Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் -21

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
மறுநாள் தான் கோவிலின் முக்கிய விழா நாள். இன்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மாலை நேரத்திற்கு மேல் நடக்க இருக்க பகல்நேரம் அனைவரும் ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர்.

அப்போது பொன்னுத்தாயியை பார்த்துக் கொள்ளும் யசோதா வந்து பொன்னுத்தாயிக்கு மூச்சு வாங்குவதாக கூறவும் வடிவும் சங்கரியும் வள்ளியும் சென்று பார்த்தனர் .

முதியவர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி படுத்திருக்க .. அனைவர் மனத்திலும் கவலை பூத்தது.

"அத்தை என்ன செய்யுதுங்க ?" என்று கேட்டபடி வடிவு அவர் அருகில் அமர மறுபுறம் மற்ற இருவரும் நின்றிருந்தனர் . யசோதா மருத்துவருக்கு அலைபேசியில் அழைத்துக் கேட்டு ஊசி மூலம் மருந்தை செலுத்த .. வாசலுக்கு வெளியே நின்று இளைய தலைமுறை கவலையுடன் பார்த்தது.

மெல்ல நெஞ்சை நீவி விட்டபடி அமர்ந்திருந்த வடிவை பார்த்து திக்கி திணறி "தாமரை..தாமரையை வந்து என்ன பாக்க சொல்லு வடிவு " என்று மெல்லிய குரலில் அவர் கூற மற்ற இருவரின் முகமும் சுருங்கி கருத்தது.

"இப்போ எதுக்கு பெரியம்மா அவ ..நாங்கல்லாம் இல்லையா ?" ஆத்திர குரலில் சங்கரி வினவ .. இதற்குள் சற்றே மூச்சுத்திணறல் குறைந்துஇருக்க .." நான் யாரை பாக்கணும் வேண்டாம்னு நீங்க ஏண்டி முடிவு பண்றீங்க ?" என்று தீவிர குரலில் அவர் வினவ அவரது விழிகளோ வடிவை தீர்க்கமாய் பார்த்தது.

தன மாமியாரின் விழிகள் சொன்ன செய்தியை சரியாக படித்துக் கொண்டவர் .. "சங்கரி அண்ணி.. உங்களுக்கு தெரியாததா ? அத்தையும் தாமரையோட அம்மாவும் ஸ்நேகிதம்ன்னு .. அவங்கள டென்ஷன் பண்ண வேணாம் " என்றவர் "நான் தாமரையை வர சொல்றேன் அத்தை " என்றபடி வெளியேறினார்.

தாமரையை அழைக்க வடிவு கிளம்பி செல்ல .. மற்ற இருவரும் நொடித்துக் கொண்டனர் .."பாத்தீங்களா அண்ணி ..இந்த பெரியம்மா ..நம்ம குடும்பத்துக்கே ஆகாதவன்னு தெரியும் ..அவளைத்தான் பாக்கோணும்னு நிக்கிது.." என்று முணுமுணுத்தபடி அவரது அறையில் இருந்து வெளியேற ..இளைய தலைமுறை உள்ளே நுழைந்தது.அனைவரும் பொன்னுத்தாயியை வாஞ்சையாய் விசாரித்து கிளம்ப ..கண்மணி மட்டும் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.

இரு நாட்களாக நடக்கும் நிகழ்வுகளில் மனம் கலங்கியிருந்த அச்சின்னஞ்சிறு பெண்ணின் மனம் தன் உயிருக்குயிரான பாட்டியம்மாளை நலிந்த நிலையில் கண்டதும் மேலும் சோர்ந்து.

"ஆத்தா .." மெல்லிய குரலில் அழைத்த பேத்தியின் கவலை முகமும் கலங்கிய விழிகளும் கண்ட பொன்னுத்தாயி அவளை ஆதரவாய் நோக்கி மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினார்.

