Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 22

Advertisement

niranjana subramani

Well-known member
Member
22.

அடுத்த நாள் காலை விடியலில்

“ அப்பா இன்னைக்கு ஆதிமாமாகிட்ட பேசப்போறேன்னு சொன்னிங்க. சீக்கிரம்
கிளம்புங்க” என மஞ்சரி நச்சரித்து கொண்டிருந்தாள்.

“ போறேன்ம்மா. உன் கல்யாண விஷயத்தை விட வேற என்ன வேலை இருக்கு
எனக்கு. நான் போய் ஆதிகிட்ட பேசி உனக்கும் அரசனுக்கும் கல்யாணம் பண்ண தேதியே குறிச்சுட்டு வரேன்” என சதாசிவம் கூறிக்கொண்டிருக்கையில் , அங்கு வந்த சரத்

“ அப்பா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை
முடிக்கணும்” என முகத்தில் தீவிரத்துடன் கூறினான்.

அதனை கேட்ட சதாசிவம் “ என்னஆச்சு???. ஏன் அப்படி சொல்ற சரத்???.” என கேட்க

“ இல்லப்பா…. அது……. அது….. மஞ்சரி இப்போதான் மனசு மாறி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கா. அவ மனசு மறுபடியும் மாறுறதுக்குள்ள சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும்ன்னு நினைச்சு சொன்னேன்” என சரத் சமாளிப்பாக கூறினான்.

“ என் மனசு இனி மாறாது அண்ணா. நான் முடிவு பண்ணிட்டேன் நிலவரசனைதான்
கல்யாணம் பண்ணனும்ன்னு. ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கலைன்னா. நான்
கடைசிவரை சதாசிவம் பொண்ணா இருந்துட்டு போறேன்” என உறுதியாக
கூறிவிட்டு மஞ்சரி தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

மஞ்சரிகூறி சென்றதை கேட்ட தந்தை மகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தங்கள் வேலைகளை கவனிக்க சென்றனர்.

ஆதிலிங்க மூர்த்தி அவரின் வீட்டில் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள்
படித்துக்கொண்டிருக்கும் போது,

அங்கு வந்த சதாசிவம்,

“ ஆதி…..” என உரக்க அழைத்தார்.

அந்த சத்தத்தில் நிமிர்ந்து சதாசிவத்தை பார்த்த ஆதிலிங்க மூர்த்தி,

“ ஏய்!!!... சதா வாடா. என்ன காலையிலையே வந்துருக்க???. எதுவும் முக்கியமான
விஷயமா????.”

“ ஆமாம் ஆதி. முக்கியமான விஷயம் பேசணும்தான் வந்தேன்.”

“ சரி சரி உட்காரு பேசலாம்” என ஆதிலிங்க மூர்த்தி சதாசிவத்திடம் கூறிவிட்டு

“ வள்ளி…. வள்ளி…..” என வீட்டில் சமையல் வேலைபார்க்கும் பெண்ணை அழைத்தார்.

“ என்னங்கய்யா????” என வந்து நின்ற வள்ளியிடம்

“ எனக்கும் சதாசிவத்துக்கும் குடிக்க மோர் கொண்டுவா” என கூறிவிட்டு

“ சொல்லுடா என்ன முக்கியமான விஷயம்??”

“ அது அரசனுக்கு ஏதும் பொண்ணு பார்த்துகிட்டு இருக்கியா ஆதி???.”

“ அரசனுக்கு பொண்ணா???...... ம்ம் இல்லையே சதா. இன்னும் ரெண்டு வருஷம்
போகட்டும்ன்னு இருக்கேன். ஏன் திடீர்ன்னு கேட்குற??”.

“ இல்ல உனக்குத்தான் தெரியுமே ஆதி. மஞ்சரிக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்கேன். என் மனசு எந்த மாப்பிளையை பார்த்தாலும் ஒப்ப மாட்டேங்குது.

எல்லா நல்லா இருந்தா ரொம்ப தொலைவான ஊரா இருக்கு. அதான் பேசாம அரசனுக்கு மஞ்சரியை கல்யாணம் பண்ணலாம்ன்னு ஒரு யோசனை. முதல்ல அரசன் படிச்சுக்கிட்டு இருந்தான். இப்போதான் படிப்பை முடிச்சுட்டு ஊருக்கு வந்து உன் தொழிலை எல்லாம் பார்க்குறான். அதான் கேட்டேன்.”

