Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -40

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் -40

சம்யுவுக்கும் ப்ரித்விக்கும் நடப்பது அத்தனையும் கவலை கொடுத்தாலும் எப்படியாவது உடன் பிறந்தவர்களை ஒன்று சேர்த்துவிட வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டனர்.

இப்படி ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருக்க ..ஒரு வாரம் கழித்து ப்ரித்வியின் வீட்டிற்கு வந்த சம்யுவிற்கு.. அங்கிருக்கும் அசாதாரண நிலை தெள்ள தெளிவாக புரிந்தது.

உணவு மேஜையில் அமர்ந்து நவநீ சாப்பிட்டுக் கொண்டிருக்க ..இவள் சென்றதும் வரவேற்றவர் "உக்காரும்மா சாப்பிடலாம் " என்றார் மென்னகையுடன் .

ஆனால் அந்த புன்னகை கண்களை எட்டவில்லை என்பதை அந்த சூக்ஷும புத்தியுள்ள பெண்ணின் மனம் அறிந்தது. வெளிக்காட்டிக்கொள்ளாமல் " வீட்டிலேயே சாப்பிட்டேன் மாமா . நீங்க சாப்பிடுங்க" என்றவள் அவரது தட்டில் காலியானது பார்த்து பரிமாற..அந்நேரம் சத்யா உணவறைக்கு வர "பரவாயில்லைமா ..என் பையன் குடுத்து வைத்தவன் தான் " என்றபடி பாதியில் உண்டுமுடித்து எழுந்தவர் அலுவலகம் சென்றுவிட்டார். போய் வருகிறேன் என்றோ .. ஏன் ஒரு தலையசைப்போ கூட யில்லை மனைவியிடம் .

"போயிட்டு வரேன்மா சம்யுக்தா .. வரேன் ப்ரித்வி " என்றவர் மனைவியை திரும்பியும் பார்க்கவில்லை.

பின்னோடு சென்ற சத்யா கணவர் திரும்பியும் பார்க்கவில்லை என்றதும் ஹால் சோபாவில் தொய்ந்து போய் அமர்ந்தார்.

" மாமா ஏன் ப்ரித்வி அத்தை கூட பேச மாட்டேங்கிறார்?"

"தெரியலை சம்யு.. அன்னிக்கு நீங்கல்லாம் வந்து போன பிறகு இருந்தே அம்மா கூட பேசமாட்டேங்கிறார். வேற அறையில தான் படுத்துக்கிறார். அவங்களை நிமிர்ந்து கூட பாக்கிறதில்லை. அவங்க இல்லாம சாப்பிடமாட்டார். இப்போ அவங்க இருக்கிற இடத்தில கூட இருக்க மாட்டேங்கிறார். அன்னிக்கு அம்மா பேசினது அவரை ரொம்ப பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் அவங்க ரெண்டு போரையும் இப்படி பாக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு “

"ஆமாம் ப்ரித்வி .. மாமாவும் நாலு வார்த்தை பொதுவாக பேசினார். அத்தை வந்ததும் பாதியிலேயே சாப்பிடாமல் எழுந்திட்டார். அத்தையும் ரொம்பவே அமைதியா இருக்காங்க . இல்லைன்னா இப்போ நான் வந்ததுமே என்னை திட்டறதுக்காவது வந்து நிப்பாங்களே!"

பேசிக்கொண்டே மாடிக்கு சென்றவர்கள் மாடியின் பால்கனிக்கு செல்ல ..அந்த இடம் எப்போதும் ப்ரித்விக்கு மிகவும் பிடிக்கும்.. அங்கிருந்து பார்த்தால் வீட்டின் பின்புறம் இருக்கும் அழகிய தோட்டம் தெரியும்.. சில்லென்ற காற்று வீசி மனதை குளிர்விக்கும்.

இன்று தன்னவளோடு காற்று வாங்கவென்று அங்கு சென்றவன்... பால்கனியின் திறப்பு வெட்டிவேர் பாய் கொண்டு அடைக்கப்பட்டிருக்க ..மனம் வேறெதையோ நாடியது.