"பயப்படாத கண்ணு.. என்ர உசுரு அவ்ளோ சீக்கிரத்தில போகாது கண்ணு.. உன் கல்யாணத்தை பாத்துபுட்டு தான் போவேன் இந்த ஆத்தா " என்று சொல்ல .. மலர்ச்சி குழப்பம் கவலை பயம் என்று கலவையாய் உணர்வுகள் கண்மணியின் முகத்தில்!

சற்று நேரம் சென்று தாமரை வாசலில் நின்றிருந்தார் ..வீட்டில் கண்மணி பொன்னுத்தாயி தவிர மற்ற யாரும் அவரிடம் பேச மாட்டார்கள்.

அவரது தாயும் பொன்னுத்தாயியும் தூரத்து உறவு.. ஆனால் மிக நெருங்கிய ஸ்நேகிதிகள் ..அதைக் கொண்டே பொன்னுத்தாயிக்கு தாமரை மேல் பாசம் அதிகம். தாமரையின் நற்குணங்களும் அதற்கு பக்க பலம் .

பொன்னுத்தாயி படுக்கையில் விழுந்ததிலிருந்தே எப்போதாவது வந்து அவரை பார்த்து செல்வது தான் .. யாரும் அவரை வரவேற்கவில்லை என்றாலும் தடுப்பாரும் இல்லை.

இன்று தான் இத்தனை கூட்டத்திற்கிடையில் வந்து சந்திக்கிறார்.

இவர் வாசலில் நிற்பதை பார்த்ததுமே முகம் சுளித்தாள் சங்கரி .

"அண்ணி ..வந்துட்டா மகாராணி !" என்று வள்ளியிடம் நொடிக்க.. கண்டுகொள்ளாமல் பொன்னுத்தாயியின் அறையை நோக்கி சென்றார் தாமரை.

யாரும் வாங்க என்று அழைக்கவெல்லாம் காத்திருக்கவில்லை.

அப்போது தான் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் கண்மணி. தாமரையை கண்டதும் பகலவனை கண்ட தாமரையாகவே முகம் மலர "அத்தை " என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள். பார்த்திருந்த மற்ற அத்தை சித்திமார்களுக்கு காதில் புகை வராத குறைதான்!

தாமரையுடன் தனது ஆத்தாவின் அறைக்குள் நுழைந்த பேத்தியின் மலர்ந்த முகத்தை பார்த்ததுமே தெம்பு வந்தது அம்முதியவருக்கு.

சற்று நேரம் தாமரை நலம் விசாரித்துக் கொண்டிருக்க .." கண்மணி , யசோதா ..ரெண்டு பெரும் கொஞ்சம் வெளியே இருங்க தாயி " என்று பணித்தார் பொன்னுத்தாயி .

"சரி ஆத்தா " என்றபடி இருவரும் வெளியே வர .. யசோதாவை பிடித்து கொண்டனர் இந்துமதியும் சங்கரியும் "ஏம்மா ..நர்ஸு புள்ள ? என்ன வெளிய வந்துட்ட ?"

" அம்மாதான் வெளியே இருக்க சொன்னாங்க மேடம்"

"என்ன விஷயமாம் ? "

"தெரியாதுங்க மேடம் " பணிவுடன் வந்த பதிலாக இருந்தாலும் இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதே ..உனக்கு பதிலளிப்பது என் வேலையல்ல என்று யசோதாவின் பார்வை சொல்லாமல் சொல்ல ..

தோளில் முகவாயை இடித்தபடி" வேலைக்குன்னு வந்தாலும் திமிருக்கு குரைச்சலேயில்ல " என்று முணுமுணுத்தபடி நகர்ந்தனர் இருவரும்.

பொன்னுத்தாயியின் அறைக்கதவு லேசாக நீங்கியிருக்க தாமரையும் அவரும் பேசும் சப்தம் கேட்காவிட்டாலும் தூரத்தில் இருந்து பார்க்க அவர்கள் வாக்குவாதம் செய்வதுபோல் பட்டது.

