Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் -15

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.
கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே!

,அத்தியாயம் 15

ஷாப்பிங் முடிந்தவுடன், எல்லோரும் ஜூஸ் குடித்து கொஞ்ச நேரம் அரட்டை அடித்தனர்.
முதலில் சுபி தான், சரி நான் கிளம்புறேன். நீங்க எல்லாரும் எப்போ வரிங்க…

எனக்கு டைம் ஆச்சு என்று கிளம்ப… கவின் தான் இரு சுபி எல்லாரும் சேர்ந்து போகலாம்.
வண்டியை ஸ்டாப்ஸ விட்டு எடுத்துட்டு வர சொல்றேன்.
நீ வா காரில் போகலாம் என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு எல்லோரையும் கிளம்ப சொன்னான்.

சுபி வீட்டில் வண்டியை நிறுத்தினான் கவின். அவள் இறங்கி, காரிலிருந்த அனைவரிடமும் பொதுவாக பாய் என்று கூறிவிட்டு உள்ளே துள்ளலுடன் சென்றாள்.

ஹாலில் அமர்ந்து இருந்த பார்வதி," சுபி என்ன பர்சேஸ்லாம் ஓவரா? புடிச்ச மாதிரி புடவைக் கிடைச்சதா டா, என வினவ… ம் , என பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு… எடுத்தாச்சுமா, எல்லோரும் போன உடனே செலக்ட் பண்ணிட்டாங்க… எனக்கு எடுக்க தான் கொஞ்சம் லேட்டாச்சு எனக் கூறினாள்."


ஏன்டா, நீ தான் சீக்கிரம் செலக்ட் பண்ணுவியே அப்புறம் ஏன் லேட்டாச்சு?

அது மா, என இழுத்தப் படி அத்தான் தான் மா செலக்ட் பண்ணாங்க என வெட்கத்துடன் கூறினாள்.
ஓ, சூப்பர் அப்ப நல்லா தான் இருக்கும். எங்க காட்டு பார்ப்போம் என் கேட்க. அவளுக்கு என வாங்கிய புடவையை காண்பித்தாள். மா, உங்களுக்கு எடுத்த புடவையை அக்கா நாளைக்கு எடுத்துட்டு வரேன் என்று சொன்னா மா என…

அதை நான் அப்புறமா பார்த்துக்கிறேன்… ஆனால் இந்தப் புடவையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று யோசிக்க…

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா என கையிலிருந்து பிடுங்கி கொண்டு நான் போய் படுக்கிறேன். எனக்கு டிபன் வேணாம் என்று கூறி விட்டு மாடி ஏற…

சுபி, சாப்பிட்டு விட்டுப் போ... உனக்காக அத்தை குழிப்பணியாரமும், காரச் சட்னியும் கொடுத்து விட்டு இருக்காங்க… சாப்பிட்டு தூங்கு எனக் கூற…
சரி, மா ஃப்ரஷ்ஷாகிட்டு வரேன் என்று கூறி விட்டு மாடிப் படியில் துள்ளிக் குதித்து ஏறினாள்.

மாடிக்கு போகும் சுபியை பார்த்து மனதிற்குள் கடவுளே! என் பொண்ணு இதே சந்தோஷத்துடன் என்றைக்கும் இருக்கனும் என வேண்டிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஈஸ்வர், உற்சாகமாக வந்த மகளைப் பார்த்து… ஏன் டா சாப்பிட்டியா? என…

இல்லை பா, இதோ ஃபைவ் மினிட்ஸ் … நீங்க சாப்பிடுங்க பா, நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், என செல்லம் கொஞ்ச…

சரி மா, நீ வா… அப்பா வெயிட் பண்ணுறேன் என்க.

சரியென தலையாட்டியவள், அடுத்த ஐந்தாவது நிமிடம் டைனிங் டேபிளில் அவளின் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் நடுவில் அமர்ந்துக் கொண்டு, அவளது அத்தைக் கொடுத்த குழிப்பணியாரத்தை காரச்சட்னியில் தோய்த்தெடுத்து கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள்.

