Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்- 18

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

அத்தியாயம் - 18

809


நீரஜா, காலையில் அம்மா வீட்டிற்கு வந்தவள்… ஒருவரையும் காணவில்லையே எங்கே போயிருப்பார்கள் என யோசனையுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள், அங்கு சமைத்துக் கொண்டிருந்த அன்னம்மாவிடம், " அன்னம்மா கா, எங்க வீட்டில யாரையும் காணோம்?"


வா பாப்பா, ஐயா கடைக்குப் போய்ட்டாங்க, அம்மா, சின்ன பாப்பா ரூம்ல இருக்காங்க… நீ சாப்பிடுறீயா பாப்பா…


இல்லை கா… நான் சாப்பிட்டு தான் வரேன்‌. லஞ்ச் இங்க தான் சாப்பிடுவேன் . நான் மாடிக்கு போய் பார்க்கிறேன் என்றவள் அடுத்த நிமிடம் சுபியின் அறையில் தான் நின்றாள்.


என்ன பிரச்சனையோ? என்று அவள் பதட்டத்துடன் செல்ல…


அங்கோ‍, சுபி பார்வதியை பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள்.


மா… ப்ளீஸ் மா… எனக்கு இதெல்லாம் வேணும்…


சுபி ஏன்டி என்னைப் படுத்துற… உங்க அத்தை எதுவும் நினைக்கலைனாலும், சுகந்தி எதாவது சொல்லுவா…


எனனம்மா, காலையிலே இரண்டு பேரும் இப்படி வாக்குவாதம் செய்யுறீங்க, என்ன ப்ராப்ளம் என கேட்டப்படியே நுழைந்தாள் நீரஜா.


வாடா நீரு, நீயே கேளு உன் தங்கச்சிக் கிட்ட… நான் என்ன சொன்னாலும் கேட்கிறதே கிடையாது. காலையிலே ஆரம்பிச்சுட்டா இவளோட பிடிவாதத்தை … எவ்வளவு வேலை இருக்குது தெரியுமா… அதெல்லாம் விட்டுட்டு இவ பேக்கிங் செய்ய ஹெல்ப் கேட்டா என்று வந்தால் நான் சொல்வதையே கேட்க மாட்டேங்குறா…


நீரஜா சுபியிடம், "என்னடி உன் பிரச்சனை அம்மாவை ஏன் படுத்துற." என வினவ?


அவளோ ஒன்றும் சொல்லாமல் அம்மாவையே பரிதாபமாக பார்க்க…


அம்மா நீயாவது சொல்லுமா? என நீரஜா கேட்க…


அது ஒன்னும் இல்லைடி கல்யாணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு முதல் தடவை போறப்ப எடுத்துட்டு போறதுக்கு என்று பதினாறு பட்டு புடவை நியு மாடலா தேடித்தேடி நானும் உங்க அப்பாவும் வாங்கி வச்சா… இவ வேற இரண்டு புடவையை தூக்கி வச்சிக்கிட்டு இதையும் வைங்கம்மா என்று கேட்டுக்கிட்டு இருக்கிறா?


ஏன் மா அவ கேட்குற புடவையை குடுக்க வேண்டியது தானே…


அடியே இதை பார்த்துட்டு சொல்லு… ஒன்னு மாப்பிள்ளை வாங்கிக் கொடுத்தது. இன்னொன்னு என்னோட புடவை… காணும் என்று அன்னைக்கு நாம சொல்லிட்டு இருந்தோமே அந்த புடவை… இது ரெண்டுமே உங்க சுகந்தி சித்திக்கு நல்லா தெரியும். இதை வச்சா அவ, ' என்னக்கா பணத்தை மிச்சம் செய்து என்ன பண்ண போறீங்க … இவங்களுக்கு தானே எல்லாம் அதை இப்போதே செஞ்சா என்ன கா… என கிண்டல் செய் வா' எனக் கூற…


நீரஜா பார்வதியின் பேச்சைக் கேட்டாலும், பார்வையை சுபியின் மீதே வைத்திருக்க… புடவையை பற்றி பேசும் போது சுபியின் முகத்தில் வெட்கப் புன்னகையைப் பார்த்து இது அவளுக்கு ஏதோ சம்திங் ஸ்பெஷல் என்று புரிந்துக் கொண்டாள்.