"இங்க எதுக்கு கூட்டி வந்தே ப்ரித்வி ?' என்று கேள்வியெழுப்பியபடியே அவனை திரும்பி பார்த்தவள் ஒரு கணம் திகைத்தாள்.

அவனது பார்வை அவளையே மொய்க்க .. அது ஒரு காதலனின் உரிமையான பார்வை.. யாருமற்ற தனிமையின் பார்வை அது..

அந்த பார்வையின் வீச்சு அவளை முழுமையாய் வளைத்துக் கொள்ள .. "ப்ரீ " என்றழைத்தவளின் வாய் வழி காற்று மட்டும் வர சட்டென்று அவளை அருகில் இழுத்து அணைத்தான் . அவனது விரல்களின் அழுத்தத்தில் இடை துவள... அவனது மார்பிலே கொடி போன்று சாய்ந்தவளை .. மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ப்ரித்வி.

" சம்யு .. இப்படியே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்" அவளது காதில் கிசுகிசுத்தவன்.. தன் இதழ்களால் காதுமடலை உரச .. மேனி முழுக்க சிலிர்த்து அடங்கியது சம்யுவிற்கு.

மெல்ல அவன் இதழ்கள் அவளது முகம் முழுதும் ஊர்வலம் நடத்த .. கடைசியில் தன் இடம் வந்தது போல் அவளது இதழ்களில் நிலைகொண்டன .

மீள மனமற்று மீளும் வழியற்று இதழ்கள் கோர்த்துக்கொள்ள... தன் தம்பியை தேடி வந்த ரஞ்சித் வேகமாக கதவின் வழி எட்டி பார்த்தவன் இருவரின் நிலை கண்டு அப்படியே திரும்பிவிட .. அவனது வேக காலடி சப்தம் இருவரையும் நனவுலகுக்கு கொண்டு வந்தது.

இதழ்கள் பிரிந்தாலும் விழிகளும் மனமும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்க .. "யாரோ வந்த சத்தம் கேட்டுதே ப்ரீ"

"ஐ டோன்ட் கேர் .. ஆல் ஐ கேர் ஐஸ் அபவ்ட் யு அண்ட் திஸ் கிஸ்"

இதை கேட்டதும் பாவையின் இதழ்கள் புன்னகை சிந்த ..மறுபடி முத்தமிடும் ஆவல் தோன்றியது ப்ரித்விக்கு .
சத்தமின்றி திரும்பிவிட்ட ரஞ்சித்தின் இதயமோ மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது.

இவர்கள் இருவரின் நெருக்கம் அவனுக்குள் பொதிந்திருந்த நினைவுகளை கிளறிவிட .. கொடைக்கானலுக்கு சென்றதும் அம்ருவின் நினைவில் தத்தளித்ததும் பின் அவளே நேரில் வந்து நிற்கவும் .. அவளை அள்ளி அணைத்து முத்தமழையில் முக்குளித்ததுவும் கொஞ்சம் கூட பிசிறின்றி நினைவுக்கு வர .. மனம் அவளையே நாட ... தன்னையறியாமல் அவளது வீடு இருக்கும் பகுதிக்கு காரை செலுத்தினான்.

அவள் வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை அடுத்திருந்த ஒரு கடையின் அருகில் காரை நிறுத்தியவன்.. அவள் வெளியே வருவாளா என்று பார்த்திருக்க.. சற்று நேர காத்திருப்பின் பின்னர்..பாவையவள் காட்சி கொடுக்க..அவளையே பார்த்திருந்தான்.

வீட்டில் அனைவரும் கூடியிருந்ததால் அவளை உற்று கவனிக்கவில்லை.

ரொம்பவும் இளைத்திருந்தாள்.. பழைய துள்ளல் இல்லை நடையில்!

