Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்.....அத்தியாயம் 11…

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
வீட்டிற்கு வந்த பிறகு அம்மா வெடித்து அழுதாள்.

"என்னை எதுக்கு அங்க கூட்டிக்கிட்டுப் போயி இப்படி அவமானப்படுத்துனீங்க? நான் கேட்டேனா? எனக்கு சொத்து வேணும்னு எப்பாவாவது உங்க கிட்ட சொல்லியிருக்கேனா? இப்பத்தான் கொஞ்சம் தலைவலி இல்லாம வாழ ஆரம்பிச்சேன். அது உங்களுக்குப் பொறுக்கலையா?" என்று அழுதாள்.

அகிலாவுக்கும் அப்பா மீது கோபம் தான். கடுமையாக நாலு வார்த்தை பேச வேண்டும் என்று துடித்த நாவை அடக்கிக் கொண்டாள். இருந்தும் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"நான் தான் மொதல்லயே சொன்னேனே? அம்மாவுக்கு எந்த அதிர்ச்சியும் குடுக்கக் கூடாதுன்னு. நீங்க எதுக்கு திடீர்னு சொத்து பேச்சை எடுத்தீங்க? அதனால தான் அம்மாவுக்கு அவமானம் சீ! " என்றவள் அம்மா பக்கம் திரும்பினாள்.

"அம்மா! நீ கலவலைப் படாதம்மா! அவங்க உறவும் வேணாம். சொத்தும் வேணாம். இருக்கறதை வெச்சுக்கிட்டு நாம சந்தோஷமா இருப்போம்" என்றாள்.

"அவங்க உறவு வேண்டாம்னு சொன்ன சரி ! ஆனா சொத்தை எதுக்கு வேண்டாம்னு சொல்ற? கால்ப்பங்கு கிடைச்சாக்கூட பல கோடி தேறும். அதை விட முடியுமா?"

"இதப்பாருங்க! திருப்பி திருப்பி அதைப் பேசறதால எந்த உபயோகமும் இல்ல! அதான் எங்கப்பா என்னை மகளே இல்லைன்னு எழுதி வெச்சிட்டுப் போயிட்டாரே?அப்புறம் எப்படி நான் சொத்துக்கு உரிமையுள்ளவளாவேன்?"

நாகராஜன் முகத்தில் பிரகாசம். அருகில் வந்த அவன் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அகிலாவையும் உட்காரச் சொன்னான்.

"ராதா! நானே உங்கிட்டப் பேசணும்னு இருந்தேன். என்ன தான் உங்கப்பா உன்னை மக இல்லைன்னு எழுதியிருக்காருன்னே வெச்சுக்கிட்டாலும் , அது போலியானது , உங்க அப்பா தன் சுய நினைவோட அதை எழுதலைன்னு சொல்லி வாதாடலாம். "

"அப்டீன்னா? எனக்குப் புரியலையே?"

"நீ உங்க அண்ணனுங்க மேல கேஸ் போடணும். கவலைப் படாத! எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன். நீ கையெழுத்து மட்டும் போட்டா போதும். எனக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தரு இருக்காரு. அவரை வரச் சொல்லட்டுமா?"

"இருங்க இருங்க! அவசரப்படாதீங்க! நான் எதுக்கு அவங்க மேல கேஸ் போடணும்? "

"புரியலையா? பெண்களுக்கும் பிறந்த வீட்டு சொத்து மேல உரிமை இருக்குன்னு இப்ப சட்டம் கொண்டு வந்துட்டாங்க! அந்த பாயிண்டை வெச்சி வக்கீல் வாதாடுனார்னா நம்ம பக்கம் கண்டிப்பா ஜெயிக்கும்"

மௌனமாக அமர்ந்திருந்தாள் ராதா. அவள் மனம் என்னென்னவோ யோசித்துக் கொண்டிருந்தது.

"என்ன ஒண்ணும் பேசாம இருக்க? சரின்னு சொல்லு ராதா" என்றார் நாகராஜன்.