மனத்திற்குள் ஸ்வீட் அத்தை எனக் கொஞ்சிக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்ததும் நிமிர்ந்தவள், அருகிலிருந்த பெற்றோரை அப்பொழுது தான் கவனித்தாள்…
பிறகு இருவரையும் பார்த்து அசட்டுப் புன்னகை சிந்த… பார்வதியோ நக்கலாக சிரித்துக் கொண்டே குழிப்பணியாரத்தப் பார்த்தால் போதும் எங்களையே மறந்து விடுவியே எனக் கிண்டல் செய்ய…

பா, பாருங்க பா, அம்மாவ… என்ன கிண்டல் பண்ணுறாங்க என சினுங்க… ஏய் விடுடி குழந்தையை ஏன் வம்பு இழுக்கிற,என பார்வதியை கடிந்தவர், நீ போய் படுமா என சுபியிடம் கூற… அவளோ, அம்மாவிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்தவள்… பிறகு இருவருக்கும் குட்நைட் கூறி விட்டு படுக்கப் சென்றாள்.


சுபி, சாப்பிட்டவுடன் படுக்காதே என பார்வதிக் கூற… சரி மா கொஞ்சம் வேலையிருக்கு, அதை தான் பார்க்கப் போறேன் என்றாள் சுபி.

தனது அறைக்கு வந்தவள் பீரோவை திறந்து தனது ட்ரெஸ்க்கு அடியில் வைத்த கவரை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.

அந்துருண்டைகளுடன் வீற்றிருந்த அந்த நீல நிற திருபுவன பட்டுப்புடவை இப்பொழுது அவள் கைகளில் தவழ்ந்தது.

முகத்திலோ, கள்ளச் சிரிப்பு… நினைவுகளோ! ஆறுமாதம் முன்னோக்கிச் சென்றது.


*******************
இவர்கள் திருவிழாவிற்காக ஊருக்குச் சென்ற முதல் இரண்டு நாட்களில் பெரியவர்கள் வீட்டை சுத்தம் செய்வதிலும் எடுத்து வந்த பொருட்களை அடுக்கி வைப்பதிலும், கவனத்தை செலுத்த…

சிறியவர்களோ, பெரியவர்களின் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

கவினையும், நவீனையும் துணைக்கு அனுப்பி வைக்க… நவீனுக்கு தான் கொண்டாடாடமாக இருந்தது. மூன்று முறைப் பொண்ணுகளையும் வம்பு இழுத்துக் கொண்டே வந்தான்.
கவினோ, அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்.

சுபியும், தீப்தியும் நவீனுக்கு இருபுறமும் நடந்து வந்து அவனுக்கு கம்பெனி கொடுத்தனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறும். பெரியவர்களின் இடையூறு இல்லாமல் நன்றாக என்ஜாய் செய்தனர்.
ஒரு நாள் பாட்டு கச்சேரி நடக்கும். ஒரு நாள் நாடகம் நடக்கும். சினிமாபடங்களை எடுத்து போட்டு விடுவார்கள்.

தினமும் இரவு தான் சாமி ஊர்வலம் வரும். ஏழு நாட்கள்… தினம் ஒரு வாகனத்தில் வீதியுலா வரும்.

அதனால் காலையில் பெரியதாக கோவிலில் வேலை இருக்காது. இரவு வெகுநேரம் முழித்து இருந்தவர்கள், காலையில் பொறுமையாக எழுந்து , பிறகு தான் சாமிக்கு அலங்காரம். அதனால் காலையில் முழுவதும் வீதியில் உள்ள மண்டபத்தில் களை கட்டும்.

இவர்கள் ஐவருக்கும் இந்த ஏழு நாட்களும் ஊர் சுற்றுவதற்கும், அங்கு விற்கும் திண்பண்டங்களை வாங்கித் திண்பதற்கும், கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதுக்குமே பொழுது சரியாக இருந்தது.

எட்டாம் நாள் தான் பொங்கல் திருவிழா. கோவிலுக்கு அருகில் பெரிய திடல் இருக்கும். அங்கு தான் எல்லோரும் பொங்கல் வைப்பார்கள்.வெளியூரிலிருந்து வருபவர்கள் விடிய விடிய பொங்கல் வைத்து விட்டு , பிறகு சாமிக்கு படைத்து விட்டு ஊரூக்கு கிளம்பி விடுவார்கள்.

இங்கு ஊரிலே இருப்பவர்கள் சற்று பொறுமையாக வந்து பொங்கல் வைப்பார்கள்.

