Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா - 5

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா - 5
அய்யோ, மித்ரா, நான் இதுவரைக்கும் ஸ்கூட்டிய ஓட்டினதே இல்ல தெரியுமா. என் ஹைட்டுக்கு கால் இடிக்குது மித்ரா. இங்க பார் ரோட்ல போற பிகருங் பார்த்து சிரிச்சிட்டு போதுங்களே . அய்யோ வாசுக்கு வந்த சோதனை.

இவன் புலம்புவதை கேட்டு, மித்ரா சிரித்தால்.
என்ன சிரிக்கிற,

”ஆமாம்,நீ பெரிய ஆடி காரா தான் ஓட்டிவியோ, ஓவரா சீன போடாத ரோட பார்த்து ஓட்டு”.

அடிப்பாவி, நான் காலையில ஆடி கார் தான் ஓட்டின என்று மனதில் நினைத்து சிரித்தான்.

ஓரு சந்தில் திரும்ப போது கார் எதிர்க்க வர சட்டென்று ப்ரேக் போட்டான்.

காரை ஓட்டிக்கொண்டு வந்தவன் திட்ட ஆரம்பித்தான். ” டேய் , எங்கடா பார்த்துட்டு வண்டியை ஓட்டற. ”
ம்ம் உன்ன பார்த்து.
இது மனோ அண்ணா குரல் போல இருக்கு , மித்ரா யோசித்தாள்.

காரிலிருந்த மனோ எட்டி பார்த்தான், இது மித்ரா போல , ” மித்ரா என்று கூப்பிட்டான். ”
”மனோ அண்ணா ,நீங்களா எப்படி இருக்கீங்க. ”
”நான் நல்லா இருக்கேன்மா, நீ மா

நானா -ம் , அண்ணா நான் உங்கிட்ட பேசனும், கல்யாணத்தை பத்தி, போன் பண்ணவா.
”சரிம்மா”, இது யாரு புதுசா?
”ஆங்,இவரு வாசு, நம்ம கடையில வேலைக்கு ஜாயின் பண்ணிருக்கிறாரு. ”

”ஹாய், ஐம் மனோ” , சொல்லிட்டு சத்தமில்லாமல் சிரித்தான்.
”ஐம் வாசு”, வாயை முடூடா .சைகையில் சொன்னான்.

பார்த்தும்மா, பையன் ரோம்ப வாய் போல.- மனோ
கேட்டுவிட்டு சிரித்தாள் மித்ரா, சரிமா பாத்துப்போங்க டைம் ஆயிடுச்சு.
வண்டிய ஸ்டாட் செய்து, சிறிதூரம் சென்ற வுடன், கேட்க ஆரம்பித்தான்.
” யாரு மித்ரா மனோ, ”
”என் வேல்விஷ்ஷர் போதுமா”.
மித்ரா, ”நாளையிலிருந்து என் வண்டியை எடுத்துட்டு வரட்டுமா. ”
சரி.
மேய்ன் ரோட்ல மித்ரா சூப்பர் மார்கெட் கடை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தினான். பார்த்து இறங்கு மித்ரா .
மிடியம் சைஸ்ல ஷாப் , ஏடிஎம் கடை, பழக்கடை இரண்டும், வாடகை விடப்பட்டது.உள்ளே ஏசி ,வந்தவுடன் அறிமுகம் படலம் ஆரம்பமானது. இவங்க பிரேமா, ராணி, லதா ,சங்கர் அப்பறம் லோட் மேன் இரண்டு பேர்.
இவர் வாசு ,இனி கடை இவருடைய இன்சார்ஜ் , வேலை சமந்தமா கேட்கனுமனா வாசுக்கிட்டகேளுங்க, வா வாசு, ஓரேத்தில் ஓர் ரூம் அதை நோக்கி நடந்தார்கள் இருவரும்.உள்ளே கதிரேசன் தாத்தா உட்கார்திருந்தார்.
வாங்க தம்பி, இதுதான் உங்க இடம்,கூட பாப்பா இருப்பாங்க.
டேபிள்மேலே கம்பயூட்டர் வீலீங் சேர்.பக்கத்தில் அதேபோல் மித்ராவுக்கு டேபள் சேர். நான் ஸ்டோர் ரூம் போய் பார்க்கிறேன் பாப்பா.சொல்லிட்டு சென்றார்.
-ம். சொல்லி திரும்ப டேபிள் இடித்து மித்ரா தடுமாறினாள்.அவள் விழாதவாறு இடுப்பில் கையை வைத்து தாங்கிக்கொண்டான்.
பூப்போல் இருந்த அவள் மேனி. நல்ல வாசமா இருந்தது
ஷாம்பு போட்டு குளித்திருப்பாள், கொஞ்ச நேரம் இப்படியே இருக்க கூடாதா எண்ணினான்.
” சாரி வாசு” என்று கூச்சத்தோடு விலகினாள். ஏய் நீ என்ன பண்ண, இப்பதான் உணர்ந்தாள்.
என்ன?
”நீ நீ ,ஓண்ணுயில்ல போ”,

