Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-17

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -17

ஸ்வப்னாவுக்கு அன்று வேலை அதிகமாக இருக்கவில்லை. லைப்ரரிக்கு போய்விட்டு வரலாம் என்று உடுத்திக்கொண்டு இருந்தாள். அப்போது அலறியது அவளது செல்போன். எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

"ஸ்வப்னா! நீ கொஞ்சம் 'கங்கா ஹாஸ்பிட்டல்' வரைக்கும் போயேன். நான் பின்னாடியே வரேன்.." என்று போன் செய்தான் நளன்.

"அங்க எதுக்கு? " என பதறினாள் அவள்.

"அது.. அம்மாக்கு...." தடுமாறினான்.

"என்னடா... சொல்லு.." இவள் பதட்டமானாள்.

"என்னனு தெரியல.. பக்கத்துவீட்டு ஆன்ட்டி தான் போன் பண்ணினாங்க. அம்மா மயங்கிப் போய் பின்னாடி விழுந்து கிடந்தாங்களாம். ஹாஸ்பிடலில அட்மிட் பண்ணியிருக்காங்க. நீ போய் கொஞ்சம் பார்த்துக்க. நான் உடனே வாரேன்...."

" சரி.. சரி..." என அவள் அரக்கப் பறக்கச் சென்றாள். எப்படியும் நளன் ஆபிஸில் இருந்து கிளம்பி வர நாற்பது நிமிடங்களாவது ஆகும். கங்கா ஹாஸ்பிடல் அவர்களது வீட்டிலிருந்து பத்து நிமிட தூரம் தான்.

ஸ்வப்னா சென்று ரிசப்ஷனில் விசாரித்துக் கொண்டு படியேறி சென்றாள்.

மகேஸ்வரியை எமர்ஜன்சி யூனிட்டில் இருந்து அறைக்கு மாற்றியிருந்தார்கள். டாக்டரை தேடினாள். அவர் அகப்படவில்லை.

ஸ்வப்னா பில் கட்டிவிட்டு, அறைக்கு வெளியே வந்து நின்றுக்கொண்டிருந்தாள். அதற்குள் நளனும், ஆரோக்கியராஜும் வந்திருந்தனர்.

" என்னாச்சு.. என்னம்மா சொன்னாங்க...?" என்று பதறினார் ஆரோக்கியராஜ்.

அவள் பதில் சொல்லும் முன்னே டாக்டர் வந்தார்.

மருத்துவ குறிப்புகளை பார்த்துவிட்டு நிமிர்ந்தார்.

"நீங்க பேஷண்ட்டுக்கு....?" தன் மூக்குக் கண்ணாடியை உயர்த்தி போட்டு விட்டு கேட்டார்.

அறிமுகம் நடந்துக்கொண்டது.

"ஓகே... மைல்ட் அட்டாக்.."

மூவரும் அதிர்ந்தனர்.

"பயப்பட ஒன்னும் இல்ல... மெடிசின்ஸ் எல்லாம் தொடர்ந்தா ஓகே....." அவர் சர்வசாதாரணமாக சொன்னார்.

"டாக்டர்.. அம்மாவுக்கு இப்படி.. இதுவரை அவங்க நெஞ்சுவலினு சொன்னது எல்லாம் இல்ல.. சின்ன வருத்தம் கூட வந்தது இல்ல...."

"இது இப்ப எல்லாம் சர்வசாதாரணம். இவங்களுக்கு ப்ளட் ப்ரஷர் அதிகமா இருக்கு. சோ.. ஓவர் திங்க்கிங்.. வீட்டு வேலை.. தனிமை... இதெல்லாம் கூட அவங்களுக்கு அட்டாக் வர காரணமா இருக்கும். வன் வீக் நல்ல ரெஸ்ட்ல இருக்கச் சொல்லுங்க. கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்குங்க. ரெக்யூலரா செக் அப்க்கு கூட்டிக்கிட்டு வாங்க. நத்திங் டூ வொரி." என்று அடுத்த பேஷன்டைப் பார்க்கும் தன் கடமை உணர்ச்சியில் நகர்ந்தார்.

ஒரு நாள் கண்காணிப்புக்கு பிறகு மகேஸ்வரி வீடு திரும்பியிருந்தார்.