***************
ஈஸ்வரோட வீட்டில் மூன்று மணிக்கு எல்லோரும் எழுந்து கோவிலுக்கு கிளம்ப தயாராகினர்.

பார்வதி எல்லோரையும் அதட்டி கிளம்ப வைத்துக்கொண்டு இருந்தாள்.

கவினும், நவீனும், தந்தை மற்றும் மாமாக்களுடன் கோவிலுக்கு சென்று விட்டனர். பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களுடன் அவர்கள் முன்னே செல்ல… இவர்களோ கிளம்பிக் கொண்டிருந்தனர். நீரஜாவும், தீப்தியும் தயாராகி இருக்க...

சுபியோ, அவளது அம்மாவை பாடாய் படுத்திக்கொண்டிருந்தாள். மா, எனக்கு எதாவது புடவை இருந்தா தாங்க மா, ப்ளீஸ் மா என கெஞ்ச…

ஏன் டி, என்னையப் படுத்துற… நான் ஊர்ல இருக்கும் போது புடவை கட்டு என்று சொன்னால் கேட்கவில்லை. லெஹங்கா தான் போடுவேன் என்று சொன்ன, இப்போ கேட்டா புடவைக்கு நான் எங்கே போவேன் என கோபமாகக் கூற…

சுபி " மா, உங்க புடவை தாங்க … என பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க"

பார்வதியோ, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு… என் செல்லம்ல ஊருக்கு போனதும் அம்மா உனக்கு நிறைய புடவை வாங்கித் தரேன். இப்ப என்னோட புடவையை உனக்கு கட்டி விடலாம் என்றால் கூட ப்ளவுஸ்க்கு எங்க போகுறது? எழுந்துருடா, எனக் கூற...

அதுவரை பார்வதியின் மடியில் படுத்திருந்த சுபி வேகமாக எழுந்தாள். அவள் முகமோ பல்ப் போட்டது போல் பளீரிட்டது.

மா, ப்ளவுஸ் ஒரு பிரச்சினையே கிடையாது. என்னோட லெஹங்கா ப்ளவுஸ் மல்டி கலர். எந்த கலர் புடவைக்கும் என்றாலும் மேட்ச் ஆகும் மா.

எங்கே உன்கிட்ட இருக்கிற புடவையெல்லாம் காட்டுமா, புடிச்சதா பார்த்து கட்டிக்கிறேன் எனக் கூற…

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…
தேர் அன்னைக்கு கட்டிக்கிறது என்று புதுப்புடவை ஒன்று வைத்து இருக்கேன் அதைக் கட்டிக்கோ என்றுக் கூறிய பார்வதி தனது பெட்டியில் இருந்து ஒரு நீல நிற புடவையை எடுத்து கொடுக்க…

வாவ் ! சூப்பர் மா, என அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு புடவையைக் கட்ட ஓடி விட்டாள்.

செல்லும் அவளைப் பார்த்துக் கொண்டே… ஏன் தான் சின்னது இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுதோ ? ஒன்னும் புரியவில்லை என புலம்பிக் கொண்டே அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்தாள் பார்வதி.

சற்று நேரத்தில் வெளியே வந்த சுபியைப் பார்த்து எல்லோருமே அதிர்ந்து தான் போனார்கள்.

பத்மா, தான் முதலில் பார்வதியிடம், " அண்ணி , சுபிக்கு இன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு வந்ததும் சுத்திப் போடுங்க … என் கண்ணே பட்டுடூம் போல" என்றாள்.

பிறகு சுபியிடம், திரும்பி ஆமாம் நீ தான் புடவைக் கட்ட மாட்டேன் என்று தானே சொன்ன என கேட்க…

ஐயோ! ஆள விடுங்க மீண்டும் இன்வெஸ்டிகேஷனா? இப்போ தான் உங்க அண்ணிக் கிட்ட இருந்து தப்பிச்சேன் எனக் கூற…
அவள் கூறிய விதத்தில் எல்லோர் முகத்திலும் புன்னகை மலர, அதே மன நிலையில் கோவிலுக்கு கிளம்பினர்.

