Chapter 20
நீந்தி கடக்க முயல்கிறேன்
உன் காதலின் ஆழத்தை,
தாண்டி சென்றிட துடிக்கிறேன்
உன் நேசத்தின் தடைகளை,
சேர்ந்தே மடிந்திட நினைக்கிறேன்
உன் காதலுக்காக நானும்
அருணாவிடம், சுகுமாரை காட்டி பிடித்திருக்கிறதா என்று தந்தை கேட்க, உங்க விருப்பம்பா என்று கூறினார்.
“என்னம்மா இப்படி சொல்ற, உன்னோட விருப்பம் தானே முக்கியம்”
“அப்பா எனக்குன்னு பெருசா விருப்பம் எல்லாம் இல்லை, நீங்க அம்மா அண்ணன் அண்ணி எல்லாரும் இருக்கும்பொது எனக்குன்னு தனியா விருப்பம் எல்லாம் கிடையாது. நீங்க பார்த்து சொல்லுங்க போதும்” என்றாள்.
“அதானே மாமா, நாம என்ன அருணாவுக்கு தப்பான ஆளையா பிடிச்சி கட்டி வைக்க போறோம்” என்றாள் மீனா.
அப்பா நான் ரொம்ப நல்லா விசாரிச்சுட்டேன், பையன் திறமையானவன், அங்கே நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கு. அம்மா அப்பா இல்லை, ஒரே ஒரு தங்கச்சி மட்டும் தான். அதை கூட இவன் தான் கட்டி கொடுத்திருக்கான். அப்படி பார்த்தா பொறுப்பான பையன் தான். பிக்கல் பிடுங்கல் இல்லை வேற என்ன தெரியனும் சொல்லுங்க விசாரிச்சு சொல்றேன்” என்றார் விசு.
“விசு எனக்கு ஒண்ணு தோணுதுடா” என்றார் வேணி.
“என்னம்மா”
“அவருக்கும் அம்மா அப்பா இல்லை, அப்போ நம்ம வீட்டோட மாப்பிள்ளையா இருப்பாரான்னு கேளேன்”
“என்ன வேணி இது”
“ஆமாங்க, நாம என்ன ஒரு பொண்ணு ஒரு பையன் தானே பெத்து வச்சிருக்கோம், ரெண்டுமே நம்ம கண்ணு முன்னாடி இருந்தா நல்லது தானே. கேட்டு பார்ப்போமே” என்றார்.
“அப்படியா என யோசித்த வேதாசலம், நீ என்ன சொல்ற விசு” என்றார் மகனிடம்.
“நான் சொல்ல என்னப்பா இருக்கு, எனக்கும் அருணாவை விட்டுட்டு இருக்க கஷ்டமா தான் இருக்கும், நம்ம கூடவே இருந்தா நல்லது தானே”
“அப்போ சரிடா, கேட்டு சொல்லு, ஒத்து வந்தா பார்ப்போம் இல்லை வேற இடம் பார்க்கலாம்” என்று விட்டார் வேதாசலம்.
“என்ன சொல்ற மீனா, எதுக்கு இப்படி வீட்டோட மாப்பிள்ளை பார்க்கிறாங்க” மீனாவின் அண்ணன் பரம குரு மனைவி கனகா கேட்டாள்.
“எனக்கும் தெரியலை அண்ணி, அவங்க சொல்றாங்க இவரும் சரின்னு சொல்லிட்டார்”
“அவர் சொன்னா, நீ அப்படியே விட்டுடுவியா, அவ எப்போ இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவ, ஆனா நீ தான் அந்த வீட்டோட மகாலட்சுமி. அதனால எவ்வளவு செலவு பண்ணியாவது அவளை கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க சொல்லு அது தான் உனக்கும் நல்லது”
“நான் எப்படி அண்ணி சொல்றது, அங்கே என்னோட பேச்சு எடுபடாது”
“என்ன நீ இப்படி சொல்ற”, என்று பெண்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, என்னாச்சு என்று வந்து நின்றார் பரமகுரு.
“உங்க தங்கச்சி நாத்தனார்க்கு கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வச்சிக்க போறாங்களா. அதான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்”
“அப்படியா மீனா” என்று கேட்டார் பரமகுரு.
“ஆமாண்ணா அவங்க அப்படித்தான் பேசிக்கிறாங்க”.