அடுத்த நாளிலிருந்து பெரும் மாற்றம் நிகழ்ந்தது. மகேஸ்வரி ரெஸ்டில் இருந்தார்.

காலை ஆறுமணிக்கே காலிங் பெல் அடிக்க கதவைத் திறந்த ஆரோக்கியராஜ் விழித்தார்.

"என்ன மாமா.. இப்படியே ஷாக்ல நிற்கப் போறிங்களா...? உள்ள வர வழிவிடுங்க..." ஸ்வப்னா நின்று கொண்டு இருந்தாள்.

சட்டென்று யோசித்தவராய்" இரும்மா... மருமகளா முதல் தடவை உள்ள வார.. ஆரத்தி கூட எடுக்க முடியல...."

"ஐயோ மாமா! இது என் வீடு. வழிவிடுங்க... " என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள். கை கால் அலம்பிக்கொண்டு நேராக ஸ்வாமி அறைக்குள் நுழைந்தாள். சுத்தம் செய்து விளக்கேற்றினாள். பூஜை செய்தாள்.

அடுத்து சமையலறைக்குள் நுழைந்தாள். அப்படியே கிடந்த பாத்திரங்களை துலக்கிவிட்டு, பரபரவென இயங்கினாள். காய்கறி நறுக்கி சமையலை செய்யத்துவங்கினாள்.

அதற்குள் குளித்துவிட்டு வந்த ஆரோக்கியராஜ் அதிசயமாய் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"மாமா.. சாப்பிட வாங்க... " என்று உணவு பறிமாறினாள்.

"இதுல ஆயிலும், உப்பும் குறைவா போட்டிருக்கேன். இதை அத்தைக்கு கொடுங்க. மத்தியான சமையலை செய்துருக்கேன். எடுத்து சாப்பிடச் சொல்லுங்க.. ப்ளாஸ்க்ல காபி இருக்கு. ஒரு நேரம் மட்டும் குடிக்கச் சொல்லுங்க... வேற.."

"நீயே போய் கொடும்மா..."

"வேற வினையே வேண்டாம்.... நீங்க கண்டிப்பா ஆபிஸ்க்கு போய் ஆகனுமா மாமா.. ஒரு ரெண்டு நாள் இவங்க கூட இருங்களேன். அதுவே அவங்களுக்கு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கும். அதுலயே சீக்கரம் சரியாகிடுவாங்க..." என்று நேரம் பார்த்தவள் வாஷிங் மெஷினில் துவைத்து ரெடியாய் இருந்த துணிகளை காயப்போட்டுவிட்டு கைப் பையை எடுத்துக்கொண்டு அவசரமாய் விடைப்பெற்றாள். அவளுக்கு நர்சரிக்கு செல்ல நேரம் சரியாய் இருந்தது.

மாத்திரையில் உபயத்தில் கொஞ்சம் அசந்திருந்த மகேஸ்வரிக்கு வெளியில் நடப்பது அறைகுறையாய் கேட்டது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் படுத்து இருந்தார்.

"மகேஸ்! சாப்பாடு இருக்கு. எடுத்து வைக்கவா? " என்று வந்தார் கணவர்.

"யாரு வந்தா??"

"என் மருமகள்..." என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று ஆபிஸ்க்கு போன் செய்து இரண்டு நாட்கள் லீவ் சொன்னார்.

"நீங்க ஏன் வீட்டில இருக்கிங்க...? நான் பார்த்துக்கறேன்....."

"இல்ல.. நான் உன் கூட ஒரு ரெண்டு நாள் இருக்கேன்.. வா சாப்பிடலாம்.. " என உணவு பறிமாறினார்.

'மகேஸ் உடல்நலமில்லாமல் இருக்கையில் நான் ஆபிஸ் போக வேண்டும் என்று நினைத்தது தப்பு அல்லவா.. இந்த நேரத்தில் இவளுடன் அல்லவா இருக்க வேண்டும். அதை ஸ்வப்னா அழகாய் உணர்த்தி விட்டாளே..' என்று எண்ணிக்கொண்டே சாப்பிட்டார் ஆரோக்கியராஜ். மருமகள் சமைத்த உணவு பிரமாதமாய் இருந்தது.

