Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 20

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

894

அத்தியாயம் - 20


வெட்கச் சிவப்புடன் சுபி விளக்கேற்ற சாமியறைக்கு செல்ல… அவள் பின்னே சென்றான் கவின்.


நீரஜாவோ, அந்த வீட்டின் மூத்த மருமகளாக தன் கடமையை நிறைவேற்றினாள்.


இருவரையும் சாமியறையில் விளக்கேற்ற அழைத்துச் சென்றாள் நீரஜா. அங்கிருந்த பத்மாவோ, " வா மா… வந்து விளக்கேற்று… டேய் கவின் நீயும் அவ பக்கத்துல நில்லு… ரெண்டு பேரும் நல்லா வேண்டிக்கோங்க… இருவரும் கண் மூடி வேண்டிக் கொண்டு ஒரே நேரத்தில் கண் திறக்க… ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.



பத்மா, இருவருக்கும் பால்‍, பழம் கொடுத்து விட்டு… சரிப்பா கவின், நீ உன் ரூம்ல ஓய்வெடு… சுபி நீ இங்க கீழ இருக்குற ரூம்ல ஓய்வெடு மா.‌‌.. நீரஜா, சுபியோட போய் இருமா… ஈவினிங் கோவிலுக்கு போயிட்டு வந்துடுவோம் என

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கட்டளையிட்டாள்.


அதை தடை செய்வது போல கவின், பத்மாவிடம், "மா… நான் சுபிக்கு வீட்டை சுத்தி காண்பிக்கவா?"என…


நவீன் கேலியாக சிரிக்க… மகனே என்ற பத்மா, "உன்னை விட இந்த வீட்டோட இண்டு, இடுக்கு மூலை, முடுக்கு எல்லாம் சுபிக்கு தான் நல்லா தெரியும். நீதான் ஹாஸ்டலிலும்‍, அப்புறம் வெளிநாட்டுக்கும் படிக்க போயிட்ட… இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும், அவ தான் பொருத்தமாக வாங்கி டெகரெட் பண்ணுவா… உன்னோட ரூம் உள் அலங்காரமும் அவ செய்தது தான்… இப்போ மாப்பிள்ளை சார் எதை போய் காண்பிக்க போறீங்க? பேசாம போய் கொஞ்சம் நேரம் ஓய்வெடு" என கவினிடம் கூற…


கவினோ, கிண்டல் அடிக்கும் அம்மாவை ஒன்றும் செய்ய முடியாமல், அங்கே சிரித்துக் கொண்டிருந்த நவீனைப் பார்த்து முறைத்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.


சரி சரி நீங்க ரெண்டுபேரும் ஏன் மா இன்னும் போகாமல் இருக்கிறீங்க ? போய் படுங்க…


நீரஜா, " அத்தை நைட் டின்னருக்கு ரெடி பண்ணணும் தான… நானும் ஹெல்ப் பண்ணுறேன். அப்புறமா வந்து சுபியோட இருக்கிறேன்"


அதெல்லாம் ஒன்னும் இல்லை மா… உங்க மாமா ஹோட்டலில் இருந்து டின்னர் ஏற்பாடு செய்யுறேன் என்று சொல்லிட்டாருமா‌… நானும் கொஞ்ச நேரம் படுக்கத்தான் போறேன்.


நீ ஏன் டா… இங்க நின்னுக்கிட்டு இருக்கிற உனக்கு வேற தனியா சொல்லனுமா… போ டா உன் ரூமுக்கு… நீரு இப்ப வர மாட்டா… கிளம்பு, கிளம்பு என நவீனைத் துரத்த …


அவனோ ஒன்றும் சொல்லாமல் நீருவைப் பார்த்துக் கொண்டே இருக்க.


என்ன பசங்களோ! கல்யாணம் ஆனா உடனே அம்மாவ மறந்துடுவாங்க போல தனக்குள்ளே புலம்பிக்கொண்டு அவனை கண்டுக் கொள்ளாமல் ஓய்வெடுக்க சென்றாள் பத்மா.


சுபியும், நீராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு அவர்களும் அங்கிருந்து சென்று விட…

அங்கு அம்போவென்று நின்று கொண்டிருந்தான் நவீன்.


அப்போது தான் அங்கு வந்திருந்த சுகுமாரன் டேய் நவீன் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க? ஏன் இப்படி மசமசன்னு நின்னுட்டு இருக்க? ஏதாவது உருப்படியா வேலை இருந்தா பாரு… இல்லையா போய் படு.


அப்புறம் ஈவினிங் நிறைய வேலை இருக்கும். நீ தான் பார்க்கணும் என முறைக்க… விட்டால் போதும் என்று ஓடிவிட்டான் நவீன்.

***************************

சூரியன் மேற்கே மறையும் முன் மாலைப் பொழுதில் அந்த வீடே பரபரவென இயங்கியது. அந்த வீட்டுத் தலைவி பத்மாவின் குரல் ஓங்கி ஓங்கி ஒலித்தது.


அம்மாடி நீரு… சுபி ரெடியாகிட்டாளா?


இதோ இரண்டு நிமிடத்தில் வந்துடுவோம் அத்தை, என அறையில் இருந்து குரல் கொடுத்த நீரஜா‍, சுபிக்கு தலை சீவி … வேலையாள் வைத்து விட்டுச் சென்ற மல்லிகை பூச்சரத்தை தங்கையின் தலையில் வைத்து விட்டு, அவளைப் பார்க்க… தேவதைப் போல ஜொலித்தாள்.


சுபி என்ன தான் சொல்லு, கவின் நல்ல கலாரசிகர் தான் போலும். உனக்கு என்று பார்த்து பார்த்து வாங்கியப் புடவை அவ்வளவு செமையா இருக்கு உனக்கு. வேண்டும் என்றால் பார் அவர் பார்வை இன்னைக்கு உன்னை விட்டு நகராது எனக் கூறி கிண்டலடிக்க…


போக்கா என சுபி வெட்கப்பட… பாருடா என் தங்கைக்கும் கூட வெட்கம் வருது என மேலும் கிண்டலடித்தவள்,


சரிடா வா அத்தை வேறு கூப்பிட்டு கொண்டே இருக்காங்க, நாம அங்க போகலாம்.


வெளியே வந்த இருவரையும் பார்த்த பத்மா, என் கண்ணே பட்டுடூம் போல… முதலில் சுத்திப் போடணும் என்றவள், முதலில் இரண்டு பேரும் இப்படி கிழக்கப் பார்த்து நில்லுங்க.


நான் எதுக்கு அத்தை… கவினையும்‌, சுபியையும் நிக்க வச்சு சுத்துங்க… இன்னைக்கு கோவிலில் எல்லோரோட கண்ணும் அவங்க மேல தான்… அவங்க ரெண்டு பேருக்கும் முதலில் சுத்துங்க அத்தை.


அதெல்லாம் எனக்கு தெரியும்… நாம திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் போது ஆர்த்தி எடுக்கிறோம்ல அதுலேயே திருஷ்டி கழிஞ்சிரும்‌. அந்த தடியன்களுக்கு அது போதும்… நீங்க வாங்க இங்கே என அழைத்து இருவருக்கும் திருஷ்டி சுத்தி விட்டு திரும்ப… கவினும், நவீனும், பத்மாவை முறைத்துக் கொண்டே, " மா… திஸ் இஸ் டூ மச் மா… மருமகள்கள் வந்ததும் நாங்க உனக்கு தடியன்களா போயிட்டமா" என ஒரே நேரத்தில் கத்த…


சரி சரி விடுங்கப்பா… நீங்கள் வந்ததை நான் கவனிக்கவில்லை. நீங்க ரெண்டு பேரும் தடியன்கள் கிடையாது போதுமா? ஆளை விடுங்க டா சாமி, எனக் கூறி விட்டு அந்த இடத்தை விட்டு பத்மா எஸ்கேப் ஆகிவிட…


கவினும், நவீனும் ஒருவருக்கொருவர் ஹை பை கொடுத்து கொண்டனர்.


நான் போய் காஃபி எடுத்துட்டு வரேன் என நீரஜா கிச்சனுக்கு சென்று விட … சுபி தனித்து விடப்பட்டாள்.


நவீனும் நீரஜா செல்லவும், அவனும் அவளை தொடர்ந்து கிச்சனுக்குள் சென்று விட்டான்.



