Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-20

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -20

ஸ்வப்னா சஞ்சனாவின் உதவியோடு திட்டம் தீட்டினாள்.

"அம்மாகிட்ட நான் எப்படியாச்சும் பேசிப் பார்க்கிறேன் அண்ணி. " என்றாள் சஞ்சனா.

"உன்னைத் தான் நம்பியிருக்கேன். என்னால பிரிஞ்ச குடும்பம் என்னாலத் தான் சேரனும்.. எப்படியாவது சேர்கனும்.. " என்றாள் ஸ்வப்னா.

"எல்லாம் சரியா வரும்." என்று சஞ்சனாவும் நம்பிக்கை தந்தாள்.

அன்றே தன் வேலையைத் துவங்கினாள் சஞ்சனா.

" அம்மா.. நான் ஊருக்குப் போகனும்ம்மா... எத்தனை நாள் நான் இங்கயே இருக்கது.. அப்புறம் என் மாமியார் திட்டுவாங்க.. தனியா சமாளிச்சுக்குவிங்களா...?"

"அதுக்கென்ன நீ கிளம்பு. நான் பார்த்துக்குவேன்..."

"அம்மா.. ஒன்னு சொன்னா கோவிச்சுக்காதிங்க.. அண்ணாவையும், அண்ணியையும் இங்க வந்து இருக்கச் சொல்லுங்க. அப்படி என்னம்மா பிடிவாதம் உங்களுக்கு..? நடந்தது நடந்துப் போச்சு. அதை மறந்துட்டு அடுத்து நடக்க வேண்டியதைப் பாருங்க. அவங்க இங்க இருந்தா உங்களுக்கு உதவியாவும் இருக்கும், உங்க மனசுக்கும் தெம்பா இருக்கும்.. "

மகேஸ்வரி மகளை முறைத்துப் பார்த்தார்.

"இப்ப எதுக்கு முறைக்கிறிங்க? அண்ணா சந்தோஷமா இருக்கது உங்களுக்கு பிடிக்கலயாம்மா...? நளன் நளன்னு உயிரையே விடுவிங்க. ஏன் அம்மா இப்படி மாறிட்டிங்க? எனக்கே உங்களை பிடிக்காம போச்சு...."

அந்த கடைசி வார்த்தையில் மகேஸ்வரி மனம் மாறினார்.

' பெத்த பொண்ணுக்கே நம்மளை பிடிக்காத அளவுக்கா நடந்துக்கிட்டு இருக்கேன்....' கொஞ்சம் தீவிரமாய் யோசித்தார். மகேஸ்வரியின் இந்த மாற்றத்திற்குப் பின் ஆரோக்கியராஜும் அவரோடு பேசுவதை வெகுவாக குறைத்துக் கொண்டார். தான் தனிமை படுத்தப்பட்டதை உணர்ந்ததும் அந்த முடிவுக்கு வந்தார்.

"சரி சஞ்சு.. நான்.. நளனைப் போய் பார்க்கிறேன்... இங்க வரச் சொல்றேன். வருவானோ தெரியல... "

" அண்ணா வருவார்.... ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா... நாளைக்கு காலையிலயே அங்க போயிட்டு வரலாம்.." என உற்சாகமாகச் சொன்னாள்.

அந்த அழகான விடியலில் கதவைத் திறந்த நளனுக்கு கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவன் உதடுகள் தானாய் பிரிந்தன.

"அப்பா... அம்...மா.... "

"அண்ணா என்னையெல்லாம் கண்ணுக்குத் தெரியலயா....." சஞ்சனா வாசலிலேயே சீண்டினாள்.

அவன் வாசலிலேயே விழித்துக்கொண்டிருந்தான்.

"என்னப்பா உள்ள கூப்பிட மாட்டியா?" இந்த தடவை வாயைத் திறந்தது மகேஸ்வரி.

காலையிலேயே வீட்டிற்கு வந்தது யாராக இருக்கும் என உள்ளேயிருந்தே எட்டிப்பார்த்த ஸ்வப்னா கொஞ்சம் திகைத்துத்தான் போனாள். ஓடிவந்தாள்.

