ஓம் ஸ்ரீ சாய்ராம்
எழுத்தாளர் திருமதி தேவி ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய “மெய்யெனக் கொள்வாய்”
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.
உங்கள் அற்புதமான படைப்புகளில் நான் படிக்கும் ஆறாவது கதை இது. Needless to say, இந்தக் கதையின் தலைப்பும், அதற்கு கதையின் ஓட்டத்தில் நீங்கள் தந்த விளக்கமும், once again Mind blowing. கதைக்கருவிற்கு ஏற்ப தனித்துவமான கதை தலைப்புகள் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே!
இந்த ஆறு கதைகளில் ஐந்து கதைகளைத் திரையுலக நட்சத்திரங்களை மையமாக வைத்துப் படைத்திருக்கும் போதிலும், ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு சூழ்நிலையை நேர்த்தியாகக் கையாண்ட உங்கள் திறன் வாரே வாவ்.
அதுவும் குறிப்பாக இக்கதையில், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்!” எனச் சொல்லும் விதமாக, தயாரிப்பாளர் கருணாகரன் – லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீ கீர்த்தி மோதல் எனப் பரபரப்பாகத் தொடங்கும் கதையை வெகு அழகாக ஸ்ரீ கீர்த்தியின் பெற்றொர் (சந்திரன் & சத்யா) கதையாகத் திருப்பியது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.
ஆமாம் வாசகர்களே! 90s காதல் ஜோடிகள் சந்திரன் & சத்யாவின் திருமண வாழ்க்கை; அவர்கள் லட்சியப் பாதை; கருணாகரன் இவர்கள் வாழ்க்கையில் அன்றும் இன்றும் தந்த(தரும்) தொல்லைகள்; இதுவே கதையின் நகர்வு.
கதையின் தொடக்கத்திலேயே சந்திரன் சத்யா இருவரும் சட்டப்பூர்வமாகப் பிரிந்துவிட்டார்கள் எனக் கூறிவிட்டு, அதற்கு அப்புறம் நீங்கள் அவர்கள் திருமண வாழ்க்கையை Flashbackஆக தந்திருந்ததால், அவர்களுக்கிடையே சின்னதொரு மனஸ்தாபம் வரும் காட்சியைப் படித்தாலும் போதும்; ‘இதுதான் இவர்கள் பிரிய காரணமாக இருந்திருக்குமோ!’ என யூகிக்கத் தோணியது.
ஆனால் அங்கும் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்!” என்ற ரீதியில், அந்தப் பிரளைய மழையிலும், புரிதல் என்ற குடை பிடித்து அவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொண்ட அன்பும், காதலும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஒரு கட்டத்தில், ‘இத்தனை புரிதல் கொண்ட தம்பதிகள் விவாகரத்துச் செய்யும் அளவிற்குப் போக வாய்ப்பே இல்லையே எனக் கூட யோசித்தேன்.
அவர்கள் விவாகரத்துச் செய்ய வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்துவிட்ட சூழலைப் படித்தப் பின்னும், இருவர் மீதும் பழிப்போட முடியவில்லை. பரிதாபம் தான் வந்தது.
‘எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்த நீ இந்தவொரு விஷயத்திலும் சந்திரனுக்காக விட்டுக்கொடுத்திருக்கலாமே சத்யா;
தள்ளி இருந்த நேரமெல்லாம் அவளுக்கு அரணாய் இருந்து பாதுகாத்த நீ, அவள் பக்கத்திலேயே இருக்க நினைத்த உன் எண்ணத்தை மனம்விட்டுச் சொல்லியிருக்கலாமே சந்துரு;’ என இருவரிடமும் கேட்க வேண்டும் போல இருந்தது.
போதாக்குறைக்கு, பிரிந்த பின்னும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பையும், அக்கறையும் காட்டும் விதத்தில் காட்சிகளை இணைத்து, கதை படிக்கும் எங்கள் மனப்பாரத்தை அதிகமாக்கி விட்டீர்கள் ஆத்தரே.
குறிப்பாக, ‘மனையாளின் கைப்பக்குவத்தை மறக்காத சந்துரு; காபியாவது குடிக்கச் சொல்லி கண்ணால் கெஞ்சிய சத்யா. OMG என்னவொரு காதல் இவர்களுடையது எனத் தோன்றியது.
மொத்தத்தில் பிரிவு என்ற பெயரில் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக்கொண்ட இவர்கள் காதலை விவரிக்க வார்த்தையே இல்லை ஆத்தரே.
இக்கதையின் மாந்தர்களை நீங்கள் சித்தரித்த விதம் எனக்கு மிக மிகப் பிடித்திருந்தது ஆத்தரே. அவர்கள் குணாதிசயம் இதுதான் என நேரடியாகக் கூறாமல், STEAL characterization என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே; அதைப் போல காட்சிகள் வசனங்கள், முகபாவனைகள் வைத்து அவர்கள் குணாதிசயங்களை எங்கள் கண்முன் நிறுத்திவிட்டது உங்கள் தனித்துவமான எழுத்துநடை.
பிறந்த வீடே என்ற போதும், திருமணத்துக்குப் பின் பெற்றவர்களுக்குப் பாரமாக இருப்பது எத்தனை பெரிய வலி என சத்யாவின் காட்சிகள் மனத்தைத் துளைத்தது. குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் பிள்ளை வளர்ந்து வருகிறாளே என அவள் மறுகிய காட்சி.