இங்க தனித்து விடப்பட்ட சுபியின் அருகே சென்ற கவின், சுபியை பார்வையாலே விழுங்கினான். அவன் பார்வையை தாள முடியாமல் விழிகளை திருப்ப… அவனோ, அவள் முகத்தைப் பற்றி விழியோடு விழியை கலக்க விட்டவன், இந்த புடவையில் நீ எப்படி இருக்கிற தெரியுமா? ஏஞ்சல் மாதிரி இருக்கிற என காதருகில் கிசுகிசுக்க…


அவளோ பயத்துடன் சுற்றுமுற்றும் பார்க்க…


சுபி மா… நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி புரியுதா? அப்புறம் ஏன் இவ்வளவு நெர்வஸ்ஸா இருக்கிற…


அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான்… நான் நான் கிச்சனுக்கு போறேன்.


கவினோ வாய் விட்டு நகைக்க… எதற்கு சிரிக்கிறான் என சுபி அவனை கேள்வியாக பார்த்தாள்…


சிரிப்பை அடக்கிக் கொண்டு முகமெல்லாம் பளபளக்க, அதில்ல சுபி, நமக்கு ப்ரைவசி கொடுக்கத்தான் எல்லோரும் கிச்சனில் இருக்காங்க… நீ அங்க போனா, நானும் உன் பின்னாலே வருவேன் பரவாயில்லையா ‌… நாம் அங்கே போனோம் என்றால், அவங்க எல்லோரும் ஹாலுக்கு வந்திடுவாங்க,அதை நினைத்து தான் சிரித்தேன்.


சரி வா நான் உன்னை தொந்தரவு செய்யவில்லை. கோவிலுக்கு போகனும்ல அதனால சீக்கிரம் காஃபி எடுத்துட்டு வந்துடுவாங்க. நாம அந்த சோஃபாவில் உட்காரலாம் என்று அழைத்துச் சென்றான்.


**************************

கிச்சனில் நுழைந்த பத்மா, காஃபி ரெடியா என்று சமையல் செய்யும் அம்மாவை கேட்டுக் கொண்டிருக்க… நீரஜாவும், நவீனும் பின்னாடியே வந்து விட்டனர்.


ஏன் டா நவீன் கோவிலுக்கு கிளம்பாமல், குட்டி போட்ட பூனை மாதிரி எங்க பின்னாடியே சுத்திட்டு இருக்கிற…


'உங்களையா சுத்துறேன்… நான் என் பொண்டாட்டியத் தானே சுத்துறேன் மா' என மனதிற்குள் நினைத்துக் கொண்டு… வெளியேவோ, அம்மா… கல்யாண அலைச்சலில் டயர்டா இருப்பீங்க… ஹெல்ப் பண்ணலாம் என்று வந்தேன் மா, என நல்லப் பிள்ளையாக சொல்ல…


அவனைத் திரும்பிப் பார்த்த பத்மா, டேய் நான் உனக்கு அம்மா டா … எனக்கு தெரியும் உன் மைன்ட்ல இப்ப என்ன ஓடிட்டு இருக்கு என்றுக் கூட எனக்கு தெரியும்… அதனால என் காதுல பூ சுத்துறதை நிறுத்திட்டு, இப்ப உனக்கு என்ன வேண்டும் அதை முதலில் சொல்லு… கோவிலுக்கு வேறு நேரமாகிடுச்சு… நீ ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிற…


அதை தான் மா, சொல்ல வந்தேன். நான் கோவிலுக்கு வரவில்லை மா. இங்க கேட்டரிங்ல இருந்து ஆள் வருவாங்க… கார்டன்ல அரேஞ்ச் பண்ணணும்… ரூம் டெகரெட் பண்ண ஆள் வருவாங்க… நான் இருந்தால் தான் சரி வரும்மா…


ஓ அப்ப நீரஜாவும் இங்கேயே இருக்கட்டும்.


அத்தை… அத்தை … நான் உங்களோட கோவிலுக்கு வரேன்… சுபி, தனியாக இருப்பா அத்தை…


அதெல்லாம் கவின் பார்த்துப்பான்… நீ இங்க, நவீனுக்கு உதவியாக இரு என முடித்து விட்டார்.


