Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 24

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

10071008

அத்தியாயம் - 24


சுபி போலிஸ் ஜீப்பின் சத்தத்தைக் கேட்டு ஒரு நிமிடம் ஜெர்க் ஆனாள்‌.பிறகு நிதானத்தை கையில் எடுத்தவள், அகல்யாவிடம், " ஆன்ட்டி, முதலில் கவனமாக கேளுங்கள்… நான் உங்க ஃபேமிலி ப்ரெண்ட், உங்களைப் பார்க்க வந்த இடத்தில் நீங்க ஆஃபிஸ்க்கு போயிருந்தீங்க… உங்க வீட்டுல இருந்த ரிலேஷன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்தான். நான் என்னை காப்பாத்திக் கொள்வதற்காக அவனை லேசாக அடித்து விட்டு, உங்களுக்காக காத்திருந்தேன். அப்புறம் நீங்க வந்ததும் நாம இரண்டு பேரும் சேர்ந்து அவன் கைகளை கட்டி விட்டு உள்ளே இருந்தோம். அப்போ வேற யாரோ வந்து அவனை அடிச்சு கொலைப் பண்ணிட்டாங்க என்று சொல்லப் போறேன்.நீங்களும் வேற எதுவும் சொல்லாதீங்க… பாப்பாவைப் பத்தி எதுவும் பேச வேண்டாம் என்று அகல்யாவிடம், சொல்லி முடிக்கவும்... போலீஸ் உள்ளே வரவும் சரியாக இருந்தது


இது தானே மிஸ்டர் ஆதவன் வீடு. அவர் எங்கே என காவல் அதிகாரி வினவ.


கண்களில் பயத்தோடு ஆம் என தலையாட்டினாள் அகல்யா.


மெல்ல செருமிக் கொண்டு பேச முயன்றாள். ஆனால் பயத்தில் பேச்சே வரவில்லை. முகத்திலோ வியர்வை சுரக்க, தவிப்போடு நின்றாள்.


காவல் அதிகாரி சந்தேகத்தோடு அகல்யாவை அளவிட்டார். மிஸ்டர்.ஆதவனுக்கு நீங்க என்ன உறவு என மீண்டும் கேள்விக் கேட்க…


சுபி, அகல்யாவின் அருகேச் சென்று கைகளைப் பிடித்து அழுத்தி, சொல்லுங்க ஆன்ட்டி எனக் கூறினாள்.


சுபியைப் பார்த்த காவலர் நீ யாருமா? என வினவ…


நான் இவங்க ஃபேமிலி ப்ரெண்ட் சார்.


இவங்க மிசஸ். ஆதவன் சார்.


ஓ… எங்கே உங்க ஹஸ்பன்ட்… அவர் கால் பண்ணி இருந்தாரே யாரோ உங்களது வீட்டில் வந்து ஏதோ தொந்தரவு செய்ததாகவும், அதற்காக அவனை நீங்கள் கட்டி வைத்திருப்பதாக கூறினார்.


எங்கே அந்த அக்யூஸ்ட் என வினவ…


அதே நேரத்தில் அவருடன் வந்திருந்த கான்ஸ்டபிள், சார்... சார் ...இங்கப் பாருங்க எனப் பதறினார்.


இன்ஸ்பெக்டர் திரும்பி கான்ஸ்டபிளை பார்வையால் என்ன என்று வினவ?


கான்ஸ்டபிள் இறந்திருந்த ரஞ்சித்தைக் காட்டினார் .


"ஓ மை காட்! என்ன இது கட்டிப் போட்டிருக்கோம் என்று தானே சொன்னீங்க... இப்போ இப்படி அடித்துக் கொன்று போட்டு இருக்கீங்க... யார் அந்த வேலை பார்த்தது என்று மிரட்ட…


அகல்யாவோ,பயந்து நடுங்கினாள்.


சுபி தான் முன்னே வந்து சார் நான் ஆன்ட்டியைப் பார்ப்பதற்காக வந்தேன். அவங்க இல்லை… இந்த பொறுக்கி தான் இருந்தான். என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணப் பார்த்தான்.‌ நான் அவன்கிட்ட இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்தேன் .அவன் துரத்திக் கொண்டே வந்தான் .நான் மறைந்திருந்து பின்னாடி இந்த குச்சியால் இரண்டு அடி தான் அடிச்சேன். அவன் மயக்கம் ஆகிட்டான்.


