Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நதியிலே -3

Advertisement

Lavi bala

Member
Member
அத்தியாயம் - 3

மருத்துவம் படிக்க வேண்டும் என்பது லக்க்ஷியின் கனவு.. தனது முழு கவனத்தையும் படிப்பினை மீது செலுத்தியவள் வெற்றிகரமாக தன் 12-ஆம் வகுப்பு தேர்வினை நிறைவு செய்தாள்.. தேர்வு முடித்து வெளியே வந்தால் அங்கு ராம் நின்றிருந்தான் அவளிடம் பேச.. ஆவலுடன் அவன் அருகில் சென்றாள்.. அதே நேரம் ராமின் தந்தை வந்தார் ராமை அழைத்து செல்ல.. எதுவும் பேச முடியாமல் தலை அசைத்து விடை பெற்றனர் இருவரும்.. கண்கள் கலங்க அவள் நின்ற தோற்றத்தை மனதில் நிரப்பி சென்றான் ராம்..

நாட்கள் உருண்டோட தேர்வு முடிவுகள் வெளியாகின.. லக்க்ஷி மிகவும் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவம் பயில கவுன்சிலிங் மூலம் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தாள்.. விஸ்வநாதனும் சங்கீதாவும் அவளை ஹாஸ்டலில் சேர்த்திருந்தனர்.. பெற்றோரை விட்டு பிரிவது வருத்தமாக இருந்தாலும் தனக்கு பிடித்த துறையில் படிக்க போவதால் ஆர்வமுடன் இருந்தாள் லக்க்ஷி..

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.. மொத்தம் நான்கு பேர் தங்கும் அறை.. மற்ற மூவரும் ஏற்கனவே வந்திருந்தனர்.. ஒருவருக்கொருவர் அறிமுகமாகினர்.. சாரா, ஜெனி, கீர்த்தி, லக்க்ஷி,.. அவர்களிடம் சிறு நேரம் பேசிவிட்டு தன் பொருட்களை அடுக்கி வைத்தவள் தன் பெற்றோரை அழைத்தாள்..

சங்கீதா தான் எடுத்தார்.. "லக்க்ஷி என்கூட ஒர்க் பண்றவங்களோட அண்ணன் பையன் கூட அதே காலேஜ் தானாம் லக்க்ஷி.. அவன் பேரு விவேக் நாளைக்கு பாரு " என்றார்.. சரி மா என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க சென்றாள்.. அடுத்த நாள் வகுப்பில் அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது விவேக்கை பார்த்து கொண்டவள் வகுப்பு முடிந்ததும் சென்று பேசினாள்.. "ஹாய், அம் லக்க்ஷனா, நீ தான விவேக்??" , என்றவள் தன் அன்னை சொன்னவரின் பெயரை கூறினாள்..

ஆமா லக்க்ஷனா அத்தை சொன்னாங்க என்று கைகுலுக்கியவன் "ஹாஸ்டல்லாம் எப்படி இருக்கு ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு நான் உதவி பண்றேன்" என்றவனிடம் "எல்லாம் நல்லா இருக்கு.. வேணும்னா கண்டிப்பா கேக்கறேன் விவேக். சரி நான் ஹாஸ்டல் போறேன்" என்று விடைபெற்று ரூமிற்கு வந்தவள் வீட்டிற்கு பேசிவிட்டு அன்று நடத்திய அனாடமி வகுப்பின் நோட்ஸ்ஸை பார்த்திருந்தாள்...

காலேஜ் செல்வது, படிப்பது, வெளியே ஊர்சுற்றுவது என நாட்கள் மிக மகிழ்ச்சியாக சென்றது.. ஆறு மாதம் கடந்த நிலையில் ஒரு நாள் லக்க்ஷியின் போனிற்கு ஒரு கால் வந்தது.. அட்டன் செய்து காதுக்கு கொடுத்தவளிடம் "ஹலோ, லக்க்ஷனா இருக்காங்களா?? " என்றது ஒரு பெண் குரல்.. " லக்க்ஷனா தான் நீங்க யார் பேசுறீங்க " என்றதும் மீண்டும் ஒரு ஆண் குரல் "ஹலோ " என்றது..