பூமிக்கு வலித்திடுமோ என்பதுபோல்.. தன்னை சுமப்பதே பெரும் பாரம் போல் அவள் நடந்து செல்வதை பார்ப்பதற்கு என்னவோ போல் இருந்தது.. அவனறிந்த ரித்து இவளில்லை.

அவனின்றி அவள் அவளாகவே இல்லை என்பது அவனுக்கு புரியவில்லை. ஏன் அவளுக்கும் தான் அது விளங்கவில்லை.

அவள் இவனை நோக்கி வருவது பார்த்து இவனுக்குள் இதயம் பலமடங்கு வேகமாக துடித்தது. தன்னை பார்த்துவிட்டாளா ? தன்னிடம் பேச வருகிறாளா? இல்லை என்னை ஏன் தொடர்ந்து வருகிறாய் என்று சண்டையிட வருகிறாளா ? அப்படி பேசினால் என்ன செய்வது ..மன்னிப்பு கேட்டுவிடுவோமா? உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்று சரணாகதி அடைந்துவிடுவோமா ?

இவன் பலவாறு யோசித்துக் கொண்டிருக்க அவள் இவனை கவனிக்கவேயில்லை.

இவன் கார் நிறுத்தியிருந்த கடை அருகே ஒரு புகழ்பெற்ற உணவகம் இருக்க.. இவனை தாண்டி அதனுள்ளே சென்றுவிட்டாள்.

இவள் உள்ளே செல்வதும் ... யாரோ ஒருவன் அவளை பார்த்து கையசைப்பதும், அவன் எதிரில் சென்று இவள் அமர்வதும், பின்னர் ..இருவரும் குளிர் காப்பியை உறிஞ்சியபடி கதைப்பதும் கண்ணாடி தடுப்பு வழியே தெள்ளென தெரிந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறி காத்திருந்த கேப் ஒன்றில் அம்ரு ஏறி சென்றுவிட .. அதற்குமேல் மனம் தாளாதவனாய்.. கன்னத்தில் வழியும்நீர் பார்வையை மறைக்க .. காரை கிளப்பியவன் ..நிம்மதி நாடி பப்பிற்கு கிளம்பினான்.. தன் நிம்மதி அங்கு இன்னொரு காரில் மௌனக் கண்ணீர் உகுத்தபடி பயணித்துக் கொண்டிருந்தது அறியாமல்!

கணவர் இவ்வளவு தூரம் வைராக்யமாயிருப்பர் என்று சத்யபாமா நினைக்கவே இல்லை.
எப்போதும் தான் சொல்வதை செயலாக்குபவர்.. அவருக்கென தனிப்பட்ட ஆசைகளோ.. பிடித்தங்களோ இருந்ததாக தெரியவில்லை. தெரிந்து கொள்ள இவர் முயலவில்லை என்பதே உண்மை.

கணவன் வீட்டாரையோ அருகிலேயே சேர்த்ததில்லை.
அதுவும் நாத்திகளைக் கண்டால் சுத்தமாக ஆகாது.
இன்று வேறு வழியின்றி அவர்களுக்கு அழைக்கிறார். வழக்கமாக அவர்கள் அண்ணி என்ற முறையில் அழைத்து பேசினாலும் ஓரிரு வார்த்தைகளோடு இணைப்பை துண்டித்து விடுவார். இன்று

தன் கணவர் தன்னிடம் பேசவில்லை .. சமாதானம் செய்ய வாருங்கள் என்று அழைக்க நா வரவில்லை.

இருந்தும் தட்டு தடுமாறி கேட்டுவிட்டார்.
கணவனின் முகம் திருப்பல் அத்தனையாக அவர் திடத்தை குலைத்து விட்டிருந்தது.

மூவருமே வந்து அண்ணனிடம் பேச ..
ப்ரித்விக்கு கிடைத்த பதிலே அவர்களுக்கும்.

