Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 17

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤

அத்தியாயம் - 17

இவர்கள் எல்லோரும் திருமண புடவை எடுப்பதற்காக காஞ்சிபுரம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது கவின் பத்மாவிடம்," மா, நீங்க எல்லோரும் கிளம்புங்க… எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு நான் முடிச்சிட்டு நேரா அங்க வந்துடுறேன் என்று கூறியிருந்தான்.

அவன் சொன்னதும் என்ன,ஏது என்று விசாரிக்காமல் சரியென தலையசைத்த தன்னையே நொந்துக் கொண்டிருந்தாள் பத்மா. பின்ன புடவைக் கடையில் வைத்து தன்னை திட்டிக் கொண்டிருக்கும் கணவரையா, நொந்துக்கொள்ள முடியும்.

எல்லோரையும் தவிக்க வைத்த கவின்… ஒரு வழியாக வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்தவுடன் சுகுமாரன் எதோ கேட்க வர…
பத்மா அவரைத் தடுத்து, கவினிடம் நல்ல நேரம் முடியறதுக்குள்ள போய் புடவையை எடுப்பா என்றார்.

அவனைப் பார்த்தாலே தெரிந்தது ஏதோ ஒன்று சரியில்லை என்று…
சரி பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என நினைத்து, சுகுமாரனையும் பேச விடாமல் அவர்களை அனுப்பி வைத்தார்.
கவினும், சரிமா, என்றவன்… அங்கிருந்த சுபியை கூட வருமாறு தலையசைக்க…
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவன் பின்னே சென்றாள்.

மற்றவர்கள் அவர்கள் இருவருக்கும் தனிமை அளித்து விட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

சுபி… கோபமா ? எனக் கையைப் பிடித்து கவின் கேட்க…

எதுக்கத்தான் கோபப்படப் போறேன்.

இல்லை ரொம்ப நேரம் காக்க வச்சுட்டனா? சீக்கிரம் வந்து விடலாம் என்று தான் போனேன் சுபி, என்றவன் மீண்டும் ஏதோ கூற வர...
அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான், என்று அவனது பேச்சில் குறுக்கிட்டவள், கவினைப் பார்த்து காத்திருப்பது எல்லாம் எனக்கு பழக்கம் தானே…

நீங்க காதலை சொன்னீங்களா? இல்லையா? என தெரிந்துக் கொள்ளவே இவ்வளவு நாளாக காத்திருக்கவில்லையா? எனக் கூறிக் கொண்டே அவனிடமிருந்து கையை உருவிக் கொள்ள..‌.

கவினோ, அவனுக்கு இருந்த களைப்பில் கோபம் சுறுசுறுவென ஏறியது... ' நாம என்ன சொல்ல வரோம் என்று எங்கேயாவது காதுக் கொடுத்து கேட்கிறாளா? எதுவும் கிடையாது … ஷப்பா முடியலைடா என மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்' அப்புறம் ஏன்டி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிற? நீயே உனக்கு புடிச்சதை எடுத்துக்க வேண்டியது தானே என சீற…

அவன் கோபத்தை பார்த்து … அவளது விழிகளில் கண்ணீர் விழவா என காத்திருக்க, அதை அடக்கிக் கொண்டு எங்க அம்மா, அப்பா மனசு வருத்தப்படக் கூடாது என்று தான் காத்திருந்தேன்.

அதான் இப்ப வந்துட்டீங்கல்ல …நீங்களே இங்க இருக்கிறதுல ஒன்ன செலக்ட் பண்ணுங்க… என அங்கிருந்தவற்றை காண்பித்து விட்டு… சுபி செல்ஃபோனை நோண்ட... அவளை முறைத்தவன், அவள் கவனிக்கவில்லை என்றவுடன், பிறகு தன் பார்வையை புடவையின் பக்கம் திருப்பினான்.