சுபிக்கு தானே தெரியும் அவள் புடவைக் கட்ட காரணம் கவின் என்று... இவள் குளித்து விட்டு வெளியே நைட்டியோடு வரும் போது, கவின் இவளை நக்கலாக பார்த்து விட்டு… தீப்திடம், தீபு மா, "நீ ,புடவையில் தேவதை மாதிரி இருக்கிற என்றுக் கூறி இவளை வெறுப்பேற்றி விட்டே வெளியே சென்றான்."

அப்போதே முடிவு செய்தால், புடவைக் கட்டிக் கொண்டு தீப்தியை விட அழகாக இருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு அப்போது புரியவில்லை, "உண்மையான அன்புக்கு முன்பு அழகு இரண்டாம் பட்சமே."

இவளை வம்பிழுக்கவே கவின் அவ்வாறு கூறினான் என்று அன்று சுபிக்கு புரியவில்லை.

கதவு தட்டும் சத்தத்தில் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், மணியைப் பார்க்க பதினொன்று எனக் காட்டியது. ஐயோ! இரண்டு மணி நேரமாவா, இப்படி கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என தலையில் தட்டிக் கொள்ள… மீண்டும் கதவு தட்டும் சத்தத்துடன்,சுபிக் கதவைத் திற என பார்வதிக் கூற …

கையிலிருந்த புடவையை ஃபீரோவில் வைத்துவிட்டு கதவை திறந்தாள்.

என்னடி பண்ற லைட்டைப் போட்டுக்கொண்டு, இன்னும் தூங்காமல் இருக்க? மணி என்னாகுது? எப்போ மாடிக்கு வந்த? என வரிசையாக கேள்விகளைக் கேட்க … ஐயோ! என்னம்மா, இப்படி கேள்வி மேல் கேள்வியாக கேட்கிற… நான் தூங்கப் போறேன்… நீங்களும் போய் படுங்கம்மா, என அனுப்பி விட்டு… அப்பாடா என பெருமூச்சு விட்டுக் கொண்டு உறங்க தயாரானாள்.

******************

நாட்களும் வேகமாக ஓட… அந்த வார இறுதியில் ஒருவழியாக குலதெய்வ கோவிலுக்கு கிளம்பினர்.

சென்ற முறை மாதிரி இரண்டு கார்களில் செல்லாமல், தனித்தனி கார்களில் வந்தனர்.

பார்வதி, ஈஸ்வரன், மற்றும் சுபி ஒரு காரில் புறப்பட… சுகந்தி, சுந்தரம், மற்றும் தீப்தி ஒரு காரில் வர… பத்மா, சுகுமாரன் குடும்பம் மற்றும் விஷாலும் இவர்களுடன் வருவதாகக் கூறி விட, அவர்கள் அனைவரும் ஒரு காரில் புறப்பட்டனர்.

சென்னையிலே குளித்து தயாராகி கிளம்புவதால், நேரடியாக கோவிலுக்கே சென்று அபிஷேகம், ஆராதனை பார்ப்பதாக முடிவு செய்தனர்.

அதனால் மூன்று கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக கோவிலை நோக்கிச் சென்றது.

காலைப் பொழுதில், அந்த கோவிலின் வாசலில் கார்கள் நிற்க…

முதலில் வந்த சுகுமாரன் காரில் இருந்தவர்கள், ஒவ்வொருவராக இறங்கி, பின்பு லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல… கவின் மட்டும் உள்ளே வராமல் வெளியவே சுபியின் தரிசனத்திற்காக காத்திருந்தான்.

விஷாலோ இரண்டு முறை வெளியே வந்து அழைக்க… டேய் மச்சான் நீ போ, நான் அப்புறமா வரேன் என்க.

ஏய் கவின், உள்ள தான சிஸ்டர் வரப்போறாங்க, அப்பறம் ஏன் டா? தேவையில்லாமல் இங்க நிக்கிற?

டேய் விஷால், எனக்கு வில்லனே நீதான்… உள்ள போய்டு, நான் சொல்வதெல்லாம் உனக்கு புரியாது. திரும்ப நீ வெளியில் வந்த… நண்பன் என்றும் பார்க்க மாட்டேன்,எங்க வீட்டு மாப்பிள்ளை என்றும் பார்க்க மாட்டேன் எனக் கூற…

நீ என்னமோ பண்ணு… நான், என் தீபுவை உள்ளே வந்தே பார்த்துக்கிறேன் என்று விட்டு கோவிலுக்கு உள்ளே சென்று விட்டான்.