"இல்லைங்க எனக்கு சம்மதம் இல்லை! என்னை அருமை பெருமையா வளத்த எங்கண்ணனுங்களுக்கு எதிரா என்னால கேஸ் குடுக்க முடியாது! அவங்களுக்கு நான் வேண்டாதவளா இருக்கலாம். ஏன்னா நான் செஞ்ச காரியம் அப்படி! ஆனா எனக்கு அவங்க வேணும்! எங்க இருந்தாலும் அவங்க நல்லா இருக்கணும். நான் வழக்குப் போட மாட்டேன்" என்றாள் ஆணித்தரமாக.

அப்பாவின் முகம் மாறியது. அகிலாவுக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று பயமாக இருந்தது. கஷ்டப்பட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டார் நாகராஜன்.

"உனக்குப் புரியல்ல ராதா! நாம வழக்கு போடப் போறோம் தான். ஆனா அது நீதி மன்றதுக்கு போகிறதுக்குள்ள உங்க வீட்டுலருந்து சமாதானம் பேச வந்துடுவாங்க! ஏன்னா அவங்க சொத்துக் கணக்கெல்லாம் குடுத்தாகணும் இல்ல? அதை அவங்க விரும்ப மாட்டாங்க! அப்படி அவங்க வரும் போது பெரிய தொகையாக் கேட்டு வாங்கிக்கலாம். அவங்களுக்கும் நல்லது , நமக்கும் லாபம். என்ன சொல்ற?"

"பச்சையா சொல்லப் போனா வழக்குப் போடுவோம்னு சொல்லி அவங்களை மிரட்டிக் காசு பறிக்கணும்கறீங்க ! அப்படித்தானே? அதுக்குப் பேரு பிளாக் மெயில். என்னை ரவுடித்தனம் பண்ணச் சொல்றீங்களா? என்னால முடியாது"

"நீ இப்படி நினைக்கறியே? அவங்க அப்படி நினைக்கறாங்களா? அப்பா தான் தள்ளி வெச்சிட்டாரு. நாமாவது தங்கச்சிக்கு கொஞ்சம் கொடுப்போம்னு தோணுச்சா அவங்களுக்கு? நீ தான் அண்ணன் அண்ணன்னு உருகற! அவங்களுக்குப் பாசமே இல்ல!"

"நான் இருக்கறபடி இருந்திருந்தா என்னை தங்கத் தட்டுல வெச்சு தாங்கியிருப்பாங்க! அதைத்தான் நானே கெடுத்துக்கிட்டேனே? இப்ப எந்த முகத்தை வெச்சுக்கிட்டு போகிறது?"

"என்னடி சும்மா அதையே சொல்லிட்டு இருக்க? ஏதோ முடிஞ்சாச்சி அதை விடு. பழசைப் பத்திப் பேசறதால நமக்கு என்ன லாபம்? நீ இன்னொரு தடவை போயி , இந்த மாதிரி எங்க வீட்டுக்காரர் உங்க மேல கேஸ் போடணும்னு சொல்லுறார். அப்படி போட்டா உங்க மானம் தான் போகும். அதனால எனக்குண்டான பாகத்தைக் குடுத்துடுங்கன்னு கேட்டுப் பாரேன்"

இதைக் கேட்டதும் அம்மா எழுந்து விட்டாள்.

"ஏங்க! உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே இல்லியா? நான் நல்ல குடும்பத்துல பொறந்தவ! எனக்கு மானம் ரோஷம் எல்லாமே இருக்கு. நான் இன்னொரு தரம் எங்க வீட்டுக்குப் போறதோ! சொத்து கேக்குறதோ நடக்கவே நடக்காது. என்னை வற்புறுத்தாதீங்க" என்று சொல்லி விட்டு உள்ளே எழுந்து போய் விட்டாள்.

நாகராஜனின் பார்வை இப்போது அகிலாவின் மேல் விழுந்தது. மெல்ல அவளருகில் வந்தார்.

"அம்மா அகிலா! நான் சொல்றதை நீயாவது புரிஞ்சிக்கோம்மா! கொறஞ்சது 10 கோடி வரும். அதை யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா? நீ முன்ன ஒரு பள்ளியில வேலை பாத்தியே? அந்த மாதிரி பள்ளி நீயே ஆரம்பிச்சி நடத்தலாம். கொஞ்சம் அம்மா கிட்ட எடுத்து சொல்லும்மா" என்றார்.