“அது சரி வராதேமா”
“எனக்கும் என்னண்ணே தெரியும் அவங்களா பேசி முடிவெடுக்கிறாங்க”
“நான் எதுக்கு சொல்றேன்னா, இப்போ நீ அந்த வீட்டு மருமக, உன்னோட உரிமை பேர்ல நாங்க அந்த வீட்டுக்கு சங்கடம் இல்லாம வந்து போக இருக்கிறோம். ஆனா இன்னொருத்தர் அந்த வீட்டுல வந்து இருக்கும்போது நாங்க இதே போல சகஜமா வந்து போக முடியுமா. சொல்லு” என்றார்.
மீனா அமைதியாக யோசித்து கொண்டிருக்க, “இங்கே பாரும்மா, உனக்கு அந்த வீட்டுல எவ்வளவு செல்வாக்கு இருக்கோ அதை வச்சி தான் அங்கே எங்க பழக்க வழக்கமும் இருக்கும். நீயே வெளியாள் மாதிரி ஒதுங்கி நின்னா அப்புறம் நாங்க அங்கே வந்து உரிமையோட உறவாட முடியாது. அதனால மச்சான்கிட்டே பேசி எப்படியாவது அந்த பொண்ணை கட்டி கொடுத்து வெளியே அனுப்புற வழியை பாரு. அவ்வளவு தான் சொல்லுவேன்”
மீனாவுக்கு அண்ணன் சொல்வது சரியாகவே தோன்றியது, என்னதான் அவள் அந்த வீட்டு மருமகளாகவே இருந்தாலும். இன்னொரு ஆண் இருக்கும் இடத்தில் அவளால் எப்படி சகஜமாக இருக்க முடியும். இதை கூட அவர்கள் யோசிக்கவில்லையே என்று நினைத்தாள்.
கணவனிடம் பேசி எப்படியாவது இந்த ஏற்பட்டதை தடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
ஆனால் அதற்கு தோதாக, சுகுமாரனே இது சரி வராது என்று கூறி விட்டதாக விசு வருத்தமாக கூறினார்.
அப்போது தான் மீனாவுக்கு சந்தோஷமாகவே இருந்தது.
“ஏன் விசு என்ன சொன்னாங்க”
“இல்லைப்பா அவருக்கு வீட்டோட மருமகனா வர்றதுல விருப்பம் இல்லையாம். சொந்த கால்ல தான் இது வரைக்கும் இருந்திருக்கேன். இனியும் அப்படியே இருந்துக்கிறேன்னு சொல்றாரு.
“ம்ம், அப்போ விட்டுடு விசு நாம நமக்கு தோதா வேற இடம் பார்த்துக்கலாம்”
சரிப்பா என்று அவர் அத்தோடு விட்டு விட்டார்.
மீனாட்சியும் நிம்மதியும் மூச்சு விட்டு கொண்டு இருக்க, நடந்த எதுவும் அறியாத அருணா, விசு கொடுத்திருந்த சுகுமாரின் போட்டோவை அடிக்கடி ரகசியமாக எடுத்து பார்த்து கொண்டிருந்ததை வேணி எதேச்சியாக பார்த்து விட்டார்.
“என்னங்க நாம அந்த சம்மந்தத்தை எப்படியாவது பேசி முடிக்கனும்” கையை பிசைந்து கொண்டே வந்து வேணி கேட்க, அவரை புரியாமல் பார்த்தார் வேதாசலம்.
“ஆமாங்க நம்ம விருப்பம் தான் முக்கியம்னு அவ இருந்தா, இப்போ நாம பார்த்த மாப்பிள்ளையை மனசுல நினைக்க ஆரம்பிச்சுட்டா போல எனக்கு தோணுது”
“ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற வேணி, நம்ம பொண்ணு அப்படி எல்லாம் இல்லை”
“எனக்கும் அது தெரியுங்க, ஆனா இப்போ... நாம அவளை சொல்லியும் குத்தமில்லை. எல்லாம் நாம செய்த தப்பு” என்றார் தனக்குள் நொந்தபடி.
“என்ன வேணி புரியுற மாதிரி சொல்லு”
“என்னன்னு சொல்றது, எல்லாம் பேசி முடிக்கிறதுக்கு முன்னாடியே அந்த வக்கீல் சம்மந்த போட்டோவை அவக்கிட்டே காட்டி இருக்க கூடாதோன்னு இருக்கு” என்றார்.
