Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -43

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member

அத்தியாயம் -43


அங்கே ப்ரித்வி வீட்டில்..
அன்று மதியம் நடந்ததை மனதுக்குள் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

சித்துவும் காயத்ரியும் இவனை பார்க்க இவனது அலுவலகம் வந்திருந்தனர்.

இவன் பழைய அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு இன்று தான் காயத்ரியை பார்க்கிறான்.

விடுப்பு எடுத்துக் கொண்டு இந்த மதிய வேளையில் வந்திருக்கிறாள் என்றால் ஏதாவது முக்கியமாக இருக்கும் என்று பார்த்ததும் புரிந்துகொண்டான் ரஞ்சித்.
இருவருக்கும் பழச்சாறு வரவழைத்தவன். அவள் முகத்தையே பார்க்க ..காயத்ரியின் முகமோ வெகு சீரியஸாக இருந்தது.

அது இன்னும் ஒரு பரபரப்பை கொடுத்தது .

" ரஞ்சித்! உங்க பெஸ்ட் பிரெண்ட்ஸா இருந்தாலும் இதுவரைக்கும் உங்கரெண்டு பேர் லைஃப்ல நாங்க தலையிட்டதில்லை. ஆனால் இன்னிக்கு நீங்க ரென்று பேருமே உடைஞ்சி போய் இருக்கறதை பார்க்கும்போது எங்களால சும்மா இருக்க முடியலை"

" நான் உடைஞ்சி போனதென்னவோ உண்மைதான்.. அனால் அவ நல்லாதானே இருக்கா ? இன்னொருத்தனை கல்யாணம் பண்ண ரெடி ஆயிட்டாளே!"

" நீயும் தான் இன்னொருத்தியை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லிட்டேன்னு கேள்விப்பட்டேன்."

"ஓக்கேல்லாம் சொல்லலை டா .. அங்க எல்லாரும் சேர்ந்திருந்த இடத்தில எங்கம்மா அப்படி சொன்னதும் மறுத்து பேச முடியலை. மத்தபடி.. உமை என் அத்தை பெண் அவ்வளவுதான்.. அவளை கல்யாணம் செஞ்சிக்கற ஐடியாலாம் இல்லடா".

"ஆண்பிள்ளை உன்னாலேயே உங்கம்மாவை எதிர்த்து பேச முடியலை.. அவ எப்படி அவங்கப்பாவை எதிர்க்க முடியும்னு யோசிச்சியா? தானா எடுத்த முடிவு தப்பாயிடுச்சோன்ற குற்ற உணர்ச்சியில் இருப்பாள்" என்றான் சித்து .

"அது மட்டும் இல்லை ரஞ்சித்.. அவ நாளைக்கு யு கே போறா"

" ஏன்? யு எஸ் சுற்றி பார்த்து போரடிச்சிடுச்சா? அவளுக்கு பார்த்த அந்த மைதாமாவு மாப்பிள்ளை யு. கேல இருக்கானா? இல்லை இவனையும் விட்டுட்டு யாராவது வெள்ளைக்காரனை கட்டிக்க போறாளா ? "

"டேய் இடியட் .. ஒரு ப்ராஜெக்ட்டுக்காக போறா. ஆனா உன்னை கட்டிக்கறதுக்கு அவ அந்த மைதாமாவையே கட்டிக்கலாம்னு எனக்கே தோணுது " என்றவுடன் தன் தோழனை முறைத்தான் ரஞ்சித்.

" டேய் சும்மா என்னையே சொல்லாத . அவ என்னிக்காவது என்னை பத்தி யோசித்து பார்த்திருக்கிறாளா ?"

" யோசிக்காமலா உனக்காக அவங்க வீட்ல அவ்வளவு பேசினா ? உங்கம்மா நிச்சயதார்த்தத்துக்கே ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட்டாங்க.. தனுஜா ஆன்டி அதெல்லாம் முடியாதுன்னு சொல்லியும் அம்ரு எவ்வளவோ பேசி அவங்களை செய்ய வச்சா.. வெளியே இருந்து பாக்கும்போது சுயநலமா தெரியலாம்.. அனால் உன்னையும் அதே சமயம் பெத்தவங்களையும் விட்டு குடுக்க கூடாதுன்னு நெனச்சி தான் செஞ்சா” என்றாள் காயத்ரி.

