Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 16

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments. அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே


அத்தியாயம் -16

கவின்‍, சுபியின் கோபத்தைப் பார்த்து சற்று நேரம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தான்.

பிறகு சுபியின் அருகே அமர்ந்து ," சுபி… இங்க பாரு … உனக்கு என்ன கோபம் சொல்லு… சொன்னால் தானே எனக்கு புரியும்… சொல்லாமலே நீ இப்படி வருந்தினால், நான் என்ன செய்வது? அன்னைக்கு நான் அப்படி பாதியில் விட்டு சென்றது தவறு தான்… மறுபடியும் உன்னை தனியாக சந்தித்து பேசலாம் என்று இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறாக அமைந்து விட்டது" என…

அதுவரை அவன் சொல்வதை கவனிக்காமல்… பார்வையை வேறு புறம் வைத்திருந்தவள், இப்பொழுது அவனைப் பார்த்து… அப்படியென்ன சூழ்நிலை , ஒரு ஃபோனாவது பண்ணி சொல்லிருக்கலாம்லா? ஆறு மாதமாக நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?

என்னால நம்ம ரெண்டு குடும்பமும் பிரிஞ்சத நினைச்சா எனக்கு தூக்கமே வராது தெரியுமா?

அதுவாவது பரவாயில்லை… ஆனால் அன்னைக்கு என்ன சொன்னீங்க… அது தான் குலதெய்வ கோயிலுக்கு போறோம் என்று அம்மா சொன்னப்ப … என்ன சொன்னீங்க என முறைக்க…

கவினோ, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, "என்னமா? சொன்னேன் . அத்தானுக்கு ஞாபகம் இல்லையே!" என.

அவன் முகத்தைப் பார்த்தே … அவனுக்கு தெரியும் என்பதை உணர்ந்தவள், அவனை அடிக்க தொடங்கினாள். "ப்ராடு… "என்றவள், மீண்டும் அவனை அடித்துக் கொண்டே என்ன சொன்னீங்க "இன்னொரு முறை அதே மாதிரி காதலை சொல்லவா? என்று தானே கேட்டீங்க ... அதை தான் என்னால தாங்க முடியல… " இதுல நான் சரி என்று சொல்லுவேன் என்று வேற ஆசை. அன்னைக்கு இடுப்பு எப்படி வலிச்சது தெரியுமா எனக் கூறியவள், ' அவனவன் காதலை எப்படி ரொமாண்டிக்கா, சொல்லுவோம் என்று நினைச்சா… இவர் மட்டும் காதலை சொல்லி கீழே தள்ளி விடுவார். இதுல இன்னொரு முறை வேற சொல்லனுமா' என முனுமுனுக்க...

சுபி மா, என்ன முனுமுனுப்பு நான் வேணும் என்றால் செய்த தப்புக்கு பிராய்ச்சித்தமா,தேச்சு விடவா என… அவளோ முறைத்துக் கொண்டே என்னது! அன்னைக்கு விழுந்ததுக்கு இன்னைக்கு தேச்சு விடுறீங்களா? எனக் கேட்டுக் கொண்டேத் துரத்த…

கவினோ அவளிடமிருந்து நகர்ந்து கொண்டே … சுபிமா டைமாயிடுச்சு … தீபு வேற தண்ணீர் எடுத்துட்டு போயிட்டா… உன்னை தான் திட்டப்போறாங்க என…

ஐயோ! எப்போ போனா ? அத்தான் …

அவ போயி பத்து நிமிடம் இருக்கும். நாம பேசிட்டு இருக்கும் போதே … போறேன் என்று சைகை காமிச்சிட்டு போயிட்டா என…

எல்லாம் உங்களால தான் அத்தான்… என புலம்பிக் கொண்டே தண்ணீர் எடுத்துட்டு வர…

ஏய் நான் என்னடி பண்ணேன். நானே சிவனேனு மரத்தடியில் தானே உட்கார்ந்து இருந்தேன்.
நீ தான வந்து முறைச்சுப் பார்த்த…

ஏது நான் சும்மா இருந்த உங்க கிட்ட வந்து முறைச்சுப் பார்த்தேனா?. அங்க உட்கார்ந்து கொண்டு … நான் கீழே விழுந்ததை நினைச்சு தானே சிரிச்சிங்க… அப்பறம் எப்படி நான் சும்மா இருப்பேன்? ஏற்கனவே பழைய கணக்கு வேற இருக்கு… அதுவே இன்னமும் பேசி முடிக்கலை… இதுல இப்ப நடந்ததை நீங்களே ஞாபகப் படுத்திறீங்க… எனக்கு டென்ஷன் தான் ஜாஸ்தி ஆகுது.