”சரி என சிரித்தான் ,வெளியே சென்று எல்லோரும் வேலை செய்யறாங்களா, பார்த்துக் கொண்டான்.

இவன் என்ன பண்ணா இப்ப,என் இடுப்பை கிள்ளன மாதிரி இருந்தது. சே, பிரம்மையா இருக்கும்.

இங்கு ஓரே சந்தோசம் வாசுக்கு , என்ன ஃபீல் இது ,எவ்வளவு சப்படா இருக்கா, கண்டுபிடிச்சிடுவால, ம்ம் நாம சமாளிப்போம்.

சிரித்த முகத்துடன் வேலை செய்யும் ஆட்களிடம் சென்றான். லன்ச் டைம் வேற. ” ஹாய் என்ன சாப்பிடபோகல” என்றான்.

”அண்ணா நீங்க சாப்பிடல” என்றாள் லதா .இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். ராணியை பார்த்தான்,கண்கள் கலங்க சோகமாக இருந்தாள்.
ராணி ஏன் அழுற,

அண்ணா அவ அம்மாக்கு அபேன்டிஸ் ஆபரேஷன் செய்யனுமா, அதுவும் இன்னும் இரண்டு நாளுல்ல. ஒரு லட்சமாகுமா. காசுக்கு எங்க போவாண்ணா.

“ஓனர்கிட்ட கேட்க வேண்டியதுதான”

“ஏற்கனவே அக்கா கல்யாணத்துக்கு வாங்கிட்டேண்ணா” சொல்லி அழ ஆரம்பித்தாள் ராணி.
எந்த ஆஸ்பிட்டல் மா?.

விஜய் ஆஸ்பிட்டல் ,தாம்பரம்.

எனக்கு தெரிஞ்ச ஆஸ்பிட்டல் , நீ போய் அட்மிட் பண்ணு, நான் பில் கட்றேன்.
நிஜமாவா சொல்றீங்க,

ஆமாம்மா, நிஜமா

உன் பிரச்சனை முடிஞ்சிடுச்சில போய் சாப்பிடு, அப்பறம் இப்படி மூஞ்சியை வச்சிக்காதே , சிரி ....
”தங்ஸ் அண்ணா. ”

மொதல்ல உங்களுக்கு எல்லாம் ஷார்ட் நேம் வைக்கனும்.
எங்களுக்காண்ணா , வைங்க ,வைங்க அதுவும் நடிகை பெயரா என்றனர் .

ராணிக்கு நயன் , பிரேமாக்கு ஐஸ், லதாக்கு திபிகா. நம்ம சங்கருக்கு சித்து ஓகே.
அப்ப நம்ம மித்ராம்மாக்கு என்ன பெயர்.

அவ என் டால், ம்ம் பாஸ்

ஏஏஏ அண்ணா , என வாசுவை ஓட்ட ஆரம்பித்தார்கள்.

வாசு அனைவரிடமும் ,பழகிவிட்டான். அந்த சுழலை மகிழ்ச்சியாக மாற்றினான்
 
ஹா ஹா ஹா
கேடிப் பய வாசு
இடுப்பைக் கிள்ளி விட்டுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி போறான்
வேலை செய்யுறவங்களுக்கு பேரெல்லாம் சூப்பரா வைக்குறான்
மனோவிடம் கல்யாணத்தைப் பற்றி மித்ரா என்ன பேசப் போறாள்?
 
Top