Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா! -2

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -2

அவளை நெருங்கிய அவன் அவளையும் தாண்டி அவள் பின்னே விழுந்து கிடந்த ஸ்கூட்டியை நிமிர்த்தி வைத்தான். அந்த காட்சியை தெருவில் சென்ற ஓரிருவர் கண்டபோதும் தங்களுக்கென்ன என்ற நினைப்பில் கடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது தான் அவன் தன்னை நெருங்கிய காரணத்தை உணர்ந்து தன் தலையை லேசாய் தட்டிக்கொண்டாள் மித்ரா. அதை அவன் ரசித்திருக்க வேண்டும். அது அவ்வளவு அழகாக இருந்தது.

அவனுடைய கார் சிறு அடியோடு தப்பித்திருந்தது. அடி அவள் ஸ்கூட்டிக்கு தான் அதிகமாகியிருந்தது. எப்படியும் காராஜில் போட்டால் செலவு ஏகத்துக்கும் வந்து நிற்கும். 'என்னைய ஏன்டீ இந்த பாடு படுத்துற ..' என்ற லுக்கை விட்டது அவளது பாவப்பட்ட ஸ்கூட்டி.

அவன் பேச்சை தொடர்ந்தான்.

" அந்த பக்கம் ரோட் செய்யுறாங்க. அதான் இந்த திடீர் வன்வே. உங்க ஸ்கூட்டி தான் ரொம்ப டேமேஜ் ஆன மாதிரி தெரியுது. நானே சரி பண்ணி..." ரொம்பவும் மென்மையான தொனியில் அவன் பேசியதை கேட்க அவளிடம் இருந்த டென்ஷன் சட்டென காணாமல் போனது.

"இல்ல வேண்டாம் சார்... நானே பார்த்துக்கிறேன். தப்பு என்னோடையது தானே.." என்று அங்கிருந்து சீக்கிரம் கிளம்பப் பார்த்தாள்.

"அப்ப ஒன்னு செய்யலாம். எனக்கு ஒரு மீட்டிங்க்கு டைம் ஆகுது. நான் உடனே கிளம்பனும். உங்க வண்டியை இன்சூர் பண்ணியிருக்கிங்க தானே.. க்ளைம் அப்ளை பண்ணுங்க. இந்தாங்க இது என் கார்ட். எதாச்சும் டீடெல்ஸ் வேணும்னா என்னை கான்டாக்ட் பண்ணுங்க. என் காரையும் ஒரு போட்டோ எடுத்துக்குங்க. அப்புறம் இடிச்சு தள்ளிட்டு ஓடிபோயிட்டேன்னு யாரும் சொல்ல கூடாது இல்லையா... உங்களுக்கு ஓகே யா?..." என்றான். அவன் பேச்சில் இருந்தது நக்கலா சீரியஸா என்று அவளுக்கு புரியவேயில்லை. அவனையே புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் கண் முன் சொடக்கு போட்டான் அந்த ஹீரோ.

" ஹலோ.. என்னங்க.. எந்த உலகத்துக்கு போயிட்டிங்க..?" என்று சொன்னவனின் விரல்கள் நீளமாய் இருந்தன. சீராக வெட்டப்பட்ட தலைமுடி. அதற்குள் கைவைத்து கோதினால் சொர்க்கம் நிச்சயம். லேசாக ட்ரிம் செய்யப்பட்டு இருந்த அளவான தாடி. நல்ல உயரம் அவன். பரணில் இருந்து ஏதாவது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றால் அவனது கைகள் தாராளமாக உதவும். சரி கால்களும் உதவும். அவன் கண்களில் ஒரு தீட்சண்யமான மின்னல் இருந்தது. அவனது சாயல் லேசாக, நாற்பது படங்களின் கதையை கேட்டு தூங்கிய குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமாரை நினைவுபடுத்தியது.

" ஹலோ.. என்னாச்சுங்க.. எனி ப்ராப்ளம்? எனக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங்.. அதான் அவசரமா கிளம்ப வேண்டியதா இருக்கு.. இது என்னோட விசிட்டிங் கார்ட்.. " என்று மறுபடியும் அவளிடமே நீட்டினான்.