அதே மாதிரி, சந்துரு ஒரு இடத்தில் சொல்லுவாரே! “அப்போதும் உன்னைக் கண்டிக்கத்தான் முடிந்திருக்கும்; தண்டித்திருக்க முடியாது!” வாவ்! எத்தனை காதல் அவர் சொன்ன அந்த வார்த்தைகளில்!
Hats off to your narrative style throughout the story.
காமாட்சி Typical 90s மாமியார் போல ஆட்டிப்படைத்தாலும், அவர்மேல் எனக்குக் கோபம் வரவில்லை; மருமகள் என ஒருத்தி வந்துவிட்டால், “என் வீடு; என் குடும்பம்” என்ற உரிமையை இழந்துவிடுவேனோ என்ற insecure feelingலேயே அவர் அப்படி நடந்துகொண்டார் எனப் புரிந்தது.
(சரவணன் மனைவி மாதிரி சத்யாவும் கண்டும் காணாமல் இருந்திருந்தால், அவர் சுபாவம் மாறாவிட்டாலும், ஓரளவுக்கு அமைதியாகி இருப்பாரோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பெரியப்பா கதாபாத்திரம் அசத்தலோ அசத்தல். மீசைக்காரர் தான் குழப்பங்களுக்கு எல்லாம் மூலக்காரணமாக இருந்திருப்பாரோ என்ற எரிச்சல் கலந்த உணர்வுகளோடு படித்தால், அவர் தந்த ஒவ்வொரு தீர்ப்பும் செம்ம ட்விஸ்ட்.
கருணாகரன் செய்ததை எல்லாம் படிக்க, ‘என்ன ஜென்மம் டா இவன்!’ என மலையளவு கோபம் வந்தது தான். என்றாலும், அவர் செய்த கலகத்தில், கடந்த காலத்தின் கசப்புகளை மறந்து காதலில் கலந்த ஜோடிகளின் முடிவில், ‘பிழைத்துப் போடா!’ எனச் சொல்லத் தோன்றியது.
சந்துருவின் அப்பா; அவன் சகோதரிகள்; கருணாகரனின் மனைவி அனைவரும் சூழ்நிலைக்கு ஏற்ப அன்பையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்திய இடங்கள் யாவும் மிக மிக எதார்த்தமாக இருந்தது.
அத்வைத், பிரபஞ்சன் இருவரும் ஸ்ரீ கீர்த்திக்குத் தந்த தார்மீக ஆதரவு மனத்தை வருடியது.
அத்வைத், கருணாகரனின் மகன் ஆச்சே! இவனை நம்பலாமா என்றும், இந்த வக்கீல் பிரபஞ்சன் என்ன வாய்திறந்தே பேச மாட்டேன்றான்; இவன் எப்படி கோர்ட்டில் திறம்பட வாதாடுவான் என்றும் பதற்றத்துடனே அவர்கள் கீர்த்திக்கு உதவிய காட்சிகளைப் படித்தேன்.
அவர்கள் விஷயத்திலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கதையில் பல ட்விஸ்ட் & ட்ர்ன்ஸ் வைத்து நகர்த்திய உங்கள் பாங்கு கதையின் விறுவிறுப்பைக் கூட்டியது.
அதிலும், தன் தொழிலுக்கு உதவியாக இருப்பாய் என வேலைக்கு ஆள் சேர்ப்பது போல ஸ்ரீ கீர்த்திக்கு Propose பண்ண "அந்த வாலிபனின்" குறும்பில் பக்கென்று சிரித்துவிட்டேன். கீர்த்தி & அவள் சரிபாதிக்கானப் பிரத்யேக கதையை விரைவில் எதிர்பார்க்கிறோம். அவன் சரிபாதி யாராக இருப்பார்கள் என்பதை, வாசகர்களே! நீங்களே கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
கதையின் நாயகி என்று நினைத்து படிக்கத் தொடங்கி, சந்துரு-சத்யா ரொமான்ஸில் அவளைப் பற்றியே மொத்தமாக மறந்து, கடைசியில் பக்குவத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும், குறும்பிற்கும் பெயர்போன பெண்ணாக என் மனத்தில் இடம் பிடித்துவிட்டாள் ஸ்ரீகீர்த்தி.
இந்தக் காலத்துப் பெண்; அதுவும் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் நடிகை என்ற போதும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனக் கதை முழுவதும், பெற்றவர்களின் சொல்படி நடக்கும் செல்ல மகளாக வலம் வந்து எங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டாள்.
இத்தனை நற்குணம் படைத்த இவளுக்காகவாவது சந்துருவும் சத்யாவும் பிரியாமல் இருந்திருக்கலாமே என நினைக்காமல் இருக்க முடியவில்லை. அட போங்க ஆத்தரே!
என்னை இப்படிப் புலம்ப விட்டுட்டீங்களே ஆத்தரே!!!!
இதுக்காகவே, நீங்க சந்துரு & சத்யா சஷ்டியப்தபூர்த்தி விழாவை விமர்சியா கொண்டாடி, அவங்க “Life begins at 60!”ன்னு நிறைய நிறைய happy moments of togetherness அனுபவிக்குறா மாதிரி ஒரு தனிக் கதை எழுதுவீங்களாம்.
திருமண பந்தம் என்பது கணவன்-மனைவி என்ற இரு உள்ளங்களின் புரிதலைத் தாண்டி, பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், உதிரத்தில் ஜனித்தவர்கள் என அனைவரின் விறுப்பு வெறுப்புகளுக்கு மரியாதை தந்து அனுசரித்தும், தனக்கான தேவைகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் வாழ வேண்டிய உன்னதமான ஒன்று என்று சொல்லும் விதமாக அருமையான கதை தந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கதைக்கான லிங்க்:
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

Last edited: