Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்....அத்தியாயம் 12.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அம்மாவின் நிலையைப் பார்த்து பயந்து போனாள் அகிலா. அவளுக்கு அம்மா பிழைப்பளா? என்ற பயம் வந்து விட்டது. எப்படியாவது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் விட்டால் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று நம்பினாள் . நல்ல வேளையாக சாந்தா மாமியும் , ஆனந்தும் பைக்கில் வந்து விட்டார்கள். அம்மாவின் நிலையைப் பார்த்து விட்டு அவர்கள் டாக்சி ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்து விட்டது.

அவசர அவசரமாக அதில் ராதாவை ஏற்றி , கூடவே மாமியும் அகிலாவும் போக பைக்கில் பின்னால் வந்தான் ஆனந்த். மருத்துவமனையை அடைந்து டாக்டர்கள் ஓடி வந்தனர். அம்மாவைப் பார்த்து விட்டு உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

நாற்காலி ஒன்றில் சாந்தா மாமி , மற்றொன்றில் ஆனந்த் அமர்ந்திருக்க அகிலா நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். மாமியோ , ஆனந்தோ எங்கே உன் தந்தை? ஏன் நீ வெளியில் வந்தாய்? என்று கேட்காதது அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"முதலில் அம்மா உடம்பு குணமாக வேண்டும். பிறகு தான் மற்றது. கடவுளே என் அன்னையைக் காப்பாற்று" என்று மனம் இடைவிடாமல் பிரார்த்தித்தது. நேரம் மிக மெதுவாக நகர்வதாகத் தோன்றியது அவளுக்கு. சுமார் அரை மணி நேரம் கழிந்த உடன் மருத்துவர் வெளியில் வந்தார்.

"ஏம்மா! நீங்க தானே நோயாளியோட மக? உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? அவங்களுக்கு அதிர்ச்சி எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு? ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு. அதைத் தாங்கற சக்தி இல்லாம உடம்புல இருக்கற எல்லா ரத்தமும் மூளைக்குப் போயி மூளை ரத்தக் குழாய்கள் எல்லாம் வெடிக்கற நிலையில் கொண்டு வந்திருக்கீங்களே? உங்களுக்கு அறிவு இல்ல?"

"ஐயையோ! டாக்டர்! இப்ப எங்கம்மாவுக்கு எப்படி இருக்கு?"

"இப்பக் கேளு? இந்த அக்கறை அவங்களைப் பாத்துக்கறதுல இல்லியே? ரொம்பக் கஷ்டப்பட்டு போராடி ரத்தம் மூளைக்கு அளவாப் போகும் படி செஞ்சிருக்கோம். இப்ப பரவாயில்ல. ஆனா எப்ப நினைவு திரும்பும்னு சொல்ல முடியாது. "

"அவங்க பிழைச்சிடுவாங்க இல்ல?"

"வாய்ப்பு இருக்கு . அவ்வளவு தான் சொல்ல முடியும். சில பரிசோதனைகள் பண்ணச் சொல்லியிருக்கேன். அதோட முடிவுகளைப் பார்த்துட்டு தான் மேற்கொண்டு என்ன பண்ணணும்னு என்னால தீர்மானம் பண்ண முடியும். நீங்க இப்ப முதல்ல 15,000 ரூவா கட்டிடுங்க! நாங்க பணம் கட்டாம யாரையும் சேக்கறது இல்ல. ஆனா நோயாளியோட நிலையைப்பாத்து சேர்த்துக்கிட்டோம். "

"எப்பக் கட்டணும் டாக்டர்?"

"இப்பவே கட்டிடுங்க! அது தவிர 5000 ரூவா பரிசோதனைகள் செஞ்சதுக்கு கட்டணும். இன்னும் ரெண்டு மணி நேரத்துல முடிவு வந்துடும். அதைப் பாத்துட்டு நான் உங்களைக் கூப்பிடுறேன்" என்றவர் போய் விட்டார்.

திகைத்துப் போய் உட்கார்ந்து விட்டாள் அகிலா. இப்போது கிட்டத்தட்ட 20,000 ரூவாய் தேவை. எங்கள் வங்கிக் கணக்கில் 32,780 இருக்கிறது. அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இனி வரும் செலவுகளுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? அம்மாவை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்?" என்று மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டாள்.