சற்று நேரத்தில் சரி வா போகலாம் என கவின் கூறி விட்டு செல்ல …
ஓ, என்ற சுபி செல்லில் மணியைப் பார்க்க, அவர்கள் அங்கு வந்து பத்து நிமிடம் தான் ஆகியிருந்தது. இதில் சண்டை வேற போட்டோமே!
ஐந்து நிமிடத்தில் என்னத்தை எடுத்திருக்க போகிறார். நம்ம மேல உள்ள கோபத்துல அத்தான் கைக்கு கிடைச்சத தூக்கிட்டு போயிட்டார்‌, போல… கல்யாணத்தன்னைக்கு
நாம மட்டும் சுமாரா இருப்போமா? கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் சுபி என தன்னையே நொந்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

அவர்கள் இருவரும் வந்ததும் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க…

சுகுமாரன் தான் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் மீண்டும் எழ… கவினைப் பார்த்து ஏன் டா, உனக்காக இவ்வளவு நேரம் இந்த பொண்ணு காத்திருந்தா, நீ என்னவென்றால் புடவையை பொறுமையாக பார்த்து எடுக்க கூடாதா? என கடிய…

கவின் தன் தந்தையைப் பார்த்து கிண்டலாக சிரித்தபடியே, " பா, நான் என் வருங்கால பொண்டாட்டிக்கு நல்லா தான் தேர்ந்தெடுப்பேன். என் மேலயும் கொஞ்சம் நம்பிக்கை வைங்க என்று சுகுமாரனிடம் பேசினாலும், பார்வை சுபியை நோக்கியே இருந்தது."

கவினின் கோபத்தை உணர்ந்த பத்மா, மற்றவர்கள் அறியாமலிருக்க, அவன் பேசியதை வைத்தே பேச்சை மாற்றினாள்.

டேய் கவின், என் புருஷனையே கிண்டல் செய்யறியா ? எங்க நீ எடுத்த புடவையை காட்டு? நாங்க பார்த்து விட்டு சொல்றோம் என…

அதானே‌ சீக்கிரம் காட்டுங்க அத்தான் என தீப்தியும் கூற… மற்றவர்களோடு சேர்ந்து சுபியும் அவன் தேர்ந்தெடுத்த புடவையை பார்க்க காத்திருந்தாள்.

கவின் தன் கையிலிருந்த இரண்டு புடவையை நீட்டினான். இரண்டுமே அவ்வளவு அழகாக இருந்தது. இதுல எதுப்பா சுபிக்கு? என பத்மா வினவ…

தன் தாயை புரியாத பார்வையை வீசி விட்டு… ஏன் ரெண்டுமே சுபிக்கு தான் மா, ஒன்னு கல்யாண புடவை சிகப்பு கலர்ல தான் எடுக்கனும் என்று சொல்வீங்க அதற்கு தான் இந்த புடவை, என தன் கையிலிருந்த முழு சரிகையால் தகதகத்த புடவையை காண்பித்தவன். இது எனக்கு பிடித்த கலர்மா, இதை கோவிலுக்கு கிளம்பும் போது கட்டிட்டு வரச்சொல்லுமா என்றான்.

ஏன் டா… இந்த புடவை கோவிலுக்கு கட்டிட்டு போறதுக்காக எடுக்கிற புடவை மாதிரியா இருக்கு. ரொம்ப வெயிட்டா இருக்குடா, அதுவுமில்லாம உனக்கு நீல கலர் தானே பிடிக்கும். இது லாவண்டர் கலராச்சே என ...

ஏன் மா, உன் சின்ன மருமகளுக்கு எடுக்கிறதுக்கு இப்படி கணக்கு பார்க்கிற… இதுவே அண்ணிக்கு என்றால் யோசிப்பியா? இல்லை உங்க நாத்தனார் கடையில் விலை அதிகம் என்று யோசிக்கிறியா? என சிரித்துக் கொண்டே கேட்க…
பத்மாவோ, பரிதாபமாக கவினைப் பார்த்து, " ஏன் பா, அம்மா அப்படி என்ன கேட்டேன் .இந்தப் புடவையை கட்டிட்டு சுபி ரொம்ப நேரம் இருக்கனும், அவளால் முடியாது என்று தானே கேட்டேன். அதற்குள்ள குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கிற…" எனக் கேட்க.
எல்லோரும் சிரிக்க..‌. நவீன் மட்டும் சிரித்துக் கொண்டே, மா அவன் எதையோ மறைக்கப் பார்க்கிறான். பேச்சை அதான் மாத்துறான் மா… நீங்க உஷாராக இருங்கமா‍, என்றவன் கவினைப் பார்த்து ஆமா, நாங்க இவ்வளவு நேரமா தேடும் போது இந்த புடவைகளை பார்க்கவில்லையே. அதுவும் இந்த கலர தான் நீரஜா தேடுனா என அந்த லாவண்டர் கலர் புடவையை காட்டி கேட்க.