அவன் சொன்ன யோசனை அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. 'தப்பித்தோம்.' என்று ஓசையின்றி ஒரு பெருமூச்சு விட்டாள். தெருவிலேயே அவனுடன் பேரம் பேச வேண்டி இருக்குமோ என்று எண்ணினாள். அது அவளுக்கு ஒத்துக்கொள்ளாத சமாச்சாரம். இவள் அதிகம் கோபப்பட மாட்டாள். அப்படியே அவள் கோபப்பட்டாலும் அதில் நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும். அவள் ஐராவதம் மீது இன்னுமும் கொட்டிக்கொண்டு கிடக்கும் கோபத்தைப் போல.மித்ரா எந்த பிரச்சனை என்றாலும் அகிம்சா வழியில் செல்லவே விரும்புவாள். அது அவள் குணம்.

அவன் இன்னமும் அவசரகதியில் அதே இடத்தில் நின்றுகொண்டு இருந்தான். அவனது அவசரத்தை உணர்ந்தவள்,
தலையாட்டுதலுடன் சம்மதம் சொல்ல அவன் கிளம்பினான்.
" அதுல என் நம்பர் இருக்கு. ஏதாவது ப்ராப்ளம்னா கால் பண்ணுங்க.." என்று குறிப்பிட்டவனுக்கு சிறு ஸ்நேக புன்னகை ஒன்றை அளித்தாள் மித்ரா. கைகடிகாரத்தைப் பார்த்தவளுக்கு தூக்கிப் போட்டது. எட்டு முப்பதுக்கு வேலையில் நிற்க வேண்டும். இப்போதே எழு ஐம்பது.

அவள் வண்டியை வழக்கமாக சர்வீஸ்க்கு விடும் மெக்கானிக் ஷாப்பின் பையனுக்கு போன் செய்து அவனை கெஞ்சி வரச்சொன்னாள். அவன் வருவதற்கு பதினைந்து நிமிடங்கள். அந்த பதினைந்து நிமிடங்களை பல்லை கடித்துக்கொண்டு கடத்தினாள். அந்த கேப்பில் இரண்டு சின்னபிள்ளைகளுக்கு பறக்கும் முத்தத்தை பரிசளித்தாள்.

" இன்னாக்கா.. உனக்கு இதே வேலையா போச்சு.. எப்பபாரு எங்கயாவது முட்டிக்கிட்டு வந்து நிக்கிறது. இன்னைக்கு யாரை இடிச்சக்கா..?" கை கால்களில் கிரீஸை பூசிக்கொண்டு ஒரு கிரீஸ் மனிதனாக வந்து நின்றான் மெக்கானிக் ஷாப் மணி.

" டேய் மணி.. ரொம்ப ஓட்டாத.. தப்பு என் மேல இல்ல.. ஒரு கார்காரன்தான்.. " என்று ஒரு கதையை அவிழ்த்து விட்டாள்.

" ம்.. நம்பிட்டேன்.. நம்பிட்டேன்.." என்ற பையன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

" ரெடியாக எத்தனை நாள் ஆகும் மணி..?"

" நாலு நாள்.."

" நாலு நாளா? கொஞ்சம் சீக்கிரம் பண்ணி கொடுக்க கூடாதா..?"

" யக்கா.. இந்த ஸ்கூட்டி இன்னும் உசுரோட இருக்கதே பெரிய விஷயம். இன்னொரு அடியை தாங்காது.. அநேகமாக அடுத்த தடவை புதுசா வாங்க வேண்டி இருக்கும்.." என்று அத்தனை நாள் அவளோடு பழகிய பழக்கத்தில் கிண்டல் அடித்தான்.

" எதாவது நல்ல வார்த்தை சொல்றியா பாரு.. சரி நான் கிளம்புறேன். லேட்டாச்சு.." என்று சொன்னவள் வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறினாள்.

அந்த அடிபட்ட ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு மெக்கானிக் ஷாப் நோக்கி நடந்தான் மணி. மெக்கானிக் ஷாப் அருகிலேயே இருந்தது வசதியாய் போனது.

மித்ராவின் நெற்றியில் வியர்வை துளிர்க்க ஆரம்பித்திருந்தது. காலையிலேயே இது என்ன மோதல் என்று அவள் மனசு கேள்வி கேட்டது. அதற்கு பதில் மாலை கிடைக்கப் போவது தெரியாமல்.

அலுவலக நேரம் நிறைவு பெற்றதுக்கு அடையாளமாக அவரவர் தங்களது லன்ச் பேக்குடன் ' டாடா' காட்டி விடைபெற ஆரம்பித்தனர்.

"என்ன மித்ரா! அதுக்குள்ள கிளம்பிட்ட.. கடமை கண்ணியம்னு ஆறுமணி வரைக்கும் எக்ஸ்ட்ராவா வேலை செய்வியே..." என்று பக்கத்து இருக்கை ஆனந்தி விசாரணை செய்தாள். அப்போது மித்ரா கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து கொண்டு இருந்தாள்.