மாமி அருகில் வந்தாள்.

"அகிலா! உங்கம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. பொழச்சிடுவா! நீ கவலைப் படாத! முதல்ல முகத்தைத் தொடச்சிக்கோ! வெளிய போயி சூடா காப்பி சாப்பிடுவோம். அப்ப கொஞ்சம் தெம்பு வரும். இப்படியே உக்காந்திருந்தா ஒரு வேலையும் ஆகாது. எழுந்திரு சொல்றேன்" என்று கட்டாயப்படுத்தி ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றாள். கூடவே ஆனந்தும்.

"பணத்துக்கு என்ன பண்ணப் போற அகிலா? வெச்சிருக்கியா?" என்றான் ஆனந்த்.

"எங்கிட்ட 32,000 இருக்கு, அதை வெச்சி இப்ப அவங்க கட்டச் சொன்ன தொகையைக் கட்டிடலாம். அப்புறம் தான் என்ன பண்ணன்னு தெரியல்ல! பேசாம ஏதாவது தர்ம ஆஸ்பத்திரிக்கு அம்மாவை மாத்திடலாமா?"

"ஏதாவது உளறாத! இப்ப முதல்ல ஆஸ்பத்தியில கட்டச் சொன்ன பணத்தைக் கட்டிடுவோம். அப்புறம் என்ன செய்யங்கறதை அப்புறம் பாத்துக்கலாம். காப்பி குடிச்சிட்டு இதோ இந்த ஏ டி எம்முல பணத்தை எடுத்துக்குவோம்" என்றவன் சொன்னபடி செய்ய வைத்தான். 20,000 பணம் கட்டியாயிற்று.

மதியம் மூன்று மணி வாக்கில் மருத்துவர் வந்தார்.

"இங்க பாரும்மா! உங்கம்மாவோட பரிசோதனை ரிசல்ட் வந்தாச்சு! அதன்படி பாத்தா அவங்க மூளையில அதிக ரத்தம் பாய்ந்ததன் காரணமா ரத்தக்குழாய்கள் சில இடங்களில டேமேஜ் ஆகியிருக்கு. அதை சரி செஞ்சே ஆகணும். இல்லைன்னா திரும்பத் திரும்ப இந்த மாதிரி வரும். அப்படி வந்தா பொழைக்கிறது கஷ்டம். "

"ஐயையோ! அப்டீன்னா?"

"பயப்படாதீங்க! இப்ப நிலைமை சீரியஸ் தான். ஆனா சரி செஞ்சிடலாம். ஒரு ஆப்பரேசன் செய்யணும். நாளைக்கே வெச்சுக்கிட்டா அவங்களுக்கு நல்லது. நல்ல வேளையா ஆப்பரேசனைத் தாங்குற சக்தி அவங்களுக்கு இருக்கு. என்ன சொல்றீங்க?"

"அதுக்கு எவ்வளவு பணம் செலவாகும் டாக்டர்?"

"ஆப்பரேசனை வெளி நாட்டு டாக்டர் தான் செய்யப் போறாரு,. அவருக்கு கட்டணம் 3 லட்சம் , அது தவிர தங்கற செலவு , மருந்து செலவுன்னு எப்படியும் 6 அல்லது 7 லட்சம் ஆகும்."

விக்கித்துப் போனாள் அகிலா. பேசா நா எழவில்லை.

"அந்த ஆப்பரேசன் செஞ்சா அவங்க கண்டிப்பா பொழச்சிடுவாங்களா?"

"நூறு சதவிகிதம் பொழச்சிடுவாங்க! அது மட்டுமில்ல! அதுக்கப்புறம் அவங்களுக்கு இந்தத் தொல்லையே இருக்காது. பூரண ஆரோக்கியம் திரும்பக் கெடச்சிடும்"

"சரி டாக்டர்! நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்" என்றான் ஆனந்த்.

டாக்டர் போய் விட்டார். மாமியும் ஆனந்தும் இவள் முகத்தைப் பார்த்தனர்.