சுபி மா, அதுக்கு தான் ரீசன் இருக்குது. சொல்றேன் என்றால், எங்கயாவது சொல்ல விடுறியா…

அதெல்லாம் இப்போ கேட்க நேரமில்லை. வேகமாக வாங்க … அம்மா வேற திட்டுவாங்களோ! என்று பயமா இருக்கு… மீதியெல்லாம் ஊருக்கு போய் பேசிக்கலாம் அத்தான் என்றாள்.

அதற்குள் கோவிலும் வந்திருக்க, கவினும் வேற எதுவும் பேசவில்லை.

பார்வதியோ,எவ்வளவு நேரம் ஆகுது... எங்க இந்த பொண்ணை காணலையே, போனால் போன இடம்… வந்தால் வந்த இடம் என்றே இருக்கிறா? கல்யாணம் ஆகப்போகுதே கொஞ்சமாவது பொறுப்பு இருக்கிறதா என புலம்பிக் கொண்டே இருக்க…

ஈஸ்வர் தான் இன்னும் அபிஷேகம் ஆரம்பிக்க நேரம் இருக்கு, அதற்குள் வந்துடுவா … நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு என…

அவ தனியாக இருக்கிறாளே என்று தான் நான் கவலைப்படுறேன். என் கவலையெல்லாம் உங்களுக்கு புரியாது, அவக் கூட போன தீப்தி வந்தட்டா… இவளை காணும் என்று கூறிக் கொண்டே இருக்கும் போதே கவினும், சுபியும் ஜோடியாக வந்திருக்க… பார்வதியின் அகமும், முகமும் மலர்ந்தது.

அதற்கு மாறாக, விஷால் கோபத்துடன் இவனைப் பார்த்துக் கொண்டிருக்க… அருகில் நின்றிருந்த நவீன் தான் என்ன மச்சான், என் தம்பியை இவ்வளவு பாசமா பார்க்குற…

டேய் எதுவும் என் கிட்ட பேசாத… நானே பயங்கரமான கோபத்துல இருக்கேன்.

ஏன்டா, "கவின் என்ன செய்தான்? நீ இவ்வளவு டென்ஷனாகுற…"

என்ன செய்யலை என்று கேளுடா, நாம எல்லாரும் ஒன்ன தான வந்தோம். இவன் மட்டும் கோவிலுக்குள்ள வராம வெளியே நின்னுட்டு இருந்தான். நானும் திரும்ப, திரும்ப கூப்பிட்டேன் வரவேயில்லை. அப்பக் கூட சொல்லவே இல்லைடா, இங்க ஒரு ஆற்றங்கரை இருக்கு… நான் அங்க தான் போறேன், என்று சொல்லவில்லை. அங்க தான் முதலில் சிஸ்டரும், தீப்தியும் வருவாங்க என்று சொன்னால் நானும் போயிருப்பேன்ல, இப்ப தீப்திக் கிட்ட பேசலாம் என்றால், பக்கத்தில் கூட போக முடியவில்லை…

சரி விடுடா மச்சான், வீட்ல போய் பேசிக்கலாம் என நவீன் கூறும் போதே… உள்ளே நுழைந்தான் கவின், நல்லப் பிள்ளையாக சுபியை விட்டு நகர்ந்து வந்து இவர்களோடு ஐக்கியமானான். அத்தோடு சும்மா இருக்காமல்… விஷாலைப் பார்த்து என்ன மச்சான் தீப்தியை நல்லா பார்த்தியா எனக் கேட்டு நக்கலடிக்க…

விஷாலோ, அவனை முறைத்துப் பார்த்து விட்டு வேறு புறம் திரும்ப… கவின் தான் அவன் முகத்தை தன் புறம் திருப்பி," சாரி மச்சான், உன்னையும் கூட்டிட்டு போலாம் என்று தான் நினைச்சேன். அப்புறமா யோசிச்சு பார்த்தால் நீ வந்தா, தீப்தியும் உடனே கிளம்ப மாட்டா… அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் தொந்தரவா இருப்பீங்க என்று தான் உன்னை விட்டுட்டு போனேன்." எனக் கூற…

விஷால் ஏதோ சொல்ல வர… அதற்குள் சுந்தரம், "மாப்பிள்ளை இங்க வாங்க அபிஷேகம் ஆரம்பிக்க போறாங்க" என அவர் அருகே அழைத்துக் கொண்டார்.