கவினோ, ஒரு செகன்ட் தனது மாமனைப் பார்த்து கண்ணடித்து விட்டு… நீங்கள் ஒழுங்கா பார்த்து இருக்க மாட்டிங்க… பின்ன நான் என்ன நேத்தே வந்து எனக்கு பிடிச்சதா நாலு புடவையை எடுத்து வேற எடத்துல வச்சிட்டு போனேன் என்றுக் கூட சொல்லுவீங்களே என…

அங்கு சுந்தரமோ, தனது தலையில் கை வைத்துக் கொண்டார்.

அவருக்கு இருபுறமும் அவரது மனைவியும் மகளும் வந்து நின்று முறைக்க ஆரம்பித்தனர்.
தீப்தி தான் மா,என்ன விஷயம் என்று அப்பாவை கேளுங்க … நேற்று இரவு எங்க போனாங்க என்று கேட்டோமே ஏதாவது சொன்னாரா? நல்லா கேளுங்க மா, என ஏற்றி விட‌…

சுகந்தியோ, சுந்தரத்தை முறைத்துக் கொண்டே வீட்டுக்குத் தான வருவாரு அங்க பார்த்துக் கொள்ளலாம் தீபு மா .

சுந்தரம், கவினிடம் வந்து நல்ல வேலை பார்த்துட்ட மாப்பிள்ளை. இன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை வச்சு செய்யப் போறாங்க என வருத்தப்பட்டு புலம்ப…

விடுங்க மாமா,என்னமோ புதுசா அவங்க, இன்னைக்கு தான் முதல் முறையாக உங்களை வச்சு செய்யப் போற மாதிரி பயப்படுறீங்க . எப்பொழுதும் நடப்பது தானே எனக் கவின் கூற… மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

இப்பொழுது தான் பார்வதி, ஈஸ்வரனின் முகத்தில் சற்று புன்னகை வந்திருந்தது.

சுபி மட்டும் கவினை சந்தேகமாகவே பார்த்தாள். இது அவன் இயல்பு இல்லையே, எதையோ மறைப்பதற்காகவே இப்படி கலகலவென பேசிகிறார் என்று நினைத்தாள்.
'ஆனால் கவின் சுபியின் மகிழ்ச்சிக்காக தான் இவ்வாறு செய்கிறான் என்பதை சுபி இன்னும் உணரவில்லை. நான்கு புடவையை சுபிக்காக ஸ்பேஷலா ஆர்டர் பண்ணி வாங்கி வந்து நேற்று மாலை அவன் மாமனிடம் குடுத்து தனியாக வைத்திருந்தான்.' இது எதையும் அவள் அறியவில்லை.

எப்படியோ அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இருந்தால் சரி என்று சுபி விட்டுவிட்டாள்.

எல்லோரும் அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கிளம்பினர் …
**************

வீட்டிற்குள் நுழைந்த கவின், அவனுக்கு இருந்த அசதியில் எப்படா படுப்போம் என இருக்க, நேராக மாடி ஏற முயன்றான்.

ஆனால் சுகுமாரன் விடவில்லை… எங்க கவின் போன… உன்னை தான பொறுப்பானவன் என்று நினைத்தேன். ஆனால் உன்னிடம் இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை‌. அந்த பொண்ணு முகமே வாடி இருந்தது. ஒரு வேலை எங்களுடைய விருப்பத்துக்காகத் தான் சம்மதிச்சியா? சொல்லுடா, அப்படி என்ன வேலை விடுமுறை நாள் அதுவுமா? என கேள்விகளை சராமரியாக கேட்க…

