காதல் ஏ ஐ

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
நந்திதா மனதுக்குள்ள ரொம்பவும் சந்தோஷமா ஃபீல் பண்ணுனா. அப்படி அவள் ஃபீல் பண்ணியே பல மாசங்கள் ஆகிட்டது. நந்திதா சரியான 2கே கிட்ஸ் பெண். வயசு 23, அஞ்சடி மூணு இன்ச் ஹைட்டுல அதுக்கேத்தா மாதிரி உடம்பு வாகுன்னு பாத்தாலே அசத்துவா. அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அதான் அவளோட டிரெஸ் சென்ஸ். அவ போடுற எந்த டிரெஸ்ஸையுமே ரொம்ப ரசனையோட தான் செலக்ட் பண்ணுவா. கண்ணை பறிக்கிற கலர், ஜிகினா வேலைப்பாடு இதெல்லாம் சுத்தமா இருக்காது. அது டி ஷர்டாக இருந்தாலும் சரி அல்லது லெஹெங்காவாக இருந்தாலும் இல்ல பேண்ட் ஷர்டா இருந்தாலும் அவளோட டிரெஸ் அவளை மத்தவங்க கிட்ட இருந்து வித்தியாசமாக் காட்டும். எம் பி ஏ படிச்சிட்டு ஒரு பெரிய ஐடி கம்பெனியில வேலை பாக்குறா. சுருக்கமாச் சொன்னா நந்திதாவோட லைஃப் ஒரு வெற்றிக் கதை.

அவளோட அம்மாவும் அப்பாவும் காதல் கல்யாணம். அம்மா தமிழ், அப்பா இந்தி. கல்யாணமாகி ரெண்டாவது வருஷமே ஒருத்தருக்கொருத்தர் ஒத்து வரலன்னு ம்யூச்சுவல் கன்செண்டுல டிவோர்ஸ் வங்கிட்டாங்க. அம்மா டாக்டர் அதோட பரம்பரைப் பண்ம் வேற. அப்பா மட்டும் குறைஞ்சவரா என்ன? அவரோட வீடும் பணக்காரக் குடும்பம் தான். அம்மா நந்திதாவை தன் கஸ்டடியில வெச்சுக்கிட்டாங்க. வேற கல்யாணமா? வேண்டவே வேண்டாம்னு முடிவு செஞ்சிட்டு தன்னோட வேலையில நல்ல கவம் செலுத்தி இன்னைக்கு சிட்டியில ரெண்டு ஹாஸ்பிட்டல் கட்டிட்டாங்க. வருசத்துக்கு இரு தடவை அப்பா வீட்டுல நந்திதா தங்கணும்னு கோர்ட் ஆர்டர். அதனால அவளோட அஞ்சாவது வயசுல இருந்து மே மாசம் முழுக்க டெல்லியில பாக்கி மாசம் சென்னையிலன்னு வாழ்ந்தா நந்திதா. அப்பாவோட இன்னொரு ஓய்ஃப், மகன் அப்படீன்னு இருந்தாங்க. என்ன தான் வருசா வருசம் போனாலும் அவளால அந்தக் குடும்பத்தோட ஒட்டவே முடியல்லை. சாப்பாடா? பழக்க வழக்கமா? என்னவோ? அவளுக்கு பெருசா அப்பா மேல பிடித்தம், பாசம்னு கிடையாது.