ஆன்டியும், நானும் இன்னைக்கு மீட் பண்ணுவதாக ஏற்கனவே ப்ளான் செய்து இருந்தோம். அவங்களுக்கு கொஞ்சம் வொர்க் இருந்ததால் ஆஃபிஸ்க்கு போயிட்டு அப்ப தான் வந்தாங்க‌...


அப்புறம் நானும், ஆன்ட்டியும் அவன் கையை கட்டி போட்டு விட்டு, அங்கிளுக்கு ஃபோன் செய்து உங்களுக்கு தகவல் தர சொன்னோம். அவர் ஆஃபிஸில் இருந்து உங்களுக்கு தகவல் சொன்னார்.இப்போ அவர் வந்துக்கிட்டே இருக்கார் சார்.


நாங்க இவ்வளவு நேரம் உள்ளே இருந்தோம் சார்… இப்போ தான் வெளியே வந்துப் பார்த்தால் இவன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். வேற யாரோ தான் கொலைப் பண்ணியிருக்காங்க… எனக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்… நம்புங்க சார் என்று பாதி பொய்யும், மீதி உண்மையுமாகக் கூறினாள்.


எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசிக்கோ, என்றவர் திரும்பி கான்ஸ்டபிளை அருகே அழைத்தார். முதலில் ஆம்புலன்சுக்கும், ஃபாரன்சிக் ஆட்களுக்கும் ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்க…


அப்படியே மகளிர் காவல் நிலையத்துக்கும் ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிடுங்க என வரிசையாக கட்டளையிட்டு விட்டு, அந்த இடத்தை ஆராய்ந்தார். ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்றுப் பார்த்தார்.


அகல்யாவோ பயமும், பதற்றமுமாக வாயிலைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் தன் கணவர் வருகிறாரா என்று…


ஆனால், சுபியின் நேரம் ஆதவன் ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது.


ஆதவன் இங்கு வருவற்குள் எல்லா பார்மாலிட்டிஸூம் முடிந்து சுபியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.


அகல்யா தான் சுபியைக் கூட்டிக் கொண்டு செல்லும் போது கையைப் பிடித்துக் கொண்டு கண் கலங்க…


சுபி, " ப்ளீஸ், சார், லெட் மீ ஸ்பீக் பார் டூ மினிட்ஸ் அலோன்… " என்க.


" ஓகே ‌ஹரி அப் " என்றுக் கூறியவர், பெண் காவல் அதிகாரியிடம் சென்று "டேக் கேர் டூ ஹெர் "என்று விட்டு ஜீப் அருகேச் சென்று நின்றுக் கொண்டார்.


அகல்யா," சுபி… அங்கிளை வேற காணும்… பாப்பா வேற யாரு தூங்கிட்டு இருக்கா… இல்லை என்றால் நானும் உன் கூட வருவேன். டாக்டர் வேற எப்போ வேண்டுமானாலும் வருவார். அதுக்காகத் தான் பார்க்கிறேன். நீ எதுவும் தப்பா நினைக்காதே… அங்கிள் வரவும் உடனே அனுப்புறேன்."


அச்சோ! நான் தப்பா எல்லாம் நினைக்கலை ஆன்ட்டி… உங்க சூழ்நிலை எனக்கு புரியுது… நீங்க பாப்பாவைப் பத்திரமாகப் பார்த்துக்கோங்க… என் ஃபோனை அவங்க வாங்கிக் கிட்டாங்க… என்னால வீட்டில் உள்ளவர்களோடு கான்டாக்ட் பண்ண முடியலை. அங்கிள் வரவும் எங்க வீட்டுக்கு மட்டும் தகவல் சொல்ல சொல்லிடுங்க ஆன்ட்டி.


ஏன் மா இரண்டு நிமிடம் என்று சொல்லிட்டு எவ்வளவு நேரம் பேசுவ‌… நாங்க உன்னை நேரத்தோடு ஸ்டேஷன்ல ஹேன்ட் ஓவர்

பண்ணணும். ம், சீக்கிரம் நட என்று அவசரப்படுத்தி ஜீப்புக்கு அழைத்துச் சென்றாள் அந்த பெண் கான்ஸ்டபிள். அவர்களுக்கு அவர்களின் கவலை… மாலைப் பொழுதிற்கு முன்பும், காலையில் விடிந்தப் பிறகும் தான் பெண்களை கைது செய்ய முடியும். அதற்காகத்தான் அவசரப் பட்டனர்.