"இன்னைக்கு என் பெஸ்ட் ப்ரெண்ட் சந்தியாவோட பர்த்டே. அதுக்கு போகனும் ஆனந்தி... அதுதான்.. இப்பவே லேட் ஆச்சு.." என்று புன்னகைத்தாள்.

"ஓ.. அப்படியா.. சரி.. சரி... ஆமா இப்படியேவா போகப்போற...." என்று ஜீன்ஸூம் டாப்பும் அணிந்திருந்த மித்ராவைப் பார்த்து கேட்டாள் ஆனந்தி.

"இல்ல.. டிரெஸ் கொண்டு வந்தேன். அடுத்த ஸ்ட்ரீட்ல தான் அத்தை வீடு இருக்கு. அங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டு சேன்ஜ் பண்ணிக்கிட்டு கிளம்பிடுவேன். பாய் ஆனந்தி..." என்று ஹேண்ட்பேகை எடுத்துக்கொண்டு பறந்தாள்.

சந்தியாவின் வீடு நண்பர்களாலும், உறவினர்களாலும் சூழ்ந்து இருந்தது. அவளது தந்தை விஜயகாந்த் மிகப்பெரிய தொழிலதிபர். காசுக்கு அவர்களுக்கு பஞ்சமேயில்லை. அது வீட்டைப் பார்க்கும் போதே தெரிந்தது. ஒவ்வொரு மூலை முடுக்கும் செல்வத்தின் முகவரியை தெரிவித்தது.

கூட்டத்தின் நடுவே இயல்பாக நடந்து சென்று தோழியை அடையாளம் கண்டு கொண்டு பின்னாலிருந்து அவள் கண்களை பொத்தி "ஹேப்பி பர்த் டே சந்தியா!..." என்று தோழியை பறக்க வைத்தாள் மித்ரா. அப்படியே பின்னாலிருந்து எட்டி கன்னத்தை எச்சில் செய்து அவளுக்கு ஒரு முத்தத்தையும் பரிசளித்தாள்.

"தேங்க் யூ மித்து. ஏன்டி இவ்வளவு லேட்...?" உடனே கோபப்பட்டாள் சந்தியா.

"ஹேய்.. இன்னைக்கு கொஞ்சம் வேலைடி.. முடிஞ்சு கிளம்ப லேட் ஆச்சுப்பா. டாக்ஸி வர லேட்டு.. அந்த டிரைவர் ரொம்ப ஸ்லோ.."

"ஏன்? உன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு..? வழக்கம் போலயா?"என்று கேட்டாள் சந்தியா.

அசடு வழிந்த மித்ரா "அதுவா.. பலத்த அடியோட கிடக்குது. அதை விடு.. இந்தா இதை பிடி..." என்று ஒரு பார்சலை தோழியின் கைகளில் திணித்தாள்.

"என்னது...?"என்று கோபப்பட்டாள் சந்தியா.

"கிப்ட்..."

சந்தியா முறைத்தாள்.

"இது என்னடீ புது பழக்கம்? நமக்குள்ள எதுக்கு கிப்ட்...?"

"நீ தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு யூ எஸ் போகப்போறியே... அப்புறம் எங்க பாக்கிறது.. பேசுறது. அதான் ஒரு சின்ன மெமரியா இருக்கட்டுமேனு... உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் சந்தியா..." என்றவள் தன்னையும் மீறி அவளை கட்டிப்பிடித்து கொண்டாள்.

" நானும் தான்.. மிஸ் யூ டீ.." என்று அவளும் கலங்க ஆரம்பித்தாள்.

சந்தியாவுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம். அவள் திருமணம் முடிந்த கையோடு அமெரிக்கா செல்லப் போகிறாள். அதையொட்டியே அவளது தந்தை இந்த பர்த்டே பார்ட்டியை ஒழுங்கு செய்திருந்தார்.

மித்ராவின் பதிலில் சந்தியாவும் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். சிறுவயது முதலே இருவரும் உயிர் தோழிகள். இதுதான் அவர்களுடைய முதல் பிரிவாக இருக்கப் போகிறது.

"ரெண்டு பேரும் இங்க என்ன பண்றிங்க.. சந்தியா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க. போய் 'வாங்கனு' ஒரு வார்த்தை கேளு.. "என்று சம்பிரதாய வலையத்தை நிறைவு செய்ய மகளை தேடி வந்தார் சந்தியாவின் தாயார் கௌதமி.