"அவங்களை உள்ள கூப்பிடு.. ங்க..." என்று காதோரம் கிசுகிசுத்தாள்.

இருவரும் ஒன்று சேர அழைத்தது பார்க்கவே அழகான காட்சியாக இருந்தது.

ஸ்வப்னா சமையல் வேலையை பாதியில் நிறுத்திவிட்டு காபி போட்டுக்கொண்டிருந்தாள்.

"என்ன மேடம்.. நான் சொன்ன மாதிரி செஞ்சிட்டேனா..." என சஞ்சனா அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.

"நீ இவ்வளவு சீக்கிரம் கூட்டிக்கிட்டு வருவனு நான் நினைக்கல சஞ்சு.. எப்படி... " என்றாள் ஸ்வப்னா.

"அதெல்லாம் ஒரு வித டெக்னிக்.. மாமியார் வீட்டுக்குப் போக ரெடியா..?" என்று கேலியாய் மிரட்டினாள் சஞ்சனா.

" நான் ரெடி.. உங்க அண்ணாத் தான்..." என்று இழுத்தாள். அதே நேரம் நளனும் அதையேத் தான் யோசித்துக்கொண்டிருந்தான்.

"என்னப்பா.. நா இவ்வளவு சொல்றேன்.. எங்க கூட வந்து இருக்க மாட்டியா.. நான் உங்களை ரொம்பத் தான் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல.. மன்னிச்சிடுப்பா....." என்று மகேஸ்வரி கண்கலங்க, அவன் பதைபதைத்துப் போனான்.

"பரவாயில்லம்மா... நீங்க எங்களை ஏத்துக்கிட்டதே போதும்... வேற எதுவும் வேணாம் எங்களுக்கு..." என்று நாசுக்காய் தனக்கு அங்கு வர விருப்பம் இல்லை என்பதை தெரிவித்தான்.

அந்த இடத்தில் தான் ஆரோக்கியராஜ் வாயைத் திறந்தார்.

"அதான் பையன் கோபம் இல்லனு சொல்லிட்டானே... அப்புறம் என்ன....? கிளம்புவோமா.. ஆபீஸுக்கு போகனும் ..." என்று அனைவருக்கும் வேலை இருக்கிறது என்பதை நினைவூட்டினார்.

"அவன் அங்க வாரேனு சொல்லலயே..." என்று மனைவி இழுக்கவும் மீண்டும் தொடர்ந்தார்.

"இதப்பாரு மகேஸ்! அவனுக்கென ஒரு வாழ்க்கை இருக்கு. அதை அவன் வாழட்டும். நாம அதை கெடுக்க வேணாம். இப்பத்தான் புதுசா வீடு வாங்கியிருக்கான். அதை விட்டுட்டு எதுக்கு அங்க வரனும். அதான் எல்லா கோபதாபங்களும் சரியா போச்சே.. வா கிளம்பலாம்.."

நளன் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்க, அதற்குள் ஸ்வப்னாவை நெருங்கிய மகேஸ்வரி அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

"ஸ்வப்னா!... உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்ம்மா.. நீயாச்சும் அவன்கிட்ட சொல்லு. என்னை மன்னிச்சிட்டா அங்க வந்து இருக்க சொல்லு.." என கண் கலங்கினார்.

"ஐயோ.. அத்தை.. நீங்க என்ன இப்படில்லாம் சொல்லிக்கிட்டு.. நாங்க கண்டிப்பா.." என்று சொன்னதோடு நிறுத்துக்கொண்டு கணவனைப் பார்த்தாள்.

"வாரோம் அம்மா..." என்றான் மகன்.

'பார்த்திங்களா.. என் பையன் வாரேனு சொல்லிட்டான்...'என்று கணவரை பெருமிதத்தோடுப் பார்த்தார் மகேஸ்வரி.

இரவு பூரிக்கட்டையை கையிலெடுத்து அவளை மிரட்டிக்கொண்டிருந்தான் நளன்.

"ஏன்டி.. நீ என்ன புது டைப்பா இருக்க...? "
 
Nirmala vandhachu ???
 
Top