“ ஓ!!!... எனக்கு ஒன்னு ம் பிரச்சனை இல்ல சதா. மஞ்சரிக்கும் அரசனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் தான். ஆனா என் சம்மதத்த விட அரசனோட விருப்பம் தான் முக்கியம்”

“ நீ சொன்னா அரசன் கேட்பானேடா.”

“ நான் சொன்னா ஒத்துக்குவான் தான். அது அவன் எனக்கு தருகிற மரியாதை. நான் அவனோட விருப்பத்தை கேட்டு செய்றது நான் அவன் மேல வச்சுருக்க பாசம்”

“ சரிடா அப்போ அரசன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நல்ல பதிலா சொல்லுடா” என கூறிய சதாசிவத்தின் குரலில் இருந்த ஏமாற்றத்தை புரிந்துகொண்ட ஆதிலிங்க மூர்த்தி,

“ சதா எல்லா நேரமும் நாம ஆசைப்பட்டது நடக்காது. அதுக்காக நாம வருத்தபடுவது தேவை இல்லாதது. நான் பொதுவா சொல்றேன். அதே நேரம் நல்லதாவே நடக்கும்ன்னு நம்பு. அதுவே நமக்கு நல்லது செய்யும் சரியா”

“ சரி ஆதி.
அப்போ நான் கிளம்புறேன்.”

“ ஏன்???. இருந்து சாப்பிட்டுப்போடா”

“ இல்லடா. ஜெகா காத்துகிட்டு இருப்பா. நான் வீட்டுக்கு போயே சாப்ட்டுக்குறேன். அப்படியே மில்லு விஷயமா மாணகிரியூருக்கு போகனும்”

இடையில் வள்ளி மோரை வைத்துவிட்டு செல்ல,

“ அப்போ சரி இந்த மோரை குடிச்சுட்டு. பார்த்து போயிட்டுவா” என கூறிய ஆதிலிங்க மூர்த்தியிடம் விடைபெற்று சதாசிவம் சென்ற பின் யோசனையில் இருந்தார் ஆதிலிங்க மூர்த்தி.

அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாக “ ஐயா” என மாரி அழைத்தான்.

“ என்ன மாரி???”

“ ஐயா நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்ங்க”

“ சொல்லு”

“ அதுங்க நேத்து நம்ம சின்ன அம்மாவும் அந்த மருத்துவச்சி பொண்ணு அரசியும் குளகரையில இருந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் எதேச்சையா கேட்கறப்போ” என கூறி நிறுத்திய மாரி சற்றே தயங்க

“ என்ன தயங்குற???. சொல்லு”

“ இல்ல அது அவங்க பேசுவதை வச்சு பார்க்குறப்போ. அந்த அரசி பொண்ணும் நம்ம சின்ன ஐயாவும் விரும்புறாங்களோன்னு தோணுச்சுங்கய்யா. அதான் உங்க கிட்ட ஒருவார்த்தை சொல்லிப்புடலாம்ன்னு”
என மாரி நிறுத்த

“ ஓ!!!... சரி நான் பார்த்துக்குறேன் மாரி. நீ இதை பத்தி யாருகிட்டயும் சொல்லாத சரியா.”

“ சரிங்கையா”

“ சரி நீ போ”

“ ஹ்ம்ம்” என்ற தலையசைப்புடன் ‘ என்ன நாம எவ்வளவு பெரிய விஷயம் சொன்னா. ஐயா ஓ!!.. ன்னு ஒத்த சொல்ல சொல்றாரு. ஹ்ம்ம் அவரு மனசுல என்ன இருக்கோ????’ என எண்ணிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

மாரி கூறி சென்ற விஷயம் அவ்வளவு அதிர்ச்சியாக இல்லை ஆதிலிங்க மூர்த்திக்கு
. ஏனெனில் ஆதிலிங்க மூர்த்தியே பலதடவை நிலவரசனும் மயிலரசியும் தனியா சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது பார்த்திருக்கிறார்.

அதோடு நிலவரசனில் கண்களில் மயிலரசிக்கான காதலையும் பார்த்ததால் தான் சதாசிவத்திடம் மறைமுகமாக நிலவரசன் மஞ்சரி திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என கூறினார்.

இருந்தாலும் நிலவரசன் நேரடியாக அவனுடைய காதலை தன்னிடம் கூறி சம்மதம் வாங்க வேண்டும் என எண்ணினார். ஆனால் அதற்குள் மாரிக்கு விஷயம் தெரிந்ததால். இது ஊருக்குள் வேறு யாருக்கும் தெரிந்து மயிலரசியை தவறாக பேசக்கூடாது என எண்ணி நிலவரசனுக்கும் மயிலரசிக்கும் கல்யாணம் செய்ய முடிவு செய்து; அதனை பற்றிய சிந்தனையில் இருந்தார்.

