என் பார்வையில் இவன் வடம் வாராயோ.

Advertisement

Selvipandiyan

Active member
Member
அன்னபூரணி தண்டபாணியின் இவன் வசம் வாராயோ.
நாயகியை காட்டும் போதே கல்யாணம் ஆனவளா காட்டுறாங்க!எப்படி இவளை கதா நாயகியா வச்சு கதை வருமுன்னு நினைச்சேன்.
நிரஞ்சனா கைக்குழந்தையுடன் எதிர் வீட்டில் இருக்கிறாள்.அவள் கணவன் அவளை ஏமாற்றிவிட்டு ஓடி விடுகிறான்.கயலின் அண்ணன் தமிழ்.அவன் கண்ணில் இவள் படுகிறாள்.அம்மா அண்ணனுடன் செல்லாமல் வேறு எங்கோ போய் விட்டதாக அறிந்து அவன் இவளை தேடி அலைகிறான்.
அம்மாவும் அண்ணனும் இவளை கொடுமை செய்ததாக அறிந்து அவளை தேடி அலைந்து கண்டு பிடிக்கிறான்.தொடர்ந்து அவளின் வாழ்வில் இருக்கும் மர்மங்கள் படிக்கும் நமக்கே தலை சுத்துது!அவளின் வாழ்க்கையில் அத்தனை சிக்கல்கள்!அவளின் பெற்றவர்கள் கதையும் ராஜாத்தியின் வஞ்சனையும் அண்ணியின் ஆதரவும் தேவகியின் உதவியும் என கதைக்குள் கதையாய் அத்தனை சம்பவங்கள்!அனைத்தையும் கோர்வையா மனதில் பதிக்க கொஞ்சம் சிரமப்பட்டுட்டேன்! விட்டு விட்டு படிச்சதால் வந்த வினை!
தமிழின் காதலும் அவனின் அதிரடியும் அசத்தல்!நிரஞ்சனாவின் முன்னேற்றத்துக்கு உதவுவதும் அவளை மீட்டெடுப்பதும் குழந்தை பற்றிய விபரம் அறிந்து எல்லாரும் வம்பு பேசும் போதும் அவளை எதுவும் சொல்லாது மண மேடைக்கு வருவது என கலக்கிட்டான்!ஏகப்பட்ட திருப்பங்கள் கதையில்!
 
நன்றி செல்வி அக்கா. சூப்பரான கருத்துரை கொடுத்துட்டீங்க.. சாரி.. முகநூல் பக்கமே சுத்திட்டிருந்ததால சைட் பக்கம் வரல.. அதனால இப்பதான் கவனிச்சேன்.. நன்றி. நன்றி.
 

Advertisement

Advertisement

Back
Top