“அதனால என்ன”
“அவ அந்த பையன் போட்டோவை எடுத்து எடுத்து பார்த்துட்டு இருக்காங்க” என்றார் கலவரமாக.
“அப்படியா” என்ற வேதாசலம் யோசிக்க துவங்கினார்.
“சரி வேணி, நான் இதை பத்தி விசுகிட்டே பேசறேன்” என்றார். அதே போல மகனிடம் இது பற்றி பேசவும் செய்தார். ஆனால் விசு எதுவும் சொல்லாமல் யோசித்து கொண்டிருந்தார்.
“என்ன விசு என்ன யோசிக்கிற”
அப்பா அவருக்கும் நம்ம அருணாவை ரொம்ப பிடிச்சிருக்குன்னு தான் சொன்னாரு, ஆனா இந்த வீட்டோட மாப்பிள்ளை விஷயம் தான் அவருக்கு சரிபட்டு வரலை. அதான் மேற்கொண்டு எப்படி பேச முடியும்னு தான் யோசிக்கிறேன்”
“நம்ம அருணா வேற அவர் போட்டோவை அடிக்கடி எடுத்து பார்க்கிறதா அம்மா சொல்றாங்க. புள்ளை மனசுல நாமளே இந்த பையனை பத்தின எண்ணத்தை புகுத்திட்டு இப்போ இல்லைன்னு சொன்னா, மனசு வருத்தப்படுமே விசு”
சிறிது யோசித்த விசு “சரிப்பா, நீங்க ஒண்ணும் யோசிக்காதீங்க, நான் இன்னொரு முறை பேசி பார்க்கிறேன். அப்படியும் அவர் முடியாது சொன்னா நாம இந்த வீட்டோட இருக்கணும்ற விஷயத்தை விட்டுடலாம். நீங்க என்ன சொல்றீங்க”
“சரிப்பா முதல்ல பேசி பாரு, என்ன சொல்றாரு சொல்லு”
இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த மீனாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, எப்படியும் இந்த கல்யாணம் நடந்தாலும் கூட, அருணா வீட்டோடு இருக்க மாட்டாள். அது போதுமே அவருக்கு.
ஆனால் இதற்கு நேர்மாறாக, யாரும் எதிர்பார்க்காத விதமாக விசுவை சந்தித்த சுகுமார், திருமணத்திற்கு சம்மதம் சொல்லி, வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதற்கும் சம்மதித்து இருந்தார்.
“எப்படி” விசுவால் வியப்பை அடக்கக முடியவில்லை, அன்று அப்படி உறுதியாக சொன்னவர் இன்று எப்படி என்று கேட்டார்.
“அது.. எனக்கு அருணாவை பிடிச்சிருக்கு” என்றார் சுகுமார்.
விசுவுக்கு இந்த விஷயம் ஆச்சர்யமாகவே இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை, வீட்டில் வந்து கூறி மிகவுமே சந்தோஷப்பட்டார். அருணாவிற்கு, முதலில் சுகுமார் வீட்டோடு மாப்பிள்ளையாய் வர மறுத்த விவரம் எல்லாம் தெரிந்திருக்கவில்லை. அதனால் திருமணத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்.
இதில் முழுவதும் ஏமாற்றம் அடைந்தது மீனா மட்டும் தான். மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாமல் வீட்டு பெண்ணின் திருமணத்தில் சந்தோஷமாக கலந்து கொள்ள வேண்டிய நிலை அவருடையது.
சீரும் சிறப்புமாக திருமணம் நடந்தேறியது, பெரிய இடத்தில் அண்ணன் பெண் எடுத்திருக்கிறான் என்ற பெருமையில் சுகுமாரின் தங்கை கல்யாணி இன்னும் அண்ணன் மூலம் ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் திருமணத்தில் வலம் வந்தாள். பெரிய வீடு, தோட்டம், வசதி ஊர் பெரிய குடும்பம் என்ற பெயர் எல்லாவற்றையும் பார்த்து கொஞ்சம் பொறாமை ஏற்பட்டாலும் அண்ணன் மூலம் இதில் கொஞ்சமாவது தனக்கும் கிடைக்குமே என்று எண்ணி கொண்டாள்.