"வேற வழியில்லை ஆனந்த்! எங்கம்மாவை தர்மாஸ்பத்திரிக்கு மாத்த வேண்டியது தான். அத்தனை பணத்துக்கு நான் எங்கே போக?" என்றாள் அகிலா. கண்களில் நீர் விழுந்து விடுவேன் என்று மிரட்டியது.

"நீ சும்மாயிரு!" என்ற மாமி ஆனந்த் பக்கம் திரும்பி "தம்பி ! எங்கிட்டக் கொஞ்சம் பணம் இருக்கு. ஒரு லட்சம் வரை தேறும். அதை எடுத்துக்கலாம்" என்றாள்.

"மாமி! என்னால அவ்வளவு பணத்தை உங்க கிட்டருந்து வாங்கிக்க முடியாது. எப்படித் திருப்பிக் கொடுப்பேன்?"

"இப்ப பிரச்சனை நீ எப்படித் திருப்பிக் கொடுப்பேங்கறது இல்ல! மேற்கொண்டு அஞ்சு லட்சம் வரை தேவைப் படுதே! அதுக்கு என்ன பண்ணங்கறது தான். " என்றான் ஆனந்த்.

"அகிலா! உங்கப்பா தான் இப்ப வசதியா இருக்காறே? அவர்ட்ட கேட்டா என்ன? பொண்டாட்டிக்காக அஞ்சு லட்சம் தர மாட்டாரா?"

"இல்லை! மாமி! நீங்க நினைக்கிறா மாதிரி அவரு நல்லவர் இல்ல! அவர்ட்ட பணம் எதிர்பாக்கறது முட்டாள் தனம்." என்றவள் நடந்தது அனைத்தையும் சொன்னாள்.

மாமி பாவம் நொந்து போய் விட்டாள்.

"இப்படியும் ஒருத்தன் இருப்பானோ? அவன் நல்லவன் திருந்திட்டான்னு நம்பித்தானே உங்களை அவன் கூட அனுப்பி வெச்சேன்? ராதாவுக்கு உடம்புக்கு வரதுக்கு நானே காரணமாயிட்டேனே? நான் நல்லது நெனச்சித்தான் செஞ்சேன். அது இப்படி ஆயிட்டுதே?"

"கவலைப்படாதீங்க மாமி! இதுக்கு நீங்க காரணம் இல்லை! இப்ப அதை நெனச்சி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா சரியாயிடுமா? அதை விடுங்க! எனக்கு ஒரு யோசனை தோணுது,. நான் போயிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்" என்ற ஆனந்த் வெளியேறினான்.

சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் வந்து விட்டான் ஆனந்த். பணத்தையும் தயார் செய்து விட்டான். அகிலா ஏது இத்தனை பணம்? என்று கேட்டதற்கு சொல்ல மறுத்து விட்டான். மாமிக்குத் தெரியும். ஆனால் அவளும் சொல்லவில்லை. அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த அகிலாவுக்கும் மனம் இல்லை. எப்படியோ பணம் கிடைத்தால் போதும் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மன நிலையில் அவள் இருந்தாள்.

ஆப்பரேசன் நல்லபடியாக முடிந்தது. அம்மாவின் உடல் நிலை சீராக முன்னேறியது. ஒரு வாரத்தில் அவளை சாதாரண அறைக்கு மாற்றி விட்டார்கள். சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார்கள் டாக்டர்கள். மருத்துவமனை தரும் உணவைத்தான் ராதா உண்ண வேண்டும். நிறைய ஊசி மாத்திரைகள் என பணம் தண்ணீராய்ச் செலவழிந்தது.

அகிலாவும் அம்மா பிழைக்கட்டும் பிறகு கணக்குப் பார்த்து ஆனதுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து கடனை அடைத்து விடலாம் என்று சும்மா இருந்து விட்டாள்.

ராதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். தினமும் அவளைப் பார்க்க சாந்தா மாமி வருவாள். ஆனால் ஏனோ ஆனந்த் ராதாவுக்கு நினைவு திரும்பியதிலிருந்து வரவேயில்லை. இன்னும் இரு தினங்களில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டார் டாக்டர். மாமியை அம்மாவுக்குத் துணையாக வைத்து விட்டு விட்டு பழைய வீட்டுக்குப் போய் பொருட்களை அடுக்கி , கொஞ்சம் மளிகைப் பொருட்கள் வாங்கி என இயங்கினாள் அகிலா.