பிறகு நவீனும், கவினும் கூட அவர்கள் அருகே சென்று சாமி கும்பிட்டார்கள்.

*****************
சாமி தரிசனம் எல்லாம் முடித்து விட்டு வந்து, எல்லோரும் வீட்டில் ஓய்வெடுக்க… மீண்டும் இரவு தான் பயணம். அதனால் அவசரம் ஏதுமின்றி ரிலாக்ஸாக இருக்க…
பத்மா தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார். சுபி மா, ஏன் எப்ப பார்த்தாலும் இதே காம்பினேஷன்லேயே சேரி கட்டுற, போன முறை இங்க வந்தப்பவும் இதே கலர்ல கட்டுன என கேட்க … நீரூவும், பார்வதியும் சுபியைப் பார்க்க… சுபியோ, எனக்கு ஞாபகம் இல்லையே அத்தை எனக் கூற…

இதுவரை இவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்த சுகந்தி, சுபியை பார்த்து பார்வதி அக்கா புடவை கட்டி இருந்தியேமா, நான் கூட உனக்கு அழகாயிருந்தது என்று சொன்னேன். அப்ப தான் பார்வதி அக்கா, அவங்களோடது என்று சொன்னாங்க என விளக்கமாக கூறினார்.

எல்லோரு சுபியிடம், சுகந்தி பேசியதை அதிசயமாக பார்த்தனர்.
ஆனால் சுகந்தி தன் கணவர் கூறியதற்காக சுபியிடம், சாதாரணமாக பேசத் தொடங்கினார். அன்று திருமணத்திற்கு நாள் பார்க்கும் போது ஏற்பட்ட பிரச்சினையின் போது,விஷால் 'கவின்' எனக்கு முக்கியம் என்று கூறி விட… அதற்குப் பிறகு சுந்தரம் சுகந்தியை தனிமையில் கண்டித்தார்.
உனக்கு உன் பொண்ணு வாழ்க்கை முக்கியம் என்றால் சுபியிடம் எப்போதும் போல சாதாரணமாக பேசணும் என்று கண்டித்து கூறினார்.

அதற்காகத்தான் சுபியோடு அவளுக்கு ஏற்பட்ட சண்டையை மறந்து சமாதான கொடியை பறக்க விட்டாள்.
பார்வதியும் ஆமாம் சுகந்தி நீ சொல்லவும் தான் ஞாபகம் வருது. என் புடவையை தான் சுபி கட்டியிருந்தாள். ஆனால் அந்த புடவையை அப்புறம் நான் பார்க்கவே இல்லையே என யோசிக்க…
சுபியோ, அது அங்க தான் இருக்கும் சரி விடுங்க மா. இல்லை வேண்டும் என்றால் அப்பாக்கிட்ட சொன்னால் உங்களுக்கு அதே மாதிரி பத்து புடவை எடுத்துட்டு வந்து தருவாங்க எனக் கூறி பேச்சை மாற்றினாள்.
அதற்குப் பிறகு பார்வதியும், சுகந்தியும் தயக்கத்தை பேச ஆரம்பித்தார்கள்.

சுகந்தி பார்வதியைப் பார்த்து " அக்கா, கல்யாணத்துக்கு புடவையை பொங்கல் அன்னைக்கு நம்ம கடையை திறந்து எடுத்துடலாம். ஆனால் பிளவுஸ் உடனே தச்சு வந்துருமா? என்று தான் தெரியவில்லை. சாதரணமாக தைப்பது என்றால் உடனே வந்துடுவாங்க. ஆனால் நான் தீப்திக்கு ப்ளவுஸ்ல ஆரி டிசைன் பண்ணனும்னு என்று நினைத்திருந்தேன்.ஆரி டிசைன் செய்து தர ஒரு மாசமாவது டைம் கேட்பாங்க, என்ன பண்ணுவதுன்னு ஒன்னுமே புரியவில்லை.நீங்க ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களாக்கா" என வினவ…

எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது சுகந்தி. நீருவுக்கும் நான் எதுவும் செஞ்சு பார்க்கவில்லை. சுபி ட்ரஸ் விஷயத்தில் நான் எப்பவும் தலையிட்டது கிடையாது.