அதுக்கப்புறம் என்ன… நல்ல நேரத்தில் கவினையும், சுபியையும் கோவிலுக்கு அழைத்து சென்றுவிட்டார்.


நவீன், எல்லோரும் சென்றவுடன் எதுவும் பேசாமல் அவன் பாட்டுக்கு ஆட்களை வைத்து, வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.

நீரஜாவையும் கீழே இருக்குமாறு கூறிவிட்டான். அவன் மட்டும் மேலேயும் கீழேயுமாக ரொம்ப பொறுப்பாக வேலை பார்த்தான்.


எல்லா வேலைகளையும் முடித்து ஆட்களுக்கு பணம் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பி விட்டு… உதவிக்கு வந்த மேனேஜரையும் அனுப்பி விட்டு உள்ளே வந்த நவீன், அப்பாடா என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.


நவீன் ரொம்ப டயர்டா இருக்கீங்க... ஜூஸ் கொண்டு வரவா என்று நீரஜா கேட்க…


எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று கோபத்தோடு நவீன் கூறினான்.


அவனின் கோபத்தை உணர்ந்து… சாரி நவீன். சுபி அன்கன்பர்டபிள்ளா ஃபீல் பண்ணுவா... அதுக்காகத்தான் நானும் போகலாம் என்று நினைத்தேன் நவீன்.


அப்பொழுதும் எதுவும் பேசாமல் நவீன் முறைத்துக் கொண்டே இருக்க…


எதை சொன்னால் நவீனின் கோபம், குறையும் என்பதை நன்கறிந்த நீரஜா, அடுத்து அந்த நான்கெழுத்து அஸ்திரத்தை பயன்படுத்தினாள்.

அத்தான்… சாரித்தான் என்க…


இவ்வளவு நேரம் கோபத்திலிருந்த நவீனின் முகம் மலர்ந்தது.


அப்பாடா கோபம் போச்சா அத்தான் என்றவள், நவீனின் தோளில் சாய்ந்தாள்.


அவள் தலையை வருடிக் கொண்டே… நீரு இங்கப் பாருடா… சுபி இனி மேல் கவின் பொறுப்பு. அவன் பார்த்துப்பான். நீ அவளை ஃப்ரியா விடு… நீ பார்த்துக்கிறேன் என்று அவளை பொத்தி பொத்தி வச்சா அவ, அவக் கூட்டிலிருந்து வெளிவரமாட்டா… இன்னும் ஒடுங்கித் தான் போவாள். என்ன புரியுதா டா என மென்மையாகக் கேட்க…


ம்… சரி அத்தான் என்றவள், கண்களை மூட இவள் திருமண நாளன்று நடந்த நிகழ்வுகள் கண் முன்னே வலம் வர தொடங்கியது.


*********************************


தீப்திக் கூறியதைக் கேட்டு கவினும், சுபியும் மட்டும் அதிரவில்லை. எல்லோருக்குமே சற்று அதிர்ச்சி தான்.


பத்மாவும், சுகுமாரனும் தீப்தி சொல்வது மாதிரி கவினுக்கே திருமணம் செய்யலாமா என ஒருவரை ஒருவர் பார்வையால் வினவ…


அவர்களின் யோசனை முகத்தைப் பார்த்து நீரஜா பயந்து, சுபியின் கைகளை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.


அப்போது தான் அவளும், சுபியின் நடுக்கத்தை உணர்ந்தாள். திரும்பி தன் தங்கையை பார்க்க கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டு இருப்பது புரிந்தது.


'இவள் ஏன் இப்படி இருக்கிறாள்' என யோசனையுடன் பார்க்க…

நீரஜாவோ மனதிற்குள் ' நமக்கு தான் பயம்… தீப்தியும் திருமணமாகி இந்த வீட்டிற்கு வாழ வந்தால்... ஒரே வீட்டில் எப்படி இருப்பது என்று... இன்னும் நவீனுக்கு என்னைப் பிடிக்குமா? என்பதே தெரியவில்லை அது வேறு பயம்‌' இவளுக்கு என்ன வந்தது என்று சுபியையேப் பார்த்துக் கொண்டிருக்க…


சுபியோ அதையெல்லாம் எங்கே கவனித்தாள். அவள் கவனமோ, பெரியவர்களின் பார்வை பரிமாற்றத்தைப் பார்த்து… எங்கே அவர்கள் தீப்தியின் விருப்பத்திற்கு சம்மதம் சொல்லி விடுவார்களோ என பயந்தவள், கவினைப்பார்க்க அவன் அமைதியாக இருந்தான்.


அது இன்னும் அவளுக்கு கலக்கத்தை அளித்தது. அன்று கவின் அத்தான் காதல் சொன்னாரா? இல்லையா? என்ற குழப்பத்திலே நானே இரண்டு நாளா இருக்கேன். திடீர் என்று ஊருக்கு போயிட்டார். ஒரு ஃபோன் காலும் வரவில்லை. நானே பெரிய குழப்பத்தில் இருக்கும் போது இது என்ன புது தலைவலி, என்று கவினைப் பார்க்க..


அவனின் அமைதி இவள் இதயத்தில் ஒரு பயப்பந்தை உருவாக்கியது.


கவினோ,தன் தாய். தந்தை தன் அனுமதியின்றி எதையும் செய்ய மாட்டார்கள் என்ற உறுதியில் அமைதியாக இருந்தான்.


அதை பதட்டத்தில் இருந்த சுபி உணராது, சூழ்நிலையை இன்னும் மோசமாக்கினாள்‌.


தீப்தி, சுகுமாரனிடம் பேசும் போது அவர்கள் பேச்சில் குறிக்கிட்டாள்.


" தீப்தி… முட்டாள் மாதிரி உளறாதே" என சுபிக் கூற…


அதுவரை தன் மகளின் வாழ்க்கையை நினைத்து கவலையில் அழுதுக் கொண்டிருந்த சுகந்தி, ஆக்ரோஷமாக… சுபியிடம்," யாருடி… முட்டாள் என் பொண்ணா… உங்க எல்லோரையும் நம்பி, இப்படி நிக்குறாளே, அப்படி தான் பேசுவீங்க… " எனக் கண்ணை கசக்க‌…


கவின் இடை புகுந்தான். "அத்தை முதலில் அழுகையை நிறுத்துங்க… கொஞ்சம் பொறுமையாக இருங்க … தீப்தி எனது பொறுப்பு" என்றவன் சுபியிடம், திரும்பி கொஞ்சம் வாயை மூடுறியா என கடுமையாகக் கூறினான்.


அவனது கடுமையில் ஒரு நிமிடம் விக்கித்து நின்றவள். பிறகு' நான் ஏன் அமைதியாக இருக்கணும். இப்போ நான் அமைதியாக இருந்தால் பாதிக்கப்படுவது என்னோட வாழ்க்கை தான். அதுக்கு நான் தான் போராடணும் .என மனதிற்குள் நினைத்தவள்'


கவினிடம், "நான் ஏன் வாயை மூடணும்… முதலில் அவள லூசு மாதிரி எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லுங்க " என தீப்தியை பார்த்தவாறேக் கூற…


தீப்தியோ… சுபியின் கோபத்தில் மிரண்டு சுகுமாரனின் தோளில் மாமா எனக் கதறி முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ…


சுகுமாரனுக்கோ, என்ன செய்வதென்று புரியவில்லை. தீப்தியின் தலையை ஆறுதலாக வருடிக் கொண்டே, நிலைமையை எவ்வாறு கையாள்வது என புரியாமல் திகைத்தார்.



'இந்த சுபிப் பொண்ணு கொஞ்ச நேரம் வாயை மூடினால் நல்லா இருக்கும். நான் ஏதாவது சொன்னால் பத்மா மனசு வருத்தப்படும். வீட்டுக்கு வாழ வந்த மருமக மனசும் சங்கடப்படும்.

எதுவும் பேசாமல் இருந்தால்… இந்த வீட்டில் பிறந்த பொண்ணோட மனசு சங்கடப்படும்‌‌..‌. என்ன செய்வது என்று தெரியாமல் மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டார் '.


அதுவரை கவினின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்த, சுகந்தி மீண்டும் சிலிர்த்துக் கொண்டு… என் பொண்ணை பேச வேண்டாம் என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கு என்று சுபியிடம் எகிற …


பெரியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் தவித்தனர்.


சுந்தரம், சுகந்தியை தடுக்க முயன்று பார்த்து விட்டு முடியாமல் அமைதியாக நின்று விட்டார். நவீனோ தான் ஏன் இந்த முடிவு எடுத்தோம் என்று யாரிடமும் கூற முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்க… நீரஜாவோ என்ன நடக்கிறது என்றே புரியாமல் பயத்திலிருக்க…

பத்மா, பார்வதி, ஈஸ்வரன் மூவரும் சுபியை தடுக்க முயல… அவளோ வெளியே தனியாக நீர‌ஜா அழுவதைப் பார்த்து ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்ததால் அவர்களின் பேச்சுக்கு கட்டுப்படாமல் மேலும் மேலும் பேசி பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கினாள்.


சுகந்தியிடம், "நான் அவ நல்லதுக்கு தான் சொல்லுறேன். இது ஒன்னும் சினிமாவோ, இல்லை நாடகமோ கிடையாது... அண்ணன் இல்லை என்றால் தம்பிய கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரே வீட்டில் வாழ்வதற்கு… அது கற்பனை உலகம்… இது அவளோட வாழ்க்கை… ப்ராடிக்கலா யோசிக்கணும். ஒரே வீட்டில் எப்படி நாளைக்கு நவீன்அத்தானையும், நீரஜாவையும் எப்படி எதிர்கொள்வாள் சித்தி. அவளுக்கு தான் கஷ்டம் ." என சுபிக் கூற…


தெரியும்டி தீப்தி மேல உனக்கு இருக்குற கரிசனம். ரொம்ப தான் இருக்கு உனக்கு அவ மேல அக்கறை... தப்பு செஞ்ச உங்க அக்காவே இந்த வீட்டில வாழும் போது, என் பொண்ணுக்கு அப்படி என்ன கஷ்டம் வரப் போகுது. அப்படி எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்‌.


நான் பார்க்க வளர்ந்தப்பிள்ளை இவ்வளவு வாய்ப் பேசுற… கொஞ்சமாவது மரியாதை தெரியுதா… வளர்ப்பு சரியாக இருந்த தானே… இல்லாவிட்டால் நீ இப்படி பெரியவங்க இருக்குற சபையில மட்டு மரியாதை இல்லாமல் பேசுவியா… இல்லை உங்க அக்காவும் தான் இப்படி வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்குவாளா என்றாள் ...


தங்களுடைய பெற்றோரின் வளர்ப்பு பற்றி பேசவும் சுபி ஒரு நிமிடம் அமைதியாகி நீரஜாவை குற்றம் சாட்டும் பார்வைப் பார்க்க…


நீரஜா தங்கையின் பார்வையை பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.


****************************

ஏய் நீரு … என்று நவீன் தன் தோளில் சாய்ந்திருந்த நீரஜாவை உலுக்க…


ஹாங் என மலங்க மலங்க விழிக்க…


ஏன் டா… ரொம்ப வேலையா… தூக்கம் வருதா… ரொம்ப நேரம் ஆச்சே எதுவும் வேலை இருக்கா… கோவிலுக்கு போனவர்கள் எல்லோரும் வந்து விடுவார்கள் அதான் எழுப்பினேன் மா.


நான் தூங்கல நவீன். பழைய ஞாபகம் வந்துடுச்சு. அதைத்தான் யோசிட்டு இருந்தேன்.


என்னம்மா யோசனை?


இல்லை நான் உங்களை காதலிச்சதை தவிர , வேற ஏதாவது தப்பு செய்தேனா இல்லையே… என் காதலைக் கூட உங்கக் கிட்ட சொல்லவில்லை. அவ்வளவு பயம், அதான் நான் உங்கக் கிட்ட சொல்லவே இல்லை.


ஆனால் நாம ரெண்டு பேரும் வேற ஒரு சூழ்நிலையால் வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துக்க வேண்டியதாயிற்று. நாம ரெண்டு பேர் தப்பு செய்திருந்தாலும் ,அன்னைக்கு எங்க அம்மா, அப்பாவோட வளர்ப்பு சரியில்லை என்று தானே பேச்சு வந்ததது. அதைத் தான் நினைத்துப் பார்த்தேன்.


