Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்னவள் என் பார்வையில்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
கவி சௌமியின் என்னவள்.
காரணமே தெரியாமல் திருமண இரவிலேயே அடித்து உதைத்து ரத்தக்காயத்துடன் பெற்றவர்களிடம் திரும்பி வந்த சக்தி!அந்த குற்ற உணர்வே இல்லாது தன் அத்தை மகளின் தற்கொலை முயற்சியில் கலங்கி பெற்றவர்களை எதிர்த்து வெளியேறும் மோகன்!இவள் வாழ்வில் நடந்த சம்பவங்களில் ஒடுங்கியிருந்தவளை மகள் போல் அன்பு செலுத்தி மீட்டெடுக்கும் சிவா!
தன் பிடிவாதம் மிகுந்த மனைவி மாயாவுடன் மல்லுக்கட்டும் கார்த்தி.அவன் வாழ்வில் வரும் துயரங்கள்,மாயாவின் தந்தை பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.அற்புதமான மனிதர்!தன் பெண் என்பதற்காக சப்பைக்கட்டு கட்டாமல் நியாயத்தின் படி நிற்பவர்!ஆனால் தன் பெண்ணுக்கு கல்யாணம் செய்யாமல் இருந்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்!மோகனின் பெற்றோர்,பிடிவாதமாக மகனின் விருப்பத்தை மீறி செய்யும் கல்யாணத்தால் பாதிக்கப்படும் பெண்ணைப்பற்றி அக்கறையே இல்லாத சுய நலவாதிகள்.இவர்களின் செயலால் பாதிக்கப்பட்டு சக்தி தன் வாழ்வை வெறுத்த நிலையில் கார்த்தியின் வருகையால் எப்படி வண்ண மயமாகிறது என்பதுதான் கதை!
நேற்று ஒரு செய்தி தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது,முதல் இரவில் மனைவியை கொலை செய்து அவனும் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டதாக!எனக்கு உடனே இந்த கதைதான் என் நினைவுக்கு வந்தது!ஒரு உயிரையே எடுக்கும் அளவுக்கு இருக்கும் ஆண்களும் நிஜத்தில் இருக்கிறார்களே!கதையில் மோகனை தப்பிக்க விட்டது எனக்கு வருத்தம் தான்!கார்த்தி போல் ஆண்கள் வருங்காலத்தில் நிறைய வர வேண்டும்.
 
Brintha, aval sikikonda valai,athilirunthu tapitha seyal. Prabu, avan perunthanmai,valkai kuritha munyosanai.yellamae super
 
Top