சத்யாவிற்கு புரிந்துவிட்டது.. இனி தான்தான் பேச வேண்டும்.
தன்தந்தையின் மீதிருந்த மரியாதையால் தன்னை மணம் செய்துகொண்டாலும் தன்னிடம் அன்பாகவும் பாசமாகவும் தான் இருந்திருக்கிறார்.
கடமைக்கென வாழ்ந்ததில்லை... தான் தான் ஏனோ தானோ என்று குடும்பம் நடத்தியிருக்கிறோம் .
தன் பிள்ளைகளின் தகப்பன் என்பதற்குமேல் ஒன்றுமில்லை.

அவரிடம் ஒரு நல்ல மனைவியாக தான் என்றுமே நடந்ததேயில்லை ....இது எல்லாம் சேர்ந்து பெரும் குற்ற உணர்ச்சி அவரை ஆட்கொண்டது.

இப்படியாக யோசித்து யோசித்து நாட்கள் ஓடின . இன்று அவரை விடக் கூடாது என்று நினைத்தவராய்.. அவர் வரும் முன்னே வந்து ஹாலில் காத்திருந்தார் . அவர் மாலை அலுவலகம் முடிந்து திரும்புகையிலேயே.. கையில் காபி கோப்பையோடு காத்திருக்க... நவனீக்கு ஆச்சரியமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

சத்யபாமாவை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல.. அவரை வழிமறித்தவர் " என்னங்க இது ? என் கிட்ட ஏன் பேசமாட்டேங்கிறீங்க ?" என்றார் அழுகுரலில்.

அவரை மேலும் கீழும் பார்த்தவர்.. பார்வையில் கூட இளக்கம் காண்பிக்கவில்லை !
மௌனம் போதும் என்று நினைத்தவராய் "ஏன் உனக்கு தெரியாதா?" என்று கடுமையான குரலில் கேட்க.. சத்யா எவ்வளவோ முயன்றும் ஒரு கேவல் வெளிப்பட்டுவிட்டது.

"நான் செஞ்சது தப்புதாங்க . அந்த குடும்பம் நமக்கு அந்தஸ்துல சரி சமமா இல்லைன்னு நெனச்சி செஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க " ஒரு வழியாக அவர் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தை வந்துவிட .. அதற்குமேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை நவனீயால்.

" நம்ம பொண்ணுக்கு நீதான் வரன் பார்த்தே.. அப்போ இதெல்லாம் பார்த்துதான் செய்தே. ராகவ்வும் நல்ல பையன் என்பதால் நாங்க ஆட்சேபிக்கலை.. அதோடு ஸ்ரீக்கும் அவரை பிடித்திருந்தது. ஆனால் ரஞ்சித் விஷயம் அப்படியில்லை.. அவங்க ரெண்டு பெரும் மனசார காதலிக்கிறாங்க.. இங்கே அந்தஸ்துங்கற விஷயம் வரவே கூடாது. ரெண்டு பேருமே சின்ன வயசு.. பெருசா தோல்விகளை சந்திச்சதில்லை ... அதனால சின்ன விஷயங்களை ஊதி பெருசாக்கிக்கிட்டாங்க. பெரியவங்க நாம் அந்த தீயை தணிக்காமல் எண்ணையை ஊத்தி வளர்க்க கூடாது. புரிஞ்சுதா? அது மட்டுமில்லை நீ செஞ்ச தப்பை நீதான் திருத்தணும் " என்றவர் மனைவியின் கையில் இருந்த காபி கோப்பையை வாங்க .. முகம் மலர்ந்தவராய்

"இது ஆறி போயிடுச்சி. வேற போட்டு கொண்டுவரேங்க" என்று நகர .. அவர் கைபிடித்து இழுத்தவர் "எனக்கு இந்த காபியே அமிர்தமா இருக்கு. முதல் முதலா என் மனைவி எனக்காக கொண்டு வந்திருக்கா" என்று மனைவியை தன்னருகில் அமரவைத்துக் கொண்டு மெல்ல அந்த காபியை உறிஞ்சி குடிக்கலானார்.
 
Top