நீரஜா பேச வருவதற்குள், சுபி அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று நினைத்து வாழ்ந்தால் "கழுதையை சுமந்த அப்பா மகன் கதை " மாதிரி தான் வாழ்க்கை இருக்கும். நமக்கு இருப்பதே ஒரு வாழ்க்கை தான்… அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தான் பார்ப்பாமே அம்மா எனக் கூறி கண்ணடிக்க…


நீரஜா புரிந்துக் கொண்டாள்,தன் தங்கை ஜாலி மூடில் இருப்பதை… புரிந்துக் கொண்டவள் முகத்திலும் இப்பொழுது உற்சாகம் தொற்றிக் கொண்டது.


மா… விடுங்க மா… சுபி சொல்றதும் கரெக்ட் தான் மா… அவ ஆசைப்படுறதையே எடுத்து வைப்போம். நீங்க கீழே போய் வேலையை பாருங்க… சுபிக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன் மா.


சரி நீங்க எடுத்து வைங்க… நான் கீழே போறேன்.

ஆமா நீ என்ன இந்த நேரத்தில வந்திருக்க…


நான் இங்க தான்மா த்ரீ டேஸ் ஸ்டே . அத்தைக்கிட்ட கேட்டேன் … சரி என்று சொல்லிட்டாங்க மா…


சரிடா… வேலையை முடித்து விட்டு கீழே வாங்க… உனக்கு பிடிச்சதை செய்ய சொல்லுறேன், என்றுக் கூறி ஒரு வழியாக பார்வதி கீழே சென்று விட்டார்.


ஏய் சுபி இங்க என்ன நடக்குது… நீ நேத்து ரொம்ப அப்செட்டா இருந்த… அதை சொல்லி தான் அத்தைக் கிட்ட சொல்லி இங்க வருவதற்கு பர்மிஷன் வாங்கினா, நீ என்னவென்றால் விட்டால் இன்னைக்கே கிளம்பி வந்துடுவே போல..‌. மேடம் அவ்வளவு தயாரா இருக்கீங்க என கிண்டலடிக்க…


அய்யோ அக்கா நேற்று கொஞ்சம் டென்ஷன், அத விடுக்கா… எனக்கு இப்போ அப்படியே டான்ஸ் ஆடனும் போல இருக்குகா …


சுபி மா… கல்யாண பயத்துல இருப்ப என்று பார்த்தால் நீ, ஜாலியாக இருக்கிற? கொஞ்சம் கூட அம்மா, அப்பாவை விட்டு பிரியப் போறோமே என்றுக் கவலை இருக்கா? இல்லை புது இடத்திற்கு போகப்போறேமே என்று எதாவது கலக்கம் இருக்கா?


அக்கா உனக்கே இது ஓவராத் தெரியல… அது என்னை அடுத்த எடமா… அது நமக்கு இன்னொரு வீடு மாதிரி தான் கா … அதனால் எனக்கு எந்தவித டென்ஷனும் இல்லை. இப்போ ஓகேவா… சரி இப்ப நான் சொல்றதை கேளுக்கா… என்னோட ஃபீலிங்ஸ்க்கு ஏத்த மாதிரி ஒரு சாங் இருக்கு. இப்போ அதை நான் பிளே பண்ணுறேன் எனக் கூறி செல்லை எடுத்து யூடியூபில் தேடி பாடலை ஒலிக்க விட்டாள்.கா, லெட்ஸ் டேன்ஸ் நவ்

எனக் கேட்டப்படி கையை நீட்ட…


ஐயோ! நான் வரல… நீ ஆடு சுபி… இதெல்லாம் அக்கா எடுத்து வைக்கிறேன், என அங்கிருந்த புடவைகளை காட்ட…


ப்ளீஸ் கா… எனக்கு கம்பெனி கொடு… சின்ன வயதில் எல்லாம் எப்படி ஆடுவோம்… நவீன் மாமா கூட ஒரே பாட்டைப் போட்டு டெய்லி ஆடச் சொல்லுமே? நாமக் கூட ஆடுவோமே ஞாபகம் இல்லையா கா?


லூசு மாதிரி உளறாத… எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் ஞாபகம் இல்லையே


என்னக்கா … என குழம்பியபடி சுபி இழுக்க ‌‌.‌..


