Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-8

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -8

"நில்லுடி... சுத்திட்டு வந்தது போதுமா..?" ரோகிணியின் குரலில் கோபம் கொப்பளித்தது.

"மா.. அது வந்து..." ஸ்வப்னா பயத்தோடு தடுமாறினாள்.

"நான் அப்பவே நினைச்சேன்.. உங்க ரெண்டு பேரையும் பார்த்தா ஃப்ரென்ட்ஸ் மாதிரி இல்லையேனு.. எப்ப இருந்துடி இதெல்லாம் நடக்குது..? உங்க அத்தைக்கு தெரிஞ்சா காளியாட்டம் மாறிடுவாடி..."

"ம்மா.. அத்தை தான் உங்க ப்ராப்ளமா... உங்களுக்கு ஒகேயா...?" ஒரு ஆர்வத்தோடு கேட்டாள் ஸ்வப்னா.

"நான் எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருகேன். உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையாடி என்கிட்ட.. உனக்கு நான் ரொம்ப செல்லம் தந்துட்டேன். இதப் பாரு.. இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் சரிப்பட்டு வராது. எல்லத்தையும் மூட்டைக் கட்டி வைச்சிட்டு ஒழுங்கா வேலைக்குப் போற வழியைப் பாரு. வீணா ரெண்டு் குடும்பத்துக்கும் இடையில பிரச்சனை வராம இருந்தா சரி...."

"ஏம்மா.. நீங்களும் காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிங்க..? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா...?" என அவளும் போட்டிக்கு பேசினாள்.

"ஆமாடி.. அதுனாலத் தான் நான் இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கேன். ஆறு வருஷம் நானும் உங்க அப்பாவும் காதலிச்சோம். வீட்ட எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எங்க காதல் கல்யாணத்துக்குப் பிறகு காணாம போச்சு.. ரெண்டே வருஷத்துல என்னை வேணாம்னு சொல்லிட்டு, உன்னையும் தூக்கிப் போட்டுட்டு அவங்க வீட்டு ஆளுங்க கூடவே போயிட்டார் உன் அப்பா. இன்னைக்கு அவர் வேற வாழ்க்கை வாழுறார். ஆனா ஊர் உலகம் என்னைத் தான் தப்பா பேசுது.. நான் ஒழுங்கா இருந்திருதா உங்க அப்பா நம்ம கூடவே இருந்திருப்பாராம்.. ஹூம்.. அந்த மாதிரி உனக்கும் ஏதும் நடந்திடக்கூடாதுனு தான்டி நான் பயப்படுறேன்.... சொன்னா கேளும்மா...." என்று கண்களில் கண்ணீரோடு பேசினார் ரோகிணி.

"அம்மா... நளன் ரொம்ப நல்லவர்ம்மா... எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருக்கு.. நளன் கூட இருக்கப்ப நான் ரொம்ப சந்தோஷமா உணர்கிறேன்.... எங்க லவ் ஸ்ட்ராங் ம்மா... ப்ளீஸ் ம்மா.. ஒத்துக்குங்க. அவர் வீட்ல பேசுறேனு சொல்லிருக்கார்."

"இல்ல ஸ்வப்னா! அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க...." தன் அண்ணியைப் பற்றி நன்கு தெரிந்த ரோகிணி சொன்னார்.

"மா.. அதெல்லாம் நளன் பார்த்துக்துவான்ம்மா.. நளன் கூட இருக்கப்ப நான் ரொம்ப சேப்பா ஃபீல் பண்றேன்ம்மா.. என்னை புரிஞ்சு, தெரிஞ்சு.. ஹீ இஸ் மை லைப் அம்மா... அவன் இல்லாம நான் இல்லம்மா..." மகள் உடைந்துப் போய் அழுதாள்.

அவள் அழுவதைப் பார்த்து தாய் கொஞ்சம் மனம் இறங்கினாள்.

"சரி.. யோசிப்போம்..."

அதே நேரம் அங்கு நளனின் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது.

"என்னது...? நீ என்ன பேசுறனு தெரிஞ்சு தான் பேசுறியா... உன் கல்யாணத்தை பத்தி நான் ஆயிரம் கனவு கண்டு வச்சிருக்கேன். நீ என்னனா என் தலையில பாராங்கல்லை தூக்கிப் போடுற.. நான் இதுக்கு எப்பவும் ஒத்துக்க மாட்டேன்... " என குதித்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.

"அம்மா.. இப்ப எதுக்கு இத்தனை தூரம் ஆர்ப்பாட்டம் பண்றிங்க. இது தான் என் முடிவு. ஸ்வப்னா தான் என் மனைவினு நான் முடிவு செஞ்சி மூணு வருஷம் ஆச்சு...." நளன் தன் பதிலில் உறுதியாக இருந்தான்.

'அடக்கடவுளே.. மூணு வருஷமாவா இந்த கூத்தெல்லாம் நடக்குது.. ' என்று மகேஸ்வரி உள்ளுக்குள் பொருமினார்.

"அப்பா... நீங்க என்ன சொல்றிங்க..." என்றான் மகன்.

