Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் அத்தியாயம் - 12

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே!

அத்தியாயம் - 12

விஷாலைப் பார்த்து மனதிற்குள் கவுண்டர் விட்டுக் கொண்டிருந்த தீப்தி… கவினின் உலுக்கலில் சுய நினைவுக்கு வந்தவள், என்ன அத்தான் என வினவ…


கவின்,விஷாலை அறிமுகம் செய்ய முற்பட… தீப்தியோ, தெரியும் அத்தான், உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் விஷால் தானே என…


விஷாலோ, புன்னகையுடன் அதுமட்டுமா லூசு, அரைவேக்காடு எல்லாமே நான் தான் என்று தீப்தியைப் பார்த்துக் கொண்டேக் கூற…


தீப்தியோ, நாக்கை கடித்துக்கொண்டு தலையை சாய்த்து சாரி விஷால்… அன்னைக்கு கார்ல ரிட்டர்ன் வரும் போது ரொம்ப மொக்கைப் போட்டீங்களா, அதான் டென்ஷனாகி அப்படி சொன்னேன்… வேறென்றும் இல்லை … உங்களை நான் அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன் என…



விஷாலோ அவளை முறைக்க, தீப்தி சிரித்துக் கொண்டே ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி விஷால். ஜஸ்ட் ஏ ஜோக் லீவ் இட் என்றாள் .


எல்லோர் முகத்திலும் புன்முறுவல் பூக்க… அந்த புன்னகையுடன் நவீன்,சரி வாங்க இப்ப சாமி கும்பிட்டு வந்துடுவோம், அப்புறமா பீச்சுக்கு போய் பேசலாம் என்றான்.


சுப்ரஜாவோ, கோவிலின் அழகில் மெய் மறந்து தான் போனாள். நீரஜா, அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வர… தீப்தி தான் கலகலத்துக் கொண்டே வந்தாள்.


கோயில் நான்கு தளங்களைக் கொண்டது. ஒவ்வொரு தளங்களில் உள்ள லட்சுமிகளையும், திருமண கோலத்தில் உள்ள பெருமாள், மற்றும் லட்சுமியையும் மனதார வணங்கினார்கள்.


பின்னர் கோவிலில் அமைதியாக அமர்ந்து இருந்து விட்டு பிறகு வெளியே வந்தனர்.


தீப்தி தான் வெளியே வந்ததும் மீண்டும் தன் வாலை விரித்து விட்டிருந்தாள், கவின் அத்தான், "சுபிக்கு பிடிக்கும் என்று தானே இந்த இடத்தை தேர்வு செய்தீர்கள்" என வம்பு வளர்க்க…


கவினோ," ஆமா , நான் என்ன செய்யறது உங்க ரெண்டு பேருக்கிட்டேயும் கேட்டேன்…. நீங்க ரெண்டு பேரும் தான் ஒன்னும் சொல்லவில்லை. சரி தான் என்று சுபிக்கு பிடிச்ச இந்த கோவிலை செலக்ட் செய்தேன்" என்றுக் கூற… எல்லோரும் நொந்து போயினர்.


தீப்தி தான் நவீனிடம், " பார்த்தீங்களா! அத்தான், எப்படி இருந்த கவினத்தான், இப்படி மாறிட்டாங்களே! " என அங்கலாய்க்க…


உனக்கு இப்போ என்ன பிரச்சனை தீபு, வேண்டும் என்றால் நீ, விஷாலை மாத்து என …

எதுக்கு இப்ப அரை லூசா இருக்கிறவர உன்னை, மாதிரி முழு லூசா மாத்த சொல்லுறியா என்றாள் தீப்தி…


நவீன் தீப்தியை முறைக்க… தீப்தி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள்.


அதற்குள் நடந்துக் கொண்டே பீச்சிற்கு வந்து விட்டனர். இங்கே உட்கார்ந்துக் கொள்வோமா? என கேட்பதற்காக திரும்பிய விஷால்…


தீப்தியைப் பார்த்து என்ன ஜோக்? என்னிடம் சொன்னால் நானும் சிரிப்பேனே என….


தீப்தி, நவீன் இருவரும் ஒரே நேரத்தில் அதெல்லாம் ஒன்னும் இல்லை என்றுக் கூற…


அவர்கள் இருவரும் சொன்னதை நம்பாமல் சந்தேகமாகவே பார்த்துக் கொண்டே ... தீப்தியிடம், இங்கே உட்காருவோமா என விஷால் வினவ…


ஓ யெஸ் என்றபடி நவீன் உட்காரப் போக… ஹலோ மை டியர் ஃப்ரெண்ட் … " உன்னை யாரும் இங்கு உட்கார சொல்லவில்லை, அங்க பாரு சிஸ்டர் உனக்காக வெயிட்டிங், எடத்தை காலி பண்ணு… காத்தாவது வரட்டும்" என்றான் விஷால்.


நவீனோ, அவனை மணலில் தள்ளி விட்டு, பார்த்து பத்திரம் எங்க அத்தை மகள் என்றுக் கூறி விட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான்.


