Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 13

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.
எனது கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே


அத்தியாயம் 13

கவினும், சுபியும் அதிர்ந்து நின்றனர். சுபி அப்போ, நம்ம நவீனத்தான்… திடிர் என்று நண்பனுக்காக தான் அக்காவை திருமணம் செய்யும் முடிவு எடுத்து இருக்காங்க…


சின்ன வயதில் இருந்து, நம்மோடு பழகியது எல்லாம் அக்கா மேல ஆசைப் பட்டு தானா… அப்போ, தோழமையுடன் பழகியது எல்லாம் நடிப்பா! என்று தான் கோபத்தில் இருந்தாள்.


ஏற்கனவே நீரஜா, நவீனை விரும்பும் விஷயத்தை அறிந்து அக்காவை கண்டித்திருந்தாள்… " அக்கா அத்தானுக்கு சின்ன வயதிலேயே தீப்தி தான் வருங்கால மனைவி என்று முடிவு செய்து இருக்காங்க … நீ எதுவும் குழப்பம் பண்ணாதக்கா அப்புறம் இரண்டு குடும்பத்துக்குள்ள பிரச்சனை வரும் "என்று அவளை கட்டுபடுத்தி, அவள் கவனத்தை படிப்பில் திசை திருப்பியிருந்தாள் சுப்ரஜா.

ஆனால் திடீரென்று ஒரு நாள் இருவரும் திருமணம் செய்து மணக்கோலத்தில் வந்திருக்க சுபி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்… பார்வதியும், ஈஸ்வரனும் முதலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவர்கள், பிறகு நீரஜாவிடம் " கோபம் கூட படாமல் ஏன் டா, உன் விருப்பத்தை சொன்னால் நாங்க நிறைவேற்ற மாட்டோமா? அப்படியா உங்கள கட்டுபாட்டோட வளர்த்தோம், என புலம்ப… நீரஜாவோ, ஒரு நிமிடம் நவீனை தீப்பார்வை பார்த்து விட்டு தன் தந்தையின் தோளில் சாய்ந்து கதறி அழுதாள்".


அந்த ஒரு நிமிட பார்வை மாற்றத்தைக் கொண்டு கொண்ட சுபி, இது எல்லாம் நவீனத்தான் வேலை என்று புரிந்துக் கொண்டு … அவன் மேல் பயங்கர கோபத்தில் இருந்தாள்.


இத்தனை நாள் ஒரு நல்ல தோழனாகத் தானே பழகினான். ஒரு முறையாவது நம்மிடம் கூறினாரா… நீருவை பிடிக்கும் என்று..

மூவரும் தானே ஒன்றாக சுற்றுவோம்… என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்துக் கொண்டு இருக்க…


ஈஸ்வரியோ, கண்களை துடைத்துக் கொண்டு" சரி உள்ளே வாங்க" என்று அழைத்தாள்.


அது வரை அங்கு நடப்பதை மௌனமாக பார்த்துக் கொணடிருந்த சுபி, வாயை திறந்தாள்.

"அம்மா , எதுவாக இருந்தாலும் சரி அத்தை, மாமாவிடம் தெரிவித்து விட்டு அவர்கள் சம்மதம் சொன்னால்… அதற்குப் பிறகு ஆரத்தி எடுத்து கூப்பிடுங்க…" என்றவள், மீண்டும் தொடர்ந்தாள்… இன்னைக்கு சுகந்தி சித்தி, தீப்தியின் திருமணத்திற்கு நாள் பார்ப்பதற்காக வருகிறார்கள் என்று அத்தை நேற்று சொன்னாங்க…



அதனால, அங்க அழைச்சிட்டு போங்க, என்றவள்..

நவீனையும், நீரஜாவையும் திரும்பியும் பார்க்காமல் தனது அறைக்கு சென்று விட்டாள்.


பார்வதியோ, அம்மாடி நீயும் எங்க கூட வாடா, என்றுக் கூற… மாடி ஏறிக்கொண்டிருந்தவளோ, நீங்க போங்க மா, எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்… நான் அப்புறமா வரேன், என்றாள். அன்று சுபியும், அவர்களுடன் சென்றிருந்தால்,பிரச்சினை பெரிதாகாமல் தடுத்திருக்கலாம்..