சென்னை தான் அவளுக்குப் பிடிச்ச சிட்டி. ஆபீசுக்கு போறது, வரது எப்போதாவது பார்ட்டிகள்ல கலந்துக்கிறதுன்னு இருந்தா. அப்போது தான் அவளுக்கு ஒரு டேட்டிங்க் ஆப் மூலமா சஞ்சய் அறிமுகமானான். மொதல்ல சஞ்சய் அவளைப் பிடிச்சிருக்குன்னு மெசேஜ் அனுப்புனப்ப அவளுக்கு எப்படி ரெஸ்பாண்ட் செய்யன்னு தெரியல. அவனோட ஃபோட்டோவை ஜூம் பண்ணி பார்த்தா. நல்லா இருக்கான்னு தான் தோணிச்சு. சஞ்சயோட அம்மா இந்தி, அப்பா தமிழ்னு இவளோட பேரண்ட்சுக்கு ஜஸ்ட் ஆப்போசிட். அவன் சி ஏ படிச்சிட்டு பெரிய கம்பெனியில் நல்ல வேலைன்னு புரோஃபைல்ல குறிப்பிட்டிருந்தான். சும்மா பேசிப் பார்க்கலாம்னு ஆப் மூலமாவே சேட் பண்ணுனா. அவன் அனுப்புன மெசேஜஸ் எல்லாமே ரொம்ப கண்ணியமாகவே இருந்துது. கொஞ்சம் நம்பிக்கை வரவே, மெல்ல மெல்ல நிறைய மெசேஜ் பண்ண ஆரம்பிச்சா. ஒரு கட்டத்துல எப்படா ராத்திரி வரும் அவன் கூட சேட் பண்ணலாம்னு வெயிட் பண்ற அளவுக்கு வந்தது அவங்க ரிலேஷன்ஷிப்.

அப்ப அவன் துணிஞ்சு நந்திதாவோ நம்பரைக் கேட்டான். ரொம்ப தயக்கத்துக்கு அப்புறம் "உன் நம்பரைக் கொடு"னு பதில் மெசேஜ் போட்டா. அடுத்த செக்கண்டே அவனோட நம்பரை அனுப்பிட்டான். ட்ரூ காலரில் போய் நம்பரை செக் செஞ்சா. சஞ்சய்னு தான் வந்துது. கொஞ்சம் நம்பிக்கை வர வாட்ஸ்ப்பில் ஹாய் அனுப்பி பிறகு அவன் மெசேஜ் செய்ய, இவள் மெசஜ் செய்யன்னு அவங்க பழக்கம் நெருக்கமானது. ஆனாலும் ரொம்பவும் சொந்த விஷயங்களைப் பேசுறதும், ஃபோட்டோ அனுப்புறதும் ரொம்பக் கம்மி தான். சஞ்சய சஞ்சுன்னு கூப்பிட ஆரம்பிச்சா நந்திதா. அதே மாதிரி சஞ்சுவும் அவளை நந்துன்னு கூப்பிட்டான். இப்படியே எத்தனை நாள்?னு நந்திதா நினைக்கவும்

"நந்து! ஷால் வீ மீட்?"னு சஞ்சு கேக்கவும் சரியா இருந்தது.

மெசேஜைப் பார்த்ததுமே ரொம்ப சந்தோஷமாவும் கொஞ்சம் பயமாவும் இருந்தது. ஆனா என்னைக்கு இருந்தாலும் மீட் பண்ணி தானே ஆகணும்னு முடிவு பண்ணி ஓகே னு மெசேஜ் போட்டுட்டா.

"சனிக்கிழமை மாலை 6 மணி அட் காஃபி ஷாப்" போட்டு மெசேஜ்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா மாரி ஒரு எமோஜியும் ஆட் பண்ணி அனுப்பி இருந்தான் சஞ்சய்.

இன்னைக்கு தான் சனிக்கிழமை. மணி 4. மனசுல பட்டாம்பூச்சி, மயில் இதெல்லாம் ஒண்ணும் தோகையை விரிச்சு ஆடல. ஏன்னா இது ஒண்ணும் அவளோட முதல் காதல் கிடையாது. சஞ்சு மேல இருக்குறது காதலா? இல்ல ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப்பான்னு கூட அவளுக்கு தெரியல. ஆனா மனசுல சந்தோஷம். வாழ்க்கையில ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கணும். அப்பத்தான் வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமா இருக்கும். இல்லைன்னா தினமும் காலையில எந்திரிக்கிறது, பல்லு வெளக்குறது, காப்பி குடிக்கிறது, டிஃபன் ஆபீஸ் வேலை, மதியம் சாப்பாடு, வீட்டுக்கு வந்தா ஏதாவது ஓடிடி பிளாட்ஃபார்ம்ல வெப் சீரீஸ்னு மெக்கானிக்கலா ஆயிடும். புதுசா ஒருத்தரை சந்திக்கிறது ஒரு எதிர்பார்ப்பு தானே? இப்போ பாக்கப் போறவங்க நம்ம வாழ்க்கையில என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துவாங்க? முக்கியமான ஆளா மாறுவாங்களா? இல்ல மொத தடவை நடந்தா மாதிரி வேதனையைக் குடுப்பாங்களா?ன்னு யோசிச்சா. எதுனாலும் முதல் அடி எடுத்து வெச்சா தானே தெரியும்?