அம்மா வந்து விட்டாள். வீடே அதன் பிறகு தான் பொலிவாக இருப்பதாகப் பட்டது அகிலாவுக்கு. பால் மட்டும் தான் குடிக்கலாம். ஜில்லான பண்டங்கள் சாப்பிடக் கூடாது , வெண்ணெய் , நெய் சுத்தமாகக் கூடாது. தினம் சாப்பாட்டில் ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் அதுவும் நல்லெண்ணெய் தான். என மருத்துவர்கள் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு தான் அம்மாவை அனுப்பினார்கள்.

காலை இரண்டு இட்லி காரமில்லாத தக்காளிச் சட்னியோடு , மதியம் ஒரு கப் சோறு , ஒரு கப் வெந்த காய்கறிகள் அல்லது கீரை , ரசம் அல்லது சாம்பார் கொஞ்சம் மோர். இரவுக்கு சப்பாத்தி பருப்பு. இது தான் அம்மாவின் சாப்பாடு. தனக்கும் அவ்வாறே செய்து கொண்டாள் அகிலா.

சாந்தா மாமி தான் அம்மாவுக்குத் துணையாக இருந்தாள். அகிலா மீண்டும் வேலைக்குப் போகத் துவங்கி விட்டாள்.

"ஏன் மாமி! நம்ம இல்லத்துல இருக்கறவங்க எல்லாரும் என்னை வந்து பாத்தாங்க? ஆனா ஆனந்த் வரவேயில்லியே? அவனுக்கு விஷயமே தெரியாதா?"

"ஏன் தெரியாம? உன்னை ஆஸ்பத்திரியில சேர்த்ததே அந்தத் தம்பி தான். அகிலா பாவம் சின்னப் பொண்ணு தவிச்சிப் போயிட்டா. அப்ப பக்கபலம்மா இருந்தது முழுக்க முழுக்க அவன் தான்."

"அப்படியா? நல்ல பையன் தான் போலிருக்கு"

"இப்பவாவது புரிஞ்சதே! இனியாவது அவனை உன் மாப்பிள்ளையா ஏத்துக்கோயேன்!"

"அது எப்படி மாமி முடியும்? மத்தவங்களுக்கு உதவுறான். அதுக்குன்னு அவன் பணத்தாசை இல்லாதவன்னு ஆகிடுமா? என் மகளைக் கொடுமைப் படுத்த மாட்டாங்கறது என்ன நிச்சயம்?" என்றாள் ராதா.

"யாரைப் பாத்து பணத்தாசை புடிச்சவன்னு சொல்ற? ஆனந்தையா? உன் உசிரைக் காப்பாத்தினவனே அவன் தான் தெரியுமா? அவன் மட்டும் அன்னிக்கு இல்லாட்டா நீ இந்நேரம் நீ இறந்து போயிருப்ப! உன் பொண்ணு அனாதையா நின்னிருப்பா! பேச வந்துட்டா பெரிசா" என்றாள் மாமி படபடப்பாக.

"நீங்க என்ன சொல்றீங்க மாமி? ஆனந்த் என்னை எப்படிக் காப்பாத்தினான்? "

"உன் சிகிச்சைக்குப் பணம் குடுத்தவன் அவன் தான். அதுவும் ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல! ஆறு லட்ச ரூவா குடுத்தான். "

திகைத்துப் போனவளாய் மாமியையே பார்த்திருந்தாள் ராதா.

"என்ன முழிக்கற? உனக்கு உடம்பு ரொம்ப சீரியசா இருக்கு உடனே ஆப்பரேசன் பண்ணணும்னு சொல்லிட்டார் டாக்டர். அதுக்கு 6 லட்ச ரூவா செலவாகும்னு வேற சொல்லிட்டார். பாவம் அகிலா எங்கே போவா? என்ன செய்யன்னு தெரியாம முழிச்சிண்டு இருந்தா. அப்ப ஆனந்த் தான் பணத்தைக் கொண்டு வந்து குடுத்து ஆப்பரேசனுக்கு ஏற்பாடு பண்ணும்படி சொன்னான்."

"அவனுக்கு ஏது அவ்வளவு பணம்?"