ஏன் நவீன்… சுகந்தி சித்தியும் ஒரு பெண் தானே… இருவர் செய்த தவறுக்கு ஒருவரை மட்டும், அதிலும் பெண்ணை மட்டும் பொறுப்பாக்குவது எப்படி சரியாகும்.


அன்று அவர்கள் மட்டும் எங்க பெத்தவங்களோட வளர்ப்பு சரியில்லை என்று சொல்லாமல் இருந்திருந்தால், சுபிக்கும் அவ்வளவு கோபம் வந்திருக்காது. சுகந்தி சித்தியை மரியாதை இல்லாமல் பேசியிருக்க மாட்டாள். கவினும் கோபத்தில் சுபியை வெளியே போக சொல்லிருக்கமாட்டார். அதற்குப் பிறகு சுபிக்கு எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது இல்லையா நவீன் எனக் கூறி பெருமூச்சு விட்டாள்.


பழசெல்லாம் எதுக்கு இப்ப நினைச்சுப் பார்க்கிற...

எது நடந்தாலும் அது நன்மைக்கே… என்று நினைச்சுக்கோ… சுபியே அன்னைக்கு நாம வெளியே போனதால் தான் இவ்வளவு பிரச்சினை என்று ஒரு பர்சென்ட் கூட நினைக்க மாட்டாள்.

அவளால் ஒரு குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்று சந்தோஷம் தான் படுவாள்.


அவளோட கோபம் எல்லாம் நாம் அவளிடம் சொல்லாமல் திருமணம் செய்ததது தான். ஆனால் அதற்கு காரணம் இருக்கு என்று அவளிடம் என்னால் சொல்ல முடியாது நீருமா… ஏன் என்று உனக்கு தெரியும் தானே இன்னொருவருடைய ரகசியமும் இதில் அடங்கியிருக்கு. அதை நாம் சொல்வது சரியாகதுடா…


சரி நீ போய் எதாவது வேலையைப் பாரு… சும்மா இருப்பதால் தான் தேவையில்லாதவற்றை யோசிக்கிற…


எல்லாம் உங்களால தான் … நீங்களும் இப்போ சும்மா தானே இருக்கிறீங்க… என்னமோ, எல்லா வேலையும் நீங்களே பார்க்குற மாதிரி கோவிலுக்கு வரமாட்டேன், வேலை இருக்கு என்று சொல்லிட்டீங்க…

ஆனால் இங்கே எல்லா வேலையும் மேனேஜர் தான பார்த்தாரு. நீங்க ஏதோ ஒரு ரெண்டு தடவை மாடி ஏறி இறங்கி என்னமோ செய்தீங்க…

என்னையும் மாடிக்கு வரக் கூடாது என்று சொல்லிட்டீங்க.


அதையும் மேனேஜரையே பார்க்க சொல்லியிருந்தால் நாமளும் கோவிலுக்கு போயிருக்கலாம். ஜாலியா எல்லோரோடையும் பேசிட்டு இருந்திருக்கலாம். நானும் தேவையில்லாததை நினைத்துப் பார்த்திருக்க மாட்டேன் என பெருமூச்சு விட...


அது எப்படி டீ… நீ என்ன தப்பு செய்தாலும் கடைசியாக என்னால தான் அப்படி ஆச்சு என்று முடிக்கிற… நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நான் கோவிலுக்கு வரவில்லை என்று சொன்னேனே…


அப்படி என்ன முக்கியமான வேலை… என் கிட்ட சொல்லமாட்டீங்களா…


உன் கிட்ட சொல்லாமாலா… இது நமக்கு நாமே திட்டம். இதை நானே செய்யதால் தான் சரியா இருக்கும்.


அது என்னங்க நமக்கு நாமே திட்டம்?


நீரு மா அதெல்லாம் சொன்னால் உனக்கு புரியாது. பார்த்தால் தான் புரியும்.


அப்போ காட்டுங்க நவீன்.


ஆஹான்… அதெல்லாம் இப்போ காட்ட முடியாது. இரவு வரை காத்திருங்க மை டியர் மேடம்…


தொடரும்…..
 
Top