Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-18

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -18

நளன் அப்படி கேட்டதும் அவளுக்கு புரை ஏறியது.

"அச்சோ... நளனை ஏமாற்றுறோமே..' என்று எண்ணினாள்.

"தண்ணி குடி..." என்று அவளை குடிக்கவைத்து தலையைத் தட்டினான்.

"அது..அது.. இன்னைக்கு பிரதோஷம் இல்லயா... அதான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். டைம்க்கு போயிட்டேன் நளா..."

அவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

'எனக்கே கதை சொல்றியா ராஜாத்தி..... நாளைக்கு என்ன கதை சொல்வ...?'

ஸ்வப்னா நான்கு மணிக்கெல்லாம் எழும்பி அவனுக்கு ப்ரேக்பஸ்ட்டும், லன்ச்சையும் பேக் செய்துவிட்டு, அரக்கப்பறக்கச் சென்று அம்மாவுக்கு சமைத்துவைத்துவிட்டு, வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு, ஸ்கூலுக்கும் சென்று விட்டு, திரும்பவும் வீட்டுக்குச் சென்று அம்மாவின் இரவு சமையலை கவனித்துவிட்டு, திரும்பவும் இங்கு வந்து இங்கும் இரவு சமையலை செய்து நிறைய வேலை செய்துவிட்டாள்.

அது அத்தனையையுமே நளன் அறிந்திருந்தான்.

இரவு அவள் படுக்கையில் சாய்ந்ததும், அவன் வந்து அவள் கால்களை பிடித்துவிட்டான்.

"என்னடா பண்ற..." என்று காலை இழுத்துக்கொண்டாள்.

"ஹூம்.. என் பொண்டாட்டிக்கு கால் பிடிச்சு விடுறேன்..."

"இன்னைக்கு என்ன அதிசயமா....?"

"அடியேய்.. நான் உனக்கு காலே பிடிச்சு விட்டதில்லையா...?" என செல்லமாய் ஒரு அடி போட்டான்.

"ம்.. பிடிச்சு விட்டுருக்க.. ஆனா இன்னைக்கு அதுல ஓவர் லவ்வா இருக்கு.. அதுதான் கேட்டேன்...."

"இல்லடி...சும்மாத்தான்.. வேணாம்னா சொல்லு..." என்று கையை எடுக்கப் போனான்.

"வேணாம். என் பக்கத்துல வா..." என்று கைகளை விரித்து அவனை காதலுடன் அழைத்தாள்.

அவன் ஆசையாய் அவள் கைகளுக்குள் வந்தான்.

"நளா.. உன்கிட்ட ஒன்னு மறைச்சிட்டேன்.. ஸாரிடா... அது வந்து..."

அவளது வாயை மூடினான். அவளை பேசவிடாமல் பேசினான்.

"நீ என்ன பண்ணிட்டு வந்தனு தெரியும்.. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குடி.. நீ என்கிட்ட சொல்லாட்டியும் எனக்கு நீ காலையில போகும் போதே தெரியும்.. ஈவினிங் அப்பாகிட்ட கேட்டேன். அவர் சொல்லவேயில்ல... ரொம்ப கேட்டதும் சொன்னார். என்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னியாமே.. அடிதான் போடுவேன்... அம்மாக்கு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க.. ஐ லவ் யூ டி....." என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவள் வாயை மூடியிருந்த அவன் கைக்கு அவளும் முத்தம் கொடுத்தாள்.

"தேங்க்ஸ்டா.. நீ திட்டுவியோனு ஒரு பயம் தான் கண்ணா...."

"எதுக்குடி திட்டப் போறேன்... ஆனா உன்னால எப்படி உன்னை வேண்டாம்னு சொன்ன உன் மாமியார்க்கு நல்லது பண்ண முடியுது....?"

"ஹேய்.. அவங்க உன் அம்மா.. அது சார்க்கு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு.. இருக்கு... "

"அப்புறம் என்ன கோபம் நளா.. போய் ஒரு வார்த்தை பேசினா என்னவாம். பாவம்பா அவங்க. நீ போய் பேசினா சரி ஆகிடுவாங்க. அப்படி என்ன கோபம் நளா?"

