Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-10

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member

அத்தியாயம் -10

நவிலன் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தான். அவனுடைய திட்டம் அப்படியாய் இருந்தது. அவன் நிலைகொள்ளாமல் தவித்தான். பெண்கள் பக்கமே தலைவைத்து படுக்காத அவன் இப்படி ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலிப்பான் என்று முன்னரே யாரேனும் சொல்லியிருந்தால் அவர்கள் தலையில் ஒரு குட்டு வைத்திருப்பான். ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாகிப்போய் காதல் வலையில் சிக்கித் தவித்தான்.

அன்று சனிக்கிழமை. வெயில் அதிகமாய் இல்லை.

தன்னுடைய செல்போனில் நவிலனது பெயர் வந்து மின்னியதைக் கண்ட மித்ராவுக்கு உள்ளங்கை வியர்த்தது. அப்படி வியர்த்த உள்ளங்கையில் அவளது பெயர் காணாமல் போயிருந்தது. எடுத்து "ஹலோ" சொன்னாள்.

" ஹாய் மித்ரா! பிஸியா இருக்கிங்களா? பேசலாமா?"

மித்ரா படித்துக்கொண்டிருந்த 'குற்றப் பரம்பரை ' புத்தகத்தின் உடம்பில் புக் மார்க் சொருகிவிட்டு " ஃப்ரீயா தான் இருக்கேன் நவிலன்... சொல்லுங்க.." என்று ஆர்வமானாள். அவளுக்கு நவிலனது அருகாமை பிடித்திருந்தது. அதற்குப் பெயர் என்னவென்று தெரியாமல் ஃப்ரெண்ஷிப் என்று பெயர் வைத்துக்கொண்டாள்.

" நாளைக்கு நீங்க ஃப்ரீயா? முக்கியமான வேலை எதுவும் இருக்கா??" இவ்வளவு தன்மையாக பேசுபவனிடம் பேசிக்கொண்டே இருக்கலாமே.

" அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.." நீண்ட நாள் தோழி ஒருத்தியை சந்திக்க செய்திருந்த ஏற்பாட்டை கான்சல் செய்ய முடிவெடுத்துக்கொண்டாள்.

" அப்படினா.. நாளைக்கு பதினொரு மணிக்கு ரெடியா இருங்க. நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்.."

" எதுக்கு?"

" ரொம்ப மறதி மித்ரா உங்களுக்கு.. அதுக்குள்ள மறந்துட்டிங்களா? ட்ரீட் தாறேனு சொன்னேனே.." ஞாபகப்படுத்தினான்.

" ஓ.. ஆமால்ல.. சொன்னிங்கல.." மறந்தது போல தெளிவாக சமாளித்தாள்.

" ம்.. நல்லா மறந்திங்க போங்க.."

அந்தப்பக்கம் மித்ரா சிரிக்க அவனுக்கு ஐஸ் கட்டிகளை உடம்பெங்கும் கொட்டியது போல இருந்தது.

" அப்போ நாளைக்கு சந்திக்கலாம் மித்ரா..!"

" நிச்சயமாக.." என்று தொடர்பை துண்டித்தாள். அடுத்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மங்களாதேவியின் பங்களாவுக்குள் நுழைந்த சூரிய ஒளி சற்று சோம்பல் முறித்தது. மித்ரா ஐராவதத்தின் மீதும் பாமாவின் மீதும் இன்னும் கோபித்துக்கொண்டு இன்னமும் அத்தையுடேயே இருக்கிறாள் என்பதை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

" என்னடீ சமைக்கட்டும் இன்னைக்கு? நண்டு வாங்கிட்டு வரட்டுமா? உனக்குப் பிடிக்குமே.." கையில் கூடையை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்கு செல்ல ஆயத்தாமாய் நின்றார் அத்தை.

" அத்தே.. இன்னைக்கு நான் என் ஃப்ரெண்டு கூட லன்ச்க்கு வெளிய போறேன்.. சோ.. உங்க சமையலை மிஸ் பண்ண வேண்டியதா இருக்கும்.." என்று நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டே சொன்னாள்.

" யாருடீ அது..? புதுசா..?"

" பேரு நவிலன்.."

" எது.. பையனா..?"

" நவிலன்னா.. பையன் தானே..?"

" அதில்லடீ.. உனக்கு ஃப்ரெண்டா ஒரு பையனா..? ஆச்சர்யமா இருக்கே..?"