சரி சரி இப்ப வா நான் ஆடறேன். அதுக்கேன் எதை எதையோ உளருற என பேச்சை மாற்றினாள். எங்கே தங்கை பழசை நினைவு வைத்து தன்னை கிண்டல் செய்வாளோ என்று பயந்து அவளை யோசிக்க விடாமல், இவள் ஆடுவதற்கு ஒத்துக்கொண்டாள் …


சரி வாக்கா ஆடலாம்…


எங்கடி ஆடுறது?


இங்க தான் கா எனக் கூறியவாறே அவளது அறையைப் பார்த்து… சுபி தன் நெற்றியில் அடித்துக் கொண்டு சாரிக்கா என்றாள். சீக்கிரம் பேக் பண்ணிடலாம் என்று தான் நினைச்சேன். பட் முடியவில்லை என்றாள்.


நீரஜாவோ, சுபியை முறைத்துக் கொண்டே இருத்தாள். பின்னே சுபி அறை முழுவதும் ஏதேதோ பொருட்களை பரவி வைத்துக் கொண்டு ஆட வா என்றால் என்ன தான் செய்வது…


அக்கா‌… கீழே போய் ஆடலாமா?


உதை வாங்கப் போற… கீழே யாரவது வருவாங்க…


யாருக்கா வரப் போறா? அப்பா கடைக்கு போயாச்சு. அம்மாவும், அன்னம்மாக்காவும் தான் இருப்பாங்க… ப்ளீஸ் கா…


ஐயோ! அதெல்லாம் முடியாது. இல்லை என்றால் வா, உன் ரூமை க்ளீன் பண்ணி விட்டு ஆடுவோம் என…


அக்கா… அதுக்குள்ள டான்ஸ் ஆடுற மூடே போயிடும். சரி வாக்கா வெளியே ஹாலில் ஆடுவோம்.


நீரஜா ஏதோ சொல்ல வர… மூச் எதுவும் பேசக் கூடாது எனக் கூறி அவள் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தாள் சுபி.


இவர்கள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்கும் போதே பாடல் முடிந்திருக்க ,சுபி அந்தப் பாடலை மீண்டும் ஒலிக்க விட்டாள்.


" திருமண மலர்கள் தருவாயா

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே

தினம் ஒரு கனியே தருவாயா

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே

கனிவாய் கனிவாய் மரமே

நதியும் கரையும் அருகே

நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை

ஞாயிறுக்கும் திங்களுக்கு தூரம் இல்லை"


என சுபி உற்சாகமாக பாடிக் கொண்டே ஆட... நீரஜா,அவளுக்கு கம்பெனி கொடுத்தாள். சுபி ஒவ்வொரு வரியையும் லயித்துப் பாடினாள்.இவளது சந்தோஷ ஆர்ப்பாட்டத்தை நீரஜா ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் ரசிக்கவில்லை. கவினும் சேர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான்.


பத்மா தான் கவினை இந்த வீட்டிற்கு அனுப்பியிருந்தார். கல்யாண ப்ளவுசை தைக்க கொடுக்க எப்ப போகலாம் என்று கேட்பதற்காக…

காலையிலே சுகந்தி ஃபோன் பண்ணி தீப்திய அனுப்பி வைக்கிறேன் அண்ணி… ப்ளவுஸ் தைக்க கொடுத்து விட்டு வரச் சொல்லுங்க என்றாள்.


சரி என்று பத்மா ஃபோன் செய்ய… மூவரின் எண்களும் ரீச் ஆகவில்லை. பிறகு தான் கவினை அனுப்பி நேரிலே கேட்டு வரச் சொல்ல… கவினும் சரி மா என்றும் கூறி இங்கு வந்தான்.


வந்தவன் கீழே யாரும் இல்லாததால் கிச்சனுக்குள் நுழைய… பார்வதி தான் வந்தவனை விசாரித்து, மாப்பிள்ளை உபசரனையெல்லாம் செய்து… மாடியில அவ ரூம்ல தான் அக்காவும், தங்கச்சியும் இருக்காங்க‌… நீங்க போய் பாருங்க மாப்பிள்ளை என அனுப்பி வைத்தார்.


இவன் வந்துப் பார்த்தால் அப்பொழுதுதான் ரூமிலிருந்து வெளியே வந்தனர். வந்தவர்கள் இவனை கவனிக்காமல் இருவரும் ஆட ஆரம்பிக்க…


இவனும் சரி தான் என்று மாடிப்படி கைப்பிடியில் சாய்ந்து கொண்டு பார்க்க… அவர்களோ இன்னும் அவனைப் பார்க்கவில்லை.


