Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒரு நாளும் மறையாத புதுப் பௌர்ணமி!-10

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -10

ரோகிணி கேட்டதுக்கு பதில் அளித்தார் ஆரோக்கியராஜ்.

"வாய்ப்பே இல்லம்மா.. இதை ஒரு பத்து தடவை சொல்லியிருப்பா.. எதுக்கு எடுத்தாலும் இதையேத் தான் சொல்லுவா.... நீ ஒன்னும் பயப்படாத.. அவளுக்கு அவ்வளவு தைரியம் இல்ல..." என்றார் ஆரோக்கியராஜ்.

"அப்படிச் சொல்லாதிங்க அண்ணா. அவங்களுக்கு நளன் மேல பாசம் அதிகம். அதனால கொஞ்சம் கவனமா இருங்க. நான் அப்பவே இவக்கிட்ட சொன்னேன். இதெல்லாம் ஒத்து வராது.. விட்டுடுனு.. கேட்டா தானே....." என ஸ்வப்னாவைப் பார்த்தார் அவள் தாயார்.

அவளோ பரிதாபமாய் நின்றுக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அவனுக்கு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல எழுந்த எண்ணத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.

"அடுத்த அடுத்த காரியத்தை கவனிக்கலாமா ரோகிணி...?"

"இல்ல அண்ணா..கொஞ்ச நாள் போகட்டும். அண்ணி மனசு மாறினாலும் மாறலாம். அவங்க சம்மதமும் முக்கியம். நாளைக்கு அவ அங்க இல்ல வாழப்போறா... "

"அதுவும் சரி தான்.." என்று அண்ணனும் ஒத்துபாடினார்.