" எனக்கே ஆச்சர்யமா தான் இருக்கு.." அவளையும் அறியாமல் சொல்லிவிட்டாள்.

" எப்படி தெரியும் அந்த பையனை..?"

" அது வந்து.. " என்று இழுத்தாள் சங்கமித்ரா.

" என்னடீ எங்கயாவது கொண்டு போய் இடிச்சியா..?" அத்தையும் அவளது ஆக்ஸிடென்ட் வீரதாபங்களை அறிந்தவர் என்பதாலேயே அந்த கேள்வியைக் கேட்டார். குடுமபத்துக்கே அவளைப் பற்றி நன்றாக தெரியும் போல. இருந்தாலும் அவருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. மித்ரா தான் இடிக்கும் யாருடனும் இப்படி நெருங்கி பழகி ஃப்ரெண்டு என்று சொல்வது கிடையாது. இது என்ன புதிதாக என்று யோசாத்தார்.

" கண்டுபிடிச்சிட்டிங்களா.." என்று ஆரம்பித்து அவனுடனான மோதல், அன்று மாலை சந்தியாவின் பிறந்தநாளில் சந்தித்தது. அடுத்து அவனை அவனது ஆபிஸில் சந்தித்தது. அதற்கடுத்து பார்ட்டியில் சந்தித்தது, அந்த தாடிக்காரனிடம் இருந்து லிஃப்ட்டில் காப்பாற்றி வீட்டில் விட்டது. பின் திருமணத்தில் சந்தித்தது என்று ஒன்றுவிடாமல் எடுத்துச் சொன்னாள்.

அவள் சொல்ல சொல்ல மங்களாதேவிக்கு ஆச்சர்யமோ ஆச்சரியம். இவளா ஒரு பையனைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறாள் என. ஆண்கள் என்றாலோ நம்பக்கூடாதவர்கள் என்று லெக்சர் எடுக்கும் இவளா அவனைப் பற்றி இத்தனை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று அவருக்கு ஒரே ஆச்சர்யம்.

" அத்தே.. அத்தே.. என்ன யோசனை..?"

" ஒன்னுமில்லடீ.. சரி நீ கிளம்ப முதல் நான் மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்துடுறேன். காய்கறி எதுவும் இல்லை.."

" நானும் உங்க கூட வாரேன்.. பதினொரு மணிக்கு தான் நான் கிளம்பனும்.."

" நீயா.. என்கூட மார்க்கெட்டுக்கு வாறியா? வேணாம்டீ.. நீ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அடிச்சியே ஒரு மீன்கடைகாரன். அவன் கடை பக்கமே நான் போறது இல்ல.. உன் மேல இருக்க கோவத்துல மீன் வெட்டுற கத்தியை என் மேல போட்டு இழுத்தான்னா அவ்வளவு தான்..நீ வீட்லயே இரு. அப்புறம் வரும் போது வம்போட தான் வரனும்.. "

" அத்தே.. அவன் அசிங்கமா பேசினான் அத்தே.. அதான் அடிச்சேன்.."

" அதுக்கு.. உடனே அடிப்பியா? தெருவில போனா நாலு நாய் குரைக்கத்தான் செய்யும். அதுக்காக திரும்பி திரும்பி எல்லா நாயையும் பார்த்து குரைக்க முடியுமா..? ஒதுங்கித்தான் போகனும்.."

" சும்மா நாயை அசிங்கப்படுத்தாதிங்க.. அது நன்றியுள்ள ஜீவன்.." என்று சீரியஸ் இல்லாமல் பதில் சொன்னாள்.

" இப்ப என்னாங்கிற..?"

" நானும் உங்க கூட காய்கறி வாங்க வருவேன்.." என்று அடம் பிடித்தாள்.

" சரி .. வா.. வந்து தொலை. ஆனா வம்பு இழுக்க கூடாது.." என்று எச்சரிக்கை செய்து கூட்டிக்கொண்டு போனதால் மித்ரா நல்லபிள்ளையாக நடந்து கொண்டாள். அப்போது தான் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நவிலன் அவளை பிக் அப் செய்ய அவளுடைய ஃப்ளாட் வாசலில் வந்து நிற்க வாய்ப்புண்டு. அதனால் அத்தை வீட்டு விலாசத்தை அவனுக்கு வாட்சப் செய்து அங்கு அவனுக்காக தயாராக காத்திருப்பதாக குறுஞ்செய்தி வாயிலாக தெரியப்படுத்தினாள்.

நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கையில் மித்ரா எதை உடுத்தலாம் என்று யோசித்து ஒரு நீல நிற சுடிதாரை அணிந்தாள். ஆக இன்று நீல நிற டெவில். நீளமான காதணிகளை தொங்கவிட்டாள். வழக்கம் போல கழுத்தில் கிடந்த மெல்லிய தங்கச் சங்கிலி. கையில் வாட்ச். மறுகையில் ஒரு மெல்லிய காப்பு. தலையை அதிசயமாய் பின்னலிட்டிருந்தாள். வாசலை எதிர் நோக்கி காத்திருக்கையில் அவனுக்கு பதில் வேறொருவன் வந்தான். வருண்.

" டேய்.. தம்பி.. எப்படிடா இருக்க..?" அவன் கழுத்தைச் சுற்றி தன் கையைப் போட்டு இறுக்கி தன் பாசத்தை வெளிப்படுத்தினாள்.

" க்கா..க்கா.. விடுக்கா.. உன் பாசம் புரியுது.. கழுத்தை உடைச்சிடாத..அத்தை அத்தை.. என்னை காப்பாற்றுங்க.." அவன் குரல் கேட்டு சமையலறையில் இருந்து மங்களா வெளியே வந்தார்.

" வாடா வருண்.. தனியாவா வந்த..?" என்ற போது மித்ரா அவனை விடுவித்து அவன் தலையை கோதி கலைத்துக்கொண்டு இருந்தாள்.

" ஆமா அத்தை. எனக்கு க்ளாஸ் இருக்கு. போறப்ப இதை கொடுத்துட்டு போனு அம்மா தந்தாங்க.." என்று ஒரு டப்பாவை நீட்டினான். மித்ரா அதைப் பிடுங்கி திறந்தாள். பால்கோவா. பாமாவின் தயாரிப்பு. அள்ளி வாயில் போட்டு ருசித்தாள்.

" சாப்பாட்டை கண்டதும் கோவம் காணாமல் போயிடுச்சாக்கும்.." மங்களாதேவி சொல்ல மித்ரா அசடு வழிய அவரைப் பார்த்து சொன்னாள்.

" சாப்பாட்டுல நம்ம கோவத்தை காட்ட கூடாதுனு நீங்கதானே சொல்லி தந்திருக்கிங்க அத்தை.." என்று அவர் மீது திருப்பிவிட்டாள்.

" அதுசரி.. டேய் வருண்.. காபி போடட்டுமா..?"

" வேணாம் அத்தை. க்ளாஸ்க்கு நேரமாச்சு.. நான் கிளம்புறேன்.."

" ம்..சரி.. டைம் இருக்கப்ப வா.."

" சரி அத்தை.. அக்கா எப்ப நம்ம வீட்டுக்கு வருவ..? நீ இல்லாம வீடு வீடாவே இல்ல.."

" என்னடா உனக்கும் கொடுமை நடக்குதா..?"

" அது வழக்கம் போல தான். நோ கிரிக்கெட். பட் ஐ மிஸ் யூ..."

" அச்சோ.. மிஸ் யூ டூ டா.. டேய்.. ரொம்ப கொடுமை பண்ணினா கிளம்பி வந்துடு.."

" ஏய் ஏய். அவனையும் ஏன் கெடுக்கிற.. அப்படிலாம் வரக்கூடாதுடா.. உனக்கு தான் கிறுக்கு புடிச்சிருக்கு.. அவனையும் ஏன் இப்படி ஆக்குற...." மங்களாதேவி கொஞ்சம் கோபப்பட்டார். அவரே மித்ராவை எப்படியாவது சமாதானம் செய்து தன் அண்ணன் வீட்டுக்கு மறுபடியும் அனுப்பிவிட வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார். அவளிடம் அதைப் பேசப்போனால் கோபித்துக்கொண்டு வேறு எங்காவது போய்விட்டால்? அதனால் சரியான சந்தர்ப்பத்தில் பேசி புரிய வைக்க காத்திருந்தார்.

" இப்ப என்னாங்குறிங்க அத்தை.." மித்ரா சண்டைக்கு தயாரானாள்.

" அது ஒன்னுமில்லடீ.." என்ற போதே வாசலில் அந்த கார் வந்து நின்றதை மங்களாதேவி அவதானித்தார்.