வெளியே கேட்டு வரைக்கும் சுபியை அழைத்துச் செல்ல… அகல்யாவும் அவர்கள் பின்னேயே சென்றாள். காவலர் வாகனத்தில் ஏற்றி செல்ல, அவளையே கண் கலங்க பார்த்து கொண்டிருந்தாள்.


"கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை,

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவார்

தேவதை நீ தானென வாயார போற்றுவான்"


எங்கோ சென்றுக் கொண்டிருந்த காரிலிருந்து அந்தப் பாட்டு ஒலித்தது. ஆம் இவளும் தேவதைப் பெண் தான், எங்கிருந்தோ வந்தாள் என் பெண்ணைக் காப்பாற்றி விட்டு, செய்யாத தவறுக்கு ஜெயிலுக்குப் போகிறாளே… கடவுளே! எப்படியாவது அந்த பெண்ணைக் காப்பாற்று என மனதிற்குள் வேண்டிக் கொண்டவள், தன் கணவருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் அந்தப் பெண்ணை வெளியே எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி வேகமாக உள்ளே ஓடினாள்.


****************************


இங்கு கவினோ, முழுதாக பத்து நிமிடங்கள் கூட ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, அவனால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை.


எதுக்கு சுபி ஃபோன் பண்ணியிருப்பாள். அத்தை, மாமா எதுவும் மன்னிப்பு கேட்கச் சொல்லியிருப்பாங்களோ… தெரியவில்லையே, மனசு ஏனோ படபடவென்று அடிக்கிறது… பேசாமல் சுபிக்கு ஃபோன் செய்வோமா? நாம் பேசாமல் அவளதுக் குரலையாவதுக் கேட்போம், அப்போது தான் மனது சமாதானம் அடையும் என முடிவெடுத்தவன், செல்ஃபோனை எடுத்து ஆன் செய்துக் கொண்டே, பக்கவாட்டில் இருந்த பால்கனிக் கதவைத் திறந்தான்.


இப்பொழுது அவளுக்கு கால் செய்ய… அவளது ஃபோன் ஸ்விட்ச்டு ஆஃப் செய்யப்பட்டதாக தகவல் வர, கவினுக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. அவனது அறையே மூச்சு முட்டுவதாக இருந்தது. பால்கனியில் இருந்து வந்த காற்றுக் கூட அவனை ஆசுவாசப் படுத்தவில்லை.


சரி மாமாக்கு ஃபோன் போட்டு, சுபி எப்படி இருக்கிறாள் என்றுக் கேட்போம், என நினைத்தவன் அடுத்து ஈஸ்வரனுக்கு கால் செய்ய, அவரது ஃபோனும் ‌ஸ்விட்சுடு ஆஃப் என வரவும், பதறித்தான் போனான்.


பேசாமல் மாமா வீட்டிற்கு சென்று சுபியைப் பார்த்து விட்டு வந்துடுவோம். அப்பொழுது தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் அங்கு போய் தான், தன் நிம்மதி பறிப்போவதை அறியவில்லை.


சுபி ஃபோன் செய்தப் போது, அதை எடுக்காமல் விட்டதற்காகவும், அதை அணைத்து வைத்தற்காகவும், காலம் முழுவதும் தன்னை தானே நொந்துக் கொள்ளப் போகிறான், என்பதையும் அவன் அறியவில்லை.


விறுவிறுவென கிளம்பி கீழே இறங்கினான்.


"என்னப்பா அதுக்குள்ள நீ எழுந்து வந்துட்ட… மதியமும் சாப்பிடவில்லை கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு அப்புறமா கடைக்கு போக வேண்டியது தானே " என பத்மா வினவ...


இல்லை மா… நான் கடைக்குப் போகவில்லை. ஒரு அர்ஜென்ட் வொர்க். வெளில இருக்கு அதை முடிச்சிட்டு உடனே வந்துருவேன்.