அப்பா, நிறுத்துங்கப்பா! நான் ஒன்றும் உங்கள் கம்பெல்ஷனுக்காகவோ, இல்லை பரிதாபப்பட்டோ, இல்லை குற்றவுணர்ச்சிக்காகவோ, அவளை கல்யாணம் பண்ண ஒத்துக் கொள்ளவில்லை. சுபியை சின்ன வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவளை என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன் போதுமா பா. இனி மேல் இது மாதிரியெல்லாம் பேசாதீஙகப்பா, என உடைந்து போன குரலில் கூற…

அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். பத்மாவும், சுகுமாரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யலாம் என்று நவீன் கூறும் போதே பத்மா தான் முதலில் இதெல்லாம் சரி வராது டா என்றார்…

ஏன் மா, நல்ல விஷயத்தை ஆரம்பிக்கும் போதே தடுக்கிறீங்க… நீங்கக் கூட உங்க அண்ணன் பொண்ணை மருமகளாக ஏத்துக்க மாட்டிங்களா மா? அப்படி என்ன மா, சுபி செய்தாள்‍, ஒரு பத்து வயது குழந்தையை காப்பாத்துனா… அது தப்பா? ஆனால் நீங்கள் இப்படி சுபியை வேண்டாம் என்று சொல்லுவீங்க என்று எதிர்பார்க்கவில்லை மா.

டேய் நவீன் நிறுத்துடா… எனக்கு என் பையனும் முக்கியம், என் அண்ணன் மகளும், முக்கியம் டா, அவங்க ரெண்டு பேருடைய வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று தான் வேண்டாம் என்கிறேன்.கவிக்கும், சுபிக்கும் சின்ன வயசிலிருந்து ஆகாதுடா….

அதுவும் இல்லாமல் உங்கள் கல்யாணத்தன்னைக்கு கூட ரெண்டு பேரும் எப்படி சண்டை போட்டார்கள். இதற்கு ரெண்டு பேருமே ஒத்துப்பாங்களா என்று தெரியலப்பா... இது வாழ்க்கை விஷயம்… விளையாட்டு கிடையாது அதனால் தான் வேண்டாம் என்று
சொல்றேன் பா.

அதுவரை அவர்கள் பேச்சில் குறுக்கிடாமல் இருந்த நீரஜா, " அத்தை… நீங்க கவின் அத்தான் கிட்ட சொல்லுங்க. அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு விருப்பம் இல்லையென்றால் விட்டு விடுவோம். கவின் அத்தான், தீப்தியை வேண்டாம் என்றவுடன் சரி என்று நீங்கள் கேட்கவில்லையா? அதே போல இப்பவும் வேண்டாமென்றால் விட்டு விடுவோம் அத்தை." என்றாள்.

பத்மா, சுகுமாரனைப் பார்க்க… மருமகள் சொல்வதும் சரிதான் என்றவர், ஆனால் கவின் ஓ.கே சொன்ன பிறகு உங்க வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் என்னமா செய்வது. ஏற்கனவே உங்க அப்பாவும் அம்மாவும் இங்கு வந்து போறதில்லை. உங்களையும் கொஞ்ச நாளைக்கு அங்க வரவேண்டாம் என்று சொல்லிட்டாங்க‌‌. கடையிலோ, இல்லை வெளியிடத்திலோ தான் நாம் சந்திக்கிறது. இதுல சுபியைப் பார்க்கிறதே கிடையாது ‌. இப்ப அவளோட மைன்ட் செட் எப்படி இருக்கு என்பதையும் யோசிக்க வேண்டும்,மா என்று நீரஜாவை பார்த்துக் கூற…

மாமா ரெண்டு வீடும் ஒன்றாக பழைய படி சேர வேண்டும் என்பதற்காகத் தான், நீங்க கவின் அத்தான் திருமண பேச்சை ஆரம்பிக்கவும் இந்த ஐடியா சொன்னேன்.

அம்மா,அப்பாவுக்கு நம்ம மேல வருத்தம் கிடையாது மாமா. அவங்க சுபியை நினைத்து கவலைப்படறாங்க. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் பழசெல்லாம் மறந்துடுவாங்க. சுபியை ஒத்துக் கொள்ள வைப்பது என் பொறுப்பு மாமா. நீங்க அத்தான் கிட்ட மட்டும் கேளுங்கள் மாமா என கண் கலங்கிக் கூற..
நான் கேக்கிறேன் மா இதற்காக நீ வருத்தப்படாதே, என்றார்.