" யாரோட வண்டி அது..?"

" நவிலன் வண்டி அது.. " என்று கூவினாள் மித்ரா.

" அவரு எங்க இங்க...?" என்று வருண் கேட்ட கேள்வியை மதிக்காமல் வாசலை தாண்டிச் சென்று கேட்டை திறந்து அவனை உள்ளே அழைத்தாள்.

" ஹாய் நவிலன்.. உள்ள வாங்க. "

அவனும் தயங்காமல் வந்தான்.

" ஹேய் வருண்.." என்று உற்சாகமாய் பேசினான்.

" நவிலன்! இது என்னோட அத்தை.."

" வணக்கம்ம்மா.." என்றான் நவிலன்.

" வாங்க தம்பி.. உட்காருங்க.. " மங்களாதேவியும் உபசரித்தாள். அவர்களோடு பேசிக்கொண்டு இருந்த வருண் க்ளாஸுக்கு நேராமாகவும் கிளம்பினான்.

மங்கள்தேவியின் காபியை ருசித்தவன், " அப்ப கிளம்பலாமா மித்ரா..வாரோம்ம்மா.." என்றான். அவனுடைய இயல்பான பணிவு மங்களாதேவிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

போகும் வழியில் சாதாரணமாக பேசிக்கொண்டு வந்த நவிலன் அவள் ஏன் இங்கு இருக்கிறாள் என்று கேட்கவேயில்லை. அது மித்ராவுக்கு பிடித்திருந்தது.

முன்னாள் சென்ற பைக்காரனை தள்ளிப்போகச் சொல்லி ஹார்ன் அடித்தான் ஹீரோ.

"எங்க கூட்டிக்கிட்டுப் போறிங்க நவிலன்..?"

"ம்.. உங்களை கடத்திட்டுப் போகப் போறேன்..." அவன் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டான்.

அவள் தலைசாய்த்து அவனை பார்த்தாள். சிரித்தாள்.

'அப்படி பார்க்காதடி... அப்படி சிரிக்காதடி.. மனசு தடுமாறுதுல..' என்று எண்ணிக்கொண்டான்.

"பயப்படாம வாங்க... உங்களை கடத்த மாட்டேன்.."என்று சிரித்தான்.

"ம். அது தெரியும்.." என்று அவளும் சிரித்தாள்.

அவன் அவளை அவன் வீட்டிற்கே அழைத்துச் சென்றான். வீட்டைச் பார்த்த மித்ரா அயர்ந்தாள். அது வீடென்றே சொல்ல முடியாது. மாடமாளிகை. வாசலில் பத்து வாகனங்களை தாராளமாக நிறுத்தலாம். சுற்றிலும் கார்டனரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த தோட்டம். உள்ளே ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்திருக்கும் என்று அவளுக்கே தெரிந்திருந்தது.

இப்படி அவன் வீட்டுக்கு அழைத்து வருவான் என்று அவள் நினைக்கவேயில்லை. தெரிந்திருந்தால் ஏதாவது வாங்கிக் கொண்டு வந்திருப்பாள். அவன் ஏதோ சாப்பிட ரெஸ்டூரண்டுக்கு தான் அழைத்துப் போவான் என தப்புக்கணக்கு போட்டுவிட்டாள்.

வாசல் வரை வந்து புன்னகை பூத்த முகத்துடன் ரோகிணி அவளை வரவேற்றார். ஆர்த்தி சுற்றாத குறை ஒன்று தான்.

"அம்மா.. இது மித்ரா.ஓ.. சங்கமித்ரா! மித்ரா..! இது தான் என் டார்லிங் அம்மா..."

" வணக்கம்ம்மா.." என்று அவள் தடுமாறினாள்.

" ம்மா.. நான் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வாரேனு சொன்ன கெஸ்ட் இவங்கதான்.." என்று சொன்னான் மகன்.

" ஓ.. இதுக்குத் தான் காலையில இருந்து என்னை பாடா படுத்தி எடுத்தியா..?" என்று ரோகிணி காலை வாற நவிலனுது செல்போன் சிணுங்கி அவனை காப்பாற்றியது.

" ம்மா..... " என்று அதற்கு மேல் பேச வேண்டாம் என்று எச்சரித்தவன், " நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் போன் பேசிட்டு வந்துடுறேன்.." என்று கார்டனுக்குள் சென்றான்.

" எப்படி இருக்கம்மா...." வாஞ்சையாக விசாரித்தார்.