ஓ, எதுவாக இருந்தாலும் வெறும் வயிற்றுடன் போக வேண்டாம்… நான் ஜூஸ் கொண்டு வரேன் குடிச்சிட்டு போ…


இல்லமா ஏற்கனவே நேரமாயிடுச்சு…


இரு ஜுஸ் ரெடியாயிருக்கு அதைக் குடிச்சிட்டு போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகுது… நான் சொல்வதை யாரும் காதுக் குடுத்துக் கேட்கிறது கிடையாது, என புலம்பிய படியே உள்ளே வேகமாகச் சென்று ஒரு கிளாஸில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்தாள்.

வேகமாக அதை வாங்கி என்ன ருசி என்று எதுவும் பார்க்காமல் குடித்து விட்டு டீபாயில் கிளாஸை வைத்தவன், தன்னுடைய டூவீலர் சாவியை எடுத்துக்கொண்டு பாய் மா, எனக் கூறிக் கொண்டே வெளியே சென்றான்‌.


நேராக வண்டியை தனது மாமன் வீட்டில் தான் நிறுத்தினான். கேட் வாயிலில் ஹாரன் அடிக்க வாட்ச்மேன் வேகமாக கதவைத் திறந்து விட்டார்.


வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவன், அத்தை, மாமா என அழைத்தபடியே தேட…


உள்ளிருந்து வீட்டு வேலை செய்யும் அன்னம்மா வந்தாள். வாங்க தம்பி அம்மாவும், அய்யாவும் தூங்குறாங்க…


சுபி எங்கே கா? என வினவ.


சுபி பாப்பா வீட்ல இல்லை தம்பி.


சுபி வீட்ல இல்லையா என புருவச் சுளிப்புடன் வினவ…


ஆமாம் தம்பி, பார்க்குக்கு போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க… இன்னும் பாப்பா சாப்பிடலை… வந்தவுடன் சாப்பாடு போடச் சொன்னாங்க.‌.. பாப்பாவுக்காகத் தான் தம்பி நான் உட்கார்ந்து இருக்கேன்… இன்னும் காணும் … ஐயாக் கிட்ட சொல்லுவோம் என்றுப் பார்த்தால் தலைவலிக்குது என்று ஐயாவும், அம்மாவும் மாத்திரைப் போட்டுட்டு படுத்திருக்காங்க. எனக்கு என்ன பண்ணுவது என்று ஒண்ணும் புரியவில்லை தம்பி என…


ஓ. காட்… இன்னும் வரலையா… சரி கா, நான் போய் பார்த்து விட்டு வரேன். நீங்க மாமாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுக் கூறியவன்‌. தனது ராயல் என்ஃபீல்டை எடுத்துக் கொண்டு, வேகமாக அந்த சாலையில் பறந்தான்.


அந்த மாலை நேரத்தில், பூங்காவில் ஓரளவே கூட்டம் இருக்க… சுற்றி, சுற்றிப் பார்க்க அவனது கழுகுப் பார்வையில் சுபிப் படவேயில்லை.


சுபியைக் காணவில்லை என்றவுடன் இன்னும் பதற்றம் அதிகரித்தது.


சும்மா இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதால் ஓன்றும் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் வாட்ச்மேனிடம் விசாரிக்க வேண்டும். ' சுபி இங்கு வழக்கமாக வருவதால் அவளை நன்கு அடையாளம் தெரிந்து இருக்கும். இன்று மதியம் இங்கு வந்தாளா, இல்லையா என்றுத் தெரிந்துக் கொள்ளலாம் ' என எண்ணியவன் வாட்ச்மேனைத் தேடிச் சென்றான்‌.


வாட்ச்மேனிடம் தன்னுடைய செல்ஃபோனிலிருந்த சுபியின் ஃபோட்டோவைக் காண்பித்து இன்று மதியம் வந்தார்களா என விசாரிக்க?


அந்தப் பூங்காவின் காவலரோ, சுபி பாப்பா தானே தம்பி. இன்னைக்கு வரலை தம்பி. நான் இந்தக் கேட்டுலயே தான் இருப்பேன். யாரு உள்ளேப் போனாலும் வெளியே வந்தாலும் எனக்கு தெரியாமல் இருக்காது. அதுவுமில்லாம சுபி பாப்பா என்னிடம் பேசாமல் உள்ளே போகாது. நானும் அதே அதே மாதிரி தான் பாப்பாவை பார்த்து விட்டால் ஐந்து நிமிடமாவது பேசி விட்டு தான் உள்ளயே விடுவேன் தம்பி.