அவன் உள்ளே சென்ற அடுத்த நிமிடமே தீப்தி, மற்றும் சுபி வந்துவிடவே, அந்த இடமே களைகட்டியது.

சுபியை அந்தப் புடவையில் பார்க்கவும், கவின் சுற்றுப்புறத்தையே மறந்தான்.சுபியால் அவனின் குறுகுறுப் பார்வையை தாங்க முடியாமல், சிவந்த முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

பார்வதி தான் சுபியைப் பார்த்து," ஏன் டா இப்படி மசமசனு நிக்கிற, இந்தா பிடி குடம்…. ஆத்துல போய் தண்ணிக் கொண்டு வா… அப்படியே தீப்தியையும், கூட்டிட்டு போ. நீங்க நேரத்தோடு வந்தா தான் அபிஷேகத்தை ஆரம்பிப்பாங்க" என்றாள்.

அதுவரை அங்கு நின்றுக் கொண்டிருந்த கவின், அத்தையின் குரலை கேட்கவும் அங்கிருந்து வெளியேறி ஆற்றங்கரைக்கு சென்று விட்டான்.

சுபியின் வரவிற்காக காத்திருக்க… அவன் மனமோ பழைய நினைவுகளில் மூழ்கியது.

*************************
சென்ற முறை பொங்கல் வைக்க சென்ற போது, ஆண்கள் அனைவரும் சீக்கிரமாக கோவிலுக்கு கிளம்பிச் சென்று பொங்கல் வைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் வந்தவுடன் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுட்டு வந்து, சாப்பிட்டு ஒய்வெடுக்கத்தான் நேரமிருந்தது. கவினும் இருந்த அலுப்புக்கு தூங்கி விட்டான். சுபியை கவனிக்கவில்லை.

மாலையில் கோவிலில் இவர்களின் ஏற்பாடு செய்த அபிஷேகம். அதற்கு இவன் எழுந்து வருவதற்குள் எல்லோரும் கிளம்பி சென்றுவிட்டனர்.

ஹாலில் அமர்ந்து இருந்த நவீனிடம் " எங்கடா யாரையும் காணோம் என்று பார்வையை சுழல விட்டுக் கொண்டே கேட்க… எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி போயாச்சு . நீ டீ குடிச்சிட்டினா நாமளும் கிளம்ப வேண்டியது தான் டா, எனக் கவினிடம் கூறியவன் பின்பு சமயலறையைப் பார்த்து அக்கா ரெண்டு டீ கொண்டு வாங்க என…

சற்று நேரத்தில் இரு டம்ளரில் தேநீர் கொண்டுவந்தாள், அங்கு வேலை செய்யும் பெண்மணி.

பிறகென்ன இருவரும் டீயைக் குடித்து விட்டு கோவிலுக்கு கிளம்பினர்.

காரை திருப்பி அனுப்பவா? என்றுக் கேட்ட தந்தையிடம் வேண்டாம் என்று கூறியிருந்தான் நவீன். ஏனென்றால் இருவரும் நடந்து வந்தால், ஊரை சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும், பொழுதும் நன்றாக போகும் என எண்ணி காரை வேண்டாம் என நவீன் கூறினான்.

ஆனால் கவினோ, வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் ஏதோ, யோசனையிலே வர… நவீன் அவனை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டே வந்தான்.

பாதி தூரம் வந்த பிறகு, முகம் பளீரிட யோசனையிலிருந்து வெளிவந்த கவின்… நவீனிடம்," டேய், நவீன் நீ கோவிலுக்கு போ… நான் கொஞ்ச நேரத்தில் வரேன்" எனக் கூற…

"எங்கடா கவின் போற ? பேசிட்டு இருக்கலாம் தானே உனக்காக வெயிட் பண்ணேன் ‌. நீ என்னவென்றால் பாதியில கழற்றி விடுற… அப்பா வேற திட்டுவார். பேசாமல் கோவிலுக்கே நேராக வாடா" என இடைவெளியே விடாமல் பேசிக்கொண்டே செல்ல…

டேய் முதலில் பேச்சை நிறுத்துடா. நாம ரெண்டு பேரும் இல்லையென்றால் தான் அப்பா சத்தம் போடுவாங்க… அதனாலதான் சொல்றேன் நீ முதலில் கோவிலுக்கு போ… நான் பத்து நிமிடத்தில் வரேன் எனக் கூறி விட்டு ஒரு சந்தில் சென்று மறைந்தான்.