ஆனால் அண்ணன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க போவது அவளுக்கு தெரிந்திருக்க வில்லை. அது தெரிந்த போது, அது எப்படின்னே, நீ போய் அங்கே தங்கிட்டா உன்னோட மரியாதை என்ன ஆகறது” என்றது ஓத துவங்கினாள்.
“அதுக்கென்ன பண்றது கல்யாணி, அவ அவங்க வீட்டுலே செல்லமா வளர்ந்த பொண்ணு அவளை பிரிய அவங்க கஷ்டப்படறாங்க. இப்போ உனக்கும் கல்யாணம் ஆகி போய்ட்ட, எனக்கும் தனியா இருக்கிறது பிடிக்கலை அதான் அப்படியே ஒண்ணா இருக்கலாம்னு நினைக்கிறேன். அது மட்டுமில்லாம நான் அங்கே கூட்டிட்டு வந்தாலும் வேலை விஷயமா வெளியே போகும்போது, அவ அங்கே தனியா தானே இருப்பா. அதுக்கு இங்கே இருந்துட்டு போகட்டும்” என்றார் சாதாரணமாக.
அண்ணன் இவ்வளவு சாதாரணமாக இதை எடுத்து கொள்ளும்போது, முதலிலேயே இது பற்றி அழுந்த பேசி பெரிது படுத்த வேண்டாம். எபபடியும் ஒருவருக்கொருவர் முட்டி கொள்ளாமளா போகும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
ஆரம்பத்தில் எல்லாம் சரியாகவே நடந்தது. கணவன் தனக்காகத்தான் இந்த விஷயத்திற்கு ஒத்து கொண்டான் என்பது அருணாவிற்கும், அருணாவிற்கு தன்னை பிடித்ததால் தான் மீண்டும் வந்து விசு தன்னிடம் பேசினார் என்பது சுகுமாருக்கும் தெரியவே இல்லை.
வேலை நாட்களில் வெளியே தங்கி கொள்ளும் சுகுமார், மற்ற நாட்களில் இங்கே வந்து விடுவார், முதலில் அவருக்கும் கொஞ்சம் சங்கடமாகவே இருந்த போதும், மாப்பிள்ளையாக பார்க்காமல் மகனை போல நடத்திய மாமனார் மாமியார், நண்பனை போல பழகிய மைத்துனன் என்று அவரும் அங்கே பொருந்திக்கொண்டார்.
இதில் மீனாவின் அண்ணன் பரமகுருவுக்கு தான் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. பெரிய இடம் தங்கை தான் அங்கே எல்லாம் என்று இருந்தது போக, இப்போது இன்னொருவரும் அங்கே வளைய வருவது அவருக்கும் கொஞ்சம் கசப்பாகத்தான் இருந்தது.
அதை எல்லாம் மறைத்து கொண்டு தான் எதிர்படும் நேரங்களில் எல்லாம் சுகுமாரிடம் பேசி வந்தார்.
மீனாவிற்கு வீரா பிறந்து பல வருடங்கள் கழித்து தான் அருணாவிற்கு திருமணம் ஆனது அதனால் அவர்கள் வீட்டில் அடுத்த வாரிசாக மேகவினி தான் இருந்தாள். ஆண் பிள்ளையை கொண்டாடி மகிழ்ந்த பெரியவர்கள் பெண் பிள்ளையை தற்போது கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அதை வைத்து கூட மீனாவிற்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது, உடனே தானும் அடுத்து ஒரு பெண் பிள்ளை பெற்று கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தார். அது ஒரு ஏக்கத்தின் பிரதிபலிப்பு தானே தவிர, வஞ்சம் எல்லாம் இருந்தது இல்லை அவரிடம்.
ஆனால் அவள் அண்ணன் அண்ணி இருவரும் அவ்வப்போது வந்து வஞ்சத்தை தூவிட்டு சென்று இருந்தனர்.
ஒரு நாள் சுகுமார் உணவருந்திகொண்டிருந்த நேரம், பரமகுரு வீட்டிற்கு வர, அப்போது தான் அருணா, பிள்ளை அழுகிறது என்று உள்ளே சென்று இருந்தார். சுகுமார் அப்போது பார்த்து தண்ணீர் கேட்க, மீனா எடுத்து வந்து கொடுத்தார். இதை பார்த்த பரமகுரு, என்ன மீனா இது நீ என்ன இந்த வீட்டு வேலைக்காரியா, ஓசியில உட்கார்ந்து சாப்பிடறவங்களுக்கு எல்லாம் சேவகம் செஞ்சுகிட்டு இருக்க” என்று கேட்டு விட்டார்.