அப்படியா,ஆனால் நீங்கள் பார்ப்பதற்கு முன்பே உள்ளே சென்றிருந்தால் என கவலையோடு கேட்க…

இருங்கத் தம்பி உள்ள ரெண்டு பேர் ரௌண்டிங்ல இருப்பாங்க… அவர்களிடம் விசாரிக்கிறேன் என்று தன் கூட வேலைப் பார்க்கும் சக ஊழியரிடம் ஃபோனில் விசாரிக்க…


அவர்களும் பதற்றத்துடன் வெளியே வந்து சுபிமா… இன்னைக்கு இங்கு வரவில்லையே என்றவர்கள்…


ஆமாம் நீங்க யாரு சார்? சுபிமாவுக்கு நீங்க என்ன வேண்டும் ? எதற்காக அவங்களைத் தேடுறீங்க? என சந்தேகத்துடன் வினவ...


நான் அவளோட அத்தைப் பையன் இன்று மதியம் இங்கே வருவதாகச் சொல்லிச் சென்றவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அதான் அவளைத் தேடி வந்திருக்கிறேன் எனக் கவின் கூற…


கவலைப்படாதீங்க சார் சுபிமா ரொம்ப நல்லவங்க எந்த பிரச்சனையும் அவங்களுக்கு வந்திருக்காது. நீங்க வீட்டில போய் பாருங்கள் இந்நேரம் அங்க வந்து இருக்கப் போறாங்க என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


சுபி வீட்டுக்கு வந்து இருந்தால் அன்னம்மா கா, எனக்கு இந்நேரம் ஃபோன் பண்ணி தகவல் சொல்லி இருப்பார்கள். அதனால் அவள் வரவில்லை என்பதை உணர்ந்து வேறு இடங்களில் தேடத் தொடங்கினான்.


கவின் பித்து பிடித்தார் போல் வீதி வீதியாக சுபியைத் தேடி சுற்றிக் கொண்டிருந்தான். நேரம் தான் போனதே தவிர சுபியை கண்டுப் பிடிக்க முடியவில்லை. இன்னும் தாமதம் செய்யாமல் போலிஸிடம் சென்று கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து வீட்டிற்கு திரும்பிச் சென்றான்.


**********************

அகல்யாவோ, உள்ளே மகளை ஒரு முறை சென்றுப் பார்ப்பதும், பின்னர் கணவர் வருகிறாரா என வெளியேச் சென்றுப் பார்ப்பதுமாக இருந்தாள்.


அவளை மேலும் சோதிக்காமல் ஆதவன் வீட்டிற்கு வருவதற்கும், ஆர்த்திகா கண் விழிப்பதற்கும் சரியாக இருந்தது.


ஆதவன், " கண்ணம்மா, என அழைத்துத் தன் பெண்ணின் தலையை வருட…"


வீல் எனக் கத்திய ஆர்த்திகா வேண்டாம்… வேண்டாம்… டோன்ட் டச் மீ என மீண்டும், மீண்டும் அலறினாள்…


ஆதவனோ, தன் மகளா தன்னை தொட வேண்டாம் என்றுக் கூறுகிறாள் என அதிர்ந்தவன்… வேகமாக மகளை விட்டு நகர்ந்தவன், வெளியே வந்தவன் கீழே விழுந்து ஐயோ! ஐயோ! எனக் கதறி அழுதான்.


மகன் பிறந்து ரொம்ப நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து, பெண் குழந்தை வேண்டும் என்று கோவில் கோவிலாகச் சென்று, தவமா தவமிருந்து பெற்ற பெண் மகவு, இன்று என்னைக் கிட்ட வராதே என்றுச் சொல்லிட்டாளே என்றுக் கூறி அழுதவன் நான் ஏன் ஒரு ஆணாகப் பிறந்தேனோ… என தன்னையே நொந்தவன். அந்த ராஸ்கலை நான் என் கையால கொண்ணுருக்கணும்… என வெறிப் பிடித்தாற் போல கத்தியவன் எல்லா பொருட்களையும் உடைத்துக் கொண்டிருந்தான்.


அகல்யாவோ அங்கு மிரண்டு, மிரண்டு அழுகும் மகளை எப்படி சமாதானம் செய்வது எனப் புரியாமல் இருக்க… அதற்குள் கணவர் உணர்ச்சி வசப்பட்டு எல்லாவற்றையும் உடைத்துப் போட…


அகல்யாவோ வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். யாரை போய் பார்ப்பது என புரியாமல்… அவளால் முடிந்தது என்று அழுதாள். அந்த நேரத்தில் கடவுள் மாதிரி அவர்களின் ஃபேமிலி டாக்டர் வந்தார்.


கேட் கதவு இப்படி திறந்தே இருக்கிறதே என்று யோசனையுடன் வந்தவர். அங்கு ஓரிடத்தில் மார்க் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து, ஓ அக்கியூஸ்ட் இறந்து விட்டார்,என்பதை புரிந்துக் கொண்டாள். அகல்யா எல்லா விவரத்தையும் ஏற்கனவே ஃபோனில் கூறியிருந்தப்படியால்‌ ரொம்பவெல்லாம் அதிர்ச்சி அடையவில்லை.


உள்ளே சென்ற டாக்டர், அங்கே எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டிருந்த ஆதவனைப் பார்த்து தான் அதிர்ந்தாள்.


ஆதவன் என்ன செய்துக்கிட்டு இருக்கிறீர்கள்… ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… என்று ஆதவனைத் தடுத்தார்…


வாங்க டாக்டர்… பார்த்தீங்களா என் பொண்ணு என்னைக் கிட்ட வர விடவே மாட்டேங்குறா… உங்களுக்கு தெரியும் தானே நான் எப்படி வளர்த்தேன் என்று…

பொறந்தக் குழந்தையை என் கையில் நீங்க தானேக் கொடுத்து, தேவதைப் பொறந்திருக்கா என்று சொன்னீங்கள்ல ஞாபகம் இருக்கு தானே… அன்னைக்கு தூக்குனவன் தான் இன்னைய வரைக்கும் அவளை தேவதை மாதிரி பார்த்துக்கிட்டேன். இன்னைக்கு என் பொண்ணு இப்படி துடிக்கறா… நீங்களேப் போய் பாருங்க டாக்டர்.


சரி முதலில் நீங்க எழுந்திரிங்க என்று ஆதவனை சோஃபாவில் அமர வைத்தவள்.

அங்கு நின்றிருந்த அகல்யாவிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அவனை குடிக்க வைத்தவள். ரிலாக்ஸ் ஆதவன் குழந்தை தானே சீக்கிரம் சரியாகி விடுவாள். நான் போய் பேபியைப் பார்க்கிறேன்.


உள்ளே சென்ற டாக்டர்,அழுது அழுது ஓய்ந்த குழந்தையிடம் சென்று மெல்ல சமாளித்து அவளிடம் வேற விஷயம் பற்றிப் பேசி கவனத்தை திசை திருப்பி ‌… பிறகு அவளை செக் செய்தார்… உடம்பில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு… மறுபடியும் ஊசிப் போட்டு குழந்தையைத் தூங்க வைத்து விட்டு வெளியே வந்தாள் கனத்த மனத்தோடு ‌…


அவளுக்கு இதெல்லாம் பார்த்து பார்த்து பழகிவிட்டது தான் இருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனது கடக்கிறது.



மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு, மாத்திரைகள் எல்லாம் எழுதியிருக்கேன். ப்ரிஸ்கிரிப்ஷன்ல உள்ள படி கொடுங்க அகல்யா… சீக்கிரம் சரியாகிடுவா… சிறிது நேரம் யோசித்தவள், அப்புறம் என்னோட சஜஷன் பாப்பாவுக்கு கவுன்சிலிங் கொடுத்தா பெட்டர்.


"டாக்டர் கவுன்சிலிங் தவிர வேற ஆப்ஷன் இருக்கா‌… " என ஆதவன் வினவ…


ஏன்? கவுன்சிலிங்கில் உங்களுக்கு என்னப் பிரச்சினை ஆதவன்?


அது ஒண்ணும் இல்லை டாக்டர். சாதரணமாக ஹாஸ்பிடல் வருவதற்கே எப்படி பயப்படுவா என்று தெரியும் தானே… அதனால் தானே நீங்களும் வீட்டிற்கு வந்து பார்ப்பீங்க…

இந்த டைம்ல வீட்டுல வந்து ட்ரீட்மெண்ட் பார்த்தாலும், அக்கம்‍, பக்கம் உள்ளவங்க ஏதாவது சொல்லுவாங்க. ஏற்கனவே இங்க மர்டர் நடந்ததை தான் எல்லோரும் கூடிக் கூடி நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். இதுல பாப்பாவை பத்தி ஏதாவது சொல்லிட்டாங்க என்றால், என்னால் தாங்கவே முடியாது டாக்டர்‌. அதான் வேற ஆப்ஷன் இருக்கிறதா என்றுக் கேட்கிறேன்.