பொன்னுத்தாயி எதையோ சொல்லிக் கொண்டிருக்க தாமரை தலையையும் கைகளையும் ஆட்டி மறுத்துக் கொண்டிருந்தார் .வெகு நேர பேச்சிற்கு பிறகு தாமரையின் தலை சரியென்பதாய் அசைந்தது.

பேசி முடித்து வெளியே வந்தவரின் கண்கள் கலங்கியிருக்க ..கண்மணியின் முகத்தை ஏறிட்டு பார்த்தவரின் விழிகளில் இருந்தது என்னவென்று யூகிக்க முடியவில்லை கண்மணியால்.

ஆசையா ..கனவா ..நிராசையா ..பயமா ..இல்லை அனைத்தும் கலந்த கலவையா என்று புரியாமல் அவர் முகத்தையே பார்த்திருந்த கண்மணியின் கரங்களை பற்றி அழுத்தியவர் " உங்க ராஜவள்ளி அத்தைய பாக்கனுன்னு ஆத்தா கேக்குறாங்க கண்மணி .. அவங்களுக்கு சொல்லி விடு " என்றபடி தலையை அசைத்து விடை பெற்று சென்றுவிட்டார்.

ராஜவள்ளியும் சற்று நேரத்தில் வந்துவிட " என்னடி இன்னைக்கு ...எல்லா நாட்டு ராணியும் ஒன்னொன்னா வருது ?" தன் நாத்தனாரை கிண்டல் செய்தாள் வள்ளி.

"ஏனுங்கண்ணி எங்கக்காவை திட்டறீங்க ?" என்று இந்துமதி வரிந்து கட்டிக் கொள்ள "நேத்து நீங்க தானே அவளை கரிச்சு கொட்டினீங்க ..இப்போ ரொம்ப பாசம் பொங்குது . எவ்வளவு நேரம் பொங்குதுன்னு பாக்கிறேன் " என்றார் வள்ளி.

கேட்டிருந்த கண்மணிக்கு கோபமாக வந்தது ..இவர்களுக்கு பிடித்தமில்லையென்றால் உடன்பிறந்தவர்களையே பேசுகிறார்களே ..என்னதான் ஜென்மங்களோ!

எதுவும் காட்டிக் கொள்ளாதவளாய் அவரை நலம் விசாரிக்க "கண்மணி ..மாமியாகாரிய நல்லா கவனி கண்ணு "என்று தேனொழுகும் குரலில் நையாண்டி செய்தார் இந்துமதி .

அதை கண்டுகொள்ளாமல் ராஜவள்ளி தன் பெரியம்மாவின் அறைக்கு செல்ல ... அவரது கைகளை பற்றியபடி "விக்ரம் வந்துட்டானா ராஜி ?" என்றார் பொன்னுத்தாயி.

ஆம் என்பது போல் அவர் தலையசைக்க "கண்மணி வாழ்க்கை உன் பொறுப்பு தான் .. மறந்துராத. அவ நல்லா வாழுறது உன் கையில தான் இருக்கு. நான் சீக்கிரம் போயிருவேன்னு தோணுது .அதுக்குள்ள என் பேத்தி கல்யாணம் நல்லபடி நடக்கணும். நீதான் பாத்துக்கணும் " என்றவரை பார்த்து சரியென்று தலையசைத்து ராஜவள்ளியின் முகத்திலிருந்த துணிவும் தைரியமும் நிம்மதி அளிக்க மெல்ல கண்களை மூடி சாய்ந்து கொண்டார் அந்த பாசமுள்ள பாட்டி.
 
பாட்டி எப்படியும் பேத்தி ஆசையை நிறைவேத்தி வச்சுடுவாங்க... சூப்பர் பாட்டி.. ?
 
தாமரையிடம் என்ன பேசினாங்க பாட்டி
சூப்பர் 😀
 
Top