Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-11

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -11

"நில்லுடா... எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா நான் அவ்வளவு சொல்லியும் நீ இவளை கல்யாணம் பண்ணியிருப்ப.. அதுவும் எனக்குத் தெரியாம.. கடைசியில் அந்த ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்துருச்சே... அவசர அவசரமா கல்யாணம் பண்ணி என்னை உன் கல்யாணத்தை பார்க்கவிடாமல் பண்ணிட்டியே... நல்லதுடா.. ரொம்ப நல்லது..." கோபமும் அழுகையுமாக பேசினார் மகேஸ்வரி.

"அம்மா.." என அவன் ஆரம்பிக்க அதை அவர் தடுத்தார்.

"நான் உன் மேல வச்சிருந்த நம்பிக்கையெல்லாம் சுக்குநூறா உடைச்சிட்ட.... உனக்கு எப்படில்லாம் கல்யாணம் பண்ணனும்னு நான் ஆசை பட்டேன் தெரியுமா.. எல்லாத்துலயும் மண்ணை அள்ளிப் போட்டுட்ட...."

"மகேஸ்.. நடந்தது நடந்து போச்சு.. அதுக்காக எவ்வளவு நேரம் வாசலிலயே நிற்க வைச்சு பேசுவ.. அவங்களை உள்ள கூப்பிடு...." ஆரோக்கியராஜ் சமாதானம் பேச முயன்றார்.

"நீங்க சும்மா இருங்க.... இதப் பாருடா நீ மட்டும் வாரதா இருந்தா உள்ள வா.. அவளோடத் தான் வருவியா இருந்தா வராத.. "

"அத்தை... எங்களை மன்னிச்சிடுங்க.. " என்று ஸ்வப்னா தொடங்கவும் மகேஸ்வரி அவளை சுட்டெறிப்பது போல பார்த்தார். அவளை சைகையாலேயே 'ஒன்றும் பேசாதே' என நளன் கட்டளையிட்டான்.

"அம்மா.. உங்களுக்கெல்லாம் சொல்லாம நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புத்தான். ஆனா ஸ்வப்னா இல்லாம எனக்கு லைப் இல்லம்மா.. அதனால தான் இந்த அவசர முடிவு. இவளுக்கு இடம் இல்லாத வீட்ல எனக்கும் இடம் வேண்டாம்.. நீங்களா கூப்பிடுற வரைக்கும் நான் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்...." என சொல்லிவிட்டு ஸ்வப்னாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

"நளா.. அவசர படவேண்டாம். அத்தைக்கிட்ட பேசிப் பார்ப்போம்..." ஸவப்னாவுக்கு பதட்டமாய் இருந்தது.

"அவங்க ஒத்து வர மாட்டாங்க. அதுக்கு ரொம்ப காலம் ஆகும். சோ கொஞ்சம் டைம் கொடுப்போம்..." என்று அவளை சமாதானப்படுத்தி காரை கிளப்பி விரட்டினான்.

"இப்ப எங்க நளா போறோம்.. " என்ன நடக்கிறது என்று புரியாமல் கேட்டாள் ஸ்வப்னா.

"சொல்றேன். முதல்ல உங்க வீட்டுக்குப் போய் அத்தை கையால சூடா ஒரு காபி குடிக்கனும்..." என்று வேகத்தை கூட்டினான்.

'என்னாச்சு இந்த நளனுக்கு...? எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு.. இவள் சாதாரணமாக பதில் சொல்ற என அவள் குழப்பமானாள்.

அவர்களை வரவேற்று ரோகிணியின் முகத்திலும் மனதிலுமே பெரும் குழப்பம் கொட்டிக் கிடந்தது.

ரோகிணியின் காபியை ரசித்து ருசித்து குடித்துவிட்டு நிமிர்ந்தான்.

"நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்களேன்.. " என்றார் ரோகிணி.

"இல்ல அத்தை.. இப்படில்லாம் நடக்கும்னு தெரிஞ்சே நான் முன்னாடியே வீடெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். இப்ப கிளம்புனா பால் காய்ச்சிட்டு வேலையைப் பார்க்கலாம்... " என்றான்.

"இது எப்போ..." என்று ஸ்வப்னா ஆச்சர்யப்பட்டாள்.

அவன் புன்னகைத்தான்.

"சரிப்பா.. உங்க இஷ்டம்...." என்று ரோகிணியும் ஆச்சர்யத்துடன் நகர்ந்துவிட்டார். ஏனென்றால் நளன் ஒன்றை முடிவெடுத்தால் அதிலிருந்து அவனை யாரும் மாற்றிவிட முடியாது என்று அவர் அறிந்தே இருந்தார்.

அவன் பார்த்து வைத்த வீடு அருமையாக இருந்தது. அது ஒரு தனி வீடு. சுற்றிலும் மதில் சுவர் கட்டி பாதுகாப்பாக இருந்தது. வரவேற்பறை, இடப்பக்கம் இரண்டு அறைகள், வலப்பக்கம் இரண்டு அறைகள், சிறியதாய் ஒருபக்கம் பூஜை அறை, விசாலமான சமையலறை, டைனிங் ஏரியா, ஸ்டோர் ரூம் என்று ஒரு சூப்பர் பேக்கேஜாக இருந்தது.

வீட்டிற்கு தேவையான தளபாடங்களும் இருந்தன.

அவர்கள் உள்ளே நுழையும் போது ஆரத்தி எடுக்க சஞ்சனா வந்துவிட்டாள்.

" வெல்கம் அண்ணி." என்று கண்சிமிட்டினாள்.

ஸ்வப்னா படபடத்துப் போனாள். இத்தனை ஏற்பாட்டை நளன் எப்போது செய்தான் என ஆச்சர்யப்பட்டு போனாள். இதில் சஞ்சனா வேறு வந்து நிற்கிறாள்.