சுபி பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, கவின் தான் அவளை அசைத்து… சுபி, நீ ஏன் இப்படி ஃபீரிஸ் ஆகிட்ட… வா அங்க போகலாம்.


அங்கு சென்ற கவின், விஷாலின் அருகே சென்று விட்டு, தீப்தியைப் பார்த்து " வித் யுவர் பர்மிஷன் தீபுமா, எனக் கூற… எதுக்கு அத்தான் பர்மிஷன் என தீப்திக் கேட்க.."


ம்,உன் வருங்கால ஹப்பிய அடிக்கத்தான் என்று விஷாலை மொத்த... விடுடா, விடுடா என விஷால் கத்த... இன்னைக்கு உன்னை விடமாட்டேன் என்று கவின், துரத்த…

எல்லோரும் இவர்கள் இருவரும், எதற்காக இப்படி, அடித்து பிடித்து ஓடிக்

கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமல், கவின் இவ்வளவு இலகுவாக இருப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்‌. ஒருவழியாக விஷாலை பிடித்துக்கொண்டு கவின் வரவும், எல்லோரும் என்ன விஷயம் எனக் கேட்க...


நான் ரெண்டு வருஷம் வெளிநாட்டிற்கு போய் விட்டு வந்தால் இங்கு என்ன என்னமோ நடந்திருக்கு எனக்குத் தெரியாமல் அதெல்லாம் கூட மன்னித்து விடுவேன்.

ஆனா இவனிடம் தீப்தியை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டேன். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? " நீ என்ன செய்தாலும் என் நன்மைக்குத் தான் என்று எனக்குத் தெரியும் மச்சான். உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம் அப்படின்னு சொன்னான்."


அதை தான் என்னால ஜீரணிக்கவே முடியவில்லை‌. அவ்வளவு நான் சொல்லும் போதுக் கூட … தீப்தியை விரும்பும் விஷயத்தை சொல்லவே இல்லை. அன்னைக்கு தீப்தி, இவனை திட்டும் போதுக் கூட … டேய் மச்சான் நீ சொன்னேன் என்று அவளை மனைவியா நினைக்க தொடங்கினேனே அவளுக்கு என்ன பிடிக்காதா என்று எப்படி புலம்பினான் தெரியுமா? அதெல்லாம் என்ன நடிப்பா, என்று மீண்டும் அவனை அடிக்க ...கோபத்தில் பொங்கி எழுந்த விஷால் விடுடா…

லவ் பண்றது ஒரு குத்தமா… அது சரி தீப்திக் கிட்ட காதலை சொல்லலாம் என நினைத்த போது..

நீயா வந்து தீப்தியை கல்யாணம் செய்துக் கொள்கிறாயா, என கேட்கவும் சரி என்று விட்டேன். நா லவ் பண்ணுறேன் சொன்னால் தீப்திக்கிட்ட சொல்லனும், அவங்க அம்மா, அப்பாக்கிட்ட பர்மிஷன் வாங்கனும்… எவ்ளோ பெரிய வேலை தெரியுமா? எவ்வளவு நாள் காத்திருக்கனும் தெரியுமா? அதனால் தான் சொல்லலை மச்சான்…

ஆனால் நவீன் உன் கிட்ட சொல்லிருப்பான் நினைத்தேன், அவன் சொல்லவில்லையா? என நவீனை மாட்டி விட…

அய்யோ! கவின் உனக்கு தெரியும் அதனாலதான் தீபுக்கு மாப்பிள்ளையா செலக்ட் பண்ணியிருக்கே என்று நினைத்தேன் டா… என வேகமாகக் கூற, எல்லோரும் சிரிக்க… அந்த இடமே கலகலவென இருந்தது.


அது சரி உன் காதல் கதையை சொல்லு எப்போ தீப்தியைப் பார்த்தே… எப்போதிலிருந்து விரும்ப ஆரம்பித்த சொல்லு என்று அவனை அமரவைத்து அவனைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு கேட்க ஆரம்பித்தனர்.


விஷால் ஒரு நொடி முகம் கசங்க பின் சமாளித்துக் கொண்டு…

என் பெற்றோர் இறந்த சமயம், நவீன் எனக்கு ஃபோன் செய்து ஆறுதலாக பேசிக் கொண்டு இருக்கும் போது… தீப்தியும் எனக்கு ஆறுதல்

சொன்னாள்.


