Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-15

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -15

நளன் பைத்தியம் பிடித்தது போல சுற்றித் திரிந்தான். அவள் அடிக்கடி செல்லும் எல்லா இடங்களிலும் சென்று தேடி கலைத்துப் போனவன் அசதியாய் வீடு திரும்பினான்.

அப்படி திரும்பவும் வீட்டிற்குச் சென்றுப் பார்த்த போது வீடு திறந்திருந்தது. அவனுக்கு அப்பாடா என்றிருந்தது. அடித்துப்பிடித்து உள்ளே நுழைந்தான். அவள் ஹாயாய் பாடிக்கொண்டு சமைத்துக்கொண்டு இருந்தாள்.

"எங்கடி போன...?" என்று மூச்சிரைக்க வந்து நின்றான்.

அவன் வந்து நின்ற கோலத்தைப் பார்த்து அவள் அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தாள். ஷார்ட்ஸும் டீசேட்டும் போட்டிருந்தான். வழக்கமாக காலையில் அவன் குளிக்காமல் எங்கும் கிளம்புவதே இல்லை. அவள் வீட்டிற்கு திரும்பிய போது கார் இருக்கவில்லை. அதற்குள்ளாகவா கிளம்பிச் சென்றுவிட்டான் என்று எண்ணி அவனுக்கு சமைத்துக்கொண்டு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வரலாம் என்று அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

"உன்னைத் தான் கேட்கிறேன். எங்க போன....?"

"சொல்ல மாட்டேன்......" என்றாள்.

அவளது பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவந்து அணைத்துக்கொண்டான். அவளோ என்னவென்று தெரியாமல் அவன் கைகளில் சிக்கித் தவித்தாள்.

"லூசு. சொல்லிட்டுப் போக வேண்டியது தானே... நான் பதறிப் போய் எங்க எல்லாமோ தேடிக்கிட்டு, கடைசியில உங்க அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்."

"வழக்கமா நீங்க தூங்கினா நான் வீட்ட வெளியில தானே பூட்டிக்கிட்டுப் போவேன். இன்னைக்கு என்ன அதிசயமா என்னை தேடியிருக்கிங்க...?" என்றாள்.

அவனை ஊடுருவிப் பார்த்தாள்.

"அது.. அது.. வந்து.. நீ கோவிச்சிக்கிட்டு... போயிட்டியோனு..."

"நான் எதுக்கு கோவிச்சிக்கிட்டுப் போகனும் ராஜா...?"இடுப்பில் கை வைத்துக்கொண்டு கரண்டியோடு கேள்வி கேட்டாள்.

"அது.. வந்து.. நான் நேற்று நைட்... "

"சோ... ஐயா தூங்கல.. முழிச்சி தான் இருந்திருக்கிங்க..." என முறைத்தாள்.

"ஸாரிடி.. ஏதோ கோபதுல..."

"எதுக்கு கோபம்...?"

"உன்னால தான்.. என்ன ப்ராம்ளம்னு சொல்லாம நீ பாட்டுக்கு பேசாம இருந்தா என்ன அர்த்தம். எத்தனை தடவை வந்து பேசினேன்...."

"சரி.. என் மேலத் தான் தப்பு. அதை உணர்ந்து நான் வந்து பேசினப்ப நீங்க ஏன் சார் பேசல....?"

"அது.. "

"ஈகோ...."

"இல்ல.. அத விடு. எதுக்கு கோவிச்சிக்கிட்டு இருந்த..?"

அவள் நினைவூட்டினாள். அவன் கோபப்பட்டு பேசியது அவளுக்கு பிடிக்கவில்லை என்றதால் கலங்கியதாக சொன்னாள்.

"அடிப்பாவி! அதுக்கா இத்தனை கோபம். அன்னைக்கு ஏதோ டென்சன்ல அப்படி சொல்லிட்டேன். வேற என்னடி?"

" நீங்க எப்படி கிஸ் தராமல் போகலாம்.. அது குற்றம் இல்லையா...?" என்றாள்.

அவன் தலையிலடித்துக்கொண்டான்.

"ஸாரிடி.. ஏதோ ஒரு டென்சன்ல போயிட்டேன். அன்னைக்கு கொஞ்சம் வர்க் ப்ரஷர்டி... அதான்..."

"உங்க வர்க ப்ரஷர் எல்லாம் வீட்டுக்குள்ள காட்ட வேண்டாம். வீட்டுக்கு வரும் போது வாசலோட உங்க வேலையை விட்டுட்டு வாங்க. இது நம்ம வீடு. ஞாபகம் இருக்கட்டும்..."

"சரி தாயே.. மன்னிச்சிடு..."

"இதை அன்னைக்கே சொல்லியிருந்தா இவ்ளளவு தூரம் வந்திருக்காது. என்ன ஆச்சுனு யோசிக்கிற பழக்கமும் இல்ல.. ஸாரி சொல்ற பழக்கமும் இல்ல..."

"சரி மன்னிச்சிடு தாயே... ஆயிரம் ஸாரி..." காதை இரு கைகளாலும் பிடித்து அழகாய் கேட்டான்.

"சரி.. சரி.. போய் குளிச்சிட்டு கிளம்புங்க.. ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்.."

"இன்னைக்கு சண்டே செல்லம்... வீட்ல தான்......" என்று கண்ணடித்தான்.

"சரியா போச்சு. சரி அதுக்காக குளிக்க மாட்டிங்களா.. போங்க..."

"நீ டா போட்டு பேசு.. நான் போறேன்..." என்று அவள் அருகிலேயே நின்றுக் கொண்டான்.

"ஐயோ.. ஆண்டவா.. சரி.. போ.. போய் குளி நளா..."

"இது .. இது.. நல்லா இருக்கு..." என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் இச் ஒன்று தந்துவிட்டு நகர்ந்தான்.

"ஐய... குளிக்காம கிஸ் பண்ணாதிங்க..."

"என்னது.." என்று அவளை மீண்டும் நெருங்கி முத்தமிட்டு அவளை துவம்சம் செய்தான்.

ஒருவழியாய் இரண்டு நாட்களின் தீராத மோகத்தில் சந்தோஷமாய் பொழுதைக் கழிக்க அவன் திட்டம் தீட்டினான். ஆனால் ஸ்வப்னா வேறு திட்டம் தீட்டியிருந்தாள். அடுத்து நடக்கப்போகும் அதிரடிகள் தெரியாமல் அவனோடு சந்தோஷமாக கிளம்பினாள் அந்த வீட்டுக்கு.
 
Nirmala vandhachu ???
 
Top