Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 12

Advertisement

niranjana subramani

Well-known member
Member
12.





திடீரென அறைக்குள் நுழைந்த ஆதிலிங்க மூர்த்தியை பார்த்து வனிதாவை தவிர மற்ற மூவரும் சற்று அதிர்ச்சியுடன் நின்றனர்.

"வனிதா நான் சொல்றது உண்மைமா.மயிலரசிய நான் கொல்லல . நீயும் அரசனும்
ஏன்தான் என்னைய நம்ப மாட்டேங்குறீங்கன்னு எனக்கு புரிய மாட்டேங்குது.
பத்தாததுக்கு நான்தான் உன்னைய கொல்ல பார்த்தேன்னு சொல்ற.”
தன் கலங்கிய குரலால்ஆதிலிங்க மூர்த்தி பேசிக்கொண்டே போக,

வனிதா ‘ நீ சொல்றத நான் நம்பணுமா’ என்ற எண்ணத்துடன் ஆதிலிங்க மூர்த்தியை வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

வனிதாவின் நம்பிக்கை இல்லாத பார்வையை கண்ட ஆதிலிங்க மூர்த்தி வனிதாவின் அருகில் சென்று அவளின் கையை பிடித்துக்கொண்டு,

“ வனிதா ஏன் மா நம்பமாட்டேங்குற????.
நிலவரசன் நான் ஆசையா வளர்த்த என் பையன் மா. அவனோட வாழ்க்கையை சூனியமாக்க நானே நினைப்பேனா.” என பேசிக்கொண்டிருந்தார்.

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அவரை ஆராயும் நோக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் வனிதா.

“ என்னமா????” என ஆதிலிங்க மூர்த்தி வினவ,

அதற்கும் பதில் ஏதும் சொல்லாது அவரை நோக்கி வனிதா சிறு புன்னகை ஒன்றை சிந்த.

“ என்னமா????” என ஆதிலிங்க மூர்த்தி மறுபடியும் புரியாமல் வினவனார்.

“ இல்ல அதான் நீங்களே சொல்லிட்டீங்களே அரசு அண்ணா நீங்க வளர்த்த பையன்னு” என வனிதா கூற

ஆதிலிங்க மூர்த்தி அதிர்ச்சி ஆகி நின்றார்.

“ என்னப்பா புரியலையா அரசு அண்ணா உங்க வளர்ப்பு, அதாவது உங்க தம்பி சிவலிங்க மூர்த்தி பையன் தானே”
என தன் இரு புருவங்களையும் தூக்கி சிறு நக்கலுடன் கூற

“ இது….. இது….. உனக்கு எப்படி??? எப்போ தெரியும்???” என அதிர்ச்சி விலகாமலையே
கேட்க

அதற்கு பதில் கூறாமல் “ அப்போ நீங்க வளர்த்த பையன்கிறதால தானே இன்னைக்கு அவரோட வாழக்கையை இப்படி ஆக்கி வச்சுருக்கீங்க.
உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா????.

சொந்த பொண்ணு என்னையே கொல்ல பார்த்தவருதானே.
உங்க கிட்ட போய் இதையெல்லாம் கேட்குறேன் பாருங்க என்னைய சொல்லணும்.

இன்னொன்னு சொல்றேன் என் தோழி மயிலரசிய கொன்னமாதிரி என்னோட கதிரை நீங்க கொல்ல பார்த்தீங்க. அப்புறம்…… அப்புறம்…….. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என கத்திகொண்டே வனிதா மயங்கி விழுந்தாள்.

உடனே அங்கு சுற்றி இருந்தவர்கள்
பதட்டமாக, ஹர்ஷா வேகமாக டாக்டரை அழைத்து வந்தான்.

வனிதாவை பரிசோதித்த டாக்டர் “ ரெத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கிட்டாங்க. கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தா சரியா போயிடும்” என கூற அனைவரும் அறையைவிட்டு வெளியே வந்தனர்.

“ என்னடா மச்சி இந்த பொண்ணும், கோவில்ல பார்த்த லூசு கிழவி எல்லாரும் பண்ணையார்தான் கொலைகாரன்னு சொல்றாங்க.