மகேஸ்வரி சற்று அமைதியானவர் போல தென்பட்டார். மருத்துவமனை வாசம் அவரை ஒரு வழி ஆக்கியிருந்தது.

அன்று முழுவதும் ஆரோக்கியராஜ் வீட்டிலேயே மனைவிக்கு துணையாய் இருந்தார்.

மாலையில் மீண்டும் ஸ்வப்னா வந்தாள். அவள் ரொம்பவும் களைத்துப் போய் இருந்தாள். ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் ஒன்றும் சொல்லாமல் உள்ளேச் சென்றாள். இரவு சமையலுக்கு தயார் செய்தாள். காய்ந்திருந்த துணிகளை எடுத்து அயன் செய்து வைத்தாள். பாத்திரங்களை கழுவி வைத்தாள்.

"நான் கிளம்புறேன் மாமா. நேரத்துக்கு சாப்பிடுங்க. அவர் வந்திடுவார்.." என்று சிட்டாய் பறந்துப் போனாள்.

"பாரு.... நீ அவ்வளவு செய்தும் வந்து எல்லாம் செஞ்சிட்டுப் போறா...." என்றார் ஆரோக்கியராஜ்.

மகேஸ்வரி ஒன்றும் பேசாமல் அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டார்.

"ஹேய் பொண்டாட்டி......" என்று கதவை திறந்ததும் உள்ளே நுழைந்தான் நளன்.

"நளா.. அடுப்பில் .. " என்று உள்ளுக்குள் ஓடினாள் ஸ்வப்னா.

சமையலறையில் இருந்த அவளை பின்னால் சென்று கட்டிப்பிடித்தான்.

"என்னாச்சு புருஷா...."

"ஹூம்.. பொண்டாட்டி மேல காதல் பொங்குது....."

"ம்.. நல்ல விஷயம் தான். சரி ராஜா குளிச்சிட்டு வாங்க... "

"ஏன்டி வந்ததும் குளிக்க விரட்டுற.. கொஞ்சம் உன்னைக் கொஞ்ச டைம் தா...."

"குளிச்சிட்டு வந்தா இன்னும் நிறைய கிஸ் தருவேன். இந்த அழுக்கு மூஞ்சிக்கு தர மாட்டேன்.... " என்று கத்தியை எடுத்து காட்டினாள்.

"அடிப்பாவி! விட்டா புருஷனை குத்தி கொலை பண்ணிடுவ போல.. இரு வந்து உன்னை வச்சிக்கிறேன்.."என்று நகர்ந்தான்.

"போங்க ராஜா..." என்று பழிப்பு காட்டினாள்.

இருவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அவன் பேச்சை ஆரம்பித்தான்.

"ஹூம்... இன்னைக்கு டின்னர் பிரமாதமா இருக்கே...."

"தேங்க்யூ செல்லம்...."

அவள் தட்டில் உணவை அளைந்துக்கொண்டிருந்தாள்.

"என்னடி யோசனை...?"

"அது... அத்தைக்கு பேசுனிங்களா? ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்திருக்கலாம் தானே...." என்று மென்று விழுங்கினாள்.

"அப்பாக்கு பேசினேன். நல்லா இருக்காங்களாம்... அங்க போக சொல்லி என்னை கட்டாயப்படுத்தாத ஸ்வப்னா.."

" ம்.." என்று அமைதியாய் சாப்பிட்டாள். அவளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டான்.

அவள் அங்கு சென்று வந்தது தெரிந்தும் அவன் ஒன்றும் கேட்கவில்லை. அவளாகச் சொல்வாள் என்று எதிர்ப்பார்த்தான்.

"ஆமா.. ஏதோ கோவிலுக்குப் போகனும்னு சீக்கிரம் கிளம்பிப் போனியே.. டைம்க்கு வேலைக்குப் போயிட்டியா...."

அவன் கேட்டதும் அவளுக்கு தொண்டையில் அடைத்துக்கொண்டது. புரை ஏறியது.

உண்மையை சொன்னால் நளன் கோபித்துக்கொள்வானோ என்று எண்ணி பயந்தாள்.
 
Nirmala vandhachu ???
 
Top