அவளுக்கு வேண்டியதை அவ பார்த்துப் பா என்றுக் கூற…

அங்கு அமர்ந்திருந்த சுபி பேச்சு தன் பக்கம் திரும்பவும், இருவரையும் பொதுவாகப் பார்த்து என்னோட ஃப்ரெண்டு ஒருத்தி இருக்கிறா, அவள் ஆரி டிசைன் நல்லா பண்ணுவா. எனக்கு என்றால் உடனே செய்து தருவா… நான்கு நாட்கள்ல அவ ப்ளவுசையும் ஸ்டிச் பண்ணி தந்துருவா… அதற்கு எல்லாம் ஆள் வைத்து பெரிய லெவலில் செய்யுறா.

தீப்திக்கு வேண்டும் என்றால் சொல்லுங்க… அவ அட்ரஸ் தரேன். நானும் சொல்லிடுறேன் என்றாள்.

அதுக்கென்ன சுபி நீங்க ரெண்டு பேருமா போய் டிசைன் பார்த்துக் குடுத்துட்டு வாங்க என சுகந்தி கூறி விட்டாள்.

சுகந்திக்கு அவ்வளவு நேரம் இருந்த பெரிய கவலை தீர்த்தத்தில் உற்சாகமானாள்.மதிய உணவை முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பும் வரை பேச்சு சுகந்தியின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

***********************

இவர்கள் ஊருக்கு போய்விட்டு வந்த மறுநாள் காலையில் கவின் சுபிக்கு போன் போட்டு ஈவினிங் வரியா வெளியே போகலாம். நேற்று ஒழுங்கா பேசவே முடியவில்லை..
பாதியிலே வேற பேச்சை நிறுத்திவிட்டோம், இன்னைக்கு பேசுவோமா என கேட்க…

சுபியோ, சற்று நேரம் அமைதியாக இருந்தவள், பிறகு அத்தான் எனக்கு முடியல டயர்டா இருக்கு.
அதுவுமில்லாமல் சும்மா, சும்மா வெளியே போக வேண்டாம் என்று அம்மா சொல்லி இருக்காங்க அத்தான். நாம தான் பொங்கல் அன்னைக்கு பார்ப்போமே என …

கவினுக்கும் அது சரியாகப் படவே… சரி அப்புறம் பார்க்கலாம் பை எனக் கூறி ஃபோனை வைத்தவன், பிறகு வேலைகளில் மூழ்கினான். இதனால் மீண்டும் இவர்களுக்கிடையே பிரச்சனை வரப் போவதை அப்போது அவன் அறியவில்லை.

**********************************

பொங்கல் அன்று சுபிக்கு விடிந்த பொழுது நன்றாகவே இருந்தது. ஆனால் முடியும் பொழுது?

முதல் வாழ்த்தை தெரிவித்து கவின் அந்நாளை அழகுற செய்தான். பிறகென்ன பார்வதி, படுத்தியப் பாட்டில் சுபி வேகமாக கிளம்பி பொங்கல் வைப்பதற்கான பொருட்களை அவ்வப்போது எடுத்துக் கொடுத்து பார்வதிக்கு உதவியாக நின்றாள்‌.

நல்லபடியாக பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுட்டு முடித்ததும், சுபி அவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். அது தான் ப்ரோக்ராம் பார்க்கிறேன் என்று சேனலை மாத்தி மாத்தி வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டு சேனலில் " சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு" என்ற பாடல் திரையில் ஓட… சுபியோ, இன்று மாலை திருமணத்திற்கு புடவை எடுக்கப் போவதை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தாள். மனதிற்குள் கவின், கவின் மட்டுமே சுத்திக் கொண்டிருந்தான். அன்றைக்கு கோவிலுக்கு கட்டுவதற்கான புடவை எடுக்கவே என்ன பாடுபடுத்தினான். இன்னைக்கு திருமண புடவை எடுக்க என்ன சேட்டையெல்லாம் செய்யப் போகிறானோ,என எண்ணியவளின் முகத்திலோ ரகசிய புன்னகை.