ஓ… மர்டர் என்று சொன்னீங்க... என்னாச்சு அந்த பையனுக்கு… போலீஸ் எப்படி உங்களை விட்டார்கள் என்று வினவ…


அது வந்து டாக்டர் நாங்க ரெண்டு பேருமே வீட்டில் இல்லை, என்ற அகல்யா பிறகு நடந்த அனைத்தையும் கூறினாள்.


அப்ப அந்தப் பெண் வந்ததும் எவ்வளவு நல்லது தெரியுமா… அந்தப் பெண்ணே சரண்டர் ஆனதால் போலிஸூம் உங்களை எதுவும் தொந்தரவு செய்ய மாட்டாங்க…


நீங்க வெளியூர் போவதற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க ஒரு மூன்று மாசம் ஒரு நல்ல இனிமையான சூழ்நிலைக்கு பாப்பாவைக் கூட்டிட்டு போய் இருங்க … இந்த இன்ஸ்டிடண்ட் பத்தி பேசாதீங்க. பாப்பாவும், சீக்கிரம் இதிலிருந்து மீண்டு வந்துருவா...


வேணும்னா நீங்க எந்த ஊரு போறீங்களோ, சொல்லுங்க அங்க எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருந்தால் வந்து பார்க்க சொல்லுறேன்.


அப்போ, பாப்பா என்னோட சீக்கிரம் பேசிடுவாளா? என ஆதவன் வினவ‌…


ஸ்யூர் ஆதவன்.ஒரு இரண்டு நாள் மட்டும் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம். அப்புறம் அவளே வந்துப் பேசுவா…


ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் என அகல்யாவும், ஆதவனும் கூற…


எனக்கு தேங்க்ஸ் வேண்டாம். அந்தப் பெண்ணுக்கு மறக்காமல் சொல்லிடுங்க... டேக் கேர் என்றுக் கூறி விட்டு, டாக்டர் கிளம்பி விட்டார்.


அப்போது தான் சுபியின் ஞாபகமே அகல்யாவுக்கு வந்தது. ஐயோ! அந்த பொண்ணு படிச்சு படிச்சு சொல்லிச்சு எங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லுங்க என்று சொன்னது, நான் இப்படி மறந்துட்டேனே எனப் புலம்ப...


சரி விடு நீ டென்ஷன் ஆகாத… கிருஷ்ணா சில்க்ஸ் ஓனர் தானே… என் கிட்ட அவர் நம்பர் இருக்கு, நான் அவருக்கு போன் பண்றேன். அப்படியே நானும் போலிஸ் ஸ்டேஷன் போய் பார்க்கிறேன் என்ற ஆதவன், ஈஸ்வரனுக்கு அழைப்பதற்குப் பதில் சுகுமாரனுக்கு கால் செய்தான்…


சுகுமாரனுக்கு ஒன்றும் புரியவில்லை. உங்கள் பொண்ணு சுப்ரஜா, போலிஸ் ஸ்டேஷனில் இருக்கிறாள். மீதியை நேரில் சொல்கிறேன் என்று ஒரு அன்நோன் கால் வரவும்... பத்மா, என பதற்றத்தில் கத்த… வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வந்துவிட்டனர். வா… நாம உங்க அண்ணன் வீட்டிற்கு உடனே போகணும் என…


ஏங்க என்ன விஷயம் என்று பத்மாவும் பதற… வா போகும் போது சொல்லுறேன், என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு சுபி வீட்டிற்கு வந்தார்.வரும் போதே தனக்கு தெரிந்தவற்றையும் சொல்லியே அழைத்து வந்தார்.


பார்வதியும், ஈஸ்வரனும் சுபியைக் காணவில்லை என்று இடிந்துப் போய் இருக்க. கவினோ, பித்துப் பிடித்தவன் போல இருந்தான்.


அங்கோ ஜெயிலில் சுபி பயந்துப் போய் அமர்ந்து இருந்தாள்.




தொடரும்…..
 

Advertisement

Top