‘ நிலவரசனுக்கும் மயிலரசிக்கும் கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி இந்த விஷயம் பத்தி மயிலரசிகிட்ட கேட்டு உறுதி பண்ணிக்கனும். ஆனா இவுங்க காதல் விஷயம் வனிதாவுக்கு தெரியுமான்னு தெரியலையே’ என ஆதிலிங்க மூர்த்தி எண்ணிக்கொண்டிருக்கையில்,

கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த வனிதா அவரை கடந்து செல்கையில் “ வனிதா” என சற்றே உரக்க அழைக்க,

திடீரென கேட்ட குரலில் வேகமாக சென்று கொண்டிருந்த வனிதா சட்டென்று திரும்பி ஆதிலிங்க மூர்த்தியை காண,

“ ஒரு நிமிஷம் நில்லும்மா” என கூறி ஆதிலிங்க மூர்த்தி வனிதாவின் அருகில் சென்றார்.

“ சாப்பிட்டியா வனிதா???.”

‘ என்னடா அதிசயம் நம்மக்கிட்ட சாப்டியான்னு கேட்குறாரு என வனிதா மனதில் எண்ணுகையில்,

“ உன்னைத்தான் வனிதா சாப்பிட்டியா????. “

“ ஹ்ம்ம்…..” தன் தலையை மட்டும் அசைத்தாள்.

“ சரிம்மா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.”

‘ அதுசரி இவராவது நம்மகிட்ட அன்பா பேசுறதாவது. ஹ்ம்ம் ஏதாவது வேணும்னாதான் இவருக்கு பொண்ணு நியாபகம் வருது’ என எண்ணிக்கொண்டு

“ சொல்லுங்க அப்பா”

“ ஹ்ம்ம்…. அது உன் தோழி அந்த அரசி பொண்ணும் உங்க அண்ணனும் விரும்புறாங்களா???” என ஆதிலிங்க மூர்த்தி கேட்க

‘ ஆத்தாடி என்ன எல்லாருக்கு இவுங்க காதல் விஷயம் தெரிஞ்சுருக்கு. இப்போ நாம ஆமான்னு சொல்றதா இல்ல இல்லைன்னு சொல்றதா’ என எண்ணிக்கொண்டிருக்கையில்

“ வனிதா சொல்லுமா” என மீண்டும் சற்றே அழுத்தமாக ஆதிலிங்க மூர்த்தி வினவ

“ ஆமா அவுங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க” என உண்மையை கூறிவிட்டாள் வனிதா.

“ ஓ!!!!....’ என ஆதிலிங்க மூர்த்தி வேறு எதுவும் கூறாது அமைதியாக இருக்கையில்,

‘ ஒருவேளை கோவமாக இருக்காரோ’ என நினைத்து

“ அப்பா தயவு செய்து அவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடுங்க. அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப நேசிக்குறாங்க. அரசியோட அம்மா வேற எதோ பிரச்சனை பண்ணுறாங்க போல. நீங்க தான் பேசி எப்படியாவது கல்யாணம் செஞ்சுவைக்கணும் அப்பா” என வனிதா சற்றே கெஞ்சும் குரலில் கேட்க

இதுவரை பிறந்ததில் இருந்து ஒரு வார்த்தையில் பதில் சொல்லும் தன் மகள் இன்று தன் அண்ணனுக்காகவும் தோழிக்காகவும் பேசவும் அதில் மகிழ்ந்த ஆதிலிங்க மூர்த்தி,

‘ அரசனுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆனா நிச்சயம் என் மகள் என்கிட்ட நல்லா பேசுவா. இதுக்காகவாது நாம சீக்கிரம் இந்த கல்யாணத்தை முடிக்கணும்’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ ஹ்ம்ம் அதை பத்தி அரசி பொண்ணுகிட்ட பேசிட்டு என் முடிவை சொல்றேன். இப்போ நீ போ” என ஆதிலிங்க மூர்த்தி கூற,

வேற எதுவும் கூற தோணாது ஒரு தலை அசைப்பில் கல்லூரிக்கு கிளம்பினாள் வனிதா.

பின் மாரி மூலம் மயிலரசியை ஒற்றை கால் மண்டபத்திற்கு வரச்சொன்ன ஆதிலிங்க மூர்த்தி மயிலரசிக்காக அங்கு காத்திருந்தார்.