"நல்லா இருக்கேம்மா...." என்றாள். அவளையும் அறியாமல் அம்மா அதனோடு வந்து ஒட்டிக்கொண்டது.

"நவிலன் உன்னைப் பற்றி சொல்லியிருக்கான்ம்மா... கல்யாணத்தப்போ பார்த்தனே.. ஓடியாடி வேலை செஞ்சிக்கிட்டு இருந்த... ஆனா சரியா பேச வாய்ப்பு கிடைக்கல.." என்றார் ரோகிணி.

நவிலன் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பான் என்பது பற்றிய ஆர்வம் அவளுக்குள் முண்டியடித்தது.

"என்னம்மா.. என்ன யோசிக்கிற...?"

"ஒன்னும் இல்லம்மா...." என்றவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றி கேட்டுக்கொண்டார். அவளும் மறைக்காமல் மதுபாலா பற்றியும் ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டது ரோகிணிக்கு புது தகவலாக இருந்தாலும், அவள் மறைக்காமல் வெளிப்படையாக பேசியதற்காய் மித்ராவின் ஒளிவுமறைவு இல்லா பேச்சில் உள்ளம் குளிர்ந்தார்.

"என்னம்மா.. அதுக்குள்ள மித்ராவோட ஹிஸ்ட்ரியையே வாங்கியிருப்பிங்களே..."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.." என்றாள் மித்ரா.

" இல்லேயே.. எங்க அம்மா பற்றி எனக்குத்தெரியும்.. " என்றான்.

உண்மைத் தான். இதுவரை நவிலன் அவளது குடும்பத்தைப் பற்றி அவளிடம் கேட்டதே இல்லை. அவளோடு இன்னும் நெருங்கி பழகாதது போல அவன் உணர்ந்தான். அதனால் தான் இந்த ஏற்பாடு. இப்போது அம்மா மூலமாக கறந்து விடலாம் என்று நினைத்தான்.

ரோகிணி அவர்களுக்கு லெமன் ஜூஸ் கொடுத்தார். அவர்கள் கார்டனில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"சரி.. நேரமாச்சு..ரெண்டு பேரும் சாப்பிட வாங்க..." என்று அழைத்தார் ரோகிணி.

மித்ரா தடுமாறினாள். அவன் அவளை அறிமுகம் செய்யத்தான் அழைத்து வந்திருக்கிறான், அப்படியே வெளியில் லன்ச்சுக்கு அழைத்து செல்வான் என்று அவளாக நினைத்துக்கொண்டிருந்தாள். ரோகிணி அன்புடன் அழைக்கவும் தவிர்க்கமுடியாமல் அவர்களோடு மதிய உணவில் கலந்துக்கொண்டாள்.

மேஜைமீது பரப்பபட்டிருந்த உணவு வகைகளை கண்டு திண்டாடிப்போனாள் சங்கமித்ரா.

"என்னம்மா அப்படி பார்க்கிற.. உனக்காகத் தான் இன்னைக்கு சமையலே... உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாது இல்ல.. அதான் எல்லா ஐட்டத்தையும் பண்ணிட்டேன்.... இதுல இவன் வேற.. என்னை ஒரு வழி ஆக்கிட்டான்.." என்று சொன்னபோது தான் நவிலனை முதல் அவர் காலை வாரியது நினைவுக்கு வந்தது.

அவள் விழித்தாள்.

"மித்ரா. அன்னைக்கே ட்ரீட் தாரேனு சொன்னேன் இல்ல.. அம்மா சூப்பரா சமைப்பாங்க. அதான் உங்களை வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்துட்டேன்..."

அவள் சங்கடமாய் உணர்ந்தாள்.

"எதுக்கும்மா.. இவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு.. எனக்கு ஒருமாதிரியா இருக்கு. உங்களுக்கு என்னால சிரமம்..." என்றாள்.

" இத உன் வீடு மாதிரி நினைச்சுக்கம்மா.." என்றவாறு நவிலனின் தந்தை ஸ்ரீநிவாசன் அங்கு பிரசன்னமானார்.

"மித்ரா! இதுதான் அப்பா.. அப்பா.. மித்ரா.." என்று அறிமுகம் செய்து வைத்தான் நவிலன்.

