Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - அத்தியாயம் - 11

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for lovely support and comments

எனது கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம் - 11


தீப்தி கண்ணாடி முன்னாடி நின்றுக் கொண்டு தான் அணிந்து இருந்த சுடிதார், தனக்கு பொருந்தி இருக்கிறாதா என்று பார்த்துக் கொண்டே பாடத் தொடங்கினாள்.


பூவே நீ ஆடவா

புது பல்லவி நான்

பாடவா …

கங்கைக்கேது

கட்டு பாடு மங்கை நானும்

கங்கை என்று பாட்டு பாடு

காற்றுக்கேது கடிவாளம்

கன்னி பெண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு…


என... ஆடி, பாடிக் கொண்டே…. மேக்கப் போட…. குளித்து விட்டு உள்ளே நுழைந்த கீர்த்தனா, தீப்தியைப் பார்த்து " என்னமா, தீபு பாட்டெல்லாம் தூள் பறக்குது… அதை விட மேக்கப் ஆளை தூக்குது என…


அடியே தெரிஞ்சுகிட்டே… கேட்கிறாயா இன்னைக்கு என்னுடைய வருங்கால அவரைப் பார்க்கப் போகிறேன். அதற்காகத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்‌.



அப்போ, சீக்கிரமாகவே இந்த காற்றுக்கு கடிவாளம் போட போறாங்க என்று சொல்லு..


அதெல்லாம் ஒன்னும் என்னை செய்ய முடியாது.

நான் வெறும் காற்று கிடையாது… சுழன்றடிக்கும் புயல் காற்று… அதுக்கு கடிவாளம் போட முடியாது…


ஈவினிங் மாப்பிள்ளையை பார்க்கும் போது தெளிவா, சொல்லிடுவேன் என்னுடைய எதிர்பார்ப்புகளை…. எல்லாம் ஒகே வா வந்தால் தான் மேரேஜூக்கு யெஸ் சொல்லுவேன்.


சரி விடுடி நீ புயல் காத்து தான் உன்னை அடக்க முடியாது என்று எனக்கே தெரியும்… அப்புறம்

தீபு, ஈவினிங் தான புரோகிராம்… என்ன இப்பவே ரெடியாகி இருக்கிற… அதுவும் இல்லாமல், அங்கிள் கிட்ட காலேஜ் இருக்கு... லீவு போட மாட்டேன் என்று சொல்லி விட்டு…. இப்போ அதுவும், இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட…


அடியே! கீத்து, நீ… எனக்கு ஃப்ரெண்டா…

இல்ல எங்க அப்பாவுக்கு ஃப்ரெண்டா … விட்டா நீயே போன் பண்ணி நான் காலேஜுக்கு லீவ் போடுறத, சொல்லிடுவ போல… ஒழுங்கா காலேஜுக்கு கிளம்புற வழியைப் பாரு…


நானே, காலேஜ் போயிட்டு வந்தால் மூஞ்சியெல்லாம், சோர்வா தெரியும் என்று, லீவு போட்டுட்டு…. மாமா வீட்டுக்கு போறேன். அங்க ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் அவுட்டிங் போகலாம் என்று யோசிட்டு இருக்கேன் .… நீ வேற இடையில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு… கிளம்பு, கிளம்பு இன்னைக்காவது நேரத்தோடு காலேஜுக்கு கிளம்பு … என் வாயைப் பார்த்து கிட்டு நிக்காத என...


கீர்த்தனாவே "எல்லாம் என் நேரம் தான் உன்னை, எழுப்பி நான் காலேஜுக்கு கிளப்பிக் கூட்டிட்டு போறதுக்குள்ள, நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்".

ஒரு நாளாவது நாம... காலேஜூல ஃபர்ஸ்ட் அவர் கிளாஸ்ஸ அட்டென்ட் பண்ணி இருக்கோமா? அது கிடையாது.

இன்னைக்கு என்னமோ நீ, சீக்கிரம் கிளம்பி என்னை கிண்டல் பண்றியா? என்று தன் கையில் இருந்த டவலைக் தூக்கி அவள் மீது வீச… தீப்தியோ சட்டென்று நகர்ந்து ஏன்மா, உனக்கு இந்த கொலைவெறி… இந்நேரம் என் மேக்கப் எல்லாம் கலைஞ்சிருக்கும் ஓடிப் போயிடு என்றாள்.