“ ஐயா வர சொன்னிங்களா???” என மெல்லிய குரலில் மயிலரசி வினவ

“ ஹ்ம்ம் ஆமா அரசி. நான் எதுக்கு உன்னைய இங்க வர சொன்னேன் தெரியுமா???” என கேட்டுக்கொண்டு மயிலரசியை காண,

விழிகள் இரண்டும் கலங்கிய நிலையில், இமைகள் வீங்கி அழுது சிவந்த முகத்தை காணுகையில் பாவமாக தோன்றியது. அதே நேரம் வனிதா சொன்ன ‘அவுங்க அம்மா பிரச்சனை பண்றாங்க’ என கூறியது நினைவு வர,

“ உனக்கும் நிலவரசனுக்கும் அடுத்த முஹுர்த்தத்துல கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன். அரசன் வந்தவுடன் உறுதி பண்ணிக்கலாம். அநேகமா இன்னைக்கு மாலை வந்துடுவான். நாளைக்கு வந்து உங்க அம்மா கிட்ட பொண்ணு கேட்குறேன் சரியா???” என ஆதிலிங்க மூர்த்தி கேட்க

மயிலரசி அதிர்ந்த நிலையிலையே நின்றுவிட்டாள். அவளின் நிலை பார்த்து “ என்னமா திகைச்சு போய் நின்னுட்ட????” என ஆதிலிங்க மூர்த்தி கேட்க

“ ஐயா!!... ஐயா!!!.... நிஜமா!!!... நிஜமாவே … சொல்றிங்களா???….” என திணறலுடன் மயிலரசி வினவ

“ ஹ்ம்ம்….. உண்மையாதான் சொல்றேன். அரசன் எப்போ வந்து உங்க காதலை சொல்லி. என் சம்மதம் வாங்கி, உங்க அம்மா சம்மதம் வாங்கி, கல்யாணம் செய்றது. அதான் நானே செய்யல்ல இறங்கிட்டேன். உனக்கு சரிதானே” என சிறு புன்னைகையுடன் கேட்க பதில் ஏதும் சொல்ல முடியாது தன் தலையை மட்டும் அசைத்தாள்.

“ அப்போ சரிம்மா நான் போய் மத்த வேலைகளை பார்க்குறேன். நீ எதுக்கும் கலங்காம இரு சரியா” என கூறி சென்றுவிட்டார் ஆதிலிங்க மூர்த்தி.

அவர் சென்றவுடன் ஆனந்த அதிர்ச்சியிலேயே இருந்தாள். மயிலரசி. மாரி வந்து ‘ பெரிய ஐயா அழைக்குறார்ன்னு’ சொன்னவுடன் ‘ காதல் விஷயம் தெரிந்து ஊரைவிட்டு போக சொல்ல போறார்’ என எண்ணிக்கொண்டு வந்தவளுக்கு கல்யாணம் பேசி விட்டு சென்றதை நம்ப முடியாது சந்தோசத்தில் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

மயிலரசியிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த ஆதிலங்க மூர்த்தி மதிய உணவை சாப்பிட்டுவிட்டு. சற்றே உறங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மதியம் மூணு மணி போல் வந்த மாரி

“ ஐயா….. ஐயா……” என உரக்க அழைக்க.

அந்த சத்தத்தில் எழுந்த ஆதிலிங்க மூர்த்தி,

“ என்ன மாரி???. எதுக்கு இப்படி கத்துற????” என தூக்கம் தடைபட்ட எரிச்சல் குரலில் கேட்டுக்கொண்டே அவன் அருகிலே வர

அவன் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டு,

“ என்ன????”

“ ஐயா நம்ம மருத்துவச்சி பொண்ணு அரசி இருக்குல்ல அந்த பொண்ணு செத்துப்போச்சுங்க”

“ என்னது????!!!!!...” என அதிர்ச்சியாக ஆதிலிங்க மூர்த்தி கேட்க

“ ஆமங்கையா அந்த ஒத்த காலு மண்டபத்துல கைய அறுத்துகிட்டு செத்துப்போயிருக்கு. அதோடா அங்க இருக்குற தூணுல அரசன் அரசின்னு கிறுக்கி வச்சுட்டு செத்து போயிருக்குங்கய்யா”

ஆதிலிங்க மூர்த்தி எதுவும் கூறாது வேகமாக கிளம்பி ஒற்றை கால் மண்டபத்திற்கு சென்றார்.