ஒரு லெஹங்காவை எடுத்து வெச்சவ, ரொம்ப டூ மச்னு ஒரு குர்த்தியும் ஜீன்சும் போட்டுக்கிட்டு அவளோட சின்ன காரையும் எடுத்துட்டு குறிப்பிட்ட காஃபி ஷாப்புக்குப் போயிட்டா.

"ஹாய்" பின்னால இருந்து குரல்.

திரும்பிப் பாக்கவும் சஞ்சய் நின்னுக்கிட்டு இருந்தான். ஃபோட்டோவை விட நேர்ல இன்னமும் மேன்லியா அழகா இருந்தான்.

"ஃபோட்டோவை விட நேர்ல ரொம்ப அழகா இருக்க நந்து"

தான் சொன்ன நெனச்சதை அவன் சொல்லவும் சிரிச்சுட்டா நந்திதா.

ரெண்டு பேரும் உள்ள போயி உக்காந்தாங்க. என்ன பேச? எதைப் பத்தி பேச?ன்னு சங்கடம். என்ன தான் ஃபோன்ல மெசேஜ்ல பேசி இருந்தாலும் நேர்ல கொஞ்சம் தயக்கமா இருந்தது நந்திதாவுக்கு. அவனுக்கும் அப்படித்தான் இருந்தது போல.

"உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"

"உம்"

"உன் ஆஃபீஸ் வேலையெல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?"

"நல்லாப் போகுது"

கொஞ்ச நேரம் அமைதி. வேற என்ன பேசன்னு சஞ்சய் யோசிச்சான்.

"நீ படிச்சது எல்லாமே சென்னை தானா?"

"உம்"

"நந்து! நான் பேச டிரை பண்றேன். நீ இப்படி ஒரு வார்த்தையில பதில் சொன்னா எப்படி? கமான் நந்து! வீ ஆர் நாட் டீனேஜர்ஸ்."அப்படீன்னான் சஞ்சு.

ஒரு மாதிரி ஆயிடிச்சு நந்துவுக்கு.

"சாரி சஞ்சு! எனக்கு என்ன பேசன்னு தெரியல! அதான்"

"கொஞ்சம் அங்கே பாரேன்"ன்னு காமிச்சான் சஞ்சு. அந்த காஃபி ஷாப்புல இன்னொரு இடத்துல ஒரு ஜோடி வாயே மூடாமப் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதுலயும் அந்தப் பொண்ணு பேசப் பேச அந்தப் பையனுக்கு சிரிச்சுக்கிட்டே இருந்தான்.

"சாரி! கம்பேர் பண்ணல நந்து! ஆனா நாமளும் அந்த மாதிரி ஃப்ரீயாப் பேச டிரை பண்ணாலாமே?"னான் சஞ்சு.

கம்பேர் பண்ணுனா நந்திதாவுக்கு சுத்தமா பிடிக்காது. ஸ்கூல் படிக்கும் போது இன்னொரு பையன் உன்னை விட நல்ல மார்க் வாங்கிட்டான் பாருன்னு அம்மா சொன்னாங்கன்னு அவங்க கிட்ட இன்னமும் சரியாப் பேசறதில்ல நந்திதா. நல்லவேளை இவன் கம்பேர் பண்ணல. நாமளும்னு தன்னையும் சேர்த்து தான் சொல்றான்னு கொஞ்சம் ரிலாக்சானா நந்திதா.

அப்போ வெயிட்டர் வந்து ஆர்டர் எடுக்க

"உனக்கு என்ன வேணும் நந்து?"னான். மனசுக்குள்ள இன்னொரு டிக் போட்டுக்கிட்டா நந்திதா.

"சீஸ் சேண்ட்விச் அண்ட் பிளாக் காஃபி"னா. சொல்லிட்டு சஞ்சய் என்ன சொல்றான்னு கொஞ்சம் டென்ஷனா கவனிச்சா. அப்படியே காப்பி அடிச்சா சுயபுத்தியே இல்லாதவன்னு அர்த்தம். நாளைக்கே யாரோ என்னவோ சொன்னாங்கன்னு தன்னையே சந்தேகப்படலாம் அது தான் சுயபுத்தி இல்லாதவங்க செய்வாங்கன்னு அவ தீர்மானம்.