"பாவாடை அவிழும் வயதில் கைறு

கட்டிவிட்டார் எவனோ

தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்."


என்று பாடிக்கொண்டே நிமிர்ந்த சுபி அங்கு நின்றிருந்த கவினைப் பார்த்து அப்படியே நின்று நின்றுவிட்டாள். நீரஜாவோ ஐயோ! என முகத்தை மூடியவாறே கீழே ஓடி விட…


கவினோ நிதானமான நடையுடன் சுபியின் அருகில் சென்றவன், அப்படியே நின்றிருந்த சுபியை தன் கை வளைவில் கொண்டு வந்து புருவத்தை உயர்த்தி … சுபி செல்லம் ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்க … மெல்ல தலை அசைத்த சுபி தனது குழந்தைப் பருவத்திற்கு சென்றுவிட்டாள்.


***********************


சிறு வயதில் எல்லாம் சுபியும்,நீரஜாவும் இங்கே இருப்பதைவிட அத்தை வீட்டில் தான் அதிகம் இருப்பவர்கள்.


நால்வரும் சேர்ந்து விளையாடுவார்கள். லீவு விட்டால் ஒரே கொண்டாட்டம் தான்.கேரம்போர்டு, பல்லாங்குழி, தாயம் என அனைத்து விளையாட்டுகளும் களைகட்டும்.


கவின் சுபிக்கு எல்லாவற்றிலும் விட்டுக்கொடுத்து விளையாடுவான். பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வான். அவள் சிறிது கண் கலங்கினாலும் அப்படி சமாதானம் செய்வான். அவளை வம்பு இழுத்தவர்களை உண்டு இல்லை என்று செய்திடுவான்.


சுபியும் பள்ளியில் என்ன நடந்தாலும், கவினிடம் தான் வந்து முதலில் சொல்லுவாள். அவள் இந்த வீட்டிற்கும், அந்த வீட்டிற்கும் நடப்பதைப் பார்த்து… ஈஸ்வரன் தான் இரண்டு வீட்டிற்கும் இடையில் தோட்டத்து காம்பவுண்ட் சுவரில் சிறிய கதவு ஒன்றை வைத்து விட்டார். பிறகென்ன சுபிக்கு இன்னமும் வசதியாகி போயிற்று. 'ஆனால் இப்பொழுதெல்லாம் அந்த கதவு பூட்டியே இருக்கிறது.'


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கவின் இவளை விட்டு விலகினான்.எதற்காக எப்பொழுதிலிருந்து விலகினான் என்பதே புரியாமல் சுபி தான் கொஞ்சம் நாள் வருத்தத்தில் இருந்தாள்.


அதற்கு பிறகு கவின் எதாவது அவசியம் என்றால் தான் பேசுவான் . சுபியும் அதற்கு பிறகு அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். நவீன உடன் சேர்ந்து தான் கொட்டம் அடித்துக் கொண்டிருப்பாள். மனதிலோ, கவினின் மேல் வைத்த நேசம் நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே சென்றது.


அதெல்லாம் ஞாபகம் வந்ததும் … திரும்பவும் கோபம் அவளிடம் வந்துவிட்டது. கவினின் கைப்பிடியில் இருந்து நகர்ந்து கொண்டே எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு அத்தான். என் மேல் பிரியமாக இருந்தது முதல், என்னை விட்டு விலகிப் போனது வரை நன்றாக ஞாபகம் இருக்கு.


அது வந்து என கவின் ஏதோ கூற வர…


பழைய விஷயம் பேச வேண்டாம் அத்தான் என வழக்கம் போலக் கூறி அவனை பேச விடாமல் செய்தவள், பிறகு என்ன விஷயமா வந்தீங்க? சும்மா காரணம் இல்லாமல் வரமாட்டீங்களே?


'கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன பேச விட மாட்டேங்குறியேடி… இனி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பேசவா விட போற… கவின் உன் நிலைமை இனி அவ்வளவு தான் என மனதிற்குள் புலம்பிக் கொண்டே' அது ஒண்ணும் இல்ல சுபி மா… தீப்தி மதியம் வரேன் என்று சொன்னா… ப்ளவுஸ் டிசைனிங்கு கொடுக்க போகனுமாமே… நான் வந்து அழைச்சிட்டு போறேன் . ரெடியாக இரு என்று கூறி விட்டு … புறப்பட்டு விட்டான் கவின்.