இதை கேட்டு சுகுமார் கோவத்தில் எழுந்து விட, மீனா கூட திகைத்து தான் நின்றாள்.
அவருக்கு தான் விவஸ்தை இல்லை, மாமியார் வீட்டோட உட்கார்ந்து இருக்காரு, அப்படி இருக்கும்போது அவர் மனைவி தானே அவரோட வேலையை பார்க்கணும். நீ எதுக்கு இதை எல்லாம் செய்யற என்று மேலும் மேலும் பேசிக்கொண்டே சென்றார்.
முதலில் கொஞ்சம் புரியாமல் இருந்த சுகுமாருக்கு இது ஒரு பிரெச்சனையா என்று நினைத்தவர், பரமகுரு மேலும் மேலும் வீட்டோடு மாப்பிள்ளை என்று இளக்காரமாக பேசவும் கோபம் வந்து விட்டது.
அந்த நேரம் அங்கே வந்த விசுவிடம், “உங்க தங்கச்சிக்காகத்தான் நான் இங்கே இருக்கேன், எனக்கு சாப்பிடவோ அவளை வச்சி காப்பாத்தவோ வக்கில்லாம இல்லை” என்று கூறினார்.
அங்கு என்ன நடக்கிறதே என்றே புரியாத விசுவுக்கு, யார் பக்கம் பேசுவது என்றும் புரியவில்லை. ஆனால் தங்கைக்காக தன்னிடம் பேசிய மைத்துனர், அவருடைய மைத்துனர் மனைவி முன்னால் ஏதும் பேசாமல் இருப்பதை கண்ட சுகுமாருக்கு கோபம் அதிகமானது.
அவர் பேசாமல் தான் அங்கிருந்து புறப்பட்டு இருப்பார், ஆனால் “எப்படிதான் மாமனார் வீட்டு சோறு செரிக்குதோ தெரியலை” என்று பரமகுரு மேற்கொண்டு பேசிக்கொண்டே போகவும், விசு எதிர்பாராத நேரம் சுகுமார் பரமகுருவை அடித்திருந்தார்.
தன் கண் முன்னே அண்ணன் அடிபடுவதை கண்ட மீனா, பொண்ணெடுத்த வீட்டுலயே தங்கிட்டு இருக்க உனக்கு, அப்பா அம்மா இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கின எங்கண்ணனை அடிக்க என்ன தகுதி இருக்கு என்று கேட்டு விட்டார்.
சுகுமாருமே, தானே படித்து வளர்ந்து தனது தங்கைக்கு திருமணம் செய்தும் வைத்து ஆளாக்கியவர் என்பதை அப்போது மறந்து போய் இருந்தார் மீனா. வாய் பேச்சு கை பேச்சாகி சத்தம் கேட்டு ஓடி வந்த அருணாவை சுகுமார் அடித்து விட்டிருந்தார். கண் முன்னே ஒற்றை தங்கை அடி வாங்கி நின்றதை காண முடியாத விசு, மைத்துனன் என்பதையும் மறந்து சுகுமாரை அடித்து விட்டார்.
அதே நேரம் அண்ணனை பாக்க வந்த கல்யாணி, அண்ணன் அடி வாங்கியதை கண்டு அய்யோ அப்பா என்று கூக்குரலிட்டு அழுது ஆர்பாட்டம் செய்து பிரெச்சனையை பெரிதாக்கி தூபம் போட்டாள்.
“தேடி வந்து கால்ல விழாத குறையா பொண்ணை கட்டி கொடுத்துட்டு இப்போ அடிச்சி அசிங்கப்படுத்தறீங்களா. அண்ணே இவங்க பொண்ணே வேண்டாம் அறுத்து விட்டுட்டு வாண்ணே உனக்கு டிவோர்ஸ் வாங்கவா தெரியாது” என்று பேச விசுவிற்கு நிஜமாகவே கோபம் வந்து விட்டது. என்ன நடந்தது என்று தெரியாமல் வந்து நின்ற அருணா, வேதாசலம், வேணி மூவருக்கும் இந்த விவாகரத்து என்ற வார்த்தை பெரிதாக அதிர்ச்சியை கொடுத்திருந்தது.