பிறகு இவர்கள் கவினிடம் சுபியை திருமணம் செய்துக் கொள்கிறாயா? எனக் கேட்க..

என்ன திடீரென்று இந்த பேச்சு என கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவ...
நீரஜா தான் ஆசைப்படறா… இந்த கல்யாணத்தால மீண்டும் ரெண்டு வீடும் ஒன்றாக சேராதா என்று நினைக்கிறா…
ஆனால்,எங்களுக்கு உன்னுடைய விருப்பம் தான் முக்கியம் டா என்று பத்மா கூற…

உங்க எல்லோருக்கும் சம்மதம் என்றால் எனக்கும் ஓ.கே என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
அப்போது கூட சுபியை பிடிக்கும் என்று கூறவில்லை.

அதனால் தான் கவின் சுபியை விரும்புகிறேன் என்று கூறவும் எல்லோரும் அதிர்ந்தனர்.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த கவினை, ஃசோபாவில் அமர வைத்த நவீன், தன் மனைவியிடம் குடிப்பதற்கு ஏதாவது எடுத்து வருமாறு அனுப்பினான்…

பத்மாவும், சுகுமாரனும் அவனதருகில் அமர … பத்மாவின் மடியில் படுத்துக் கொண்டான். அவன் தலையைக் கோதி விட்டவாறே அப்புறம் எங்கப்பா போன ?

மா, பிருந்தா ஃபோன் பண்ணாமா…

ஏன் கவின் பொங்கல் அன்னைக்கும் கவுன்சிலிங்கு ஆள் வருவாங்களா என்ன? நீ இதை ஒரு உதவியாக தானே செய்யுற… இன்னைக்கு ஒரு நாள் வேற யாரையாவது அவ கூப்பிட்டுக்க கூடாதா? என…

மா, நானா விருப்பப்பட்டு வாரத்தில் இரண்டு நாள் அவளது ஹாஸ்பிடல் போய் பாதிக்கப் பட்ட பெண்களோட குடும்பத்திற்கு கவுன்சிலிங் குடுப்பேன் மா. இன்னைக்கு எமர்ஜென்சி என்று தான் கூப்பிட்டா… உதவிக்கு யாரும் இல்லை… அவளும்,அவ ஹஸ்பன்ட் மட்டும் தான் இருந்தாங்க…. சீக்கிரம் வந்துடுலாம் என்று தான் போனேன். பட் சமாளிக்க முடியவில்லை.

ஏன் பா, என்ன பிரச்சினை என சுகுமாரன் கேட்க…

வழக்கம் போல தான் பா, வேலைக்கு போயிட்டு திரும்பி வரும் போது… அவங்க வீட்டுக்கு அருகிலே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க. பல நாள் இந்தப் பொண்ணை வாட்ச் பண்ணியிருப்பானுங்க போல… இந்த பொண்ணு கேப்ல வந்து இறங்கிற இடத்திலிருந்து அவங்க வீட்டுக்கு ஐந்து நிமிடம் நடக்கனும். அந்த இடம் வேற கொஞ்சம் இருட்டா இருக்கும். ரெண்டு பேரு இந்த பொண்ணை தூக்க முயற்சிப் பண்ணாங்க..

இந்த பொண்ணோட நல்ல நேரம்… அப்போ யாரோ வந்ததுனால விட்டுட்டு போயிட்டாங்க. ஆனால் ரொம்ப நேரமா போராடியிருக்கிறா… அதனால யாரைப் பார்த்தாலும் பயப்பிடுறாப்பா.

அந்த பொண்ணு ஆண்கள் யாரையும் பக்கத்துல விட மாட்டேங்குது. ஒரு வாரமாக ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. பொங்கல் என்பதால லேடிஸ் ஸ்டாப்ஸ் யாரும் இல்லை. அவங்க ரெண்டு பேரால சமாளிக்க முடியாமல் தான் என்னைய கூப்பிட்டாங்க.