"மித்து! இரு வந்திடுறேன்..." என்று அவள் வருங்கால நாயகனை பார்க்க வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் சிட்டாய் பறந்தாள் சந்தியா.

"வாம்மா மித்ரா, எப்படியிருக்க? இந்தப்பக்கமே ஆளைக் காணோம். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வருண் எப்படி இருக்கான்.. ? எங்க அம்மாவை போன வெள்ளிக்கிழமை கோயில்ல பூஜைக்கு காணோம்? ஆமா நீ ஏன் இப்படி இளைச்சு போயிட்ட.. ? சரியா சாப்பிடுறியா இல்லையா ..?" கேள்விகளை தொடுத்தார் சந்தியாவின் தாயார் கௌதமி.

" கடவுளே. இத்தனை கேள்வி கேட்டா நான் எதுக்கு முதல்ல பதில் சொல்றது.. ?" என்று சிரித்தாள் மித்ரா.
" ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்லு.."
" ஒரே வார்த்தையில சொல்லனும்னா வீட்ல எல்லாரும் சுகம். அம்மா ஏன் கோவிலுக்கு வரலனு எனக்கு தெரியாது.
மற்றபடி நான் நல்லா இருக்கேன் ஆண்ட்டி. கொஞ்சம் வேலை.. ஆபிஸ்ல உயிரை வாங்குறாங்க.. அதான் வரவே கிடைக்கல...ஆ.. நல்லா சாப்பிடுறேன்.. உங்க கேள்விகளுக்கு பதில் கிடைச்சிச்சா..?" என்று பூவாய் சிரித்தாள்.

" சேட்டைகாரி... வேலையாம் வேலை.. சந்தியா கல்யாண நேரம் இப்படியெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. முதல் ஆளா நாலு நாட்களுக்கு முன்னாடியே வந்திடனும்.. நீதான் கூட இருந்து எல்லாம் அவளுக்கு பார்த்து செய்யனும்.. என்ன.."

"கண்டிப்பா ஆண்ட்டி... இதெல்லாம் நீங்க சொல்லனுமா..?" என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கௌதமியை யாரோ அழைக்க "நீங்க வந்திருக்க கெஸ்ட்டைப் பாருங்க ஆண்ட்டி..." என்றாள்.

அன்று கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருந்தது.

மித்ரா நிறைய தடவை இங்கு வந்திருக்கிறாள் என்றாலும், இப்போது அவர்கள் வீட்டு உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் தனிமையை உணர்ந்தாள். பார்ட்டியை நன்றாகவே ஏற்பாடு செய்திருந்தார்கள். அது பற்றியெல்லாம் விஜயகாந்த்தை குறை சொல்ல முடியாது. சந்தியாவுக்கு மித்ராவைத் தவிர வேறு நெருக்கமான தோழிகள் இல்லாததால் அவள் வேறு யாரையும் அழைத்திருக்கவுமில்லை. அதனால் மித்ராவுக்கு மிகவும் போர் அடித்தது. ரொம்ப நேரமாக செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டு இருந்தாள்.

ஒருவழியாக ஏழு முப்பது அளவில் கேக் வெட்ட, சற்று நேரத்தில் டின்னர் ஆரம்பமாகியது.

"மித்ரா! இங்க வாயேன்.." என்று அவளை கைப்பிடித்து இழுத்துச் சென்றாள் சந்தியா.

"எங்கடி கூட்டிக்கிட்டுப் போற... அடியேய்.. மெதுவா போடி.. கீழ விழ போறோம்.." என்று தன்னை தரதரவென இழுத்துக்கொண்டு போன தோழியை நினைத்து சிரித்துக் கொண்டாள்.

"மதி! இது தான் என் பெஸ்ட் ப்ரெண்ட் மித்ரா. மித்ரா.. இவர் தான்... என்..." என்று முடிக்கத்தெரியாமல் வெட்கப்பட்டாள் சந்தியா. உடனே அதை புரிந்துக்கொண்ட மித்ரா சிநேகமான பார்வையுடன் அவனைப் பார்த்து ஒரு 'ஹலோ' சொன்னாள்.

"ஓ.. நீங்க தான் அந்த மித்ராவா.. உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.." என்றவனை அதிசயமாய் பார்த்தாள் மித்ரா.