***********************

கீழே வந்த நீரஜா … தன் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


ஏன் டா வந்துட்ட ? நீயும் அவர்களோடு பேசிக் கொண்டு இருப்பது தானே…


அது மா… நானும்‍, சுபியும் டான்ஸ் ஆடிட்டு இருந்தோமா, அப்போ கவின் வந்துட்டாங்க…

அதான் நான் ஓடி வந்துட்டேன் மா.


அதுக்காக இப்படி தான் அவர்களை இப்படி தனியாக விட்டுவிட்டு வருவாயா, கவின் யாரு உங்களோட வளர்ந்தவன் தானே சரி விடு… ஆமா உன்னை எப்படி உங்க அத்தை விட்டா?


நான் தான் மா,சுபி கொஞ்சம் குழப்பத்துல இருக்கிறா… நான் இருந்தா கொஞ்சம் ஃபிரியாக இருப்பா என்று சொன்னேன்.அத்தையும் சரி கல்யாணத்திற்கு முதல் நாள் வந்தால் போதும் என்று சொன்னாங்க… அதுவும் இல்லாமல் நேற்று கவின் நேரத்திற்கு வரமுடியாததிற்கான காரணத்தையும் சொல்லி விட்டு வரச் சொன்னாங்க என்று நேற்று நடந்தவற்றைக் கூற…


எனக்கு தெரியாதா… மாப்பிள்ளை வரவில்லை என்றால் ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும் என்று நல்லா தெரியும் டா… சுபி தான் மூட் அவுட்டா இருந்தா… அதான் நானும் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன். இது ஒரு விஷயம் என்று காரணம் சொல்வதற்கு என்று நீ வந்தீயா...அவ எப்போ சந்தோஷமாக இருப்பா… எப்போ டென்ஷனா இருப்பா என்றே எனக்கே தெரியாது. கல்யாண வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக அவ இருந்தா போதும். கடவுள் தான் அவளுக்கு துணையாக இருக்கனும்.


சரி விடு மா… நல்லபடியாக திருமணம் நடக்கும் என நீரஜாக் கூற… தேவதைகளும் ததாஸ்து எனக் கூறி விடவே. திருமணம் எந்த தடங்களும் இல்லாமல் நடந்தேறியது. ஆனால் அதற்கு பிறகு சுபியின் மனநிலை????


*****************************


புதன் கிழமையின் ஆரம்பம், மூன்று குடும்பங்களுக்கும் அழகாகவே விடிந்தது. கோவிலில் திருமணம் என்பதால், நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர்.


பார்வதியின் வீட்டில் அவளுக்கு தான் கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை… ஒரே பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள்.


காலையில் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று ஈஸ்வரன் கூறியிருந்தார்.

இங்கிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும். டிராஃபிக் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் நேரத்தோடு கிளம்பவேண்டும் என்று கூறியிருந்தார்.


ஆம் வடபழனி முருகன் கோயிலில் தான் இவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் ரிஜிஸ்டரும் பண்ணிக் கொள்ளலாம் என்பதால் அந்த கோவிலை தேர்வு செய்திருந்தனர்.


ஈஸ்வரனும்,சுகுமாரனும் அவரவர் உறவினர்களுக்கு என தனித் தனியாக ரூம் போட்டிருந்தனர் . அதனால் இருவர் வீட்டிலும் வேலைகள் என்று பெரிதாக இல்லை ‌.


பார்வதியோட அண்ணன் குடும்பம் ,மற்றும் தங்கை குடும்பத்தை மட்டும் வீட்டிற்கு வர சொல்லி இருந்தாள். மற்றவர்கள் எல்லோரும் ரூமில் தங்கியிருந்தனர். அவர்களை கிளப்புவதற்கு தான் பார்வதி பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தாள்.


சுபிஅவளது அறையில் பியூட்டிஷன் உதவியோடு தயாராகிக் கொண்டிருக்க…


அங்கு வந்த பார்வதியோ, சுபியைப் பார்த்து விட்டு என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு. அவ்வளவு அழகாக இருக்கேடா இந்த புடவையில‌… மாப்பிள்ளை செலக்ஷன் சூப்பர் டா…


மா… திஸ் இஸ் டூ மச்… நான் அழகாக இல்லையா… உங்க மாப்பிள்ளை எடுத்துக் கொடுத்த சேலையால் தான் அழகாக இருக்கிறேனா என கேட்ட படியே முறைக்க…


அதெல்லாம் ஒன்னும் இல்லை டா செல்லம் நீ எப்பவும் அழகு தான் எனக் கூறி நெட்டி முறித்தவள். அங்கு நின்று கொண்டிருந்த பியூட்டிஷனிடம் மேக்கப் முடிஞ்சிருச்சா என வினவ…


முடிஞ்சிருச்சு மேம் என்றாள்.


