அப்பா அம்மாவும் அமைதியா இருக்காங்கன்னு பாக்கிறீங்களா ..உங்களுக்காக அவங்க பயப்படுறாங்க..இப்போ அவங்களுக்காக நீங்க பயப்படுவீங்க ...உன் பிள்ளைக்கு ஒரு நியாயம் என்பிள்ளைக்கொரு ஞாயமானு...அதைத்தானே யோசிக்கிறீங்க ..அப்படி நெனைக்க மாட்டாங்க ..பிள்ளையை இழந்த வலி அவர்களுக்குத்தான் நல்லா தெரியும்." என்று ஆவேசம் கொண்டவர் போல் பேசியவர் "நல்லா யோசிங்க " என்று சொல்லி ஒரு ஓரமாய் சென்று அமர்ந்துவிட ..கஸ்தூரியும்அங்கு தான் இருந்தாள்

காலையில் இருந்தே தன் கணவன் செய்யும் அராஜகம் எல்லாம் பார்த்து பார்த்து கோபத்தின் விளிம்பில் இருந்தாள்.

எல்லோரும் பேசியது கேட்ட வேலனுக்கு தோன்றியது. ஆம் சாதி பார்த்து இத்தனை காலம் வாஸ்த்துவிட்டோம். சொல்லும்படி என்ன இருக்கிறது நம் வாழ்வில் ? எதையும் சாதிக்கவில்லை அல்லவா ?

ஒற்றைக்கொரு பெண் ..அவளும் மனம் வருந்தி வாழ்வதோ மனம் கலங்கி உயிர் விடுவதோ ..எதுவாகினும் மீதி காலம் முழுக்க துயரம் மட்டும் தானே என்று தோன்ற சட்டென்று முடிவெடுத்தவராய் "சரிம்மா கண்ணு .. நீ அந்த பையனோட போ " என்றார். இன்னும் அவனை மாப்பிள்ளையை ஏற்க மனம் வராவிட்டாலும் அவர் குரலில் தெரிந்த அதே பழைய வாஞ்சை கண்மணிக்கு புரிந்தது.

அவரால் இப்போதைக்கு இவ்வளவு தான் இறங்கி வர முடியும்..அதுவே பெரிது என்று புரிந்து கொண்டவள் மெல்ல மெல்ல அவர் மாறுவார் என்று நம்பிக்கை கொண்டு தன்னவனின் கரம் பற்றி வெளியே நடந்தாள். தன் உறவினர் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அவள் கிளம்ப ..அனைவருக்கும் ஒரே சந்தோஷம் .!

இவர்கள் வெளியே செல்லவும் அந்த போலீஸ் அதிகாரியும் விடைபெற்று சென்றார்.

அதை கண்ட அஜித் கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து பின் தொடர்ந்து செல்ல பார்க்க .. அதுவரை பொறுமை காத்த கஸ்தூரி பொங்கியெழுந்தாள்.

"எங்கே போறீங்க ?" கண்ணில் கோபத்துடன் வினவியவளை " என்னடி ? குரலெல்லாம் பெருசா வருது ? ஒன்னு வச்சேன்னு வை ..அவ்வளவுதான் " என்றபடி அவளை தள்ளிவிட்டு "இன்னிக்கு அவங்க கதையை முடிக்கிறேன் பார் " என்றபடி முன் செல்ல ..வராந்தாவில் இருந்த ஒட்டடை தட்டும் கம்பை எடுத்தவள் மின்னல் வேகத்தில் அதை சுழற்ற அடுத்த பத்து நொடிகளில் ஒரு மூலையில் விழுந்து கிடந்தான் அஜித்.

ஆம் ! கஸ்தூரி தான் அவனை அடித்திருந்தாள். அவள் சிறு வயதிலிருந்தே சிலம்பம் வீராங்கனை. இதுவரை பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்துவிட்டாள்.இனி அவனை தன் வழிக்கு கொண்டு வருவாள் என்று நம்புவோம் !

கண்மணியும் கதிரும் சென்னை திரும்பியவர்கள் தங்கள் இல்லறத்தை இனிமையாய் ஆரம்பிக்க அனைவர் மனதிலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு துவங்கியது அவர்கள் வாழ்வு.

மனிதர்களுக்கு வேண்டுமெனில் வண்ணம் பூசலாம்.. காதலுக்கு வண்ணங்கள் இல்லை!
சூப்பர் sis
 
Top