நவீன் அப்பாவியாக அவன் கூறியதை நம்பி கோவிலுக்கு கிளம்பினான்.

கவினோ, காலையில் இருந்து சுபியைப் பார்க்க முடியவில்லையே என வருந்திக் கொண்டே வந்தான், திடிரென்று ஞாபகம் வந்தது … இன்று அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல ஆற்றங்கரைக்கு வருவார்கள் என்று… உடனேயே நவீனை கழற்றி விட்டு ஆற்றங்கரைக்கு வந்துவிட்டான்.

இன்னும் இவர்கள் வீட்டுப் பெண்களை காணவில்லை. திருமணம் ஆகாத பெண்கள், அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்துச் சென்றால்
விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஒரு நம்பிக்கை. இன்று இவர்கள் ஏற்பாடு செய்யும் அபிஷேகம் என்பதால் இவர்கள் வீட்டுப் பெண்கள் தான் தண்ணீர் எடுத்துச் செல்ல வருவார்கள்.

இருந்தாலும் திருவிழா என்பதால் ஜனநடமாட்டம் இருந்தது.

கவின் அங்கிருந்த ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு சுபியின் வருகைக்காக காத்திருக்க…

சுபி, நீரஜா, தீப்தி மூவரும் கையில் குடத்துடன் வந்துக் கொண்டிருக்க… கவினின் கண்களோ‌, சுபியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

முதன் முறையாக சுபியை சேலையில் பார்த்ததும்… இத்தனை வருடங்களாக யாருக்கும் தெரியாமல் கட்டுப்படுத்தி இருந்த காதல் கட்டவிழ்ந்தது. யாரும் பார்ப்பார்களோ என்று கூட பார்க்காமல்… அவளை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தான்.

நீர‌ஜாவும், தீப்தியும் தண்ணீரை குடத்தில் சேந்த…
சுபியோ அப்படியே படியில் அமர்ந்து விட்டாள்.

"ஏய் சுபி… தண்ணீர் எடுக்காமல் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிற… சீக்கிரம் வரலனா அம்மா திட்டுவாங்க … " என்க

அக்கா... நீ போக்கா, எனக்கு கால்வலிக்குது கா… நான் ஐந்து நிமிடம் உட்கார்ந்து இருந்துட்டு வரேன். இந்த கிளைமேட்டும் நல்லா இருக்குதுல… அந்தி நேரம், ஆற்றங்கரையோரம் செமையா இருக்குல கா என…

சுபி… உதை தான் வாங்கப் போற… உன்னை தனியாக விட்டுவிட்டு போனால் என்னை தான் திட்டுவாங்க… அபிஷேகத்திற்கு வேற டைம் ஆச்சு எனக் கூற…

அக்கா, இங்க நமக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் அம்மா ஒன்றும் சொல்ல மாட்டார்கள்… அபிஷேகத்திற்கு இன்னும் நேரமிருக்கிறது… இல்லை நீயும் உட்காரு, பேசிப்பேசி எனர்ஜியை வேஸ்டாக்காத கா… அதோ, தீப்தியும் கிளம்பிட்டா அப்புறமென்ன கா… இரு போகலாம் என…

என்னது தீப்திக் கிளம்பிட்டாளா? ஐயோ! அத்தை எதாவது நினைச்சுப்பாங்க… நான் அவக் கூட போறேன். நீ இங்கே இரு … அத்தானை அனுப்புறேன் ஜாக்கிரதை என எச்சரித்து விட்டே சென்றாள்.

இவ்வளவு நேரம் சுபியின் பேசும் விழிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான் கவின்.

நீரஜாவும், தீப்தியும் கிளம்பவும்… இது தான் தன் காதலை சொல்ல தகுந்த நேரம் என எண்ணிக் கொண்டு சுபியிருக்கும் இடத்தை நோக்க… அவளோ தண்ணிக் குடத்தை தூக்கிக் கொண்டு அரசமர திட்டில் தஞ்சமடைந்திருந்தாள். குடத்தை திட்டு மேல் வைத்து விட்டு… சலசலத்துக் கொண்டு ஓடும் ஆற்றை ரசித்துக் கொண்டிருந்தாள்.