ஓ அப்ப நீங்க இப்ப கிளம்புங்க... கார் டிரைவரிடம் சொல்லியிருக்கேன். அவர் உங்களை அழைச்சிட்டு நேரா கோயிலுக்கு வந்துருவார். அங்க வந்து லைட்டா மேக்கப் டச்சப் செய்தால் போதும். இப்ப நீங்க கிளம்புங்க…


ஓகே மேம் என்றவள் தன்னுடைய திங்ஸை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.


வாடா… கீழே போய் சாமி கும்பிட்டு , அப்படியே பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு கிளம்பலாம்.

உனக்கு துணையாய் இருக்கும் என்று தான் உன் சித்தி குடும்பத்தையும் மாமா குடும்பத்தையும் இங்க தங்கச் சொன்னேன்.

ஆனால் அவர்கள் பசங்களை எல்லாம் அழைச்சிட்டு வரவில்லை அவங்களுக்கு பரிச்சை இருக்கு கிளாஸ் இருக்கும் என்று சொல்றாங்க. ரிசப்ஷனுக்கு வருவாங்கன்னு சமாளிக்கிறார்கள்.


நீரஜாவாவது இருப்பா என்று பார்த்தால், நேத்து வரைக்கும் இருந்தவ... இன்னைக்கு உனக்கு துணைக்கு இல்லாமல் வேலை இருக்குனு அங்க போயிட்டா, என புலம்ப…


அம்மா சும்மா இரு மா … கோவிலுக்கு போயிட்டா அக்கா என் கூட தான் இருப்பா… இப்போ வாங்க கீழே போகலாம் எனக் கூறி அழைத்துச் சென்றாள்.


ஒரு வழியாக பார்வதியின் வீட்டில் எல்லோரும் கிளம்பி ‌… காரில் ஏறி புறப்பட ‌‌… அவர்களுக்கு முன்பே சுகுமாரன் மற்றும் சுந்தரத்தின் கார் வடபழனி முருகன் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.


விஷாலும் அவனுடைய பெரியப்பா, மற்றும் சித்தப்பா குடும்பத்துடன் நேராக கோவிலுக்கு வருவதாக கூறி விட்டான். அதுவும் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்வதாக விஷால் கூறியிருந்ததால், அவன் நேரத்தோடு கோவிலுக்கு வந்து விட்டான்.இவர்கள் முகூர்த்த நேரத்திற்கு தகுந்தவாறு கிளம்பினர்.


சுபி காரிலிருந்து இறங்கி வருவதை கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவன், சுபியின் புடவையை பார்த்ததும் முகம் மாறிவிட்டது.


அருகில் இருந்த நவீன் தான் தன் சகோதரனின் முக வாட்டத்தைப் பார்த்து கண்டுகொண்டான். ஏற்கனவே நீரஜாவின் மூலம் அறிந்த விஷயத்தை தம்பியின் காதில் கூறினான்.

டேய் கவின் இங்கு புடவை மாற்றுவதற்கு நேரமும் இருக்காது. இடமும் சரியாக இருக்காது என்பதால் நீ எடுத்த புடவை இப்பொழுது கட்டவில்லை. ஆனால் இன்னைக்கே கட்ட சொல்லுவார்கள்‌. ஆனால் எப்போ? என்று எனக்கு தெரியாது என்றவன் நமுட்டு சிரிப்பை சிந்தினான்‌.


அதைக் கேட்டதும் கவின் முகம் மீண்டும் மலர்ந்தது. அவனுக்கு சுற்றிலும் உள்ளவர்கள் யாரும் அவனது கவனத்தில் பதியவில்லை. அவன் நினைவு,கனவு, உணர்வு எல்லாவற்றிலும் சுபியே நிறைந்து இருந்தாள்‌.


முதலில் விஷால்,தீப்தி திருமணம் நடைபெற்றது.