நளன் முகமோ சோகத்துக்குச் சென்றது. உடனே அவன் வயதுக்கு வேறு திட்டமும் தோன்றியது. ரகசியமாய் திட்டம் போடத்தொடங்கினான்.

~~~~

"என்ன சொல்ற நீ.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா.. வேணாம் நளா.. எதாச்சும் இன்னும் பெரிய பிரச்சனை ஆகிடும்..." என்றபடியே காபியை உறிஞ்சிக் குடித்தாள் ஸ்வப்னா.

"இல்ல ஸ்வப்னா, இப்ப எங்க அம்மா இருக்க கோவத்துல எக்கச்சக்கமா ஏதாச்சும் ஐடியா பண்ணுவாங்க.. அதனால நாம முந்திக்கிறது பெட்டர்..."

"அது இல்லடா.. அதுதான் மாமாவும், அம்மாவும் சரினு சொல்லிட்டாங்களே..."

"அவங்க சரினு சொல்லிட்டா போதுமா.. அப்ப நம்ம கல்யாணதுக்கு ரெண்டே பேர் தான் வருவாங்க. "

"இப்ப மட்டும் என்னவாம்... நீ சொல்ற மாதிரி பண்ணுனாலும் ரெண்டு பேர் தான் வருவாங்க...."

"அதுக்குத் தான் நம்ம ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே.. அதுவே ஒரு பெரிய கூட்டமா இருக்கும்."

"சரி.. சொந்தம் பந்தம்..." என்றாள் தயக்கமாய்.

"யாரையும் கூப்பிட போறதில்லை..." என்றபடி அவளைப் பார்த்தான்.

"என்னடா சொல்ற...."

"ஆமா ஸ்வப்னா... அத்தையையும் அப்பாவையும் கூப்பிட போறோம். வேற யாரும் வேணாம்."

"அப்ப என் மாமியார்...?"

" சுத்தம்... அவங்க வந்தா உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்த மாதிரித் தான்...." என்று தலையிலடித்துக் கொண்டான்.

"ஏன்டா...?" என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள்.

"பின்ன.. அவங்க வந்தா சந்தோஷமா அட்சதையா தூவுவாங்க... அப்படியே என்னை மூட்டைக் கட்டி கடத்திட்டுப் போயிடுவாங்க... பரவாயில்லையா....?"

"அச்சோ.. அப்ப வேண்டாம்... ஆனா அவங்களுக்குத் தெரியாம எப்படிடா..?"

"அதைப் பற்றியெல்லாம் நீ ஏன் கவலைப் படுற....? இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள எல்லா வேலைகளையும் கவனிக்கனும். நான் இருக்கேன் இல்ல.. நீ பேசாம அடக்க ஒழுக்கமா உன் அடாவடியெல்லாம் பார்சல் பண்ணிட்டு கல்யாணப் பொண்ணா இரு. அது போதும்..."

"டேய்.. வெட்கப்படனுமா..?" சந்தேகமாய் கேட்டாள் ஸ்வப்னா.

"அதான் உனக்கு வராதே..." என அவன் சொல்லவும் எதை எடுத்து அடிப்பது என தேடினாள்.

சொன்னபடியே அவன் திருமண வேலைகளில் மும்முரமாய் இயங்கினான். அப்பாவுக்குத் தெரிந்து, அம்மாவுக்குத் தெரியாமல். குறித்த நாளும் வந்தது.

அம்மன் சன்னிதானத்தில் பட்டு வேஷ்டி சட்டையில், கழுத்தில் கல்யாண மாலையுடன் அவன் பார்வை அலைய அங்குமிங்கும் தன் கண்களை தேடவிட்டுக்கொண்டிருந்தான் நளன்.

"என்ன மாப்பிள்ளை சார்.. யாரைத் தேடுறிங்க....?" என அவன் நண்பன் சத்யா நளனை குழப்பிக்கொண்டிருந்தான்.

"சும்மா இருடா.. டேய் சத்யா. ஏதோ டென்சனா இருக்குடா...."

"என்னடா... தெரியலைடா.. அம்மா..." இழுத்தான் நளன்.

"நீ தானே இந்த முடிவை எடுத்த.. அப்புறம் என்ன..? "

"ஆமாடா... ஸ்வப்னாவை இழக்க கூடாதுனு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. அம்மாவோட கோவம் கொஞ்ச நாளைக்குத் தான்டா.. அதை சமாளிச்சக்கலாம்..."

"அப்ப தைரியமா தாலியைக் கட்டுடா.. அதான் உங்க அப்பா இருக்காரே.. அவர் பார்த்துக்குவார். அங்க பாரு உன் ஆளு...." என கைகாட்டினான்.

கடுஞ்சிவப்பு நிற பட்டுப்புடவையில் அவள் பளீர் அழகு கொஞ்சம் கூடி, இதுவரை தெரியாத அவள் உள்ளழகுகள் அவன் உணர்ச்சிகளை தூண்டின. மைபூசிய அவள்
கண்ணழகு அவன் மீது வலைவீசின. சிவப்பு நிறத்தில் மூழ்கி எழுந்த அவள் உதடுகள் அவனை கிறங்கச் செய்தன. நீண்ட அவள் கருங்கூந்தல் முதல் தடவையாக அவன் கவனத்தை ஈர்த்தன. அதில் அவள் இருபுறமும் தொங்கவிட்ட மல்லிகைப்பூ அவள் கழுத்தின் வாசத்தில் ஆனந்தக் கூத்தாடின. கைநிறைய நிறைந்திருந்த கைவளையல்கள் தனிராகம் பாடின. அவள் அளவான அலங்காரத்தில் அம்சமாக சேலை கட்டிய தேவதைப் போல் இருந்தாள்.

நளன் அவளை முதல்முறையாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் கண் வாங்கினான்.

அவள் அவனைப் பார்த்து ரகசியமாய் கண்சிமிட்டினாள். அவனோ அவள் அழகில் சொக்கி அதள பாதாளத்துக்குள் போய்க் கொண்டிருந்தான்.

ஐயர் மந்திரம் ஓத, சூழ்ந்திருந்தவர்கள் அட்சதை தூவ அவன் மங்கலநாணை அவள் கழுத்தில் அணிவித்தான்.

அவள் அதை கண்மூடி அனுபவித்தாள்.

'கடவுளே! எங்க ரெண்டு பேருக்கும் இடையிலான பந்தம் ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரனும்...' என்று வேண்டிக்கொண்டாள்.

'ஆண்டவா... இவள் என்னவள். எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் துணையா இருப்பா.....' என்று அவன் வேண்டிக்கொண்டான்.

'கடவுளே.. இந்த குழந்தைகளை நீதான் பார்த்துக்கனும்...' என்று அவன் அப்பா வேண்டிக்கொள்ள, 'அம்மா தாயே! என் பொண்ணையும் நளனையும் நல்லபடியா வாழ வைம்மா...' என்று ரோகிணியும் வேண்டிக்கொள்ள, திருமணம் இனிதே நிறைவு பெற்றது. மிகவும் எளிமையாக திருமணத்தை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்ப ஆயத்தமானார்கள்.

"அப்பா.. நீஙக முன்னாடி போங்க.. நாங்க பின்னாடியே வாரோம். இங்க நடந்த எதுவும் உங்களுக்கு தெரியாத மாதிரியே காட்டிக்குங்க.." என்றான் நளன்.

"சரிப்பா..." என்று காஸ்டியூம் சேன்ஞ்சில் அவர் கிளம்பினார்.

"அத்தை! நீங்களும் போங்க..."

"இல்ல.. நளா.."

"வேணாம் அத்தை. அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியல. அதுனால நீங்க வர வேண்டாம். நாங்க அப்பறமா வீட்டுக்கு வாரோம்." என்றான் மாப்பிள்ளை.

அவரும் கிளம்ப அவன் தன் மனைவியோடு காரில் கிளம்பினான்.

"நளா.. அத்தை என்ன சொல்வாங்களோனு எனக்கு பயமா இருக்குப்பா... என்னை உள்ள சேர்த்துக்குவாங்களா..?"

"ஏன் உன்னை மட்டும்னு பிரிச்சு பேசுற..? இப்ப நாம ரெண்டு பேர். அதுனால பிரிக்காத.. ஓகே.. போய் பார்ப்போம். என்னதான் சொல்றாங்கனு.... கொஞ்சம் சிரியேன்..."

அவள் சிரமப்பட்டு சிரித்தாள். கதவைத் திறந்த மகேஸ்வரி வாசலிலேயே அதிர்ச்சியாகி நின்றார். அவர்கள் மணக்கோலம் பார்த்து கண்களில் கோபம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.

"நில்லுடா.." மகேஸ்வரியின் குரல் ஒலித்தது.
 
Nirmala vandhachu ???
 
Top