அம்மா என அழைத்தப்படியே உள்ளே நுழைந்த நீரஜா, தான் வந்ததைக் கூட கவனிக்காமல் கனவுலகில் மிதந்த தன் தங்கையை பார்த்ததும், தன் கையில் இருந்த பாக்ஸை டீப்பாயின் மேல் வைத்து விட்டு … தன் தங்கையை நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொள்ள…

அது வரை கனவில் இருந்த சுபி, திடீர் அணைப்பால் திகைத்து விலகியவள், அங்கு கனிவோடு பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவைப் பார்த்ததும், அக்கா என கூவி மீண்டும் அனைத்துக் கொண்டாள்.

கலங்கிய கண்களை மெல்ல துடைத்துக் கொண்டாள் நீரஜா. பின்னே இத்தனை நாட்களாக தனக்குள் இறுகியிருந்த சுபி … நீண்ட நாட்களுக்கு பிறகு அக்காவென அழைத்திருந்தாள்.

'சுபி' என அழைத்த நீரஜா … அவளும் உணர்ச்சி வசப்பட்டதை அறிந்து பேச்சை மாற்ற… தன் தங்கையை கேலி பண்ண ஆரம்பித்தாள் நீரஜா.

சுபி, உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, எனக் கூற…

அது வரை அவள் மேல் சாய்ந்து இருந்த சுபி, என்னவென்று புரியாமல் கேள்வியாகப் பார்க்க?

மெதுவா அவளிடம் இருந்து நகர்ந்தவள், இல்லை கவினத்தான் என்று நினைத்து என் மேல் சாய்ந்துக் கொண்டிருக்கியோ, என்று தான் கேட்டேன் என…

அது வரை புரியாமல் முழித்துக் கொண்டிருந்த சுபி, நீரஜா தன்னை கேலி செய்கிறாள் உணர்ந்து, அக்கா உன்னை என்ன செய்கிறேன் பார் என்று துரத்த…

முடிந்தால் என்னை பிடி என்றுக் கூறி நீரஜா ஓட… என பல நாட்களுக்கு பிறகு இவர்களின் ஒலியில், அந்த வீடு ஒளிர்ந்தது.

கிச்சனில் இருந்து பார்வதி வெளியே வந்து இருவரையும் பார்த்து ரசித்தவர், பிறகு பெரிய மகளை பார்த்து வா, நீரு நல்லாயிருக்கியாடா… எங்க மாப்பிள்ளை வரவில்லையா ? சரி வா லஞ்ச் சாப்பிடுறியா ? என கேள்விக் கணைகளைத் தொடுக்க‌…

நீரூ பதில் சொல்வதற்குள், சுபி முந்திக் கொண்டு அம்மா உங்களுக்கு இது டூமச்சா தெரியவில்லை. பக்கத்தில் வீட்டில் இருந்து வரா… இதுல மாப்பிள்ளை வரவில்லையா? என்று கேட்கிற… அப்புறம் என்னமா, கேட்ட… நல்லா இருக்கியா என்று தான கேட்ட… நேத்து தானமா நீ அத்தை வீட்டுக்கு போன அப்போ பார்த்த மாதிரியே தான் இருக்கிறா என நீருவைப் பார்த்துக் கொண்டே கூற…

சுபி மா, என்னையே கிண்டல் பண்ணுறீயா? பக்கத்து வீடா இருந்தாலும் என் பொண்ணா பார்க்காமல் இருக்கிறது எனக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அது எல்லாம் உனக்கு இப்போ புரியாது. எல்லாம் கல்யாணமாகி புள்ள பிறந்ததுக்கு அப்புறம் தான் புரியும்.

அப்புறம் நல்ல நாள் பெரிய நாளில் பெத்தவங்க கிட்ட ஜோடியா ஆசீர்வாதம் வாங்கினால் நல்லது அதுக்கு தான் டா கேட்டேன். வேறென்ன அவளுக்கு வழி தெரியாது என்றா‍, மாப்பிள்ளையோடு வரவில்லையா என்று கேட்டேன் என…

நீரு , சரி விடு மா… அவர் இப்ப வந்துருவாரு. அவர் வந்ததும் நாங்க ஆசிர்வாதம் வாங்கிக்கிறேன்‌. அத்தை பொங்கல் கொடுத்து விட்டாங்க... அதை குடுத்துட்டு போலாம்னு வந்தேன் மா.

இந்தாங்க மா,என அங்கிருந்த ஃபாக்ஸை எடுத்து கொடுத்தாள்.