நவீன், சென்ற பிறகும் கொஞ்ச நேரம் அமைதியே அங்கு ஆட்சி செய்தது.


பிறகு தீப்தி, தான் முதலில் அதை களைத்தாள். அப்புறம் விஷால்," என்ன ஒன்றுமே பேச மாட்டேங்கிறீங்க, உங்களுக்கு என்ன பற்றி என்ன தெரியும், என்று எனக்கு தெரியாது. நானே சொல்றேன்… நான் வந்து கொஞ்சம் அதிகமாக பேசுவேன் " என்றாள்.


விஷாலோ, வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள்' கொஞ்சமாவா பேசுவ ரொம்பவே பேசுவே செல்லம் வேற ஏதாவது சொல்லுமா' என நினைத்தான்.


விஷால், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து, ' என்ன பயபுள்ள நம்பாத மாதிரியே பார்க்கிறானே' என நினைத்தவள், விஷாலைப் பார்த்து என்னவென்று புருவத்தை உயர்த்த… விஷாலோ ஒன்றும் இல்லை என்று தலையசைத்து மேல சொல்லுமாறு சைகை செய்தான்.


நான் கொஞ்சம் ஜாலி பேர்வழி.அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு நான் எங்க அப்பாவோட பிஸ்னஸைப் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.அதற்கு தடை சொல்லக்கூடாது.


அப்புறம் இன்னொரு விஷயம், நவீன் அத்தான் கூடவும், கவின் அத்தான் கூடவும் நான் நல்லா பேசுவேன்... அதை வைத்து சந்தேகப்படக் கூடாது நான் எங்க அத்தை வீட்டில் வாழத்தான் ஆசைப்பட்டனே தவிர, அவர்கள் இருவருரில் ஒருவரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.


சோ, பழசை பற்றிப் பேசக்கூடாது அவ்வளவு தான், என்னுடைய கண்டிஷன்… இதுக்கெல்லாம் உங்களுக்கு சம்மதம், என்றால் எனக்கு ஓ.கே.


விஷாலோ, அவளை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தான்…


என்ன ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க… இனி நீங்க தான் சொல்ல வேண்டும் என தீப்தி கேட்க..

விஷால் அவளைப் பார்த்துக் கொண்டே ஐ லவ் யூ தீப்தி…

வாழ்நாள் முழுவதும் என்னுடன் நீ வர வேண்டும். என்பது தான் என்னுடைய விருப்பம் கூட… நானே உன்னிடம் கவின், மற்றும் நவீன் கூட உள்ள என்னுடைய நட்புக்கு எந்தவித தொந்தரவும் வரக்கூடாது என கேட்பதாக தான் இருந்தேன். உங்க அம்மா வேற கவின் திருமணமும் நம் திருமணமும் சேர்ந்து நடப்பதில் விருப்பமில்லை என்றார்கள்… நான் கோபப்படவும், அரைமனதாக ஒத்துக்கொண்டார். அதனால் தான் எனக்கு உன்னுடைய முழு சம்மதமும் தெரிய வேண்டும். சுபியும், நீருவும் தான் எனக்கு தங்கைகள்.


என் பெற்றோர் இறந்த பின்பு தான் நான் இந்த உலகத்தையே புரிந்துக் கொண்டேன்.


அப்போ எல்லாம் கவினும், நவீனும் தான் என்னைப் பார்த்துக் கிட்டாங்க‌‌…. சோ, அவங்களை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது தீப்தி.


ஓகே, ஓகே எனக்கும் தான் அவர்கள் முக்கியம்..

அதுக்காக பொண்ணுப் பார்க்க என வந்து விட்டு… இன்னும் எவ்வளவு நேரத்திற்கு தான் அவர்களைப் பற்றியே பேசுவீங்க… அவ்… என்று விட்டு அப்புறம் நான் அழுதுடுவேன்,என...


அதற்கப்புறம் என்ன இருக்கிறது... வேறு விஷயம் பற்றிப் பேச...அவர்கள் இருவரும் தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். பிறகென்ன, அவர்களுக்கு சுற்றுபுறமே மறந்து தங்களுக்குள்ளே லயித்து இருந்தனர்.


இவர்கள் மட்டுமல்லாது மற்ற இரு ஜோடிகளும் சுற்றுப்புறம் மறந்து இருந்தனர்.

நவீன் நீரஜா சுற்றுப்புறத்தை மறந்து சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அமைதிப் புறாவான நீரஜா, நவீனிடம்" என்னை மட்டும் ஏன் அத்தான் தனியா விட்டிங்க… அவங்க ரெண்டு பேருக்கிட்டேயும், அப்படி என்ன தான் பேசிக்கொண்டு இருந்திங்க‌… நான் மட்டும் எவ்வளவு நேரம் தனியா இருந்தேன் தெரியுமா?" என்று சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.