' வாசன் க்ரூப் ஒப் கம்பனி'யின் டிரெக்டர். அவரிடம் பிறப்பிலேயே ஒரு கம்பீரம் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல உயரமாய் இருந்தார். நவிலனுக்கு அவனது உயரமான கால்கள் எங்கிருந்து வந்தன என்று அவளுக்கு புரிந்தது. அவர் மீசைக்கு நடுவே சதா ஒரு புன்னகை குடிகொண்டு இருந்தது. அது மித்ராவை இயல்பாக்கியது.

அவரும் பொதுவாக பேசிவிட்டு, அவர்களோடு கலந்துக்கொண்டார். நேரம் செல்ல செல்ல அவரும் கலகலப்பாக பேசத்தொடங்கி விட்டார். அவள் 'போதும் ..போதும்..' என்று சொல்ல சொல்ல ரோகிணி வகைவகையாய் பறிமாறினார். அவள் அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போனாள்.

அவளும் சகஜமாகி அவர்களோடு பேச்சில் கலந்துக்கொண்டாள். உணவு உண்டதும் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ்க்ரீமோடு வந்தான் நவிலன்.

" வேண்டாம் நவிலன்.. இப்பவே நாலு நாளைக்கு சேர்த்து சாப்பிட்டிருக்கேன்.."

" இதையும் சாப்பிடுங்க.. ஒரு வாரத்துக்கு சாப்பிட தேவையில்லை.." என்று நக்கல் அடித்தான்.

"உங்களை.. என்ன நவிலன்... திடீர்னு உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டிங்க.. முன்னாடியே சொல்லியிருக்கலாம் தானே..." என்று குறைபட்டாள்.

"ஏன்.."

"சொல்லியிருந்தா ஏதாச்சும் வாங்கிக்கிட்டு வந்திருப்பேன் தானே.. வெறுங்கையோட வந்தது எனக்கு ஒருமாதிரி இருக்கு...." என்று வருத்தப்பட்டாள்.

"அட இதுல என்ன இருக்கு.. அதெல்லாம் யாரு என்ன நினைக்க போறா..?"

"எனக்கு ஒருமாதிரி இருக்கு... நான் ஏதோ வெளிய தான் கூட்டிக்கொண்டு போகப் போறிங்கனு நினைச்சிட்டேன்.."

"அவ்வளவு தானே.. அப்ப இன்னொருநாள் ஏதாச்சும் வாங்கிட்டு வந்து அம்மாவைப் பாருங்க. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க..." என்றான்.

அவன் சொன்னது அவளுக்கு சரியாகத்தான் பட்டது. ஆனால் அவன் அடுத்து சொன்னது தான் அவளுக்கு சரியாகப்படவில்லை.

" அப்போ என்னோட இனி வெளிய வருவிங்க.. அப்படித்தானே..?"

அவள் எந்த உணர்ச்சியும் வெளி காட்டாமல் அவனைப் பார்த்தாள்.

" முறைக்கிறிங்களா மித்ரா..?"

" அப்படியா இருக்கு என் பார்வை..?"

" லைட்டா.." என்று உண்மையை சொன்னான்.

" என் பார்வையே அப்படித்தான்" என்றாள். ஆனால் அவனது கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை.

அவளை லேசாக கோபப்படுத்திவிட்டோமோ என்று அவன் பயந்தான். அவளுடைய அமைதி அவனை பயமுறுத்தியது. அவளை சமாதானம் செய்ய முயற்சிக்கும் முன் அவளது அத்தை வீட்டு வாசலை அடைந்தது அவனது கார். அவன் நிறுத்தியதும் காரிலிருந்து இறங்கினாள்.

" உங்க ட்ரீட்க்கு தேங்க்யூ நவிலன்.. சீ யூ.."

அதற்கு சம்பந்தமேயில்லாமல் அவன் அப்படி கேட்பான் என அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவன் கேட்டது தான் உண்மை.

ஆட்டம் தொடரும் ❤️?

Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Yedi, ithu unda hobby ah kadai,kadai ah poi adi podurathu.
Akka vum,thambi yum paasa payira romba than valarkuthunga.
Yedo monae , unn raja thanthiram nalla workout aaguthu,veetu ku kootti vanthu,intro koduthu ,amma moolam details collect panni,return visitukku oru reason ready panni,yappa dai vera level....
Thambi appadi yenna kettar? oru vela treat ku mooiya vilangama ethuvum kelkumo?????
 
Thank you for your lovely review Leenu ❤️. Next UD la therinjirum da
 
Top