"எனக்கு சிக்கன் நக்கட்ஸ், கேப்புச்சினோ" அப்படீன்னு ஆர்டர் குடுத்தான். மனசுல இன்னொரு டிக்.

மனசுல ரிலாக்ஸ் ஆனதாலயோ என்னவோ நிறையப் பேசுனா நந்திதா.

"இதுக்கு முன்னாடி நீ வேற யாரையாவது இந்த ஆப் மூலமா டேட் பண்ணி இருக்கியா சஞ்சு?"

"உம் பண்ணி இருக்கேன். ஆனா அவங்க அவளோ இண்டெரெஸ்டிங்கா இல்ல!"னான்.

"உன்னைப் பத்தி சொல்லு சஞ்சு"

"இதென்ன இண்டர்வியூவா?"னு கேட்டாலும் பதில் சொன்னான் சஞ்சய்.

அவனோட முழுப்பேரு சஞ்சய் மல்ஹோத்ரா. அவங்க அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா பக்கா தமிழ். டெல்லியில இருக்காங்க. இத்தனை வருசம் ஆகியும் அவங்களுக்கு உள்ள காதல் குறையவே இல்ல. சஞ்சய்க்கு கூடப் பொறந்த ஒரு தங்கச்சி இருக்கா. அவ லண்டன்ல படிச்சுட்டு இருக்கா. அம்மாவோட பேரண்ட்ஸ் எல்லாருமே டெல்லியில செட்டில் ஆயிட்டாங்க. சொந்த வீடு இருக்கு. சென்னையில ஒரு அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்துட்டு தனியா இருக்கான் சஞ்சாய். நல்லா சமைப்பான், ஆனா முக்கா வாசி வெளியில வாங்கித்தான் சாப்பிடுவான்.

"ஏன் அப்படி?"

"நாம சமைச்சதை ஓய்ஃபுக்குக் குடுக்கும் போது தான் குக்கிங்க்கு ஒரு அர்த்தமே வருது இல்லியா?"னான். அவன் பேசுனதைக் கேக்க கேக்க நந்திதாவோட மனசுல குப்புனு பூ மலர்ந்தா மாதிரி ஒரு சந்தோஷம். இப்படி யோசிக்கிற பாய்ஸ் கூட இன்னமும் இருக்காங்கன்னு மனசு சஞ்சய் மேல லேசா சாய ஆரம்பிச்சது.

அன்னைக்கு ஃபுல்லா ரெண்டு பேரும் ஈ சி ஆர் ல இருக்குற பீச், மால் அப்படீன்னு பல இடங்களுக்கு போனாங்க. ஒரு இடத்துல கூட சஞ்சய் அவளைத் தேவையில்லாம தொட முயற்சி பண்ணல. அது மட்டும் இல்ல, அசடு வழியவும் இல்ல. பீச்சுல அலையில நிக்கும் போது லேசா தடுமாறுனப்ப அவளோட தோளை தொட்டு அவளை ஸ்டெடியாக்கிட்டு கையை எடுத்துட்டான். சினிமாவுல காட்டுறா மாதிரி அப்படியே கண்கள் சொருக அவளும் மயங்கல, அவனும் மயங்கல. ஆனா அவனோட டச் அவளுக்குப் பிடிச்சிருந்தது.

சாயங்காலமா திரும்பவும் பார்க் பண்ணி இருந்த இடத்துக்கு வந்தாங்க.

"நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணி இருக்கோம். இனிமே இதை எப்படி எடுத்துட்டுப் போறதுன்னு எனக்கு தெரியல. உனக்கு ஐடியா இருக்கா? உனக்கு என்னை திரும்பவும் மீட் பண்ணனும்னு இருக்கா? இல்லை ஐயோ போதும்டா சாமின்னு இருக்கா?"ன்னு கேட்டான் சஞ்சய்.