பாவம் பா, அந்த பொண்ணோட அப்பாவும், அண்ணனும் , அவர்களையே பக்கத்துல விட மாட்டேங்கறா…
அவங்க ரெண்டு பேரும் எப்படி கூனிக்குறுகி போய் இருக்காங்க, தெரியுமா, முதல் முறையாக நான் ஆணாக பிறந்ததுக்காக வெட்கப்படுறேன் பா என…

அதுக்கு நீ என்னப்பா செய்வ? தண்டனைகள் கடுமையாகனும், சட்டங்களை கடுமையாக்கனும், சரி விடுப்பா. அந்தப் பொண்ணுக்கு இப்போ, எப்படி இருக்கு.

ஒரு வழியாக சமாளித்து மயக்க ஊசி போட்டு தூங்க வைச்சாச்சு பா. நல்லா தூங்கனும். நான் அதுக்கப்புறம் கிளம்பி வந்தா ஒரே ட்ராஃபிக் , அதான் ரொம்ப லேட்டாயிடுச்சு சாரி மா.

சரி விடு கவின் இந்த பாலைக் குடித்து விட்டு நீ, போய் படு என்று நீரஜா எடுத்து வந்த பால் கப்பை எடுத்து நீட்டினார்.

மற்றவர்களும் பாலை அருந்த…
பத்மாவோ, கவினிடம் திரும்பி தம்பி, சுபிக்கு ஃபோன் போட்டு சமாதானம் பண்ணுப்பா என பத்மா கூற...

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா… நான் நேரத்திற்கு வரவில்லை என்றால் ஏதோ முக்கியமான காரணம் இருக்கும் என்று நம்பனும்மா, நான் ஒவ்வொன்னுத்துக்கும் விளக்கம் சொல்லி தான் அவள் என்னை புரிந்து கொள்ளனும் என்று ஒன்றும் அவசியமில்லை. இதோட விடுங்க மா இந்த பேச்சை முடித்து விட்டான்.

சரி மா, எனக்கு தூக்கம் வருது நான் போய் படுக்கிறேன் என்று கவின் சென்று விட…

அவன் மாடிக்கு செல்லும் வரை பார்த்து விட்டு‌… என்னங்க இப்படி சொல்லிவிட்டு போறான். அண்ணனுக்கும், அண்ணிக்கும் நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

விடு பத்மா, நீ போய் சொல்லு, இல்லை என்றால் நீரஜாவை போய் சொல்ல சொல்லுமா…

அதெப்படிங்க நீரஜா சொன்னால் சரி வருமா? நானே போயிட்டு வரேன் என்று பத்மாக் கூற…

நீரஜாவோ, " அத்தை… நம்ம குடும்பத்துக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி … நானே போய் நாளைக்கு சொல்லுறேனே." என

அவள் முகத்தைப் பார்த்த பத்மாவும், சுகுமாரனும் சிரித்து விட்டனர்.

அய்யோ! மா, நாங்க எல்லோரும் கடைக்கு போன பின்னாடி உன் மருமகளை கொடுமை படுத்துறீயா,என்ன… அம்மா வீட்டுக்கு போறதுக்கு இப்படி துடிக்கிறா என நவீன் கிண்டலடிக்க …

டேய் சும்மா இருடா … கொஞ்சம் விட்டால் எனக்கும், என் மருமகளுக்கும் டைவர்ஸ்ஸே வாங்கிக் கொடுத்துவிடுவ போலயே என நவீனைப் பார்த்து கேட்டவள், பிறகு நீரஜாவிடம், "ஏன் நீரஜா, உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன். ஆனால் நீ என்னடா, எப்ப சான்ஸ் கிடைக்கும் அம்மா வீட்டுக்கு போகலாம் என்று பார்க்கிற…"

அவளோ," அத்தை என மெதுவாக இழுத்தவள், சுபி கொஞ்சம் குழப்பத்துல இருக்கா… நான் போனால் கொஞ்சம் ஃப்ரியாகிடுவா… அதனால் தான் அத்தை நான் போகணும் என்று நினைக்கிறேன். வேற ஒன்னும் இல்ல அத்தை…"

சரி டா, நானும் பார்த்தேன் சுபி குழப்பத்துல இருக்கா, அதான் கவினப் பேச சொன்னேன்… அவன் முடியாது என்று போயிட்டான்.