இவரு என்னடான்னா இல்லைன்னு சொல்லிட்டு இருக்காரு” என கிஷோர் ஹர்ஷாவிடம் கேட்க

“ ஹ்ம்ம்.
ஆனா கிச்சா எனக்கு என்னமோ பண்ணையார் சொல்றமாதிரி அவரு கொல்லல. இதுல வேற யாரோ சம்பந்தம் பட்டுருக்கணும்ன்னு தோணுது”.

“ எப்படி சொல்ற மச்சி???”

“ மகனோட காதல் விசயத்துல மயிலரசிய கொன்னுருந்தா நிச்சயம் கதிரதான் பண்ணையார் கொல்ல பார்த்துருப்பார். வனிதாவ இல்ல.
அதோட வனிதாவை காப்பாத்த நினைசுருக்க மாட்டாரு. இதுல வேற எதுவோ இருக்கு…..” என ஹர்ஷா பேசிக்கொண்டிருக்கும் போது வேற ஒருவரின் சத்தமான பேச்சு இவர்களின் பேச்சை தடைசெய்ய அது யாரென இருவரும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினர்.

“ ஆதி நீ ஏன் இப்படி உட்காந்துருக்க. அதான் வனிதா பிழைச்சுட்டாள. அப்புறம் என்ன அவ நல்லா குணமாகி உடம்பு தேறினவுடன் கதிரோட கல்யாணம் பண்ணி வச்சுட்டா அவ உன்னைய புருஞ்சுக்குவா” என தன் கணத்த குரலில்,

ஆஜானுபாகுவான உடலுடன் வெள்ளை சட்டை கருப்பு வேட்டி அணிந்து ,நெற்றியில் குங்குமம் வைத்து, மாநிறத்துடன் முகத்தில் பெரிய மீசையுடன் ஒரு அறுபது வயது இருக்கக்கூடிய ஒருவர் அறையின் வெளியே இருந்த நாற்காலியில் சோர்வாக அமர்ந்திருந்த பண்ணையாரின் தோளில் கை வைத்து ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார்.

‘ யாரு இந்த முறுக்கு மீசை கடோத்கஜன்’ என கிஷோர் எண்ணிக்கொண்டிருக்கையில்

“ இல்ல சதா மயிலரசி செத்த அன்னைக்கு அரசுவும் இப்படித்தான் சொன்னான். உங்க பையனா இருந்தா இப்படியா செஞ்சுருப்பீங்க. உங்க வளர்ப்பு பையன்றதுனாலதானேஎன் எதிர்காலத்தை இன்னைக்கு ஒண்ணுமில்லாம ஆக்கிட்டீங்கன்னு என்கூட சண்டைபோட்டான்.

நான் என்னைக்காவது அப்படி நினைச்சுருக்கேனா. என் மனைவிக்கு அப்புறம் நான் ரொம்ப அன்பு வச்சுருக்குறது என் மகன்கிட்டத்தானே.

சொந்த பிள்ளையை கூட தத்துக்குடுத்துட்டு போய் ஒரு தடவைகூட பார்க்கல நான். ஆனா அரசு இல்லாம என்னால இருக்கமுடியாதுன்னு உனக்கு தெரியும்தானே சதா” எனஆதிலிங்க மூர்த்தி புலம்பிக்கொண்டிருக்க

“ மச்சி இவர சதான்னு சொல்லறாரே ஒரு வேளை சதாசிவமா????”

“ ஆமா கிச்சா அப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்குறேன்”

“ சரி நாம இப்போ என்ன செய்றது???. இப்பவே இருட்டாகிடுச்சு நாம கிளம்புவோமா???” என கிஷோர் ஹர்ஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கையில்,

“ ஹர்ஷா தம்பி ஒரு நிமிஷம் இங்க வாங்க” என ஆதிலிங்க மூர்த்தி அழைக்க,

“ போச்சு மாட்டினோம் இவ்வளவு நேரம் நம்மள கவனிக்கலன்னு நினைச்சே. பார்த்துட்டாருபோல” என கிஷோர் ஹர்ஷாவிடம் புலம்ப,

“ பேசாம வாடா” என அதட்டி ஹர்ஷா கிஷோரை அழைத்து கொண்டு ஆதிலிங்க மூர்த்தி அருகில் சென்றனர்.

