Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் கண்மணி நானுன் நிஜமல்லவா.

Advertisement

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா.
இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்சது அன்புக்கரசிதான்!அடுத்து வாசுதேவகிருஷ்ணன்!மற்றவங்க எல்லாரும் அடுத்து அடுத்து ஸ்கோர் பண்றாங்க!
துன்பத்தையும் எப்படி பாஸிட்டிவாஎடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியா இருக்கணும்ன்னு அன்புக்கரசியை பார்த்து தெரிஞ்சுக்கலாம்!எடக்கு மொடக்கான கணவனை அழகா ச்மாளிப்பதும் ,பிள்ளைகளை அப்பாவிடம் மாட்டி விடாமலும்,காப்பாற்றியும் பெரியவனுக்கு புத்தி சொல்லியும் சின்னவனுக்கு சப்போர்ட் பண்ணியும் மருமகள்களை தாங்குவதும்,கணவரை எங்கு தட்டினால் எங்கு விழுவார் என கணிப்பதாகட்டும் அன்புக்கரசி ராக்ஸ்!
முத்துவேல் மருதவேல் ரெண்டும் ஒரே குட்டை!நம் ஹீரோ மட்டும் தனிரகம்!வாயில் வடை சுடுவது பார்த்துருக்கோம்!இவர் வார்த்தைகளில் செய்யும் ரொமான்ஸ் இருக்கே?!!!அட அட!!ஒரு வார்த்தை நம் காதில் விழலை!ஆனால் எக்க சக்க ரொமான்ஸ் மன்னர்!இனி யாராச்சும் தூங்க போறேன்னு சொல்லும் போது சிரிக்காம இருப்போமா?!யக்கா!! ஒண்ணு போதும்டா சாமி!பூர்வா இவனின் காதலில் மூழ்கி இன்னும் வெளியே வராமல் இருக்கா!கண்ணுக்குள் தேடிகிட்டு இருக்கதா கேள்வி!
கதை என்னன்னு சொல்ல்லியே?பொலிஸ்கார ஹீரோ,அப்பாவின் ஆதிக்கத்தை விரும்பாது தன் வாழ்வில் தன் விருப்பத்தை தன் சாமர்த்தியத்தால் அமைத்துக்கொள்பவர்!அதில் சிக்கி சின்னாபின்னமாகும் அண்ணன்!பாவம்டா அவன்!விமலா,அப்பாவி மருமகள்.அடக்கி வைக்கும் மாமனார்.மாமியாரின் பின்னால் சுற்றுபவளை கணவன் புறம் திசை திருப்பும் ஹீரோ!ஒத்து ஊதும் மாமியார்!பூங்கோதை பத்தி சொல்லாம இருக்கமுடியாது!மருமகனால் அவஸ்தைப்படும் மாமியார்!எப்போ என்ன செய்வானோன்னு அவர் படும் பாடு!
டெரர் மாம்னார் கடைசியில் லிப்ட் போட்டு குடுத்து,சின்ன அன்புவிடம் மண்டியிட்டுட்டார்!குடும்ப கதைகளில் இப்படியும் ஒரு வகை எழுதலாம்ன்னு எழுதி அசத்திட்டாங்க!
தேங்க் யூ சோ மச் செல்விக்கா :love: :love: :love: :love:
 
Top