"இதப்பாருங்கப்பா! இந்த விஷயத்துல நான் அம்மாவைக் கட்டாயப்படுத்த மாட்டேன். அது அவங்க வீடு அவங்க இஷ்டம். நமக்கு கட்டாயப்படுத்த உரிமையே இல்ல!"

முகம் மாறியவர் ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.

மேலும் இரு தினங்கள் சென்றன. எப்போதும் வழக்குப் போடு வழக்குப் போடு என்று நச்சரித்துக் கொண்டிருந்தார் அகிலாவின் தந்தை. ராதாவுக்கு இம்சையாக இருந்தது. கோபத்தில் கத்தி விட்டாள் ராதா.

"ஏன் இப்படி சொத்து சொத்துன்னு உசிரை வாங்கறீங்க? கடைசியா சொல்றேன் என்னால அவங்க மேல கேஸ் போட முடியாது. உங்களால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துக்குங்க!"

"என்னடி வார்த்தை ரொம்ப நீளுது? இத்தனை நாள் நீ இருக்கியா செத்தியான்னு கூட அவங்க பாக்கல்ல? அவங்க மேல பாசம் பொத்துக்கிட்டு வருதோ?"

"ஏன் இத்தனை நாள் நீங்க கூடத்தான் நாங்க இருக்கோமா செத்தோமான்னு பாக்கல்ல? அதுக்குன்னு உங்க மேல கேசா போட்டோம்? நீங்க கூப்பிட்ட ஒடனே உங்களை ,மன்னிச்சி நாங்க உங்க கூட வரலையா? "

"நீ என்னை மன்னிச்சியா? நல்லா இருக்கு நியாயம்? நீ தான் என்னை ஏமாத்தினது ? நம்ப வெச்சுக் கழுத்தறுத்துட்டு பேசறா பாரு பேச்சு"

அந்த நிலையிலும் சிரிப்பு வந்தது ராதாவுக்கு.

"என்ன ? நான் உங்களை ஏமாத்தினேனா? நம்ப வெச்சி கழுத்தறுத்தேனா? வெளிய சொல்லாதீங்க சிரிக்கப் போறாங்க!"

"வெளிய சொன்னா என்ன? காதலிக்கும் போது எங்க வீட்டுல என் மேல உசிரையே வெச்சிருக்காங்கன்னு நீ சொல்லல்ல? எனக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்கன்னு சொன்னியே? அதை நம்பித்தானே நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சேன்? கல்யாணத்துக்கப்புறம் உனக்கு ஒண்ணுமே கிடைக்கலியே ?அது ஏமாத்தறது இல்லியா?"

"நீங்க ஒரு வார்த்தை உன் சொத்துக்காகத்தான் காதலிக்கறேன்னு சொல்லியிருந்தா நான் அப்பவே உங்களை விட்டு விலகியிருப்பேன்? நீங்களும் ஏமாந்திருக்க வேண்டாம் , நானும் நல்லா வாழ்ந்திருப்பேனே? ஏன் அதைச் செய்யல்ல?"

கோபத்தில் கண்கள் சிவந்தன நாகராஜனுக்கு.

"வெட்டி நாயே ! இத்தனை ஆண்டுகளா கஷ்டப்பட்டும் உன் திமிரு இன்னும் அடங்கலையே? உங்களுக்குத்தான் பணத்து மேல ஆசையில்லையே அப்புறம் ஏன் நாய் மாதிரி நான் கூப்பிட்ட ஒடனே ஆத்தாளும் மகளும் வந்தீங்க? நல்லா சாப்பிடலாம் , வசதியா வாழலாம்னு தானே?"

அவர் பேசிய வார்த்தை சுரீரெனத் தைத்தது இருவருக்கும். ராதாவுக்கு ரத்தம் விர்ரென்று தலைக்குப் பாயத் தொடங்கியது. அகிலாவுக்குக் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.

"எங்களை எப்படிக் கெஞ்சிக் கூத்தாடி வரச் சொல்லிட்டு இப்ப இப்படிப் பேசறீங்களே? எங்க மேல பாசம் இல்லாதப்ப எதுக்காக எங்களைக் கூப்பிட்டீங்க? நாங்க உங்களைத் தேடவே இல்லியே? இந்தப் பேச்செல்லாம் இனி இங்க வேண்டாம் "

"எதுக்குக் கூப்பிட்டேனா? உங்க தாத்தா அதான் சதாசிவம் ரொம்ப சீரியசா இருக்கறதா எனக்குத் தெரிய வந்தது. அப்பத்தான் உங்க நினைவும் வந்தது. சாகக் கெடக்கற கிழவன் முன்னால உங்களைக் கொண்டு போயி நிறுத்தினா அவன் உங்க பேருக்கு ஏதாவது எழுதி வைப்பான்னு கணக்குப் போட்டேன். அதுக்குக்குத்தான் வந்து உங்களைக் கூப்பிட்டேன்."