"ஆன்சைட் ஆபர்ச்சுனிடி எல்லாருக்கும்கெடைக்கறதில்லை.. அதுவும் பெண்களுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயமா தான் இருக்கு.. அதை அவள் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிச்சிட்டா நல்லதுன்னு நினைச்சிருக்கா . கல்யாணத்துக்கப்புறம் ஆண்களுக்கு வாழ்க்கை பெருசா மாறாது ரஞ்சித். ஆனால் பெண்களுக்கு.. அப்படியில்லை.. புது புது உறவுகள் ..அவங்க எல்லாரையும் புரிஞ்சிக்கணும். புது புது பொறுப்புகள்,, உங்க வீட்ல சமைக்கிற வீட்டு வேலை செய்யற விஷயம் இல்லாம இருக்கலாம். ஆனால் அதை தாண்டியும் பல பொறுப்புகள் இருக்கு பெண்களுக்கு.. இதையெல்லாம் பழகி புரிஞ்சி வர்றதுக்குள்ள பெரும்பாலும் கன்சீவ் ஆகிடுவாங்க..இல்லை குழந்தையில்லைனு ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிப்பாங்க . அப்புறம் எங்க இதை பற்றியெல்லாம் நினைக்கிறது? ஒரு வழியா.. இதெல்லாம் சமாளித்து வர ஒரு பத்து வருடமாவது ஆகிடும்..அப்போ திரும்பி பார்த்தா எல்லாரும் நம்ம விட வேகமா பல சுற்று ஓடியிருப்பாங்க.. நாம் மட்டும் தனியா ஓடிக்க்கிட்டிருப்போம். நாம இத்தனை வருஷத்திலே என்ன சாதிச்சோம்னு நெனைச்சு பார்த்தால் எதுவுமே நினைவுக்கு வராது.. அப்போ வர்ற அந்த தோற்று போயிட்ட உணர்வு இருக்கே.. அதில இருந்து பல பெண்கள் மீண்டு வரவே மாட்டாங்க"

தன் நண்பனை தோளோடு அணைத்த சித்து "அம்ரு இப்படி தோற்க வேண்டிய பெண்ணில்லை ரஞ்சித் .. அதுவும் அவள் உன்னால தோற்க கூடாது. எனக்கு தெரிஞ்ச நாளில் இருந்தே நீங்க ரெண்டு பெரும் மேட் ஃபார் ஈச் அதர்தான்.. எல்லாத்திலயும் ஒன்னு போலவே யோசிப்பீங்க ..ஈகோ காட்டறதிலயும் அப்படிதான் இருக்கீங்க .. அந்த கருமத்தை விட்டு ஒழிச்சிட்டு ரெண்டு பெரும் சேர்ந்து வாழற வழியை பாருங்க . டேய் இப்போ அவள் யுகே போனா மூணு வருஷம் கழிச்சி தான் வருவா.. அதுவும் வருவாளோ மாட்டாளோ தெரியாது.. இப்பவாவது உன் பிடிவாதத்தை விட்டு ஒழிடா "

"நடக்கறதெல்லாம் பாக்க முடியாமல் தான் நாங்க ரெண்டு பேரும் உன்னை தேடி வந்தோம் . ப்ளீஸ் ரஞ்சித்.. டோன்ட் லூஸ் யுவர்செல்ப் அண்ட் யுவர் லைஃப் .. பிகாஸ் அம்ரிதா ஐஸ் யுவர் லைஃப் . இதுக்குமேல நாங்க சொல்லி தான் உனக்கு புரியணும்னு இருந்தால் அதில எந்த அர்த்தமுமில்லைடா . நாங்க கிளம்பறோம்" என்று ஒரு பெருமூச்சோடு எழுந்து கொண்டனர் இருவரும்.

இப்படியாக இரு பக்கமும் திரியை பற்ற வைத்துவிட்டு வெடிக்குமா வெடிக்காதா என்று காத்திருந்தனர் சம்யுவும் ப்ரித்வியும் !
 
Top