கொஞ்சம் நெர்வசா ஆயிட்டா நந்திதா. கொஞ்சம் பெருமையும் கர்வமும் வேற. "அப்போ, இவனுக்கு என் கூட டயம் ஸ்பெண்ட் பண்ண பிடிச்சிருக்கு. அதனால தான் கேக்கறான். எனக்கும் பிடிச்சிருக்கு. ஆனா அதுக்காக ஒடனே வீட்டுக்கு வா, அம்மாவை பொண்ணு கேளுன்னு சொல்ல நான் தயாரா இல்ல. இன்னும் கொஞ்ச நாள் பழகிப் பாப்போம். கொஞ்சம் அதிகமா கிட்ட வந்தான்னா பாத்துக்கலாம்"ன்னு முடிவு பண்ணிக்கிட்டு அவனைப் பாத்தா.

"எனக்கும் ஓகே தான் சஞ்சு! ஆனாலும் நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கணும். அதனால இன்னும் கொஞ்ச நாள் டேட் பண்ணிப் பாப்போம். ஏன்னா அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் ஒருத்தருக்கொருத்தர் சரி வர்லன்னு பிரியக் கூடாது பாரு"னா நந்திதா.

"ஓகே வித் மீ!" அப்படீன்னு சொல்லிட்டு அவ காரை ஸ்டார்ட் பண்ணி போற வரைக்கும் பாத்துக்கிட்டே இருந்தான் சஞ்சய்.

யாரோ பின்னால வந்து நிக்கிறா மாதிரி இருக்க திரும்பினான்.

"என்ன நிகில்? ஃபர்ஸ்ட் டேட் எப்படி? நந்திதா ஓகேவா?"ன்னு கேட்டான் ஒருத்தன்.

"ஷீ இஸ் ஏ டஃப் ஒண். ஆனா நீ ஏன் இப்படி பண்ணச் சொல்லுற ப்ரஹான்? அவளை உனக்கு தெரியுமா?"

"அதெல்லாம் எதுக்கு உனக்கு? நான் சொல்ற வேலையைச் செய்யி. அதுக்குண்டான காசை வாங்கிட்டு போ! தேவையில்லாம கேள்வி கேக்காத" அப்படீன்னு பட்டுனு பதில் சொன்னான் ப்ரஹான்.

"ப்ரஹான், நான் பணத்துக்கு ஆசைப்படுறவன் தான். ஆனா ஒருவேளை நீ இந்தப் பொண்ணை வேற வழியில....தப்பா.....அது தான் உன் திட்டம்னா நான் இல்ல."ன்னு பணத்தை எடுத்தான்.

"ரிலாக்ஸ் நிகில். இவளை அசிங்கப்படுத்துறது என் நோக்கம் இல்ல. இதுக்கு மேல என்னால சொல்ல முடியாது. நிச்சயமா நான் இவளை நீ நினைக்கிறா மாதிரி எதுவும் பண்ண மாட்டேன். இது பிராமிஸ்" அப்படீன்னு சொன்னான் ப்ரஹான்.

கொஞ்சம் நிம்மதியாச்சு நிகிலுக்கு. அவனுக்கு நந்திதா மேல காதல் இல்லைன்னாலும் ஒரு பொண்ணோட மானத்துக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு நெனச்சான். ப்ரஹானை அவனுக்கு 6 மாசமா தான் தெரியும். தெரிஞ்ச வரையில ரொம்ப நல்ல பையன் தான். நிச்சயம் தப்பு எதுவும் பண்ண மாட்டான்னு முடிவு செஞ்சு பணத்தை உள்ள வெச்சான் நிகில்.

"அவ வீட்டுக்குப் பத்திரமாப் போயிட்டாளான்னு மெசேஜ்ல கேளு. அதோட அவ டிரைவ் பண்றதால தான் ஃபோன் பண்ணாம மெசேஜ் போடுறேன்னும் டைப் பண்ணு"னான் ப்ரஹான். அப்படியே செஞ்சான் நிகில்.

வீட்டுக்கிட்ட போயிட்ட நந்திதா மெசேஜைப் பாத்துட்டு மெல்ல சிரிச்சுக்கிட்டா. அவ மனசுல நிகில் என்ற சஞ்சய் இடம் பெற ஆரம்பிச்சான்.
 

Advertisement

Advertisement

Back
Top