பிறகென்ன கவினும் அங்கு ஆஜராகி… சுற்றும்,முற்றும் பார்த்துவிட்டு யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சுபியின் அருகே செல்ல… அவளோ, தீவிரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கவனத்தை ஈர்க்க மென்மையாக சுபி என அழைக்க அவள் திரும்பவில்லை. பிறகு சற்று அவன் சத்தத்தை கூட்ட… அதில் அதிர்ந்து திரும்பியவள் வழுக்கி கீழே விழ… கவின் அவளை தாங்கி மெல்ல அனைத்தவன்… தன் நீண்ட நாள் காதலை, அவள் நெற்றியில் முதல் இதழொற்றுதலைப் பதித்து ஐ லவ் யூ சுபிமா என தன் காதலை தெரிவித்தான்.

அவளோ‌,நம்ப முடியாமல் திகைத்து போய் நிற்க… அந்த நேரத்தில் கரெக்டா ராங் என்ட்ரி கொடுத்தான் நவீன்.

நவீன் சுபி அழைத்துச் செல்வதற்காக வந்தவன், படியில் சுபியை காணவில்லை என்று சுபி எனக் குரல் கொடுத்துக் கொண்டே தேட…

நவீன் குரல் கேட்டவுடன், அது வரை தன் அணைப்பிலிருந்த சுபியை அப்படியே விட்டுவிட்டு… ஐயோ! இவன் பார்த்தால் அவ்வளவு தான் என்று ஆலமரத்திற்கு பின்புறம் சென்று மறைந்தான்.

கீழே விழுந்த சுபி என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பிப் போய் அப்படியே இருக்க… அங்க வந்த நவீன் என்ன சுப்பம்மா, பார்த்து வரக் கூடாதா? என அவளை கடித்துக்கொண்டு அவளை தூக்கினான். மெதுவா வா… குடத்தை தூக்க முடியுமா? இல்லை நான் எடுத்து வரவா? என அவளை கேட்க… இல்லை அத்தான் நானே எடுத்து வரேன் என்று கூறிக் கொண்டே கவினைத் தேட அவன் அகப்படவில்லை.

இப்போ அவன் காதலை சொன்னானா? இல்லையா? ஒன்னுமே புரியல என குழம்பிக் கொண்டே சென்றாள்.

நவீனோ, அக்காவோட வர வேண்டியது தானே சுபி… கவின் வேற எங்கே என்று தெரியவில்லை… அவனை வேற தேட வேண்டும் என்று புலம்பிக் கொண்டே செல்ல…

கவினோ, குறுக்கு பாதையில் சென்று அவர்களுக்கு முன்பே அங்கிருக்க… நவீனோ அப்பாடி வந்துட்டானா இன்னொரு முறை அலைய வேண்டாம் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான். சுபியோ அவனைப் பார்த்து பேந்த பேந்த விழித்தாள்.

********************

அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வர அடக்க மாட்டாமல் நகைக்க…

அவன் அமர்ந்து இருந்த அரசமரத்தருகே கைகளை கட்டிக் கொண்டு கோபத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள் சுபி.

சிரித்துக் கொண்டே நிமிர… தன் கண் முன்னே நின்ற சுபியைப் பார்த்தவுடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு … ஏன் சுபி கோபமாக பார்க்கிற என வினவ…

கவினின் கழுத்தை நெறிப்பது போல் கையை எடுத்து சென்று விட்டு… பிறகு சே.. என்று கையை இழுத்துக் கொண்டு அங்கு அமர்ந்து விட…

சாரி சுபி, நான் வேண்டும் என்று அன்னைக்கு பண்ணவில்லை… திடிர் என்று நவீன் வரவும் நான் போயிட்டேன் சாரி டா என…

அத்தான் நான் கொலை காண்டுல இருக்கிறேன். பேசாமல் போய்டுங்க என கோபம் குறையாமல் சுபி இருக்க‌‌… சுபியின் கோபத்தை எப்படி குறைப்பது என புரியாமல் திகைத்து நின்றான் கவின்.

தொடரும்…..
 
Last edited:
Top