அடியே! ஐந்து நிமிடம் இருக்குமா? அதுக்குள்ள என்ன? அதான் வந்துட்டேன்ல என…

நீரஜா" கவின் அத்தானும், சுபியும் முன்னாடி ரொம்ப தூரம் வரை போயிட்டாங்க… சரி அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நின்னுட்டேன். சரி நீங்க வருவீங்க என்று வெயிட் பண்ணா உங்களையும் காணோம்" என்று கண்களை கசக்க…


இதுக்கு ஏன் டா? அழுகுற… நான் தான் வந்துட்டேனமா? என…


அது என்னை ரெண்டு பேர் கிண்டல் பண்ணாங்க, நான் பயந்து திரும்பி வந்துட்டேன் என்றாள்.


நீருமா, இப்படி எல்லாத்துக்கும் பயப்படக் கூடாது… தைரியமாக எதிர்கொள்ளனும்‌…

பாரதியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று உனக்குத் தெரியும் தானே…


"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்றவன்,


மேலும் தொடர்ந்தான், சுபி எப்படி இருக்கிறா, அந்த மாதிரி தைரியமாக இருக்கனும், இல்லை என்றால் இந்த சமூகத்தில் வாழவே முடியாது புரியுதா? என…



நீரஜா,சரி எனத் தலையாட்டி விட்டு… அவன் தோளில் சாய்ந்தாள்.


********************

சுபி கடலலையே, பார்த்துக் கொண்டு இருந்தாள். கவின், "சுபி, என்ன யோசிட்டே இருக்கிற? என வினவ…

ஒன்னும் இல்லை சும்மா தான் வேடிக்கை பார்த்துக் கிட்டு இருக்கேன் என மெல்ல புன்னகைத்தாள்.


கவின், " அடுத்து நம்ம கல்யாணம் தான்… அப்புறம் நம்ம மேரேஜோட, விஷால், தீப்தி திருமணத்தையும் சேர்த்து வைக்கலாம் என்று சுகந்திஅத்தை, அப்பா,அம்மா எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்காங்க.

அத்தை, மாமாவிடம், அப்பா பேசுவார்… உனக்கு இதில் சம்மதமா என்று நீ சொல்லு, இல்லை யென்றால் வேறு ஏற்பாடு செய்ய வேண்டும் " என்றான்.


என்னது சுகந்தி சித்திக்கு சம்மதமா… அப்ப சரி தான் எனக்கும் எந்த வித ஆட்சேபனை இல்லை என்றுக் கூறி புன்னகைத்தாள்.


சித்தியிடம், நமக்காக எவ்வளவு சப்போர்ட்டா பேசியிருக்கிறார். இதற்கு மேல் அவருக்கு சங்கடம் தரக்கூடாது என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.


கவின், சுபியை ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு சரி வா… அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அவளை அழைத்துக் கொண்டு... விஷால் மற்றும் தீப்தியை தேடிச் சென்றான்.

நவீன், நீரஜாவின் மோனத் தவத்தை சுபி தான் களைத்தாள். ஹலோ நீங்க இரண்டு பேரும் இப்போ ஓல்டு ஜோடி. சோ அடக்கி வாசிங்க என…


சுபி, பழைய மாதிரி பேசவில்லை என்றாலும், பரவாயில்லை இப்படி பொதுவாகவாவது பேசுகிறாளே என சந்தோஷப் பட்டுக் கொண்ட நவீன், சுபியிடம் "சரிங்க மேடம் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். இனி நீங்க இருக்கும் போது அடக்கி வாசிக்கிறோம் " என...



சுபியால், சிரிப்பை அடக்க முடியவில்லை, சிரித்துக் கொண்டே அப்பவும், அடக்க மாட்டிங்க ‌எனக் கேட்ட படியே…

சரி வாங்க போகலாம் என விஷாலை தேடிப் போக…


அங்க விஷாலோ, அடுத்த குண்டைப் போட்டு கொண்டு இருந்தான். தீப்தியிடம்" தீபு, நான் உன்னை இரண்டு வருடங்களாக விரும்புகிறேன்" என்றான்.


பொய் சொல்லாதே விஷால்… நான் உன்னை ஏற்கனவே பார்த்த ஞாபகம் இல்லை… இப்போ பார்ட்டியில் தான் கவின் அத்தான் அறிமுகம் செய்தாங்க, என யோசனையுடன் கூற…


உன்னை முதல் முதலாக, நவீனோட தான் பார்த்தேன். நீ என்னை கவனிக்கலை…

நவீனிடம், நான் உன்னைப் பற்றியே விசாரிக்க… நவீனுக்கு நான் உன் மேல் வச்ச காதல் புரிந்து விட்டது.


அவன் தான் பிறகு சொன்னான்… உங்கள் இருவருக்கும் சிறு வயதிலே திருமணம் நிச்சயம் செய்ததை சொன்னவன்… உங்கள் இருவருக்கும் இடையே பெரிதாக விருப்பம் இல்லை என்றும் சொன்னான்.


என்னுடைய திருமணம் அவனது பொறுப்பு என்று விட்டான். இதில் நீரஜாவை விரும்பியதெல்லாம் எனக்கு தெரியாது தீபு மா, என்றான்.


இதைக் கேட்ட நால்வரில், கவினும், சுபியும் தான் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றனர்.

தொடரும்....
 
Last edited:
இதில கவினும் சுபியும் அதிர்ச்சி ஆகுறதுக்கு என்ன இருக்கு????
 
Top