அங்கு தன் வலதுகையின் மணிக்கட்டில் அறுத்து, விழிகள் இரண்டும் சொருகி,
முகத்தில் ரத்தத்துடன் குப்பறக்க விழுந்து இறந்து கிடந்தாள் மயிலரசி. அதனைக்கண்டு அதிர்ச்சி ஆகி அடுத்து என்ன செய்வது என தெரியாது தன் பார்வையை திருப்ப.

அங்கு வனிதாவும் நிலவரசனும் இவரை குற்றம் சாட்டும் பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆதிலிங்க மூர்த்தி எதுவும் கூறாது அமைதியாக தன் வீட்டிற்கு செல்ல. அவரை பின் தொடர்ந்து வந்த நிலவரசன்,

“ அப்பா ஒரு நிமிஷம் நில்லுங்க. எதுக்காக என் மயிலம்மாவை கொன்னிங்க???” என வீட்டின் வாசலில் வைத்து ஆவேசமாக கேட்க

அந்த கேள்வியில் துடித்து போய்விட்டார் ஆதிலிங்க மூர்த்தி. ஒரு உயிரின் இழப்பு அதுவும் தன் மனம் கவர்ந்தவரின் இழப்பு எத்தகைய கொடுமை என்று இன்று வரை யோகாம்பிகையை இழந்து அனுபவித்து வருகிறார்.

அத்தகைய கொடுமையான நரகத்தை தன் மகனுக்கு கொடுத்துவிட்டதாக நிலவரசன் கூறியது. அவருக்கு நெஞ்சில் ஒரு வலியை ஏற்படுத்தியது. அதோடு நில்லாமல் நிலவரசன் தொடர்ந்து,

“ நீங்க என் காதல் விஷயத்தை பத்தி வனிதாகிட்ட தெரிஞ்கிட்டு. இன்னைக்கே எதுக்கு மயிலரசியை பார்க்க போனீங்க???. என் வாழ்க்கையை சூனியமாக்கவா???”

“ இல்லப்பா…. உனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறதைப்பத்திதான்…..” என நிலவரசன் கூறியதை மறுத்து கூற வருகையில்

“ இதை நான் நம்பணுமா????. உங்களுக்கு உங்க விருப்பபடிதான் எல்லாம் நடக்கணுமா???. எனக்கும் மஞ்சரிக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணி தேதி குறிக்க கூட சதாசிவம் இங்க வந்தாராமே”
என நிலவரசன் கூறுகையில் ,

ஆதிலிங்க மூர்த்தி எதோ கூற வரையில்,

“ தயவு செய்து இதுவும் இல்லைன்னு பொய் சொல்லாதீங்க. ஏன்னா காலையிலையே அந்த மஞ்சரி எனக்கு போன் பண்ணி அவளுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணப்போறதாகவும் தேதி குறிக்க போறதாவும் சொன்னா.

ஆனா நான் நம்பள. ஏன்னா என்கிட்டே ஒருவார்த்தை கேட்பிங்கன்னு நினைச்சேன். ஆனா அவசரம் அவசரமா வனிதாகிட்ட என் காதலை பத்தி கெட்டு தெரிஞ்சுக்கிட்டு.

இன்னிக்கே என் மயிலம்மாக்கிட்ட பேசி அவளை தற்கொலைக்கு தூண்டி. இன்னைக்கு அவளை இல்லாம ஆக்கி என்னைய ஒன்னும் இல்லாம ஆக்கிகிட்டீங்களே.” என கோவமாக கத்திக்கொண்டிருந்த நிலவரசன்,

கலங்கிய விழிகளோடு கரகரப்பான குரலில்,

“ அதானே நீங்க பெத்த பையன்னா யோசிச்சுருப்பீங்க. நான் உங்க தம்பி பிள்ளை தானே. அதான் உங்க நண்பன் தான் முக்கியம் அவரோட ஆசைதான் முக்கியம்ன்னு என்னோட ஆசையா இன்னைக்கு அழிச்சிட்டீங்க” என கூறி சென்றுவிட்டான்.

நிலவரசன் சென்ற பின் வாசலிலையே அமர்ந்து விட்டார் ஆதிலிங்க மூர்த்தி. ‘ என்ன வார்த்தை கூறிவிட்டான்???. நான் என் ரெண்டு பிள்ளைகளைவிட இவன் மேல தானே என் உயிரையே வச்சுருக்கேன். எப்படி இன்னைக்கு நான் அவன் வாழ்க்கையையே அழிச்சுட்டேன்னு சொல்றான்???.

