என் பார்வையில் காதல் கலாட்டா.

Advertisement

Selvipandiyan

Active member
Member
பிரியா மோகனின் காதல் கலாட்டா.
ஜாலியான காதல் கலாட்டா கதை.ஆதி கோகுல் நண்பர்கள்.பாவப்பட்ட. கோகுல்!ஏன்னுன்னு பார்க்கிறிங்களா?கதை முழுசும் பல்ப் வாங்குறான்!
அவன் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்து கூடவே தங்க வைத்ததுக்கு,நல்லா வாங்கிகட்டிக்கிறான்!ஆதி அதிரடியா இண்டர்வியூ அட்டர்ன் பண்றதாகட்டும் தன்யாவை வெறுப்பேத்துறதுமாய் இருக்கிறான்.மாடம்ன்னு கூப்பிடறது சிரிப்பு.
தன்யா அப்பாவுடன் பேசுவதில்லை,கல்யாணத்துக்கு சம்மதிப்பதில்லை,ஆதியுடன் பழைய காதல்!அந்த கல்லூரி காதல் அழகு.பிரிவுக்கு பின் தேடி வரும் ஆதி.
தெய்வானைதான் கதையில் எனக்கு பிடிச்சவங்க.என்ன ஒரு அட்டகாசம்!அவங்களும் மகனும் சேர்ந்து அடிக்கும் கூத்துகளும்,கோகுலை வைத்து செய்யும் காமெடிகளும் ஹா ஹா!சுரேனின் ப்ளாஷ்பேக் அதிர்ச்சிதான்,அதை விட ஒரு அதிர்ச்சியும் கடைசியில் இருக்கு.
மாலைத்தீவில் நடக்கும் பன்க்‌ஷனும் கடத்தலும் கமல் படம் போல் கல கல!ப்ரியா பின்னால் சுற்றும் கோகுல்,ப்ரியாவை பார்த்து அடையும் அதிர்ச்சி!ஜோடியாக அடைபடும் ஆதி தன்யா!கடத்தல் பற்றி ராஜகோபாலும் ஜெயதேவும் பேசுவதும் அவர்களின் நட்பும் நல்லா இருக்கு.கல கலன்னு ஒருகதை.
 

Advertisement

Advertisement

Back
Top