சாரி தீபு என்றவள், பிறகு நானும் வர வா தீபு… உன்னோட வருங்கால அவரை, நான் பார்க்க வேண்டாமா? நான் உன் உயிர் தோழி அல்லவா என...


கீத்து மா," நீ என்னோட உயிர் தோழி அல்ல… என் உயிரை வாங்கும் தோழி" அதானால் நீ வரவேண்டாம் …. அதுவுமில்லாமல் பொண்ணு பார்க்க வராங்க.. அப்ப தோழியெல்லாம் கூட்டிட்டு போக கூடாது மா… நீ வேற என்ன விட கொஞ்சம் அழகா வேற இருக்கிறியா… சோ நீ காலேஜூக்கு கிளம்பு நாம நாளைக்கு பார்க்கலாம்… பை என்று விட்டு கிளம்ப‌….


அடியே, என்னப் பார்த்து என்ன சொல்ற….எனக்கு ஆல் ரெடி ஆளிருக்கு…. நீ மட்டும் கையில் கிடைச்ச அவ்வளவு தான் என புலம்பிக் கொண்டு கீர்த்தனா கல்லூரிக்கு கிளம்பினாள்.


********************************

பத்மா எல்லோருக்கும் டிபன் பரிமாறிக் கொண்டே… கவினைப் பார்த்து " ஏன் பா, இன்னைக்கு ஈவினிங் எங்கப்பா போறீங்க விஷாலிடம் கேட்டீங்களா" என ….


கவினோ, வாயில் தோசையை ஒரு விள்ளல் எடுத்து வைத்துக் கொண்டு … விஷாலுக்கு பெரிசாக எந்த ஐடியாவும் இல்லை என்று சொல்லிவிட்டான் மா….


தீப்திக்கு எந்த இடம் வசதிப்படுமோ,அங்கே மீட் பண்ணலாம் என்று சொல்லிவிட்டான் மா.


தீப்திக்கு தான் போன் பண்ணனும் என்று கூறும்போதே, அத்தை அத்தை என்று கூப்பாடு போட்டுக்கொண்டு வந்தாள் தீப்தி.


ஹாய், ஹாய் எல்லாரும் இப்பதான் சாப்பிடுறீங்களா…. கரெக்டான நேரத்துக்கு தான் வந்திருக்கேன். எனக்கும் தட்டு வைங்க அத்தை, இன்னிக்கு சாப்பிடாம வந்துட்டேன்.


சாத்தானை நினை உடனே வரும் என்று சொல்லுவாங்க…. அது சரி தான் போல, இப்போ தான் உன்னை பற்றி பேசிக் கொண்டிருந்தாங்க… நீ உடனே வந்துட்ட,என நவீன் தீப்தியை கலாய்க்க… நீரஜாவோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.


என்னையா புருஷனும்,பொண்டாட்டியும் சேர்ந்து கிண்டல் செய்றீங்க…


இருங்க வரேன் என மனதிற்குள் கூறிக் கொண்டு நவீனின் அருகே அமர்ந்துக் கொண்டு, அவன் தட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டு நீரஜாவை வம்பிழுக்க….


நீரஜாவோ, நவீனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.


நவீன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போதே, தெய்வம் போல வந்து சுகுமாரன் காப்பாற்றினார். ஏன் தீபு மா, காலேஜ் போகலையா டா... உங்க அப்பா நீ காலேஜுக்கு போயிட்டு தான் வருவே என்று சொன்னார்.


அது மாமா காலேஜுக்கு போயிட்டு வந்தால், டயர்டா இருக்கும்…. அதனால தான் இன்னைக்கு லீவு போட்டுட்டேன் ‌மாமா.


அதுவுமில்லாமல் நேத்து அத்த கையால் சாப்பிட முடியாம போயிடுச்சு…. அதான் இன்னைக்கு எனக்கு புடிச்சதெல்லாம் அத்தையை, செய்யச் சொல்லி சாப்பிடலாம் என்று காலையிலே, சீக்கிரமா எந்திரிச்சு வந்துட்டேன் மாமா.


அவளை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தாள், நீரஜா. இப்படி‍ அடிக்கடி காலேஜ் லீவு போடுறாளே என மனதுக்குள் எண்ணிக்கொண்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.அது தான் நவீனை, முறைக்கும் வேலை… அதை மீண்டும் தொடர்ந்தாள்…


நவீனோ என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க…. பத்மா கிச்சனில் இருந்து வந்திருந்தாள்….