வாயடைத்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தனர். தாயும் மகளும்.

"உடனே உங்களைக் கூட்டிக்கிட்டுப் போனா நீங்க சந்தேகப்படுவீங்கன்னு கொஞ்ச நாள் ஊட்டி போயிட்டு வரதுக்குள்ள அந்தக்கிழவன் மண்டையைப் போட்டுட்டான். சீ! என் திட்டமெல்லாம் பாழாப் போச்சி"

அம்மா சுதாரித்துக் கொண்டு மெதுவாக "அப்ப நீங்க எங்களுக்காக எங்க மேல உள்ள பாசத்தால வரல்ல இல்லியா?" எனக் கேட்டாள்.

"ஆமா! வராங்க! இவ எலிசபெத்து மகாராணி ! அப்படியே காசை அள்ளி வீசிடுவா! உன் மூஞ்சிக்காக யாரு வந்தாங்க? காசும் கிடைக்கும் , குடும்பமும் கிடைக்குமேன்னு நான் கணக்குப் போட்டேன். இத்தனை ஆண்டுகள்ல நீ மாறியிருப்பேன்னு நெனச்சேன். ஆனா நீ மாறவேயில்ல!"

"அம்மா மட்டுமா மாறல! நீங்க கூடத்தான் கொஞ்சம் கூட மாறவேயில்ல! எங்கம்மாவை அன்னிக்கு எப்படி ஏமாத்தினீங்களோ இன்னிக்கும் அப்படியே தான் ஏமாத்தியிருக்கீங்க? உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?"

அவர் ஏதோ பேச வாயைத் திறந்தார்.

"இதப்பாருங்க! எனக்கு ஒரு நாளும் உங்க மேல அப்பான்னு பாசம் வந்தது கிடையாது. அம்மா சந்தோஷமா இருப்பாங்களேன்னு தான் நான் உங்க கூட வர சம்மதிச்சேன். எப்ப நீங்க எங்கம்மாவை மதிக்கலையோ அப்பவே எங்களுக்கு இந்த வீட்டுல வேலை இல்ல! நாங்க இப்பவே போறோம்" என்றாள் கோபமாக.

"ஓ! தாராளமாப் போங்களேன்! எப்ப அந்தக் கருமுண்டம் சொத்து வாங்கித்தர முடியாதுன்னு சொல்லிட்டாளோ அப்பவே நான் உங்க ரெண்டு பேரையும் துரத்தியிருக்கணும். எனக்கு கொஞ்சம் இரக்க சுபாவம் ஜாஸ்தி. அதான் உங்களை வெச்சி தண்ட சோறு போட்டேன். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல்ல! உங்கம்மாவை கேஸ் போட சம்மதிக்க சொல்லு! நீங்க இங்கயே இருக்கலாம். நல்லா சாப்பிடலாம் , ராஜ வாழ்க்கை வாழலாம். என்ன?"

அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அம்மா பக்கம் திரும்பினாள்.

"என்னம்மா இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்க? நாம சோத்துக்கு வழியில்லாமலா இருக்கோம்? நமக்கு என்ன படிப்பு இல்லியா? இல்லை வேற போக்கிடம் தான் இல்லியா? வாம்மா! போவோம். இனி யார் வந்து கூப்பிட்டாலும் போகாதே! இவன் ஒரு மனுஷன்னு இவனை நம்பி நீ வந்தே பாரு உன்னைச் சொல்லணும்" என்றாள்.

ராதா வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். கண்ணீர் இல்லை ! ஒரு புலம்பல் இல்லை! ஒரு பொம்மை போல எங்கோ பார்த்தபடி இருந்தாள். அம்மாவின் துக்கம் நாளாவட்டத்தில் தான் மாறும் என்று நினைத்த அகிலா! மட மடவென்று தங்களுடைய உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.