"இதுல நான் சொல்ல என்ன இருக்குப்பா? எனக்கு இதுல சம்மதம். ஸ்வப்னா மாதிரி ஒரு பொண்ணு மருமகளா வாரானா அதுல எனக்கு பூரண சம்மதம். நீயா உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்காம எங்ககிட்ட சொன்னதை நினைச்சா எனக்கு உன்னை நினைச்சு பெருமையாத் தான் நளா இருக்கு..." ஆரோக்கியராஜ் இப்படி பேச எதிர் தாக்குதலுக்கு தயாரானார் மகேஸ்வரி.

" இருக்கும் இருக்கும்.. எனக்கு இதுல விருப்பம் இல்ல. நான் ஒத்துக்கவே மாட்டேன்.. அதுவுமில்லாம சொந்தத்துல கட்டிக்ககூடாதுனு சொல்வாங்க.. " என்று விதம் விதமாக கோல் போட்டார் மகேஸ்வரி.

"மகேஸ்.. நாமளும் சொந்தத்துல தான் கட்டிக்கிட்டோம். நாமளும் நம்ம பிள்ளைகளும் நல்லாத்தானே இருக்கோம். அது ஞாபகம் இருக்கட்டும். இது அவனோட வாழ்க்கை. அதை டிசைட் பண்ற உரிமை அவனுக்கு முழுசா இருக்கு..."

"ஏன் சொல்ல மாட்டிங்க.. உங்க தங்கச்சி பொண்ணுனா உங்களுக்கு கசக்கவா போகுது..." என்று உக்கிரமானார் மகேஸ்வரி.

"நீ ஏன் அவ மேல இவ்வளவு காட்டமா இருக்க.... அவ உனக்கு என்ன செஞ்சா..?" என பதிலுக்கு ஆரோக்கியராஜும் போபத்துடன் தொடங்கினார்.

"உங்க தங்கச்சி பற்றி தெரியாதாக்கும். அவ ஒழுங்கா இருந்திருந்தா ஏன் அவ புருஷன் விட்டுட்டுப் போறான்.. அம்மா மாதிரி தானே பொண்ணும் இருப்பா...."

"மகேஸ்..."

"அம்மா......" என இருவரும் ஒன்று சேர கத்தினர்.

ஆரோக்கியராஜ் கண்கள் சிவக்க பேசத்தொடங்கும் முன்னரே நளன் பேசத்தொடங்கினான்.

"அம்மா.. நீங்களா இப்படி பேசுறிங்க...? என்ன ஆச்சும்மா உங்களுக்கு.. இவ்வளவு கீழ்தரமா... பேச எப்ப இருந்து ஆரம்பிச்சிங்க? அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ பிரிஞ்சிட்டாங்க. அதுக்கும் ஸ்வப்னாக்கும் என்ன சம்பந்தம்? அவ எப்படிப் பட்டவனு எனக்குத் தெரியும். வீணா அவளைப் பற்றி எதாச்சும் பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன். அவ தான் என் லைப் பாட்னர். அவ்வளவுத் தான்..." எனச் சொல்லிவிட்டு வேகமாய் மாடியேறிச் சென்றான்.

" என்னங்க.. இவன் இப்படி சொல்றான்... ?"

"அவன் வாழ்க்கை. அதான் பேசிட்டுப் போறான். இந்த கல்யாணத்துல எனக்கு பூரண சம்மதம். உனக்கு விருப்பம் இல்லனா நீ பேசாம உங்க சொந்த ஊருக்குப் போய் சேரு... இந்த கல்யாணத்தை நான் நடத்தத் தான் போறேன்.. " என்று சொல்லிவிட்டு ஆரோக்கியராஜும் கோபமாக சென்றுவிட்டார்.

'இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு நான் பார்க்குறேன்.....' என உள்ளுக்குள் பொருமினார் மகேஸ்வரி. அவருக்குள் இருந்த அத்தனை சீரியல் வில்லிகளும் ஒன்று சேர்ந்துக் கொண்டனர்.

கோபம் கொஞ்சம் தனிந்ததும் செல்போனை எடுத்து அவளுக்கு அழைப்பெடுத்தான் நளன்.

"ஹலோ ஸ்வப்னா! "

"ஹாய் நளா..."

"என்னாச்சு.....?"

"என்னாச்சு...?" என திரும்ப ஒப்புவித்தாள்.

"ஸ்வப்னா! சும்மா என்னை கடுப்பாக்காத. நான் பயங்கர கோவத்துல இருக்கேன். அத்தை என்ன சொன்னாங்க....?"

"ஓ.. அதுவா... "

"சீக்கிரம் சொல்லு..."

"இரு... இப்ப எதுக்கு சும்மா லொள் லொள் னு பாய்ற.. அம்மாட பேசினேன். முதல்ல ஒத்துக்கல.. அப்புறம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி கெஞ்சியதும் யோசிச்சுப் பார்க்கிறேனு சொல்லிருக்காங்க..... அங்க என்னாச்சு..." என்று ஆர்வமாய் கேட்டாள்.

"ம்... ரெண்டாகிடுச்சி வீடு...." என்றான நளன். அந்தப்பக்கம் ஸ்வப்னா யோசனையானாள்.
 
Nirmala vandhachu ???
 
Top