Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி! -9

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -9

"என்னப்பா சொல்ற...?" என்று பதட்டத்தோடு கேட்டாள் ஸ்வப்னா.

"ஹூம்.. அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியாதா...?" என மௌனம் காத்தான்.

"எங்க அம்மா,அப்பா பற்றி பேசி... வேணாம்னு சொன்னாங்களா... " என்று நிறுத்திவிட்டு தொடர்ந்தாள் ஸ்வப்னா. " அவங்க பிரிஞ்சி போனதுக்கு நான் என்னடா பண்ண? நான் என்ன பாவம் செஞ்சேன். எல்லா விதத்துலயும் என்னை இந்த விஷயம் ரொம்ப படுத்துதுடா..." என அழத்தொடங்கினாள்.

"ஸ்வப்பு .. இப்ப எதுக்கு அழற... விடு.. அதெல்லாம் மறந்து தொலை. எனக்கு நீ மட்டும் தான் வேணும். அப்பாக்கு இதுல சம்மதம். அதனால ஒன்னும் யோசிக்காத. நாளைக்கு நானும் அப்பாவும் வந்து அத்தைக்கிட்ட பேசுறோம்... இப்ப ஒன்னும் யோசிக்காம தூங்கு.... நம்ம நிச்சயம் ஒன்னு சேர்ந்து வாழத் தான் போறோம்.. சரியா..." அவளுக்கு தைரியம் ஊட்டினான் நளன்.

"ஹூம்.... சரி..."

"அதைக் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லேன்டி....." சீண்ட ஆரம்பித்தான்.

"ஹூஹூம்..." என்று மறுப்பாய் அந்தப் பக்கம் செல்போனில் தலையாட்டினாள்.

"என் செல்லம் இல்ல...."

"இல்ல..."

"அப்ப போடி..."

"டேய்...டேய்... அப்படியே விட்டுடுவியா?"

" உன்னை எந்த சமயத்திலும் கைவிட மாட்டேன் காதலியே.."

"லவ் யூ நளா..."

"லவ் யூ வ்வப்பு..சரி ஸ்வப்பு! நீ தூங்கு."

"ஹேய்! என்ன அதுக்குள்ள கட் பண்ற..? எனக்கு தர வேண்டியதை தந்துட்டு தூங்கப் போங்க சார்....."

"என்ன தரனும்...?" என்று தெரியாதது போலக்கேட்டான்.

"ஹூம்.. இருக்கட்டும். கல்யாணத்துக்குப் பிறகு உனக்கு இருக்குடா.. அப்ப கெஞ்சுவ இல்ல... அப்ப பார்த்துக்கறேன்..."