முதலில் ஆனந்துக்கு ஃபோன் செய்தாள்.

"ஆனந்த்! இன்னும் நாங்க இருந்த வீடு வாடகைக்குப் போகலைன்னா அதை யாருக்கும் விட வேண்டாம். நானும் எங்கம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரோம். விவரம் எதுவும் கேக்காதீங்க! வந்து எல்லாம் சொல்றேன்" என்றவள் சூட்கேசை ஒரு கையிலும் அம்மாவை மறு கையிலும் பிடித்துக் கொண்டு வெளியேறினாள்.

"அகிலா! நல்லா யோசிச்சுக்க! இப்ப போனா போனது தான். நான் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேன். நீயும் எவனாவது சாதாரண சம்பளக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பணத்துக்கு சிங்கியடிக்க வேண்டியது தான். ஆனா உங்கம்மா கேஸ் போட்டா நமக்குப் நிறையப் பணம் கிடைக்கும். உன்னை வெளி நாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்கறேன். நிறைய நகை போடறேன். என்ன சொல்ற?"

பதில் ஒன்றும் சொல்லாமல் "தூ " அவன் முகத்தில் காறித் துப்பியவள் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியில் நடந்தாள். ராதாவின் நிலை பரிதாபமாக இருந்தது. அவளால் நடந்த எதையும் ஜீரணிக்க முடியவில்லை. நாகராஜன் அழைத்தது , தந்தையின் மரணம் , தொடர்ந்து கணவனின் சதித்திட்டம் என எல்லாம் சேர்ந்து அவளது இதயத்தைக் கலக்கின. மூளை நரம்புகள் துடித்தன. நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடின.

"அம்மா! என்னம்மா செய்யுது?ஏன் என்னவோ மாதிரி இருக்க?" என்ற மகளின் கேள்வி எங்கோ பாதாளத்திலிருந்து கேட்பதாகத் தோன்றியது. தலை வெடித்து விடுகிறார்ப்போல வலித்தது. மயக்கம் வர அவளைத் தாங்கிக் கொண்டாள் அகிலா.

"அம்மா! என்னைப் பாரும்மா! இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ! முதல்ல உன்னை டாக்டர் கிட்டக் கூட்டிக்கிட்டுப் போறேன். " என்றவள் உடனடியாக ஆம்புலன்சுக்குகு ஃபோன் செய்தாள். அவர்கள் வருவதற்குள் என்னாகுமோ என ஆனந்துக்கும் ஃபோன் செய்து தெரிவித்தாள்.

ராதாவால் பேச முடியவில்லை. தலைவலி வினாடிக்கு வினாடி அதிகரித்தது. இதயம் வெடித்து விடுமோ என்னும் அளவுக்கு வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. மூக்கிலிருந்தும் , வாயிலிருந்தும் ரத்தம் வர மயங்கிச் சரிந்தாள் அவள்.
 
ராதா மேல கோபமா வருது...நிதானமா யோசிச்சு முடிவெடுக்காம இப்ப எந்த நிலைமைல இருக்காங்க...இந்த நிலையில அகிலாவை எப்படி பார்ப்பாங்க..அவளுக்காகவாது உடம்ப கவனிச்சு தைரியமா இருக்க வேண்டாமா
 
Nirmala vandhachu ???
 
என்னடா இது. இப்படி ஆயிடுச்சு
அந்த ஆள
சும்மா விடலாமா
 
ராதா மேல கோபமா வருது...நிதானமா யோசிச்சு முடிவெடுக்காம இப்ப எந்த நிலைமைல இருக்காங்க...இந்த நிலையில அகிலாவை எப்படி பார்ப்பாங்க..அவளுக்காகவாது உடம்ப கவனிச்சு தைரியமா இருக்க வேண்டாமா
அதே தான் எனக்கும் தோணுது. ஏதோ நடந்து போச்சு, தன் மகளுக்காகவாவது ராதா தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக்க வேண்டாமா?
 
என்னடா இது. இப்படி ஆயிடுச்சு
அந்த ஆள
சும்மா விடலாமா
இவன்லாம் சுரணை கெட்ட ஜென்மம். என்ன செஞ்சாலும் புத்தி வரப் போறது இல்ல.
 
Top