"யாரு நீங்க "- லக்க்ஷி

"தெரிலையா "

"இல்லை " யாரென யோசித்தாள்..

"மறந்துட்டியா??? " ஆழ்ந்த குரல்.. சட்டென விளங்கியது அவளுக்கு.. இது ராம்மின் குரல்..

"ராம் " ஆவலாக ஒலித்தது அவள் குரல்...

"ம்ம்ம், எப்படி இருக்க லக்க்ஷி ?? "

சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை அவளுக்கு..மீண்டும் மீண்டும் ராம், ராம் என்றே உளறினாள்...

"ராம் தான் டி, ஏதாது பேசு" என்றான்

அறையை விட்டு வெளியில் வந்தவள் "ராம், எப்படி இருக்க?? என் நம்பர் எப்படி கண்டுபிடிச்ச?? என்னால நம்பவே முடியல.. " என்றாள்

"நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க எங்க காலேஜ் சேர்ந்திருக்க?? " என்று கேட்டவனிடம் தான் படிக்கும் கல்லூரியின் பெயரை கூறியவள் அவன் எங்கு படிக்கிறான் என கேட்டாள்.. நான் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கேன் லக்க்ஷி, அப்பா பிசினஸ் எடுத்து நடத்தணும், அதனால இங்க பக்கத்துல கோவையில் காலேஜ் -ல் படிக்கிறேன் என்றான்..

நம்பர் எப்படி வாங்கின?? என்றவளிடம் ஸ்கூலுக்கு போயிருந்த போது ஆபீஸ் ரூமில் அவள் வீட்டு நம்பர் வாங்கி இங்கே ஒரு பெண்ணை விட்டு அவள் வீட்டில் அவள் அலைபேசி எண்ணை வாங்கியதை கூறினான்...

"என்ன மறந்துட்டியா லக்க்ஷி " என்றவன் கேள்விக்கு அவனை எப்படி மறக்க முடியும் என மனதில் நினைத்தவள் "இல்லை ராம் " என்றாள்.. பிறகு இருவரின் வகுப்புகளைப்பற்றியும் நண்பர்களை பற்றியும் பகிர்ந்து கொண்டனர்..

..........................

பழைய நினைவுகளுடனே உறங்கி போனவள் மறு நாள் காலை வழக்கம் போல் மருத்துமனைக்கு கிளம்பி சென்றாள்... நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தவள் கிடைத்த இடைவெளியில் ராமை அழைத்தாள்.. அவன் இவள் அழைப்பை எடுக்கவில்லை.. இவனை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் விழித்தாள்... ராமோ தன் தொழிற்சாலையில் விரிவாக்க பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான்...

ஒரு வாரம் கழித்து அவளை அழைத்தான் ராம்.. அழைப்பை ஏற்றவள் பேச ஆரம்பிக்கும் முன் " இரண்டு நாள் கழிச்சு புது யூனிட்க்கு பூஜை வச்சுக்கலாமா?? " என இறுக்கமான குரலில் கேட்டான்.. ஏற்கனவே அதற்கான பணியை அவன் மேற்கொண்டிருப்பது தெரியுமாதலால் "ஓகே ராம் " என்றாள்.. "கோயிலுக்கு போகணும் " என்றான் கேள்வியாக.. அவன் கேட்க வருவதை புரிந்தவள் " நேத்தே முடிஞ்சிடுச்சு.. போலாம்" என்றாள்.. சரி என வைக்க போனவனிடம் இன்னும் கோவமா என்றவளிடம்
வெள்ளிக்கிழமை காலை தயாராக இருக்கும்படி கூறி அழைப்பை துண்டித்தான்.. நேரில் பார்க்கும் போது பேசிக்கொள்ளலாம் என சமாதானமைடைந்தாள்..
 
Top