"அப்படிக் கேளு! அவன் கிட்ட அவம்மா நினைவா கொஞ்சம் நகை இருந்தது. அதை அவன் பொக்கிஷமா வெச்சிண்டு இருந்தான். எங்கம்மா ஞாபகார்த்தமா எங்கிட்ட இருக்கறது இது ஒண்ணு தான் மாமி. இதை என் மனைவிக்குக் குடுக்கணும்னு எங்கம்மா ஆசைப்பட்டாங்களாம். அதுக்காகத்தான் வெச்சிருக்கேன்னு அடிக்கடி சொல்லுவான். அந்த நகைகளை அடமானம் வெச்சி தான் பணம் பொரட்டினான். அகிலா தனக்குக் கிடைக்க மாட்டான்னு தெரிஞ்சும் அவன் உங்களுக்கு உதவி செஞ்சான். நீ அவனைப் பார்த்து சொல்ற பணத்தாசை பிடிச்சவன்னு இது நியாயமா?."

உடல் நடுங்க அமர்ந்திருந்தாள் அவள்.

"இன்னி வரைக்கும் இந்த விஷயம் அகிலாவுக்குக் கூடத் தெரியாது. என்னையும் சொல்லக் கூடாதுன்னுட்டான். நீ இந்தப் பணத்தை எப்பத் திருப்பித் தரப் போற? எப்படித் தரப் போறன்னு என்னிக்காவது உன் பொண்ணைக் கேட்டிருப்பானா? இல்லை அவளால தான் திருப்பிக் கொடுக்க முடியுமா? அகிலாவோட அம்மான்னா எனக்கும் அம்மா மாதிரி தானே மாமின்னு சொன்னான் அவன். ஆனந்த் மாதிரி மாப்பிள்ளை அமைய நீ குடுத்து வெச்சிருக்கணும். அது புரியல்ல உனக்கு. எவனோ ஒரு பொறம் போக்கு உன்னை ஏமாத்திட்டான்னா அதுக்காக ஆனந்தை பழி வாங்கறது என்ன நியாயம்?" மாமி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள்.

ராதா ஏதோ சொல்ல வாய் திறந்தாள் மிகச் சரியாக அப்போது ஆனந்த் இரண்டு நபர்களை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

"ஆண்ட்டி!! இவங்க உங்க அண்ணன் அப்டீன்னு சொன்னாங்க! உங்களைப் பாக்கணும்னாங்க! அதான் அழைச்சுக்கிட்டு வந்தேன்" என்றான். கார்த்திகேயனும் , செந்தில் நாதனும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் பாசம் மேலிட "அண்ணே!" என்று கத்தியடி எழப்போனவளை அழுத்திப் பிடித்தாள் மாமி.

"ராதா! என்னம்மா உனக்கு ரொம்ப உடம்பு சரியில்லையாமே? சாகப் பொழைக்கக் கெடந்தியாமே? எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருக்கலாம் இல்லம்மா?" என்றார் கார்த்திகேயன்.

"இல்லண்ணே! என்னென்னவோ நடந்து போச்சி! சொல்லி அனுப்புனா நீங்க என்ன நினைப்பீங்களோ தெரியல்ல! அதான்"

"இப்படி எளச்சு துரும்பாப் போயிட்டியேம்மா! இப்பவே கெளம்பு நம்ம வீட்டுக்குப் போகலாம். ஆமா! உன் புருசன் எங்கே?" என்றார் செந்தில் நாதன்.

"புருசனாம் புருசன்! " என்றவள் நடந்தது முழுக்க சொன்னாள்.

"அந்த ஆள் திருந்தவே இல்லண்ணே! அது தெரியாம நானும் அகிலாவும் அவர் கூட உங்க வீட்டுக்கு வந்தோமே? அது தான் எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சி! என்னவோ அப்பாவோட முகத்தைப் பாத்துட்டேன். அந்த நிம்மதி தான் எனக்கு"

அண்ணன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"இத்தனை நடந்திருக்கா? சரி போனது போகட்டும். அப்பா தான் உனக்கு விடுதலைப் பத்திரம் கொடுத்தாரே தவிர நாங்க குடுக்கல்ல! எங்களுக்கு நீ இப்பவும் செல்ல தங்கச்சி தான். உனக்கு உன்னோட பங்கைக் குடுத்துட்டுப் போகத்தான் நாங்க வந்தோம்!" என்றார் செந்தில் நாதன்.