"ஐயோ... அந்த ஸ்கீம்ல கை வைக்காதடி..." என்று செல்போன் வழியாக முத்தங்களை பரிசளித்துவிட்டு உறங்கிப் போனான். அடுத்தநாள் அவன் தாயார் செய்யப் போகும் கலாட்டா தெரியாமல்.

~~~

"எங்கப்பா அம்மா...?"

"கோவிலுக்குப் போயிட்டு வாரேனு சொன்னா..." என்று சொல்லிவிட்டு அவர் ஆபிஸுக்கு கிளம்பத் தயாரானார்.

"இன்னைக்கு திங்கட் கிழமைத் தானே அப்பா.. அம்மா வழக்கமா நாளைக்குத் தானே போவாங்க...." என்று சிந்தனையில் ஆழ்ந்தவன் மூளையில் பொறிதட்டியது.

"அப்பா.. நான் என்ன நினைக்கிறேன்னா..."

"ஆமாம் நளா.. அவ ரோகிணி வீட்டுக்குத் தான் போயிருக்கனும். அங்க போய் என்ன கலாட்டா பண்றாளோ..." என்று பதட்டமானார் ஆரோக்கியராஜ். இருவரும் உடனே கிளம்பினர்.

வழியில் அவரைப் பார்த்துக் கேட்டான்.

"அப்பா.. உங்களுக்கு இந்த முடிவுல சம்மதமா?"

"எனக்கு விருப்பம் தான் நளா.. ஸ்வப்னாவை மனசுல வச்சுக்கிட்டு தான் நீ யாரையாவது விரும்புறியானு கேட்டேன்.. நீ தான் பிடிகொடுத்தே பேசல.. நீ யாரையும் விரும்பலனா அவளைப் பற்றி உங்கிட்ட பேசலாம்னு நினைசேன். ஆனா நீ அவளையே விரும்புறேனு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்ப்பா.. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்..." என்றார் அவர்.

"தேங்க்ஸ்ப்பா.. அம்மாவைத் தான் என்னனு சமாளிக்கிறதுனு தெரியல...." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஸ்வப்னாவின் வீடு வந்துவிட்டது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே மகேஸ்வரி ரோகிணியின் வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.

நளனும், ஆரோக்கியராஜும் பாய்ந்து சென்று அவரை தடுத்தனர். அதற்குள் மகேஸ்வரியின் கத்தல் குரலில் அக்கம் பக்கம் எல்லாம் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

"உன் பையனுக்கு என் பொண்ணை கட்டிவைக்கவே மாட்டேன். மீறி கட்டி வைக்க முயற்சி செஞ்சிங்கனா.. நான் உயிரோடவே இருக்க மாட்டேன். ஆமா.. சொல்லிட்டேன்..."

"அம்மா.. என்ன இது.. வாசல்ல நின்னுக்கிட்டு.. முதல்ல உள்ள வாங்க.."

"இவ வீட்டுக்குள்ள நான் வர மாட்டேன்.."

"மகேஸ்.. என்ன பண்றனு தெரிஞ்சு தான் பண்றியா...? குடும்ப மானத்தை வாங்காத...." கணவரும் சீறினார்.

"இந்த குடும்ப மானம் தான் எப்பவோ போச்சே.... இப்ப நம்ம குடும்ப மானத்தையும் வாங்க பாக்குறாளுக அம்மாவும், பொண்ணும்...." என மகேஸ்வரியும் விடாமல் வம்பிழுத்தார்.

அக்கம்பக்கத்திலுள்ளோர் எல்லாரும் ஆவலாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

"நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு.. " என ஆரோக்கியராஜ் அவரை வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நளனின் காருக்குள் தள்ளினார்.

"நளா.. நீ கிளம்பு. நான் பேசிட்டு வாரேன்."

"சரிப்பா..." என்று அவன் வேகமாய் காரை விரட்டினான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மகேஸ்வரி அடுத்த கட்டத்துக்கு தயாரானார்.

"தம்பி, இந்த கல்யாணம் நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்... அப்புறம்..."

" வாயை மூடுங்க அம்மா.. நீங்க இப்படி பேசுறதும்.. இப்படி நடந்துக்குறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். திரும்ப அங்க போனிங்கனா..... நான் என்ன செய்வேனு தெரியாது.. ஒழுங்கா இருங்க
இல்லனா நானும் வேற சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.. அப்புறம் நீங்க தான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கனும்.."என்று எச்சரித்தான்.

அதில் அவர் கொஞ்சம் அமைதியானார். அவன் திரும்பவும் ஸ்வப்னாவின் வீட்டுக்குச் சென்றான். அதற்குள் ஆரோக்கியராஜ் ரோகிணியை சமாதானம் செய்துவிட்டிருந்தார். ஸ்வப்னா அழுது சிவந்த கண்களோடு சுவரோரமாய் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தாள்.

"அத்தை. மன்னிச்சிடுங்க.. அம்மா இப்படில்லாம் பண்ணுவாங்கனு...." நளன் இழுத்தான்.

"விடு நளா.. அண்ணி இங்க வந்து நிற்பாங்கனு எதிர்ப்பார்த்தேன். ஆனா இவ்வளவு தூரம் வாசல்லயே நின்னு அசிங்கப்படுத்துவாங்கனு...."

"அவங்களுக்காக நான் ஸாரி கேட்டுக்கறேன் அத்தை..."

"விடு நளா.. அவ எப்பவும் அப்படித்தான். அவளை மாற்றவே முடியாது..." என்றார் அவன் அப்பா.

"அண்ணி எதாச்சும் பண்ணிக்க மாட்டாங்களே..." என பதறிப் போய் கேட்டார் ரோகிணி.

நளனும் ஆரோக்கியராஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
Nirmala vandhachu ???
 
Top