Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒளி சிந்தும் இரவு விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
கிரிஜா சண்முகம் மின் ஒளி சிந்தும் இரவு எனது பார்வையில். வயதான பெற்றோரின் தத்துப் பெண் முல்லை . அன்பரசு மூன்று முறை தமிழ் நாடு அளவில் ஆணழகன் என்று திரைத்துறையில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததை பயன்படுத்தி முன்னேறிச் செல்பவன். அன்புவின் அண்ணன் சத்யனின் காதல் மனைவியை இழந்த நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட அவனது மகள் ஜனனியை தன் மகளாக வளர்த்து வருகிறான். மகள் ஜனனி வளரும் பொழுது அம்மா துணை வேண்டும் என்று தங்களது அத்தை கல்பனாவின் மகள் சுகந்தி திருமணம் செய்து கணவனின் முறையற்ற நடவடிக்கையால் விவாகரத்து பெற்று இருப்பவளை அண்ணன் சத்யாவிற்கு‌ திருமணம் செய்து வைக்க நினைக்கிறான்.

முல்லையின் அப்பா தனது சொத்திற்காக உடன்பிறந்தவர்கள் தகராறு செய்வதால் அன்பரசுக்கு முல்லையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். சத்யன் மற்றும் சுகந்தி திருமணம் நடக்க இருக்கும் வேளையில் படப்பிடிப்பில் இருக்கும் அவனிடம் முல்லையுடனான திருமணம் பற்றி பேச முல்லை தான் பெண் என்று தெரியாமல் மறுத்துவிடுகிறான்.

முல்லை வீட்டில் சொத்துக்காக பிரச்சினைகள் வளர்கிறது. இந்த நிலையில் தன் வீட்டுத் திருமணம் நடக்கும் கோயிலில் முல்லையை சந்திக்கும் அவன் முல்லை தான் அப்பா சொன்ன பெண் என்று தெரிந்து இருவரின் திருமணம் நடக்கிறது. இரு இணைகளின் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார் கிரிஜா.

வில்லன் நடிகர் என்றாலும் கதையில் நாயகன் அன்பு என்பதை அழகாக தான் தந்திருக்கும் எழுத்தில் நம்மை ஈர்க்கும் நாயகனாக அன்பை நினைக்க வைக்கும் அருமையான எழுத்து. அன்பின் வீடு அன்பான கூடு. கதை வித்தியாசமாக நல்லா இருக்கிறது கிரிஜா.
 
Last edited:
Top