"என்னை மன்னிச்சிடுங்க அண்ணே! எனக்கு எதுவும் வேணாம். எனக்குப் பணம் வந்த விசயம் தெரிஞ்சதுன்னா அந்த ஆளு அதான் நாகராஜன் திரும்ப என்னையே சுத்தி சுத்தி வந்து நிம்மதி இல்லாமப் பண்ணிடுவான். அதுக்குன்னு நான் உங்க உறவே வேண்டாம்னு சொல்ல மாட்டேன். உங்க தங்கச்சியா அந்த வீட்டுக்கு வந்து போவேன். அது போதும்ணே"

மூவரும் கண் கலங்கினர்.

"இருந்தாலும் பொறந்த வீட்டுச் சீதனமா ஏதாவது வாங்கிக்கம்மா! அப்பத்தான் எங்க மனசு ஆறும்" என்றார் கார்த்திகேயன்.

"அண்ணே! நீங்க நல்ல நேரத்துல தான் வந்திருக்கீங்க! அடுத்த வாரம் என் பொண்ணோட கல்யாணம் வெச்சிருக்கேன்" அவள் சொல்லச் சொல்ல உள்ளே நுழைந்தாள் அகிலா. அம்மா சொன்னதன் பொருள் புரிய அவள் முகம் வெளிறியது. ஆனந்தைப் பார்த்தாள். அவனும் வெளியில் செல்ல எத்தனித்தான்.

"நில்லுங்க தம்பி! எப்ப கல்யாணம்?யாரு மாப்பிள்ளை? இதெல்லாம் தெரிஞ்சிக்காமப் போறீங்களே?" என்றாள் ராதா. அவனும் நின்றான்.

"இதோ நிக்கிறாரே! ஆனந்த் இவரு தான் மாப்பிள்ளை! அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை முஹூர்த்தம்! நீங்க கண்டிப்பா வந்துடுங்க அண்ணே!" என்றாள் அவள்.

ஓடி வந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அகிலா. பேச்சு வராமல் மகிழ்ச்சியில் மூழ்கி நின்றிருந்தான் ஆனந்த். அவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

"ரொம்ப சந்தோசம் தங்கச்சி! உனக்குத்தான் கல்யாணச் சீரு குடுக்க முடியல்ல! உன் மகளுக்காவது கொடுக்கறோம்." என்றனர் அண்ணன்கள் இருவரும்.

"இதோ பாருங்கோ! இவா சொல்லக் கூச்சப்படுவா! சமயத்துல சொல்லவே மாட்டா! அதனால நான் சொல்லிடறேன்! இதோ நிக்கறானே புள்ளையாண்டன் அவன் தன் தாயாரோட நகைகளை அடகு வெச்சித்தான் உங்க தங்கையைக் காப்பாத்தினான். நீங்க அதை மீட்டுக் குடுத்துடுங்கோ! அது தான் அகிலாவுக்கு நீங்க செய்யற தாய்மாமன் சீரு. அதை கல்யாணத்தன்னிக்கு அவ போட்டுப்ப்பா" என்றாள் சாந்தா மாமி. சரி எனத் தலையாட்டினர் இருவரும்.

உலகத்தையே மறந்த நிலையில் ஆனந்தும் , அகிலாவும் ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கியபடி நின்றிருந்தனர். மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற நினைவே அவர்களிடம் இல்லை.

"ஆனந்து! பாத்தது போதும்ப்பா! இங்க நாங்க எல்லாம் இருக்கோம்! அவ கழுத்துல தாலி கட்டிட்டு அப்புறம் பாத்துண்டே இரு! யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டா" எனவும் அங்கு சிரிப்பலை பரவியது.

மரங்கள் அவர்கள் மீது மலர்களைத்த்தூவி வாழ்த்த தூரத்தில் கோயில் மணி ஓசை இனி இவள் வாழ்வில் என்றும் மங்கலம் மங்கலம் என்று முழங்கியது.

சுபம்
 
Nirmala vandhachu
 
Top