தீபு… அம்மா, வந்துட்டாங்க பாரு … தட்டுல எல்லாம் எடுத்து வைத்து நல்லா சாப்பிடு என்று அவளை நகர்த்தி விட்டு, அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.


கவின் நமுட்டு சிரிப்புடன் உணவே,கண்ணாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


அவனைக் கண்டு கொண்ட தீப்தி, பிறகு கவினிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தாள். கவினிடம் " அப்புறம் என்ன மச்சான்…

ஃபோனே பண்ணவில்லை எனக் கேட்க"


எங்க நீ தான் பொழுது விடிந்தவுடன் வந்துட்டியே… இப்போ நீ காலேஜூல இருப்ப… காலேஜ் முடிந்து நீ வந்ததும் ஃபோன் பண்ணலாமும் நினைத்துக் கொண்டு இருந்தேன்...


நீ எங்கே, பாதி நாள் காலேஜூக்கு மட்டம் போட்டுட்டுல்ல இருக்க..


சுகுமாரனும், ஆமாம் தீபு அடிக்கடி லீவு போடுற... படிப்பு கெட்டு விடும். இனிமே லீவு போடாத என கண்டிப்போடு கூறினார்.


பத்மா வந்து, சரி விடுங்க என்று விட்டு‌…. தீபு மா, ஈவினிங் மாப்பிள்ளையை மீட் பண்ண போகனும்ல, எங்க போலாம் ஏதாவது ஐடியா இருக்கா? .

உன் விருப்பம் தான் என்று மாப்பிள்ளை சொல்லிட்டாங்க .ஏதாவது மால் போகிறீங்களா இல்ல… ஹோட்டல் போறீங்களா... ஹோட்டல் என்றால், மாப்பிள்ளைக்கு ஹோட்டல் இருக்கும் போது வேறு எங்கும் போக முடியாது என்றாள் பத்மா …


கோவிலுக்கு போகலாமா அஷ்டலட்சுமி கோவில் நல்லா இருக்கும்… சாமி கும்பிட்டு பீச்சில் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம்... என்ன சொல்ற என கவின் வினவ…



எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அத்தான். எங்க வேணா போகலாம்... என்ன மாப்பிள்ளை யாருனு தான் நீங்கள் யாரும் சொல்லவே இல்ல…


சரி நேர்ல போயே நான் பார்த்துக் கொள்கிறேன்.

இப்போ என்னை முதல்ல சாப்பிட விடுங்க... என்னைய யாரும் தொந்தரவு செய்யாதீங்க..

என்றுக் கூறிவிட்டு சாப்பாட்டில் கவனத்தை செலுத்த எல்லோரும் அவளைப் பார்த்து நகைத்தனர்.


சாப்பிட்டு முடித்தவுடன் அத்தை எனக்கு, சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வேணும்த்தை… என்று தனக்கு வேண்டியவற்றை சொல்லிவிட்டு…. அப்படியே எனக்கு சமைக்கவும் சொல்லித்தாங்க, அத்தை…. அம்மாவுக்கு நல்லா சமைக்க வராது… அதனால நீங்கள் தான் சொல்லித் தரனும், என தீப்திக் கூற…


சுந்தரம் அவள் காதைப் பிடித்து திருகி … என் தங்கை சமையலையே குறை சொல்லிறியா….

அவளுக்கு எங்க அம்மா கை பக்குவம் தெரியுமா…


ஐயோ! சாரி மாமா நீங்கள் இருப்பது தெரியாமல் சொல்லிட்டேன்…. ஒரே டேஸ்ட்ல சாப்பிட்டு போரடிச்சிடுச்சு… அதான் அத்தைக் கிட்ட கத்துக்கிட்டு நானே செய்யலாம் என்று இருக்கிறேன்…. என்னை ஆள விடுங்க, நான் உள்ளே போறேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்.


அதுக்கப்புறம் என்ன கிச்சனே ரெண்டு பட்டது. அவள் அடித்த லூட்டியை பார்த்தும், அவள் சமையல் செய்ய பண்ண அலப்பறையைப் பார்த்தும்...பத்மாவும், நீரஜாவும் நொந்து நூடுல்ஸ் ஆகினர்.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பத்மாவே பொங்கி எழுந்து, அம்மாடி தீப்தி இப்படியே நீ செய்துட்டே இருந்தா… இன்னைக்கு சமைக்க முடியாது… நாளைக்குத் தான் முடியும்… உன் நளபாக திறமையை நீ… அப்புறமா நிரூபி டா.. இன்னைக்கு டைம் ஆச்சு… நீங்க எல்லாம் வெளியே வேற போகனும்ல டா என …


போங்க அத்தை அம்மா மாதிரியே கிச்சனுக்குள் விட மாட்டேங்குறீங்க, எனச் சினுங்கிக் கொண்டே வெளியே சென்று ‌… டி. வி பார்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆண்கள் எல்லோரும் கடைக்குச் சென்றிருக்க ரொம்ப போரடித்தது…


சற்று பொறுத்துப் பார்த்தவள், அத்தை போரடிக்குது நான் போய் சுபியை பார்த்துவிட்டு வரேன் என…


நீரஜாவோ " தீப்தி, அவ வேலைக்கு போயிருப்பா, அம்மா மட்டும் தான் இப்போ வீட்டில் இருப்பாங்க" என்றாள்.


ஓ என்றவள், சட்டென்று முகம் வாடி,அப்போ ஈவினிங் சுபி வரமாட்டாளா? என நீருவைப் பார்த்து கேட்க….


அதெல்லாம் கரெக்டா ஐந்து மணிக்கு எல்லாம் ரெடியா இருப்பா …. பர்மிஷன் கேட்டு வந்துடுவா…


ஆமாம் நீ என்ன ட்ரஸ் போட போறக் காட்டு…

மாடிக்கு வரியா என்னோடதை காட்டுறேன் என்றாள் நீரஜா…


அதுக்கப்புறம் இருவருக்கும் நேரம் ஜெட் வேகத்தில் ஓடியது.


******************************

சுபி தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்…. அவளது செல்ஃபோன் அடிக்க யாரென்று பார்த்தால் கவின்… காலையில் இருந்து எத்தனை முறை கால் பண்ணி விட்டார், என மனதிற்குள் வைதுக்கொண்டே, அதற்கு நேர்மாறாக முகத்தில் புன்னகையுடன் ஃபோனை எடுத்தாள்.


ஹலோ, ம் சொல்லுங்க கவின்… இதோ கிளம்பிட்டேன். நான் கரெக்டா ரெடியாகி இருப்பேன்.


என்னது வேகமாக வண்டி ஓட்டிக் கூடாதா… அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்கள் இப்படியே பேசிட்டே இருந்தால் தான் லேட்டாகும்…


ம், சொல்லுங்க…ம், நான் ஆஃபிஸ்ல இருக்கேன்.. வீட்டுக்கு போயிட்டு ஃபோன் பண்ணவா, இப்போ வைச்சிடுறேன் என்று வைத்தவள்,முகமோ சிவந்து இருந்தது.


எம்.டியிடம் பர்மிஷன் கேட்டு விட்டு கிளம்பிய சுபியோ, கவின் பேசியதை எண்ணி எண்ணி ரசித்துக் கொண்டே வந்தாள்.


அந்த சிடுமூஞ்சிக்குள்ள இப்படி ஒரு ரொமாண்டிக் ஹூரோவா, என நினைத்தாள்.


பின்ன.. அவன் ஃபோனில் பேசியது மீண்டும் அவள் காதில் ஒலித்தது… சுபி " கோவிலுக்கு புடவை கட்டி வரியா … அன்னைக்கு புடவையில் அழகா இருந்த என மெல்லிய குரலில் கிசுகிசுக்க..

இவளாலோ பேச முடியாமல் ம், என்று மட்டும் கூற.. அவனோ ப்ளிஸ்டா எனக் கெஞ்ச… நான் ஆஃபிஸ்ல இருக்கேன். வீட்டில் வந்து கால் பண்றேன் என்றுக் கூறி விட்டு ஃபோனை வைத்தாள்.


சுபி வீட்டிற்குள் நுழைந்தால், அதற்கு முன்பே கவின் கொடுத்துவிட்ட பார்சல் வீற்றிருந்தது.

சிரித்துக் கொண்டே சுபி கிளம்பினாள்.


சரியாக ஐந்து மணிக்கு எல்லோரும், கிளம்பி கோவிலுக்குள் நுழைய…. அங்கு விஷால் காத்திருந்தான்.

விஷாலை பார்த்த தீப்தி அதிர்ந்து நின்றாள். பிறகு "இவன் தானா அந்த குயில்" என மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டாள் தீப்தி.

தொடரும்.....
 
Top