Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் விமர்சனம்

Advertisement

Selvipandiyan

Active member
Member
கவிப்பிரதாவின் தாழம்பூ வாசம் நீ.
இந்த கதையில் ஹீரோ லிங்கா என்றாலும் என்னை கவர்ந்த பாத்திரம் மூர்த்திதான்!எப்படிப்பட்ட மனிதர்!அவரை பார்த்து வியந்துபோனேன்!அடுத்து லிங்கா.இவனை என்ன சொல்ல?முதல் அறிமுகத்தில் ட்ரீமி என பெண் பின்னால் சுற்றியவன் மீது மரியாதையே வரவில்லை!இளாவின் அவசர் முடிவால் குடும்பமே தள்ளாடிய போது பொறுப்புகளை கையில் எடுத்து அனைவரையும் தேற்றி தாமுவின் அறிமுகத்தை பற்றிக்கொண்டு தொழில் கல்யாணம் இரண்டையும் சரி செய்கிறான்!
ஆனால் அவன் அறியாதது,சக்தியின் மனது!விரும்பி கல்யாணம் செய்ததாய் அவள் நினைத்து அவன் முகம் பார்த்திருக்க அவன் மனம் தான் போட்ட கணக்கில் மூழ்கியிருக்க அவள் இறங்கி வரும்போது அவன் திரும்ப ,அவன் இறங்கி வரும்போது அவள் திரும்ப!இருவரின் எண்ணங்களும் ஒரே நேர்க்கோட்டை அடையும் நேரம் அவ்வளவு அழகா இருக்கு!
லதாவின் உணர்வுகளை அழகா எழுதியிருக்காங்க.இளா தான் செய்த தவறை உணரும் தருணமும் அழகு.மூர்த்தி தன் மகனைப்பற்றி அறிந்து வருந்தும் இடமும் தன்னை அப்பாவிடம் ஒப்புக்கொடுத்கு நிற்கும் லிங்காவும் அசத்தல்!உண்மையை சொல்லி வருத்தப்பட்டாலும் அதை பற்றிக்கொண்டு லிங்கா மீது காதல் கொள்ளும் சக்தி!உணர்வுகளை அழகான எழுத்தில் வடித்திருக்காங்க.
 
Top