என் யோகம் இறந்து நான் எல்லாரையும் விட்டு, ஏன் நான் பெத்த ரெண்டு மகள்களைவிட்டு கூட ஒதுங்கி இருக்க முடிஞ்ச என்னால என் அரசனை ஒதுக்க முடியலையே. இன்னைக்கு இப்படி பிரிச்சு பேசிட்டான்’ என மனதில் எவ்வளவு நேரம் எண்ணி மறுக்கினாரோ,

மாரி வந்து “ ஐயா!!!... என்னங்க ஐயா???. இப்படி உட்கார்ந்திருக்கிங்க???. வாங்க ஐயா வீட்டுக்குள்ள போகலாம்” என பதட்டமாக சொல்ல

ஆதிலிங்க மூர்த்தி எதுவும் கூறாது சிறுது நேரம் அமைதியாக இருந்து விட்டு,

“ அந்த அரசி பொண்ணு…..’ என எதோ கேட்கவந்து ஆதிலிங்க மூர்த்தி அமைதியாக இருக்க

“ அந்த பொண்ணோட உடம்பை தகனம் பண்ணிட்டாங்கய்யா. அந்த தில்லைநாயகிக்கு தான் சொந்தம்ன்னு யாரு இல்லைங்களையா. அதான் சட்டுன்னு காரியம் எல்லாம் முடிச்சுட்டாங்க.

ஆனா பாவம் அந்த நாயகி அம்மா. இருக்குற ஒரே பொண்ணையும் இழந்துட்டு . ம்ப்ச்….. ஒரே கதறல்ங்கையா நம்ம சின்ன ஐயாவும் சின்ன அம்மாவும் அங்கதான் அழுதுகிட்டு இருந்தாங்க”

“ ஓ!!!...” என கூறிவிட்டு வேற எதுவும் சொல்லாது வீட்டினுள் சென்றுவிட்டார் ஆதிலிங்க மூர்த்தி.

காலங்கள் வேகமாக செல்ல மயிலரசி இறந்து மூணு மாசம் கடந்தது. இந்த மூணு மாசமும் நிலவரசன் அவனுக்குள்ளையே ஒடுங்கி கொண்டான்.

வனிதாவிடம் மட்டும் இரண்டொரு வார்த்தை பேசுவான் ஆதிலிங்க மூர்த்தியிடம் சுத்தமாக ஒதிங்கிவிட்டான். இந்நிலையில் ஒரு நாள் தீவர காய்ச்சலில் நிலவரசன் அவதிப்பட அதனை அடுத்து அவனுக்கு மனநிலை பாதிக்கபட்டது.

அதற்கு அடுத்து “ என் மயிலு… என் மயிலு” என எப்பொழுதும் புலம்புவான். மேலும் அம்மாவாசை முடிந்து வரும் நாலாவது நாள் அவனின் அலறலும் வேகமும் அதிகமாக இருக்கும். இதற்கான சிகிச்சையை வீட்டில் இருந்தே கொடுத்துவந்தனர்.

நிலவரசன் மனநிலை பாதிக்கப்பட்டாலும் அவன் குணம் அடைந்தவுடன் அவனைத்தான் திருமணம் செய்வேன் என மஞ்சரி உறுதியாக கூறிவிட. அதனால் சதாசிவம் வீட்டிலும் மஞ்சரியை திருமணத்திற்கு வற்புறுத்தாமல் விட்டனர்.

நிலவரசன் மனநிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆதிலிங்க மூர்த்தியும் வனிதாவும் மிகவும் கவலை உற்றனர்.

தான் தன் மகள்களுக்கு செய்த பாவம் இன்று தன் மகனை இப்படி அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான் என நினைத்து மயிலரசி இறந்து சரியாக ஒருவருடம் கடந்த பின் தன் இன்னொரு மகள் விசித்ராவை தேடி சென்றார்.

அங்கு விசித்ராவை கண்டு அவளின் நிலையை அறிந்த பின் அவரின் குற்றவுணர்ச்சி மேலோங்க ஆரம்பித்தது. தன் மகள் அப்பா அம்மா என ஒரு குடும்ப சூழலில் வளரவேண்டும் என தன் தந்தை குலசேகரன் விசித்ராவை தன் நண்பனுக்கு தத்துக்கொடுத்தார்.

ஆனால் அவள் சிறு வயதில் இருந்து அப்பா அண்ணன் சகோதரி இருந்தும் அனாதையாக அல்லவா வளர்ந்திருக்கிறாள். இதற்கு முழு காரணம் தான்தானே. தான் மட்டும் அன்று யோகாம்பிகையின் இழப்பிலிருந்து சீக்கிரம் மீண்டு என் தந்தைக்கான கடமையை சரியாக செய்து இருந்தால். இன்று என் மகன், மகள்கள் யாரும் கஷ்டப்பட்டிருக்க வேண்டியது இல்லையே என வருத்தமுற்றார்.

அதன் பின் நிலவரசின் தற்போதைய நிலையை விசித்ராவிடம் கூறாது, நிலைமை இப்பொழுது சரி இல்லை என்று கூறி அவளின் படிப்பை தொடர சொல்லி அரங்கநாதபுரத்திற்கு வந்துவிட்டார்.

நிலவரசனிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் சதாசிவம் வனிதாவை சரத்திற்கு பெண் கேட்க ஆதிலிங்க மூர்த்தியும் சரி என்று கூறி திருமண வேலைகளை ஆரம்பித்தார்.

அதற்கு காரணம் வனிதாவை சரத்திற்கு திருமணம் செய்துவைக்கும் பொருட்டு அவளும் இங்கயே தன் கண்முன்னையே இருப்பாள். மேலும் சரத் நிலவரசனின் நண்பன்.

ஒரு வேலை நிலவரசனுக்கு குணம் ஆகாமல் போனால். அவனை தன் காலத்திற்கு பின் சரத்தும் வனிதாவும் பார்த்துக்கொள்வார்கள்.
அதோடு சரத்தை மறுக்க வேற எதுவும் காரணம் இல்ல ஆதிலிங்க மூர்த்தியிடம்.

இந்நிலையில் நிச்சயம் நடக்க இன்னும் பதினைத்து நாட்கள் இருந்த நிலையில் எதர்ச்சையாக வனிதாவின் டைரி ஆதிலிங்க மூர்த்தியிடம் கிடைத்தது. அதனை படித்து வனிதா கதிரை விரும்புவதை தெரிந்துகொண்டார்..

மேலும் நிலவரசனுக்கும் அவர்கள் காதல் தெரியும் என தெரிந்து கொண்ட பின் கதிருக்கும் வனிதாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் மயிலரசி விஷயத்தில் அவசரப்பட்ட மாதிரி செய்யாமல் வனிதாவே அவளுடைய காதல் பற்றி கூறட்டும் என முடிவு செய்து விசித்ராவை சரத்திற்கு நிச்சயத்த தேதியில் கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்தார் ஆதிலங்க மூர்த்தி.

சதாசிவம் குடும்பத்திடம் உண்மையை கூறினார் ஆதிலிங்க மூர்த்தி. சரத்தும் விசித்ராவை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள அதனை அடுத்து கல்யாண வேலைகள் வேகமாக நடந்தது.

ஆனால் திருமணம் தனக்கும் சரத்திற்கும் என நினைத்த வனிதா கதிருடன் ஜனவரி ஆறாம் தேதி காலை 4 மணி போல் ஊரைவிட்டு ஓடிப்போக முடிவு செய்தனர்.

இதை அறியாத ஆதிலிங்க மூர்த்தி ஐந்தாம் தேதி இரவு 8 மணிபோல் ஹாலில் அமர்ந்து எதோ சிந்தனையில் இருந்தார். அப்போது வள்ளி வனிதாவின் அறைக்கு பால் எடுத்து செல்வதை பார்த்த ஆதிலிங்க மூர்த்தி,

“ வள்ளி பால் யாருக்கு???”

“ சின்ன அம்மாவுக்கு ஐயா”

“ சாப்புடுற நேரத்துக்கு இப்போ பால் எதுக்கு???”

“ இல்லங்கையா அம்மா சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. அதான் பாலாவது குடிக்குறாங்களோ என்னமோன்னு நானா கொண்டுபோறேன்”

“ சரி” என கூறியவர் எதோ தோன்ற

“ நில்லு வள்ளி பாலை என்கிட்ட கொடு. நான் கொடுக்குறேன் வனிதாவுக்கு”

“ சரிங்கய்யா. அப்புறம் ஐயா ஒன்னு சொல்லணும்ங்க”

“ ஹ்ம்ம் சொல்லு”

“ அது என் மக ரெண்டாவது பிரசவத்துக்கு அவ ஊருக்கு கூப்டுருக்கா. அதான் ஒரு இருபது நாள் போயிட்டு நிச்சயதார்த்த அன்னைக்கு வந்துடுறேனுங்க ஐயா”

“ நிச்சயதார்த்த அன்னைக்கு வேலை அதிகம் இருக்கும்.
இல்லைனா இன்னும் கூட விடுப்பு எடுத்துக்க சொல்லுவேன். சரி சாமிக்கண்ணு கிட்ட எவ்வளவு காசு வேணும்ன்னு கேட்டு வாங்கிக்க” என கூறி பாலை எடுத்துகொண்டு வனிதாவின் அறைக்கு சென்றார்.

பாலை எடுத்துக்கொண்டு வனிதாவின் அறைக்கு சென்ற போது அமைதியாக படுத்திருந்தாள் வனிதா. அவளின் அருகில் சென்று,

“ வனிதா… வனிதா….” என
ஆதிலிங்க மூர்த்தி எழுப்ப

அரை தூக்கத்தில் இருந்தவள் ஆதிலிங்க மூர்த்தியின் குரலில் வேகமாக எழுந்தாள். அவரை கண்டு ‘ என்ன நம்மள பார்க்க வந்துருக்காரு; என எண்ணிக்கொண்டு எதுவும் பேசாது ஆதிலிங்க மூர்த்தியையே பார்க்க;

“ என்னமா சாப்பாடு வேண்டாம்ன்னு சொன்னியாம். ஏன்டா???”

“ ஹ்ம்ம்… பசிக்கலை.”

“ அப்போ இந்தா பாலையாவது குடிச்சுட்டு படு”

‘ ஆத்தி இவரு பாசமா பேசுனாலே எதாவது வில்லங்கம் வருமே’ என வனிதா நினைக்க

“ என்னமா யோசனை பாலைக்குடி இந்தா”

வனிதாவும் எதுவும் கூறாது பாலை வாங்கி குடிக்க,

“ எதுவும் என்கிட்ட சொல்லனுமா வனிதா???.” திடீரென ஆதிலிங்க மூர்த்தி வனிதா காதல் பற்றி கூறுவாளா என எண்ணி கேட்க

அந்த கேள்வியில் குடித்துக்கொண்டிருந்த பால் புரையேற ‘ இல்ல’ எனும் விதமாக தலை அசைத்துவிட்டு வேகமாக பாலை குடித்துவிட்டு படுத்துவிட்டாள்.

ஆதிலிங்க மூர்த்தியும் ஒன்றும் கூறாது தன் அறைக்குசென்றுவிட்டார். சரியாக நள்ளிரவு 12 மணிபோல்,

நிலவரசன் “ ஆஆ…. ஆ….. ஆ….” என அலற வழக்கம் போல் ஆதிலிங்க மூர்த்தியும் மாரியும் அவனை சமாதானம் படுத்தி உறங்க வைத்துவிட்டு வந்தனர்.

அப்போது ஆதிலிங்க மூர்த்திக்கு எதோ ஒன்று மனசுக்கு தவறாக பட்டது. அது எப்போதும் நிலவரசனின் அலறல் சத்தம் கேட்டவுடன் முதலாவதாக எழுந்துவரும் வனிதா வராதது ஒரு மாதிரி இருந்தது . உடனடியாக வனிதாவின் அறைக்கு சென்று விளக்கைப்போட்டு வனிதாவை காண.

அங்கு வனிதா வாயில் நுரை தள்ளி படுத்திருந்தாள் அதனை கண்டு பதட்டமான ஆதிலிங்க மூர்த்தி உடனடியாக மாணகிரியூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன் பின் எதற்கு வனிதா தற்கொலைக்கு முயன்றாள் என தெரியாது,
கதிரை கண்காணிக்க ஆள் அனுப்புனது மூலம் கதிர் ஹார்ஷாவை அணுகி வனிதாவை கண்டுபிடிக்க சொன்னதை தெரிந்து கொண்ட ஆதிலிங்க மூர்த்தியும் மறைமுகமாக ஹர்ஷாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, வனிதாவின் தற்கொலைக்கான காரணத்தை அறிய நினைத்தார்.

இதில் ஆதிலிங்க மூர்த்தியே எதிர்பார்க்காதது வனிதாவுக்கு நடந்தது கொலைமுயற்சித்தான் என சதாசிவம் கடந்த காலத்தை ஹர்ஷாவிடமும் கிஷோரிடமும் கூறி முடித்தார்.





இனி ஹர்ஷா மற்றும் கிச்சாவுடன் நாமும் கொலையாளியை தேடுவோம்………..அடுத்தடுத்த அத்தியாயங்களில் …….
 
சரத் தா இல்ல மஞ்சரியா இவங்க 2 பேர்ல தான் யாரோ குற்றவாளினு தோனுது
 
Top