"எப்ப பார்த்தாலும் உங்களைப் பற்றித்தான் பேச்சு... என்னை கண்டுக்கவே மாட்டிக்கிறா உங்க ஃப்ரெண்ட்டு.." என்று மதிவாணன் குற்றம் சாட்டி பேசினான்.

மித்ரா புன்னகைத்தாள்.

" அது உங்க தலையெழுத்து மதி அண்ணா.. அவ கிழவியாகுற வரை பேசிக்கிட்டு இருப்பா.. " என்று தோழியை அணைத்துக்கொண்டாள். அவள் இயல்பாக தன்னை 'அண்ணா' என்று அழைத்தது மதிவாணனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சிறிது நேரம் அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குரல் இடை மறித்தது.

"நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா..?"

மித்ராவுக்கு அந்தக்குரலை முன்னரே கேட்டது போல இருந்தது. திரும்பினாள் ஹீரோயின்.ஆம். அவனேத் தான்.

"அண்ணா! இது தான் வார நேரமா..?" என்று சந்தியா அவனை கடிந்துக்கொண்டாள்.

'அண்ணணா....' மித்ரா கேள்வியோடு தொக்கி நின்றாள். சந்தியாவும், மித்ராவும் சிறு வயது முதலே தோழிகள். அவளுக்கு தெரியாமல் ஒரு அண்ணணா...?' அதிசயத்து அவனையே பார்த்துக்கொண்டு இருக்கையில் அவனும் அதிர்ச்சியான பார்வையோடு அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். இதை மதிவாணனும் சந்தியாவும் கவனிக்கத்தவறவில்லை.

ஆட்டம் தொடரும் ❤️?
 
Last edited:
Tq authore, for super long epi.Vijayakanth,wife Gowthami, hero cook with comali Ashwin ( 40 katha kettu urangiya Ashwin ah setttah???)intro kalakki.
Yedi Mitthu, mandaya vachu ellam sorgam narayan nu mudivukku vara rathu,ulla irrukkum grey colour saathanam irrukka?? vela seyutha??? first atha check pannu di pennae.
Yedo hero,( per illa poochi) unn waterfalls valve ah kami pannuda public,public... athu than vivarama phone number koduthuteengale sir, innum enna group la join pannakku irruku.
 
"எப்ப பார்த்தாலும் உங்களைப் பற்றித்தான் பேச்சு... என்னை கண்டுக்கவே மாட்டிக்கிறா உங்க ஃப்ரெண்ட்டு.." என்று மதிவதணன் குற்றம் சாட்டி பேசினான்.

மித்ரா புன்னகைத்தாள்.

" அது உங்க தலையெழுத்து மதி அண்ணா.. அவ கிழவியாகுற வரை பேசிக்கிட்டு இருப்பா.. " என்று தோழியை அணைத்துக்கொண்டாள். அவள் இயல்பாக தன்னை 'அண்ணா' என்று அழைத்தது மதிவாணனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சிறிது நேரம் அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குரல் இடை மறித்தது.

"நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா..?"

மித்ராவுக்கு அந்தக்குரலை முன்னரே கேட்டது போல இருந்தது. திரும்பினாள் ஹீரோயின்.ஆம். அவனேத் தான்.

"அண்ணா! இது தான் வார நேரமா..?" என்று சந்தியா அவனை கடிந்துக்கொண்டாள்.

'அண்ணணா....' மித்ரா கேள்வியோடு தொக்கி நின்றாள். சந்தியாவும், மித்ராவும் சிறு வயது முதலே தோழிகள். அவளுக்கு தெரியாமல் ஒரு அண்ணணா...?' அதிசயத்து அவனையே பார்த்துக்கொண்டு இருக்கையில் அவனும் அதிர்ச்சியான பார்வையோடு அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். இதை மதிவாணனும் சந்தியாவும் கவனிக்கத்தவறவில்லை.
Nirmala vandhachu ???
 
Tq authore, for super long epi.Vijayakanth,wife Gowthami, hero cook with comali Ashwin ( 40 katha kettu urangiya Ashwin ah setttah???)intro kalakki.
Yedi Mitthu, mandaya vachu ellam sorgam narayan nu mudivukku vara rathu,ulla irrukkum grey colour saathanam irrukka?? vela seyutha??? first atha check pannu di pennae.
Yedo hero,( per illa poochi) unn waterfalls valve ah kami pannuda public,public... athu than vivarama phone number koduthuteengale sir, innum enna group la join pannakku irruku.
Lovely.. hero பேரோட அடுத்த அத்தியாயத்துல வருவார்..?
 
Top