எனக்கு சாப்பாடு வேணாம்மா… ஜூஸ் தாங்க..‌
வேற எதுவும் வேண்டாம். அத்தை அங்க சமைச்சிருக்காங்க. அதற்கு பிறகு மூவரும் பேசிக்கொண்டிருக்க...
ஓய்வெடுத்த ஈஸ்வரன் வரவும், நவீன் வரவும் சரியாக இருந்தது. நவீனும், நீரஜாவும் சேர்ந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். மாலையில் பார்க்கலாம் என இருவரும் கிளம்பி விட…

சுபி ஈஸ்வரனின் மேல் சாய்ந்துக் கொண்டு, " பா, நானும் கல்யாணம் ஆகி போய் விட்டாள் … உங்களுக்கு இன்னும் கஷ்டமாக தானே இருக்கும்." எனக் கூற.

அவளுக்கு மறுபுறம் அமர்ந்து இருந்த பார்வதி அதுக்கென்ன பண்ணுவது மா, பொண்ணாக பிறந்தால் இன்னொரு வீட்டுக்குப் போய் தான் ஆக வேண்டும்.

நாங்க நினைச்சா வந்து பார்ப்போம்… பக்கத்து வீடு தானே… நீ எதையும் போட்டு குழப்பிக்காதே, கல்யாணப் பொண்ணா, லட்சணமா சிரித்துக் கொண்டே இரு டா… இப்போ வாங்க சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றார்.

******************
மாலையில் எஸ். எஸ் பட்டு சில்க்ஸ் இரு ஜோடிகளின் அலம்பலில் கலகலத்தது. நவீனும்,விஷாலும் அவர்களின் ஜோடிக்கு புடவை தேர்ந்தெடுப்பதற்குள் எல்லோரையும் விழி பிதுங்க செய்து விட்டனர். அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புடவைகளை சுந்தரம் எடுத்துக் காட்ட … இது டிசைன் நல்லா இல்ல, இந்த கலர் நல்லா இல்ல என் குறைக்கூறிக் கொண்டே இருக்க, டென்ஷனான சுந்தரம் இங்க பாருங்க மாப்பிள்ளை… இந்த ராக்ல உள்ளது தான் ஃப்ரஷ் பீஸ் இதுல செலக்ட் பண்ணுங்க… அந்த பக்கம் உள்ளது ஏற்கனவே மார்க்கெட்ல வந்த டிசைன்ஸ் அது பிடிச்சாலும் பாருங்க… என்னைய ஆள விடுங்க ‍‍, என விட்டால் போதும் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அவர் போன வேகத்தைப் பார்த்து எல்லோரும் நகைக்க… அந்த குதூகலாகத்தில் சுபி மட்டும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தாள்.

பத்மா வந்து சுபியிடம், " சுபி, கவின் ஃபோனை எடுக்கவில்லை டா… நீரஜா செலக்ட் பண்ண டிசைன்ல வேற கலர் இருக்கு… அதுல உனக்கு பிடிச்ச கலர எடுமா, இன்னைக்கு விட்டால், வேற நல்ல நாள் இல்லை டா"

இல்லை அத்தை அத்தான் எப்படியும் வரேன் என்று சொன்னா வந்துடுவாங்க, அவர் வந்து எடுத்துடுவார். இப்போ பர்சேஸ் முடிந்து விட்டால் நாம கிளம்புவோம் அத்தை.

இதை கேட்டுக் கொண்டிருந்த பார்வதியும், ஈஸ்வரனும் மனம் கலங்கி நின்றனர்.

தன் சின்ன மகளை மட்டும் கடவுள் ஏன் தான் இப்படி சோதிக்கிறாறோ என வருந்தினர்.

ஒரு புறம் தன் பெரிய மகளின் சந்தோஷத்தைப் பார்த்து நிம்மதியாக இருந்தது. அவளுக்கு திருமணத்திற்கு என்று பட்டுப்புடவை எடுக்காததால் இப்பொழுது அவளையும் எடுத்துக் கொள்ள சொல்ல... நவீனோடு சேர்ந்து புடவையை தேர்ந்தெடுத்தாள். அடுத்தது தீப்தி‍, விளையாட்டு தனமாகவே பார்த்து பழக்கப்பட்டவள், இப்போதோ வெட்கத்தோடு விஷாலின் அருகே நின்றிருக்க … அத்தனை பாந்தமாக இருந்தது‌. இவர்களோடு சேர்ந்து இராமல் சுபி தனியாக நிற்பதைப் பார்த்து, அவர்களும் தவித்து நின்றனர்.


தொடரும்….
 
Last edited:
Top