நல்ல படியாக கல்யாணம் நடக்க வேண்டும் என்று நம்ம குலதெய்வத்துக்கு காசு முடிஞ்சு வைச்சு இருக்கேன் எனக் கூறி பெருமூச்சு விட்டாள்.

சரி மா, நீ நாளைக்கு போயிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வா….

அத்தை வீட்ல கல்யாண வேலை எல்லாம் இருக்குமே ….

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கல்யாணத்துக்கு முதல் நாள் வந்தா போதும்.

நிஜமாவா அத்தை சொல்றீங்க .

ஆமாம் டா, நீ போயிட்டு வா. நா இங்க ஆளுங்கள வச்சி பார்த்துக்கிறேன். இப்ப போய் படுங்க என அவர்களை அனுப்பி விட்டு, சுகுமாரனைப் பார்த்து, " என்னங்க பார்த்திங்களா… நாம எப்படி பார்த்துக் கொண்டாலும் அம்மா வீட்டுக்கு போ என்று சொன்னவுடனே எவ்வளவு சந்தோஷம் பாருங்க" என…

சுகுமாரன் பத்மாவை கேலியாக பார்த்து, உன்னை மாதிரியே தான் உன் மருமகளும் இருக்கிறா எனக் கூற…

பத்மாவின் முகமும் மலரும் நினைவுகளை நினைத்து மலர்ந்தது. ஆமாம் என ஒப்புக்கொண்டவள், ஆனால் என்னை கிண்டல் பண்ணணும் என்றால் முதல் ஆளாக வந்திருங்க எனக் கடிந்துக் கொண்டே உறங்குவதற்கு செல்ல… உண்மையைத் தான சொன்னேன் என கெத்தாகக் கூறிக் கொண்டு பின்னே சென்றார் சுகுமாரன்.

*************************

நவீனோ, நீருவை பார்த்தவுடன், ஐ என் பொண்டாட்டி ஊருக்கு போறா… ஊருக்கு போறா… என கூவியவன்.
நீரஜா முறைத்துக் கொண்டே நிற்கவும், ஏன் செல்லம் முறைக்கிற… ஓ, தப்பா சொல்லிட்டேனா, சாரி டா… இப்போ கரெக்டா சொல்லுறேன்.

என் பொண்டாட்டி அடுத்த வீட்டுக்கு லீவுக்கு போறா… என கிண்டல் செய்ய…

அத்தான் என நீரு சிணுங்க… பின்ன என்ன டா, அடுத்த வீட்டுக்கு போறதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுற… தினமும் உங்க அப்பாவ கடையில பார்க்குற…
நீ அடிக்கடி உங்க அம்மா வீட்டுக்கு போகுற… இல்லை அவங்க இங்க வராங்க… அப்புறம் என்ன?

என்ன விட்டு அங்க போறது உனக்கு அவ்வளவு சந்தோஷமா ‌?

அதெல்லாம் இல்லை அத்தான். அம்மா வீட்டுக்கு போறது ஒரு சுகம் ... அதெல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது. இங்கே எனக்கு ஒன்னும் பெருசா வேலை இல்லை. இருந்தாலும் இந்த வீட்டு மருமகள் என்ற பொறுப்பு இருக்கிறது.

இதுவே அம்மா வீட்டுக்கு போனா ரிலாக்சாக இருக்கலாம். எங்களுக்கு அந்த ரெண்டு நாள் சொர்க்கம். அது ஒரு ஃபீல்… ஸ்ட்ரெஸ் ரிலிஃப். அது எல்லாம் சொன்னால் உங்களுக்கு புரியாது.
என்றவள் மூன்று நாட்களை எவ்வாறு என்ஜாய் செய்வது என யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
நவீனோ அவள் சொன்னது எதுவும் புரியாமல் மூன்று நாட்கள் நீரஜா இல்லாமல் எப்படி இருப்பது என கன்னத்தில் கை வைத்து கவலையில் ஆழ்ந்து விட்டான்.


தொடரும்…..
 
Last edited:
Top