நான் யாரென்று தெரியாத போதே ஃபோனில் நாங்கள் எல்லாம் இருக்கிறோம், கவலைப் படாதீங்க என்று அவள் கூற… என் மனதில் அவள் நுழைந்தாள் என்று விஷால் ரசனையுடன் கூற … ஒ எனக் கத்தி கலாட்டா செய்தனர்.


ஒரு வழியாக அந்த பீச்சையே இரண்டாக்கி விட்டு வீட்டுக்கு கிளம்பினர்.


தீப்தியோ மனதளவில் நிறைவாக உணர்ந்தால், இது வரை தான் அழகாக இல்லையோ? திறமை இல்லையோ? அதனாலதான் தன் அத்தை பசங்களே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ, என மனதிற்குள் குழம்பிக் கொண்டே இருந்தாள்.

நாம ஜாலியா இருக்கிறது, எல்லோருக்கும் லூசு மாதிரி தெரியுதா என மனதிற்குள்ளேயே தவித்தாள்.

நம் விளையாட்டுதனத்தை விடுத்து, பொறுப்பாக இருப்போமா, எனக் கூட நினைத்தாள். ச்சே ச்சே வேண்டாம்… அடுத்தவங்களுக்காக நாம் வாழ நினைத்தால்… நாம் நம்ம சுயத்தை இழக்க நேரிடும்.

வேண்டாம், எதுக்காகவும் நம்மளை மாத்திக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து விட்டு ஜாலியாக வலம் வந்தாள்.


அவள் உற்சாகமாக இருக்க வேண்டுமென நினைத்தாலும் அவளது அம்மா புலம்பி கொண்டே இருந்து தீப்தியையும் வருத்தப்பட வைத்தார்‌.


அதனால் தீப்தி ஒரு நாள் படு உற்சாகமாக இருப்பாள்.மற்றொரு நாள் சோகமாக இருப்பாள்.


இப்பொழுதோ தன்னை ஒருவர் நேசிக்கிறார் எனவும், அவளுக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது. ‌

விஷாலால் தான் அவளால்,தன் அத்தை வீட்டுக்கு மருமகளாக போக முடியவில்லை என்றெல்லாம் எண்ணி அவள் வருத்தப்படவில்லை.

அவளுக்கு,அவளை விரும்பும் ஒருவர் கிடைத்தது போதும் என எண்ணி உற்சாகமாக இருந்தாள்.


சற்று நேரத்தில் வீடு வந்திட... இப்படி இறங்கிக்கிறேன் என சுபிக் கூற… கவினோ, இரு நானும் வீட்டுக்கு வருகிறேன் என்றான். பரவாயில்லை நீங்க போங்க நான் போய்க்கிறேன்,என சுபி விடைப் பெற முயல… பரவாயில்லை வருகிறேன் என்றவன் அவளோடு இறங்கிக் கொண்டான்

மற்றவர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டிற்கு செல்ல… சுபியும்,கவினும் இங்கு வந்தனர்.


கவின், சுபியுடன் உள்ளே நுழைந்தான்... பார்வதி அவனைப் பார்த்தவுடன் வாங்க மாப்பிள்ளை என்று உற்சாகமாக அழைக்க... ஈஸ்வரனும் வந்து சந்தோஷமாக வரவேற்றார். கவினிடம், " அப்பா இப்போ தான் ஃபோன் பண்ணாங்க பா... உனக்கும், விஷாலுக்கும் சேர்த்து கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னார்".

எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை ரொம்ப சந்தோசம் பா… அப்புறம் தை பிறந்ததும் கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார்.

குலதெய்வ கோவிலுக்கு மட்டும் இந்த வாரமே போகலாம்னு உங்க எல்லோருக்கும் எந்த நாள் சரிவரும் என்று கலந்து பேசி இந்த வாரத்தில் போயிட்டு வந்துருவோம் என்றார்.

குலதெய்வ கோயில் என்ற வார்த்தை மட்டுமே கவியையும், சுபியையும் வேறு உலகத்தில் சஞ்சரிக்க வைக்க போதுமானதாக இருந்தது.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பார்த்த விழி பார்த்தப் படியே இருக்க..

இருவரும் சுற்றுப்புறம் மறந்து நின்றனர்.

தொடரும்.....
 
Last edited:
Top