"ரொம்ப வெட்கப்பட வேண்டாம் மேடம். உங்க லவ் மேட்டரை எனக்கு கூட சொல்லல தானே.... இருக்கட்டும். அதுக்கு நாத்தனரா பழி வாங்குறேன்.. " என கூறி பொய்யாய் மிரட்டினாள்.

நல்லபடியாக பால் காய்ச்சி அவர்கள் தம் வாழ்வை ஆரம்பித்தனர்.

வீட்டை ஒழுங்கு படுத்துவதில் சஞ்சனா உதவி செய்யும் போது ஸ்வப்னாவுடன் பேச்சு கொடுத்தாள்.

"அம்மா ஏதாச்சும் சொல்லியிருந்தா தப்பா எடுத்துக்க வேண்டாம். அது கொஞ்ச நாள்ல சரியா போயிடும். அண்ணா என் கல்யாணத்தப்ப தான் உங்க மேட்டரை சொன்னார். நீயா சொல்வனு பார்த்தேன். கள்ளி.. கடைசி வரைக்கும் சொல்லல. கல்யாணத்துக்கு அண்ணா சொன்னார் தான். ஆனா எங்க புகுந்த வீட்டுல எப்படி எடுத்துக்குவாங்கனு தெரியல. அதான் வரல. கோவிச்சிக்க வேணாம் என்ன..." என சஞ்சு நீளமாய் பேசினாள்.

" அதெல்லாம் ஒன்னும் இல்ல.." என்று தன்னை புரிந்து கொண்ட சஞ்சனாவை ஸ்வப்னா கட்டிக்கொண்டாள்.

வந்தவர்களுக்கு நளன் உணவு ஏற்பாடு செய்து இருந்தான். நண்பர்கள் மட்டுமே இருந்தாலும் அந்த இடத்தில் உறவினர்கள் என்று யாருமே இல்லாதது ஸ்வப்னாவுக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்தது. இப்படி தனித்து தங்கள் வாழ்வை ஆரம்பிக்கப் போகிறோமே என்ற கவலை அவளை வாட்ட ஆரம்பித்தது.

அனைவரும் விடைப்பெற்றுக் கொண்டு அவர்களை தனியே விட்டு விட்டு கிளம்பினர்.

சத்யா நளனின் உடமைகளை வாரி சுருட்டிக்கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனான். அவனை துரத்தாத குறையாக துரத்திவிட்டு மனைவியை நோக்கி வந்தான் நளன்.

" ஹேய் பொண்டாட்டி..." என்று அவன் கிறக்கமாய் அழைத்தான். அவள் கோபமாய் முறைத்தாள்.

"என்னடா இதெல்லாம்..?" என்றாள் ஸ்வப்னா.

"எதெல்லாம்..?" என்றபடி அவள் காதில் தொங்கிய ஜிமிக்கி க்கு விடுதலை அளித்தான் நளன்.

"திடுதிடுப்பென கல்யாணம்னு சொன்ன.. இப்ப புது வீடு.. இதெல்லாம் என்ன நளா.. எனக்கு எல்லாமே ஷாக்கிங்கா இருக்கு.. "

"எனக்கு கூடத்தான் ஷாக்கிங்கா இருக்கு.. நீ இவ்வளோ அழகா.. உன் உதட்டுக்கு லிப்ஸ்டிக் தேவையேயில்லையேடீ.. அப்புறம் ஏன் இந்த கண்றாவி எல்லாம் பூசுற.. அதையும் சேர்த்துல்ல தின்ன வேண்டியதா இருக்கு.." என்று குறைப்பட்டான்.

" நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன்.. நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க.." கோபப்பட்டாள் அவள்.

" என் மகாராணியின் அழகை ரசிக்கிறேன்.. அடுத்து ருசிக்கும் போகிறேன்.."

"நளா.. நீ வாங்க போற.."

"முத்தம் தானே.. நான் ரெடி.." என்று கன்னத்தை காட்டினான்.

அவன் காட்டிய கன்னத்தில் அவள் செல்லமாய் அடித்தாள்.

"முதல் நாளே அடிக்கிற.. போகப் போக துவைச்சு எடுக்கப் போறியாடீ.."

"வாய்ப்பிருக்கு.." என்று சொல்லி, அவன் அவள் இடை தொட்டு இறுக்கிய போது செல்லமாய் சிணுங்கினாள்.

" நளா.."

"என்னடீ..."

"ம்... ஒன்னுமில்ல..."

" சொல்ல வந்ததை சொல்லு.."

" ஐ லவ் யூ டா..." என்று அவன் மார்பில் புதைத்தாள்.

" லவ் யூ ஸ்வப்னா.. உன்னை கல்யாணம் பண்றது என் லட்சியமா இருந்துச்சுடீ.. அது இப்ப ஒருவழியா நினைவேறிடுச்சு... "

"ம்.." என்று அவனை இறுக்கி அணைத்து கொண்டாள் நாயகி.

" இப்போ உன்னை கொஞ்சம் கொடுமை பண்ண போறேன்.." அவன் அப்படி சொன்னதும் அவள் கன்னங்கள் சிவந்தன. தன் பார்வையை தழைத்தாள்.

நளனின் கை மெது மெதுவாய் அவளது ஒவ்வொரு அங்கங்களுக்கும் தாவ ஆரம்பித்தன.

அவர்களுக்குள் யுத்தம் ஆரம்பமானது. நிஜமான யுத்தம். கட்டில் யுத்தம்.

அதே சமயம் மகேஸ்வரி கோபம் கொப்பளிக்க வேறு திட்டங்கள் தீட்டி ஆரம்பித்தார்.
 
Nirmala vandhachu ???
 
Top