“ தம்பி எனக்கு ஒரு உதவி செய்ரீங்களா????” என ஆதிலிங்க மூர்த்தி கேட்க

“ உதவி…… என்னது சார்???”

“ இல்ல என் மகளை கொலை செய்ய முயற்சி பண்ணுனது யாருன்னு கண்டுபிடிக்க முடியுமா????”

“ நாங்களா????” என கிஷோர் கேட்க

“ ஆமா தம்பி நீங்க டிடெக்ட்டிவ்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும். வனிதா தற்கொலை முயற்சி செய்யவும் ஒருவேளை கதிர் காரணமா இருப்பாரோன்னு அவரை தொடர ஒரு ஆளை போட்டேன்.

அந்த ஆள் மூலம் கதிர் ஹர்ஷாவை சந்திச்சது பேசுனது எல்லாம் தெரியும்.
அதனாலதான் உங்களை இங்க தங்க அனுமதிச்சேன்” என ஆதிலிங்க மூர்த்தி கூறினார்.

“ உங்களுக்கு நாங்க யாருன்னு தெரிஞ்சுருக்கும்ன்னு நாங்க சந்தேகபட்டோம் சார். சரி நாங்க உதவி செய்றோம்” என ஹர்ஷா கூற,

“ அப்படியே என் மகன் காதலிச்ச பொண்ணு மயிலரசி தற்கொலையிலும் எனக்கும் சந்தேகம் இருக்கு. அதையும் கண்டுபிடிக்கிறிங்களா”

“ நிச்சயமா கண்டுபிடிக்க
முயற்சி செய்றோம் சார். ஆனா அதுக்கு முன்னாடி இந்த மயிலரசி யாரு என்னன்னு சொன்னாதான் என்னால உதவ முடியும் சார்” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில்,

“ ஆதி மூணு வருசத்துக்கு முன்னாடி செத்தவள பத்தி இப்போ என்ன. வனிதாவ யாரு கொலை செய்ய முயற்சி செஞ்சுருப்பான்னு மட்டும் கண்டுபிடிச்சா பத்தாதா” என ஆதிலிங்க மூர்த்தி நண்பன் சதா இடையிட்டு கூற,

“ இல்ல சதா மயிலரசியும் என் பொண்ணுமாதிரிதான் அவளோட இறப்புல இருக்குற மர்மத்தை கண்டுபிடிச்சே ஆகனும்” என ஆதிலிங்க மூர்த்தி உறுதியாக கூறிவிட்டு,

“ இவன் என் பால்ய நண்பன். பேரு சதாசிவம். ராணுவத்துல இருந்தான்.” என சதாசிவத்தை அறிமுக படுத்திவிட்டு,

“ இவனுக்கு எல்லாமே தெரியும். இவன் எல்லா விஷயத்தையும் விவரமா சொல்வான்” என கூறிவிட்டு, ஆதிலிங்க மூர்த்தி
அயர்வாக கண்களை மூடி கடந்த காலத்தை நினைக்க ஆரம்பித்தார்.

சதாசிவமும் தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் ஹர்ஷாவிடமும் கிஷோரிடமும் கூற ஆரம்பிக்க இவர்களுடன் விசித்ராவும் இணைந்து கேட்க ஆரம்பித்தாள்.







இவர்கள் கூறும் கடந்தகாலம்


நிகழ்கால கேள்விகளுக்கு விடையை

தருமா??????????...............


 
வாவ்...எப்பிக்கு எப்பி கேளிவிகள் கூடிட்டே தான் இருக்கு...கடந்தகாலத்தில கேள்விக்கான பதில்கள் கிடைக்குமா இல்ல குழப்பங்கள் கூடுமா
 
Top