தீப்தி சர்வ அலங்காரத்தில் தேவதையென திகழ்ந்தாள். விஷால் முகமெங்கும் காதல் பெருக்கெடுத்தோட, கெட்டிமேளம், கெட்டிமேளம் என்ற குரல் ஒலிக்கவும்… தீப்தியின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டு தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.


இங்கு விஷாலின் அருகே இருந்தாலும் கவினது பார்வை சுபியையே வட்டமிட்டது. இவனது பார்வை வீச்சை சமாளிக்க முடியாமல், முகமெல்லாம் சிவந்து நீரஜாவின் பின்னே மறைந்து நின்றாள்‌.


இவர்களை எல்லோரும் கேலி செய்ய… அதற்குள் ஐயர், நாழியாயிடுத்து அடுத்த ஜோடி வாங்கோ‍, எனக் கூறி சுபி‍, கவினின் கல்யாண சடங்கை ஆரம்பித்தார்.


" மாங்கல்யம் தந்துனானே மம

ஜூவன ஹேதுனா

கொண்டே பத்னாமி சுபாகே த்வம்

சஞ்சீவ சரத சதம் "


என மந்திரத்தை உச்சரித்த புரோகிதர்… ஆசிர்வாதம் வாங்கி வந்து வைக்கப் பட்டிருந்த தாலியை எடுத்துக் கவினின் கையில் கொடுக்க…


அதை வாங்கிய கவின் … கெட்டிமேளம் கெட்டிமேளம் என ஒலித்தப் பின்பும் சுபியின் கழுத்தில் கட்டாமலிருக்க… அது வரை குனிந்த தலையுடன் இருந்த சுபி… குழப்பத்துடன் நிமிர…

கவின் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே… அய்யர் கூறிய மந்திரத்தின் பொருளை கூறினான்.


" என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி

இருப்பவளே


இந்த மங்கல நாணை அணிவித்து

நம் உறவை உறுதிசெய்கிறேன்


மிகச் சிறந்த குண

நலன்களை உடையவளே


நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!"


எனக் கூறி கொண்டே அவள் கழுத்தில் மூன்று முடிச்சு இட…


சுபியோ அவன் விழியோடு தன் விழியை கலந்தாள்‌. அவ்விழியிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழுந்து பொன் தாலியில் மின்னியது.


ஒரு வழியாக திருமணம் நல்லபடியாக முடிந்து, சாமி கும்பிட்டுட்டு விட்டு … அருகில் இருந்த ஹோட்டலில் முன் பதிவு ஏற்கனவே செய்திருக்க… அங்கு சென்று காலை உணவை முடித்துக் கொண்டு அவரவர் இல்லத்திற்கு பொண்ணு, மாப்பிள்ளையை அழைத்துச் சென்றார்கள்.


சுகுமாரன் இல்லத்திலோ… தன் இளைய மருமகளை வரவேற்பதற்காக பத்மா சற்று முன்னதாக கிளம்பி வந்திருந்தாள். பொண்ணு மாப்பிள்ளையை அழைத்து வரும் பொறுப்பை மூத்த மருமகளிடம் ஒப்படைத்திருந்தார்.


ஆரத்தி கரைத்து எடுத்து வருவதற்கும் … பொண்ணு மாப்பிள்ளை வருவதற்கும் சரியாக இருந்தது.


பார்வதியும், ஈஸ்வரனும் பெண்ணுடன் கூட வரும் பழக்கம் இல்லாததால் அவர்கள் கோவிலிருந்து நேராக அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.


வீட்டிற்கு வந்த புதுமண தம்பதியரை வெளியே நிற்க வைத்து பத்மாவும், நீரஜாவும் ஆரத்தி எடுத்து … வலது காலை எடுத்து வைத்து உள்ள வாம்மா என பத்மாக் கூற…


சுபியோ, எதை நினைக்க கூடாது என்று நினைத்தாலோ… அதுவே நினைவுக்கு வர … கை நடுங்க… அவள் நடுக்கத்தை உணர்ந்த கவின்‍, கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.


சுபியோ கலக்கத்தோடு நுழைய… அவள் காதிலோ, என்றோ அவன் கூறிய 'ஜஸ்ட் ஷட் அப் ஐ சே… இல்லைனா கிளம்பு இங்கிருந்து… ப்ளீஸ் கிளியர் திஸ் ப்ளேஸ் என்ற கவினின் கடினக் குரலே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது'.


தொடரும்…..
 
Top