"அவங்க இப்படி மாறினத என்னால தாங்கிக்க முடியலடா.. அதான் இத்தனை கோபமும்.. "

"அதை தூக்கிப் போடு நளா... கோபம் இருக்கத் தானே செய்யும்.... கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே...."

"சரி.. யோசிக்கிறேன். ஆனா என்னை ப்ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எனக்கு எப்ப வரனும்னு தோனுதோ அப்பத் தான் வருவேன்... ஆனா நீ வேணும்னா போயிட்டு வா...."

"ம்... அச்சா புருஷன்." என்று கன்னத்துக்கு பரிசு கொடுத்தாள்.

"அம்மா உன்னை ஒன்னும் சொல்லலயே.. " என்று சந்தேகமாய் கேட்டான்.

"இல்லடா.. மாமா இருக்கவும் சமாளிச்சுக்கிட்டேன்...." என்று கண்ணடித்தாள்.

"நல்ல ஆளுடி நீ.. எல்லாரையும் எப்படித்தான் கைக்குள்ள போட்டுக்கிறியோ...."

"ஹும்.. ஐயாவை எப்படி போட்டேனோ, அப்படித்தான்...." என்று அவனை குறுகுறுவென பார்த்தாள்.

"உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்குடி... அதை வச்சு அப்படியே என்னையும் கொஞ்சம் கவனிக்கலாம்... " என்று சொல்லி அவள் இதழ் கவ்வினான்.

அதற்கு மேல் அவளை அவன் காதலால் இம்சை செய்ய ஆரம்பித்துவிட்டான். அவள் அதில் மூழ்கிப்போனாள்.

~~~

ஸ்வப்னா ஒருவாரமாய் அங்கும் இங்கும் அலைந்து இரண்டு வீட்டையும் கவனித்துக்கொண்டாள். மகேஸ்வரி ஒரு பக்கமாய் அமைதியாய் இருந்தார்.
அந்த வாரம் சஞ்சனா வந்து விட்டாள். அவள் அம்மாவை கவனித்துக்கொள்வதாக சொல்லவும், ஸ்வப்னா இரண்டு நாட்கள் ரோகிணியின் வீட்டுக்குச் சென்று வர திட்டமிட்டாள்.

"நளா.. நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரட்டா?"

"போயிட்டு வா..."

"ரெண்டு நாள் இருந்துட்டுத் தான் வருவேன்..."

"என்னது....?" என குதித்தான்.

"இதுக்கு ஏன் இத்தனை ஷாக்..?"

"என்னை விட்டுட்டு போகாதடி...." கெஞ்சினான்.

"அப்ப நீயும் வா..." என்றாள் ஸ்வப்னா.

"போடி.. மாமியார் என்ன நினைப்பாங்க...?"

"என்ன நினைக்கப் போறாங்க.. ரெண்டு பேரும் போனா சந்தோஷம் தான் படுவாங்க...."

"இல்ல.. இல்ல.. நீ போயிட்டு வா...." மனமேயில்லாமல் சொன்னான்.

அவனை சந்தேகமாய் பார்த்துவிட்டு மாலையில் கிளம்பினாள்.

"என்னடி.. உன் மாமியார் எப்படி இருக்காங்க..?" என்று குசலம் விசாரித்தார் ரோகிணி.

"ம்.. நல்லா இருக்காங்க.." என்றாள்.

"கல்யாணம் பண்ணியதும் இந்தப் பக்கமே வாரது இல்ல...." ரோகிணி கேட்டதும் மகள் விழித்தாள். தாய் புரிந்துக்கொண்டார்.

"இல்லம்மா.. அது.. வந்து....."

"சரி.. சரி.. என்ன டின்னர் பண்ணட்டும்..?" என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே காலிங் பெல் கூவியது.

"போ.. அநேகமா அது நளனா தான் இருக்கும்..." என்று மாமியாராக காலை வாரினார் ரோகிணி.

"அம்மா.. சும்மா விளையாடாதிங்க..." என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்த ஸ்வப்னா அதிர்ந்து தான் போனாள்.

அவன் நின்றுக் கொண்டிருந்தான்.
 
Nirmala vandhachu ???
 
Top